Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine December! | All Issues

User Tag List

Like Tree131Likes

Gains and Pains of being 1st Daughter - in-law - மூத்த மருமகள் - கொஞ்சம் இஷ்டம் ;கொ


Discussions on "Gains and Pains of being 1st Daughter - in-law - மூத்த மருமகள் - கொஞ்சம் இஷ்டம் ;கொ" in "In-Laws" forum.


  1. #1
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Gains and Pains of being 1st Daughter - in-law - மூத்த மருமகள் - கொஞ்சம் இஷ்டம் ;கொ

    மூத்த மருமகளா நீங்க ?

    அப்போ , இது உங்களுக்கான திரியேதான்.

    ஒருவேளை , நீங்க மூத்த மருமகளா இல்லை என்றாலும் , உங்க அம்மாவோ , அக்காவோ , தங்கையோ , அண்ணியோ , உங்க கணவரின் அண்ணியோ (உங்க ஓரவத்தி ), யாரையாவது மூத்த மருமகளா பார்த்து இருப்பீங்க இல்லையா .....அவங்களைப் பத்தியும் இங்கே சொல்லலாம் .

    பொதுவா , மூத்த மருமகளா இருக்கறதுல , நிறைய சாதகங்களும் , பாதகங்களும் இருக்கும் . அவை எல்லாம் என்னென்னன்னு பார்ப்போமா ?

    நீங்க , மூத்த மருமகளா இருக்கறதை எப்படி உணர்றீங்க அப்டின்னு இங்கே பகிர்ந்துக்கலாம் .

    இதனால , நிறைய கல்யாணம் ஆக வேண்டிய பெண்களுக்கு , இது ரொம்ப உதவியா இருக்கும் .
    அவங்க மூத்த மருமகளா போகும்போது , தங்களோட கடமைகளைச் சரிவர செய்ய , உங்க டிப்ஸ் ரொம்ப உதவியா இருக்கும் .

    மத்த மருமகள்களுக்கும் ரொம்ப உதவியா இருக்கும் .


    Similar Threads:

    Sponsored Links
    Jayanthy





  2. #2
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Gains and Pains of being 1st Daughter - in-law - மூத்த மருமகள் - கொஞ்சம் இஷ்டம் ;கொ

    என்னுடைய அம்மா , வீட்டுக்கு மூத்த மருமகள் .
    அவங்களோட அனுபவங்கள்ளேர்ந்து , நான் பொதுவானதை எடுத்து , இப்போ சொல்றேன் .

    மூத்த மருமகள் - கொஞ்சம் இஷ்டம்


    1. 1.புகுந்த வீட்டுக்கு வர முதல் அன்னியப் பெண் என்ற வரவேற்பு இருக்கும் .


      2. வீட்டுல உள்ளவங்க , சில நாட்களுக்காவது ரொம்பப் பரபரப்பா , ஆவலா இருப்பாங்க .
      நம்மளோட பழக எல்லா உறுப்பினர்களும் ரொம்பவே ஆர்வமா இருப்பாங்க .


      3. ஒரு புது நபரோட , புது விதக் கைமணத்தை சுவைக்க , வீட்டு ஆண்கள் , ரொம்பவே ஆர்வமாகவும் இருப்பாங்க .


      4. வீட்டுல உள்ள , நம்மை விட வயதில் குறைவான , நாத்தனார்களும் , மைத்துனர்களும் , “அண்ணி , அண்ணி “ என்று பெரிதும் மதிப்பார்கள் .


      5. அதுவும் , நாத்தனார்களுக்கு , நம்முடைய உடைகளும் , அலங்காரங்களும் , நகைகளும் ,புது வித மயக்கத்தைக் கொடுக்கும் . நம்மையே ரோல் மாடல்களாக்கி மகிழ்வார்கள் .

      6. தங்களுடைய தோழிகளிடம் , இதெல்லாம் பற்றிப் பெருமையாகப் பேசுவார்கள் .
      மைத்துனர்களுக்கும், ஒரு புது இளம் அம்மா கிடைத்த உணர்வு வர வாய்ப்பு அதிகம் .


      7. மாமியார் , தனக்கு அடுத்து , வீட்டுப் பொறுப்புகள் அனைத்தையும் கவனிக்க ஒரு பொறுப்பான பெண் வந்ததை எண்ணி , நமக்கு , வீட்டின் அனைத்து விவரங்களையும் சொல்லித் தருவார் .


      8. பண்டிகைகளிலும் , கல்யாணம் போன்றவற்றிலும் , சடங்குகள் அனைத்தையும் செய்ய , மாமியாருக்கு அடுத்தபடியாக , நமக்குத்தான் , முதல் மரியாதை கிடைக்கும் .


      9. நாம் காலத்துக்கு ஏற்றவாறு , பண்டிகைகளையும் , மற்ற கொண்டாட்டங்களையும் , சம்பிரதாயத்துடன் இணைத்துச் செய்யும் போது , மாமியாருக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கும் .


      10. வீட்டில் ஏற்படும் நல்லது , கெட்டது அனைத்துக்கும் , நாமே பொறுப்பு ஏற்றுக் கொண்டு , திறம்படச் செய்து , நமது நிர்வகிக்கும் திறமையைக் காண்பிக்க நல்ல ஒரு வாய்ப்புகள் ஏற்படும் .


      11. ஒருவேளை , அதுவரை , மாமியார் , குடும்ப நிதி நிலைமையைச் சரியாகக் கையாளாமல் , குடும்பத்தைச் சரிவு நிலைக்குக் கொண்டு வந்து இருந்தால், நாம் உள்ளே நுழைந்த சில மாதங்களிலேயே , மெதுவாக அதைக் கையிலெடுத்து , திறம்படக் கையாண்டு , குடும்பத்தை மீட்டுக் கொண்டு வரலாம் . இதனால் , குடும்ப உறுப்பினர் அனைவருக்கும் நன்மை ஏற்படும் .


      12. வீட்டில் உள்ள சிறிய நாத்தனார்கள் , மைத்துனர்களுக்கு , தகுந்த வரன்களைப் பார்த்து முடிக்க உதவலாம் .பெரியவர்களுக்கு , ஆலோசனைகள் கூறலாம் .


      13. நாத்தனார்கள் மணமுடித்துப் போகும்போது , அம்மாவின் அறிவுரைகளோடு , நமது அறிவுரைகளையும் முக்கியமாக ஏற்றுக்கொள்வர் . அவர்கள் புகுந்த வீட்டில் , நம்மையே உதரணமாகக் கொண்டு செயல் படுவர் .


      14. மைத்துனர்களுக்கு மனைவிகள் வரும்போது , ஒரு அக்காவாக , அந்தப் பெண்ணுக்கு , வீட்டின் நடைமுறைகளை விளக்கி , அனைவருடனும் ஒத்துப் போக ஒரு சிறந்த பாலமாக நாம் இருப்போம்



    Jayanthy





  3. #3
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Gains and Pains of being 1st Daughter - in-law - மூத்த மருமகள் - கொஞ்சம் இஷ்டம் ;கொ

    மூத்த மருமகள் - கொஞ்சம் கஷ்டம்

    1. நமது மாமியார் , தனக்கு ஒரு போட்டியாளர் வந்து விட்டதாக எண்ணிச் செயல் படக் கூடும் .

    2. அவர் , அதுவரை வீட்டின் ராணியாகத் தான் இருந்ததை , தட்டிப் பறிக்கும் நபராக நம்மை எண்ணி , சகஜமாக நம்முடன் பழகாமல் இருக்கலாம் .

    3. நம் சமையலை மற்றவர் புகழ்ந்தால் , அவருக்கு மனக் கஷ்டம் உண்டாகலாம் .
    மற்றவர்கள் , நம் திறமைகளைப் பாராட்டினால் , அவருக்குப் பிடிக்காமல் போகலாம் .

    4. மற்ற வெளி உறவினர்கள் , அவரிடம் , புது மருமகளுக்கு ரொம்ப இடம் கொடுத்தால் , தலைக்கு மேல் ஏறிவிடலாம் என்று அவருக்கு வேண்டாத போதனைகள் செய்து , அதனால் , அவருக்கு ஒரு புது பயம் ஏற்படலாம்.

    5. வீட்டின் பொறுப்புகளை தானே ஏற்றுக் கொண்டு செயல் படும்போது , அதில் ஏதாவது சிறு தவறு நேர்ந்தாலும் , உடனே நம்மை மட்டுமே முழுப் பொறுப்பாக்கி , அனைவரும் நம்மை வசை பாட நேரிடலாம் .

    6. அதற்குப் பிறகு , நம்மிடம் பொறுப்பைக் கொடுக்கத் தயங்கலாம் .

    7. நம்மையே ரோல் மாடல்களாக எடுத்துக் கொண்டு , நம் நாத்தனார்கள் , அவர்கள் புகுந்த வீட்டிலும் , ஒருவேளை அந்தச் சூழ்நிலைக்கு ஏற்றவாறு இல்லாத நிகழ்வுகளில் செயல்பட்டு , நமக்குக் கெட்டபெயர் கிடைத்து விட வாய்ப்பு ஏற்படுத்தலாம் .

    8. புதிதாக வரும் மைத்துனர்களின் மனைவிகள் , தங்களுக்கு முதல் மதிப்பு , வேண்டும் என்று நினைத்து , நம்மை மதிக்காமல் இருக்க வாய்ப்பு உண்டு .

    9. அவர்கள் , அதிக சீர் , இல்லாவிட்டால் , நம் பிறந்த வீட்டை விட பணக்கார இடமாக அமைந்து விட்டால், அந்தப் பெண்ணும் , வீட்டில் உள்ள மற்றவர்களும் , நம்மை மதிக்காமல் , அவளுக்கே முதல் மரியாதை தர வாய்ப்பு உண்டு .


    நிலைமை எப்படி இருந்தாலும் , சமயோசிதமாக அதைக் கையாண்டு , நல்ல மருமகளாகத் திகழ்ந்து , குடும்பத்தினரின் நன்மதிப்பைப் பெறுவதே நம் லட்சியமாக இருக்க வேண்டும் .


    இப்போது உங்கள் அனுபவங்களைச் சொல்லுங்கள் தோழிகளே .


    Jayanthy





  4. #4
    vijivedachalam's Avatar
    vijivedachalam is offline Penman of Penmai
    Blogger
    Ruler's of Penmai
    Real Name
    vijayalakshmiBala
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    villupuram
    Posts
    10,965
    Blog Entries
    68

    Re: Gains and Pains of being 1st Daughter - in-law - மூத்த மருமகள் - கொஞ்சம் இஷ்டம் ;கொ

    Hi Jeya ka
    .nice thread...... am only daughter in law to my mother in law.....so i feel both plus and minus in it.......

    life is so beautiful....

  5. #5
    sumathisrini's Avatar
    sumathisrini is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Sumathi
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Hosur
    Posts
    33,585

    Re: Gains and Pains of being 1st Daughter - in-law - மூத்த மருமகள் - கொஞ்சம் இஷ்டம் ;கொ

    ஆரோக்கியமான நல்லதொரு கலந்துரையாடலை தரும் அருமையான திரி.

    என் வீட்டில் நான் ஒரே மருமகள் தான். அதனால் ஏறத்தாழ மூத்த மருமகள் என்ற நிலை தான்.

    எனக்கு திருமணமான சில மாதங்களிலேயே என் மாமியார் குடும்பப் பொறுப்பு (வரவு செலவுகள் மற்றும் குடும்பத்தை நடத்தும் பொருட்டு எல்லா வேலைகளையும்) முழுவதையும் என்னிடம் கொடுத்து விட்டு 'உன் குடும்பம், இனி உன் பொறுப்பு... மகளே உன் சமத்து' என்று சொல்லிவிட்டார்கள்.

    அதுவரை (பிறந்த வீட்டில்) பொறுப்பில்லாத வாழ்க்கை வாழ்ந்து வந்த எனக்கு அது குருவித் தலையில் பனங்காயை வைத்த மாதிரி தான் இருந்தது. குடும்ப நிதி நிலையை நானே பார்க்கவேண்டிய நிர்பந்தத்தினால், என்னுடைய சில நியாயமான ஆசைகளைக் கூட நிறைவேற்றிக் கொள்ள முடியாத நிலை பல சந்தர்ப்பங்களில் நிகழ்ந்ததுண்டு. அது அந்த சூழ்நிலையில் ஒரு இழப்பாகவே எனக்குத் தோன்றியது.

    ஆனால் அப்படி கிடைத்த ஒரு பொறுப்பை ஒரு சவாலாக ஏற்றுக் கொண்டு, பட்ஜெட் போட்டு குடும்பம் நடத்தி, சிறுகச் சிறுகச் சேர்த்து, வீடு கட்டி... இன்று வரை என் நாத்தனார்களுக்கு (மூன்று பேர்) செய்ய வேண்டிய சீர் செனத்திகளை நிறைவாகச் செய்து, அவர்களின் மனதிலும் ஒரு நன் மதிப்பை பெற்று... அந்த மக்ழ்ச்சியை வார்த்தைகளால் சொல்ல முடியாது. கண்டிப்பாக இது என் கணவரின் நல்ல மனம், ஒத்துழைப்பு இல்லாவிட்டால் சாத்தியமாகி இருக்காது.
    அவருக்கும் இந்த தருணத்தில் நான் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன்.

    குடும்பத்தை நடத்தும் பொருட்டு எவ்வளவோ (நம் சொந்த ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ள முடியாமல்) தியாகங்கள் செய்தாலும், இன்று நாம் சமுதாயத்திலும், உறவு வட்டத்திலும், நட்பு வட்டத்திலும் ஒரு மதிப்பான வாழ்க்கை வாழ்கிறோம் என்ற மகிழ்ச்சியே என்றென்றும் நிலைத்து நிற்கும் ஆதலால், இழந்தவைகள் பெரிய இழப்பாக தோன்றுவதில்லை.

    என் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள வாய்ப்பு ஏறபடுத்திக் கொடுத்தமைக்கு நன்றி ஜெயந்தி.



  6. #6
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Gains and Pains of being 1st Daughter - in-law - மூத்த மருமகள் - கொஞ்சம் இஷ்டம் ;கொ

    Quote Originally Posted by vijivedachalam View Post
    Hi Jeya ka
    .nice thread...... am only daughter in law to my mother in law.....so i feel both plus and minus in it.......

    O.....As usual, you find both the qualities of being the only DIL , isn't it , ?Viji.....

    Thanks for sharing dear.

    Jayanthy





  7. #7
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Gains and Pains of being 1st Daughter - in-law - மூத்த மருமகள் - கொஞ்சம் இஷ்டம் ;கொ

    Quote Originally Posted by sumathisrini View Post
    ஆரோக்கியமான நல்லதொரு கலந்துரையாடலை தரும் அருமையான திரி.

    என் வீட்டில் நான் ஒரே மருமகள் தான். அதனால் ஏறத்தாழ மூத்த மருமகள் என்ற நிலை தான்.

    எனக்கு திருமணமான சில மாதங்களிலேயே என் மாமியார் குடும்பப் பொறுப்பு (வரவு செலவுகள் மற்றும் குடும்பத்தை நடத்தும் பொருட்டு எல்லா வேலைகளையும்) முழுவதையும் என்னிடம் கொடுத்து விட்டு 'உன் குடும்பம், இனி உன் பொறுப்பு... மகளே உன் சமத்து' என்று சொல்லிவிட்டார்கள்.

    அதுவரை (பிறந்த வீட்டில்) பொறுப்பில்லாத வாழ்க்கை வாழ்ந்து வந்த எனக்கு அது குருவித் தலையில் பனங்காயை வைத்த மாதிரி தான் இருந்தது. குடும்ப நிதி நிலையை நானே பார்க்கவேண்டிய நிர்பந்தத்தினால், என்னுடைய சில நியாயமான ஆசைகளைக் கூட நிறைவேற்றிக் கொள்ள முடியாத நிலை பல சந்தர்ப்பங்களில் நிகழ்ந்ததுண்டு. அது அந்த சூழ்நிலையில் ஒரு இழப்பாகவே எனக்குத் தோன்றியது.

    ஆனால் அப்படி கிடைத்த ஒரு பொறுப்பை ஒரு சவாலாக ஏற்றுக் கொண்டு, பட்ஜெட் போட்டு குடும்பம் நடத்தி, சிறுகச் சிறுகச் சேர்த்து, வீடு கட்டி... இன்று வரை என் நாத்தனார்களுக்கு (மூன்று பேர்) செய்ய வேண்டிய சீர் செனத்திகளை நிறைவாகச் செய்து, அவர்களின் மனதிலும் ஒரு நன் மதிப்பை பெற்று... அந்த மக்ழ்ச்சியை வார்த்தைகளால் சொல்ல முடியாது. கண்டிப்பாக இது என் கணவரின் நல்ல மனம், ஒத்துழைப்பு இல்லாவிட்டால் சாத்தியமாகி இருக்காது.
    அவருக்கும் இந்த தருணத்தில் நான் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன்.

    குடும்பத்தை நடத்தும் பொருட்டு எவ்வளவோ (நம் சொந்த ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ள முடியாமல்) தியாகங்கள் செய்தாலும், இன்று நாம் சமுதாயத்திலும், உறவு வட்டத்திலும், நட்பு வட்டத்திலும் ஒரு மதிப்பான வாழ்க்கை வாழ்கிறோம் என்ற மகிழ்ச்சியே என்றென்றும் நிலைத்து நிற்கும் ஆதலால், இழந்தவைகள் பெரிய இழப்பாக தோன்றுவதில்லை.

    என் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள வாய்ப்பு ஏறபடுத்திக் கொடுத்தமைக்கு நன்றி ஜெயந்தி.


    பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி சுமதி .

    உங்கள் மாமியார் , உங்களை நல்ல புடம் போட்டவராக ஆக்க , ஒரு சிறந்த யுக்தியைக் கையாண்டு இருக்கிறார் போலிருக்கு .

    கஷ்டம் , நஷ்டம் எல்லாத்தையும் தாண்டி , இன்னிக்கு நிமிர்ந்து நிக்கறீங்களே , அது எவ்வளோ பெருமை தருது இல்லையா .....முதலில் கொஞ்சம் கஷ்டப்பட்டாலும் , இப்போ சந்தோஷமாகவும் , சாதித்த உணர்வும் அடைஞ்சு இருக்கீங்களே , அது தான் சிறப்பு .

    Jayanthy





  8. #8
    gkarti's Avatar
    gkarti is online now Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Karthiga
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Madurai
    Posts
    49,138

    Re: Gains and Pains of being 1st Daughter - in-law - மூத்த மருமகள் - கொஞ்சம் இஷ்டம் ;கொ

    Nice Aunty! Enga Amma, First DIL thaan So, ll Join you Soon


  9. #9
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Gains and Pains of being 1st Daughter - in-law - மூத்த மருமகள் - கொஞ்சம் இஷ்டம் ;கொ

    Quote Originally Posted by gkarti View Post
    Nice Aunty! Enga Amma, First DIL thaan So, ll Join you Soon

    O....apdiya da....kandippa kettu sollu.....niraya peruku use aagum.

    Jayanthy





  10. #10
    gkarti's Avatar
    gkarti is online now Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Karthiga
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Madurai
    Posts
    49,138

    Re: Gains and Pains of being 1st Daughter - in-law - மூத்த மருமகள் - கொஞ்சம் இஷ்டம் ;கொ

    Kandippa Aunty.. ## Tamil New Year Shopping thread Open Pannunga, Nan Start Panniten Innaikke But Kalladi varama parthukka vendiyathu Unga Poruppu

    Quote Originally Posted by jv_66 View Post
    O....apdiya da....kandippa kettu sollu.....niraya peruku use aagum.



loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter