Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree8Likes
 • 4 Post By chan
 • 3 Post By chan
 • 1 Post By jv_66

ம(ன)ண முறிவு ஏன்? - Reasons for Divorces


Discussions on "ம(ன)ண முறிவு ஏன்? - Reasons for Divorces" in "Life without mate" forum.


 1. #1
  chan's Avatar
  chan is offline Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Mar 2012
  Location
  chennai
  Posts
  17,520

  ம(ன)ண முறிவு ஏன்? - Reasons for Divorces

  ம(ன)ண முறிவு ஏன்?
  கடந்த வாரத்தில் ஒரு நாள், என் நீண்ட நாள் வழக்கறிஞர் நண்பர், என்னிடம், 'ஒவ்வொரு மாதமும், 1,000 விவாகரத்து வழக்குகள் பதிவாகின்றன. அதில், 'என்னை விட, அவளின் நாய்குட்டி தான் முக்கியம் என்கிறாள், என் மனைவி' என்பதில் துவங்கி, காரணங்கள் சுவாரஸ்யமாக இருக்கிறது' என்று, சிரித்துக் கொண்டே சொன்னபோது, எனக்கு வருத்தமாக இருந்தது.

  உறவுகளுக்குள் குறிப்பாக திருமண உறவில், ஏன் இத்தனை சிக்கல்? ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், உடல் பருமன் போன்றவற்றை, எப்படி வாழ்க்கை முறை மாற்றத்தினால் ஏற்றுக் கொள்கிறோமோ, அதுபோல மன அழுத்தம், மனப்பதற்றம் போன்ற மனம் தொடர்பான பிரச்னைகளை புரிந்து கொள்வதில்லை. 'ஸ்ட்ரெஸ்' என்பதைக் கூட, சற்று வித்தியாசமான, சந்தேக பார்வையோடு தான் பார்க்கிறோம்.

  கல்லானாலும் கணவன்; புல்லானாலும் புருஷன்இதனாலேயே, திருமணத்திற்கு முன், இதுபோன்ற மனப் பிரச்னைகளுக்கு சிகிச்சை எடுத்துக் கொண்டவர்கள், தொடர்ந்து சிகிச்சையில் இருப்போர், ஒன்று, தங்கள்
  பிரச்னைகளை மறைத்து திருமணம் செய்கின்றனர், அல்லது மணமான பின், தங்களின் துணைக்கு தெரிந்து விடுமோ என்று, பயந்து, மருந்து சாப்பிடுவதை நிறுத்தி விடுகின்றனர். இதனால் பிரச்னை இன்னும் பெரிதாகி, வெளியில் தெரிந்து, அதனால் சேர்ந்து வாழ விரும்புவதில்லை.

  தங்களுக்கு இதுபோன்ற மனப் பிரச்னைகள் இருப்பதே தெரியாமல், திருமணம் செய்து பிரச்னை வெளியில் தெரியும் போது விவாகரத்தில் முடிகிறது.அடுத்தது, வெளிப்படையாக சொல்லாவிட்டாலும், பெண்கள், தங்களை விட

  படித்தவராக, அதிகம் சம்பாதிப்பவராக, தனித்தன்மையோடு இருப்பதை, பெரும்பாலான ஆண்களால் ஆரோக்கியமாக எடுத்துக் கொள்ளவதில்லை. தங்களின் ஆதங்கத்தையும், இயலாமையையும் சம்பந்தமேயில்லாத வேறு பல விதங்களிலும் வெளிப்படுத்துகின்றனர்.

  அந்தக் காலத்தில் இருப்பதுபோல, 'கல்லானாலும் கணவன்; புல்லானாலும் புருஷன்' என்று பொறுத்துக் கொள்ள, தற்போதைய பெண்கள் தயாரில்லை. தங்களின் சுய மரியாதையை, தனித்தன்மையை இழந்து, இப்படி ஒரு உறவு தேவையில்லை என்று, முடிவு செய்கின்றனர்.

  அன்பும், அக்கறையும் அவசியம்அடுத்ததாக, காதல் திருமணமானாலும், பெற்றோரால் நிச்சயித்த திருமணம் ஆனாலும் ஆண், பெண் இருவரிடமும் எதிர்பார்ப்புகள் அதிகமாகி விட்டது. இருவருக்குமே, திருமணத்திற்கு பின்தான், வாழ்க்கையின் பல யதார்த்தங்கள் புரிய ஆரம்பிக்கிறது.

  வெளிநாடுகளில், இரண்டு தனி நபர்கள் சேர்ந்து வாழ்வது திருமணம். ஆனால், நம் நாட்டில் இருவேறு குடும்பங்கள்
  சேருவது திருமணம்; இதை புரிந்து கொள்ள வேண்டும்.பிரச்னைகளே இல்லாமல் இருந்தாலும், வாழ்க்கை சுவாரஸ்யமாக இருக்காது. பிரச்னைகளை எப்படி கையாள்கிறோம் என்பதில் தான், புத்திசாலித்தனம் இருக்கிறது.

  எவ்வளவு பிசியாக இருந்தாலும் தினமும், 15
  நிமிடங்கள் கணவன், மனைவி இருவரும் பேசுவதற்கு நேரம் ஒதுக்க வேண்டும். இரு தனிநபர்கள் சேர்ந்து வாழும்போது யார் பெரியவர், யார் சிறியவர், எந்த வேலை யாருடையது என்பதெல்லாம் கிடையாது; எல்லாமே இருவருக்கும் பொதுவானவை. ஒருவர் மற்றவர் மீது காட்டும் அன்பும், அக்கறையும் விட்டுக் கொடுப்பதும் பிரச்னைகளை பேசித் தீர்த்துக் கொள்ளும் பக்குவத்தை தரும்.

  டாக்டர் லட்சுமி விஜயகுமார்
  மனநல சிறப்பு மருத்துவர்


  Similar Threads:

  Sponsored Links
  Last edited by chan; 24th Mar 2016 at 08:45 PM.
  jv_66, kkmathy, karuniya and 1 others like this.

 2. #2
  chan's Avatar
  chan is offline Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Mar 2012
  Location
  chennai
  Posts
  17,520

  காதலைக் குலைக்கும் ஈகோ... அதனால் பெருகும் 

  காதலைக் குலைக்கும் ஈகோ... அதனால் பெருகும் விவாகரத்து


  ''நீதிமன்றத்துக்கு விவாகரத்துக் கேட்டு செல்வது தவறு என்கிற சிந்தனை, போன தலைமுறையில் இருந்தது. விவாகரத்துக் கேட்பதில் என்ன தவறு இருக்கிறது என்கிற சிந்தனையுடன்தான் வாழ தலைப்பட்டிருக்கிறது இந்தத் தலைமுறை'


  இந்தத் தலைமுறையினர், பார்த்ததும் காதலிக்கிறார்கள். குடும்பம் நடத்த ஆரம்பித்ததும் ஒருவரின் ப்ளஸ், மைனஸ் தெரிய ஆரம்பிக்க, 'நீயும் சம்பாதிக்கிறாய், நானும் சம்பாதிக்கிறேன். உன் தவறுகளை எதற்காக நான் சுமக்க வேண்டும், பொறுத்துக் கொள்ள வேண்டும்?' என்கிற ஈகோ தலைக்குள் வந்தவுடன், நீதிமன்றத்துக்குள் நுழைந்து விடுகிறார்கள்''.

  அதிகம் படித்த ஆண்களும், பெண்களும் மனம் முழுக்க 'நான்' என்கிற ஈகோவுடன்தான் வாழ்க்கை நடத்துகிறார்கள்.

  இன்றைய பெண்ணின் தேவை மாறி வருகிறது என்பதை ஓர் ஆண் புரிந்து கொள்ளாததுதான் எல்லா பிரச்னைகளுக்கும் காரணம். அவன் பார்த்து வளர்ந்த அவன் அம்மாவைப் போல்... வெறும் உணவும், உடையும், நகையும் பெண்ணின் தேவை அல்ல இன்று. அவள் எதிர்பார்ப்பது சமத்துவம், சமமான மரியாதை. காரணம், பெண்ணும் இன்று ஆணுக்கு நிகராக சம்பாதிக்கிறாள், படித்து இருக்கிறாள், உலகம் தெரிந்து இருக்கிறது.

  அதனால் பெண் அட்வான்ஸ்டாக வளர்ந்துவிட்டாள். ஆனால்... ஒரு ஆண், ஒரு பெண்ணை நடத்தும் சிந்தனையில் இன்னும் பத்து வருடங்கள் பின்தங்கிதான் இருக்கிறான். வெறும் மல்லிகைப் பூவுக்கும் சினிமாவுக்கும் சமாதானமாகிப் போகிற பெண்தான் அவனுடைய சிந்தனையில் இருக்கிறாள். ஆனால், பெண்ணின் மனதில் இருப்பதோ... இந்தத் துணை, நம்மை சரிசமமாக நடத்துவான் என்கிற நம்பிக்கைதான். இந்த எதிர்பார்ப்புகள் எதிரெதிர் திசையில் செல்லும்போது, விவாகரத்துதான் வழி என்று தீர்மானிக்கிறார்கள்.

  இன்றைய தலைமுறையினர் மனதுக்குள் ஒவ்வொருவரும் ஒரு தனித் தீவாகத்தான் வாழ்கிறார்கள்.

  மாறும் குடும்பச் சூழ்நிலையை, தொழில் அமைப்பை படித்த தம்பதிகள் உணர்ந்து, இந்தத் திருமண உறவை இறுதி வரை எடுத்துச் செல்வதற்கு மனதளவில் முயன்றால்தான் விவாகரத்துகள் குறையும். விவாகரத்து செய்வதால் குழந்தைகள்தான் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை, சம்பந்தப்பட்ட அப்பாவும், அம்மாவும் உணர வேண்டும்!''

  sumathisrini, kkmathy and karuniya like this.

 3. #3
  gkarti's Avatar
  gkarti is online now Super Moderator Silver Ruler's of Penmai
  Real Name
  Karthiga
  Gender
  Female
  Join Date
  Sep 2012
  Location
  Madurai
  Posts
  49,135

  Re: காதலைக் குலைக்கும் ஈகோ... அதனால் பெருகும்

  True.. Good Sharing Lakshmi


 4. #4
  jv_66's Avatar
  jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
  Real Name
  Jayanthy
  Gender
  Female
  Join Date
  Dec 2011
  Location
  Bangalore
  Posts
  31,985

  Re: ம(ன)ண முறிவு ஏன்? - Reasons for Divorces

  Thanks for the information

  chan likes this.
  Jayanthy

 5. #5
  kkmathy's Avatar
  kkmathy is offline Minister's of Penmai
  Real Name
  komathy
  Gender
  Female
  Join Date
  Jun 2012
  Location
  Malaysia
  Posts
  3,189

  Re: ம(ன)ண முறிவு ஏன்? - Reasons for Divorces

  Very good info, Letchmy.


loading...

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •  
Like It?
Share It!Follow Penmai on Twitter