வாழ்க்கை இனிமையானது
Discuss here on வாழ்க்கை இனிமையானது within the In-Laws forums, part of the Family & Relationship forum; நம் அநேகரிடம் அதிகமாக வெளிப்படும் சொற்கள், நிம்மதியே இல்லை, வாழ்க்கையே ஒரு போராட்டமாக இருக்கிறது, எனக்கு மட்டும் ஏன் கடவுள் இந்த மாதிரி கஷ்டங்களை கொடுக்கிறார்; போன்றவைதான். ...
-
4th Nov 2011, 05:44 PM #1
வாழ்க்கை இனிமையானது
நம் அநேகரிடம் அதிகமாக வெளிப்படும் சொற்கள், நிம்மதியே இல்லை, வாழ்க்கையே ஒரு போராட்டமாக இருக்கிறது, எனக்கு மட்டும் ஏன் கடவுள் இந்த மாதிரி கஷ்டங்களை கொடுக்கிறார்; போன்றவைதான். வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்களுக்கும் அதே 24 மணி நேரம்தான் ஒரு நாளைக்கு. குறைக்கூறிக் கொண்டே இருப்பவர்களுக்கும் அதே மணி நேரம் தான். இதில் பாரபட்சம் இல்லை. அவரவர்கள் வாழ்க்கையை அணுகும் முறைதான் காரணமாகும். வாழ்க்கை என்பது பலாப்பழம் மாதிரி. சிலர் தங்கள் அணுகும் முறையால் சக்கையைப் பெறுகிறார்கள். சிலர் சுளையைப் பெற்று வாழ்க்கை இனிமையானது என்கிறார்கள்.
நம்பிக்கை, நெஞ்சுறுதி, பொறுமை. மகிழ்ச்சி, அன்பு இந்த ஐம்படைகளை கொண்டு துன்பம் என்ற தோல்வியைத் துரத்தி, இன்பம் என்ற கோட்டையைப் பிடிக்க முடியும். மகிழ்ச்சி என்பது ஒரு மொஸைக் கற்களால் பதிக்கப்பட்ட ஒரு தரையைப் போல என்றார் ஒரு எழுத்தாளர். தரை என்பது பற்பல கற்களைக் கொண்டு பரவப்படுவது தானே. அன்போடு செய்யப்படும் சிறு சிறு உதவிகள், சிறு மரியாதைகள், பிறரை அனுசரித்துப் போதல், உதவியாக இருத்தல், எப்பொழுதும் கருணையோடு ஒன்றை நோக்குதல், பிறர் உணர்ச்சிகளுக்கு மரியாதை கொடுத்தல், பிறருடைய சிறு நலிவான குணங்கள் தெரிந்து அவர்களை நோகச் செய்யாமல் இருத்தல் - என்பவைதான் மகிழ்ச்சிக்குப் பின் உள்ள இரகசியங்கள்.
அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது
மானிடராய்ப் பிறந்திடினும்
கூன்குருடு செவிடு பேடு நீங்கிப் பிறத்தல் அரிது
பேடு நீங்கிப் பிறந்த காலையும்
ஞானமும் கல்வியும் நயத்தல் அரிது
இப்படி பேறு பெற்ற மானுடன் தான் கற்கிறான், கேட்கிறான், சிந்திக்கிறான், செயல்படுகிறான். மனித வாழ்வுக்கு வளம் தருவது, மகிழ்ச்சி தருவது, சுவை தருவது, புகழ் தருவது செயற்பாடுதான். சுபிட்சத்தின் திறவுகோல் செயல்தான். கதவு திறக்க வேண்டுமாயின் முதலில் தட்ட வேண்டும். தட்டாமல் வீணே கிடந்து புலம்பக் கூடாது. மகிழ்ச்சி நமக்கு வேண்டுமாயின் நற்செயலை நம் உள்ளத்தில் விதைக்க வேண்டும். இராணுவத்தில் சிப்பாயாக இருந்தான் நெப்போலியன். நாடாளும் மன்னனாக ஆனான். அவன் கொஞ்சமாகவா உழைத்திருப்பான்? உழைக் காமல் இருந்து கொண்டு நாம் இன்பம் கிடைக்க வில்லை என்று நேரத்தை காரணம் காட்டியும், கடவுளை நிந்தித்துக் கொண்டிருப்பதில் என்ன நியாயம்? அவரவர் தம்முடைய கடமையை மட்டும் உணர்ந்து செயல்பட்டால் போதும். பலன்கள் தாமே தேடி வந்து அடையும்.
எல்லா உயிரினங்களும் துன்பத்தை அனுபவித்துத் தான் தீர வேண்டும். எதுவானாலும் பொருளை விரும்பும் யாராலும், எதுவானாலும் துன்பமின்றி இன்பமாக இருக்க முடியாது. துன்பத்திற்கு துக்கம், கவலை, வருத்தம், மனநோய் என்று பல பெயர்கள் உள்ளன. நாம் யார் ஒருவரைப் பார்த்து நலமாக இருக்கிறீர்களா? என்று கேட்டால் இல்லை என்ற பதில்தான் வரும்.
எதையும் சந்தோஷமாக ஏற்றுக் கொள்ளப் பழக வேண்டும். அழவேண்டிய சந்தர்ப்பம் வந்தால் சந்தோஷமாக அழ வேண்டும். அதே சமயம் அறிவோடு சிந்திக்கவும் வேண்டும். எல்லாவற்றையும் சுலபமானது என்று ஏற்றுக் கொள்ளப் பழக வேண்டும். அதுதான் துன்பத்தை துரத்தும் வழி. புத்த மதத்தினர் தியானம் செய்வதற்கு முன் சில பாடல் வரிகளை உணர்வோடு சொல்வார்கள்.
உள்ளிழுக்கும் மூச்சில் நான்
உடலை அமைதிப்படுத்துகிறேன்
வெளிவரும் மூச்சில் நான்
புன்னகைக்கிறேன்.
இந்த நொடியில் வாழ்வது என்பது
எனக்கு தெரியும் அற்புதமானது.
எனவே இந்த நொடியில் நாம் அமைதியாக இருப்பதற்கு, இந்த நொடியின் அற்புதத்தில் நிறைவாக வாழ்வதற்கு என்ன வழி என்று தான் பார்க்க வேண்டும்.
நல்லவர்களாகவே இருங்கள் மகிழ்ச்சி உங்களை வந்தடையும் என்பது மிகப் பழமை யான அறிவுரை. திருமதி மேரி ஏ. லிவர் மோர் இப்பொழுது சற்றே மாற்றி மகிழ்ச்சியுடனே இருங்கள்! உங்கள் ஆரோக்கியம் சரியாகிவிடும் என்கிறார். மகிழ்ச்சியாக இருப்பது என்பது ஒரு மனநிலை. நாம் செய்யும் சின்னச் சின்ன உதவிகளிலும் பெரும் மகிழ்ச்சி அடையலாம். இப்படி எத்தனையோ விஷயங்கள் இருக்கும் போது எதற்குக் கவலைப்பட வேண்டும். எதற்குக் கவலைப்பட வேண்டும் என்பதே இல்லாமல் எல்லாவற்றிற்கும் கவலைப்படுவார்கள். எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது என்ற கீதா வரிகளை உபதேசத்திற்கு மட்டும் வைத்துக்கொண்டு தங்களுடைய வாழ்க்கையில் பின்பற்ற மறந்து விடுகின்றனர் பலர். நம்முடைய மனம் இருக்கிறதே. அது ஓர் அற்புதமான கருவூலம். அந்த கரூவூலத்திலிருந்து நாம் விரும்புவதை எடுத்துக்கொள்ள முடியும். எந்த ஒன்றிலும் நாம் மகிழ்ச்சியுற எண்ணினால் நாம் மகிழலாம். துக்கப்பட எண்ணினால் நாம் துக்கப்படலாம்.
அமைதியாக வாழ வேண்டும் என்பது எல்லோருக்கும் உள்ள ஆசை. அலை பாய்ந்து கொண்டிருக்கும் மனதை வைத்துக்கொண்டு அதை பெற முடியுமா என்ன? அதனால், எதை செய்கிறோமோ அதில் முழுக்கவனம் செலுத்தி னால் அமைதி தானாகக் கிடைக்கப்பெற்றிடும். அதைத் தேடி வெளியே அலைய வேண்டிய தில்லை.
நன்றி;வேணுகோபால்பாசமுடன்..
பாலா.
-
16th Dec 2011, 10:03 AM #2
Re: வாழ்க்கை இனிமையானது
மகிழ்ச்சியாக இருப்பது ஒரு கலை. போதுமென்ற மனம், இனிய புன்னகை, மனதில் சலனம் இல்லாமல் வெற்றி, தோல்வியை சமமாய் பாவிக்கும் பாவம், உதவும் குணம், கடவுள் நம்பிக்கை போன்ற குணங்கள் இருந்தால் எந்த துன்பமான சூழலிலும் மகிழ்ச்சியாக இருக்கலாம்.
"
Our sweetest songs are those that tell of the saddest thoughts
"
Similar Threads
-
அழகான உதடுகளுக்கு இயற்கை முறை ஆலோசனை
By nayakivel in forum Face CareReplies: 2Last Post: 19th Nov 2011, 02:44 PM -
வேகமான சிந்தனை வாழ்க்கையில் எவ்வளவு முக
By lathabaiju in forum Interesting FactsReplies: 1Last Post: 17th Aug 2011, 12:35 PM -
இது பெரிய கடவுளின் வாழ்வு!!!இது உணமையான வா
By surya in forum Interesting FactsReplies: 14Last Post: 4th Aug 2011, 03:36 PM -
இளைஞர்கள் நினைத்தால் ஊழலை ஒழிக்க முடியு&
By Kavibhanu in forum News & PoliticsReplies: 0Last Post: 15th Jun 2011, 10:42 PM -
இன்றைய உலக வாழ்க்கை...என்னுள் தோன்றியதை பĨ
By silentsounds in forum Forwarded MessagesReplies: 0Last Post: 15th Mar 2011, 08:16 AM


3Likes
LinkBack URL
About LinkBacks

Reply With Quote
Bookmarks