Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree17Likes
 • 8 Post By vaishnnavi
 • 1 Post By sumitra
 • 2 Post By jv_66
 • 2 Post By sumathisrini
 • 2 Post By Parasakthi
 • 2 Post By gkarti

Strongest bond - ஆயிரங்காலத்து பயிர்...


Discussions on "Strongest bond - ஆயிரங்காலத்து பயிர்..." in "Marriage" forum.


 1. #1
  vaishnnavi's Avatar
  vaishnnavi is offline Citizen's of Penmai
  Gender
  Female
  Join Date
  Apr 2014
  Location
  chennai
  Posts
  502

  Strongest bond - ஆயிரங்காலத்து பயிர்...

  குடும்ப பலமே, தேசிய பலம்!


  - பாரதி பாஸ்கர்


  அண்மையில் என் அப்பாவை ஒரு செக்-அப்பிற்காக மருத்துவமனைக்கு அழைத்துப் போனேன். ஏழு மணிக்குப் போய் சர்க்கரை நோய் தொடர்பான எல்லா டெஸ்டும் செய்து முடித்து டாக்டரையும் டயட்டீஷியனையும் சந்தித்து, வெளியே வருகையில் மணி இரண்டு. மருத்துவமனையில் நல்ல கவனிப்பும் வசதிகளும் இருந்ததால் ஒன்றும் பிரச்னையில்லை. காத்திருந்த நேரத்தில் சுற்றிலும் பார்த்தேன். மருத்துவமனைச் சூழல் எப்போதும் ஒரு சிறுகதைக்கோ, கட்டுரைக்கோ, கவிதைக்கோ களம் கொடுக்கும் ஆற்றல் உள்ளது. இந்தச் சூழல் கடந்த பத்து வருடங்களில்தான் எப்படி தலைகீழாக மாறிவிட்டிருக்கிறது!


  முன்பெல்லாம் வயதானவர்கள் மருத்துவமனைக்கு வந்தால் மகன்களோ, இளவயது உறவுக்காரர்களோ, கூட வருவார்கள். இப்போது பெரும்பாலும் வயதான ஆண்களுக்குத் துணையாக வருவது அவர்களது மனைவியர் மட்டுமே. நோயாளியை சமாளித்து, பெரிய பெரிய ஃபைல்களில் ரிபோர்ட்டுகளைத் தொகுத்து, பராமரித்து, பணம் கட்டி, நடுநடுவே போய் காஃபி வாங்கி வந்து கொடுத்து, கடைசியில் வெளியே வந்து ஆட்டோ பிடிப்பது வரை மனைவியின் பொறுப்பு அவர்களுக்கே வயது 65-70 ஆனாலும்! மனைவி நோயாளி என்றால் கணவர் கூட வருகிறார். வயதான பெற்றோரை மருத்துவமனைக்கு கூட்டிக்கொண்டு வரக்கூட பல வீடுகளில் பிள்ளைகளுக்கு நேரம் இல்லை அல்லது பிள்ளைகள் வெளிநாடுகளில் வசிக்கின்றனர்.


  கணவனும் மனைவியுமாய் ஒருவரை ஒருவர் பற்றிக்கொண்டு, முதுமையைக் கடக்க முயற்சி செய்யும் வாழ்வில், இளமையில் பரிமாறிக்கொள்ளாத அன்பு ஆட்சி செய்கிறது. எங்களுக்குக் கல்யாணம் ஆகி நாற்பது வருஷம் முடிந்து விட்டது மேடம் என்றார், பக்கத்து நாற்காலியில் இருந்த பெரியவர். இரண்டு பிள்ளைகளாம். இருவரும் வெளிநாட்டில். இப்போ இவளுக்கு நானும் எனக்கு இவளும்தான் குழந்தை. எங்கள் இளமையில் வேலை, சம்பாத்தியம், வீடு, பிள்ளைகள்னு ஓடிக்கிட்டே இருந்தோம்.


  அப்போ எனக்கு நிறைய கோபம் வரும். சாப்பிடறபோது தட்டை எடுத்து வீசி எறியாத நாளே கிடையாது. இவளோ பதிலே பேச மாட்டா. ஆனால் இப்போ, ஒருநாள் இவ பத்து நிமிஷம் வெளியே போனாக்கூட ரொம்ப பயமா இருக்கு. விட்டுப் பிரியவே முடியலே என்றார். அவர் மனைவி அழகாகச் சிரித்தார். பாரதிதாசனின் முதியோர் காதல் கவிதை என் நினைவுக்கு வந்தது. ஒரு தாத்தா, தன் மனைவியை வர்ணிக்கிறார்:


  புது மலர் அல்லள் காய்ந்த புற்கட்டே அவள் உடம்பு


  சதிராடும் நடையாள் அல்லள் தள்ளாடி விழும் மூதாட்டி


  மதியல்ல முகம் அவளுக்கு வரள் நிலம், குழிகள் கண்கள்


  எது எனக்கு இன்பம் நல்கும்?


  இருக்கின்றாள் என்பதொன்றோ?


  இந்த வயதான தம்பதிகளின் காதலும் நேசமும் பார்க்கப் பார்க்க இனிமையாக இருந்தது.


  அடுத்த நாள், என் உறவினர் ஒருவரின் பெண் திருமணமாகி ஆறே மாதத்தில் விவாகரத்து கேட்டு அடம் பிடிக்கிறாள் என்று, ஒரு பிரபல வழக்கறிஞரிடம் அவர்களை அழைத்துச் சென்றேன். மஞ்சள் கயிற்றின் நிறம் இன்னும் வெளுக்கவில்லை உங்க பொண்ணு கல்யாண ரிசப்ஷன் சாப்பாட்டுல பாசந்தி பிரமாதம் என்று இப்போதும் யதேச்சையாகப் பார்க்கும் உறவுக்காரர்கள் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அதற்குள் விவாகரத்து! என்ன பிரச்னையாம்?


  DSC03358


  என்னன்னே தெரியலை. அவனைப் பிடிக்கவேயில்லைன்னு சொல்றா என்கிறார், உறவினர். விஷயத்தை வக்கீலிடம் சொன்னோம்.


  பொண்ணு, பிள்ளை ரெண்டுபேரும் சாப்ட்வேரா? என்று கேட்டார்.


  கல்யாணம் ஆகி ஒரு வருஷம்கூட முடிஞ்சிருக்காதே என்றும் சொன்னார்.


  ம்யூசுவல் கன்சென்டா?


  இப்ப சேர்ந்தா இருக்காங்க?


  நகை, பணம் எல்லாம் யார் கஸ்டடியிலே இருக்கு?


  அக்கவுண்ட் எல்லாம் தனித்தனியா? ஜாயிண்டா?


  வக்கீல் சர்வ அலட்சியமாக விஷயங்களை அடுக்கினார். எவ்வளவு சகஜமாகக் கேட்கிறார் அவர்!


  இந்தியாவில் விவாகரத்து கேஸ் எண்ணிக்கையில் தமிழ்நாடு முதலிடம் வகித்தால் வக்கீல்களுக்கு ஒவ்வொரு முறையும் அதிர்ச்சி எப்படி வரும்? குடும்ப நல கோர்ட்டுகள், ஞாயிறுகூட இயங்க வேண்டும் என்று உத்தரவு போடும் அளவுக்கு விவாகரத்து வழக்குகள் பெருகிவிட்டன அல்லவா?


  இதற்குக் காரணம் மாறிவரும் பெண்களும் மாறாத ஆண்களும் என்று எனக்குத் தோன்றியது. கோபம் கொண்டு, சாப்பிடும் தட்டை சுவரில் எற்றும் கணவனையும் கடிந்து பேசாத நேற்றைய மனைவிகள், மாறிப் போனார்கள்; என் பணம், என் அக்கவுண்ட், என் இஷ்டம் என்கிறார்கள்.


  காதலி மாடர்ன் பெண்ணாக ஜீன்ஸில் தன்னோடு சுற்ற வேண்டும். அவளே மனைவியான பின், விடியுமுன்பே எழுந்து, புடவை கட்டி, பூ வைத்து மல்லிகை இட்லிகளையும் மணக்கும் சாம்பாரையும் இலையில் அன்பாகப் பரிமாற வேண்டும் என்று நினைக்கும் ஆண்கள் மாறாமல் இருக்கிறார்கள். விவாகரத்து வழக்குகள் பெருகாமல் என்ன செய்யும்?


  ஒரு திருமணம் முடிந்ததாக எப்போது அடையாளம் காணப்படுகிறது? இந்துத் திருமணங்களைப் பொறுத்தவரை ஸப்தபதி என்னும் ஏழு அடிகள் எடுத்து வைத்தபிறகுதான். தாலி கட்டுதல் அல்ல, ஸப்தபதியே ஒரு திருமணத்தின் நிரூபணம். மணப்பெண்ணின் வலது கையை தன் வலது கையால் பற்றிக்கொண்டு நன்றாக குனிந்து அவளின் வலது காலைத் தன் இடது கையால் பிடித்துக்கொண்டு, சற்றுத் தூக்கி ஒவ்வொரு அடியாக ஏழு அடிகள் முன்னோக்கி நகர்த்தும் சடங்கு இது. அப்போது மணமகன் சொல்லும் மந்திரத்தின் பொருள் என்ன? ஏழு அடிகள் எதற்காக எடுத்து வைக்கிறார்கள்?


  1. தெய்வங்கள் எங்களின் விருப்பங்களைப் பூர்த்தி செய்ய வேண்டும்.


  2. திடமான உடலும் கீர்த்தியும் எங்களுக்கு அமைய வேண்டும்.


  3. எங்கள் முன்னோர்கள் எங்களுக்கு அளித்த பணியை நாங்கள் செவ்வனே செய்ய வேண்டும்.


  4. எங்களுக்கு நீண்ட ஆயுள் அருளப்பட வேண்டும்.


  5. வீடு, வாகனம், கால்நடைகள் போன்ற செல்வங்கள் கிடைக்க வேண்டும்.


  6. சரியான பருவ காலத்தில் நல்ல மழையும் நல்ல விளைச்சலும் அமைந்து சுற்றுப்புறம் செழிக்க வேண்டும்.


  7. தெய்வத்திற்கும் மூத்தோருக்கும் உறவினருக்குமான பணிகளைச் செய்ய இறைவன் அருள வேண்டும்.


  இது முடிந்த பிறகு மணமகன் மணமகளைப் பார்த்துச் சொல்லும் ஒப்பந்த மந்திரம் உள்ளது: ஏழு அடிகளைத் தாண்டிய நீ, எனக்குத் தோழி. இனி நாம் நண்பர்கள். இந்த நட்பு விலகாது. நானும் விலக மாட்டேன். நீயும் விலகாதே. இருவரும் ஒன்றாகச் செய்ய வேண்டிய கடமைகளை ஒரே விதமாய் நிறைவேற்றுவோம். வாழ்க்கையில் எல்லாவற்றிலும் ஒன்றுபட்ட கருத்துள்ளவர்களாய் இருப்போம். கல்யாண இரைச்சலில் காணாமல் போகும் ஒப்பந்த உறுதிகள்! இனி நாம் நண்பர்கள் என்று நெருப்பை வைத்து செய்த சத்தியங்கள் எங்கே பறந்து போகின்றன?


  குடி, அடி, உதை, துரோகம், வரதட்சணைக் கொடுமை இவற்றால் நிகழும் விவாகரத்துகள் மிகக் குறைவாம், வக்கீல் சொல்கிறார். எந்த எந்தக் காரணங்களாலோ விரிசல் காணும் உறவுகளை இணைக்க வேண்டிய இரு தரப்புப் பெற்றோரும் ஊதி ஊதிப் பெரிதாக்கும் வெறுப்பு என்னும் நெருப்பு! பாதிக்கப்படும் பெண்களுக்காக இருக்கும் சட்டங்களையும் மகளிர் காவல் நிலையங்களையும் தனக்குப் பிடிக்காத மாமனார், மாமியார், நாத்தனாரை தண்டிக்க உபயோகிக்கும் பெண்கள், இன்னும் பெண்ணைத் தன் அடிமையாக நினைக்கும் ஆண்கள் இப்படி எத்தனை காரணங்கள்?


  இந்த உறவை எப்படியும் நிலைக்க வைக்க வேண்டும் என்னும் உறுதி, வாயிலிருந்து வார்த்தைகள் விழுந்து விட்டால் திரும்ப அள்ள முடியாது என்னும் விவேகம், எந்தப் பிரச்னை வந்தாலும் மம்மீ என்று தன் அம்மாவிடம் ஓடாது தானே சமாளிக்கும் வைராக்கியம், கொஞ்சம் விட்டுக் கொடுப்பது கேவலமல்ல என்னும் எளிமை இவை இருந்தால் போதும். உங்கள் நாடு எப்படி இன்னும் ஒன்றுபட்டு இருக்கிறது? என்று வெளிநாட்டார் சிலர் நம்மைப் பார்த்து மூக்கில் விரல் வைக்கிறார்கள். மதச் சண்டைகள், தீவிரவாதம், அரசியல் சுரண்டல், ஊழல், லஞ்சம், வறுமை, வன்முறை அப்பப்பா என்பவர்களுக்கு நம் பதில்: எங்கள் சமூகம் இன்னும் எத்தனையோ மாறவேண்டும். ஆனால், எம் குடும்பங்களின் பலத்தில்தான் எங்கள் தேசம் நிற்கிறது என்கிறோம் நாம். அந்தப் பெருமை குலையாமல் பாதுகாக்க இன்னும் கொஞ்சம் சகிப்புத்தன்மை ப்ளீஸ்


  (நன்றி : பாரதி பாஸ்கர் | தினகரன்)


  Similar Threads:

  Sponsored Links

 2. #2
  sumitra's Avatar
  sumitra is offline Registered User
  Blogger
  Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Jul 2012
  Location
  mysore
  Posts
  23,699
  Blog Entries
  18

  Re: ஆயிரங்காலத்து பயிர்...

  Hi vaishnavi, wonderful ! My eyes have been filled with tears while reading about the love and affection between those elderly couple in the hospital!Thank you very much for posting a thought provoking write up !

  vaishnnavi likes this.

 3. #3
  jv_66's Avatar
  jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
  Real Name
  Jayanthy
  Gender
  Female
  Join Date
  Dec 2011
  Location
  Bangalore
  Posts
  31,985

  Re: ஆயிரங்காலத்து பயிர்...

  அருமையான பகிர்வு வைஷ்ணவி .

  sumitra and vaishnnavi like this.
  Jayanthy

 4. #4
  sumathisrini's Avatar
  sumathisrini is offline Super Moderator Silver Ruler's of Penmai
  Real Name
  Sumathi
  Gender
  Female
  Join Date
  Jun 2011
  Location
  Hosur
  Posts
  33,546

  Re: Strongest bond - ஆயிரங்காலத்து பயிர்...

  ஆழ்ந்து படித்தேன்... பாரதி பாஸ்கரின் ஒவ்வொரு வரிகளும் அருமை, உண்மை.

  sumitra and vaishnnavi like this.

 5. #5
  Parasakthi's Avatar
  Parasakthi is offline Super Moderator Ruler's of Penmai
  Real Name
  Parasakthi KS
  Gender
  Female
  Join Date
  May 2010
  Location
  Coimbatore
  Posts
  21,954
  Blog Entries
  94

  Re: Strongest bond - ஆயிரங்காலத்து பயிர்...

  அருமையான கட்டுரை.

  sumitra and vaishnnavi like this.

 6. #6
  gkarti's Avatar
  gkarti is online now Super Moderator Silver Ruler's of Penmai
  Real Name
  Karthiga
  Gender
  Female
  Join Date
  Sep 2012
  Location
  Madurai
  Posts
  49,104

  Re: Strongest bond - ஆயிரங்காலத்து பயிர்...

  Super Like!!!

  sumitra and vaishnnavi like this.

loading...

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •  
Like It?
Share It!Follow Penmai on Twitter