உணர்வுகள் புரியாத வாழ்க்கையின் நொடியினில் மனதினில் கனத்துடன் தினம் தினம் போராட்டம்
உன்னிடம் மட்டும் உள்ள தேடல் உடல் தேடல் அல்ல
அன்பான தருணங்களை அளவாய் எதிர்பார்கிறேன்
உன் உடல் காமத்தை தூண்டாமல் தாய்மையை தூண்டிடும் தேடல் புரியுமா ?

மடியில் தலை சாய்கையில் தொலைத்த என் பாட்டியின்
சுருக்கமான விரல்களின் ஸ்பரிசங்கள், மார்பினில்
தலை சாய்கையில் பார்க்காத அப்பாவின் அன்பு
நான் துவண்டிடும் நேரம் உன் ஆறுதலான
அணைப்புகள் எதையோ சாதித்த இறுமாப்பையும் ,
என் தலை வலிக்கும் நேரம் நீ தரும் ஒரு
கோப்பை காபி யில் என் உறவின் வலிமையையும்
தேடுகிறேன், உன் உழைப்பையும் பணத்தையும்
அல்லாத சுடுசொல் இல்லாத உண்மை காதலையும்
தேடுகிறேன் எல்லாம் யோசிக்கும் நீ
என்னை யோசிக்கும் நாளை தேடுகிறேன் ?