Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine December! | All Issues

User Tag List

Like Tree258Likes

காதல் ஒரு முனை... கல்யாணம் வேறு முனை.


Discussions on "காதல் ஒரு முனை... கல்யாணம் வேறு முனை." in "Life without mate" forum.


  1. #41
    RathideviDeva is offline Registered User
    Blogger
    Minister's of Penmai
    Real Name
    ரதி
    Gender
    Female
    Join Date
    Sep 2014
    Location
    California
    Posts
    4,092
    Blog Entries
    11

    Re: காதல் ஒரு முனை... கல்யாணம் வேறு முனை.

    Quote Originally Posted by ponschellam View Post
    ரதி ...சொந்த காலில் நின்ற பின்னர் வரும் காதல் கிராமம்,நகரம்,சாதி,மதம் என பாகுபாடின்றி எங்கும் வெற்றி தான் பெறுகிறது.
    இந்த கொலை வன்முறை தான்,தப்பு தான் ...இதில் படிக்கும்போதே என்ன அவசரம் ..இது காதலா என்பதே சந்தேகம் ...
    படிக்கும்போது என்ன காதல் வேண்டி கிடக்கு...
    படிக்கும் போது காதல் கூட ஓகே..்கல்யாணம் நாட் ஓகே...இதில் பெற்றோரை எதிர்த்து ..வெளியேறி ..இதுக்கு சட்டம் துணை செய்வதே காரணம் .
    மீடியாக்கள் சிங்சங் வேற ..
    பொன்ஸ் சிஸ் நீங்க சொல்றது சரி தான். நான் சொல்ல வந்தது, எங்க வீட்ல இப்ப(en kalyaana vayasula) நான் கல்யாணத்துக்கு முன்ன பெத்தவங்க பெருமை பட்ற வேலைக்கு போய் , அங்க கூட வேலை பார்க்குற பையன காதலிச்சிருந்தா எங்க வீட்ல ஒருவேள ஒத்துக்க சான்ஸ் இருக்கு. அதுவே போராடினா தான் உண்டு. ஒருவேள நான் வேலைக்கு போகல, பையனும் சூப்பர் டூப்பர் வேலைல இல்லைனா , அந்த காதல் கோவிந்தா தான். அத தான் அப்படி சொன்னேன்.


    Sponsored Links

  2. #42
    ponschellam's Avatar
    ponschellam is offline Penman of Penmai
    Blogger
    Guru's of Penmai
    Real Name
    Pon Chellam
    Gender
    Female
    Join Date
    Mar 2013
    Location
    CVP
    Posts
    6,975
    Blog Entries
    51

    Re: காதல் ஒரு முனை... கல்யாணம் வேறு முனை.

    Quote Originally Posted by RathideviDeva View Post
    பொன்ஸ் சிஸ் நீங்க சொல்றது சரி தான். நான் சொல்ல வந்தது, எங்க வீட்ல இப்ப(en kalyaana vayasula) நான் கல்யாணத்துக்கு முன்ன பெத்தவங்க பெருமை பட்ற வேலைக்கு போய் , அங்க கூட வேலை பார்க்குற பையன காதலிச்சிருந்தா எங்க வீட்ல ஒருவேள ஒத்துக்க சான்ஸ் இருக்கு. அதுவே போராடினா தான் உண்டு. ஒருவேள நான் வேலைக்கு போகல, பையனும் சூப்பர் டூப்பர் வேலைல இல்லைனா , அந்த காதல் கோவிந்தா தான். அத தான் அப்படி சொன்னேன்.

    நானும் அதை தான் சொல்றேன்.

    ஒரே பாயிண்ட் தான் நாம இரண்டு பேரும் சொல்றது.

    கவர்ச்சியைத் தான் பாதி பேர் காதல் னனு சொல்றாங்கன்னும் சொல்றேன்.
    பக்குவமில்லா காதல் ...தோல்வியில் முடிவது போய் இப்ப கொலையில் முடியுது..என்னத்த சொல்ல ..
    .


  3. #43
    selvipandiyan's Avatar
    selvipandiyan is offline Registered User
    Blogger
    Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2011
    Location
    Chennai
    Posts
    33,042
    Blog Entries
    14

    Re: காதல் ஒரு முனை... கல்யாணம் வேறு முனை.

    Quote Originally Posted by saveetha1982 View Post
    அழுத்தமான ஆழமான பதிவு செல்விக்கா, நிச்சயம் காதல் ஒரு முனை கல்யாணம் வேறு முனையே... இப்படி உயிரை கொடுத்து தான் காதலை வாழ வைக்க வேண்டும் என்று எதுவுமேயில்லை, காதல் வாழ வைக்கவேண்டுமே தவிர வாழும் வாழ்க்கையையே அது எடுத்துக் கொண்டு போக அனுமதிக்க கூடாது...

    விட்டுக் கொடுத்தால் என்றுமே கெட்டுப் போவதில்லை, அந்த பதிவில் சொல்லியது போல் கடைசிவரை பெற்றவர்கள் கேட்கவே இல்லையா அதற்கு மேல் என்ன என்று விட்டுவிட வேண்டியது தான்... என்றாவது ஒரு நாள் யார் தவறிழைத்தாரோ அவர் வருந்தும் நேரம் நிச்சயம் வரும்... காலம் எதையுமே கற்றுக் கொடுக்கும்...

    விட்டுக் கொடுத்தலை பிள்ளைகள் மட்டுமே செய்ய வேண்டுமென்பதில்லை பெற்றோரும் செய்யலாம், அவர்கள் விடவேண்டியது சாதியை, மதத்தை மற்றும் அவர்களின் பிடிவாதத்தை... பெற்றவர்களுக்கு பிடிக்காததை பிள்ளைகளும் விட்டுக் கொடுக்கலாம் காதலுக்காக உயிரையே கொடுப்பதற்கு பதில் அவர்கள் தங்கள் காதலை விட்டுக் கொடுக்கலாம் உயிர் கொடுத்த பெற்றோருக்காக... இல்லையேல் உடுமலையில் நடந்தது போல் உயிர் கொடுத்த பெற்றோரே அதை எடுக்கும் அவலநிலையும் நேர்ந்துவிடுமே...
    இன்னைக்கு யாரும் வேணாம்ன்னு கல்யாணம் பண்ணிட்டு போய்டலாம் நாளைக்கு நமக்குன்னு சொல்லிக்க எந்த உறவும் இல்லாத காதல் நமக்கெதுக்கு... நட்பு உதவும் இல்லைன்னு சொல்லலை, உறவும் நமக்கு வேணுமே... அறுசுவையும் கொண்டதே வாழ்க்கை அதில் ஒன்று குறைந்தாலும் அது உப்புசப்பில்லாத வாழக்கைக்கு சமமே... வீட்டில ஒத்துக்கிட்டா அவன் புண்ணியம் பண்ணதா நினைச்சுக்க வேண்டியது தான் இல்லைன்னா ரொம்ப ரொம்ப பெரிய புண்ணியம்ன்னு நினைக்க வேண்டியது தான்... என்ன கிடைக்கணுமோ அது கண்டிப்பா கிடைச்சு தான் தீரும், உயிரை கொடுத்து தான் அது கிடைக்கும்ன்னா அது எதுக்கு?? உயிரை இல்லைன்னா வாழ்க்கையே இல்லையே...
    உண்மைதான் சவீ...நம் பெற்றோர் கண்டிப்பா ஒத்துக்க மாட்டாங்கன்னு யாரெல்லாம் நினைக்கிறாங்களோ அவங்க காதலில் இறங்காம இருப்பதே நல்லது..யார் உயிரானாலும் போனது போனதே........இழப்பு பெத்தவங்களுக்கு...மற்றும் உயிரோடு இருக்கும் மீதி இணைக்கு....வேறென்ன மிஞ்சுது???


  4. #44
    selvipandiyan's Avatar
    selvipandiyan is offline Registered User
    Blogger
    Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2011
    Location
    Chennai
    Posts
    33,042
    Blog Entries
    14

    Re: காதல் ஒரு முனை... கல்யாணம் வேறு முனை.

    Quote Originally Posted by ponschellam View Post
    உண்மை கா..
    .காதலுக்கு பிரயத்தனம் படும் காதலர்கள் ....
    பெற்றோர் ஒப்புதலுக்கும் பாடுபடணும்.
    இந்த படிக்கும் போதே...காதல்,கல்யாணம் என்பதை ஏற்க முடியல.
    கல்யாணத்திற்கு பொறுத்திருக்கணும் என்று நினைக்கிறேன்.
    சில சாதி பெண்கள் ,ஆண்கள் பேசாமல் இருப்பதே சாலச்சிறந்தது.
    அல்லது பக்குவப்பட்ட பின் லவ் .பண்ணலாம் .
    சரியா சொன்னிங்க பொன்ஸ்....

    ponschellam likes this.

  5. #45
    selvipandiyan's Avatar
    selvipandiyan is offline Registered User
    Blogger
    Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2011
    Location
    Chennai
    Posts
    33,042
    Blog Entries
    14

    Re: காதல் ஒரு முனை... கல்யாணம் வேறு முனை.

    Quote Originally Posted by RathideviDeva View Post
    இந்த பதிவு அழகா நிதர்சனத்த சொல்லுது. அறிவியல் ரீதியா பார்த்தா காதல்ன்றது ஒரு உணர்வு. ஒரே ஒரு தடவ தான் வரும்னு கிடையாது. அந்த உணர்வே இல்லாம வாழவே முடியாதுங்கறதும் சுத்த ஹம்பக். பெத்தவங்க பார்த்து பண்ற கல்யாணத்துல காதல் கத்திரிக்காய் வருதான்னு பார்த்துட்டா இருக்குறோம். அந்த கழுத வருதோ இல்லையோ பிள்ள குட்டிய பெத்துட்டு பாதி கிணத்த தாண்டிட்றோம். குடும்பத்தில் காதல் இருக்கோ இல்லையோ எல்லோருக்கும் கடமைகளும் அதற்குரிய ஓட்டமும் உண்டு.


    இந்த சினிமா பண்ணி வச்ச கூத்து....
    வெறும் ஈர்ப்பு தான் காதல். அது என்னமோ தெய்வீகம்னு, கற்பு அது இதுன்னு வசனத்த போட்டு குழப்பி விட்டுட்டாங்க.
    ரிஸ்க் பார்த்து வர்ரதுல்ல காதல்.....
    ஒரு தடவை மட்டுமே வரும் காதல் ......
    மனசுல ஒருத்தன நினைச்சிட்டு இன்னொருத்தவனோட எப்படி குடும்பம் நடத்துறது.....
    ஒருத்தர நினைச்ச மனசுல யாரையும் நினைக்க முடியாது.....
    ஒண்ணா வாழ்வோம் இல்ல ஒன்னாவே சாவோம்.....
    இந்த மாதிரி லாலா லாலா ன்னு bgm போட்டு எத்தன நாளைக்கு நம்ம உசுர வாங்குவாங்களோ


    இதுல சினிமா மட்டுமில்ல இந்த தனியார் தொலைக்காட்சியின் ரியாலிட்டி ஷோஸ்("சொல்வதெல்லாம் உண்மை" மாதிரி ) ..... இதெல்லாம் கொடுக்குற குருட்டு தைரியம் தான், இவங்கள அவசர அவசரமா முடிவெடுக்க வைக்குது.....


    இங்க சில பேர் பெத்தவங்க காதலுக்கு ஒத்துக்க ஆரம்பிச்சிருக்கதா சொன்னாங்க. அது கூட நகரத்துலயும் மாநகரத்துலயும் தான். அதுவும் பிள்ளைங்க படிச்சு தன் சொந்த கால்ல நின்னிருக்கணும். இன்னும் கூட கிராமம்/ சிற்றூர்லையோ , உறவுகள் நெருங்கிய தொடர்புல இருக்கவங்க மனசு மாற்றது ரொம்ப கஷ்டம்.


    காதல்ன்னா ரிஸ்கெல்லாம் யோசிச்சு தான் ஆகணும். அந்த நேரத்துல," ஆஹா நம்மளையும் ஒருத்தவங்க கவனிக்கிறாங்க"ன்ற ஒரு போதைக்காக, நண்பர்கள் கிட்ட பெருமை பீத்திக்கிறதுக்காக,... இந்த மாதிரி அற்ப காரணங்களுக்காக இவ்வளோ ரிஸ்க் எடுக்கனுமான்னு யோசிச்சா தப்பே இல்ல. இதுல சுயநலம் இல்ல, கோழைத்தனமும் இல்ல . நம்ம பண்ற ஒண்ணுனால மத்தவங்களுக்கு பாதிப்பு வருதுன்னா அது தான் சுயநலம். எதையும் சமாளிக்க முடியும்னு நம்பிக்கை இருந்தாதான் காதலிக்கவே ஆரம்பிக்கணும். அதீத பொறுமையும் , மன உறுதியும் , திட்டமிடலும் வேணும். நம்மள வேணாம்னு சொல்ல யோசிக்கிற அளவுக்கு நம்ம நிலைய உயர்த்தி வைக்கனும்னு வைராக்கியம் / வெறி இருக்கணும். அதையும் மீறி , பொறுமையா இருந்தும், தனக்குரிய தகுதிகளை உயர்த்தியும் , சேர வழி இல்லையா.... அவங்களுக்கு கொடுத்துவைக்கலன்னு, மிஞ்சிப்போனா ஒரு வாரம் துக்கம் அனுஷ்டிச்சிட்டு, தான் இதுவரை இருந்தது போல தன் முன்னேற்றத்தில் கவனத்த செலுத்திட்டு போயிட்டே இருக்கணும். காலம் எல்லாத்துக்கும் மருந்து.
    உங்களை tag பண்ணாம விட்டுட்டேன் ரதி......இன்னிக்கு பண்ணலாம்ன்னு இருந்தேன்......உண்மைதான், சினிமா பண்ணி வெச்ச கூத்துதான்.நீங்க சொன்ன மாதிரி கிராமங்களில் இன்னும் ஒத்துக்க மாட்டாங்க...நகரங்களில் ஓரளவுக்கு மாறிக்கிட்டு வருது..நீங்க சொன்னமாதிரி நடக்கலியா நம்ம வேலைய பார்த்துட்டு போக வேண்டியதுதான்........

    thenuraj and RathideviDeva like this.

  6. #46
    Uma manoj is offline Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    5,416

    Re: காதல் ஒரு முனை... கல்யாணம் வேறு முனை.

    சரியாய் சொன்னீங்க அக்கா...உண்மையான காதல் பெற்றோரின் விருப்பத்துடன் எப்போதும் ஜெய்க்கும்...


  7. #47
    shrimathivenkat's Avatar
    shrimathivenkat is offline Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    chennai
    Posts
    8,456

    Re: காதல் ஒரு முனை... கல்யாணம் வேறு முனை.

    அவங்க தரலைன்னா போராடுங்க... அப்படியும் தரலைன்னா கடுமையா போராடுங்க... சோறு கூட திங்காம உண்ணா விரதம் இருந்து கூட அவங்களோட அனுமதியை பெறப்பாருங்க... உங்களோட போராட்டத்தின் தீவிரத்திலேயே உங்களைப் பெத்தவங்களுக்கு உங்களோட காதலின் தீவிரம் தெரியும்...
    அதைவச்சே... நீங்க நல்ல வாழ்க்கைத் துணையைத்தான் தேடீருக்கீங்களான்னு புரிய வரும்... ஒங்கள ஒன்னா சேக்க உங்க லவ்வரோட பெத்தவங்க கிட்ட அவங்களே கால்ல விழுந்த சேத்து வய்ப்பாங்க...

    Read more: காதல் ஒரு முனை... கல்யாணம் வேறு முனை.

    சாரி அக்கா இப்போதான் போஸ்ட் பார்த்தேன்.

    ரொம்ப அருமையான போஸ்ட் அக்கா,இன்றைக்கு தேவையானதும் கூட,ஏன் எனில் நம்ம ரண்டு பெரும் மாதி மாதி ஜாதி பத்தி போஸ்ட் போட்டுட்டு இருக்கோம்.

    அந்த போடோஸ் பார்த்த பிறகும் காதலுக்கு சப்போர்ட் பண்ண யோசனையா இருக்கு.

    ஆனா நீங்க சொன்ன ஒரு பாயிண்ட் நான் ரொம்ப ஸ்ட்ராங்கா ஒத்துக்குறேன்.
    ஒரு காதலி திரும்பி பார்க்கா எபடிஎல்லாம் போராடும் இளைய தலை முறையினர் ஏன் தங்கள் பெற்றோருடன் போராட கூடாது.

    ஒரு உண்மை சம்பவம் உங்களிடம் பகிர்ந்துக்கணும்னு நினைக்கிறன்,எங்க வீட்டிலிருந்து 3 வீடு தள்ளி ஒரு வீடு அந்த வீட்டில் அப்பா அம்மா ரெண்டு பொண்ணுங்க,அப்பா அம்மா ஹிந்து,பொண்ணுங்க ரெண்டு பெரும் காலேஜ் படிக்கும் போதே லவ் பண்ணி மதம் மாறிட்டாங்க ஆனா கல்யாணம் பண்ணிகளை.பயங்கர பிடிவாதம்,பெரிய பொண்ணுக்கு இப்போ 37 வயசு ரெண்டு மாசம் முன்னாடி(தை) மாதம்தான் அவங்க (கிருத்துவ) முறை படி அவங்க அப்பா அம்மா samathithu வீட்டில் ஊரில் எல்லோரையும் வரவழித்து திருமணம் நடந்தது.

    உண்மையாகவே எங்களுக்கு ரொம்ப கோவம் கூட உண்டு,இந்த பெண்கள் செய்த செயலை பார்த்து,ஆனா அவங்க அசரலையே.வேலைக்கு போவாங்க சரியா வருவாங்க எந்த பிரச்னையும் பண்ண மாட்டாங்க.

    ஆனா யாரையும் கல்யாணமும் பண்ணிகளை.
    15 வருஷத்துக்கு மேலே போராடி அந்த பெண் கல்யாணம் பண்ணி இருக்கா.அவங்க அப்பாக்கு பெரிய அவமானம் மதம் மாறியது.எவ்வளவு பொறுமையா சத்திசா அந்த பொண்ணு.

    இந்த தலை முறையினர் ஒரு பாடமா இதை எடுத்துக்கலாம்.



  8. #48
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

    Re: காதல் ஒரு முனை... கல்யாணம் வேறு முனை.

    சரியான கருத்து தான் அக்கா...
    இப்போ சமீபமா நடக்குற நிறைய கௌரவ கொலைகளை பார்க்கும்போது... பயமா இருக்கு... அப்படி என்னத்தை சாதிக்க இந்த காதல்னு தோணுது... ஒண்ணு இரு வீட்டாரும் ஒத்துக்கணும், இல்லையா விட்டுடனும்.... அய்யோ நான் காதலுக்கு துரோகம் பண்ண மாட்டேன், மனசுல நினைச்சவனை/ளை தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு அடம் பிடிச்சா, இப்படிதான் உயிரே போற அளவுக்கு ஏதாவது நடக்குது.

    இப்போ யாருக்கு லாபம்...? கட்டுனவன் உலகத்தை விட்டே போயிட்டான்... படிப்பையும் பாதியில விட்டாச்சு... இப்போ ஒண்ணுத்துக்கும் உதவாத ஜாதியையும், கௌரவத்தையும் வச்சுக்கிட்டு என்ன சாதிக்க போறாங்க..? அந்த பெண்ணோட நிலைமை..!!

    சில பெற்றோர்களின் வறட்டுப் பிடிவாதம் மாத்தவே முடியாது. நீங்க சொல்லுறது போல, அந்த வீட்டு பிள்ளைகள் காதலில் விழாமல் இருப்பதே நலம்..!

    பெற்றவர்களோட வறட்டு கௌரவம்... பிள்ளைகளின் பிடிவாதம்... ரெண்டும் சேர்ந்து நிறைய காதலர்களை அழிக்கிறது என்பது தான் நிதர்சனம்...!

    எங்கோ ஒன்றிரண்டு காதல் ஜெயித்து, காதலர்கள் நன்றாக வாழ்வதை பார்த்து... அனைவருமே காதலில் கண்ணையும் கருத்தையும் மூடிக்கொண்டு விழுகிறார்கள்...! கொஞ்சம் கூட யோசிப்பதே இல்லை...

    நிறைய காதல்... பள்ளி பருவத்திலேயே வருது.... அவங்களுக்கு என்ன பக்குவம் இருக்கும்...? எதை சொல்லி பெற்றோர்களுக்கு புரிய வைப்பார்கள்...?? ஓரளவிற்கு படிப்பு, நிலையான வருமானம் இல்லாமல்.. காதலித்து கல்யாணம் செய்து என்ன பயன்...? ஒண்ணுமே புரியலை..

    'பல்சர் பைக்கும், பர்சுல பணமும் இருந்தா, பொண்ணுங்க தன்னாலே விழுவாங்கடா...' சொல்லுற பசங்க அதிகம்... இது ரெண்டு மட்டும் வாழ்க்கைக்கு போதுமா...??

    எதையுமே யோசிப்பதே இல்லை...! இனியாவது காதலர்கள் கொஞ்சம் யோசித்து செயல்பட்டால்.... பெற்றவர்களின் அனுமதியை பெற்று கல்யாணம் செய்து கொண்டால்.... இன்னொரு உடுமலைப்பேட்டை சம்பவம் நடக்காமல் தடுக்கலாம்...!


  9. #49
    selvipandiyan's Avatar
    selvipandiyan is offline Registered User
    Blogger
    Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2011
    Location
    Chennai
    Posts
    33,042
    Blog Entries
    14

    Re: காதல் ஒரு முனை... கல்யாணம் வேறு முனை.

    Quote Originally Posted by Uma manoj View Post
    சரியாய் சொன்னீங்க அக்கா...உண்மையான காதல் பெற்றோரின் விருப்பத்துடன் எப்போதும் ஜெய்க்கும்...
    thanks uma........

    Uma manoj likes this.

  10. #50
    selvipandiyan's Avatar
    selvipandiyan is offline Registered User
    Blogger
    Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2011
    Location
    Chennai
    Posts
    33,042
    Blog Entries
    14

    Re: காதல் ஒரு முனை... கல்யாணம் வேறு முனை.

    Quote Originally Posted by shrimathivenkat View Post
    அவங்க தரலைன்னா போராடுங்க... அப்படியும் தரலைன்னா கடுமையா போராடுங்க... சோறு கூட திங்காம உண்ணா விரதம் இருந்து கூட அவங்களோட அனுமதியை பெறப்பாருங்க... உங்களோட போராட்டத்தின் தீவிரத்திலேயே உங்களைப் பெத்தவங்களுக்கு உங்களோட காதலின் தீவிரம் தெரியும்...
    அதைவச்சே... நீங்க நல்ல வாழ்க்கைத் துணையைத்தான் தேடீருக்கீங்களான்னு புரிய வரும்... ஒங்கள ஒன்னா சேக்க உங்க லவ்வரோட பெத்தவங்க கிட்ட அவங்களே கால்ல விழுந்த சேத்து வய்ப்பாங்க...

    Read more: காதல் ஒரு முனை... கல்யாணம் வேறு முனை.

    சாரி அக்கா இப்போதான் போஸ்ட் பார்த்தேன்.

    ரொம்ப அருமையான போஸ்ட் அக்கா,இன்றைக்கு தேவையானதும் கூட,ஏன் எனில் நம்ம ரண்டு பெரும் மாதி மாதி ஜாதி பத்தி போஸ்ட் போட்டுட்டு இருக்கோம்.

    அந்த போடோஸ் பார்த்த பிறகும் காதலுக்கு சப்போர்ட் பண்ண யோசனையா இருக்கு.

    ஆனா நீங்க சொன்ன ஒரு பாயிண்ட் நான் ரொம்ப ஸ்ட்ராங்கா ஒத்துக்குறேன்.
    ஒரு காதலி திரும்பி பார்க்கா எபடிஎல்லாம் போராடும் இளைய தலை முறையினர் ஏன் தங்கள் பெற்றோருடன் போராட கூடாது.

    ஒரு உண்மை சம்பவம் உங்களிடம் பகிர்ந்துக்கணும்னு நினைக்கிறன்,எங்க வீட்டிலிருந்து 3 வீடு தள்ளி ஒரு வீடு அந்த வீட்டில் அப்பா அம்மா ரெண்டு பொண்ணுங்க,அப்பா அம்மா ஹிந்து,பொண்ணுங்க ரெண்டு பெரும் காலேஜ் படிக்கும் போதே லவ் பண்ணி மதம் மாறிட்டாங்க ஆனா கல்யாணம் பண்ணிகளை.பயங்கர பிடிவாதம்,பெரிய பொண்ணுக்கு இப்போ 37 வயசு ரெண்டு மாசம் முன்னாடி(தை) மாதம்தான் அவங்க (கிருத்துவ) முறை படி அவங்க அப்பா அம்மா samathithu வீட்டில் ஊரில் எல்லோரையும் வரவழித்து திருமணம் நடந்தது.

    உண்மையாகவே எங்களுக்கு ரொம்ப கோவம் கூட உண்டு,இந்த பெண்கள் செய்த செயலை பார்த்து,ஆனா அவங்க அசரலையே.வேலைக்கு போவாங்க சரியா வருவாங்க எந்த பிரச்னையும் பண்ண மாட்டாங்க.

    ஆனா யாரையும் கல்யாணமும் பண்ணிகளை.
    15 வருஷத்துக்கு மேலே போராடி அந்த பெண் கல்யாணம் பண்ணி இருக்கா.அவங்க அப்பாக்கு பெரிய அவமானம் மதம் மாறியது.எவ்வளவு பொறுமையா சத்திசா அந்த பொண்ணு.

    இந்த தலை முறையினர் ஒரு பாடமா இதை எடுத்துக்கலாம்.
    ada, paarunga..eppadilaam poraaduraangannu.......t f s sri......

    shrimathivenkat likes this.

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter