Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree23Likes
  • 7 Post By gloria
  • 7 Post By thenuraj
  • 4 Post By gloria
  • 3 Post By jv_66
  • 2 Post By Nilavizhi

Facts About Couples Who Live Together - இளம் தலைமுறையை கெடுக்கும் லிவ் இன


Discussions on "Facts About Couples Who Live Together - இளம் தலைமுறையை கெடுக்கும் லிவ் இன" in "Marriage" forum.


  1. #1
    gloria's Avatar
    gloria is offline Penman of Penmai
    Blogger
    Yuva's of Penmai
    Real Name
    GLORIACATCHI
    Gender
    Female
    Join Date
    Dec 2012
    Location
    france
    Posts
    7,949

    Facts About Couples Who Live Together - இளம் தலைமுறையை கெடுக்கும் லிவ் இன

    திருமணம் கடினமானது. செலவுமிக்கது. சிக்கலானது' என்ற கருத்து இளம் பெண்கள் மத்தியில் நிலவி வருகிறது. அதனால் திருமண சிந்தனையை
    தூக்கி தூரவைத்துவிட்டு, படிப்பது, வேலை பார்ப்பது, சம்பாதிப்பது என்ற எண்ணத்தோடு இளம் பெண்கள், வாழ்க்கை பின்னால் ஓடிக்கொண்டிருக்கிறார்கள்.

    கொஞ்சம் களைத்து திரும்பிப் பார்க்கும்போது அவர்கள் வயது 30-ஐ தொட்டுவிடுகிறது. அதன் பின்பு, இந்த வயதுக்கு மேல் நமக்கு சரியான வரன் அமையுமா? அமைந்தாலும் அந்த மணவாழ்க்கை நன்றாக ஓடுமா? என்ற எதிர்மறை எண்ணங்கள் தலை தூக்குகின்றன.

    அப்போதே இன்னொரு புறத்தில், ஏன் ஊரைக்கூட்டி திருமணம் செய்துகொண்டு வாழ்க்கையை தொடங்கவேண்டும்? திருமணம் செய்யாமலே ஒருவரோடு சேர்ந்து வாழ்ந்துவிடலாமே! என்ற சிந்தனை ஓட்டம் ஆரம்பிக்கிறது. திருமணம் செய்யாமலே ஆணும், பெண்ணும் சேர்ந்து வாழும் விஷயம், இப்போது அடிக்கடி நீதிமன்றங்களின் கதவுகளையும் தட்டுகிறது.

    அந்த அளவுக்கு அது சமூகத்தில் வளர்ந்துவிட்டது என்பதுதான் அதன் அர்த்தம். இந்த லிவ் இன் டுகெதர் வாழ்க்கை பற்றி இருவேறு கருத்துக்கள் உண்டு. ஒருசிலர் கலாசார கேடு என்று எதிர்க்க, இன்றைய சூழலில் இதைவிட்டால் வேறு வழியில்லை என்றும் சிலர் ஆதரவு கொடுக்கிறார்கள். மற்றவர்களுக்கு தெரிந்தால் அது அசிங்கம் என்று சொல்பவர்களும் உண்டு.

    சிலர் அந்த பாதையில் போய்க்கொண்டிருக்கிறார்கள். அதனால் நாமும் போனால் அது தவறில்லை என்றும் சிலர் கருதுகிறார்கள். அன்பு என்ற அற்புதமான வட்டத்திற்குள் அடங்குவது தான் இல்லறம். அதற்கு அடிப்படை நம்பிக்கை. நம்பிக்கைக்கு சமூக பிணைப்புகளும், சில சமய நடைமுறைகளும் அவசியம்.

    ஆனால் கல்யாணம் செய்துகொள்ளாமலே நம்பிக்கைக்கும், அன்பிற்கும் முரணாக, ஏதோ இன்னொரு தேவைக்காக சேருவதுபோல் இருக்கிறது. இவர், இன்னாருடைய மனைவி என்பது ஒரு சமூக அந்தஸ்து. அதுபோல் இவர், இன்னாருடைய கணவர் என்பதும் சமூக அந்தஸ்தே. திருமணத்திற்கு முன்பு ஒருவரோடு வாழ்க்கை.

    திருமணத்திற்கு பின்பு இன்னொருவரோடு வாழ்க்கை. இப்படி இரட்டை வாழ்க்கையை தேர்ந்தெடுப்பவர்கள், இரண்டாவது வாழ்க்கையை நடத்த தடுமாறுகிறார்கள். அப்படிப்பட்டவர்கள் ஒரு நிலையற்ற தன்மையோடுதான், போகிறவரை போகட்டும் என்று மணவாழ்க்கைக்குள் அடி யெடுத்துவைக்கிறார்கள்.

    ஆனால் கொஞ்ச காலத்திலே, புதிய வாழ்க்கை வாழும்போது, பழைய அவரே பரவாயில்லை. இவர் அவரைப் போல் இல்லை என்ற எண்ணம் வந்துவிட்டால், வாழ்க்கை வண்டி ஓடாது. நின்றுவிடும். அது விரைவாகவே விவாகரத்து என்ற கோட்டை தொட்டு விடுகிறது. இந்திய திருமணங்களுக்கு தனிமரியாதை உண்டு.

    திருமணத்திற்கு பின்பு ஏதாவது அசம்பாவிதம் நடந்து விட்டால், அதன் பிறகு மறுமணம் செய்விக்க பெற்றோர்கள் முன்நிற்பார்கள். ஆனால் இதுபோன்ற 'லிவ் இன் டுகெதர்' வாழ்க்கையை ஏற்பதில்லை. திருமணம் என்பது பெண்ணின் பாதுகாப்பிற்காக அமைக்கப்பட்டது. லிவ் இன் டு கெதர் வாழ்க்கை பாதுகாப்பை அல்ல, பாதிப்பைதான் உருவாக்குகிறது!

    Similar Threads:

    Sponsored Links

  2. #2
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

    Re: இளம் தலைமுறையை கெடுக்கும் லிவ் இன் டு கெ&a

    இந்த காலகட்டத்திற்கு தேவையான பதிவு glo...
    பண்பாடு... கலாச்சாரம் என வாய் கிழிய பேசிய நம் மக்கள் எங்கே போனார்கள் என்றே தெரியாத நிலை தான் இன்றுள்ளது...!

    இதற்கு முழு காரணம் IT மக்களே... அவர்களால் தான் இவ்வளவு சீர்கேடும் என்று சொல்வதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது... எல்லா இடங்களிலும் இது நடக்கிறது... மற்ற இடங்களில் மறைமுகமாக நடப்பது.... இந்த துறையில் மட்டும் வெளிப்படையாக தெரிகிறது...

    இது எல்லாம் எங்கே போய் முடியுமோ என்ற பயமும் உள்ளது... "திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது" என்று சொல்வதை போல.... தவறு செய்பவர்கள் மனது வைத்தால் மட்டுமே இதெல்லாம் மாறும்...!

    எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்பதல்ல வாழ்க்கை... இப்படித்தான் வாழணும்னு நமக்குள்ளே ஒரு கட்டுப்பாடு இருக்கணும்... அது இல்லேன்னா இப்படித்தான்...!


  3. #3
    gloria's Avatar
    gloria is offline Penman of Penmai
    Blogger
    Yuva's of Penmai
    Real Name
    GLORIACATCHI
    Gender
    Female
    Join Date
    Dec 2012
    Location
    france
    Posts
    7,949

    Re: இளம் தலைமுறையை கெடுக்கும் லிவ் இன் டு கெ&a

    Quote Originally Posted by thenuraj View Post
    இந்த காலகட்டத்திற்கு தேவையான பதிவு glo...
    பண்பாடு... கலாச்சாரம் என வாய் கிழிய பேசிய நம் மக்கள் எங்கே போனார்கள் என்றே தெரியாத நிலை தான் இன்றுள்ளது...!

    இதற்கு முழு காரணம் IT மக்களே... அவர்களால் தான் இவ்வளவு சீர்கேடும் என்று சொல்வதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது... எல்லா இடங்களிலும் இது நடக்கிறது... மற்ற இடங்களில் மறைமுகமாக நடப்பது.... இந்த துறையில் மட்டும் வெளிப்படையாக தெரிகிறது...

    இது எல்லாம் எங்கே போய் முடியுமோ என்ற பயமும் உள்ளது... "திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது" என்று சொல்வதை போல.... தவறு செய்பவர்கள் மனது வைத்தால் மட்டுமே இதெல்லாம் மாறும்...!

    எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்பதல்ல வாழ்க்கை... இப்படித்தான் வாழணும்னு நமக்குள்ளே ஒரு கட்டுப்பாடு இருக்கணும்... அது இல்லேன்னா இப்படித்தான்...!
    நிஜம் தான் ரேணு கட்டுப்பாடான வாழ்க்கை வாழுறவங்கள முட்டாள் என்று சொல்லி கிண்டல் பண்ணுற நிலைமைல இருக்கு இன்னைய காலம்...

    அந்த நேர நிம்மதி தேடுறாங்க... நிரந்தர தீர்வு தேட மாட்டேன்கிறாங்க... விட்டுகொடுக்க பயந்தே நிறைய பேர் திருமணத்தை தவிர்த்து இது போல வாழ்க்கையை அமைத்து கொண்ண்டு பின்னாடி கஷ்ட படுறாங்க...


  4. #4
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Facts About Couples Who Live Together - இளம் தலைமுறையை கெடுக்கும் லிவ் இன

    தற்காலத்திற்கு மிகவும் தேவையான ஒரு பதிவு .

    thenuraj, gloria and Nilavizhi like this.
    Jayanthy





  5. #5
    Nilavizhi's Avatar
    Nilavizhi is offline Newbie
    Gender
    Female
    Join Date
    Jan 2015
    Location
    Bangalore
    Posts
    20

    Re: Facts About Couples Who Live Together - இளம் தலைமுறையை கெடுக்கும் லிவ் இன

    மிக அருமையான பதிவு.....

    thenuraj and gloria like this.

  6. #6
    gloria's Avatar
    gloria is offline Penman of Penmai
    Blogger
    Yuva's of Penmai
    Real Name
    GLORIACATCHI
    Gender
    Female
    Join Date
    Dec 2012
    Location
    france
    Posts
    7,949

    Re: Facts About Couples Who Live Together - இளம் தலைமுறையை கெடுக்கும் லிவ் இ&#

    Quote Originally Posted by jv_66 View Post
    தற்காலத்திற்கு மிகவும் தேவையான ஒரு பதிவு .
    தேங்க்ஸ் அக்கா...


  7. #7
    gloria's Avatar
    gloria is offline Penman of Penmai
    Blogger
    Yuva's of Penmai
    Real Name
    GLORIACATCHI
    Gender
    Female
    Join Date
    Dec 2012
    Location
    france
    Posts
    7,949

    Re: Facts About Couples Who Live Together - இளம் தலைமுறையை கெடுக்கும் லிவ் இ&#

    Quote Originally Posted by Nilavizhi View Post
    மிக அருமையான பதிவு.....
    தேங்க்ஸ் நிலா...


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter