Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree32Likes

For a Successful married life...-இரு மனம் இணைந்தது தான் திருமணம்


Discussions on "For a Successful married life...-இரு மனம் இணைந்தது தான் திருமணம்" in "Married Life" forum.


  1. #21
    ilakkikarthi's Avatar
    ilakkikarthi is offline Penman of Penmai
    Blogger
    Citizen's of Penmai
    Real Name
    karthiga
    Gender
    Female
    Join Date
    Jul 2014
    Location
    delhi
    Posts
    881

    Re: கணவன் மனைவியிடம் எதிர்பார்க்கும் விடய

    romba alaga sollirukeenga fnd super..................


    Sponsored Links
    with love,
    sweet karthi..

    “Dare to be free, dare to go as far as your thought leads, and dare to carry that out in your life. ”

    swami vivekananda

  2. #22
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    கணவன் மனைவி இப்படி இருந்தால் வீடே சொர்க்

    கணவன் மனைவி இப்படி இருந்தால் வீடே சொர்க்கம் தான்..


    1.எண்ணங்கள் வெவ்வேறாக இருந்தாலும் , ஒருவர் எண்ணத்திற்கு ஒருவர் மதிப்பு தந்து சொல்வதை காதில் வாங்க வேண்டும்.

    2.கணவன் மட்டுமே வேலைக்கு செல்லும் வீட்டில் ,தன்னால் தான் குடும்ப பொருளாதாரம் இயங்குகிறது என்பதை எப்போதும் கணவன் வார்த்தைகளில் வெளிப்படுத்தக் கூடாது.

    3.மனைவியும் வேலைக்கு செல்லும் வீட்டில், நானும் தான் வேலைக்கு போறேன் என்ற வார்த்தையை மனைவி அடிக்கடி சொல்லக் கூடாது.

    4.இவரிடம்/இவளிடம் இதைச் சொன்னால் பெரிய பூகம்பமே வெடிக்குமோ என்ற பயத்தை ஒரு போதும் மனைவிக்கு கணவனும், கணவனுக்கு மனைவியும் தரக்கூடாது.பொய்யின் ஆரம்பமே பயம் தான்.

    5.எவ்வளவு பெரிய சண்டை என்றாலும் உங்கள் இருவர் பற்றி மட்டும் தான் பேச வேண்டும்.கணவன் குடும்பத்தாரை பற்றி மனைவியும், மனைவியின் குடும்பத்தாரை பற்றி கணவனும் பேசவே கூடாது.தவறுகளில் மிகப்பெரிய தவறு இது.

    6.மனைவியை தன்னில் ஒரு பாதியாக பார்க்காவிட்டாலும் வேலைக்காரியாய் பார்க்காமல் இருப்பது கணவனுக்கு அழகு.

    7.மனைவியை ஏற்றது போல் அவள் குடும்பத்தையும் முழுமனதாய் கணவன் ஏற்க வேண்டும்.கணவனை ஏற்றது போல் அவன் குடும்பத்தையும் முழுமனதாய் மனைவி ஏற்க வேண்டும்.( இப்படி வாழ்ந்தால் முதியோர் இல்லங்கள் நிச்சயம் குறையும்)

    8.கணவன் நண்பர்களுடன் ஊர் சுற்றி விட்டு நேரம் கழித்து வீடு வருவது. மனைவியை மட்டும் வீட்டுக்குள்ளே ஆயுள் கைதி ஆக்குவது, அவளை வெளியுலகம் அறியவிடாமல் செய்வது தவறு. படிப்பறிவில்லா பெண்களை சில ஆண்கள் இப்படித்
    தான் நடத்துகின்றனர்.

    9.கணவனும் மனைவியும் தனித் தனியே வெளியில் சென்றால் நேரமாய் வீடு திரும்ப வேண்டும் .அப்படி நியாயமான காரணத்திற்காக தாமதம் ஏற்பட்டால் ஒருவர் சொல்லும் காரணத்தை ஒருவர் நம்பி ஏற்றக் கொள்ளவேண்டும்.

    10.அம்மாவின் சமையல் பக்குவத்தை எதிர்பார்த்து மனைவியின் சமையலை சாப்பிட்டு, ஏமாற்றம் என்றதும் அவளை திட்டக் கூடாது. அப்படி திட்டுவேன் தான் என்றால் அதற்கு முன் ஒன்றை யோசியுங்கள். திருமணம் ஆன புதிதில் உங்க அம்மாவும் இப்படித் தான் உங்க அப்பாவிடம் திட்டு வாங்கி இருப்பார்கள் சமையலுக்காக.பக்குவம் பார்த்ததும் வந்து விடக்கூடியதல்ல.பல வருட அனுபவத்தில் வருவது.

    நரகமாய் இருக்கும் வீடு சொர்க்கம் ஆவதும், சொர்க்கமாய் இருந்த வீடு நரகம் ஆவதும் கணவன் மனைவி நடந்து கொள்ளும் விதத்தில் தான் இருக்கிறது

    jv_66 likes this.

  3. #23
    RathideviDeva is offline Registered User
    Blogger
    Minister's of Penmai
    Real Name
    ரதி
    Gender
    Female
    Join Date
    Sep 2014
    Location
    California
    Posts
    4,092
    Blog Entries
    11

    Re: கணவன் மனைவி இப்படி இருந்தால் வீடே சொர்க

    Supero Super sis!!!!. எளிமையான அதே சமயம் அதிக நல்விளைவுகளை ஏற்படுத்தும் வழிகள். Thanks for sharing.


  4. #24
    anusuyamalar's Avatar
    anusuyamalar is offline Friends's of Penmai
    Real Name
    m.anusuya
    Gender
    Female
    Join Date
    Oct 2015
    Location
    batlagundu
    Posts
    442

    Re: கணவன் மனைவி இப்படி இருந்தால் வீடே சொர்க

    unmai thaan akka husbend and wife oruththaruku oruthar puirnju nadanthukitta vaalkai endrum happy thaan akka...................verry super akka intha pakirvuku mikavu nadri akka......................


  5. #25
    Amirporkodi's Avatar
    Amirporkodi is offline Commander's of Penmai
    Real Name
    Porkodi.A
    Gender
    Female
    Join Date
    Mar 2013
    Location
    chennai
    Posts
    1,885

    Re: கணவன் மனைவி இப்படி இருந்தால் வீடே சொர்க

    Simple and super rule's thanks for sharing sis


  6. #26
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    எல்லாம் இனிதாக எதையும் பகிரலாம்!

    எல்லாம் இனிதாக எதையும் பகிரலாம்!




    அழகிய மலர் தோட்டம்


    இவருடன்தான் வாழ முடியும் என்கிற நபரை மணக்காதீர்கள். இவர் இல்லாமல் வாழவே முடியாது என்பவரையே மணந்து கொள்ளுங்கள்!’ கணவன் - மனைவி உறவு என்பது அழகிய மலர்கள் பூத்துக் குலுங்கும் பூந்தோட்டம் போன்றது. இயல்பாகவே அப்படியொரு உறவு அமைக்கப் பெற்றவர்கள் அதிர்ஷ்டசாலிகள். பெரும்பாலும் அப்படி அமைவதில்லை என்பதுதான் நிஜம். ஆனால், கணவன்-மனைவி இருவரும் முனைந்தால் திருமண வாழ்க்கையை அப்படியொரு அழகிய மலர் தோட்டமாக மாற்றிக் கொள்ள முடியும்!

    எப்படி?

    திருமண உறவில் ஒருவரை ஒருவர் சார்ந்திருக்கிற தன்மை மிகவும் அடிப்படையானது. Interdependence எனப்படுகிற இந்த சார்புத் தன்மை இல்லாவிட்டாலும் ஆபத்து. ரொம்ப அதிகமானாலும் ஆபத்து. கணவன்-மனைவி இருவரும் சுதந்திரம் என்கிற பெயரில் தனக்குத் தோன்றியதை எல்லாம் செய்வது தவறானது. எதற்கெடுத்தாலும் இன்னொருவர் சம்மதமும் அனுமதியும் கிடைத்த பிறகே செய்வதும் தேவையற்றது. இருவரும் அவரவர் எல்லைகள் உணர்ந்து, தேவையான இடைவெளியை அனுமதித்து, அதே நேரம் சார்புத் தன்மையுடன் வாழ்வதே சிறந்த உறவுக்கு வழிவகுக்கும்.

    இப்படி சார்ந்திருக்கிற விஷயத்தில் ஒருவர் மட்டும் துணையைச் சார்ந்தும் இன்னொருவர் அதை விரும்பாமலும் இருந்தாலும் பிரச்னைதான். அற்புதமான திருமண உறவுக்கு இருவரும் தனித்தனியே நிற்கக்கூடிய அளவுக்கு திறமையும் தகுதியும் கொண்டவர்களாக இருக்க வேண்டி யதும் அவசியம். துணையின் சொல் அல்லது செயல்களில் உடன்பாடில்லாதபோது இன்னொருவர் நோ’ சொல்லத் தயங்கக்கூடாது. இருவருக்குமான உறவு மோசமான பாதையில் செல்வது தெரிந்து, அதை சரிப்படுத்த எடுத்த முயற்சிகள் தோற்றுப் போகும் போது அந்த உறவில் இருந்து வெளியேறவும் தயங்கக்கூடாது.

    பெரும்பாலும் வேலைக்குச் செல்லாமல் வீட்டில் இருக்கும் பெண்களுக்கு, அதாவது, பொருளாதார சுதந்திரம் இல்லாத பெண்கள் இப்படியொரு சிக்கலை சந்திப்பார்கள். கணவருக்கு வேறொரு உறவு இருப்பதை அறிந்தாலும் அது பற்றிக் கணவரிடம் கேள்விகள் கேட்கவோ, கண்டிக்கவோ முடியாத கையறு நிலையில் இருப்பார்கள்.

    படிச்சிருக்கோம்... கவுரவமான குடும்பப் பின்னணியிலேருந்து வந்திருக்கோம்... ஆனாலும், நம்ம திருமண வாழ்க்கை சரியா இல்லை. படிக்காத, வசதியில்லாத எத்தனையோ ஜோடிகள் சண்டை, சச்சரவு இல்லாம வாழறாங்க... அது எப்படினு புரியலை’ என பல தம்பதியர் புலம்பிக் கேட்டிருக்கலாம். உண்மைதான். பக்குவமே இல்லாத தம்பதியர்கூட நீண்ட காலம் திருமண வாழ்வில் இணைந்திருப்பார்கள். ஆனால், அவர்கள் சந்தோஷமாகவோ, திருப்தியாகவோ இருக்கிறார்களா என்பது சந்தேகம்தான். இருவருக்குள்ளும் பிரச்னைகள் இருந்தாலும் எப்படி வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும் என்கிற மனநிலையில் வாழ்வார்கள்.

    ஆண்கள் எல்லாம் உபயோகமற்றவர்கள் என்கிற எண்ணம் மனைவிக்கும், பெண்கள் என்பவர்கள் அடக்கி வைக்கப்பட வேண்டியவர்கள் என்கிற எண்ணம் கணவருக்கும் இருக்கும். வெளியிலிருந்து பார்க்கும் போது இது பிரச்னையற்ற உறவாகத் தெரிந்தாலும் சரியான உறவல்ல. வாழ்க்கையில் இருவரும் எதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என்பதையும் பொறுத்தது திருமண உறவின் நெருக்கம். சிலருக்கு திருமண வாழ்க்கை என்பதே வேடிக்கையானதாக இருக்கலாம். தாம்பத்திய உறவுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கக்கூடியதாக அதை அவர்கள் பார்க்கலாம்.

    சிலருக்கோ திருமணத்தின் மூலம் இருவரும் இணைந்து பொருள் ஈட்டுவதே நோக்கமாக இருக்கலாம். இன்னும் சிலருக்கு இருவரும் சேர்ந்து வாழ்க்கையில் ஜெயிக்க வேண்டும் என்பதே லட்சியமாக இருக்கலாம். இப்படி எல்லாவற்றையும் கடந்து, இருவரும் ஒருவர் மீது ஒருவர் கொண்ட காதலையும் அன்பையும் எப்படி அதிகப்படுத்தலாம் என்கிற நோக்கத்துடன் வாழ்க்கையை நடத்துபவர்களுக்கே, திருமண உறவானது சிறப்பானதாக அமையும். அப்படிப்பட்ட மனநிலையில் இருக்கும் தம்பதியரால்தான் தன் பலவீனங்களை துணையிடம் மனம் திறந்து பகிர்ந்து கொள்ள முடியும்.

    சுருக்கமாகச் சொன்னால் இருவரும் ஒருவித கமிட்மென்ட்டுடன் இருவர் மீதான அன்பையும் காதலையும் அதீதப்படுத்த நினைத்தாலே சாதாரணமான திருமண உறவை அசாதாரணமானதாக மாற்ற முடியும். இந்த விதி நட்புக்கும் பொருந்தும். துணையின் உடல் மற்றும் மனத் தேவைகளை அறிந்து, அவற்றைக் கவனிக்க வேண்டிய பொறுப்பும் இருவருக்கும் வேண்டும். துணையைக் கவனிக்கிறேன் என்கிற பெயரில் தன்னைக் கவனிக்காமல் விடுவதும் தவறு. அப்படியொரு தியாக உணர்வோடு துணையின் மீது செலுத்துகிற அக்கறை அர்த்தமற்றதாகி விடும்.

    கணவன்-மனைவி உறவு சுமுகமாக இருக்க வேண்டும் என்றால் இருவரும் முதலில் நல்ல நண்பர்களாக இருக்க வேண்டியது அவசியம். என்னிடம் கவுன்சலிங் வரும் பல தம்பதியர், மாறி மாறி துணையைப் பற்றிப் புகார் செய்வார்கள். இதையெல்லாம் உங்க கணவர்கிட்ட/மனைவிகிட்ட நேரடியா சொல்லியிருக்கீங்களா?’ எனக் கேட்டால் இல்லை என்பார்கள். பெரும்பாலான தம்பதியர் செய்கிற தவறு இதுதான். தன் கவலைகள், கனவுகள், ஏக்கங்கள், எதிர்பார்ப்புகள் என எல்லாவற்றையும் துணையிடம் மறைக்காமல் பகிர்ந்து கொள்ள வேண்டும். மறைக்கிறபோது, இருவருக்கும் இடையிலான காதலும் வற்றத் தொடங்கும்.

    நெருக்கமான இரு நண்பர்களைக் கவனித்துப் பாருங்கள். அவர்களது நட்பின் பின்னணியில் இத்தகைய ஒரு மனப் பகிர்தல்தான் காரணமாக இருக்கும். எதையும் மறைக்காமல் பேசிக் கொள்வதைப் பார்க்கலாம். அதே விதிதான் தம்பதியருக்கும். துணையின் மீது நம்பிக்கை இருக்கும் பட்சத்தில் எதை வேண்டுமானாலும் அவரிடம் பகிர்ந்து கொள்ளலாம். மனம் விட்டுப் பேசுகிற இந்தப் பழக்கத்தை எப்போதோ ஒரு முறை செய்து விட்டு நிறுத்திவிடக்கூடாது.

    ஆயுள் முழுக்கக் கடைப்பிடிக்க வேண்டும். இப்படி எல்லாவற்றையும் மனம் விட்டுப் பேசுவதால் இருவருக்கும் ஏதேனும் பிரச்னைகள் வருமோ என்கிற பயம் சில நேரம் எழலாம். துணையிடம் எந்த விஷயத்தையும் மறைக்காமல் இருப்பதன் மூலம் இந்த பயத்திலிருந்து வெளியே வரலாம். என் வாழ்க்கையில் என்ன நடந்தாலும் என் துணைக்கு நான் நேர்மையாக இருப்பேன் என்கிற கமிட்மென்ட் ஒன்றே போதும், இருவரையும் நெருக்கமாக்க!

    திருமண பந்தத்தின் மூலம் இணைவதால் மட்டுமே கணவனும் மனைவியும் நெருக்கமாகிவிட முடியாது. இருவரும் இணைந்து நெருக்கத்தையும் அன்யோன்யத்தையும் வளர்த்துக் கொள்ள உதவும் ஒரு பாத்திரம் மட்டுமே அது. கார் ஓட்டும் போது தேவைப்படுகிற மாதிரி திருமண உறவை சரியாக வழிநடத்திச் செல்லவும் ஒரு பேலன்ஸ் தேவை.சாதாரண உறவில் தம்பதியரிடையே பெரியளவில் நேர்மையையோ, ஒத்துழைப்பையோ பார்க்க முடியாது. ஆனால், அற்புதமான திருமண உறவில் அவற்றைப் பார்க்கலாம். மேற்சொன்ன வழிகளைப் பின்பற்றுவதன் மூலம் இருவரும் கனவுகளை நனவாக்கலாம்... பெரிய முயற்சிகளே தேவையின்றி, சாதனைகளை நிகழ்த்தலாம்.
    (வாழ்வோம்!)


    Last edited by chan; 14th Nov 2015 at 05:35 PM.

  7. #27
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    எல்லா நாளும் தொடரும் அன்பு வேண்டும்!

    எல்லா நாளும் தொடரும் அன்பு வேண்டும்!


    ஆயிரம் காலத்துப் பயிர்

    நல்ல விளைச்சலுக்கு நிலத்தை முன்கூட்டியே உழுது, தயார்படுத்துகிறோம் இல்லையா? நல்ல திருமணத்துக்கும் அப்படியொரு தயாரிப்பு நிச்சயம் அவசியம்.

    திருமணத்தைப் பற்றி எல்லோருக்கும் கனவுகள் இருக்கும். ஆனால், அந்தக் கனவுகள் தயாரிப்புகள் ஆகாது. Premarital counselling எனப்படுகிற திருமணத்துக்கு முந்தைய கவுன்சலிங் போவதன் மூலமோ, திருமண உறவுகளைப் பற்றிய ஆழமான கருத்துகள் கொண்ட புத்தகங்களை படிப்பதன் மூலமோ நம்மை அதற்குத் தயார்படுத்திக் கொள்ளலாம். திருமணத்துக்கு முன்பும் திருமணமான பிறகும் அந்த உறவு குறித்த பார்வை பெரிய அளவில் மாறிப் போகும். திருமணத்துக்கு முன்போ, திருமணமான புதிதிலோ துணையிடம் நம்மை ஈர்த்த ஒரு விஷயம், திருமண மோகம் குறைந்ததும் விரும்பத்தகாத விஷயமாகவும் மாறும்.

    * திருமணத்துக்கு முன் துணையிடம் பார்த்து வியக்கிற வேடிக்கை குணம், திருமணத்துக்குப் பிறகு ஒழுங்கற்ற மனநிலை கொண்டவராகக் காட்டும்.

    * துருதுருவென்றும் பரபரவென்றும் எப்போதும் உற்சாகமாகக் காணப்படுகிற அதே துணை, திருமணத்துக்குப் பிறகு உணர்வுப்பூர்வமாக நிலையற்ற மனநிலை கொண்டவராகத் தெரிவார்.

    * திருமணத்துக்கு முன் ரொம்பவும் ஸ்ட்ராங்கான, நம்பகமான நபராகத் தெரிந்தவர், பிறகு விட்டுக்கொடுக்காத, அழுத்தமான ஆளாகத் தெரிவார்.

    * திருமணத்துக்கு முன்பு அமைதியான, எதற்கும் டென்ஷனாகாத நபராக இருந்தவர், திருமணமானதும் போரடிக்கிற பார்ட்டியாக, எதிலும் ஆர்வமற்றவராகத் தெரிவார்.

    * திருமணத்துக்கு முன், செக்ஸ் உறவில் நாட்டம் காட்டியவர், திருமணத்துக்குப் பிறகு அதற்கு மட்டுமே ஏங்குகிற நபராகத் தெரிவார்.

    * திருமணத்துக்கு முன் பணக்காரராக, வெற்றிகரமான நபராகத் தெரிந்தவர், பிறகு ‘பணம்... பணம்...’ என அலைகிறவராகத் தெரிவார்.

    * திருமணத்துக்கு முன் துணையிடம் நெருக்கமாக இருப்பதை விரும்புகிறவராகத் தெரிந்தவர், திருமணத்துக்குப் பிறகு துணையைச் சார்ந்திருக்கிறவராகத் தெரிவார்.

    * திருமணத்துக்கு முன் துணையிடம் அக்கறை கொண்டவராகவும் அனுசரித்துப் போகிறவராகவும் தெரிந்தவர், திருமணத்துக்குப் பிறகு பலவீனம் ஆனவராகவும், முதுகெலும்பு இல்லாதவராகவும் தெரிவார்.

    * திருமணத்துக்கு முன் நகைச்சுவை உணர்வு அதிகமுள்ளவராகத் தெரிந்தவர், திருமணத்துக்குப் பிறகு எந்த விஷயத்திலும் சீரியஸ்னஸ் இல்லாதவராகவும் எதையும் மேம்போக்காக அணுகுபவராகவும் தெரிவார்.

    ஆயிரம் காலத்துப் பயிர் எனச் சொல்லப்படுகிற திருமண உறவுக்குள் அடியெடுத்து வைப்பதற்கு முன் ஆயிரம் முறை யோசிக்கிறோம். நல்ல துணையாக அமைய வேண்டும் என்பதில் முடிந்த அளவு மெனக்கெடுகிறோம். திருமணம் ஆனதும் அந்த உறவு சுமுகமாக சந்தோஷமானதாகத் தொடர வேண்டும் என்பதிலோ யாரும் பெரிதாக அக்கறை எடுத்துக் கொள்வதில்லை. அதற்கு என்னவெல்லாம் செய்ய வேண்டும் தெரியுமா?

    காலம் முழுக்க காதலைக் கட்டிக் காப்பாற்ற வேண்டும் என்பதை வாழ்நாள் லட்சியமாக நினைத்துச் செய்ய வேண்டும். பலரும் அப்படிச் செய்யாததால்தான் பிரச்னையே. வாழ்க்கையில் பணம் சம்பாதிப்பது, பெரிய அந்தஸ்துக்கு உயர்வது போன்ற பல லட்சியங்களுடன், கணவன்- மனைவி உறவில் காதல் வற்றாமல் பார்த்துக் கொள்வதையும் ஒரு குறிக்கோளாக நினைத்தால்தான் அதற்கான முயற்சிகளில் இறங்க முடியும்.


    ஒருவரை ஒருவர் உண்மையாக நேர்மையாக நேசிக்க வேண்டும். அந்த அன்பும் அக்கறையும் என்றோ ஒருநாள் வெளிப்படுவதும், பிறகு காணாமல் போவதுமாக இல்லாமல், எல்லா நாளும் தொடர வேண்டும். பர்சனல் வாழ்க்கைக்கும் புரொஃபஷனல் வாழ்க்கைக்குமான இடைவெளியைப் புரிந்து இருவரும் செயல்பட வேண்டும். இரண்டும் வேறு வேறு என்பதில் தெளிவு வேண்டும். பெரும்பாலான பெண்கள் திருமணத்துக்குப் பிறகு வேலையை விட்டு விடுவார்கள்.

    அவர்களாக விரும்பிச் செய்தாலுமே காலப்போக்கில் இது அவர்களுக்கு ஒருவித குற்ற உணர்வைத் தரும். வேலை என்றில்லை... வாழ்க்கையில் ஒருவருக்குள்ள மதிப்பீடுகள், விருப்பங்கள், வாழ்க்கை முறை என எதையுமே துணைக்காக விட்டுக் கொடுக்கத் தேவையில்லை. அந்தத் தியாக மனப்பான்மை பின்னாளில் நிச்சயம் வெறுப்பையும் விரக்தியையும் தரும் என்பதில் சந்தேகமில்லை.

    காதலிக்கிற போதோ, கல்யாணமான உடனேயோ இருவரும் ஒருவரைப் பார்த்து ஒருவர் சில விஷயங்களால் ஈர்க்கப்பட்டிருப்பார்கள். அதுவே அவர்களுக்கு இடையிலான நெருக்கத்தைக் கூட்டியிருக்கும். கல்யாணமான சில வருடங்களில் அதை மறந்து விடுவார்கள். அப்படி இருவரையும் கட்டிப் போட்டு வைத்திருந்த ஈர்ப்புகளை மறுபடி தூசி தட்டி தொடரச் செய்யலாம். இருவரது விருப்பங்களும் எதிர்பார்ப்புகளும் இருவருக்கும் தெரிந்திருக்க வேண்டும்! காதலித்துத் திருமணம் செய்கிற போது மதமோ, சாதியோ இருவருக்குமான இடைவெளிக்குக் காரணமாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

    இருவரும் அவரவர் வாழ்க்கை முறைப்படி வாழ அனுமதிக்கப்பட வேண்டும் அல்லது இருவருமே அவரவர் சாதி, மதங்களில் நம்பிக்கையற்றவராக வாழப் பழகலாம். ‘என் வழிக்குதான் நீ வந்தாக வேண்டும்’ என கட்டாயப்படுத்தப்படுகிற போது, அப்படி வாழத் தயாராகிற வரின் தியாகமானது பின்னாளில் வருத்தத்தை, வேதனையைத் தரும். காதலைக் குறைக்கும்.

    இருவரும் எந்த ரகசியங்களையும் வைத்துக் கொள்ளாமல் மனம் திறந்து பேசுவது பாதுகாப்பானது. பெரும்பாலும் ஆண்கள் மனைவியிடம் அப்படி மனம் திறப்பது தன்னை பலவீனமானவராகக் காட்டும் என நினைத்து அதைத் தவிர்ப்பார்கள். பெண்களோ எல்லாவற்றையும் கணவரிடம் கொட்டினால்தான் நிம்மதி என நினைப்பார்கள். ரகசியங்கள் அற்ற தாம்பத்தியத்தில் காதல் ஒருபோதும் குறைவதில்லை. ‘துணையுடன் அன்பாக இருப்பது வேறு... நெருக்கமாக இருப்பது வேறு...’ என ஆண்களும், நெருக்கமாக இருந்தால்தான் அன்பாக இருப்பதாக அர்த்தம் என பெண்களும் நினைப்பதுண்டு.

    இந்த இரண்டுக்குமான வித்தியாசத்தை இருவருமே உணர்ந்து கொள்ள வேண்டும். துணையிடம் பொய் சொல்வது தவறில்லை... துணைக்குத் தெரியாமல் என்றோ ஒரு நாள் வேறொரு ஆண்/பெண்ணுடன் உறவு கொள்வது தவறில்லை என்கிற மனப்பான்மை சிலருக்கு உண்டு. என்றோ ஒரு நாள் என ஆரம்பிக்கிற இந்த விதிமீறல்கள் ஒரு கட்டத்தில் `ஆமாம்.... செய்தேன்.... அதில் என்ன தவறு’ எனக் கேட்கும் அளவுக்குக் கொண்டு போகும்.

    கல்வித் தகுதி, தோற்றம், பொருளாதாரப் பின்னணி போன்றவற்றிலும் மிகப்பெரிய வித்தியாசங்கள் இருந்தால் பின்னாளில் பிரச்னைகள் வெடிக்கக் காரணமாகலாம். இந்த விஷயங்கள்தான் திருமண உறவுகளில் விரிசல்கள் விழ அடிப்படை.

    ‘இதெல்லாம் ஒரு மேட்டரா’ என அலட்சியப்படுத்திவிட்டு, பொருந்தாத் திருமணத்துக்குத் தயாராகிற போது, பிற்காலத்தில் பிரச்னைகள் வருவதும், அப்படி வரும்போது, `தவறான நபரைத் தேர்ந்தெடுத்துவிட்டோம்’ எனப் புலம்பவும் வைக்கின்றன. கண்ணுக்குத் தெரிகிற நெருடல்களையாவது கவனிக்கலாம். அவற்றைச் சரி செய்ய வாய்ப்பில்லை எனத் தெரிகிற போது, அப்படியொரு திருமணத்துக்கு சம்மதிக்காமல் இருப்பது உறவுச் சிதைவுக்கு வழி வகுக்காமல் காக்கும்.

    "காலம் முழுக்க காதலைக் கட்டிக் காப்பாற்ற வேண்டும் என்பதை வாழ்நாள் லட்சியமாக நினைத்துச் செய்ய வேண்டும். ஆனால், பலரும் அப்படிச் செய்யாததால்தான் பிரச்னையே."

    "பர்சனல் வாழ்க்கைக்கும் புரொஃபஷனல் வாழ்க்கைக்குமான இடைவெளியைப் புரிந்து இருவரும் செயல்பட வேண்டும். இரண்டும் வேறு வேறு என்பதில் தெளிவு வேண்டும்."

    (வாழ்வோம்!)



  8. #28
    sharamsn's Avatar
    sharamsn is offline Commander's of Penmai
    Real Name
    sharmi begam
    Gender
    Female
    Join Date
    Aug 2015
    Location
    puducherry
    Posts
    1,344

    Re: எல்லா நாளும் தொடரும் அன்பு வேண்டும்!

    useful share .TFS....

    SMILE TO SOLVE PROBLEM

    SILENCE TO AVOID PROBLEM

    sharmi begam...

  9. #29
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: எல்லாம் இனிதாக எதையும் பகிரலாம்!

    Thanks for the suggestions.

    Jayanthy





  10. #30
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: எல்லா நாளும் தொடரும் அன்பு வேண்டும்!

    Good suggestions.

    Jayanthy





loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter