Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine December! | All Issues

User Tag List

Like Tree17Likes

மணமுறிவுக்குப் பின் - After Divorce


Discussions on "மணமுறிவுக்குப் பின் - After Divorce" in "Life without mate" forum.


  1. #11
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: மணமுறிவுக்குப் பின் - After Divorce

    Thanks for sharing all these details. will be very useful for the needy.


    Sponsored Links
    Jayanthy





  2. #12
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: மணமுறிவுக்குப் பின் - After Divorce

    ஒரு பெண், கணவனைப் பிரிந்து தனியாகவோ அல்லது தன் பெற்றோருடன் மீண்டும் வாழ்வதே ஒரு தண்டனைதான். அதில் கூடுதலாக, விவாகரத்து வழக்கு பெரும் பாரமாகவும் மனச் சுமையாகவும் அதிகம் துயர் கொடுக்கும். குடும்ப நீதிமன்ற நடைமுறை, வழக்கு இவை அவர்களை அதிகம் சோர்வுறச் செய்துவிடும்.

    பல முனைகளிலிருந்து கேள்விகளை எதிர்நோக்க வேண்டிய சூழலுக்குத் தள்ளப்படும்போது, ‘என்னை விட்டுங்களேன்’ என்று நினைப்பாள். இந்த ஊரைவிட்டு, இந்த உலகத்தையே விட்டுப் போயிடலாம் என்று துயரின் உச்சத்தில் நினைப்பார்கள். இதுபோன்ற சமயங்களில்தான், தற்கொலை எண்ணங்களும் தலைதூக்கும்.


    வள் விவாகரத்து செய்யப்போகிறாள் என்று இந்தக் கட்டத்தில்தான் அக்கம் பக்கத்தினருக்கும் தோழமைகளுக்கும் தெரிய வரும். சிலர் அட்வைஸ், கருத்து சொல்ல ஆரம்பித்துவிடுவார்கள். ‘நான்தான் அப்பவே சொன்னேனே, உங்களுக்குள்ள ஒரு இன்ட்டிமஸி இல்லைன்னு. பாரு, இப்ப என்னாச்சுன்னு’ என்று நேரடியாகவே சிலர் குத்தலாகப் பேசுவார்கள். நல்லது செய்கிறேன் பேர்வழி என்று கணவரிடம் பேசுகிறேன் என்று மேலும் சிக்கலாக்கிவிடுவார்கள்.

    எதாவது அற்புதம் நிகழ்ந்து தனக்கு விவாகரத்து ரத்து ஆகாதா என்று எதிர்ப்பார்க்கும் அந்தப் பெண்ணுக்கு, இதுபோன்ற சம்பவங்கள், பஞ்சாயத்துகள் நிச்சயம் பேரிடிகள்தான். ஒரு பிரிவை, நிரந்தரப் பிரிவாக்கிவிடுபவர்கள் சுற்றி இருப்பது பெரும் ஆபத்து.

    தவிர, விவாகரத்து என்பது அந்தப் பெண்ணின் மேல் ஏற்கெனவே திணிக்கப்பட்டுள்ளது. எவ்விதத் தவறும் செய்யாமல் கிடைக்கப்போகும் அந்தத் தண்டனை இது.

    ஆனால், கொடுமை என்னவென்றால், சமூகமும் சுற்றமும், பெண்ணை மட்டும் குற்றவாளியாக்குகிறது. யார் மீது தவறு இருந்தாலும், முழுதாகப் பெண்களை மட்டும் இதற்குப் பொறுப்பேற்கச் செய்துவிடுகிறது. தவிர, வீட்டுக்குள் சகோதர சகோதரிகளுக்குத் தவறான முன் உதாரணம் ஆகிவிட்டோமே என்ற குற்றவுணர்வு வேறு அவர்களுக்கு ஏற்படும். அதனால், விவாகரத்து வழக்கு விவகாரங்களில் ஒரு பெண் அதிகம் உள்ளுக்குள் நொறுங்கிப் போவாள்.

    நெருங்கிய உறவினர்களே, ‘இவ வளர்ப்பு சரியில்லை; குடும்பத்தை, புருஷனை அனுசரிச்சுப் போகத் தெரியலை’ என்று பழி சொல்லுவார்கள். சுற்றிலும் குறை சொல்பவர்கள் மத்தியில், தங்களுடைய வாதத்தை யார் கேட்பார்கள் என்று அவர்கள் மனம் தவிர்க்கும். தவிர, வெளியில் சொல்லமுடியாத பிரச்னைகள் இருக்கும் பட்சத்தில், அதை மற்றவர்களிடம் சொல்லிப் புரியவைக்க முடியாத நிலையில், இவ்விதக் குற்றச்சாட்டுகள், அவப்பெயர்கள், வெந்த புண்ணில் மிளகாய்ப் பொடியைத் தூவுவதற்குச் சமம். ஆனால், சமுதாயம் என்று கூறப்படும் சுற்றமும் நட்பமும், தொடர்ந்து இதைத்தான் செய்துவருகின்றன.

    கணவனால் ஏற்கெனவே பாதிக்கப்பட்டு, அதன் காரணமாக மணவாழ்க்கையிலிருந்து விவகாரத்து பெறும் பெண்களுக்கு நீங்கள் பெரிதாக ஆறுதல் எதுவும் கூற வேண்டாம். அவர்கள் வாழ்க்கையில் நாம் தீர்ப்பு எழுதாமல் இருந்தால் போதும். தேவையற்ற பேச்சுகளை அவர்கள் காதுபடப் பேசாதீர்கள். இதுபோன்ற சம்பவங்கள் யாருக்கு, எப்போது நடக்கும் என்று கூற முடியாது அல்லவா?

    நாளை நம் வீட்டிலோ அல்லது குடும்பத்திலோ இதேபோல ஒரு பெண் கணவனைப் பிரிந்தால், கொழுப்பெடுத்தவள், திமிர் பிடித்தவள் என்று கனல் சொற்களை வீசாதீர்கள். எரிகின்ற அவர்கள் மனக் கொள்ளியில் பெட்ரோல் ஊற்றாதீர்கள். அவரவர் வாழ்க்கை, அவரவர் பிரச்னை, அவரவர் வலி. வீட்டுக்கு வீடு வாசப்படி என்று இதைத்தான் பெரியவர்கள் சொல்லிவைத்துப் போனார்கள்.

    இந்த மனநிலை, ஏற்கெனவே சொன்னதுபோல அவளிடம் எதிர்மறை எண்ணங்களை உருவாக்குகிறது. ஒன்று தனக்கு எதாவது கெடுதல் செய்துகொள்வது அல்லது தன்னை இந்த நிலைக்கு உள்ளாக்கியவரைப் பழிவாங்க வேண்டும் என்று சதா மனது துடித்துக்கொண்டிருக்கும். விவாகரத்து வழக்கு ஆரம்பித்துவிட்ட நிலையில், ஒரே வீட்டில் பிரியப்போகும் துணையுடன் இருக்க நேரிட்டால், இது மேலும் பிரச்னையாகிவிடும். வாய்ச் சண்டை, அடிதடி என ஆரம்பித்து, கொலை வரை முடியும் உணர்வெழுச்சிக் காலகட்டம் இது.

    மனிதர்கள் யாவரும் கைவிட்ட மன நிலையில் இருக்கும் அவர்களுக்கு, கடவுள் பக்தியும் குறைந்துவிடும். எந்தத் தப்பும் செய்யாத எனக்குக் கடவுள் இப்படி ஒரு மணவாழ்க்கையை ஏற்படுத்திக் கொடுத்துவிட்டானே என்று கடவுள் மீதான நம்பிக்கையும் போய்விடும். ஆனால், வீட்டில் உள்ளவர்களோ, கோவிலுக்குப் போய் தீபம் போடு, எல்லாம் சரியாகிடும் என்று அறிவுரை கொடுப்பார்கள்.

    அது கோபத்தை அதிகரிக்கவே செய்யும். எதிர்மறை எண்ணங்கள் சூழும்போது, சின்ன சின்ன நம்பிக்கை வேர்களும் தகர்ந்துவிடுவது இயல்பு. அந்தப் பெண்ணுக்கு குழந்தை இருந்துவிட்டால், அது மேலும் ஒரு கூடுதல் பொறுப்பு. எல்லா இடத்துக்கும் குழந்தையை மட்டும் அழைத்துச் செல்கையில், கணவன் எங்கே, டேய் தம்பி அப்பா வரலையா என்று முகத்துக்கு நேராகக் கேட்கப்படும் கேள்விகள், தர்மசங்கடத்துக்கு உள்ளாக்கிவிடும். இதையெல்லாம் எப்படிச் சமாளிப்பது என்று சதா மூளை குறுக்குவெட்டாக யோசித்துக்கொண்டே இருக்கும். நெருங்கிய நட்பு வட்டத்துக்கு மட்டும் தெரியும் என்று நினைத்திருந்த இந்த விஷயம், ஆச்சரியத்தக்க அளவில் அனைவருக்கும் தெரிந்ததாகி வெட்ட வெளிச்சமாகிவிடும்போது, மிகவும் மனத்துயருக்கு உள்ளாகிவிடுவாள் அந்தப் பெண்.

    அக்கம் பக்கத்தில், அரசல் புரசலாக இந்த விஷயம் வெளிவரத் தொடங்கும். வேலைக்குச் செல்லும் பெண்களாக இருந்தால், அலுவலகத்தில் சொல்லலாமா வேண்டாமா என்ற தடுமாற்றம் ஏற்படும். ஆண்களைப் பொறுத்தவரையில், திருமணம் ஆன விஷயத்தையே மறைத்து விவாகரத்தையும் மறைத்து, புதிய ஆபீஸ், புதுச் சூழல் என்று தன்னை முழுமையாகப் புது இடத்தில் எளிதாகப் பொருத்திக்கொள்ள முடியும். ஒரு பெண் தனியாகச் சந்திக்கும் பிரச்னைகளையும் நெருக்கடிகளையும், ஒருபோதும் ஒரு ஆண் சந்திப்பதில்லை.

    உடல்ரீதியாகவும் சரி, உளரீதியாகவும் சரி, பெண்ணை எல்லாவிதத்திலும் கீறிப் பார்க்கும் அறுவைச் சிகிச்சையாளர்கள் இருக்கும் சமூகம் இது. அலுவலகத்தில், எனக்கு விவாகரத்து ஆகிவிட்டது என்று சொன்னால், இனிமேல் இவர்கள் நம்மைப் பார்க்கும் பார்வை மாறிவிடுவோ என்று குழப்பமாக இருக்கும்.

    ஆனால் தன்னுடைய மேலதிகாரி, ஹெச்.ஆர். போன்றவர்களிடம் சொல்லித்தான் ஆக வேண்டிய கட்டாயம். அப்படி சொன்ன பிறகு, அவர் யாரிடமாவது இதைப்பற்றி சொல்லிவிடுவாரோ என்று ஒவ்வொரு நாளும் முள் மீது நிற்பது போன்ற வலி இருந்துகொண்டிருக்கும். விவாகரத்து ஆகிவிட்டது என்று அலுவலகத் தோழமைகளிடம் சொல்லிவிட்டால், அதுவே சில ஆண்களிடமிருந்து மறைமுக அழைப்புகளுக்கு வழிவகுத்துவிடும். ஆபீஸ் பூஜை அல்லது எதாவது விழாவில் முன் நிற்க சங்கடப்பட்டு விலகிக்கொள்வார்கள்.

    (தொடர்ந்து பேசுவோம்)
    டாக்டர் அபிலாஷா


    Last edited by chan; 13th Sep 2015 at 02:17 PM.

  3. #13
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: மணமுறிவுக்குப் பின் - After Divorce

    இருள் சூழ்ந்த குகை ஒன்றின் நடுவே இருப்பதுபோல, ஏற்கெனவே மூச்சு முட்டிக்கொண்டிருக்கும் வேளையில், இன்னொரு திருமணம் பற்றிப் பேசினால், விவகாரத்து ஆன பெண்கள் விரும்புவதில்லை. அதேநேரம், ஆண்களைப் பொருத்தவரையில் விரைவில் மனம் மாறிவிடுவார்கள்.

    அல்லது அவர்கள் வீட்டில் உனக்கென்ன ஆம்பளை சிங்கம் என்று மூளைச் சலவை செய்து சம்மதிக்க வைத்துவிடுவார்கள். பெண்களுக்குப் பலவிதமான சிக்கல்கள். விவாகரத்து ஆன பின்பு, மீண்டும் பழைய வாழ்க்கையைக் கட்டமைப்பதே பெரும் பாடாகிவிடுகிறது.


    தீபாவுக்குச் சொந்த ஊர் மதுரை. பள்ளியில் படிக்கும்போது சக மாணவன் ரமணனுடன் காதல் ஏற்பட, கல்லூரி இறுதி ஆண்டு படிக்கும்போதே பதிவுத் திருமணம் செய்துகொள்கிறார்கள். ஆனால், சில மாதங்களிலேயே அவர்களுக்குள் பிரச்னை ஏற்பட்டு, அடிக்கடி சண்டை போட ஆரம்பித்தார்கள். ஒரு கட்டத்தில், ரமணன் மேற்படிப்புக்காக வெளிநாடு சென்றுவிட்டபோது, தீபா மனம் உடைந்துபோனாள்.

    என்ன செய்வது என்று குழம்பிய நிலையில், வீட்டில் திருமண ஏற்பாடு செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். வேறு வழியின்றி விஷயத்தைச் சொல்ல, அனைவருக்கும் தலையில் இடி விழுந்ததுபோல ஆனது. ரமணன், விடுமுறைக்கு ஊருக்கு வரும்போது, அவன் படிப்பு முடித்து வேலைக்குப் போன பிறகு சேர்ந்து வாழலாம் என்று விட்டேத்தியாகக் கூற, தீபா குடும்பத்துக்கும் ரமணன் குடும்பத்துக்கும் தகராறு ஏற்பட்டது.

    தீபாவும் படிப்பைத் தொடர முடிவு செய்து சென்னைக்கு சென்றாள். அங்கு அவள் மனம் சற்று அமைதி அடைய ஆரம்பித்தது. அங்கு கிடைத்த தோழி மேகலா, அவளுடைய வாழ்க்கைப் பாதையை மாற்றுவதற்கு உதவி செய்தாள்.

    அவளை நன்றாகப் படிக்க ஊக்கப்படுத்தியதோடு, நல்ல நட்பு வட்டத்தை அறிமுகப்படுத்தினாள். இயற்கையிலேயே உதவும் மனப்பான்மை கொண்ட தீபா, மேகலாவின் தோழிகளோடு சேர்ந்து பொதுச் சேவையில் ஈடுபட்டாள். அதிலும் முக்கியமாக, மாணவர்களிடம் கல்வி குறித்தும், எதிர்கால வாழ்க்கைப் பற்றியும் கவுன்சிலிங் தரத் தொடங்கினாள். அவளுக்கே கவுன்சிலிங் தேவைப்பட்ட காலம் போய், அவள் நூறு பேருக்குப் பேசித் தெளிவடைய வைக்கும் திறன் பெற்றாள்.

    ரமணன் படிப்பை முடித்துவந்தும் ஒரு மாற்றமும் இல்லை. ஒட்டுதல் இல்லாத ஒரு உறவில் நீடித்திருக்க மனம் விரும்பாமல், ம்யூச்சுவல் டைவர்ஸுக்கு அப்ளை செய்து, இருவரும் சட்டரீதியாகப் பிரிந்தார்கள். சொந்தக்காரர்கள், ஊர்க்காரர்கள் தவிர, இந்த விஷயம் யாருக்கும் தெரியாது. ஆனால், தீபாவுக்கு இந்தக் காயத்திலிருந்து வெளிவர சில ஆண்டுகள் ஆனது. தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி யாராவது கேட்டாலோ, வீட்டில் மாப்பிள்ளை பார்த்தாலோ அவள் ஒப்புக்கொள்வதில்லை. வாழவே வாழாத ஒரு வாழ்க்கைக்காக, தன் ஒட்டுமொத்த வாழ்க்கையையே பலி கொடுத்துவிடப் பார்த்தாள்.

    தீபாவை மேகலா என்னிடம் அழைத்து வந்தபோது, அவளிடம் நிறைய பேசவேண்டி இருந்தது. மறக்க வேண்டிய விஷயங்களை மறக்காவிட்டால், எதிர்வரும் காலம் மிகவும் புகைமூட்டமாகவும் குழப்பமாகவும் இருக்கும் என்று ஆரம்பித்து, நிறைய வாழ்க்கை உதாரணங்களை எடுத்துக்காட்டியும், சில தெரபிகளைக் கொடுத்தும் அவளை மெல்ல மீட்டெடுத்தோம்.

    அதன்பின், தேவையற்ற எதிர்கால பயம், தயக்கங்களிலிருந்து வெளிவந்து, முழுமையாக தன்னம்பிக்கை உடைய பெண்ணாக மாறிவிட்டாள். தற்போது தீபா, இரண்டு குழந்தைகளுடன் இதே ஊரில் சந்தோஷமாக வாழ்கிறாள். ரமணன் என்ற ஒரு உருவம், அவளது கடந்த காலத்தின் கிழிக்கப்பட்ட பக்கம்.

    திருமண உறவு பிரிவுக்குப் பின் பழைய வாழ்க்கைக்கு அப்படியே திரும்பிவிட முடியாது. வீட்டிலிருந்து ஆரம்பிக்கும் பிரச்னை, வீதியில் தொடர்ந்து, அலுவலகம் வரை அதன் ஆக்டோபஸ் கரங்கள் நீண்டிருக்கும். அவளுக்கு டைவர்ஸ் ஆயிருச்சாமே, அப்பவே எனக்குத் தெரியும் என்பது போன்ற கமென்டுகளை, நேரடியாகவோ மறைமுகமாகவோ எதிர்கொள்ள நேரிடும்போது, மனம் நொறுங்கத்தான் செய்யும்.

    ஆனால் இந்தச் சொற்களினால் காயப்படுவதை விட்டுவிட்டு, வலுவான மனத்திடத்துடன் பிரச்னைகளை கையாளத் தெரிந்தால், அதுதான் இந்தத் துயரிலிருந்து மீள வழி செய்யும். சொல்ல வேண்டியவர்களிடம் நாமே நேரடியாகச் சொல்வதிலும், சொல்ல வேண்டாம் என்று நினைப்பவர்களிடம் சொல்லாமல் தவிர்ப்பதே நல்லது.

    பிரச்னையை நாம் எப்படி எதிர்கொள்கிறோமோ அதற்கேற்றபடி நம் வாழ்க்கை சீரமைகிறது. வாழ்க்கை முன்புபோல இல்லைதான். மனமும் உடலும் அதிகமாகச் சோர்வடைந்து ஜீவனில்லாமல் போனதுபோலத் தோன்றலாம். ஆனால் அது நிரந்திரமில்லை. நாம் உயிருடன் இருப்பதுதான் இன்றைய நாளின் பரிசு. கடவுள் அளித்த 24 மணி நேரம் நம் கண் முன் உள்ளது.

    அந்த நாளை மகிழ்ச்சியுடன் நிறைவாக வாழ்வதுதான் நாம் செய்ய வேண்டியது. தனக்கும் பயனாக, அடுத்தவர்களுக்கும் பயனுள்ள ஒரு அர்த்தமுள்ள வாழ்க்கையை வாழ, கடவுள் அளித்த வாய்ப்பாக இதை நேர்மறையாக எடுத்துக்கொண்டால், அடுத்து என்ன என்ற கேள்விக்கு விடை கிடைக்கும். துயரத்தில் மூழ்கிக் கிடந்தால் அதற்கு முடிவே கிடையாது.

    (தொடர்ந்து பேசுவோம்)
    டாக்டர் அபிலாஷா


    Last edited by chan; 13th Sep 2015 at 02:20 PM.

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter