Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree32Likes

For a Successful married life...-இரு மனம் இணைந்தது தான் திருமணம்


Discussions on "For a Successful married life...-இரு மனம் இணைந்தது தான் திருமணம்" in "Married Life" forum.


  1. #31
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    மன்னிப்பு! வாழ்க்கையை பலப்படுத்தும் வெற&

    மன்னிப்பு! வாழ்க்கையை பலப்படுத்தும் வெற்றியின் முதல் படி! – வாழ்வியல் விதை

    என்ன*தான் ஒற்றுமையாக குடும்பம் நடத்தும் தம்பதிகளாக இருந்தாலும் சண்டையே இல்லாமல் இருந்தால் வாழ்க்கையே கசந்துபோகும். அவ்வ*ப்போது சண்டையும் சச்சரவும் சிறிது நேரம் இருந்து பின் அது சூரியனை கண்ட பனித்துளியாய் காதலில் கரைந்து போனால் தான் வாழ்க்கையே சுராரஸியம் மிக்கதாக இருக்கும்.

    சில நேரத்துல என் மனைவிகிட்ட ‘ என்னை மன்னிச்சிடு’னு சொல்றதுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கும். என் ‘ஈகோ’ அதுக்கு இடம் கொடுக்காது.” “ யார் தப்பு செய்றாங்களோ அவங்கதான் முதல்ல மன்னிப்பு கேட்கணும், அதுதான் நியாயம்” என்று நீங்கள் யோசிக்க கூடாது.

    துணையின் உணர்ச்சிகளைப் புரிந்து கொள்ளு ங்கள். யாராவது உங்களிடம் வந்து மன்னிப்பு கேட்டால் உங்களுக்கு எப்படிஇருக்கும்? உங்கள் மனமே கரைந்துவிடும் இல்லையா? அப்படி யென்றால் உங்கள் துணையிடம் நீங்கள் மன்னிப்பு கேட்டால் அவரும் அப்படித்தானே உணர்வார்? உங்கள்மீது தப்பு இல்லை என்றாலும் உங்க துணையின் மனம் புண்பட்டதற்காக, அல்லது நீங்கள் தெரியாமல் செய்த தவறுக்காக மன்னிப்பு கேட்கலாமே? அப்படி கேட்டால் அவருடைய காயம் நிச்சயம் ஆறும். மன்னிப் பு கேட்பதை தோல்வி என்று நினைக்காதீர்கள், உங்கள் திருமண வாழ்க்கையை பலப்படுத்தும் வெற்றிப் படியாக நினைத்துக் கொள்ளுங்கள்.

    கோபமாகவே இருக்கும் ஒருவரை சாந்தப்படுத்துவது, ‘வலிமையான சுவர்களை உடைய நகரத்தை வெல்வதை விடக் கடினமானது’ என்று நீதி மொழிகள் சொல்கிறது.

    தன்மீது எந்த தப்பும் இல்லை என்று இருவரும் நியாய ப்படுத்தும்போது, மன்னிப்பு கேட்பது ரொம்ப கஷ்டமாக இருக்கலாம். ஆனால், நீங்கள் மன்னிப்பு கேட்டால் பிரச்சனை பெரிதாகா மல் இருக்கும். இப்படி செய்யும் போது, உங்கள் சுய கௌரவத்தைவிட உங்கள் திருமண பந்தத்திற்கு நீங்கள் முக்கியத்து வம் பிரச்சனைக்கு நீங்கள் முக்கிய காரணமாக இல்லாதபோது மன்னிப்பு கேட்பது கஷ்டமாகத்தான் இருக்கும். அதற்காக நீங்கள் கோபமாக நடந்து கொண்டால் அது நியாயமாக இருக்காது. ‘போகப் போக எல்லாம் சரியாயிடும்’ என்று நினைத்து மன்னிப்பு கேட்காமல் இருந்துவிடாதீர்கள்.

    நீங்கள் உடனே மன்னிப்பு கேட்கும்போது உங்க துணையின் மனம் மாறலாம், அவரும் மன்னிப்புகேட்கலாம். அடிக்கடி மன்னிப்பு கேட்டு பழகுங்கள். அப்போது மன்னிப்பு கேட்பது உங்களுக்கு சுலபமாக இருக்கும். நீங்கள் நடந்துகொண்ட வி தத்தை நியாயப்படுத்துவதுவேறு, மன்னிப்பு கேட்பது வேறு. சிலசமயம் கொஞ்சம் கேலியாக, “ ரொம்ப சாரி, ஆனா இந்த விஷயத்தை நீங்க இவ்ளோ பெரிசா எடுத்து க்குவீங்கனு நினைக்கல” என்று சொல்லாதீர்கள். உங்கள் பங்கில் இருக்கும் தவறை ஒத்துக்கொள்ளுங்கள்; உங்கள் மனைவியின் கோபம் நியாயமாக இல்லை என்று நீங்கள் நினைத்தாலும், அவருடைய மனம் புண்பட்டதற் காக மன்னிப்பு கேளுங்கள்.


    Sponsored Links
    jv_66 likes this.

  2. #32
    kkmathy's Avatar
    kkmathy is offline Minister's of Penmai
    Real Name
    komathy
    Gender
    Female
    Join Date
    Jun 2012
    Location
    Malaysia
    Posts
    3,189

    Re: மன்னிப்பு! வாழ்க்கையை பலப்படுத்தும் வெ

    Very good sharing, Letchmy.
    Thanks for sharing.


  3. #33
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

  4. #34
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    பேச்சு  பேச்சா  இருக்கணும்!

    பேச்சு  பேச்சா  இருக்கணும்!

    வேற்றுமையில் ஒற்றுமை காண்போம்

    `நான் பேசிக் கொண்டே இருக்கிறேன். என் துணை அதைக் கவனிப்பதில்லை...’கணவன்-மனைவி பந்தத்தை வளர்ப்பதில் தகவல் தொடர்புக்கு மிக முக்கிய பங்குண்டு. உண்மையைச் சொல்கிறேன் என்கிற எண்ணத்தில் மனதில் உள்ள உணர்வுகளை எல்லாம் அப்படியே வெளிப்படுத்துவது, உறவை பலப்படுத்துவதற்குப் பதில் எதிர்மறையாகவே செயல்படும். ஆங்கிலத்தில் இதை Brutally honest என்கிறோம்.



    முதலில் மனைவி பேசுவதைக் கணவர் கேட்பார்.பிறகு கணவர் பேசுவதை மனைவி கேட்பார். பிறகு இருவரும் பேசுவதை ஊரே கேட்கும்’ என நகைச்சுவையாக சொல்லிக் கேட்டிருப்போம். பெரும்பாலான திருமண உறவுகளில் பிரச்னை எழக் காரணம் என்ன தெரியுமா? சத்தமாகவும் தெளிவாகவும் பேசுவது!பேச்சு இரண்டு வகைப்படும். உபயோகமான பேச்சு மற்றும் ஆபத்தான பேச்சு.

    மனதில் உள்ளதை அப்படியே பேசுவதாக நினைத்துக் கொண்டு நேர்மையாகப் பேசுகிற Brutally honest பேச்சு தேவையில்லை. அத்தகைய பேச்சில் நேர்மையைவிட எரிச்சல், கோபம், வெறுப்பு போன்றவையே அதிகம் வெளிப்படும். `நீ உருப்படவே மாட்டே’ என குழந்தைகளிடம் கடிந்து கொள்வதுகூட இந்த வகைதான். `நான் நல்லதுக்குத்தானே சொல்றேன்’ என நியாயம் கற்பித்தாலும், அது சரியானதல்ல.

    கணவன்-மனைவி இருவரும் தங்கள் மனதில் உள்ளவற்றை சொல்வதில் பிரச்னை இல்லை. சொல்லும் முறையில்தான் பிரச்னை. நெகட்டிவாக பேசும் போது, துணையின் ரியாக்*ஷனும் நெகட்டி வாகவே இருக்கும். அது அவர்களுக்கு இடையில் எப்போதும் ஒரு நெகட்டிவ் சூழலை நிலவச் செய்யும். நாளுக்கு நாள் இது அதிகரிக்கும். இருவரும் மனதளவில் ரொம்பவே காயப்படுவார்கள். இது திடீரென ஒருவருக்கொருவர் பேச்சு வார்த்தையையே நிறுத்திக் கொள்கிற அளவுக்குக் கொண்டு போகும். திடீரென இதை மாற்றி, பாசிட்டிவ் சூழலை உருவாக்குவது என்பது சிரமம். வெளியில் இருந்து யாராவது இவர்கள் இருவரையும் சரிபார்த்து, சூழலை சரிப்படுத்த முடியும். மனநல ஆலோசகர் போன்றோரின் வழிகாட்டுதல் உதவலாம். இதைத் தவிர்த்து ஒருவரை ஒருவர் மாறி மாறி குற்றம் சாட்டிக் கொண்டிருந்தால், ஒரு கட்டத்தில் சேர்ந்து வாழ்வதைவிட, பிரிவதே மேல் என யோசிக்க வைக்கும். நெகட்டிவ் சூழலை உருவாக்கியதில் நமது பங்கு என்ன என்று பார்த்து, அதை மாற்ற இருவரும் முயற்சிக்க வேண்டும்.

    இருவருக்குமான உரையாடல், அன்பாக, மரியாதையாக, அர்த்தமுள்ளதாக, காயப்படுத்தாததாக இருக்கும்படி பார்த்துக் கொள்ளவேண்டும். ஆனால், பல தம்பதியருக்கும் இது சாத்தியப்படுவதில்லை. ஏன்?பிறந்தது முதல் அதீத கோபத்துடன் வளர்கிறோம். அடுத்தவரைக் கிண்டல், கேலி செய்து ரசிப்பதை தவறென அறியாமல் இயல்பாகச் செய்கிறோம். ஆரம்பத்திலேயே கண்டுபிடித்துக் கட்டுப்படுத்தாவிட்டால், இது போன்ற நடத்தைகள் ஏற்படுத்தும் காயங்கள் ஆழமான வடுக்களாக மாறும்.

    பேசும் போது துணையின் மீது பழியைப் போடும் வகையில், அதாவது, 'நீ இப்படிப் பண்ணினதுதான் பிரச்னைக்குக் காரணம்’ என்று பேசாமல், `நான் இப்படி ஃபீல் பண்றேன்...’ என உங்களை பிரதானப்படுத்தி உரையாடலைத் தொடங்குங்கள்.உரையாடல் சரியாக அமையவும் நெகட்டிவ் சூழல் நிலவாமல் தடுக்கவும் இருவருக்கும் சில திறமைகள் தேவைப்படுகின்றன.

    1. இருவரில் ஒருவர் நெகட்டிவாக பேசும் போது இன்னொருவருக்கு கோபம் வருவது சகஜம்தான். பாய்ந்து கொண்டு எதிர்த்துப் பேசத் துடிப்பார்கள்தான். ஆனால், அதைத் தவிர்த்து துணை பேசுவதை முழுமையாகக் கேளுங்கள். எதிர்த்துப் பேச வேண்டாம். அப்படிக் கேட்டாலே பிரச்னையின் தீவிரம் பாதியாகக் குறையும். துணையின் மன பாரம் இறங்கும்.

    2. உரையாடலின் போது உங்கள் துணை என்ன பேசினார் என்பதை அவரது வரிகளிலேயே திரும்பச் சொல்லி, சரிபாருங்கள். உண்மையிலேயே அவர் சொன்னதற்கு அதுதான் அர்த்தமா அல்லது நீங்கள் தவறாகப் புரிந்து கொண்டீர்களா எனப் பாருங்கள்.

    3. துணையின் பேச்சு சரியா, தவறா என்கிற விவாதத்தைப் பிறகு பார்த்துக் கொள்ளலாம். அதற்கு முன் அவரது உணர்வுகளைப் புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். புள்ளிவிவரங்களைவிட, உணர்வுகளே முக்கியம். உங்கள் துணை காயப்பட்டிருந்தால் அதைப் புரிந்து கொள்ளுங்கள். அவர் சொல்வதை அக்கறையோடு கவனித்து, அதை அவருக்குத் திரும்பச் சொல்லிக் காட்டி, `இதைத்தானே சொல்ல வரே...’ எனச் சொன்னாலே 90 சதவிகித பிரச்னை தீர்ந்த மாதிரிதான்.

    4. உரையாடலின் போது, எப்போதோ முடிந்து போன பழைய விஷயங்களை இழுக்க வேண்டாம். திருமணமான புதிதில் நடந்த சம்பவங்களில் தொடங்கி, லேட்டஸ்ட் விஷயங்கள் வரை எல்லாவற்றிலும் குற்றம் கண்டுபிடிக்க ஏதோ ஒன்றை நினைவில் வைத்திருந்து தேடித் தொகுத்து சண்டை போட வேண்டாம்.அதே போன்று பொத்தாம் பொதுவாக ஒரு முடிவுக்கு வருவதும் தவறு. உதாரணத்துக்கு ஒருநாள் வேலையில் இருந்து தாமதமாக வந்தால், 'உனக்கு லேட்டா வர்றதே பொழப்பு’ என முடிவுக்கு வர வேண்டாம்.

    5. கணவன்-மனைவி சண்டைகளுக்கு முக்கிய காரணமே எதையும் வேண்டுகோளாகக் கேட்காமல் கட்டளையாகச் சொல்வதுதான். அதைத் தவிர்த்து, பணிவான அணுகுமுறையைக் கையாள வேண்டியது முக்கியம்.

    6. துணையைப் பற்றி நீங்களாக ஒரு முன்முடிவுக்கு வராதீர்கள். `நீ இப்படித்தான்னு எனக்குத் தெரியும்...’ என்பதும் துணை செய்கிற வேலைகளுக்கு ஒரு நோக்கம் கற்பிப்பதும் மிகத் தவறு. துணையின் மனதைப் படிக்கிறவராக நடந்து கொள்வது ஆபத்தானதும்கூட. எனவே, பேசும் போது உணர்வுகளுக்கும் எண்ணங்களுக்கும் விருப்பங்களுக்கும் மதிப்பளித்து பேசுவது இருவருக்கும் இடையிலான நெருக்கம் கூட்டும்.

    7. எல்லா பிரச்னைகளையுமே தீர்த்து விட முடியும் என நம்ப வேண்டாம். எந்த விஷயங்களை எல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாது எனப் பார்த்து, அந்த உண்மையை ஏற்றுக் கொள்ளுங்கள். திருமணத்துக்கு முன்பேகூட இவற்றை எல்லாம் பேசித் தீர்த்துக் கொள்ளலாம். பல திருமணங்களில் இருவருக்கும் இடையில் மிகப்பெரிய கருத்து வேறுபாடுகள் இருக்கும். ஆனாலும், அவர்களது திருமண வாழ்க்கை நன்றாகவே நகரும். இன்னும் சிலரோ மிகச்சிறிய விஷயங்களைக் கூடப் பேசித் தீர்க்காமல் ஊதிப் பெரிதாக்கி, ஒவ்வொன்றுக்கும் சண்டை போட்டுக் கொண்டிருப்பார்கள். கணவன்-மனைவி இருவரின் நம்பிக்கைகள், நடத்தைகள், அணுகுமுறைகள் இவற்றில் யாருடையது சரி, யாருடையது தவறு என ஒரு முடிவெடுப்பது தேவையற்றது. வேற்றுமையில் ஒற்றுமையுடன் வாழ்வதுதான் சரியானது.

    பல திருமணங்களில் இருவருக்கும் இடையில் மிகப்பெரிய கருத்து வேறுபாடுகள் இருக்கும். ஆனாலும், அவர்களது திருமண வாழ்க்கை நன்றாகவே நகரும். இன்னும் சிலரோ மிகச்சிறிய விஷயங்களைக் கூடப் பேசித் தீர்க்காமல் ஊதிப் பெரிதாக்கி, ஒவ்வொன்றுக்கும் சண்டை போட்டுக் கொண்டிருப்பார்கள்.


    (வாழ்வோம்!)



    jv_66 likes this.

  5. #35
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    கணவன் மனைவி இப்படி இருந்தால் வீடே சொர்க்

    கணவன் மனைவி இப்படி இருந்தால் வீடே சொர்க்கம் தான்..



    1.எண்ணங்கள் வெவ்வேறாக இருந்தாலும் , ஒருவர் எண்ணத்திற்கு ஒருவர் மதிப்பு தந்து சொல்வதை காதில் வாங்க வேண்டும்.

    2.கணவன் மட்டுமே வேலைக்கு செல்லும் வீட்டில் ,தன்னால் தான் குடும்ப பொருளாதாரம் இயங்குகிறது என்பதை எப்போதும் கணவன் வார்த்தைகளில் வெளிப்படுத்தக் கூடாது.

    3.மனைவியும் வேலைக்கு செல்லும் வீட்டில், நானும் தான் வேலைக்கு போறேன் என்ற வார்த்தையை மனைவி அடிக்கடி சொல்லக் கூடாது.

    4.இவரிடம்/இவளிடம் இதைச் சொன்னால் பெரிய பூகம்பமே வெடிக்குமோ என்ற பயத்தை ஒரு போதும் மனைவிக்கு கணவனும், கணவனுக்கு மனைவியும் தரக்கூடாது.பொய்யின் ஆரம்பமே பயம் தான்.

    5.எவ்வளவு பெரிய சண்டை என்றாலும் உங்கள் இருவர் பற்றி மட்டும் தான் பேச வேண்டும்.கணவன் குடும்பத்தாரை பற்றி மனைவியும், மனைவியின் குடும்பத்தாரை பற்றி கணவனும் பேசவே கூடாது.தவறுகளில் மிகப்பெரிய தவறு இது.

    6.மனைவியை தன்னில் ஒரு பாதியாக பார்க்காவிட்டாலும் வேலைக்காரியாய் பார்க்காமல் இருப்பது கணவனுக்கு அழகு.

    7.மனைவியை ஏற்றது போல் அவள் குடும்பத்தையும் முழுமனதாய் கணவன் ஏற்க வேண்டும்.கணவனை ஏற்றது போல் அவன் குடும்பத்தையும் முழுமனதாய் மனைவி ஏற்க வேண்டும்.( இப்படி வாழ்ந்தால் முதியோர் இல்லங்கள் நிச்சயம் குறையும்)

    8.கணவன் நண்பர்களுடன் ஊர் சுற்றி விட்டு நேரம் கழித்து வீடு வருவது.
    மனைவியை மட்டும் வீட்டுக்குள்ளே ஆயுள் கைதி ஆக்குவது, அவளை வெளியுலகம் அறியவிடாமல் செய்வது தவறு. படிப்பறிவில்லா பெண்களை சில ஆண்கள் இப்படித்தான் நடத்துகின்றனர்.

    9.கணவனும் மனைவியும் தனித் தனியே வெளியில் சென்றால் நேரமாய் வீடு திரும்ப வேண்டும் .அப்படி நியாயமான காரணத்திற்காக தாமதம் ஏற்பட்டால் ஒருவர் சொல்லும் காரணத்தை ஒருவர் நம்பி ஏற்றக் கொள்ளவேண்டும்.

    10.அம்மாவின் சமையல் பக்குவத்தை எதிர்பார்த்து மனைவியின் சமையலை சாப்பிட்டு, ஏமாற்றம் என்றதும் அவளை திட்டக் கூடாது.அப்படி திட்டுவேன் தான் என்றால் அதற்கு முன் ஒன்றை யோசியுங்கள்.

    திருமணம் ஆன புதிதில் உங்க அம்மாவும் இப்படித் தான் உங்க அப்பாவிடம் திட்டு வாங்கி இருப்பார்கள் சமையலுக்காக.பக்குவம் பார்த்ததும் வந்து விடக்கூடியதல்ல.பல வருட அனுபவத்தில் வருவது.நரகமாய் இருக்கும் வீடு சொர்க்கம் ஆவதும், சொர்க்கமாய் இருந்த வீடு நரகம் ஆவதும் கணவன் மனைவி நடந்து கொள்ளும் விதத்தில் தான் இருக்கிறது.


    Last edited by chan; 14th Feb 2016 at 05:16 PM.
    jv_66 likes this.

  6. #36
    jayakalaiselvi's Avatar
    jayakalaiselvi is offline Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Aug 2014
    Location
    India
    Posts
    8,384

    Re: கணவன் மனைவி இப்படி இருந்தால் வீடே சொர்க

    Ippadi irundha nalladhan irukkum......

    TFS lakshmi sis.....

    காதலை பற்றி அக்கறை பட்டதே இல்லை
    உன் அக்கறை காதலை மட்டுமே சொல்கிறது......

  7. #37
    kvsuresh's Avatar
    kvsuresh is offline Guru's of Penmai
    Real Name
    KothaiSuresh
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    chennai
    Posts
    7,167

    Re: கணவன் மனைவி இப்படி இருந்தால் வீடே சொர்க

    nice, ippadi irundha nalla than irukkum, neenga solvadhu pola, mudhiyor illam kuraindhu vidum, ulagame sorgamaga marividum, nadakuma?


    KOTHAISURESH

  8. #38
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

  9. #39
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    மாற்றம் ஒன்றே மாறாதது

    மாற்றம் ஒன்றே மாறாதது


    10 சதவிகிதம் கூட நல்ல பலன் தரும்!

    என்ன பேசினாலும் துணையை மாற்ற முடியவில்லை என்கிற குற்றச்சாட்டும் இருதரப்பிலிருந்தும் வருவதுண்டு. துணைதான் எப்போதும் தவறு செய்கிறவர் என்கிற எண்ணமும் இருவருக்கும் இருப்பதுண்டு. எவ்வளவோ முயற்சி செய்தும், துணையைத் திருத்த முடியவில்லை...’ விவாகரத்து முடிவில் இருக்கும் பலரும் இப்படிச் சொல்லிக் கேட்டிருக்கிறேன். இந்தப் பிரச்னைக்கான தீர்வுகளைப் பற்றி பிறகு விரிவாகப் பார்ப்போம்.

    மாற்றம் ஒன்றே மாறாதது என்பது உலக நியதி.திருமணமான தம்பதியரிடம் கேட்டுப் பாருங்களேன். தன் துணையை மாற்றவே முடியவில்லை.. உலகத்திலேயே மாற்ற முடியாத ஒரே நபர் தன் வாழ்க்கைத்துணை என்பார்கள்.

    ஏன் இப்படி?

    எல்லா தம்பதியருக்குமே தன் விருப்பப்படி தன் துணையை மாற்றி விட வேண்டும் என்பதே ஆசை. தன் துணை சரியில்லை என்பதே அவர்களது வாதமாக இருக்கும். மற்றவரை குறை சொல்கிற இந்த பிளேமிங் கேமை (Blaming Game) நாம் சிறு வயதிலிருந்தே பழகுகிறோம். நம் வாழ்க்கையில் நம்மைச் சுற்றி நடக்கிற விஷயங்களில் நம் பங்கு எதுவும் இல்லை என நம்புகிறோம். இருவர் தரப்பிலுமே பிரச்னைகள் இருப்பதுதான் உண்மை. மாற வேண்டியவர்கள் இருவரும்தான். கணவர் அல்லது மனைவிக்கு மனரீதியான பிரச்னை இருப்பதாகவும் அவர்தான் மாற வேண்டும் என்று எதிர்பார்ப்பதும் மிகவும் தவறு.

    அடுத்தவர் மாற வேண்டும் என எதிர்பார்க்காமல், நாம் மாறுவோமே என சுய மாற்றத்துக்குத் தயாரானாலே இருவரின் வாழ்க்கையிலும் மிகப் பெரிய அதிசயங்கள் நிகழும். துணையின் மீது தான் வைக்கிற குற்றச்சாட்டுகளை ஒரு கட்டத்தில் துணையையே நம்பவும் வைத்துவிடுவார்கள். உதாரணத்துக்கு... ‘உனக்கு ஒண்ணும் தெரியாது. நீ எதுக்கும் லாயக்கில்லை’ என்று மனைவியை எப்போதும் விமர்சித்துக் கொண்டிருப்பார்கள் சில கணவர்கள். இதைக் கேட்டுக்கேட்டுப் பழகும் மனைவிக்கு ஒரு கட்டத்தில் தான் உண்மையிலேயே அப்படித்தான் என்கிற எண்ணம் வந்துவிடும். தான் உபயோகமற்றவர் என்றே நம்ப ஆரம்பித்துவிடுவார். இந்த விஷயத்தில் கணவன்- மனைவி இருவருக்குமே சிகிச்சைகள் தேவை. இருவருமே மனமுதிர்ச்சியை வளர்த்துக் கொள்ள வேண்டியதும் அவசியம்.

    கணவன்-மனைவி இருவரில் ஒருவர் சம்பாதிக்கிறவராக இருக்கிற பட்சத்தில் சம்பாதிக்கிறவருக்கு சம்பாதிக்காத தன் துணை அனாவசிய செலவுகளைச் செய்வதாகத் தோன்றும். ஆனால், சம்பாதிக்காதவருக்கோ தன் துணை அநியாயத்துக்கு கருமியாக இருப்பதாகத் தோன்றும். பணத்தை எப்படிக் கையாள வேண்டும் என இருவருக்கும் பக்குவத்தை ஏற்படுத்துவதுதான் இதில் தீர்வாக அமையும். சில தம்பதியர் துணையுடன் பேசும் போதே வெறுப்புடனும் கோபத்துடனும் பேசுவார்கள். துணை தன்னை ஏமாற்றிவிட்டதாக ஒரு கோபம் உள்ளுக்குள் இருக்கும். இதே போன்ற பேச்சைத் தொடரும் பட்சத்தில் இருவராலும் அவர்களது உறவை பாசிட்டிவான தளத்துக்குள் கொண்டு செல்வதென்பது இயலாததாகி விடும். உணர்வுரீதியான இந்த வெறுப்பை இருவரில் ஒருவர் நினைத்தால்கூட குறைத்துக் கொள்ள முடியும். மாறுவதென முடிவெடுத்த பிறகு, தன் துணையை வற்புறுத்தியோ, இம்சித்தோ நான் மாறுகிறேன்... நீயும் மாறு’ என துன்புறுத்தக்கூடாது.

    பெரும்பாலான தம்பதியர் பிரச்னைகளின் ஆரம்பத்திலேயே மாற்றங்களைப் பற்றி யோசிப்பதில்லை. உறவானது விவாகரத்து வரை போன பிறகுதான் மாற்றத்தைப் பற்றி நினைப்பார்கள். அதற்குள் விஷயம் விபரீதமாகி இருக்கும். இன்னும் சிலர் துணையை விவாகரத்து செய்து விடுவேன் என மிரட்டிக் கொண்டே இருப்பார்கள். இது எதிராளிக்கு பாதுகாப்பில்லாத உணர்வைத் தருவதுடன் நெருக்கத்தையும் சிதைக்கும். ஒரு கட்டத்தில் மிரட்டப்படுகிற துணையும் அந்த முடிவை நோக்கி மனரீதியாகத் தயாராகி விடுவார்.

    சண்டை போடத்தான் இரண்டு நபர்கள் தேவை. மாறுவதற்கு ஒருவர் போதும். எனவே, பிரச்னைகள் இல்லாத தாம்பத்திய வாழ்க்கையை விரும்பினால் இருவரில் ஒருவர் மாற நினைத்தாலே போதும். அந்த எண்ணத்தில் உறுதியாக நிற்கவும் வேண்டும். சேர்ந்து வாழ நினைப்பவர்களுக்கு மாற்றங்களுக்கு உடன்படுவதும் சுலபம்.

    மாறுவதென முடிவெடுத்த நபர், ‘நாம் ரொம்பவும் அதிகமாக விட்டுக் கொடுத்துவிட்டோமோ... முட்டாளாக்கப்பட்டோமோ... இப்படியே இருந்தால் ஏமாந்து போய் நிற்போமோ’ என்றெல்லாம் நினைக்கக்கூடும். அதற்காகவே மாற்றத்தை செயல்படுத்த பயப்படுவார்கள். துணையை மாற்ற நினைப்பதைவிட, தான் மாறுவதென்கிற முடிவு உண்மையில் விரைவானதும் சுலபமானதும் ஆகும். அந்த எண்ணம் ஒருவரை பலவீனமானவராக மாற்றுவதற்குப் பதில் மனதைரியம் மிக்கவராகவே மாற்றும். எதையும் நம்மால் சகித்துக் கொண்டு வாழ முடியும் என்கிற எண்ணத்தைக் கொடுக்கும். துணையுடனான சண்டையின் போது ஏற்படுகிற பயம், பதற்றம் போன்றவை இருக்காது. இந்த உணர்வுகள் எல்லாம் முதலில் புரியாது.

    மாறுவதென்கிற முடிவுக்கு அதிகபட்ச சுயக்கட்டுப்பாடு அவசியம். மாற ஆரம்பித்ததும் வழக்கமான சூழலே மாறிப் போகும். அது இருவருக்குமே அதிர்ச்சியைத் தரும். துணை நம்மை எப்படி வேண்டுமானாலும் நடத்திவிட்டுப் போகட்டும்... நாம் சரியாகவும் பக்குவத்துடனும் நடந்து கொள்வோம் என்கிற உறுதியுடன் மாற்றத்தைத் தொடர வேண்டும். ஒருவர் மாறியதும், இன்னொருவருக்கு ஒரு சிக்கல் வரும். தானும் மாறியே ஆக வேண்டுமென நினைக்கலாம் அல்லது துணையின் மீதான கோபம் முன்னைவிட இன்னும் அதிகமாகலாம். இப்படியொரு ரிஸ்க் இருந்தாலுமே சுய மாற்றத்துக்குத் தயாராவதே சிறந்த வழி. காலப்போக்கில் இது இருவரையும் உணர்வுரீதியாக வளரவும் பக்குவப்படவும் செய்யும்.

    சரி, எவ்வளவு மாற வேண்டும் என்கிற கேள்வியும் காலம் முழுக்க நான் மட்டுமே மாறிக்கொண்டே இருக்க வேண்டுமா என்கிற கேள்வியும் வரலாம்.வெறும் 10 சதவிகித மாற்றமே போதுமானது. மேஜிக் மாதிரி ஒருவரை 100 சதவிகிதம் மாற்றிவிடலாம் என நினைக்கக்கூடாது. அது அவசியமும் இல்லை. வெறும் 10 சதவிகித மாற்றமே அவர்களது உறவில் மிகப்பெரிய வித்தியாசத்தைக் காட்டும். சிலர் மாறவே முடியாமல் இருக்கக் காரணம் அவர்களுக்குள் இருக்கும் கோபம். நான் ஏன் மாற வேண்டும் என்கிற கேள்வியைத் தவிர்த்து மாறினால் என்ன என யோசித்தாலே பெரிய மாற்றங்களை உணர்வார்கள்.

    பரஸ்பர பாராட்டு என்பதும் இங்கே மிக முக்கியமான விஷயமாகிறது. மிக மிக நல்ல தம்பதியர்கூட வாழ்க்கையில் ஒருவரை ஒருவர் பாராட்டிக் கொண்டே இருக்க மாட்டார்கள். இது அவங்க வேலைதானே... இதுல என்ன பாராட்டு வேண்டியிருக்கு என நினைப்பார்கள். அந்த மனோபாவம் தவிர்த்து துணையை சின்னச் சின்ன விஷயங்களுக்குக் கூட பாராட்டக் கற்றுக் கொள்வது காதல் வளர்க்கும்.

    அடுத்தது விட்டுக் கொடுத்தல். அற்ப விஷயங்களாக இருக்கும். ஆனாலும் அதை விட்டுக் கொடுக்க மனமின்றி சண்டை போடுவார்கள். சின்னச் சின்ன விட்டுக் கொடுத்தல்கள் இருவரது வாழ்க்கையையும் அழகாக்கும் என்பதை அனுபவித்தால்தான் தெரியும்.

    ஒருவர் மீது ஒருவர் புகார் சொல்லிக் கொள்வது அடுத்த தவறு. எந்த ஒரு சின்ன விஷயமும் தவறு எனத் தோன்றினால் உடனே துணையின் மீது புகார் செய்கிற மனோபாவம் பலருக்கும் உண்டு. இவற்றை எல்லாம் தவிர்த்து... துணை பேசும் போது எதிர்த்து சண்டைக்கு நிற்காமல் பேச்சை முழுமையாக கவனிப்பது, துணையிடம் காணப்படுகிற நல்ல தன்மைகளை சப்போர்ட் செய்து ஊக்கப்படுத்துவது, உன்னால் முடியும் என நம்பிக்கை தருவது போன்ற அணுகுமுறைகள் உதவும். துணை தானாக விரும்பிக் கேட்காத வரை எந்தப் பிரச்னைக்கும் தீர்வு சொல்வதைத் தவிர்க்க வேண்டும். பல நேரங்களில் தன் துணை தான் பேசுவதைக் கேட்டால் போதும் என்றும் தீர்வு சொல்லத் தேவையில்லை என்றுமே பலரும் எதிர்பார்க்கிறார்கள்.

    இவற்றை எல்லாம் பின்பற்றினாலும் உறவில் பெரிய மாற்றம் வந்துவிடாது. ஏற்கனவே மோசமான நிலைக்குப் போன உறவை ஒரே இரவில் மாற்றிவிட முடியாது. இருவர் தரப்பிலும் நிறைய கோபம், வெறுப்பு, எரிச்சல் எல்லாம் இருக்கும். இருவரில் ஒருவருக்கு அப்படி இருந்தால் சில நேரங்களில் மருந்துகள் மூலம் சிகிச்சை அளிப்பதுகூட பயனளிக்கும். மூளையை மனதோடு சம்பந்தப்பட்ட உறுப்பாக மட்டும் பார்க்காமல், அதை உடலின் ஒரு அங்கமாக நினைத்து, மருந்துகள் தேவைப்பட்டால் கொடுத்து சரியாக்குவதன் மூலம் தம்பதியரிடையே நம்பமுடியாத மாற்றங்களை நிகழ்த்த முடியும்.

    வாழ்க்கை என்பதே ஒரு மாற்றம்தான். அதில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்த முடியும். சில திருமணங்களில் அந்த மாற்றங்கள் வேகமாகவும் சிலதில் மெதுவாகவும் நிகழும். அமைதியாக ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டிக் கொள்ளாமல் கட்டளையிடாமல் பணிவுடன் அணுகும் போது அந்த மாற்றங்கள் சிறப்பாக அமையும். `நீ இப்படி நடந்து கொள்’ எனச் சொல்வதற்குப் பதில் நான் எப்படி நடந்து கொள்கிறேன்’ எனக் காட்டுவதே மாற்றத்துக்கான முதல் படி.

    அடுத்தவர் மாறவேண்டும் என எதிர்பார்க்காமல், நாம் மாறுவோமே என சுய மாற்றத்துக்குத் தயாரானாலே இருவரின் வாழ்க்கையிலும் மிகப் பெரிய அதிசயங்கள் நிகழும்.

    சின்னச் சின்ன விட்டுக் கொடுத்தல்கள் இருவரது வாழ்க்கையையும் அழகாக்கும் என்பதை அனுபவித்தால்தான் தெரியும்.



    (வாழ்வோம்!)


    jv_66 likes this.

  10. #40
    Gender
    Female
    Join Date
    Feb 2016
    Location
    chennai
    Posts
    1

    Re: கணவன் மனைவி இப்படி இருந்தால் வீடே சொர்க

    really a nice post have to read all husband and wife


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter