Quote Originally Posted by thenuraj View Post
சரியான கருத்து தான் அக்கா...
இப்போ சமீபமா நடக்குற நிறைய கௌரவ கொலைகளை பார்க்கும்போது... பயமா இருக்கு... அப்படி என்னத்தை சாதிக்க இந்த காதல்னு தோணுது... ஒண்ணு இரு வீட்டாரும் ஒத்துக்கணும், இல்லையா விட்டுடனும்.... அய்யோ நான் காதலுக்கு துரோகம் பண்ண மாட்டேன், மனசுல நினைச்சவனை/ளை தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு அடம் பிடிச்சா, இப்படிதான் உயிரே போற அளவுக்கு ஏதாவது நடக்குது.

இப்போ யாருக்கு லாபம்...? கட்டுனவன் உலகத்தை விட்டே போயிட்டான்... படிப்பையும் பாதியில விட்டாச்சு... இப்போ ஒண்ணுத்துக்கும் உதவாத ஜாதியையும், கௌரவத்தையும் வச்சுக்கிட்டு என்ன சாதிக்க போறாங்க..? அந்த பெண்ணோட நிலைமை..!!

சில பெற்றோர்களின் வறட்டுப் பிடிவாதம் மாத்தவே முடியாது. நீங்க சொல்லுறது போல, அந்த வீட்டு பிள்ளைகள் காதலில் விழாமல் இருப்பதே நலம்..!

பெற்றவர்களோட வறட்டு கௌரவம்... பிள்ளைகளின் பிடிவாதம்... ரெண்டும் சேர்ந்து நிறைய காதலர்களை அழிக்கிறது என்பது தான் நிதர்சனம்...!

எங்கோ ஒன்றிரண்டு காதல் ஜெயித்து, காதலர்கள் நன்றாக வாழ்வதை பார்த்து... அனைவருமே காதலில் கண்ணையும் கருத்தையும் மூடிக்கொண்டு விழுகிறார்கள்...! கொஞ்சம் கூட யோசிப்பதே இல்லை...

நிறைய காதல்... பள்ளி பருவத்திலேயே வருது.... அவங்களுக்கு என்ன பக்குவம் இருக்கும்...? எதை சொல்லி பெற்றோர்களுக்கு புரிய வைப்பார்கள்...?? ஓரளவிற்கு படிப்பு, நிலையான வருமானம் இல்லாமல்.. காதலித்து கல்யாணம் செய்து என்ன பயன்...? ஒண்ணுமே புரியலை..

'பல்சர் பைக்கும், பர்சுல பணமும் இருந்தா, பொண்ணுங்க தன்னாலே விழுவாங்கடா...' சொல்லுற பசங்க அதிகம்... இது ரெண்டு மட்டும் வாழ்க்கைக்கு போதுமா...??

எதையுமே யோசிப்பதே இல்லை...! இனியாவது காதலர்கள் கொஞ்சம் யோசித்து செயல்பட்டால்.... பெற்றவர்களின் அனுமதியை பெற்று கல்யாணம் செய்து கொண்டால்.... இன்னொரு உடுமலைப்பேட்டை சம்பவம் நடக்காமல் தடுக்கலாம்...!
arumaiyaa sonninga thenu.........