வாழ்க்கையின் பிரதிபலிப்பு
Discuss here on வாழ்க்கையின் பிரதிபலிப்பு within the In-Laws forums, part of the Family & Relationship forum; நம் வாழ்க்கையும் நம்மைச் சுற்றி உள்ளவர்களும் எப்படி இருக்க வேண்டும் என்பது நாம் எப்படியிருக்கிறோம் என்பதைப் பொறுத்ததே. ஒரு ஊர்ல ஒரு அழகான கண்ணாடி மாளிகை இருந்தது.மாளிகையின் ...
-
18th Aug 2011, 10:42 AM #1
வாழ்க்கையின் பிரதிபலிப்பு
நம் வாழ்க்கையும் நம்மைச் சுற்றி உள்ளவர்களும் எப்படி இருக்க வேண்டும் என்பது நாம் எப்படியிருக்கிறோம் என்பதைப் பொறுத்ததே.
ஒரு ஊர்ல ஒரு அழகான கண்ணாடி மாளிகை இருந்தது.மாளிகையின் உள்ளே எந்தப் பக்கம் பார்த்தாலும் கண்ணாடிகளே பொருத்தப் பட்டிருந்தன.
ஒரு நாள் நாய்க் குட்டி ஒன்று உள்ளே சென்று பார்த்தது.மாளிகை முழுதும் கண்ணாடி என்பதால் பார்க்கும் இடமெல்லாம் நாய்க் குட்டிகளாகத் தெரியவும் இந்த குட்டி நாய்க்கு சந்தோஷம் வந்தது.தன் வாலை ஆட்டி மகிழ்ச்சியைத் தெரிவித்தது.கண்ணாடியில் தெரிந்த நாய்க்குட்டியின் பிம்பங்களும் அதே போல வாலை ஆட்டுவதாகத் தெரிந்தது.அட்டா எத்தனை அன்பானவர்கள் நம்மைச் சுற்றி இருக்கிறார்கள்னு நினைத்தபடியே சந்தோஷமாக வெளியே ஓடியது.
அதே ஊரில் இன்னொரு நாய்க் குட்டி இருந்தது.அது கொஞ்சம் முசுடு.யாரோடும் சேராமல் தனித்தே இருக்கும்.அந்த நாய்க்குட்டியும் கண்ணாடி மாளிகையின் உள்ளே சென்று பார்க்க விரும்பியது.கண்ணாடியில் தெரிந்த அதனுடை பிம்பங்களைப் பார்த்ததும் அதற்கு பயமும் வெறுப்பும் வந்ததால் தற்காப்புக்காக முறைத்தபடியே கோபமாகப் பார்த்தது.அதனுடைய பிம்பங்களும் அவ்வாறே திரும்ப முறைக்கவும் அடடா இத்தனை எதிரிகளா எனப் பயந்து வெளியே ஓடி விட்டது.
அன்பை விதைத்தால் அன்பையே அறுவடை செய்யலாம்.வெறுப்பு ,கோபம் இவற்றை விதைத்தால் திரும்பக் கிடைப்பதும் அதுவே.நாம் என்ன செய்கிறோமே அதுவே நமக்குத் திரும்பக் கிடைக்கும்.நம் எண்ணங்களும் செயல்களுமே நம் வாழ்க்கையின் பிரதிபலிப்பு.
சுமதி ஸ்ரீனி
-
18th Aug 2011, 01:33 PM #2
Re: வாழ்க்கையின் பிரதிபலிப்பு
நம் எண்ணங்களும் செயல்களுமே நம் வாழ்க்கையின் பிரதிபலிப்பு.
-
18th Aug 2011, 01:41 PM #3
Re: வாழ்க்கையின் பிரதிபலிப்பு
Ennam pole valvunnu solla varreenga appadithane sumathi...
Similar Threads
-
தேங்காய்ப்பால் வெஜிடபிள் பிரியாணி
By lathabaiju in forum Vegetarian RecipesReplies: 2Last Post: 18th Aug 2011, 01:53 PM -
சிந்தனையை ஒரு மையத்தில் குவிப்பது எப்பட&
By lathabaiju in forum General DiscussionsReplies: 0Last Post: 17th Aug 2011, 03:27 PM -
மொபைல் போனை விற்கபோகிறீர்கள? இதை படியுங்
By sumathisrini in forum Mobile PhonesReplies: 0Last Post: 9th Aug 2011, 01:17 PM -
உங்கள் குழந்தையின் ஞாபக சக்தியை அதிகரிப&
By sumathisrini in forum ParentsReplies: 10Last Post: 7th Aug 2011, 08:32 AM -
வைரஸ்களிடமிருந்து கணிணியின் பாதுகாப்ப
By silentsounds in forum ComputerReplies: 0Last Post: 3rd Jun 2011, 07:46 AM


LinkBack URL
About LinkBacks



Reply With Quote
Bookmarks