நெட்டிசன்கள் முதல் பிரபலங்கள் வரை... அதிகரிக்கும் சோஷியல் மீடியா ப்ரேக்-அப்ஸ்!

முன்பெல்லாம் காதல், பிரிவு, ப்ரேக் அப் இதையெல்லாம் சம்பந்தப்பட்ட நபரிடமோ அல்லது அவருடைய நண்பரிடமோ சொல்வது தான் வழக்கமாக இருந்தது. ஆனால் தற்போது சமூக வலைதளங்களில் எக்ஸ்க்ளூசிவாக பிரேக் அப்களை அறிவிப்பதும், காதலை சொல்வதும் வழக்கமாகிவிட்டது. இதில் பிரபலங்கள், சாதாரண மக்கள் என்று வித்தியாசப்படுத்த எதுவுமில்லை. இன்றைய டிஜிட்டல் உலகில் இது சர்வ சாதாரணம். ''ஃபீலிங் ப்ரோக்கன்'' என்று அழும் இமோஜியோடு பதிவிட்டு பிரேக் அப்பை அறிவிப்பதும். 'இன் எ ரிலேஷன்ஷிப்' என இதயங்களை பறக்கவிடுவதும் சாதாரணமாகிவிட்டது.

ஆனால் இவை மிகப்பெரிய பாதிப்புகளை ஏற்படுத்திவிடுகின்றன. ட்விட்டரில் சில நூறு ரீ-ட்விட்களும், ஃபேஸ்புக்கில் ஆயிரக்கணக்கில் இமோஜிகளை வாங்கி தனது தோல்வியையும், பிரிவையும் கெத்தாக அறிவிக்கும் பிரபலங்களும் சரி, சாமானியர்களும் சரி அந்த நிமிட தாக்கத்தை மட்டுமே பார்க்கிறார்களே தவிர அதன் பின் வரும் விளைவுகளை பார்ப்பதே இல்லை.

சோஷியல் மீடியா பிரேக் அப் இந்த வார்த்தை இணைய உலகில் சற்று பிரபலமான வார்த்தை. ஜஸ்டின் பைபர் தனக்கு பிரேக் அப் ஆகிவிட்டது என அழுதது துவங்கி இன்று 13 ஆண்டுகளாக கமலுடனான உறவு பிரிந்தது என கவுதமி கூறியது வரை அனைத்துமே இந்த சமூக வலைதளங்களில் தான். இந்த ட்ரெண்ட் சமூக வலைதளங்களின் வளர்ச்சியோடு ஆரம்பித்தது தான்.

தனது உணர்வுகளை வெளிப்படுத்தும் இடமாக சமூக வலைதளங்கள் மாறியதே பிரேக்-அப் அதிகரிப்புக்கு காரணம் என்கின்றனர் உளவியல் நிபுணர்கள். சமூக வலைதளங்களின் நோக்கமே தனது உணர்வுகளை உலகத்துடன் பகிர்வது தான் என்கின்றனர் சோஷியல் மீடியா சி.இ.ஓக்கள். ஆனால் இந்தியா போன்ற சமுதாய அமைப்பு கொண்ட நாடுகளில் இந்த தாக்கம் சற்று வித்தியாசமானது.

இங்கு சோஷியல் மீடியா ப்ரேக் அப்ஸ் தனிமனிதனின் வாழ்க்கையை ஆழமாக பாதிக்கிறது. ஒருவர் தனக்கு பிரேக்-அப் என அறிவித்தால் அவரை பல காலங்கள் அதே செய்தியை வைத்து விமர்சிப்பதுதான் இப்போதைய வாடிக்கை. பிரபலங்களுகே இப்படி என்றால் சாமானியர்களின் நிலைமையை சொல்லவே வேண்டாம்.

என்ன பிரச்னை?

இணையத்தில், நமது பதிவுகளை மீட்டெடுப்பது மிகவும் சுலபம். இந்த பிரேக் அப் பதிவுகள் திரும்பத் திரும்ப வைரலாக பரவும்போது மன அமைதியை கெடுக்கும். பதிவிட்டவரே அழித்துவிட்டாலும் ஸ்க்ரீன் ஷாட் பதிவுகள் தொடர்ந்து பகிர்வதை தடுக்க முடியாது.

அடுத்த ரிலேஷன் ஷிப்புக்குள் செல்லும்போது இந்த பதிவுகளை மறைப்பதும் தவறாகி விடுகிறது. இந்த பதிவுகள் செய்து ஷேர் ஆவதும் வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திவிடுகிறது. பல பிரபலங்களின் வாழ்க்கை முறிவு வரை செல்ல இந்த சோஷியல் மீடியாக்கள் காரணமாகியுள்ளன.


என்ன செய்ய வேண்டும்?
சோஷியல் மீடியாக்களில் உங்களது உணர்வுகளை வெளிப்படுத்துவதில் தவறில்லை. ஆனால் உங்கள் வாழ்க்கையை பாதிக்கும் உணர்வுகளை வெளிப்படுத்தாமல் இருப்பது நல்லது.

கூடியமட்டில் பதிவுகளை சம்பந்தப்பட்ட நபருடன் தனிப்பட்ட முறையில் தெரிவியுங்கள். அது உங்களுக்கும், அந்த நபர் இருவருக்குமே உதவியாக இருக்கும்.

தனிநபர் தாக்குதல், ஒருவரை பொது இடத்தில் இகழ்ந்து பேசுவது அனைத்துமே தண்டனைக்குரிய குற்றங்கள் தான். சைபர் க்ரைம் குற்றச்சாட்டுகள் பதியவும் வாய்ப்புள்ளதால் சோஷியல் மீடியா பிரேக் அப்களை தவிர்ப்பது நல்லது.

உறவுகள், காதல் போன்ற விஷயங்களை சமூக வலைதளங்களில் விவாதிக்காமல் இருப்பதும் மீண்டும் நல்ல உறவுகளை ஏற்படுத்திக் கொள்ளவும் வாய்ப்பை அளிக்கும். இந்த சோஷியல் மீடியா ப்ரேக் அப்கள் குறைய வேண்டியது பிரபலங்களுக்கு எந்த அளவுக்கு முக்கியமோ, அதைவிட சாமானியர்களுக்கும் முக்கியம்.


உறவுகளில் இருந்து வெளியேறுவது இரு தனி நபர்களுக்கான விஷயமே தவிர உலகமே உலவும் சமூக வலைதளங்களுக்கான விஷயம் அல்ல என்பதை புரிந்து செயல்பட வேண்டும்.

Similar Threads: