User Tag List

Like Tree90Likes

Thiruppavai - சூடிக்கொடுத்த சுடர்கொடியின் திருப்ப&am


Discussions on "Thiruppavai - சூடிக்கொடுத்த சுடர்கொடியின் திருப்ப&am" in "Mantras & Devotional Songs" forum.


 1. #1
  sumathisrini's Avatar
  sumathisrini is offline Super Moderator Silver Ruler's of Penmai
  Real Name
  Sumathi
  Gender
  Female
  Join Date
  Jun 2011
  Location
  Hosur
  Posts
  34,350

  Thiruppavai - சூடிக்கொடுத்த சுடர்கொடியின் திருப்ப&am

  Thiruppavai - சூடிக்கொடுத்த சுடர்கொடியின் திருப்ப&am-30.jpg


  மாதங்களில் சிறந்தது மார்கழி என்பார்கள். மங்கையர்களுக்குப் பிடித்ததும் அந்த மாதமே என்பார்கள்.

  பன்னிரண்டு ஆழ்வார்களில் ஒரே பெண்மணியானவரான ஆண்டாள் இயற்றிய பாவைப்பாட்டாகிய (இறைவன் மீது பாடப்பட்ட பாடல்கள்) 'திருப்பாவை' முப்பது பாடல்களைக்கொண்டது. இப்பாடல்களில் பக்தி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதையும், இறைவனுக்கு காலமெல்லாம் தன்னலமின்றி சேவை செய்யவேண்டும் என்பதைத்தவிர வேறு நோக்கங்கள் இல்லாமலிருப்பதையும் காணலாம்.

  ஸ்ரீவில்லிபுத்தூரில் வாழ்ந்திருந்த பெரியாழ்வார் வீட்டு துளசி மாடத்தில் கண்டெடுக்கப்பெற்று, அவரால் வளர்க்கப்பட்டவர் ஸ்ரீ ஆண்டாள். பெரியாழ்வார் கண்ணபிரானை பெருந்தெய்வமாக கருதி, அவர்மீது பல பாடல்களைப்பாடியுள்ளார். அவைகளை தினமும் கேட்டு வளர்ந்த ஆண்டாள், தானும் கிருஷ்ண பக்தியில் அளவிலா ஆனந்தத்துடன் ஈடுபட்டு, கண்ணனிடம் தெய்வீக காதலும் கொண்டு, அவரை மணக்கவும் ஆசைப்பட்டாள். தான் பிறந்து வளர்ந்தது ஸ்ரீவில்லிபுத்தூர் ஆயினும், தன்னை கோகுலத்திலுள்ள கோபியராகவே கருதி, கண்ணனை மணக்க வேண்டி, 'பாவை நோன்பு' நோற்றாள். திருப்பாவை என்னும் சங்கத் தமிழ் மாலை முப்பது பாசுரங்களை கொண்டது. மார்கழி மாதம் பாவை நோன்பு நோற்று தினமும் ஒரு பாடல் வீதம் மாதம் முழுவதும் ஒவ்வொரு பாடலாக பாடி பிறவி பெருங்கடலை நீந்திக் கடக்க அருள்புரிந்துள்ளார்.

  ஆடிப்பூர நாயகியான ஆண்டாள் திருப்பாவை, நாச்சியார் திருமொழி ஆகிய நூல்களை நமக்கு தந்தருளியுள்ளார். எப்படி வாழ வேண்டும், எப்படி பக்தி செலுத்த வேண்டும் என்பதை இந்த பாசுரங்களில் உணர்த்தியிருக்கிறார். திருப்பாவையில் ‘வாரணமாயிரம்’ எனத் தொடங்கும் பத்து பாடல்களும் திருமண பாடல்கள் ஆகும். இப்பாடல்களை பக்தியுடன் படிப்பதால் கன்னிப்பெண்களுக்கு தோஷங்கள், தடைகள் நீங்கி சுபமங்கள பிராப்தம் கூடி வரும்.

  Moderator Note:

  This Article has been published in
  Penmai eMagazine Dec 2013. You Can download & Read the magazines HERE.


  Similar Threads:

  Sponsored Links
  Last edited by gkarti; 10th Jul 2014 at 02:08 PM.

 2. #2
  sumathisrini's Avatar
  sumathisrini is offline Super Moderator Silver Ruler's of Penmai
  Real Name
  Sumathi
  Gender
  Female
  Join Date
  Jun 2011
  Location
  Hosur
  Posts
  34,350

  Re: Thiruppavai - சூடிக்கொடுத்த சுடர்கொடியின் திருப்ப

  ஆண்டாள் அருளிய திருப்பாவை:

  பாடல் 1


  மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்
  நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்!

  சீர்மல்கும் ஆய்ப்பாடி செல்வச்சிறுமீர்காள்
  கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்

  ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்
  கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல் முகத்தான்

  நாராயணனே நமக்கே பறை தருவான்
  பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்


  பொருள்: அழகிய அணிகலன்களை அணிந்த கன்னியரே! சிறப்பு மிக்க ஆயர்பாடியில் வசிக்கும் செல்வவளமிக்க சிறுமிகளே! மார்கழியில் முழுநிலா ஒளி வீசும் நல்ல நாள் இது. இன்று நாம் நீராடக் கிளம்புவோம். கூர்மையான வேலுடன் நம்மைப் பாதுகாத்து வரும் அரிய தொழிலைச் செய்யும் நந்தகோபன், அழகிய கண்களையுடைய யசோதாபிராட்டி ஆகியோரின் சிங்கம் போன்ற மகனும், கரிய நிறத்தவனும், சிவந்த கண்களை உடையவனும், சூரியனைப் போல் பிரகாசமான முகத்தையுடையவனும், நாராயணனின் அம்சமுமான கண்ணபிரான் நமக்கு அருள் தர காத்திருக்கிறான். அவனை நாம் பாடிப் புகழ்ந்தால் இந்த உலகமே நம்மை வாழ்த்தும்.  பாடல் 2


  வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம் பாவைக்குச்
  செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள்
  பையத்துயின்ற பரமன் அடிபாடி
  நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி
  மையிட்டு எழுதோம் மலரிட்டு நாம் முடியோம்
  செய்யாதன செய்யோம் தீக்குறளை சென்றோதோம்
  ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி
  உய்யுமா றெண்ணி உகந்தேலோர் எம்பாவாய்.


  பொருள்: திருமால் கண்ணனாக அவதரித்த ஆயர்பாடியில் வாழும் சிறுமிகளே! நாம், இவ்வுலகில் இருந்து விடுபட்டு, அந்த பரந்தாமனின் திருவடிகளை அடைவதற்காக, நாம் செய்த பாவையை வணங்கி விரதமிருக்கும் வழிமுறைகளைக் கேளுங்கள். நெய் உண்ணக் கூடாது, பால் குடிக்கக்கூடாது. அதிகாலையே நீராடி விட வேண்டும். கண்ணில் மை தீட்டக்கூடாது. கூந்தலில் மலர் சூடக்கூடாது (மார்கழியில் பூக்கும் மலர்கள் அனைத்தும் மாலவனுக்கே சொந்தம்). தீய செயல்களை மனதாலும் நினைக்கக் கூடாது. தீய சொற்களை சொல்வது கூட பாவம் என்பதால் பிறரைப் பற்றி கோள் சொல்லக்கூடாது. இல்லாதவர்களுக்கும், துறவிகளுக்கும், ஞானிகளுக்கும் அவர்கள் போதும் என்று சொல்லுமளவு தர்மம் செய்ய வேண்டும்.  பாடல் 3


  ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி
  நாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீராடினால்
  தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து
  ஓங்கு பெருஞ்செந்நெல் ஊடு கயலுகள
  பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப
  தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலை பற்றி
  வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்
  நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய்.


  பொருள்: சிறுமியரே! நம் பரந்தாமன் வாமன அவதாரத்தில் மூன்றடிகளால் விண்ணையும் மண்ணையும் அளந்து தன்னுடையதாக்கிக் கொண்ட உத்தமன். அவனது சிறப்பைக் குறித்து பாடி, நம் பாவைக்கு மலர்கள் சாத்தி வழிபடுவதற்கு முன் நீராடச் செல்வோம். இந்த விரதமிருப்பதால், உலகம் முழுவதும் மாதம் மும்முறை மழை பெய்து தண்ணீர் இல்லாத குறையைப் போக்கும். மழை காரணமாக வயல்களில் செந்நெல் செழித்து வளரும். மீன்கள் வயலுக்குள் பாய்ந்தோடி மகிழும். குவளை மலர்களில் புள்ளிகளையுடைய வண்டுகள் தேன் குடிக்க வந்து கிறங்கிக் கிடக்கும். வள்ளல் போன்ற பசுக்கள் பாலை நிரம்பத்தரும். என்றும் வற்றாத செல்வத்தை இந்த விரதம் தரும்.
 3. #3
  sumathisrini's Avatar
  sumathisrini is offline Super Moderator Silver Ruler's of Penmai
  Real Name
  Sumathi
  Gender
  Female
  Join Date
  Jun 2011
  Location
  Hosur
  Posts
  34,350

  Re: Thiruppavai - சூடிக்கொடுத்த சுடர்கொடியின் திருப்ப

  பாடல் 4


  ஆழி மழைக்கண்ணா! ஒன்று நீ கைகரவேல்
  ஆழியுள் புக்கு முகந்துகொடு ஆர்த்தேறி
  ஊழி முதல்வன் உருவம்போல் மெய்கறுத்து
  பாழியந் தோளுடைப் பற்பநா பன்கையில்
  ஆழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்றதிர்ந்து
  தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழைபோல்
  வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்
  மார்கழி நீராட மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.


  பொருள்: மேகத்திற்கு அதிபதியான பர்ஜந்யனே! நாங்கள் சொல்வதைக் கேள். உன்னிடம் ஒரு சொட்டு தண்ணீரைக் கூட வைத்துக் கொள்ளாதே. கடல் நீர் முழுவதையும் முகர்ந்து கொண்டு மேலே சென்று, உலகாளும் முதல்வனாகிய கண்ணனின் நிறம் போல் கருத்து, வலிமையான தோள்களையுடைய பத்மநாபனின் கையிலுள்ள பிரகாசமான சக்கரத்தைப் போல் மின்னலை வீசி, வலம்புரி சங்கு ஒலிப்பது போல் இடி ஒலியெழுப்பி, வெற்றியை மட்டுமே ஈட்டும் அவனது சார்ங்கம் என்னும் வில்லில் இருந்து புறப்படும் அம்புகளைப் போல் மழை பொழிவாயாக! அம்மழையால் நாங்கள் இவ்வுலகில் மகிழ்வுடன் வாழ்வோம். மார்கழி நீராடலுக்காக எல்லா நீர்நிலைகளையும் நிரப்பி எங்களை மகிழ்ச்சியடையச் செய்வாயாக.  பாடல் 5


  மாயனை மன்னு வடமதுரை மைந்தனை
  தூய பெருநீர் யமுனைத் துறைவனை
  ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கை
  தாயைக் குடல்விளக்கம் செய்த தாமோதரனை
  தூயோமாய் வந்து நாம் தூமலர்த் தூவித்தொழுது
  வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க
  போய பிழையும் புகுதருவான் நின்றனவும்
  தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய்


  பொருள்: வியப்புக்குரிய செயல்களைச் செய்பவனும், பகவானும், மதுராபுரியில் அவதரித்தவனும், பெருகியோடும் தூய்மையான நீரைக் கொண்ட யமுனை நதிக்கரையில் விளையாடி மகிழ்ந்தவனும், ஆயர்குலத்தில் பிறந்த அழகிய விளக்கு போன்றவனும், தேவகி தாயாரின் வயிற்றுக்கு பெருமை அளித்தவனும், இவனது சேஷ்டை பொறுக்காத யசோதை தாய் இடுப்பில் கயிறைக் கட்ட அது அழுத்தியதால் ஏற்பட்ட தழும்பை உடையவனும் ஆன எங்கள் கண்ணனை, நாங்கள் தூய்மையாக நீராடி, மணம் வீசும் மலர்களுடன் காண புறப்படுவோம். அவனை மனதில் இருத்தி அவன் புகழ் பாடினாலே போதும்! செய்த பாவ பலன்களும், செய்கின்ற பாவ பலன்களும் தீயினில் புகுந்த தூசு போல காணாமல் போய்விடும்.  பாடல் 6


  புள்ளும் சிலம்பின காண் புள்ளரையன் கோயிலில்
  வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ?
  பிள்ளாய் எழுந்திராய்! பேய்முலை நஞ்சுண்டு
  கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி
  வெள்ளத்து அரவில் துயிலமர்ந்த வித்தினை
  உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்
  மெள்ள எழுந்து அரியென்ற பேரரவம்
  உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்


  பொருள்: அன்புத்தோழியே! நீ உடனே எழுந்திரு! பறவைகள் அதிகாலையில் எழுந்து கீச்சிடும் இனிய ஒலி இன்னும் கேட்கவில்லையா? கருடனை வாகனமாகக் கொண்ட எம்பிரானின் கோயிலில் வெள்ளை நிற சங்குகள் எழுப்பும் முழக்கம் காதில் விழவில்லையா? பேய் வடிவம் எடுத்து. தன்னைக் கொல்ல வந்த பூதகி என்ற அரக்கியிடம் பால் குடிப்பது போல் நடித்து அவளது உயிரைப் பறித்தவனும், சக்கர வடிவில் வந்த சகடன் என்ற அரக்கனின் உயிரைக் குடித்தவனுமான கண்ணபிரானை யோகிகளும், முனிவர்களும் "ஹரி ஹரி என்று அழைக்கும் குரலுமா உன்னை எட்டவில்லை! உடனே எழுந்து இவற்றையெல்லாம் கேட்டு உள்ளம் குளிர்வாயாக. 4. #4
  sumathisrini's Avatar
  sumathisrini is offline Super Moderator Silver Ruler's of Penmai
  Real Name
  Sumathi
  Gender
  Female
  Join Date
  Jun 2011
  Location
  Hosur
  Posts
  34,350

  Re: Thiruppavai - சூடிக்கொடுத்த சுடர்கொடியின் திருப்ப

  பாடல் 7


  கீசுகீசு என்றெங்கும் ஆனைச்சாத்தன் கலந்து
  சின பேச்சரவம் கேட்டிலையோ? பேய்ப்பெண்ணே!
  காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து
  வாச நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால்
  ஓசை படுத்த தயிர் அரவம் கேட்டிலையோ?
  நாயகப் பெண்பிள்ளாய்! நாராயணன் மூர்த்தி
  கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ?
  தேசம் உடையாய்! திறவேலோர் எம்பாவாய்.


  பொருள்: அறிவில்லாதவளே! ஆனைச்சாத்தன் என்றழைக்கப்படும் வலியன்குருவிகள் கீச்சிடும் குரலும், அவை தங்கள் துணையுடன் பேசும் ஒலியும் உனக்கு கேட்கவில்லையா? வாசனை மிக்க கூந்தலை உடைய ஆய்க்குலப் பெண்கள் மத்து கொண்டு தயிர் கடையும் ஓசையும், அப்போது அவர்களது கழுத்தில் அணிந்துள்ள அச்சுத்தாலியும், ஆமைத்தாலியும் இணைந்து ஒலியெழுப்புவது இன்னுமா கேட்கவில்லை? எல்லோருக்கும் தலைமையேற்று அழைத்துச் செல்வதாகச் சொன்ன பெண்ணே! நாங்கள் நாராயணான கேசவனைப் புகழ்ந்து பாடுவது உன் காதில் கேட்டும் உறங்கும் மர்மமென்ன? பிரகாசமான முகத்தைக் கொண்டவளே! உன் வீட்டுக்கதவைத் திற.  பாடல் 8


  கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறுவீடு
  மேய்வான் பரந்தனகாண் மிக்குள்ள பிள்ளைகளும்
  போவான் போகின்றாரை போகாமல் காத்துன்னை
  கூவுவான் வந்துநின்றோம் கோது கலமுடைய
  பாவாய்! எழுந்திராய் பாடிப் பறைகொண்டு
  மாவாய் பிளந்தானை மல்லரை மாட்டிய
  தேவாதி தேவனைச் சென்று நாம் சேவித்தால்
  ஆஆ என்று ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்.


  பொருள்: மகிழ்ச்சியை மட்டுமே சொத்தாகக் கொண்ட சிலை போன்று அழகு கொண்ட பெண்ணே! கிழக்கே வெளுத்துவிட்டது. எருமைகள் மேய்ச்சலுக்காக பசும்புல் மைதானங்களில் பரந்து நிற்கின்றன. அநேகமாக, எல்லாப் பெண்களும் நீராடுவதற்காக வந்து சேர்ந்து விட்டார்கள். அவர்கள், உடனே குளிக்கப் போக வேண்டும் என அவசரப்படுத்துகிறார்கள். அவர்களை உனக்காக தடுத்து நிறுத்தி விட்டு, உன்னைக் கூவிக் கூவி அழைக்கிறோம். கேசி என்னும் அரக்கன் குதிரை வடிவில் வந்த போது அதன் வாயைப் பிளந்து கொன்றவனும், கம்சனால் அனுப்பப்பட்ட முஷ்டிகர் உள்ளிட்ட மல்லர்களை வென்றவனும், தேவாதி தேவனுமாகிய ஸ்ரீகிருஷ்ணனை நாம் வணங்கினால், அவன் "ஆஆ என்று அலறிக்கொண்டு நமக்கு அருள் தருவான். பெண்ணே! உடனே கிளம்புவாயாக.  பாடல் 9


  தூமணி மாடத்து சுற்றும் விளக்கெரிய
  தூபம் கமழத் துயிலணை மேல் கண்வளரும்
  மாமன் மகளே! மணிக்கதவம் தாள் திறவாய்
  மாமீர்! அவளை எழுப்பீரோ? உன்மகள் தான்
  ஊமையோ அன்றிச் செவிடோ, அனந்தலோ?
  ஏமப்பெருந்துயில் மந்திரப்பட்டாளோ?
  மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்று
  நாமம் பலவும் நவின்றேலோர் எம்பாவாய்.


  பொருள்: பிரகாசமான நவரத்தினங் களால் கட்டப்பட்ட மாளிகையில், சுற்றிச்சூழ விளக்கெரிய, நறுமணதிரவியம் மணம் வீச, அழகிய பஞ்சுமெத்தையில் உறங்கும் எங்கள் மாமன் மகளே! உன் வீட்டு மணிக்கதவைத் திறப்பாயாக. எங்கள் அன்பு மாமியே! அவளை நீ எழுப்பு. உன் மகளை எத்தனை நேரமாக நாங்கள் கூவி அழைக்கிறோம்! அவள் பதிலே சொல்லவில்லையே! அவள் ஊமையா? செவிடா? சோம்பல் அவளை ஆட்கொண்டு விட்டதா? அல்லது எழ முடியாதபடி ஏதாவது மந்திரத்தில் சிக்கி விட்டாளா? உடனே எழு. எங்களுடன் இணைந்து மாயங்கள் செய்பவன், மாதவத்துக்கு சொந்தக்காரன், வைகுண்டத்துக்கு அதிபதி என்றெல்லாம் அந்த நாராயணனின் திருநாமங்களைச் சொல்.
 5. #5
  sumathisrini's Avatar
  sumathisrini is offline Super Moderator Silver Ruler's of Penmai
  Real Name
  Sumathi
  Gender
  Female
  Join Date
  Jun 2011
  Location
  Hosur
  Posts
  34,350

  Re: Thiruppavai - சூடிக்கொடுத்த சுடர்கொடியின் திருப்ப

  பாடல் 10


  நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்!
  மாற்றமும் தராரோ? வாசல் திறவாதார்
  நாற்றத் துழாய்முடி நாராயணன் நம்மால்
  போற்றப் பறைதரும் புண்ணியனால் பண்டொருநாள்
  கூற்றத்தின் வாய்வீழ்ந்த கும்பகர்ணனும்
  தோற்றும் உனக்கே பெருந்துயில் தந்தானோ?
  ஆற்ற அனந்தல் உடையாய்! அருங்கலமே!
  தேற்றமாய் வந்து திறவேலோர் எம்பாவாய்.


  பொருள்: முற்பிறவியில் எம்பெருமான் நாராயணனை எண்ணி நோன்பிருந்ததன் பயனாக, இப்போது சொர்க்கம் போல் சுகத்தை அனுபவிக் கின்ற பெண்ணே! உன் இல்லக்கதவை திறக்காவிட்டாலும் பரவாயில்லை. பேசவும் மாட்டாயோ? நறுமணம் வீசும் துளசியை தலையில் அணிந்த நாராயணனை நாம் போற்றி பாடினால் அவன் நம் நோன்புக்குரிய பலனை உடனே தருவான். முன்னொரு காலத்தில், கும்பகர்ணன் என்பவனை தூக்கத்திற்கு உதாரணமாகச் சொல்வார்கள். உன் தூக்கத்தைப் பார்த்தால், நீ அவனையும் தோற்கடித்து விடுவாய் போல் தெரிகிறது. சோம்பல் திலகமே! கிடைத்தற்கரிய அணிகலனே! எந்த தடுமாற்றமும் இல்லாமல் கதவைத் திறந்து வெளியே வா.  பாடல் 11


  கற்றுக் கறவைக் கணங்கள் பலகறந்து
  செற்றார் திறலழியச் சென்று செருகச் செய்யும்
  குற்றமொன்றில்லாத கோவலர் தம் பொற்கொடியே
  புற்றரவு அல்குல் புனமயிலே போதராய்
  சுற்றத்துத் தோழிமார் எல்லாரும் வந்துநின்
  முற்றம் புகுந்து முகில்வண்ணன் பேர்பாட
  சிற்றாதே பேசாதே செல்வப்பெண்டாட்டி! நீ
  எற்றுக்கு உறங்கும் பொருளேலோர் எம்பாவாய்.


  பொருள்: கன்றுகளோடு கூடிய பசுக்களிடமிருந்து பால் கறப்பவனாகவும், தங்களைப் பகைத்தவர்களை எதிர்த்து நின்று போரிடும் தன்மையுடையவனும், மாசுமருவற்றவனுமான கோபாலனை தழுவத் துடிக்கின்ற பொற்கொடியே! புற்றில் இருக்கும் பாம்பின் படத்தைப் போன்ற அல்குலை உடைய மயில் போன்றவளே! நம் சுற்றுப்புறத்திலுள்ள எல்லாத் தோழியரும் உன் வீட்டு வாசலில் வந்து கூடிவிட்டார்கள். அவர்கள் மேகவண்ணனாகிய கண்ணனைப் புகழ்ந்து பாடிக் கொண்டிருக்கிறார்கள். செல்வத்தையும், பெண்மையையும் புனிதமாய் காப்பவளே! இதையெல்லாம் கேட்டும் அசையாமலும், பேசாமலும் உறங்கிக்கொண்டிருக்கிறாயே! அர்த்தமற்ற இந்த உறக்கத்தினால் உனக்கு என்ன பலன் கிடைக்கப் போகிறது?  பாடல் 12


  கனைத்திளங் கற்றெருமை கன்றுக்கு இரங்கி
  நினைத்து முலைவழியே நின்றுபால் சோர
  நனைத்தில்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்!
  பனித்தலை வீழ நின் வாசல் கடைபற்றி
  சினத்தினால் தென் இலங்கைக் கோமானைச் செற்ற
  மனத்துக்கு இனியானைப் பாடவும் நீ வாய்திறவாய்
  இனித்தான் எழுந்திராய் ஈதென்ன பேருறக்கம்!
  அனைத்தில்லத் தாரும் அறிந்தேலோர் எம்பாவாய்.


  பொருள்: பசியால் கதறித் திரியும் தங்கள் கன்றுகளை எண்ணிய எருமைகள் தங்கள் மடியில் சொரியும் பாலைச் சிந்தியபடியே அங்குமிங்கும் செல்கின்றன. அவை சொரிந்த பால் இல்லத்து வாசல்களை சேறாக்குகின்றது. இந்த அளவுக்கு விடாமல் பால் சொரியும் எருமைகளுக்கு சொந்தக்காரனான ஆயனின் தங்கையே! கொட்டுகின்ற பனி எங்கள் தலையில் விழ, உன் வீட்டு தலைவாசலில் நாங்கள் காத்து நிற்கிறோம். சீதையைக் கவர்ந்து சென்ற ராவணனின் மீது கோபம் கொண்டு அவனை அழிக்க ராமாவதாரம் எடுத்த கோமானாகிய அந்த நாராயணனின் பெருமையைப் பாடுகிறோம். நீயோ, இன்னும் பேசாமல் இருக்கிறாய். எல்லா வீடுகளிலும் அனைவரும் எழுந்து விட்ட பிறகும், உனக்கு மட்டும் ஏன் பேருறக்கம்?


 6. #6
  sumathisrini's Avatar
  sumathisrini is offline Super Moderator Silver Ruler's of Penmai
  Real Name
  Sumathi
  Gender
  Female
  Join Date
  Jun 2011
  Location
  Hosur
  Posts
  34,350

  Re: Thiruppavai - சூடிக்கொடுத்த சுடர்கொடியின் திருப்&#

  பாடல் 13


  புள்ளின்வாய் கீண்டானை பொல்லா அரக்கனை
  கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய்
  பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம்புக்கார்
  வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று
  புள்ளும் சிலம்பின காண் போதரிக் கண்ணினாய்!
  குள்ளக் குளிரக் குடைந்துநீர் ஆடாதே
  பள்ளிக்கிடத்தியோ! பாவாய்! நீ நன்னாளால்
  கள்ளம் தவிர்ந்து கலந்தேலோர் எம்பாவாய்.


  பொருள்: பறவை வடிவம் கொண்டு வந்த பகாசுரனின் வாயைப் பிளந்து அழிக்கவும், பிறன் மனை நாடிய ராவணனின் தலையைக் கொய்யவும் அவதாரம் எடுத்த நாராயணனின் புகழைப் பாடியபடியே, நம் தோழியர் எல்லாரும் பாவை விரதம் இருக்கும் இடத்திற்கு சென்றாகி விட்டது. கீழ்வானத்தில் வெள்ளி முளைத்து விட்டது. வியாழன் மறைந்து விட்டது. பறவைகள் கீச்சிட்டு பாடுகின்றன. தாமரை மலர் போன்ற கண்களையுடைய பெண்ணே! விடியலை உணர்த்தும் இந்த அறிகுறிகள் தெரிந்தும் உடல்நடுங்கும்படி, குளிர்ந்த நீரில் நீச்சலடித்து குளிக்க வராமல் என்ன செய்கிறாய்? அந்தக் கண்ணனை நினைக்கும் ஒவ்வொரு நாளும் நன்னாளே! மார்கழியில் அவனை நினைப்பது இன்னும் சிறப்பல்லவா? எனவே, தூக்கம் என்கிற திருட்டை தவிர்த்து எங்களுடன் நீராட வா.  பாடல் 14


  உங்கள் புழக்கடை தோட்டத்து வாவியுள்
  செங்கழுநீர் வாய்நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பின காண்
  செங்கல் பொடிக்கூறை வெண்பல் தவத்தவர்
  தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதந்தார்
  எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும்
  நங்காய்! எழுந்திராய் நாணாதாய் நாவுடையாய்!
  சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்
  பங்கயக் கண்ணானை பாடலோர் எம்பாவாய்.


  பொருள்: எங்களை முன்னதாகவே வந்து எழுப்புவேன் என்று வீரம் பேசிய பெண்ணே! கொடுத்த வாக்கை மறந்ததற்காக வெட்கப்படாதவளே! உங்கள் வீட்டின் பின்வாசலிலுள்ள தோட்டத்து தடாகத்தில் செங்கழுநீர் மலர்கள் மலர்ந்து விட்டன. ஆம்பல் மலர்கள் தலை கவிழ்ந்தன. காவி உடையணிந்த துறவிகள் தங்கள் வெண்பற்கள் ஒளிவீச கோயில்களை நோக்கி, திருச்சங்கு முழக்கம் செய்வதற்காக சென்று கொண்டிருக்கின்றனர்.ஆனால், பெண்ணே! சங்கும் சக்கரமும் ஏந்திய பலமான கரங்களை உடையவனும், தாமரை போன்ற விரிந்த கண்களையுடையவனுமான கண்ணனைப் பாட இன்னும் நீ எழாமல் இருக்கிறாயே!  பாடல் 15


  எல்லே இளங்கிளியே! இன்னும் உறங்குதியோ!
  சில்லென்று அழையேன்மின் நங்கைமீர்! போதருகின்றேன்
  வல்லையுன் உன் கட்டுரைகள் பண்டேயுன் வாயறிதும்
  வல்லீர்கள் நீங்களே நானேதான் ஆயிடுக
  ஒல்லை நீ போதாய் உனக்கென்ன வேறுடையை
  எல்லாரும் போந்தாரோ? போந்தார் போந்து எண்ணிக்கொள்
  வல்லானை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க
  வல்லானை மாயனைப் பாடலோர் எம்பாவாய்.


  பொருள்: ""ஏலே என் தோழியே! இளமைக் கிளியே! நாங்களெல்லாம் உனக்காக இவ்வளவு நேரம் காத்திருந்தும், இப்படியெல்லாம் அழைத்தும் உறங்குகிறாயே? என்று சற்று கடுமையாகவே தோழிகள் அவளை அழைத்தனர். அப்போது அந்த தோழி, ""கோபத்துடன் என்னை அழைக்காதீர்கள்! இதோ வந்து விடுகிறேன், என்கிறாள்.

  உடனே தோழிகள், ""உன்னுடைய வார்த்தைகள் மிக நன்றாக இருக்கிறது. இவ்வளவு நேரம் தூங்கிவிட்டு இப்போது எங்களிடம் கோபிக்காதே என்கிறாயே, என்று சிடுசிடுத்தனர்.அப்போது அவள், ""சரி..சரி...எனக்கு பேசத்தெரியவில்லை. நீங்களே பேச்சில் திறமைசாலிகளாய் இருங்கள். நான் ஏமாற்றுக்காரியாக இருந்து விட்டுப் போகிறேன், என்கிறாள்.""அடியே! நாங்களெல்லாம் முன்னமே எழுந்து வர வேண்டும். உனக்காக காத்திருக்க வேண்டும். அப்படியென்ன எங்களிடமில்லாத சிறப்பு உனக்கு இருக்கிறது? என்று கடிந்து கொள்கிறார்கள். அவளும் சண்டைக்காரி. பேச்சை விட மறுக்கிறாள். ""என்னவோ நான் மட்டும் எழாதது போல் பேசுகிறீர்களே! எல்லாரும் வந்துவிட்டார்களா? என்கிறாள்.தோழிகள் அவளிடம், ""நீயே வெளியே வந்து இங்கிருப்போரை எண்ணிப் பார். வலிமை பொருந்திய குவலயாபீடம் என்னும் யானையை அழித்தவனும், எதிரிகளை வேட்டையாடும் திறம் கொண்டவனுமான மாயக்கண்ணனை வணங்கி மகிழ உடனே வருவாய், என்கிறார்கள்.
 7. #7
  sumathisrini's Avatar
  sumathisrini is offline Super Moderator Silver Ruler's of Penmai
  Real Name
  Sumathi
  Gender
  Female
  Join Date
  Jun 2011
  Location
  Hosur
  Posts
  34,350

  Re: Thiruppavai - சூடிக்கொடுத்த சுடர்கொடியின் திருப்&#

  பாடல் 16


  நாயகனாய் நின்ற நந்தகோபனுடைய
  கோயில் காப்பானே! கொடித்தோன்றும் தோரண
  வாயில் காப்பானே! மணிக்கதவம் தாள்திறவாய்
  ஆயர் சிறுமிய ரோமுக்கு அறைபறை
  மாயன் மணிவண்ணன் நென்னனலே வாய்நேர்ந்தான்
  தூயோமாய் வந்தோம் துயிலெழப் பாடுவான்
  வாயால் முன்னமுன்னம் மாற்றாதே யம்மா! நீ
  நேய நிலைக்கதவம் நீக்கலோர் எம்பாவாய்.


  பொருள்: எங்களுடைய தலைவனாய் இருக்கிற நந்தகோபனின் திருமாளிகையை பாதுகாக்கும் காவலனே! கொடித் தோரணம் கட்டப்பட்ட வாசல் காவலனே! ஆயர்குல சிறுமியரான எங்களுக்காக இந்த மாளிகைக் கதவைத் திறப்பாயாக. மாயச்செயல்கள் செய்பவனும், கரிய நிறத்தவனுமான கண்ணன் எங்களுக்கு ஒலியெழுப்பும் பறை (சிறு முரசு) தருவதாக நேற்றே சொல்லியிருக்கிறான். அதனைப் பெற்றுச்செல்ல நாங்கள் நீராடி வந்திருக்கிறோம். அவனைத் துயிலெழுப்பும் பாடல்களையும் பாட உள்ளோம். "அதெல்லாம் முடியாது என உன் வாயால் முதலிலேயே சொல்லி விடாதே. மூடியுள்ள இந்த நிலைக்கதவை எங்களுக்கு திறப்பாயாக.

  பாடல் 17


  அம்பரமே தண்ணீரே சோறே அறஞ்செய்யும்
  எம்பெருமான் நந்தகோபாலா! எழுந்திராய்
  கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே! குலவிளக்கே!
  எம்பெருமாட்டி யசோதாய்! அறிவுறாய்!
  அம்பரம் ஊடறுத்து ஓங்கி உலகளந்த
  உம்பர்கோமானே! உறங்காது எழுந்திராய்
  செம்பொற் கழலடிச் செல்வா! பலதேவா!
  உம்பியும் நீயும் உறங்கலோர் எம்பாவாய்.


  பொருள்: ஆடைகளையும், குளிர்ந்த நீரையும், உணவும் பிறர் திருப்திப்படும் அளவுக்கு தர்மம் செய்யும் எங்கள் தலைவரான நந்தகோபரே! தாங்கள் எழுந்தருள வேண்டும். கொடிபோன்ற இடைகளையுடைய பெண்களுக்கு எல்லாம் தலைவியான இளகிய மனம் கொண்ட யசோதையே! மங்களகரமான தீபம் போன்ற முகத்துடன் பிரகாசிப்பவளே! நீ எழ வேண்டும். விண்ணையே கிழித்து உன் திருவடிகளால் உலகளந்த தேவர்களின் தலைவனான எங்கள் கண்ணனே! நீ கண் விழிக்க வேண்டும். செம்பொன்னால் செய்த சிலம்புகளை அணிந்த செல்வத்திருமகனான பலராமனே! நீயும், உன் தம்பியும் உறக்கத்தில் இருந்து எழுந்து எங்களுக்கு தரிசனம் தர வேண்டும்.  பாடல் 18


  உந்து மதகளிற்றன் ஓடாத தோள்வலியன்
  நந்தகோபாலன் மருமகளே! நப்பின்னாய்
  கந்தம் கமழும் குழலி கடை திறவாய்
  வந்தெங்கும் கோழி அழைத்தன காண் மாதவிப்
  பந்தல் மேல் பல்கால் குயிலினங்கள் கூவின காண்
  பந்தார் விரலி! உன் மைத்துனன் பேர்பாட
  செந்தாமரைக் கையால் சீரார் வளையொலிப்ப
  வந்து திறவாய் மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.


  பொருள்: மதநீர் சிந்தும் யானைகளை உடையவனும், போரில் பின்வாங்காத தோள்வலிமை உடையவனுமான நந்தகோபனின் மருமகளே! நப்பின்னை பிராட்டியே! வாசனை சிந்தும் கூந்தலை உடையவளே! உன் வாசல் கதவைத் திற! கோழிகள் கூவும் ஒலி நாலாபுறத்தில் இருந்தும் கேட்கிறது. குருக்கத்திக் கொடியின் மேல் அமர்ந்து குயில்கள் பாடத் துவங்கி விட்டன. பூப்பந்தைப் போன்ற மென்மையான விரல்களைக் கொண்டவளே! உன் கணவனின் புகழ் பாட நாங்கள் வந்துள்ளோம். அளவுமாறாத உன் அழகிய வளையல்கள் ஒலிக்க, செந்தாமரைக் கையால் உன் வாசல் கவைத் திறந்தால் எங்கள் உள்ளம் மகிழ்ச்சியடையும்.


 8. #8
  sumathisrini's Avatar
  sumathisrini is offline Super Moderator Silver Ruler's of Penmai
  Real Name
  Sumathi
  Gender
  Female
  Join Date
  Jun 2011
  Location
  Hosur
  Posts
  34,350

  Re: Thiruppavai - சூடிக்கொடுத்த சுடர்கொடியின் திருப்&#

  பாடல் 19


  குத்து விளக்கெரியக் கோட்டுக்கால் கட்டில் மேல்
  மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறி
  கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கை மேல்
  வைத்துக் கிடந்த மலர்மார்பா! வாய் திறவாய்
  மைத்தடங் கண்ணினாய்! நீயுன் மணாளனை
  எத்தனை போதும் துயிலெழ ஒட்டாய்காண்
  எத்தனை யேலும் பிரிவாற்ற கில்லாயால்
  தத்துவமன்று தகவேலோர் எம்பாவாய்.


  பொருள்: ""குத்து விளக்கெரிய, யானைத் தந்தத்தால் ஆன கட்டில் மேல் விரிக்கப்பட்ட மிருதுவான பஞ்சுமெத்தையில், விரிந்த கொத்தாக பூ சூடிய நப்பின்னையின் மார்பில் தலை வைத்து கண் மூடியிருக்கும் மலர் மாலை தரித்த கண்ணனே! நீ எங்களுடன் பேசுவாயாக. மை பூசிய கண்களை உடைய நப் பின்னையே! நீ உன் கணவனாகிய கண்ணனை எவ்வளவு நேரமானாலும் தூக்கத்தில் இருந்து எழுப்புவதில்லை. காரணம், கணநேரம் கூட அவனைப் பிரிந்திருக்கும் சக்தியை இழந்து விட்டாய். இப்படிசெய்வது உன் சுபாவத்துக்கு தகுதியாகுமா?  பாடல் 20


  முப்பத்து மூவர் அமரர்க்கு முன்சென்று
  கப்பம் தவிர்க்கும் கலியே! துயிலெழாய்!
  செப்பமுடையாய் திறலுடையாய் செற்றார்க்கு
  வெப்பம் கொடுக்கும் விமலா! துயிலெழாய்!
  செப்பன்ன மென்முலைச் செவ்வாய் சிறுமருங்குல்
  நப்பின்னை நங்காய்! திருவே! துயிலெழாய்
  உக்கமும் தட்டொளியும் தந்துன் மணாளனை
  இப்போதே எம்மை நீராட்டலோர் எம்பாவாய்.


  பொருள்: முப்பத்து மூன்று கோடி தேவர்கள் இருந்தாலும், அவர்களுக்கெல்லாம் முன்னதாகச் சென்று பக்தர்களின் துயர் துடைக்கும் கலியுக தெய்வமே! நீ எழுவாயாக! நேர்மையானவனே! ஆற்றல் மிக்கவனே! பகைவர்களுக்கு வியர்வை பெருக்கெடுக்கும்படி செய்யும் தூயவனே! துயில் எழுவாயாக. பொற்கலசம் போன்ற மென்மையான ஸ்தனங்களும், பவளச் செவ்வாயும், சிற்றிடையும் கொண்ட நப்பின்னை பிராட்டியே! லட்சுமிக்கு நிகரானவளே! துயில் எழுவாயாக. எங்களுக்கு விசிறி, கண்ணாடி ஆகியவற்றையும், உன் கணவனாகிய கண்ணனையும் தந்து இப்போதே எங்களை அருள்மழையில் நனையச் செய்வாயாக.  பாடல் 21


  ஏற்ற கலங்கள் எதிர்பொங்கி மீதளிப்ப
  மாற்றாதே பால்சொரியும் வள்ளல் பெரும்பசுக்கள்
  ஆற்றப் படைத்தான் மகனே! அறிவுறாய்
  ஊற்றமுடையாய்! பெரியாய் உலகினில்
  தோற்றமாய் நின்ற சுடரே! துயிலெழாய்
  மாற்றார் உனக்கு வலிதொலைந்துன் வாசற்கண்
  ஆற்றாது வந்துன் அடிபணியு மாபோலே
  போற்றியாம் வந்தோம் புகழ்ந்தேலோர் எம்பாவாய்


  பொருள்: கறக்கும் நேரமெல்லாம் பாத்திரங்கள் நிரம்பி வழியும் வகையில் பாலைச் சுரக்கும் வள்ளல் தன்மை கொண்ட பசுக் களுக்கு உரிமையாளரான நந்தகோபனின் மகனே! கண்ணனே! நீ எழுவாயாக. வேதங் களால் போற்றப் படும் வலிமையானவனே! அந்த வேதங்களாலும் அறிய முடியாத பெரியவனே! உலகிற்கே ஒளிகாட்டும் சுடரே! துயில் எழுவாயாக! உன்னை எதிர்த்தவர்களெல்லாம் வலிமையிழந்து, உன் வாசலில் உன் பாதத்தில் விழ காத்துக் கிடப்பது போல, நாங்களும் உன் திருவடியைப் புகழ்ந்து பாட காத்திருக்கிறோம். எங்கள் வேண்டுகோளை ஏற்பாயாக.
 9. #9
  sumathisrini's Avatar
  sumathisrini is offline Super Moderator Silver Ruler's of Penmai
  Real Name
  Sumathi
  Gender
  Female
  Join Date
  Jun 2011
  Location
  Hosur
  Posts
  34,350

  Re: Thiruppavai - சூடிக்கொடுத்த சுடர்கொடியின் திருப்&#

  பாடல் 22


  அங்கண்மா ஞாலத்தரசர் அபிமான
  பங்கமாய் வந்துநின் பள்ளிக்கட் டிற்கீழே
  சங்கம் இருப்பார்போல் வந்து தலைப்பெய்தோம்
  கிங்கிணி வாய்ச்செய்த தாமரை பூப்போல
  செங்கண் சிறுகச்சிறதே யெம்மேல் விழியாவோ?
  திங்களும் ஆதித் தியனும் எழுந்தாற்போல்
  அங்கண் இரண்டும்கொண்டு எங்கள் மேல் நோக்குதியேல்
  எங்கள் மேல் சாபம் இழிந்தேலோர் எம்பாவாய்.


  பொருள்: கண்ணா! எங்களை விட உயர்ந்த வீரர்கள் இருக்கிறார்களா என தங்களைப் பற்றி பெருமையடித்துக் கொண்டவர்களும், இந்த பரந்த பூமியை ஆட்சி செய்தவர்களுமான அரசர்கள் மிகுந்த பணிவுடன் உன் பள்ளி கொண்டுள்ள கட்டிலைச் சுற்றிலும், சத்சங்கத்துக்கு வந்த பக்தர்கள் போல் காத்து நிற்கிறார்கள். அவர்களைப் போல் நாங்களும் உன் அருகில் நிற்கிறோம். எங்கள் மீது, கிண்கிணி என ஒலிக்கும் சிறுமணியின் வாய்போலவும், தாமரைப்பூ மெதுவாக மலர்வது போலவும், உன் சிவந்த தாமரைக் கண்களை சிறுகச் சிறுக திறந்து விழிக்கமாட்டாயா? சந்திரனும், சூரியனும் உதித்தது போல, அந்தக் கண்களைக் கொண்டு எங்களைப் பார்ப்பாயானால், எங்கள் மீதுள்ள எல்லா பாவங்களும் சாபங்களும் தீர்ந்து விடுமே!  பாடல் 23


  மாரி மலைமுழஞ்சில் மன்னிக்கிடத்துறங்கும்
  சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து
  வேரி மயிர்பொங்க எப்பாடும் பேர்ந்துதறி
  மூரி நிமிர்ந்து முழங்கப் புறப்பட்டு
  போதருமா போலே நீ பூவைப்பூ வண்ணா! உன்
  கோயில் நின்று இங்ஙனே போந்தருளி கோப்புடைய
  சீரிய சிங்கா சனத்திருந்து யாம்வந்த
  காரியம் ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்.


  பொருள்: மழைக்காலத்தில் மலையிலுள்ள குகையில் உறங்கும் பெருமை மிக்க சிங்கம் விழிக்கிறது. அதன் கண்களில் நெருப்பு பொறி பறக்கிறது. நாற்புறமும் நடமாடி பிடரி மயிரை சிலிர்த்து, பெருமையுடன் நிமிர்ந்து கர்ஜனையுடன் வெளியே கிளம்புகிறது. அதுபோல, காயாம்பூ நிறத்தையுடைய கண்ணனே! நீயும் வீரநடை போட்டு உன் கோயிலில் இருந்து வெளியேறி, இங்கே வந்து அருள் செய். வேலைப்பாடுகளைக் கொண்ட மிகச்சிறந்த சிம்மாசனத்தில் அமர்ந்து, நாங்கள் எதற்காக இங்கே வந்தோம் என்பதை அறிந்து, அந்த கோரிக்கைகளைப் பரிசீலனை செய்து நிறைவேற்றி அருள வேண்டுகிறோம்.  பாடல் 24


  அன்று இவ்வுலகம் அளந்தாய் அடிபோற்றி
  சென்றங்கு தென்னிலங்கை செற்றாய் திறல்போற்றி
  கொன்றடச்சகடம் உதைத்தாய் புகழ் போற்றி
  கன்று குணிலா எறிந்தாய் கழல் போற்றி
  குன்று குடையாய் எடுத்தாய் குணம் போற்றி
  வென்று பகைகெடுக்கும் நின்கையில் வேல் போற்றி
  என்றென்றுன் சேவகமே ஏத்திப் பறைகொள்வான்
  இன்று யாம் வந்தோம் இரங்கேலோர் எம்பாவாய்.


  பொருள்: மகாபலி இந்த உலகத்தை கைப்பற்றிய காலத்தில், அதை மூன்றடிகளால் அளந்து உன்னுடையது என்று உணர்த்தியவனே! உன் திருவடிகளுக்கு வணக்கம். ராமாவதாரம் எடுத்த போது, சீதையை மீட்க தெற்கிலுள்ள இலங்கைக்கு சென்று ராவணனை வெற்றி கொண்டவனே! உன் வீரத்துக்கு நமஸ்காரம். சக்கர வடிவில் வந்த சகடன் எனற அசுரனை ஒரே உதையில் வீழ்த்தியவனே! உன் புகழுக்கு வந்தனம்.கன்று வடிவில் வந்த வத்சாசுரனை தடியாகக் கருதி, அவனை விளாமர வடிவில் வந்த கபித்தாசுரன் மீது எறிந்து அழித்தவனே! உன் கால்களில் அணிந்த வீரக்கழலுக்கு மங்களம் உண்டாகட்டும். கோவர்த்தனகிரியை குடையாக்கி ஆயர்குலத்தவரை இந்திரன் அனுப்பிய மழையில் இருந்து காத்தவனே! உன் இரக்க குணத்துக்கு தலை வணங்குகிறோம்.பகைவர்கள் எவ்வளவு பலவான்களாயினும் அவர்களை உன் கையிலுள்ள வேலால் அழித்தவனே! அந்த வேலாயுதத்துக்கு நமஸ்காரம். உன் வீரச்செயல்களைப் பாடி, உன்னருளைப் பெறுவதற்கு, இப்போது நாங்கள் வந்துள்ளோம். எங்கள் மீது இரக்கம் காட்ட வேண்டுகிறோம்.  Last edited by sumathisrini; 28th Nov 2013 at 03:36 PM.

 10. #10
  sumathisrini's Avatar
  sumathisrini is offline Super Moderator Silver Ruler's of Penmai
  Real Name
  Sumathi
  Gender
  Female
  Join Date
  Jun 2011
  Location
  Hosur
  Posts
  34,350

  Re: Thiruppavai - சூடிக்கொடுத்த சுடர்கொடியின் திருப்&#

  பாடல் 25


  ஒருத்தி மகனாய் பிறந்து ஓரிரவில்
  ஒருத்தி மகனாய் ஒளித்து வளர
  தரிக்கிலா னாகித்தான் தீங்கு நினைந்த
  கருத்தைப் பிழைப்பித்து கஞ்சன் வயிற்றில்
  நெருப்பென்ன நின்ற நெடுமாலே! உன்னை
  அருத்தித்து வந்தோம் பறைதருதி யாகில்
  திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம்பாடி
  வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.


  பொருள்: தேவகியின் மைந்தனாக நள்ளிரவில் பிறந்தவனே! அன்று இரவே யசோதையிடம் ஒளிந்து வளர்வதற்காகச் சென்றவனே! அவ்வாறு மறைந்து வளர்வதைப் பொறுக்க முடியாத கம்சன் உன்னை அழிக்க வேண்டும் என்று நினைத்தான். அந்த கருத்து அழியும் வகையில், அவனது வயிற்றில் பயத்தால் ஏற்படும் நெருப்பை விளைவித்த உயர்ந்த குணங்களையுடைய திருமாலே! உனது அருளை யாசித்து நாங்கள் வந்தோம். அந்த அருளைத் தந்தாயானால், உனது விரும்பத்தக்க செல்வச்சிறப்பையும், பக்தர்களுக்காக நீ செய்த பணிகளையும் பாராட்டி நாங்கள் பாடுவோம். உனது பெருமையைப் பாடுவதால், துன்பங்கள் நீங்கி இன்பமாய் மகிழ்ந்திருப்போம்.  பாடல் 26


  மாலே மணிவண்ணா! மார்கழி நீராடுவான்
  மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்
  ஞாலத்தை யெல்லாம் நடுங்க முரல்வன
  பாலன்ன வண்ணத்துன் பாஞ்ச சன்னியமே
  போல்வன சங்கங்கள் போய்ப்பாடு உடையனவே
  சாலப் பெரும்பறையே பல்லாண்டு இசைப்பாரே
  கோல விளக்கே கொடியே விதானமே
  ஆலின் இலையாய்! அருளேலோர் எம்பாவாய்.


  பொருள்: பக்தர்களிடம் மிகுந்த அன்பு கொண்டவனே! நீலக்கல் நிறத்தவனே! பெரிய கடலில் ஆலிலையில் மிதப்பவனே! பெரியவர்களால் வழிவழியாக மேற் கொள்ளப்படும் மார்கழி நோன் பிற்கு, உல கத்தையே அதிர வைக்கும் ஒலியையும், பால் சாதம் போன்ற நிறத்தையும், உன் சங்காகிய பாஞ்சஜன்யத்தைப் போன்றதுமான வலம்புரி சங்குகளையும், பெரிய முரசுகளையும், பல்லாண்டு பாடும் பெரியோரையும், மங்கள தீபங்களையும், கொடிகளையும் தந்து, இந்த நோன்பை நிறைவேற்றுவதற்குரிய இடத்தையும் அளித்து அருள் செய்ய வேண்டும்.


  பாடல் 27


  கூடாரை வெல்லும்சீர்க் கோவிந்தா! உன்தன்னைப்
  பாடிப்பறை கொண்டு யாம்பெறு சம்மானம்
  நாடு புகழும் பரிசினால் நன்றாக
  சூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே
  பாடகமே என்றனைய பல்கலனும் யாமணிவோம்
  ஆடை உடுப்போம் அதன்பின்னே பாற்சோறு
  மூடநெய் பெய்து முழங்கை வழிவார
  கூடி யிருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்.


  பொருள்: எதிரிகளை வெற்றிகொள்ளும் சிறப்புமிக்க கோவிந்தனே! உன்னை நாங்கள் பாடி அருள் பெற வந்தோம். அருட்செல்வத்துடன் இவ்வுலக வாழ்விற்கான பொருட்செல்வமும் தருவாயாக! அது இருந்தால் தானே நாடு புகழ்கிறது. கையில் அணியும் சூடகம், தோளில் அணியும் பாஹுவலயம், காதில் அணியும் தோடு, கர்ணப்பூ, காலில் அணியும் பாடகம் ஆகிய அணிகலன்களை எங்களுக்குக் கொடு. புத்தாடைகளை வழங்கு. பின்னர் விரதத்தை நிறைவு செய்யும் வகையில், கூட்டமாக உன்னுடன் அமர்ந்து கையில் நெய் வழிய பால்சோறு உண்போம்.
loading...

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •  
Like It?
Share It!Follow Penmai on Twitter