Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree3Likes
  • 2 Post By urenigma
  • 1 Post By jv_66

What should I do


Discussions on "What should I do" in "In-Laws" forum.


  1. #1
    urenigma is offline Newbie
    Gender
    Female
    Join Date
    Mar 2014
    Location
    chennai
    Posts
    1

    What should I do

    Due to work distance which really long I live in a hostel near my workplace while my husband lives with his family. He kind of has to because he is the eldest with no father and 2 siblings. Long story for why they cant move to where I love. However, he makes sure that visits me in the evening and spends sometime with me before i head to office.
    I visit my MIL over the weekends, and here i where I have the problem. She always starts a fight when I and my husband go out alone. She has directly and indirectly shouted with anger because we are going out. So I and my hubby had an arrangement that we will go out alone only on saturdays and every sundays we go out as a family. And believe me when I say we go out as family sundays either for movies or dinner or simply atleast an icecream. most of which I spend for.

    Today, we had a discussion where my MIL started with my hubby that I and him go out everywhere and never bother to take to the same places. She came out very strongly that my hubby should take her alone to movies/restaurants. And i Feel this is not right. I am always up for going as a family with my BIL & SIL and MIL,but alone, Im just not comfrotable and Iam unable to convince myself that what she is demanding is correct.

    Similar Threads:

    Sponsored Links
    jv_66 and Mary Daisy like this.

  2. #2
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: What should I do

    Hi Friend,

    Welcome to Penmai.

    உங்க நிலைமையைக் கேட்க கஷ்டமா தான் இருக்கு .

    ஒரே ஊர்ல நீங்களும் , உங்க கணவரும் , தனிதனியா இருக்க நேருவது , மனசுக்குக் கஷ்டமாதான் இருக்கும் .

    நீங்க இப்போ follow பண்றததுதான் சரியான வழிமுறை .

    ஆனா , சில மாமியார்கள் , இப்படித்தான், புரிஞ்சுக்காம , பையன் மேல ரொம்பப் possessive ஆக இருப்பாங்க .

    அதுவும் , அவங்களுக்குக் கணவர் இல்லை . குடும்பத்தைப் பார்க்க , உங்க கணவர் மட்டும்தான் , அப்டின்னு இருக்கும்போது , அவங்களுக்கு ஒரு பயம் உண்டாகி இருக்கும் . உறவுக்காரங்களும் பயமுறுத்தி வச்சு இருப்பாங்க .

    எங்கே , உங்களோட தனியா , நிறைய இடங்களுக்குப் போனா , அப்டியே , உங்க பேர்ல மயங்கி , தன்னையும், தன்னுடைய மற்றக் குழந்தைகளையும் , அவர் தவிக்க விட்டுப் போயடுவாரோ , அப்புறம் , வாழ்க்கையில் கஷ்டப் பட நேருமோன்னு , ஒரு பெரிய பயம் அவங்களுக்கு உண்டாகி இருக்கும் .

    அதனாலதான் , இப்படிச் செய்யறாங்க ....வேற ஒண்ணுமில்லை .

    நீங்க , அவங்க மேல எல்லாம் , ரொம்ப அக்கறை எடுத்து , மாமியார் வீட்டுக்குப் போகும்போது எல்லாம் , அவங்க கூட மட்டுமே , (இரவு நேரம் தவிர ), எப்போதும் இருக்கறா மாதிரி பார்த்துக்கோங்க .

    எப்பவும் , அவங்களோடவே பேசிட்டு , வீட்டு நலன் , குடும்பத்தினர் நலன் , வீட்டுக்கு செய்ய வேண்டிய விஷயங்கள் , இப்படியே பேசி , அவங்களைக் கவரணும்.

    இதுபோல எல்லாம் செய்தா , "சரி , நம்ம மருமக , நம்ம கிட்டேர்ந்து , பையனைப் பிரிச்சுக் கூட்டிட்டுப் போக மாட்டா , நம்ம குடும்பத்து மேலதான் அவளுக்கு எவ்ளோ அக்கறை " அப்படின்னு , அவங்களுக்கு ஒரு நம்பிக்கை வரும் .

    இதெல்லாம் temporary phase தான் .

    இனிமே நீங்க இப்படிச் செய்யலாம் .

    வாரக் கடைசியில் , நீங்க வீட்டுக்கு வரும்போது , ரெண்டு நாளுமே , நீங்க எல்லாருமே , வெளியே போகலாம் . இல்லைனா , ஒரு நாள் , எல்லாரும் வெளிய போயிட்டு , மற்றொரு நாள் , உங்க கணவரை , அவங்க அம்மாவை மட்டும் , அவங்களுக்குப் பிடிச்ச இடத்துக்கு அழைச்சுட்டுப் போகச் சொல்லுங்க . நீங்க , அவங்க வீட்டுல , உங்க BIL, SIL கூட இருங்க.

    ஒரு தரம் , இல்ல இன்னும் சில தரம் இப்படிப் போனா , அவங்களுக்கே , "என்னடா இது , சின்னஞ்சிறுசுங்க ....அவங்க என்ஜாய் பண்ணாம , நாம இப்படி வெளிய போறோம் " ன்னு தோண ஆரம்பிச்சுடும் ....இல்லைனா , யாரவது சொல்லக் கூடச் செய்யலாம் ..."ஏன் இப்படிச் செய்யற " ன்னு......அப்போ, தானே மாறிடுவாங்க .

    இதுக்கு நடுல , உங்களோட enjoyment டையும் விட்டுக் கொடுக்க வேண்டாம் .

    தினம் evening உங்களை வந்து பார்க்கிறார் இல்லையா .....அப்போ , கொஞ்சம் முன்னதாகவே வந்து , ரெண்டு பேரும் , பக்கத்துல உள்ள ஏதாவது இடத்துல (பார்க் மாதிரி ) போய் , நிறைய பேசி , அன்னியோன்னியமா இருக்கலாம் .

    அடுத்ததா , weekdays ல என்னிக்காவது ஒரு நாள் , ரெண்டு பேரும் லீவ் எடுத்துட்டு , வெளிய போய் என்ஜாய் பண்ணுங்க . முக்கியமா , இந்த விஷயம் , உங்க in-laws வீட்டுல உள்ளவங்களுக்குத் தெரிய வேண்டாம் . இது போல மாசத்துல ஒரு நாள் , ரெண்டு நாள் செய்ஞ்சா , உங்களுக்கும் திருப்தியா இருக்கும் . உங்க கணவருக்கும் திருப்தியா இருக்கும் .

    உங்களோட , முதல் குறிக்கோள் , உங்க மாமியாரோட நம்பிக்கையை சம்பாதிப்பது தான் . அது அவங்களுக்குக் கிடைச்சுட்டா , உங்களைக் கொண்டாட ஆரம்பிச்சுடுவாங்க .

    அப்பப்போ , அவங்களுக்கு பிடிச்சதா , ஏதாவது வாங்கிக் கொடுத்துட்டே இருங்க .

    ட்ரை பண்ணிப் பாருங்க .


    Mary Daisy likes this.
    Jayanthy





  3. #3
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: What should I do

    ஹாய் friend ,

    இன்னும் ஒரு suggestion சொல்ல விரும்பறேன் . பிடிச்சாலோ , இல்ல உங்களுக்கு (உங்க ஃபாமிலிக்கு suit ஆகும்ன்னாலோ , இதை எடுத்துக்கலாம் )

    உங்க வேலை இடத்துக்கும் , உங்க கணவர் வேலை இடத்துக்கும் , பொதுவா , நடுவுல ஒரு இடமா செலக்ட் பண்ணி , ஒரு வீடு பார்த்து , நீங்க எல்லாரும் ஏன் சேர்ந்தே இருக்கக் கூடாது ?

    உங்க கணவர் மட்டுமே ஒரே bread winner அப்டின்னு இருக்கும்போது , நீங்க தனியா ஒரு இடத்துல தங்குறது , எக்ஸ்ட்ரா செலவு தானே ?

    ஒருவேளை ,இப்போ இருக்குற வீடு சொந்த வீடா இருந்தா , அதை வாடகைக்கு விட்டுட்டு , நான் சொன்ன மாதிரி இடத்துல , ஒரு வாடகை வீடு எடுத்து தங்கலாமே .

    தவிர , இப்போ உங்க கணவருக்கு , குடும்ப பாரம் அதிகமா இருக்கும் . கடமைகள் அதிகமா இருக்கும் . போகப் போக , உங்களுக்கு குழந்தைகள் வந்தால் , மேலும் குடும்ப பாரம் அதிகரிக்கும் .

    இதனால , நீங்க ரெண்டு பேருமே சேர்ந்து , குடும்பத்தை , சிக்கனமா நடத்தினால் தான் , சமாளிக்க முடியும் . இந்தக் காலத்தில் , எவ்வளோ பணம் இருந்தாலும் , குழந்தைகளை வளர்க்கும் போது , படிப்பு செலவு ஆளை முழுங்குது .

    அதனால , மாசம் ஒரு தடவை மட்டும் வெளியே போய் எல்லாரும் என்ஜாய் பண்றது , இந்த மாதிரி வச்சுக்கலாம் .

    ஆனா , சிக்கனமா இருக்கறதை , உங்க MIL க்கு , நீங்க ரொம்ப சொல்லாம , உங்க
    கணவர் தான் சொல்லணும் . போகப்போக, (வருஷங்கள் ஆகஆக) நீங்க சொல்லலாம் . அதுவரை செயல்ல மட்டுமே காட்டி , ரொம்ப அக்கறையும் காட்டி , அவசியத்துக்கு மட்டுமே செலவு செய்து , நல்ல ஒரு மருமகளா பெயர் எடுக்கலாம் .

    மறுபடியும் சொல்றேன் . இது என்னோட suggestion மட்டுமே .


    Jayanthy





loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter