Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree16Likes

கல்யாணப்பரிசு - Wedding Gift


Discussions on "கல்யாணப்பரிசு - Wedding Gift" in "Marriage" forum.


  1. #1
    jayakalaiselvi's Avatar
    jayakalaiselvi is offline Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Aug 2014
    Location
    India
    Posts
    8,384

    கல்யாணப்பரிசு - Wedding Gift


    திருமண அழைப்பிதழை பார்த்ததும் தம்பதிகளுக்கு என்ன பரிசு தரலாம் என்று யோசிப்பதுதான் வழக்கம். ஆனால் ஒருவர் தன் திருமணத்திற்கு வருபவர்களுக்கு, என்ன பரிசு தரலாம்? என்று யோசித்தார்.
    திருமண ஏற்பாடுகளும் அதைப் பற்றிய இனிய நினைவுகளுமே வருபவர்களுக்கு பரிசாக இருக்க வேண்டும் என்று முடிவு செய்து திருமண ஏற்பாட்டில் நிறைய புதுமைகள் செய்திருந்தார்.மிக நெருக்கமானவர்கள் தவிர பொதுவாக திருமணத்திற்கு வரும் அனைவரும் ஏதோ ஒரு அவசரத்தில்தான் வருகை தருகிறார்கள். அப்படி வருபவர்கள் விரைவாக சாப்பிட்டு விட்டு விரைவாக பரிசுகளை தந்துவிட்டு சென்று விடுவார்கள். அப்பாடா அட்டெண்ட் பண்ணி யாச்சு என்று கிளம்புகிற எண்ணத்திற்கு பதில் இன்னும் கொஞ்ச நேரம் இருந்து விட்டு போகலாம் என்று எண்ண வைக்க வேண்டும் என்பதற்காக ஒரு சில ஏற்பாடுகள் செய்திருந்தார்.திருமணத்திற்கு வருபவர்கள் உள்ளே வரும் போதே உற்சாகமாகவும் மகிழ்ச்சியாகவும் வர வேண்டும் என்பதற்காக, செக் யுவர் லக் என்ற பெயரில் மண்டப நுழைவாயிலில் ஒரு அதிர்ஷ்டப் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆங்கில எழுத்துக்கள் ஒரு டப்பாவில் வைக்கப்பட்டிருக்கும். திருமணத்திற்கு வருபவர்கள் அவர்கள் பெயரில் உள்ள எழுத்துக்களில் ஏதேனும் ஓர் எழுத்தினை எடுத்தால் ஒரு பரிசு, முதல் எழுத்தினை சரியாக எடுத்தால் இரண்டு பரிசு.எப்படியும் குடும்பத்தில் ஒருவருக்கு பரிசு கிடைத்துவிடும் என்பதால் எல்லோரும் குதுகலத்தோடு திருமண மண்டபத்திற்குள் வந்தார்கள்.மண்டபத்திற்குள் அவர்கள் பெயர் சொல்லி மைக்கில் வரவேற்பு அறிவிக்கப்படும். எல்லோரும் ஆச்சரியத்தோடு மகிழ்ச்சியடைவார்கள்.திருமண நாளன்று தம்பதிகளை வாழ்த்தவோ அல்லது அதிக நேரம் பேசவோ நேரமிருக்காது அப்படியே கிடைத்தாலும் போட்டோக்காரரும், வீடியோகிராபரும், சார் இங்க கவனிங்க என்று நம்மை கேமரா பக்கம் திருப்பி விடுவார்கள். பேச முடியாது என்பதால் திருமண அரங்கம் முழுவதும் சார்ட் ஒட்டி, உங்களின் வருகையை வாழ்த்துக்களால் பதிவு செய்யுங்கள் என்ற பேனர் தொங்க விடப் பட்டிருந்தது.திருமணத்திற்கு பலரையும் அழைப்பது அவசரம் அவசரமாக பரிசுகளை தந்துவிட்டு அவசர அவசரமாக செல்வதற்காக அல்ல. பரிசுகள் வெற்றிடத்தினை வேண்டுமானால் நிரப்பலாம். வாழ்த்துக்களே மனதினை நிரப்பும்.இந்த ஏற்பாட்டால் எல்லோரும் தங்களின் வருகையும் வாழ்த்தையும் நிதானமாக பதிவு செய்தார்கள். (பிறகு தம்பதிகளாக அதைப் படிப்பதே சுவாரஸ்யமாக இருக்கும்.)விழாவில் புதுமை ஏற்பாடுகளில் தேர்தல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. வாக்குச்சாவடி போல ஏற்படுத்தப்பட்டிருந்த இடத்தில் வரிசையில் நின்று எல்லோரும் வாக்களித்தார்கள். அதற்கு ஒப்புதல் சீட்டு வழங்கப்பட்டது.உங்கள் மனங்கவர்ந்தது- வித்தியாசமான வரவேற்புஅன்போடு பரிமாறப்பட்ட அறுசுவை உணவுபுத்துணர்ச்சி தந்த புதுமை ஏற்பாடுகள்(வாக்களிப்பதற்கு பெறப்பட்ட முகவரிகளின் மூலம் அனைவருக்கும் நன்றிக் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டது.)தாம்பூலப் பையில் அனைவருக்கும், ஆண்கள் செவ்வாய் பெண்கள் வெள்ளி என்கிற கணவன் மனைவி உறவு பற்றிய புரிதலை ஏற்படுத்தும் புத்தகமும் பரிசளிக்கப்பட்டது.இதையெல்லாம் படிக்கும்போது உங்களுக்கு ஆசை வந்தால் உங்கள் திருமணத்திலும் இது போன்று ஏதாவது செய்யுங்கள். நீங்கள் திருமணமானவர் என்றால் உங்கள் திருமண நாளை இப்படி கொண்டாடுங்கள். அதனால் மணநாளில் மகிழ்ச்சி மீண்டும் ஏற்படும்.மகிழ்வான நாட்களை நினைத்திடும்போது திருமணநாள் முதலிடம் பெறவேண்டும் இல்லையா?பரிசுகளால் அல்ல; வாழ்த்துக்களால் நிரம்பட்டும் உங்கள் இல்லம். வாழ்த்துக்களே திருமணத்திற்கான உண்மையான பரிசு.

    Similar Threads:

    Sponsored Links
    Attached Thumbnails Attached Thumbnails கல்யாணப்பரிசு - Wedding Gift-image.jpg  
    காதலை பற்றி அக்கறை பட்டதே இல்லை
    உன் அக்கறை காதலை மட்டுமே சொல்கிறது......

  2. #2
    shansun70's Avatar
    shansun70 is offline Minister's of Penmai
    Real Name
    M ShanmugaSundaram
    Gender
    Male
    Join Date
    Mar 2014
    Location
    Hosur
    Posts
    2,651

    re: கல்யாணப்பரிசு - Wedding Gift

    Thanks.........

    jayakalaiselvi likes this.

  3. #3
    kanihema's Avatar
    kanihema is offline Penman of Penmai
    Blogger
    Minister's of Penmai
    Real Name
    K.HEMASARANYA
    Gender
    Female
    Join Date
    Dec 2012
    Location
    Bangalore
    Posts
    4,947

    re: கல்யாணப்பரிசு - Wedding Gift

    thanks for sharing ..................

    jayakalaiselvi likes this.

  4. #4
    shrimathivenkat's Avatar
    shrimathivenkat is offline Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    chennai
    Posts
    8,456

    re: கல்யாணப்பரிசு - Wedding Gift

    ithu romba nalla iruke.

    jayakalaiselvi likes this.

  5. #5
    jayakalaiselvi's Avatar
    jayakalaiselvi is offline Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Aug 2014
    Location
    India
    Posts
    8,384

    re: கல்யாணப்பரிசு - Wedding Gift

    Quote Originally Posted by shansun70 View Post
    Thanks.........
    Welcome.....

    காதலை பற்றி அக்கறை பட்டதே இல்லை
    உன் அக்கறை காதலை மட்டுமே சொல்கிறது......

  6. #6
    jayakalaiselvi's Avatar
    jayakalaiselvi is offline Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Aug 2014
    Location
    India
    Posts
    8,384

    re: கல்யாணப்பரிசு - Wedding Gift

    Quote Originally Posted by kanihema View Post
    thanks for sharing ..................
    Always my pleasure sis......

    காதலை பற்றி அக்கறை பட்டதே இல்லை
    உன் அக்கறை காதலை மட்டுமே சொல்கிறது......

  7. #7
    jayakalaiselvi's Avatar
    jayakalaiselvi is offline Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Aug 2014
    Location
    India
    Posts
    8,384

    re: கல்யாணப்பரிசு - Wedding Gift

    Quote Originally Posted by shrimathivenkat View Post
    ithu romba nalla iruke.
    Thank u sis.....

    shrimathivenkat likes this.
    காதலை பற்றி அக்கறை பட்டதே இல்லை
    உன் அக்கறை காதலை மட்டுமே சொல்கிறது......

  8. #8
    luxmeena is offline Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2010
    Location
    US
    Posts
    260

    re: கல்யாணப்பரிசு - Wedding Gift

    very good idea. Thanks

    jayakalaiselvi likes this.

  9. #9
    jayakalaiselvi's Avatar
    jayakalaiselvi is offline Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Aug 2014
    Location
    India
    Posts
    8,384

    re: கல்யாணப்பரிசு - Wedding Gift

    Quote Originally Posted by luxmeena View Post
    very good idea. Thanks
    Most welcome sis............"

    காதலை பற்றி அக்கறை பட்டதே இல்லை
    உன் அக்கறை காதலை மட்டுமே சொல்கிறது......

  10. #10
    warmmelody's Avatar
    warmmelody is offline Newbie
    Real Name
    Dr. Sunder
    Gender
    Male
    Join Date
    Dec 2014
    Location
    Africa
    Posts
    9

    Re: கல்யாணப்பரிசு - Wedding Gift

    Nice idea others can follow

    jayakalaiselvi likes this.

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter