Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree32Likes

For a Successful married life...-இரு மனம் இணைந்தது தான் திருமணம்


Discussions on "For a Successful married life...-இரு மனம் இணைந்தது தான் திருமணம்" in "Married Life" forum.


  1. #11
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    துணை மட்டுமல்ல. இணையும்கூட

    துணை மட்டுமல்ல... இணையும்கூட!


    உறுதி கொண்ட நெஞ்சினாய்

    `நான் நீ நாம் வாழவே உறவே...
    நீ நான் நாம் தோன்றினோம் உயிரே...’
    இந்தப் பாடல் வரிகளை நீங்கள் ரசித்திருப்பீர்கள் எனில், அதையே உங்கள் வாழ்க்கைக்கான,
    உறவுக்கான மந்திரமாகவும் கொள்ளுங்கள்!

    காதல், அன்பு, அக்கறையுடன் கூடிய முழுமையான வாழ்க்கையை நிறைவாக வாழ்கிற உரிமை கணவன், மனைவி இருவருக்குமே உண்டு என்பதைப் புரிந்துகொண்ட பிறகே திருமண வாழ்வில் அடியெடுத்து வையுங்கள். உங்களவர் உங்களுக்கு சிறந்த துணை மட்டுமல்ல... இணையும்கூட என்பதை மறந்து விடாதீர்கள். தன்னம்பிக்கை குறைவான சில பெண்கள், கணவர் தன்னைப் பற்றி முன் வைக்கிற புகார்களையும் விமர்சனங்களையும் மிக லேசாகவே எடுத்துக் கொள்கிறார்கள். கணவரின் அந்த குணமானது அவரது வளர்ப்பின் பிரதிபலிப்பு... அதனால், அவர் அப்படி நடந்து கொள்வதில் தவறில்லை என்று நினைத்துக் கொள்ளலாம்.

    இன்னும் சிலருக்கோ கணவரை நம்பி, அவரை அண்டி வாழ வேண்டிய கட்டாயம் இருக்கும். படிப்போ, பொருளாதாரப் பின்னணியோ இருக்காது. கணவரின் ஏச்சு பேச்சுகளை எதிர்த்தாலோ, விமர்சனங்களைப் பற்றி விவாதித்தாலோ தான் நடுத்தெருவுக்கு வந்து விடுவோமோ என்கிற பயம் இருக்கும். அந்தப் பயமே அவர்களுக்குள் பயங்கரமான மிரட்சியை ஏற்படுத்தியிருக்கும். கணவரின் அத்துமீறல்களை அதனாலேயே சகித்துக் கொண்டிருப்பார்கள்.

    கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டு, கணவரிடம் முகத்துக்கு நேராக கேள்வி கேட்கத் துணிவின்றி, சின்னச் சின்ன புலம்பல்களாக எதையேனும் முணுமுணுத்துக் கொண்டும் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்துவார்கள் சிலர். கணவரிடம் எதையேனும் கேட்கப் போய், அது மிகப் பெரிய வாக்குவாதத்தில் போய் முடிந்து விடுமோ என்று அதைத் தவிர்ப்பார்கள். விஷயம் பெரிதாகாமல் அதே நேரம் பிரச்னை இன்றி தீர ஒரு சிம்பிளான டெக்னிக் இருப்பதைப் பல பெண்களும் உணர்வதில்லை.



    எந்தப் பிரச்னையானாலும் முகத்துக்கு நேராகப் பேசுவதே சிறந்தது. அப்படிப் பேசும் போது ஆக்ேராஷமாக ஆரம்பிக்கக்கூடாது. அழக்கூடாது. `உங்களால எனக்கு எவ்ளோ கஷ்டம் தெரியுமா? உங்களாலதான் இப்படி நடந்தது’ என்றெல்லாம் சொல்வதற்குப் பதில், `இந்த விஷயத்துல நான் எவ்வளவு காயப்பட்டேன் தெரியுமா?’, `நான் எவ்வளவு பாதிக்கப்பட்டேன் தெரியுமா?’ என ‘நான்’ என்கிற வார்த்தையை முன்னிலைப்படுத்தியே பேச வேண்டும். அப்படி பேசியதும் கணவர் தரப்பிலிருந்து பதிலோ, விளக்கமோ வரும். அப்போது உடனே அவரிடம் மன்னிப்பு கோரி கண்ணீர் வடிப்பதும் கூடாது. கணவர் சொல்கிற விளக்கத்தை கவனமாக கேட்டுக் கொள்ள வேண்டும். அதைக் கொஞ்சமும் அலட்சியப்படுத்தவே கூடாது.

    நீங்கள் சொன்ன விஷயத்தில் உறுதியாக நிற்க வேண்டும். கணவரின் பதிலைக் கேட்டு, விலகிப் போக வேண்டாம். `நீங்கள் சொல்வது எனக்குப் புரிகிறது. ஆனாலும், என்னுடைய நிலைப்பாடு இதுதான்’ என்பதை உறுதிபட சொல்லுங்கள். வேலைக்குப் போகாத பெண்களுக்கு இப்படி தனது நிலைப்பாட்டில் உறுதியாக நிற்பது சாத்தியமில்லை என நினைக்கலாம். திருமணமான புதிதிலேயே அவர்கள் இப்படிப் பழகி விட்டால், பின்னாளில் வேலைக்குப் போகாத, பொருளாதார ரீதியாக கணவரைச் சார்ந்திருக்கிற குற்ற உணர்வு அவர்களைத் தடுக்காது.

    தனது நிலைப்பாட்டில் நிற்பது என்பது அளவுக்கு அதிக மன உறுதி தேவைப்படுகிற விஷயமும்கூட. எல்லா பெண்களுக்கும் அது சாத்தியமாவதில்லை. அப்படி நிற்காத பட்சத்தில் பிற்காலத்தில் அவர்களது வார்த்தைகளுக்கு மதிப்பிருக்காது. உதாரணத்துக்கு கணவர் பயங்கரமான குடிகாரராக இருப்பார். தினமும் குடித்துவிட்டு வந்து மனைவியை அடிப்பது, குழந்தைகளிடம் அநாகரிகமாக நடந்து கொள்வது என்றிருப்பார்.

    அது சகிக்காத மனைவியோ, `நாளைக்கு குடிச்சிட்டு வந்தீங்கன்னா, நான் வீட்டை விட்டு வெளியே போயிடுவேன்...’ என மிரட்டுவார். ஆனால், போக மாட்டார். அடுத்தடுத்த நாட்களும் கணவரின் அதே அத்துமீறல்களை தனது அதே பாணி மிரட்டல் வார்த்தைகளுடன் சகித்துக் கொள்ளப் பழகுவார். இது மிகவும் தவறு. மனைவியின் கோபமோ, தனது செயல் அவருக்குத் தருகிற வருத்தமோ கணவருக்குப் புரியாமலே போய் விடும்.

    சொல்வதைச் செய்து காட்டினால்தான் அந்தப் பிரச்னையின் வீரியம் விளங்கும். இது போன்ற தருணங்களில் கணவர் தன் செயல்களை நியாயப்படுத்தவோ, மறுக்கவோ, மனைவியைத் திட்டவோ முயற்சிக்கலாம். அவை எதையும் மனைவி பொருட்படுத்தக்கூடாது. அவற்றை எல்லாம் தாண்டி உறுதியாக நிற்க வேண்டும். அப்போதுதான் கணவருக்கு மனைவி மீது
    மரியாதை வரும். இல்லாவிட்டால் மனைவியின் செயல்கள் எதுவும் சீரியஸாகவே தெரியாமல் போகக்கூடும்.

    ‘சரி... இப்படியெல்லாம் கறாராக நடந்து கொண்டால் கணவருக்கு என் மீது காதல் காணாமல் போய் விடாதா?’ என்கிற கேள்வியும் சில பெண்களுக்கு இருக்கும். கண்டிப்பாக காணாமல் போகாது. நீங்கள் நீங்களாகவே இருக்கவும் அதே நேரம் காதலைத் தொலைக்காமல் இருக்கவும் இந்த அணுகுமுறை நிச்சயம் உங்களுக்கு உதவும்.

    பெண்ணிடம், குறிப்பாக மனைவியிடம் தன் பலவீனங்களைக் காட்டக் கூடாது என்றே சொல்லி வளர்க்கப்படுபவர்கள் ஆண்கள். அப்படி தன்னை பலவீனமானவராகக் காட்டிவிட்டால், மனைவியின் ஆதிக்கம் அதிகமாகி விடுமோ என்று அவர்களுக்கே தம் நடத்தையில் ஒரு குழப்பம் இருக்கும். அதனாலேயே மனைவியை தனக்கு இணையாக நடத்த மறுப்பார்கள். இன்னும் ஒரு படி மேலே போய், மனைவியை தனக்கு இணையாக நடத்தினால், தான் ஆண்மையற்றவனாக அடையாளப்படுத்தப் படுவோமோ எனப் பயப்படுகிற ஆண்கள் ஏராளம் பேர்.

    பெண்ணை அடக்கி ஆள்வதில்தான் ஆண்மையும் கம்பீரமும் மறைந்திருப்பதாக வளர்ப்பும் சினிமா சித்தரிப்புகளும் அவர்களுக்கு போதித்திருப்பதே காரணம். இதன் விளைவாக சில ஆண்கள், மனைவி தன்னை எதிர்த்துப் பேச ஆரம்பித்ததுமே, மனைவிக்கு ஏதோ மனநோய் இருப்பது போல தனக்குத் தாமே ஒரு பாதுகாப்புக் கவசத்தை மாட்டிக் கொள்வார்கள்.

    இன்னும் சிலர் மனைவியை மதிக்காமல் அவள் பேச்சை காதிலேயே போட்டுக் கொள்ளாமல் அமைதியாக அலட்சியம் செய்வார்கள். மாதக் கணக்கானாலும் மனைவியிடம் பேச விடாமல் அவர்களது ஈகோ தடுக்கும். மனைவியின் மீதான தனது நெருக்கத்தையோ நேசத்தையோ பகிரங்கமாக வெளிக்காட்டிக் கொள்ள மாட்டார்கள். ஆனால், மனைவியானவள், தனது நிலைப்பாட்டில் உறுதியாக நின்று `இதுதான் நான்’ என நிரூபித்து விட்டாலே, கணவர்கள் காலப் போக்கில் மாறி விடுவார்கள்.

    மனைவி மனது வைத்தால், ஆண் தன் பலவீனங்களை வெளிப்படுத்துவதில் தவறில்லை என்பதை உணர்த்தலாம். என்னதான் கணவன்-மனைவி என்றாலும் இருவரின் வாழ்க்கையும் வேறு வேறு என்றும், இருவரும் அவர்களது வாழ்க்கையை நிறைவாக வாழ முடியும் என்றும் நிரூபிக்கலாம். இதற்கெல்லாம் தேவை இருவருக்கும் பொதுவான ஒரு நம்பிக்கை... அபரிமிதமான அன்பு... அதைத் தொந்தரவு செய்யாத அவரவர் அடையாளங்கள்!

    "பெண்ணை அடக்கி ஆள்வதில்தான் ஆண்மையும் கம்பீரமும் மறைந்து இருப்பதாக வளர்ப்பும் சினிமா சித்தரிப்புகளும் போதித்திருப்பதே பல பிரச்னைகளுக்குக் காரணம். "

    (வாழ்வோம்!)




    Sponsored Links
    Last edited by chan; 16th Sep 2015 at 08:15 PM.
    jv_66 likes this.

  2. #12
    RathideviDeva is offline Registered User
    Blogger
    Minister's of Penmai
    Real Name
    ரதி
    Gender
    Female
    Join Date
    Sep 2014
    Location
    California
    Posts
    4,092
    Blog Entries
    11

    Re: துணை மட்டுமல்ல. இணையும்கூட

    நிறைவாக வாழ தேவை இருவருக்கும் பொதுவான ஒரு நம்பிக்கை... அபரிமிதமான அன்பு... அதைத் தொந்தரவு செய்யாத அவரவர் அடையாளங்கள்!

    Nice article. TFS @chan.


  3. #13
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    மனைவியிடம் தினமும் நலம் விசாரியுங்கள்

    மனைவியிடம் தினமும் நலம் விசாரியுங்கள்

    இன்றைய நாட்களில் காதலித்து திருமணம் செய்து கொள்பவர்கள் மட்டுமில்லாது பெற்றோர் நிச்சயித்து நடைபெறும் திருமணங்களும் கூடவே போட்டி போட்டுக் கொண்டு விவாகரத்து கேட்டு நீதிமன்ற வாசல் ஏறுகின்றன. இதற்கு காரணம்? தாலிகட்டும் முன்பு இருந்த அந்த காதல், திருமணம் செய்த புதிதில் இருந்த அந்த ஒட்டுதல், கொஞ்சம் நாட்களிலேயே புரியாது பிரிந்துவிடுவது எதனால்? இந்த கேள்விகளிலேயே விடையும் இருக்கிறது.

    திருமணமான புதிதில் உங்களுக்குள் இருந்த புரிதலும், பிரியமும், விட்டுக்கொடுக்கும் மனப்பாங்கும், சிறிது நாட்களில் வெயிலில் வைத்தப் பனிக்கட்டியை போல உருகிவிடுகிறது. உங்கள் துணையோடு கொஞ்ச நேரம் எழில்மிகு மாலை நேரத்தில் கைக்கோர்த்து சிறிது தூரம் நடைப்பயணம் மேற்கொள்ளுங்கள். குறைந்தது பக்கத்தில் இருக்கும் பூங்கா அல்லது கோவில்களுக்கு கூட போய் வரலாம்.

    அந்த நடைப்பயணம் உங்கள் உறவை இணைக்கும் பாலமாய் இருக்கும். அன்பின் வெளிப்பாட்டை அதிகப்படுத்தும். பெண்களுக்கு மிகவும் விரும்புவது அவர்களது துணையோடு கைக்கோர்த்து நடப்பது. நீ எப்படி இருக்கிறாய், இன்றைய நாள் எப்படி இருந்தது… இந்த கேள்விகளை கேட்க ஒருநாளும் மறக்க வேண்டாம். நீங்கள் அவர்களின் மேல் அக்கறையாக இருக்கிறீர்கள் என அவர்கள் உணர்ந்தாலே போதும். உறவு வலிமையடைந்துவிடும்.

    தினமும் அவர்களை பற்றி நலம் விசாரிப்பது, என்ன செய்கிறாய் என கேட்பது என உங்கள் துணையைப் பற்றி நீங்கள் தெரிந்தாலும், தெரியாமல் இருந்தாலும் கேட்டு விசாரிப்பது அவசியம். இந்த கலந்துரையாடலே உங்களது உறவை வளப்படுத்திவிடும். இதுப்போல சின்ன சின்ன விஷயங்களை நீங்கள் பின் தொடர்ந்தாலே உங்கள் இல்லறம் நல்லறமாகிவிடும்…





    jv_66 likes this.

  4. #14
    gkarti's Avatar
    gkarti is online now Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Karthiga
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Madurai
    Posts
    49,091

    Re: மனைவியிடம் தினமும் நலம் விசாரியுங்கள்

    Nice Sharing Lakshmi


  5. #15
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Psychological reason for the collapse of family relationships - குடும்ப உறவுகள் சீர்குலைவதற்&#

    குடும்ப உறவுகள் சீர்குலைவதற்கு உளவியல் ரீதியான காரணங்கள்
    கணவன்-மனைவி இருவரில் ஒருவர் தாம்பத்திய வாழ்க்கையில் அதிகம் நாட்டம் உள்ளவராக இருந்து, மற்றொருவர் அந்த நாட்டத்துக்கு இணையான ஜோடியாக இல்லாமல் போகும்போதுதான் பிரச்சனைகள் பூதாகாரமாக எழுகின்றன.

    இன்றைய தலைமுறைக்கு ‘பணம்தான் வாழ்க்கை’ என்றாகிவிட்டது.

    பணத்தைத் தேடி ஒடிக்கொண்டே இருப்பதால், வீட்டுக்குள் ஒவ்வொருவரும் ஒரு தீவாக வாழ்கிறார்கள். இந்த வாழ்க்கை முறைதான், பிரச்சனைகளின் மூலகாரணம்.

    ஒரு ஆணின் மனநிலையும் பெண்ணின் மனநிலையும் முற்றிலும் வேறானவை. ‘என் மனைவிக்காகவும் குழந்தைகளுக்காகவும் தானே உழைக்கிறேன்’ என்று நேரம் காலம் பார்க்காமல் உழைப்பதும், சம்பாதிப்பதும்தான் கௌரவம் என ஆண் நினைக்கிறான்; அதுதான் சந்தோஷம் என நம்புகிறான்.

    ஆனால், ஒரு பெண், ஆணின் ‘உடல்தேவை’ சார்ந்த அருகாமையைவிட அவன் அன்பும், பாசமும்தான் பெரிது என்று நினைக்கிறாள். நிறைய குடும்பங்களில் பிரச்சனையே, ‘என் கணவர் என்கூட உட்கார்ந்து பேசுவதில்லை, எனக்காக நேரம் செலவிடுவதில்லை’ என்பது தான். அந்த குறைந்தபட்ச எதிர்பார்ப்பு தொடர்ந்து நிறைவேறாமல் போக, அந்த எதிர்பார்ப்பை யார் பூர்த்தி செய்கிறார்களோ அவர்களை நம்பி எல்லை தாண்டுகிறாள். சம்பாதிப்பதற்காக வெளிநாடு செல்கின்றவர்கள் – முடிந்தவரை என்று சொல்வதைவிட – கட்டாயமாக மனைவியையும் அழைத்துச்செல்வதே இக்காலாதில் பாதுகாப்பு.

    மனைவி என்பவள் வெறும் ஜடப்பொருள் அல்ல.

    அவளுக்கும் ஆசா பாசங்கள் உணர்வுகள் அனைத்தும் இருக்கவே செய்யும் என்பதை ஆண்கள் நினைவில் கொள்ள வேண்டும்.

    இல்லற வாழ்க்கை இனிக்க மனைவிக்கு என்ன தேவை என்பதை கணவன் தெரிந்து வைத்திருக்க வேண்டும். கணவனுக்கு என்ன தேவை என்பதி மனைவி புரிந்து வைத்திருக்க வேண்டும். கணவனுக்கும் மனைவிக்கும் ஏதோ ஒரு பிரச்சனையின் காரணமாக கருத்து வேறுபாடு வந்தால், ‘யார் சரி?’ ‘யார் தவறு’? என்ற போட்டி மனப்பான்மையில் சண்டையை நீட்டிக்கொண்டே இருக்காமல், யாராவது ஒருவர் உடனே முற்றுப்புள்ளி வைப்பது, வாழ்க்கையை இனிமையான தொடர்கதையாக்கும்!

    நம் சமூகத்தில், மனைவி தன்னை ‘ஸ்பெஷலாக’ கவனிக்க வேண்டும் என்று எல்லா ஆண்களும் எதிர்பார்க்கிறார்கள். குழந்தை, தாய் வீட்டுப் பிரச்சனைகள், அலுவலக வேலைகள் என்று மனைவி பிஸியாக இருந்துவிட்டு, கணவருக்கு ஸ்பெஷல் கவனிப்பு தராதபோது… கணவர் கண்ணியம் மீறுகிறார்.

    கணவன்-மனைவி இருவரில் ஒருவர் தாம்பத்திய வாழ்க்கையில் அதிகம் நாட்டம் உள்ளவராக இருந்து, மற்றொருவர் அந்த நாட்டத்துக்கு இணையான ஜோடியாக இல்லாமல் போகும்போதுதான் பிரச்சனைகள் பூதாகாரமாக எழுகின்றன.

    விரிசல்கள் ஆழமாகின்றன. அந்தரங்கத்துக்கும் அன்புடன் நேரத்தை ஒதுக்குவது காதலை வெல்லும் வழி. நம் குடும்ப அமைப்பில், கணவரின் குடும்பத்தில் உள்ள உறுப்பினர்களை புண்படுத்துவதை ஒரு கணவரால் தாங்கிக் கொள்ள இயலாது. குறிப்பாக, அவரின் அம்மாவை இன்சல்ட் செய்து விட்டால், அவர் மனரீதியாக மிகவும் பாதிப்படைகிறார். அது, இல்லற வாழ்க்கையில் வன்முறையாக எதிரொலிக்கும் என்பதை மனைவி புரிந்து கொள்ள வேண்டும். அதுபோல மனைவியின் குடும்பத்தாரை கணவன் குறை சொல்லும்போது அங்கு பூகம்பமே கூட வெடிக்கலாம்.

    jv_66 likes this.

  6. #16
    sumathisrini's Avatar
    sumathisrini is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Sumathi
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Hosur
    Posts
    33,537

    Re: Psychological reason for the collapse of family relationships - குடும்ப உறவுகள் சீர்குலைவதறĮ

    பயனுள்ள பதிவு லக்ஷ்மி, நன்றி.


  7. #17
    dhivyasathi's Avatar
    dhivyasathi is offline Commander's of Penmai
    Real Name
    Sathya Vivek
    Gender
    Female
    Join Date
    Apr 2011
    Location
    Singapore
    Posts
    1,021

    Re: மனைவியிடம் தினமும் நலம் விசாரியுங்கள்

    super... nice sharing.



    Regards,
    Dhivyasathi..

    "When you have come to realize that you miss me.....then
    i wont be MISSING U......"


  8. #18
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    எல்லாம் இனிதாக எதையும் பகிரலாம்

    எல்லாம் இனிதாக எதையும் பகிரலாம்


    `இவருடன்தான் வாழ முடியும் என்கிற நபரை மணக்காதீர்கள். இவர் இல்லாமல் வாழவே முடியாது என்பவரையே மணந்து கொள்ளுங்கள்!’ கணவன் - மனைவி உறவு என்பது அழகிய மலர்கள் பூத்துக் குலுங்கும் பூந்ேதாட்டம் போன்றது. இயல்பாகவே அப்படியொரு உறவு அமைக்கப் பெற்றவர்கள் அதிர்ஷ்டசாலிகள். பெரும்பாலும் அப்படி அமைவதில்லை என்பதுதான் நிஜம். ஆனால் , கணவன்-மனைவி இருவரும் முனைந்தால் திருமண வாழ்க்கையை அப்படியொரு அழகிய மலர் தோட்டமாக மாற்றிக் கொள்ள முடியும்! எப்படி?

    * திருமண உறவில் ஒருவரை ஒருவர் சார்ந்திருக்கிற தன்மை மிகவும் அடிப்படையானது. Interdependence எனப்படுகிற இந்த சார்புத் தன்மை இல்லாவிட்டாலும் ஆபத்து. ரொம்ப அதிகமானாலும் ஆபத்து. கணவன்-மனைவி இருவரும் சுதந்திரம் என்கிற பெயரில் தனக்குத் தோன்றியதை எல்லாம் செய்வது தவறானது. எதற்கெடுத்தாலும் இன்னொருவர் சம்மதமும் அனுமதியும் கிடைத்த பிறகே செய்வதும் தேவையற்றது. இருவரும் அவரவர் எல்லைகள் உணர்ந்து, தேவையான இடைவெளியை அனுமதித்து, அதே நேரம் சார்புத் தன்மையுடன் வாழ்வதே சிறந்த உறவுக்கு வழிவகுக்கும். இப்படி சார்ந்திருக்கிற விஷயத்தில் ஒருவர் மட்டும் துணையைச் சார்ந்தும் இன்னொருவர் அதை விரும்பாமலும் இருந்தாலும் பிரச்னைதான்.

    * அற்புதமான திருமண உறவுக்கு இருவரும் தனித்தனியே நிற்கக் கூடிய அளவுக்கு திறமையும் தகுதியும் கொண்டவர்களாக இருக்க வேண்டி யதும் அவசியம். துணையின் சொல் அல்லது செயல்களில் உடன்பாடில்லாதபோது இன்னொருவர் `நோ’ சொல்லத் தயங்கக்கூடாது. இருவருக்குமான உறவு மோசமான பாதையில் செல்வது தெரிந்து, அதை சரிப் படுத்த எடுத்த முயற்சிகள் தோற்றுப் போகும் போது அந்த உறவில் இருந்து வெளியேறவும் தயங்கக்கூடாது. பெரும்பாலும் வேலைக்குச் செல்லாமல் வீட்டில் இருக்கும் பெண்களுக்கு, அதாவது, பொருளாதார சுதந்திரம் இல்லாத பெண்கள் இப்படியொரு சிக்கலை சந்திப்பார்கள். கணவருக்கு வேறொரு உறவு இருப்பதை அறிந்தாலும் அது பற்றிக் கணவரிடம் கேள்விகள் கேட்கவோ, கண்டிக்கவோ முடியாத கையறு நிலையில் இருப்பார்கள்.

    * `படிச்சிருக்கோம்... கவுரவமான குடும்பப் பின்னணியிலேருந்து வந்திருக்கோம்... ஆனாலும், நம்ம திருமண வாழ்க்கை சரியா இல்லை. படிக்காத, வசதியில்லாத எத்தனையோ ஜோடிகள் சண்டை, சச்சரவு இல்லாம வாழறாங்க... அது எப்படினு புரியலை’ என பல தம்பதியர் புலம்பிக் கேட்டிருக்கலாம். உண்மைதான். பக்குவமே இல்லாத தம்பதியர்கூட நீண்ட காலம் திருமண வாழ்வில் இணைந்திருப்பார்கள். ஆனால், அவர்கள் சந்தோஷமாகவோ, திருப்தியாகவோ இருக்கிறார்களா என்பது சந்தேகம்தான். இருவருக்குள்ளும் பிரச்னைகள் இருந்தாலும் எப்படி வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும் என்கிற மனநிலையில் வாழ்வார்கள். ஆண்கள் எல்லாம் உபயோகமற்றவர்கள் என்கிற எண்ணம் மனைவிக்கும், பெண்கள் என்பவர்கள் அடக்கி வைக்கப்பட வேண்டியவர்கள் என்கிற எண்ணம் கணவருக்கும் இருக்கும். வெளியிலிருந்து பார்க்கும் போது இது பிரச்னையற்ற உறவாகத் தெரிந்தாலும் சரியான உறவல்ல.



    * வாழ்க்கையில் இருவரும் எதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என்பதையும் பொறுத்தது திருமண உறவின் நெருக்கம். சிலருக்கு திருமண வாழ்க்கை என்பதே வேடிக்கையானதாக இருக்கலாம். தாம்பத்திய உறவுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கக்கூடியதாக அதை அவர்கள் பார்க்கலாம். சிலருக்கோ திருமணத்தின் மூலம் இருவரும் இணைந்து பொருள் ஈட்டுவதே நோக்கமாக இருக்கலாம். இன்னும் சிலருக்கு இருவரும் சேர்ந்து வாழ்க்கையில் ஜெயிக்க வேண்டும் என்பதே லட்சியமாக இருக்கலாம். இப்படி எல்லாவற்றையும் கடந்து, இருவரும் ஒருவர் மீது ஒருவர் கொண்ட காதலையும் அன்பையும் எப்படி அதிகப்படுத்தலாம் என்கிற நோக்கத்துடன் வாழ்க்கையை நடத்துபவர்களுக்கே, திருமண உறவானது சிறப்பானதாக அமையும். அப்படிப்பட்ட மன நிலையில் இருக்கும் தம்பதியரால்தான் தன் பலவீனங்களை துணையிடம் மனம் திறந்து பகிர்ந்து கொள்ள முடியும். சுருக்கமாகச் சொன்னால் இருவரும் ஒருவித கமிட்மென்ட்டுடன் இருவர் மீதான அன்பையும் காதலையும் அதீதப்படுத்த நினைத்தாலே சாதாரணமான திருமண உறவை அசாதாரணமானதாக மாற்ற முடியும். இந்த விதி நட்புக்கும் பொருந்தும்.

    * துணையின் உடல் மற்றும் மனத் தேவைகளை அறிந்து, அவற்றைக் கவனிக்க வேண்டிய பொறுப்பும் இருவருக்கும் வேண்டும். துணையைக் கவனிக்கிறேன் என்கிற பெயரில் தன்னைக் கவனிக்காமல் விடுவதும் தவறு. அப்படியொரு தியாக உணர்வோடு துணையின் மீது செலுத்துகிற அக்கறை அர்த்தமற்றதாகி விடும்.

    * கணவன்-மனைவி உறவு சுமுகமாக இருக்க வேண்டும் என்றால் இருவரும் முதலில் நல்ல நண்பர்களாக இருக்க வேண்டியது அவசியம். என்னிடம் கவுன்சலிங் வரும் பல தம்பதியர், மாறி மாறி துணையைப் பற்றிப் புகார் செய்வார்கள். `இதையெல்லாம் உங்க கணவர்கிட்ட/மனைவிகிட்ட நேரடியா சொல்லியிருக்கீங்களா?’ எனக் கேட்டால் இல்லை என்பார்கள். பெரும்பாலான தம்பதியர் செய்கிற தவறு இதுதான். தன் கவலைகள், கனவுகள், ஏக்கங்கள், எதிர்பார்ப்புகள் என எல்லாவற்றையும் துணையிடம் மறைக்காமல் பகிர்ந்து கொள்ள வேண்டும். மறைக்கிறபோது, இருவருக்கும் இடையிலான காதலும் வற்றத் தொடங்கும். நெருக்கமான இரு நண்பர்களைக் கவனித்துப் பாருங்கள். அவர்களது நட்பின் பின்னணியில் இத்தகைய ஒரு மனப் பகிர்தல்தான் காரணமாக இருக்கும். எதையும் மறைக்காமல் பேசிக் கொள்வதைப் பார்க்கலாம். அதே விதிதான் தம்பதியருக்கும். துணையின் மீது நம்பிக்கை இருக்கும் பட்சத்தில் எதை வேண்டுமானாலும் அவரிடம் பகிர்ந்து கொள்ளலாம்.

    * மனம் விட்டுப் பேசுகிற இந்தப் பழக்கத்தை எப்போதோ ஒரு முறை செய்து விட்டு நிறுத்திவிடக்கூடாது. ஆயுள் முழுக்கக் கடைப்பிடிக்க வேண்டும். இப்படி எல்லாவற்றையும் மனம் விட்டுப் பேசுவதால் இருவருக்கும் ஏதேனும் பிரச்னைகள் வருமோ என்கிற பயம் சில நேரம் எழலாம். துணையிடம் எந்த விஷயத்தையும் மறைக்காமல் இருப்பதன் மூலம் இந்த பயத்திலிருந்து வெளியே வரலாம்.

    * என் வாழ்க்கையில் என்ன நடந்தாலும் என் துணைக்கு நான் நேர்மையாக இருப்பேன் என்கிற கமிட்மென்ட் ஒன்றே போதும், இருவரையும் நெருக்கமாக்க!

    * திருமண பந்தத்தின் மூலம் இணைவதால் மட்டுமே கணவனும் மனைவியும் நெருக்கமாகிவிட முடியாது. இருவரும் இணைந்து நெருக்கத்தையும் அன்யோன்யத்தையும் வளர்த்துக் கொள்ள உதவும் ஒரு பாத்திரம் மட்டுமே அது. கார் ஓட்டும் போது தேவைப்படுகிற மாதிரி திருமண உறவை சரியாக வழிநடத்திச் செல்லவும் ஒரு பேலன்ஸ் தேவை.

    * சாதாரண உறவில் தம்பதியரிடையே பெரியளவில் நேர்மையையோ, ஒத்துழைப்பையோ பார்க்க முடியாது. ஆனால், அற்புதமான திருமண உறவில் அவற்றைப் பார்க்கலாம். மேற்சொன்ன வழிகளைப் பின்பற்றுவதன் மூலம் இருவரும் கனவுகளை நனவாக்கலாம்... பெரிய முயற்சிகளே தேவையின்றி, சாதனைகளை நிகழ்த்தலாம்.

    "இருவரும் ஒருவர் மீது ஒருவர் கொண்ட காதலையும் அன்பையும் எப்படி அதிகப்படுத்தலாம் என்கிற நோக்கத்துடன் வாழ்க்கையை நடத்துபவர்களுக்கே, திருமண உறவானது சிறப்பானதாக அமையும்."

    "கார் ஓட்டும் போது தேவைப்படுகிற மாதிரி திருமண உறவை சரியாக வழிநடத்திச் செல்லவும் ஒரு பேலன்ஸ் தேவை."

    (வாழ்வோம்!)


    jv_66 likes this.

  9. #19
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    என்ன கொடுக்கிறோமோ அதையே திரும்பப் பெறுக&

    என்ன கொடுக்கிறோமோ அதையே திரும்பப் பெறுகிறோம்!


    டீலா... நோ டீலா? விளையாட்டுக்கு மட்டுமல்ல... வாழ்க்கைக்கும் அவசியமான ஒன்று டீல்! குறிப்பாக கணவன் - மனைவி உறவுக்குள் ஒரு டீல் அவசியம். அது என்ன டீல்? நீயும் நானும் ஒன்று என்கிற டீல்! உன்னை நானும் என்னை நீயும் இணையாக நடத்துவோம் என்கிற டீல்! அலுவலகத்தில் சக ஊழியர்களிடம்... வீட்டில் வேலை செய்பவர்களிடம்... நண்பர்களிடம்... குழந்தைகளிடம்... இப்படி யாரிடத்திலும் நாம் என்ன கொடுக்கிறோமோ, அதையே திரும்பப் பெறுகிறோம். கோபத்தைக் காட்டினால் அதே கோபமும், அன்பைக் காட்டினால் அதே அன்பும் நமக்குத் திரும்பக் கிடைப்பதை உணரலாம். கணவன்-மனைவி உறவிலும் இப்படித்தான். இதுவே ஒருவகையான டீல்தான்!

    * நாம் எத்தனையோ வித்தியாசமான திருமணங்களைப் பார்க்கிறோம். சிலருக்கு தனக்கு வரப்போகிற வாழ்க்கைத் துணை, வசதியுடன், நல்ல பொருளாதாரப் பின்னணியுடன் இருக்க வேண்டும் என நினைப்பார்கள். அழகோ, கவர்ச்சியான தோற்றமோ அவசியமில்லை என விட்டுக் கொடுப்பார்கள்.

    * வேறு சிலருக்கோ அழகும் வசீகரமும்தான் முக்கியமாகத் தெரியும். வசதியாக இல்லாவிட்டாலும் பரவாயில்லை என நினைப்பார்கள். இது எல்லாமே ஒருவித டீல்தான். ஆனால், இது இருவரிடமும் பேலன்ஸ்டாக இல்லாவிட்டால் சிக்கலையே ஏற்படுத்தும்.

    * பேலன்ஸ் இல்லாத இப்படியான டீலை படித்தவர்களிடம்கூட அதிகம் பார்க்கலாம். கணவன் அதிகம் சம்பாதிப்பவராக இருப்பார். மனைவி இல்லத்தரசியாக இருப்பார். சம்பாதிக்கிற காரணத்தினால் தனது தேவைகளை யாரையும் கேட்க அவசியமின்றி கணவர் நிறைவேற்றிக் கொள்வார். அவை அவ சியத் தேவைகளாக இல்லாமல் ஆடம்பரச் செலவுகளாகக்கூட இருக்கும். மனைவியோ அவசியத் தேவைகளுக்குக் கூட கணவரின் கைகளை எதிர்பார்க்கிற நிலையில் இருப்பார். ஒரு கட்டத்தில் இது ஏற்படுத்துகிற மன அழுத்தமும் விரக்தியும் மனைவியை பாதிக்கும். மனத்தளவில் நொறுங்கிப் போவார். அந்த தம்பதியரிடையே நெருக்கமான உறவென்பதே சாத்தியப்படாது. வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு ஆதர்ச தம்பதியாகவோ, அன்யோன்ய தம்பதியாகவோ தெரிகிற பலரும், உண்மையில் சந்தோஷமில்லாமல் வாழ்பவர்களாகவே இருப்பார்கள். இது நீண்ட காலம் தொடர்ந்தால் இருவருக்கும் இடையில் பிரிவு உண்டானாலும் ஆச்சரியமில்லை.



    * கணவன்-மனைவி உறவுக்குள் பிரச்னைகள் வரக் காரணமே இருவரும் இணை என்கிற டீல் மீறப்படுவதால்தான். இருவரும் சமம், இணை என நினைப்பவர்களும், நம்புகிறவர்களும் நிஜத்திலும் அப்படியே நடந்து கொள்வார்கள். உணர்வுகளைப் பகிர்ந்து கொள்வார்கள். வீட்டு வேலைகள், பொருளாதாரச் சுமை, அன்பு, காதல் என எல்லாவற்றையும் இருவரும் பகிர்ந்து கொள்வார்கள். இந்தப் பகிர்தல் 50:50 விகிதத்தில்தான் இருக்க வேண்டும் என்பதெல்லாம் அவசியமில்லை. பகிர்தல் மட்டுமே இங்கு முக்கியம்.

    * சம்பாதிப்பது என் வேலை... சமையலும், வீட்டு வேலைகளும், குழந்தை வளர்ப்பும் உன் வேலை என அடாவடியானப் பகிர்தல் நியாயமானதில்லை. இருவரில் யாரும் எந்தப் பொறுப்பையும் பகிர்ந்து கொள்ளலாம். ஒருவர் விரும்பிப் பகிர்கிற அந்த வேலைக்கு இன்னொரு வரின் பாராட்டும் அங்கீகாரமும் தரப்பட வேண்டும். குழந்தை வளர்ப்பானாலும் அது பெண்களின் கடமைதானே என நினைக்காமல், அதையும் ஒரு முக்கிய வேலையாக நினைத்துப் பாராட்ட வேண்டும். இந்த விதி மீறப்பட்டால்தான் பிரச்னைகள் தலைதூக்குகின்றன.

    * இருவரில் ஒருவர் சுயநலமாக யோசிப்பது, நடந்து கொள்வது, துணைக்கு போதிய சப்போர்ட் தராதது போன்றவற்றால் அவர்களது உறவு நிச்சயம் பாதிக்கப்படும்.

    * இருவரில் ஒருவர் அதிகமாகக் கொடுத்துக் கொண்டே இருந்தாலும் பிரச்னைகள் வரலாம். உதாரணத்துக்கு கணவர் கஷ்டப்பட்டு சம்பாதிக்கிறார். மனைவியோ ஆடம்பரச் செலவாளி. கணவரின் கஷ்டங்கள் தெரியாமல் கன்னாபின்னாவென செலவழிக்கிற போது, என்றைக்காவது ஒருநாள் அந்தக் கணவருக்கு மனைவியின் மீது வெறுப்பும் கோபமும் வருவது இயற்கையே. இருவரும் ஒருவர் மீது ஒருவர் காதலுடன் இருந்தால்கூடவா இப்படி பிரச்னை வரும் எனக் கேட்டால் நிச்சயம் வரும்.

    * இப்படி அதிகம் கொடுக்கப்பட்டு பழகும் போது, பெறுபவர் கொடுப்பவரை அதிகம் சார்ந்திருக்கும் நிலை உருவாகும். தவிர, கொடுத்துக் கொண்டே இருப்பவருக்கு தன் மீதான சுயமதிப்பீடு குறைய ஆரம்பிக்கும். நிறைய கொடுத்துக் கொண்டே இருக்கிறோமோ என கோபம் ஏற்படும்.

    * அடக்கமாக, அமைதியாக இருப்பதன் மூலம் பல பிரச்னைகளைக் கடந்து விடலாம் எனக் காலம் காலமாக சொல்லப்படுகிறது. விட்டுக் கொடுப்பவர்கள் கெட்டுப் போவதில்லை என வசனங்கள் எல்லாம் பேசிக் கொண்டிருக்கிறோம். ஆனால், அதற்கும் ஒரு எல்லை உண்டு. விட்டுக் கொடுத்துப் போவதை தனக்கான அடையாளமாக, தன் வளர்ப்பு முறையின் பிரதிபலிப்பாக, கலாசார வெளிப்பாடாக நிறைய பேர் நினைத்துக் கொள்வதுண்டு. கணவனோ, மனைவியோ இருவரில் ஒருவர் ஆதிக்க மனப்பான்மையுடனும், இன்னொருவர் விட்டுக் கொடுத்துப் போகிறவராகவும் இருக்கும் போது, ஆதிக்க குணமுள்ளவருக்கு காலப் போக்கில் தன் துணையின் மீது வெறுப்பும் சலிப்பும் வரும். அடங்கிப் போகிற துணை அலுத்துப் போக, அதற்கு நேரெதிர் குணமுள்ள இன்னொரு எதிர்பாலினத்தாரை சந்திக்கிற போது அந்த நபரின் மீது மனது சாயும்.

    * அடங்கியே பழக்கப்பட்டவர்களும், அதை குழந்தைகளை அடிப்பது, திட்டுவது போன்ற வழிகளில் மறைமுகமாக வெளிப்படுத்துவார்கள்.

    * அடக்கமான துணையால்தான் கணவன்-மனைவி உறவுக்குள் பிரச்னைகள் அதிகம் வந்து, விவாகரத்து எண்ணிக்கை அதிகரித்திருப்பதாகச் சொல்கிறது அமெரிக்காவின் லேட்டஸ்ட் புள்ளிவிவரம்.

    * அதீத அடக்கம் எப்படி பிரச்னைக்குரியதோ, அதைவிடப் பிரச்னைக்குரியது அடங்காமை. இருவரில் ஒருவர் ஆதிக்க மனப்பான்மை கொண்டவராகவும், இன்னொருவர் டேக் இட் ஈஸி பாலிசி உடையவராகவும் இருந்தாலும் சிக்கல்தான். டேக் இட் ஈஸி பார்ட்டிக்கு எதிலும் முடிவெடுக்கத் தெரியாது. எத்தகைய முடிவையும் ஏற்றுக் கொண்டு பழகியிருப்பார். இதுவும் ஒரு கட்டத்தில் இருவருக்கும் இடையில் பிரச்னைகளைக் கிளப்பும். எனவே இப்படி வேறு வேறு குணாதிசயங்கள் கொண்ட இருவர் வாழ்க்கையில் இணைகிற போது, டேக் இட் ஈஸி பாலிசி உள்ள துணையையும் முடிவுகள் எடுக்கும் விஷயத்தில் மெல்ல மெல்ல ஈடுபடுத்தப் பழக்க வேண்டும் அல்லது இந்த முடிவில் உனக்கு சம்மதமா என்றாவது கேட்க வேண்டும். ஆதிக்க மனப்பான்மையுள்ள துணை இந்த டீலை மிகச் சரியாகக் கையாள வேண்டும்.

    * `மறக்க மனம் கூடுதில்லையே...’ என `தேவர் மகன்’ பட ஸ்டைலில் ரொமான்ட்டிக்காக பாடினால் ஓ.கே. ஆனால், இருவருக்குமோ, இருவரில் ஒருவருக்கோ கடந்த காலக் கசப்புகள் மறக்காமலிருந்தால் பிரச்னைதான். கல்யாணமான புதிதில் நடந்த சண்டையையும், எப்போதோ கோபத்தில் நடந்த வாக்குவாதத்தையும் வருடங்கள் கடந்தும் நினைவில் வைத்திருப்பார்கள். கோபத்தில் பேசியவைதானே என இருவருமே அதை மறந்துவிட்டால் பிரச்னையில்லை. ஆனால், அப்படி இல்லாமல் மனதுக்குள் கறுவிக் கொண்டே பழி தீர்க்கும் சந்தர்ப்பத்துக்காகக் காத்திருந்தால் சிக்கல் வரும். தவறு செய்தவர் மன்னிப்பு கேட்கத் தயங்கக்கூடாது என்பதும் இங்கே முக்கியம்.

    * மறக்காதது மட்டுமில்லை மறந்து விடுவதும்கூட பிரச்னைதான். இருவரில் ஒருவர் ரொம்ப நல்லவராக துணை செய்கிற எல்லா தவறுகளையும் மன்னித்து மறத்தலும் சரியல்ல. தான் தவறு செய்கிறோம்... தன் துணை பெரிய மனதுடன் அதை மன்னித்து மறக்கிறார் என நினைப்பதற்குப் பதில், புதிதாக வேறு ஒருவருடன் புதிய வாழ்க்கையைத் தொடங்கி, இந்தத் தவறுகளைத் திருத்திக் கொள்ளலாமா என யோசிக்க வைக்கும்.

    * கொடுப்பது திரும்பக் கிடைக்காதபோதும் தம்பதியரிடையே பிரச்னைகள் வரும். பொதுவாக நம் இந்தியச் சமூகங்களில் அன்பு உள்ளிட்ட எதையும் அதிகம் கொடுத்தே பழக்கப்பட்டவர்கள் பெண்கள். அதை பெரும்பாலான கணவர்கள் புரிந்து கொள்வதில்லை. ஒரு கட்டத்தில் வெறுத்துப் போகிற பெண், திடீரென கொடுப்பதை நிறுத்திக் கொள்வார். அப்போதும் அது கணவருக்கு உணர்த்தாது. மெல்ல மெல்ல பிரச்னைகள் வெடிக்கத் தொடங்கும். இதைத் தவிர்க்க வாழ்க்கையில் இணைகிற முதல் நாளே இருவரும் இணை என்கிற டீலில் தெளிவாக இருக்க வேண்டும்.

    * ஒருவர் எல்லா விஷயங்களிலும் தானாக முடிவெடுப்பவராக, சுதந்திரமானவராகவும் இன்னொருவர் அதற்கு நேரெதிரானவராகவும் இருக்கலாம். முடிவெடுக்கும் அதிகாரமற்ற துணைக்கு ஒரு கட்டத்தில் நாம் நம் துணையின் வாழ்க்கையில் இருக்கிறோமா... நாம்
    அவருக்கு ஒரு பொருட்டே இல்லையோ என்று எண்ண வைக்கும். வேறு யாரோ ஒருவர் தனக்கு முக்கியத்துவம் தந்தாலோ, தன்னிடம் முடிவுகள் எடுக்கச் சொன்னாலோ மனம் அவர் பக்கம் ஈர்க்கப்படும்.

    "கணவன்-மனைவி உறவுக்குள் பிரச்னைகள் வரக் காரணமே இருவரும் இணை என்கிற டீல் மீறப்படுவதால்தான். இருவரும் சமம், இணை என நினைப்பவர்களும், நம்புகிறவர்களும் நிஜத்திலும் அப்படியே நடந்து கொள்வார்கள்."

    "பொதுவாக நம் இந்தியச் சமூகங்களில் அன்பு உள்ளிட்ட எதையும் அதிகம் கொடுத்தே பழக்கப்பட்டவர்கள் பெண்கள். அதை பெரும்பாலான கணவர்கள் புரிந்து கொள்வதில்லை."

    (வாழ்வோம்!)


    jv_66 likes this.

  10. #20
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    கணவன் மனைவியிடம் எதிர்பார்க்கும் விடயங&

    கணவன் மனைவியிடம் எதிர்பார்க்கும் அந்த 32 விடயங்கள் என்ன*..!

    இன்றைய காலகட்டத்தில் கணவன் மனைவி பிரச்சினை அதிகரித்து வருகின்றது இறுதியில் குடும்ப பிளவு கூட ஏற்படுகின்றது. இதற்கு காரணம் கணவன் மனைவி புரிந்துணர்வு இன்மையாகும் . ஒரு கணவன் தான் மனைவியிடம் பின்வருவனவற்றை எதிர்பார்த்து நிற்கின்றான்


    1* எப்போதும் சிரித்த முகம்.

    2* மாமியாரை தாயாக மதிக்க வேண்டும்.

    3* காலையில் முன் எழுந்திருத்தல்.

    4* பள்ளி அலுவலக நேரம் தெரிந்து அதற்குமுன் உணவு தயாரித்தல்.

    5* நேரம் பாராது உபசரித்தல்.

    6* கணவன் வீட்டாரிடையே அனுசரித்துப் போக வேண்டும்.

    7* எதற்கெடுத்தாலும் ஆண்களைக் குறை சொல்லக் கூடாது.

    8* அதிகாரம் பண்ணக் கூடாது.

    9* குடும்ப ஒற்றுமைக்கு உழைக்க வேண்டும். அண்ணன், தம்பி பிரிப்பு கூடாது.

    10* கணவன் குறைகளை வெளியே சொல்லக்கூடாது. அன்பால் திருத்த வேண்டும்.

    11* கணவனை சந்தேகப்படக் கூடாது.

    12* குடும்பச் சிக்கல்களை வெளியே சொல்லக் கூடாது.

    13* பக்கத்து வீடுகளில் அரட்டை அடிப்பதைக் குறைக்க வேண்டும்.

    14* வீட்டுக்கு வந்தவுடன், சாப்பிடும் போது சிக்கல்கள் குறித்துப் பேசக் கூடாது.

    15* கணவர் வழி உறவினர்களையும் நன்கு உபசரிக்க வேண்டும்.

    16* இருப்பதில் திருப்தி அடைய வேண்டும்.

    17* அளவுக்கு மீறிய ஆசை கூடாது.

    18* குழந்தை படிப்பில் கவனம் செலுத்த வேண்டும்.

    19* கொடுக்கும் பணத்தில் சீராகக் குடும்பம் நடத்த வேண்டும்.

    20* கணவரிடம் சொல்லாமல் கணவரின் சட்டைப் பையிலிருக்கும் பணத்தை எடுத்துக் கொள்ளக் கூடாது.

    21* தேவைகளை முன் கூட்டியே சொல்ல வேண்டும்.

    22* எதிர்காலத் திட்டங்களைச் சிந்திக்கும் போது ஒத்து ழைக்க வேண்டும்.

    23* தினமும் நடந்ததை இரவில் சொல்ல வேண்டும்.

    24* தாய் வீட்டில் கணவரை குற்றம் சொன்னால் மறுத்துப் பேச வேண்டும்.

    25* அடக்கம், பணிவு தேவை. கணவர் விருப்பத்துக்கு ஏற்றாற் போல் ஆடை, அலங்காரம் செய்ய வேண்டும்.

    26* குழந்தையைக் கண்டிக்கும் போது எதிர்வாதம் கூடாது.

    27* சுவையாகச் சமைத்து, அன்புடன் பரிமாற வேண்டும்.

    28* கணவர் வீட்டுக்கு வரும் போது நல்ல தோற்றம் இருக்கும் படி வீட்டை அழகாக வைத்துக் கொள்ள வேண்டும்.

    29* பொது அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

    30* உரையாடலில் தெளிவாகப் பேசுவதுடன், பொருத்தமான முறையில் எடுத்துரைக்கும் விதமும் தெரிய வேண்டும்.

    31* தேவையற்றதை வாங்கிப் பண முடக்கம் செய்யக் கூடாது.

    32* உடம்பை சிலிம் ஆக வைத்துக் கொள்ள வேண்டும்.
    இவ் எதிர் பார்ப்புக்கள் ஒவ்வொன்றையும் மனைவி பின்பற்றும் பட்சத்தில் அந்தக் குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது. மனைவியின் எதிர்பார்ப்புக்கள் எல்லாம் தானாகவே நிறைவேறும்


    Last edited by chan; 5th Nov 2015 at 08:40 PM.
    jv_66 likes this.

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter