Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine December! | All Issues

User Tag List

Like Tree32Likes

For a Successful married life...-இரு மனம் இணைந்தது தான் திருமணம்


Discussions on "For a Successful married life...-இரு மனம் இணைந்தது தான் திருமணம்" in "Married Life" forum.


  1. #41
    kkmathy's Avatar
    kkmathy is offline Minister's of Penmai
    Real Name
    komathy
    Gender
    Female
    Join Date
    Jun 2012
    Location
    Malaysia
    Posts
    3,189

    Re: மாற்றம் ஒன்றே மாறாதது

    Very good sharing, Letchmy.


    Sponsored Links

  2. #42
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    உடல்நலம் சரியில்லாத போது மனைவி கணவரிடம்

    உடல்நலம் சரியில்லாத போது மனைவி கணவரிடம் எதிர்பார்ப்பவை

    பெண்கள் தங்களுக்கு உடல்நிலை சரியில்லை எனில், ஆண்கள் விழுந்து விழுந்து கவனிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கவில்லை. குறைந்தபட்சம் சில வீட்டு வேலைகள், தங்கள் மீது அக்கறை அரவணைப்பு காட்டினாலே போதும் என்று தான் எதிர்பார்கிறார்கள்.....

    மனதளவிலான அரவணைப்பு ஓர் பெண்ணுக்கு மிகவும் அவசியம். மாத்திரை, மருந்துகளை விட நோய்வாய்ப்பட்டு இருப்பவருக்கு உறுதுணையாக இருக்க கூடிய ஓர் நபர் தான் தேவை. இந்த அரவணைப்பு மனதளவில் பெரும் பலத்தை கொடுத்து விரைவாக மீண்டுவர உதவும்.

    அவர்களது உடல் ரீதியாக அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும். அவர்களால் வேலைகள் செய்ய முடியாத போது உடனிருந்து உதவ வேண்டும். பெண்கள் பெரும்பாலும் அனைத்து உதவிகளும் செய்வார்கள், ஆனால், ஆண்கள் அவ்வாறு செய்வது இல்லை. அவர்களை கழிவறைக்கு கூட்டி செல்வதில் இருந்து, குளிப்பாட்டி, உடை மாற்றுவது வரை உறுதுணையாக இருந்து உதவி அக்கறையாக இருக்க வேண்டும்.

    பெண்களுக்கு உடல்நிலை சரியில்லாத போது, ஆண்கள் வீட்டு வேலைகள் செய்வது எந்த தவறும் இல்லை. ஆனால், பெரும்பாலும் ஆண்கள் பெண்களுக்கு உடல்நிலை சரியில்லை எனில், வீட்டு வேலைகளை அப்படியே விட்டுவிடுவார்கள். மீண்டும் உடல்நலம் சரியாகி வந்து பெண்கள் தான் அதை செய்ய வேண்டியிருக்கும்.

    உணவு சார்ந்து பெண்கள் தான் ஆண்களுக்கு அறிவுரை கூறுவார்கள். ஆனால், அவர்களுக்கு உடல்நிலை சரியில்லாத போது அவர்களே அதை மறந்துவிடுவார்கள். எனவே, அந்த தருணத்தில் தான் நாம் அதை அவர்களுக்கு மீண்டும் எடுத்துரைக்க வேண்டும். கண்டிப்பாக சரியாக உணவருந்த மாட்டார்கள், நீங்கள் தான் அவர்களை கட்டாயப்படுத்தி உணவருந்த கூற வேண்டும்.

    பெரும்பாலும் அனைவரின் மீதும் அக்கறை எடுத்துக் கொள்ளும் பெண்கள், அவர்களுக்கு ஏதேனும் என்றால், மருத்துவம் எல்லாம் தேவை இல்லை அதுவாக சரியாகிவிடும் என்று கூறிவிடுவார்கள். எனவே, சரியான நேரத்தில் சிகிச்சைக்கு அழைத்து செல்ல வேண்டும், மருந்து மாத்திரைகள் எடுத்துக் கொள்ள கூற வேண்டும்.

    jv_66 likes this.

  3. #43
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    சுய பரிசோதனை

    சுய பரிசோதனை


    அமைதி விரும்பிகளும் ஆவேச மனிதர்களும்

    திருமணத்தில் இணைகிற இருவரும், புதிதாக அவர்களுக்கென குடும்ப விதிகளை உருவாக்குவதாக நினைக்கிறார்கள். ஆனால், இருவருமே அவரவர் வளர்ந்த பின்னணியில் இருந்து பழைய குப்பைகளை சுமந்து வந்து புதிய உறவில் புகுத்துகிறார்கள் என்பதே உண்மை. அதனால்தான் தன் துணை தான் விரும்பியபடி நடந்து கொள்ளாதபட்சத்தில் கோபப்படத் தோன்றும். தன் வாழ்க்கையில் எப்போதோ சந்தித்த நிகழ்வுகளின் தாக்கம், உறவுகளி ன் அணுகுமுறை போன்ற பல விஷயங்களும் ஆழ்மனத்தில் பதிந்து போய், அது இயக்கும்படிதான் நிகழ்காலத்தில் நடக்க வைக்கும்.



    அந்தக் காலத்தில் ஆண்கள் வேலைக்குச் செல்வார்கள். பெண்கள் வீட்டு வேலைகளைப் பார்ப்பார்கள். மனைவி பேச்சைக் கேட்கிற கணவனை, ஊரும் உலகமும் வசை பாடும். பெரும்பாலான கணவர்கள் மனைவியை தனக்குச் சமமாக நடத்தியிருக்க மாட்டார்கள். எந்த விஷயத்துக்கும் மனைவியின் அபிப்ராயமும் கேட்க மாட்டார்கள். இப்படிப்பட்ட அணுகுமுறை தன்னுடைய குடும்பப் பின்னணியில் இருந்து, தன் பெற்றோரிடம் இருந்து, தன் வளர்ப்பிலிருந்து வந்தது என்பதை அவர்கள் அறிந்திருக்க மாட்டார்கள். எப்போதும் கணவனிடமோ, மனைவியிடமோ எரிந்து விழுவதும், கோபமாகவே பேசுவதும் சிலருக்கு இயல்பிலேயே ஊறிப் போயிருக்கும். அவர்களது பெற்றோரைப் பார்த்து தெரிந்தோ தெரியாமலோ அதைத் தாமும் பின்பற்றுவார்கள். அப்படி இருக்கக்கூடாது என நினைத்தாலும் அவர்களால் முடியாது. சமைப்பதும் குழந்தையைக் கவனிப்பதும் மனைவியின் வேலை என்றே நினைப்பார்கள். இன்றும்கூட மனைவியின் சேலையை கணவன் துவைப்பதை தமிழ் சினிமாக்களில் காமெடி காட்சியாக வைப்பதைப் பார்க்கிறோம்.

    இப்படிப் பல விஷயங்களையும் கணவனும் மனைவியும் அவர்களையும் அறியாமலேயே தங்கள் திருமண உறவுக்குள் சுமந்து கொண்டு வந்து விடுகிறார்கள். இவற்றில் உணர்வு ரீதியான சில விஷயங்கள், நம்பிக்கைகள், மதிப்பீடுகள் என எல்லாம் அடக்கம். `வீட்ல ஏதாவது பிரச்னைன்னா இவர் அமைதியா உட்கார்ந்து பேசி சுமுகமா ஒரு முடிவுக்கு வந்து நான் பார்த்ததே இல்ல சார். கன்னாபின்னானு திட்டிட்டு, கதவை ஓங்கி அடிச்சு சாத்திட்டுப் போயிடுவார்...’ - தன் கணவரைப் பற்றி என்னிடம் இப்படிச் சொன்னார் ஒரு பெண். பிரச்னை என்றால் உட்கார்ந்து பேசித் தீர்வு காண வேண்டும் எனத் தெரியாமல் கதவை அடித்துக் கொண்டு போவதுதான் தீர்வு என்பதை அந்தக் கணவர் அவர் வளர்ந்த சூழலில் இருந்து கொண்டு வந்திருக்கிறார். தான் வளர்ந்த சூழலில் இருந்து சில விஷயங்களை சுமந்து கொண்டு புதிய உறவுக்குள் அடியெடுத்து வைக்கிற ஆண்கள் அதிர்ச்சியை சந்திக்கிறார்கள். இந்தத் தலைமுறைப் பெண்கள் வேலைக்குச் செல்கிறார்கள். சம உரிமை கேட்கிறார்கள். இந்த விஷயத்தில் ஆண்களுக்கு சாய்ஸ் குறைவாக இருக்கிறது. ஒன்று மனைவிக்கு ஏற்றபடி மாறியாக வேண்டும் அல்லது அந்த உறவே வேண்டாம் என விவாகரத்துக்குத் தயாராக வேண்டும். பெரும்பாலான தம்பதியரும் தங்களுக்கிடையிலான மனவேற்றுமைக்கும் பிரச்னைகளுக்குமான அடிப்படை என்ன என்பதையே புரிந்து கொள்ளாமல் சண்டையை மட்டும் தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள்.

    மனைவி வேலைக்குச் செல்ல வேண்டும் என எதிர்பார்க்கும் கணவன், தன் மனைவி வெளி வேலையை மட்டும் பார்க்காமல் தன் பெற்றோரைப் பராமரிப்பது, வீட்டுவேலைகளைப் பார்ப்பது போன்றவற்றையும் சேர்த்தே செய்ய வேண்டும் என எதிர்பார்க்கிறான். அதோடு, தன் கோபக்கார அப்பா மனைவியை ஏதாவது திட்டினால் அமைதியாகக் கேட்டுக் கொள்ள வேண்டும், மாமியாரின் வசவுகளையும் விமர்சனங்களையும் பெரிதுபடுத்தாமல் அமைதி காக்க வேண்டும் என்றும் எதிர்பார்க்கிறான். கடந்த தலைமுறை திருமண உறவுகளுக்கும் இந்தத் தலைமுறை திருமண உறவுகளுக்கும் நிறைய வித்தியாசங்கள் வந்துவிட்டதை அவர்கள் புரிந்து கொள்வதில்லை. அந்தப் புரிதல் ஏற்படாவிட்டால் திருமண உறவில் சிக்கல்களும் சிரமங்களும் அதிகரிக்கவே செய்யும்.

    இப்படியொரு சூழ்நிலையில் தம்பதியர் என்ன செய்யலாம்? இருவரும் தம்மைத் தாமே சுய பரிசோதனை செய்து சில விஷயங்களை கண்டுபிடிக்கலாம். நமக்கு ஒரு பிரச்னை வரும்போது அதை எப்படி சமாளிக்கிறோம்? அதே பிரச்னையை நம் பெற்றோர் எப்படி சமாளித்தார்களோ அப்படியே செய்கிறோமா? அல்லது நவீன முறைப்படி அணுகுகிறோமா? அந்தப் பிரச்னையால் உண்டாகிற சிக்கல்களை, மன அழுத்தத்தை எப்படி எடுத்துக் கொள்கிறோம்? அதிலும் நம் பெற்றோரின் தாக்கம் இருக்கிறதா? அல்லது கால மாற்றத்துக்கேற்ப நம்முடைய பாணியில் எடுத்துக் கொள்கிறோமா?

    குடும்பத்தில் நம்முடைய பங்கு என்ன? ஒரு பிரச்னை எழுகிற போது அதை அமைதியாக கவனிக்கிறோமா? அல்லது புரட்சியாளராக அணுகுகிறோமா? பீஸ் மேக்கர் என்கிற அமைதி விரும்பிகள் பிரச்னையில் தலையிட்டு அதை சமாதானமாக முடித்து வைக்க விரும்புவார்கள். புரட்சியாளர்கள் என்றால் பிரச்னையில் சண்டைபோட்டு அதிலிருந்து கோபத்துடன் வெளியேறுவார்கள். இந்த இரண்டில் நீங்கள் எந்த ரகம்? சிறு வயதில் நாம் ஒரு குழந்தையாக அடுத்தவரால் காயப்படுத்தப்பட்டிருக்கிறோமா? ஏமாற்றப்பட்டிருக்கிறோமா? அதன் பாதிப்புகளால்தான் இப்போது பிரச்னைகளின் போது ஓவர் ரியாக்ட் செய்கிறோமா?

    யாராவது நம்மை கன்வின்ஸ் செய்து அவர்கள் வழிக்கு சம்மதிக்க வைத்துவிடுவார்களோ என்று பயப்படுகிறீர்களா? அதன் காரணமாக யார் என்ன அறிவுரை சொன்னாலும் கேட்பதில்லையா? நான்தான் எப்போதும் சரியானவன்(ள்) என்கிற எண்ணம் கொண்டவரா? தவறுகளை ஒருபோதும் ஏற்காதவரா? சிலர் சிறு வயதில் இளவரசர்களாக, இளவரசிகளாக அதீத செல்லம் கொடுத்து வளர்க்கப்பட்டிருப்பார்கள். அதன் காரணமாக பின்னாளில் தனக்கு எல்லாமே மிகச்சரியாக அமைய வேண்டும் என எதிர்பார்ப்பார்கள். உங்கள் விஷயத்தில் இப்படி நடந்ததுண்டா? சிலர் பெற்றோரால் தன்னம்பிக்கையே இல்லாமல், எதற்கும் உபயோகமற்றவராக வளர்க்கப்பட்டிருப்பார்கள். நீங்கள் எப்படி? உங்கள் குடும்பத்தில் சந்தோஷத்தையோ, அன்பையோ எப்படி வெளிப்படுத்துவது வழக்கம்? கட்டித் தழுவியா? அல்லது வெறும் வார்த்தைகளிலா?

    குடும்பப் பாரம்பரியங்களை நீங்கள் எப்படி வெளிப்படுத்துகிறீர்கள்? சிலர் பெற்றோர் சொல்வதை அப்படியே ஏற்று நடப்பார்கள். சிலர் எதிர்ப்பார்கள். சிலர் வளைந்து கொடுப்பவர்களாக இருப்பார்கள். இந்த எல்லா அணுகுமுறைகளுமே திருமண உறவில் தாக்கத்தை ஏற்படுத்தும். மேற்சொன்ன விஷயங்களை சுய ஆராய்ச்சி செய்து நாம் யார், நமது அடையாளம் என்ன, கணவன் - மனைவி உறவில் நமது அணுகுமுறை என்ன என்கிற தெளிவைப் பெற வேண்டும். புதிதாக இணைந்த இருவரின் வாழ்க்கையில் ஏற்படுகிற பல பிரச்னைகளுக்கும் இருவரும் அவரவர் பங்குக்கு சுமந்து கொண்டு வந்த விஷயங்கள்தான் காரணம் என்பது அப்போது புரியும். இப்படி சுமந்து வந்த விஷயங்களை சடார் என உடைத்துத் தகர்த்து வெளியில் வருவது என்பது எல்லோருக்கும் உடனே சாத்தியமாவதில்லை. இரு தரப்பு குடும்பத்தாரின் தாக்கமும் தொடர்ந்து கொண்டிருப்பதால் அது சிரமமாகவே இருக்கும். இதைத்தான் `You can’t go home again...’ என்கிறார் தாமஸ் உல்ஃப். அதாவது, ஒவ்வொருவரும் தான் கடந்து வந்த பாதையை, வாழ்க்கையை இன்னொரு முறை கடக்க முடியாது. அவற்றின் சுவடுகளை சுமந்து கொண்டே தொடர்கிறோம் என்கிறார். உண்மைதானே?

    சிலர் சிறு வயதில் இளவரசர்களாக, இளவரசிகளாக அதீத செல்லம் கொடுத்து வளர்க்கப்பட்டிருப்பார்கள். அதன் காரணமாக பின்னாளில் தனக்கு எல்லாமே மிகச்சரியாக அமைய வேண்டும் என எதிர்பார்ப்பார்கள். உங்கள் விஷயத்தில் இப்படி நடந்ததுண்டா?



    (வாழ்வோம்!)


    jv_66 likes this.

  4. #44
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    மகிழ்ச்சி: கொஞ்ச நேரம் கொஞ்சலாமே

    மகிழ்ச்சி: கொஞ்ச நேரம் கொஞ்சலாமே


    ‘அவர் என்னிடம் அன்பாக இல்லை’’ – இது மனைவியின் புலம்பல். ‘‘நான் என்ன சொன்னாலும் அவள் புரிஞ்சுக்கமாட்டேங்குறா?’’ – இது கணவரின் ஆதங்கம். இப்படி எதற்கெடுத்தாலும் எதிரும், புதிருமாக முட்டி மோதிக் கொள்ளும் தம்பதியர் பெருகிவிட்டார்கள். இந்த முட்டல் மோதல் ஏன்? சண்டைகள் பெருகி உறவு கசக்க காரணம் என்ன? இதற்கு தீர்வே கிடையாதா?...

    எல்லாவற்றுக்குமே தீர்வு இருக்கிறது. இல்லறத்தில் இல்லாத இனிமைகளா? பரஸ்பரம் புரிந்து கொள்வதில் இருக்கிறது பாதி வாழ்க்கை, விட்டுக் கொடுப்பதில் இருக்கிறது மீதி வாழ்க்கை. எப்போது கணவன், மனைவியின் நிலையை புரிந்து கொள்ள வேண்டும், எப்போது யார் விட்டுக் கொடுக்க வேண்டும் என்பது புரியாமல்தான் அத்தனை பிரச்சினைகளும்.

    இதற்கு ஒரே தீர்வு மனம் விட்டுப் பேசிக்கொள்வதுதான். ஆமாம், கணவனும், மனைவியும் கொஞ்சிப் பேச கொஞ்ச நேரம் ஒதுக்கினால், பிரச்சினைகள் தானே ஒதுங்கிப்போய்விடும். வாருங்கள் தம்பதியரின் புரிந்துணர்வை அதிகரிக்கும் விஷயங்களை தெரிந்து கொள்வோம்...

    அலுவலக பிரச்சினைகளை கணவர் மனைவியிடம் கூறலாம். உடல்–மனநல பிரச்சினைகளை மனைவி கணவரிடம் கூறலாம். இப்படி பகிர்ந்து கொள்வது ஆறுதல் அளிப்பதுடன், அன்பை வலுப்படுத்தும். ‘நமக்காக ஒருவர் இருக்கிறார்’ என்ற நம்பிக்கையை வளர்க்கும். வாழ்க்கையை வளப்படுத்தும்.

    ஏதோ காரணத்தால் பிரச்சினை பெரிதாகும்போது யாராவது ஒருவர் மவுனம் காத்தால் தீர்வு விரைவில் எட்டப்படும். ஒருவர் மவுனத்தைப் புரிந்து கொண்டு மற்றவர் பேசுவதை குறைக்கலாம். பிறகு அந்த மவுனமே இருவரும் சிந்திக்கும் நிலையைத் தூண்டும். அதுவே தன்பக்க தவறை உணரும் வாய்ப்பாக மாறும். தவறுகள் உணரப்பட்டால் சமாதானம் மலரும்.

    கர்வம் பார்க்காமல் மன்னிப்பு கேட்கப் பழகிவிட்டால் தம்பதியருக்குள் பிரச்சினைகள் மறைந்துவிடும். ‘தவறு செய்தது அவர்தான்’ என்று மனைவி, வீராப்புடன் இருப்பதும், ‘நான் ஆண், அவள்தான் இறங்கி வர வேண்டும்’ என்று கணவன் தலைக்கனத்துடன் இருப்பதும் பிரச்சினைகளை பெரிதாக்கும்.

    இருவருக்குமே தன்மான உணர்வுகள் உண்டு, இணைந்து வாழ்வதே இல்லறம். அதில் இருவருக்கும் சமபங்கு, உரிமை இருக்கிறது. ‘அவர்/அவள் இறங்கி வரட்டும்’, ‘ஆண் இல்லாமல் அவளால் என்ன செய்ய முடியும்?’ என்பது போன்ற எண்ணம் உங்களுக்குள் இருந்தால், அது பிரிவினையில்தான் கொண்டுபோய்விடும். பிறகு பிரிவுதான் இருவருக்கும் பாடம் கற்பிக்கும்.

    துணைவரிடம் மரியாதை காட்டுங் கள். ஒருவர் மற்றவரை ஏளனமாக எண்ணக்கூடாது. பிறரின் முன்பும் தன் துணைவரைப் பற்றி தரம் குறைவாக பேசக்கூடாது. இது என் வேலை இல்லை என்று பிரித்துக் கொள்ளாமல், உங்களுக்காக அனைத்து வேலைகளையும் செய்து கொடுக்கும் துணைவருக்கு அவ்வப்போது பாராட்டுகளும், நன்றியும் கூறுங்கள்.

    தம்பதியருக்குள் மனஸ்தாபம் ஏற்பட்டால் உங்களுக்குள் பேசி தீர்வு காணுங்கள். இல்லாவிட்டால் சிறிது இடைவெளி பராமரித்து பின்பு கூடிக்கொள்ளுங்கள். அப்படி இல்லாமல் ஒருவர் மற்றவரின் குடும்பத்தைப் பற்றி கேவலமாக பேசுவது கூடாது. மனம்விட்டு பேசுவதாக எண்ணிக் கொண்டு உடன்பிறந்தவர்கள், உறவுகளைப் பற்றிய ரகசியங்கள், அந்தரங்க பிரச்சினைகளை பகிர்வதை தவிர்க்க வேண்டும்.

    இதுதான் பின்னர் தம்பதிக்குள் சண்டை ஏற்படும்போது, ‘அவர் அப்படி, இவர் இப்படி’ என்று குடும்பத்தினரை வசைபாட காரணமாகிறது. அது தம்பதியருக்குள் மட்டுமல்லாமல், உறவுகளுக்கு மத்தியிலும் கடைசி வரை வஞ்சகத்தை வளர்த்துவிடும் என்பதை மறந்துவிடாதீர்கள். மேலும் திருமணத்திற்கு முந்தைய காதல் பற்றியோ, ஆண்–பெண் நண்பர்கள் பற்றியோ பகிர்ந்து கொண்டு, பிரச்சினைகளின்போது அதை தோண்டி எடுத்து பேசுவதை தவிருங்கள்.

    மனைவி கணவரிடம் பாலுணர்வு பற்றி வெளிப்படையாக பேசினால் தவறு என்ற கருத்து ஆண்கள் மத்தியிலும், நம் சமூகத்திலும் உள்ளது. அது தவறு. தாம்பத்தியம்தான் தம்பதியரின் அடிப்படை உறவு. தாம்பத்தியம் ஆரோக்கியமாக இருந்தால், பெரிய பிரச்சினைகளும் தானாக ஓடி மறைந்துவிடும். கோபம், பொறாமை, வஞ்சனை, தலைக்கனம் போன்ற எல்லாவற்றையும் வெளியேற்றும் ஆற்றல் தாம்பத்தியத்திற்கு உண்டு. கணவன், மனைவி இருவருமே பாலியல் தேவைகளை வெளிப்படையாக பகிர்ந்து கொண்டாலே, இல்லற பிரச்சினைகள் பல இல்லாமல் போய்விடும். பேசித்தான் பாருங்களேன்!

    உங்கள் தேவையை வெளிப்படுத்துங்கள். மற்றவர்களை சுட்டிக்காட்டி ஒப்பிட்டு பார்த்து உங்கள் வாழ்க்கையை தரம் தாழ்த்திக் கொள்ளாதீர்கள். உடன் பிறந்தவர்கள் அல்லது நண்பர்களுக்கு அமைந்த வாழ்க்கையைப் பற்றி பேசி ‘நம் வாழ்வு அப்படி இல்லையே’ என்று ஏங்குவது குடும்பத்திற்குள் பிரச்சினையை வளர்க்கும். வாழ்க்கை கனவுகளை நிறைவேற்ற தம்பதியர் இருவரும் இணைந்து போராடுங்கள்.

    ஆக புரிதல் இல்லாமல் புலம்புவதைவிட்டு, வெளிப்படையாகப் பேசி, விட்டுக் கொடுத்து வாழ்வதே உறவு பேணும் கலை என்பதை உணருங்கள். அன்பை காட்டுங்கள், ஆறுதல் பெறுங்கள். இல்லறம் இனிக்கட்டும்!

    jv_66 likes this.

  5. #45
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    நெகட்டிவ் அலையை உருவாக்க வேண்டாம்!

    நெகட்டிவ் அலையை உருவாக்க வேண்டாம்!


    பகிர்தல் நல்லது

    அந்தக் கால திருமணங்களுக்கும் இந்தக் கால திருமணங்களுக்கும் நிறையவே வித்தியாசங்கள்... இந்தக் கால திருமணங்கள் இருவரும் சமம் என்பதை உணர்த்துகின்றன என்கிறோம். வீட்டு வேலைகளையும் பொருளாதார சுமைகளையும் இருவருமே சமமாகப் பிரித்துக் கொள்கிறார்கள். ஆனாலும், ஆண்களின் ஆண்டாண்டு கால மனோபாவம் இன்னும் முற்றிலும் மாறிவிடவில்லை என்பதே உண்மை. பெண்களின் வேலைகளைப் பகிர்ந்து கொள்ளும் போதும், பெண்கள் பெரிய பதவிகளில் பொறுப்புகளை ஏற்கும் போதும், அதை இயல்பாக எடுத்துக் கொள்ள இன்னும் ஆண்கள் மத்தியில் பெரிய தயக்கம் இருக்கிறது. கடினமாக இருப்பதுதான் ஆண்மைக்கு அழகு என்று ஆண்களுக்கும், தன்னுடைய வேலைகள் கணவரால் அங்கீகரிக்கப்படுவதோ, பாராட்டப்படுவதோ இல்லை என்று பெண்களுக்கும் ஒரு கருத்து இருக்கிறது. அது இருவரது நெருக்கத்திலும் அதிருப்தியை அதிகரிக்கும்.



    அந்தக் காலத்துத் திருமணங்களிலும் சரி இந்தக் காலத்துத் திருமணங்களிலும் சரி பிரச்னைகள் இருக்கவே செய்கின்றன. டிங்க்ஸ் (DINKS - Double Income No Kids) அண்ட் டின்ஸ் (Double Income No Sex)... இதுதான் இந்த நூற்றாண்டு திருமணங்களின் புதிய அணுகுமுறை. புதிய விதிகளையும் படைக்க முடியாமல் பழையதையும் உடைத்துக் கொண்டு இரண்டுங்கெட்டான் நிலையில் இந்தத் தலைமுறையினர் குழம்பித் தவிக்கிறார்கள். அந்தக் காலத்தில் ஆண்கள் வேலைக்குச் செல்வதும் பெண்கள் வீடு மற்றும் குழந்தை வளர்ப்பைப் பார்ப்பதும் வழக்கமாக இருந்தது. இப்போது பெண்கள் வேலைக்குப் போனாலும் ஆண்கள் தம் அப்பா காலம் மாதிரி தன் மனைவியானவள் வீடு, வேலை என இரட்டைச் சுமைகளையும் சுமக்க வேண்டும் என்றே எதிர்பார்க்கிறார்கள். தப்பித் தவறி எந்தப் பெண்ணாவது சம உரிமை எனக் கேட்டுவிட்டால் அதை ஏதோ கெட்ட வார்த்தை மாதிரி பார்க்கிறார்கள்.

    புதிய திருமணங்களில் பெண்கள் சம உரிமை கோருகிறார்கள். வீட்டு வேலைகளை கணவனும் சமமாகப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என நினைக்கிறார்கள். குடும்ப முடிவுகளில் தன் அபிப்ராயமும் கேட்கப்பட வேண்டும் என விரும்புகிறார்கள். அவருக்கு இணையா நானும் சம்பாதிக்கிறேன். பொருளாதார சுமையை சமமா பகிர்ந்துக்கிறேன். அப்படி இருக்கும் போது எனக்குத் தெரியாம தன் அப்பாவைக் கூட்டிட்டுப் போய் புதுசா மனை வாங்கியிருக்கார். இது என்ன அநியாயம்?’ எனக் கேட்டு என்னிடம் பஞ்சாயத்துக்கு வந்தார் ஒரு மனைவி. இப்படிப்பட்ட ஆண்கள் இன்றும் இருக்கிறார்கள். இது அந்த ஆணின் தவறு அல்ல. இந்த நூற்றாண்டின் சாபம். பெரும்பாலான தம்பதியர் வேலை, அதை சார்ந்த வெற்றிகளில் பிசியாக இருக்கிறார்கள். வேலையையும் வீட்டையும் சமமாக கவனிக்க அவர்களால் முடிவதில்லை. அமெரிக்கா போன்ற நாடுகளில் வீட்டு வேலை, குழந்தை வளர்ப்பு போன்றவற்றை மூன்றாம் நபர்களிடம் ஒப்படைக்கிற கலாசாரம் பெருகிவிட்டது. நன்னிஸ் எனப்படுகிற அவர்கள் தினமும் காரில் வந்து இறங்குவார்கள். குறிப்பிட்ட சம்பளத்துக்கு குறிப்பிட்ட மணி நேரம் வரை குழந்தையைப் பார்த்துக் கொள்வார்கள். வீட்டை சுத்தப்படுத்த வேறு ஒருவர் காரில் வந்து இறங்குவார்.

    நம்மூரிலும் இத்தகைய வசதிகள் வர ஆரம்பித்துவிட்டன என்றாலும் இந்த அணுகுமுறை பெண்களுக்கு ஒருவித குற்ற உணர்வைத் தருவதையும் பார்க்கிறோம். `எங்கம்மா என்னை வளர்த்த மாதிரி என்னால என் குழந்தையை சரியா வளர்க்க முடியலை’ என வருத்தப்படுகிறார்கள். அது கோபமாக மாறி, கணவனும் மனைவியும் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டிக் கொள்ளவும் `நீ குழந்தையை சரியா வளர்க்கலை’ என பழி சொல்லி கடுமையாக சண்டை போடவும் காரணமாகிறது. அதன் தொடர்ச்சியாக ஏற்படுகிற வெறுப்பு, விரக்தி, ஏமாற்றம் என எல்லாம் சேர்ந்து அவர்களது உறவுக்குள் ஒருவித நெகட்டிவ் அலையை உருவாக்குகிறது.

    தீபாவும் மதனும் காதலித்துத் திருமணம் செய்தவர்கள். சொந்தமாக ஒரு நிறுவனத்தைத் தொடங்கி வேலை பார்க்கிறார்கள். இருவரின் முயற்சி மற்றும் உழைப்பால் அந்த நிறுவனம் பெரியதாக வளர்கிறது. குழந்தை பிறந்ததும், தீபா வேலையை விடுகிறாள். அதன் பிறகு அவளது வாழ்க்கை 24 மணி நேரமும் குழந்தையைப் பார்ப்பது, சமைப்பது என சுழல்கிறது. `நீ கொஞ்சம்கூட உதவறதில்லை’ என மதனுடன் சண்டை போடுகிறாள். தீபாவின் நச்சரிப்பு தாங்காமல் மதன் வீட்டுக்குத் தாமதமாக வருவதை வழக்கமாக்கிக் கொள்கிறான். இவர்களது சண்டை பெரிதாகிறது. ஒரு நாள் மிகப்பெரிய பிசினஸ் டீலை முடித்த சந்தோஷத்தில் வீடு திரும்புகிற மதனை பாராட்டாமல் கடுமையாக சண்டை போடுகிறாள் தீபா. அது மதனுக்கு விவாகரத்து செய்யும் முடிவைத் தருகிறது.

    பிரிகிற எண்ணத்தில் கவுன்சலிங் போகிறார்கள் இருவரும். அந்த கவுன்சலிங்கில் பல உண்மைகள் தெரிய வருகின்றன. தீபா எளிமையான, அதிக வசதியற்ற குடும்பத்தில் வளர்ந்தவள். அவளது அம்மாதான் எல்லா வேலைகளையும் செய்து பார்த்திருக்கிறாள். அப்படி வளர்ந்தவளுக்கு திருமணமாகி, குழந்தை பிறந்த பிறகும் அதே மனநிலை தொடர்கிறது. மதன் வீட்டு வேலைகளுக்கு ஆட்களை வைத்துக் கொள்ள அனுமதித்தும் அதை மறுக்கிறாள். வேலைக்குப் போகவும் மதன் தடை போடவில்லை. ஆனாலும் `நான் ஒரு மோசமான அம்மாவாக இருக்க விரும்பவில்லை’ என அதையும் நிராகரிக்கிறாள் தீபா. இருவரிடமும் பேசிய பிறகு ஆலோசகர் சில தீர்வுகளை முன் வைக்கிறார்.

    `நீங்க ரெண்டு பேரும் உணர்ச்சி வசப்பட்ட நிலையில இருந்து இந்தப் பிரச்னையை அணுகாதீங்க. சமூகரீதியாக பொருளாதார ரீதியாக உங்கள் வாழ்க்கை உயர்ந்திருக்கிறது. எனவே அதற்கேற்ப நீங்கள் கொஞ்சம் மாறிக் கொள்ளலாம். அவசியமான வேலைகளுக்கு ஆட்களை வைத்துக் கொள்ளலாம். அது அனாவசிய மன அழுத்தத்தையும் பிரச்னைகளையும் தவிர்க்கும். இருவருக்குமான சண்டைகளையும் குறைக்கும். அந்தக் காலத்தில் உங்கள் அம்மாவின் திருமண உறவு மற்றும் வாழ்க்கை முறையின் தாக்கத்தில் நீங்களும் அப்படியே வாழ வேண்டும் என விரும்புவது இந்தக் காலத்துக்கு உதவாது’ என எடுத்துச் சொன்னதும் தீபா மனம் மாறினாள்.

    ஜர்னல் ஆஃப் மேரேஜ் அண்ட் ஃபேமிலியில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. அமெரிக்க தம்பதியரை வைத்துச் செய்யப்பட்ட அதில் இருவரும் வீட்டு வேலைகளைப் பகிர்ந்து கொள்ள வேண்டுமா என்பதே ஆய்வுக்கான பொருள். பெண்கள் 2 முதல் 3 மடங்கு வீட்டு வேலைகளை அதிகம் செய்கிறார்கள். அதே நேரம் வெளியிலும் வேலைக்குச் செல்கிறார்கள். இப்படிப்பட்ட சூழலில் சமமாகப் பகிர்ந்து கொள்ளாவிட்டால் அவர்களுக்கு மன அழுத்தம் வரும் வாய்ப்புகள் அதிகம். இருவருக்குமான காதலில் பிளவையும் பெரிதுபடுத்தும். திருமணத்துக்கு முன் தனியே இருந்தபோது செய்ததைவிடவும் அதிக வேலையை திருமணத்துக்குப் பிறகு அவள் செய்ய வேண்டியிருக்கிறது. அதாவது, வாரத்துக்கு 14 மணி நேரம் கூடுதல் வேலை. இந்தப் பிரச்னை வரும் போது, ஆண்களுக்கு ஒரு சிக்கல் தலைதூக்குகிறது. ஆதிகாலம் தொட்டு ஆதிக்க மனப்பான்மையிலேயே வளர்ந்த அவனுக்கு வீட்டு வேலைகளைப் பகிர்ந்து கொள்வதில் ஈகோ கிளம்புகிறது. இது போன்ற சூழ்நிலை ஏற்படும் போது கணவனும் மனைவியும் நேர்மையாக இதைப் பற்றி விவாதிக்க வேண்டும் என்கிறது அந்த ஆய்வு முடிவு. அது வேறு சில ஆலோசனைகளையும் தம்பதியருக்கு முன் வைக்கிறது.

    * ஒருவரை ஒருவர் குறை சொல்லாமல், விமர்சிக்காமல், பொறுப்புகளைப் பற்றிப் பேசலாம். இருவரும் சேர்ந்து எல்லா வேலைகளையும் பட்டியல் போட வேண்டும். யார் எந்த வேலைகளை ஏற்பது எனப் பேசிப் பகிர்ந்து கொள்ள வேண்டும். மீதமிருக்கிற வேலைகளை, இன்று நான், நாளை நீ எனப் பிரித்துச் செய்யப் பழக வேண்டும்.

    * எந்த வேலையை யாரால் சிறப்பாகச் செய்ய முடியுமோ, அதை அவர் ஏற்கலாம். உதாரணத்துக்கு மனைவி பொருளாதார விஷயங்களைக் கையாள்வதில் திறமையானவராகவும் கணவர் சமைப்பதில் கில்லாடியாகவும் இருக்கலாம். இது என் வேலையா எனக் கேட்காமல், அதை முழு மனதுடன் ஏற்றுச் செய்யலாம்.

    * நடைமுறையில் உலகம் முழுக்கவே நிதி நிர்வாகம் என்பது ஆண்கள் கைகளில்தான் இருக்கிறது. பெரும்பாலான பெண்கள் அது பற்றி ஏதும் அறியாதவர்களாகவே இருக்கிறார்கள். திடீரென கணவர் இறந்து போனாலோ, நோய் வாய்ப்பட்டாலோ வேறு அசம்பாவிதங்கள் நடந்தாலோ மட்டும்தான் நிதி நிர்வாகத்தைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்படுகிறார்கள். அப்போது அவர்களுக்கு அந்த விஷயமே புதிதாக இருப்பதால் அதை சரியாகக் கையாளத் தெரியாமல் சிக்கலில் மாட்டிக் கொள்கிறார்கள். இதைத் தவிர்த்து பெண்களும் நிதி நிர்வாகத்தில் பங்கெடுத்துக் கொள்வது பாதுகாப்பானது.

    * இருவருமே செய்ய விரும்பாத வேலைகள் என சிலது இருக்கும். உதாரணத்துக்கு நாய் பராமரிப்பு, கழிவறைறையை சுத்தம் செய்வது போன்றவை. இவற்றை இருவரும் இன்று நான், நாளை நீ என மாற்றி மாற்றிச் செய்யப் பழகலாம்.

    * ஓரளவு வளர்ந்த குழந்தைகளை அன்றாட வீட்டு வேலைகளில் உதவிக்கு அழைத்துக் கொள்ளலாம்.

    * இப்படியொரு சிக்கல் இருக்கும் பட்சத்தில் வீட்டுக்குள் நாம் எதிர்பார்க்கிற அளவுக்கு ஒழுங்கு இருந்தாக வேண்டும் என்கிற எதிர்பார்ப்பைக் குறைத்துக் கொள்ளலாம். வீடு பளிச்சென சுத்தமாகத்தான் இருக்க வேண்டும் என்றில்லை... சற்றே அழுக்குடன் இருந்து விட்டுப் போகட்டும் என நினைக்கலாம்.

    * செய்ய முடியாது என நினைக்கிற சில வேலைகளைச் செய்வதைத் தவிர்க்கலாம்.

    * வெளியில் இருந்து உதவிகளைப் பெற முடியுமா எனப் பார்த்து அதில் உடன்பாடு இருந்தால் செய்து கொள்ளலாம்.

    ஆதிகாலம் தொட்டு ஆதிக்க மனப்பான்மையிலேயே வளர்ந்த அவனுக்கு வீட்டு வேலைகளைப் பகிர்ந்து கொள்வதில் ஈகோ கிளம்புகிறது. இது போன்ற சூழ்நிலை ஏற்படும் போது கணவனும் மனைவியும் நேர்மையாக இதைப் பற்றி விவாதிக்க வேண்டும். நடைமுறையில் உலகம் முழுக்கவே நிதி நிர்வாகம் என்பது ஆண்கள் கைகளில்தான் இருக்கிறது. பெரும்பாலான பெண்கள் அது பற்றி ஏதும் அறியாதவர்களாகவே இருக்கிறார்கள்.


    jv_66 likes this.

  6. #46
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    கணவன் மனைவி உறவு

    கணவன் மனைவி உறவு

    திருமணம் என்பது ஓர் ஒப்பந்தம் மட்டுமல்ல. இரு மனம் ஒன்றாகி ஒரு மனமாக கலப்பதே திருமணம் எனப்படுகின்றது. ஓரிருநாள் சடங்கில் முடிந்து போவது திருமணம் அல்ல. வாழ்க்கை முழுவதும் ‘திரு’வாளனும் ‘திரு’மதியும் சில நெறிகளைக் கடைப்பிடித்து வாழ வேண்டும். அப்படிப்பட்ட ஒரு வாழ்க்கை தான், தெய்வீக நறுமணம் வீசும் திருமண வாழ்க்கையாக அமையும்.

    || திருமணம் ||
    ஒவ்வொரு மனிதரும் தன் வாழ்க்கையின் முதல் பருவமான பிரம்மச்சரிய பருவத்தில் ஆற்றவேண்டிய கடமைகளையும் கற்கவேண்டிய பாடங்களையும் சிறப்பாக முடித்து விட்டு, இரண்டாவது பருவமான கிரகஸ்த (குடும்பவாழ்க்கை) பருவத்தில் அடியெடுத்து வைப்பதே திருமணம் ஆகும். திருமணத்தின் போது ஒவ்வொருவரின் மரபுவழியிலும் நிறைய சடங்குகள் இருந்தாலும், சனாதன தர்மத்தைப் பொறுத்தவரை சப்தபதி எனப்படும் சடங்கு மிக முக்கியமாகும். இந்த சடங்கில், கணவனும் மனைவியும் அக்கினி சாட்சியாக கைக்கோர்த்து ஏழு அடிகள் அல்லது ஏழு சுற்றுப்பாதைகள் வலம் வருவர். இந்த ஏழு அடிகளும் ஏழு வாக்குறுதிகளைக் குறிக்கின்றன. அவை:

    1) கணவனும் மனைவியும் எப்போதும் சுகதுக்கங்களையும் குடும்ப சுமையையும் பகிர்ந்து கொள்ளவேண்டும்.

    2) கணவனும் மனைவியும் ஒரே மனதாக இணைந்திருக்கவேண்டும், மனைவிக்கு விருப்பமில்லாததை கணவனும், கணவனுக்கு விருப்பமில்லாததை மனைவியும் விட்டுவிடவேண்டும்.

    3) கணவன் மனைவியின் குடும்பத்தினரையும், மனைவி கணவனின் குடும்பத்தினரையும் மதிக்க வேண்டும்.

    4) கணவனும் மனைவியும் ஒன்றாக இருந்து தம் மக்களை வளர்த்து, குழந்தைகளுக்கு நிறைவான கல்வியை தரவேண்டும்.

    5) கணவனும் மனைவியும் குடும்ப பொருளாதாரத்தை சரிசமமாக இருந்து பேணவேண்டும்.

    6) மனைவியைத் தவிர மற்ற பெண்ணிடமும், கணவனைத் தவிர மற்ற ஆணிடமும் தகாத உறவு வைத்துக் கொள்ளக் கூடாது.

    7) கணவன் தன் மனைவியை (வாக்காலும், மனத்தாலும், செயலாலும்) நோகடிக்க கூடாது, மனைவியும் தன் கணவனை (வாக்காலும், மனத்தாலும், செயலாலும்) நோகடிக்க கூடாது.

    இந்த ஏழு வாக்குறுதிகளையும் ஒவ்வொரு கணவனும் மனைவியும் கண்டிப்பாக கடைப்பிடிக்கவேண்டும்.

    || குடும்பவாழ்க்கை
    ஒரு குடும்பவாழ்க்கையில் கணவனும் மனைவியும் உடல்ரீதியில் மட்டுமல்லாமல் மனத்தாலும், செயலாலும், வாக்காலும் ஒன்றாகியவர்கள் ஆவர். கணவன் மனைவியைத் துன்புறுத்துவதும், மனைவி கணவனை துன்புறுத்துவதும் உண்மையில் தம்மை தாமே துன்புறுத்திக் கொள்வதற்கு ஒப்பாகும்.

    ஒரு குடும்பவாழ்க்கையில் கணவனும் மனைவியும் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் சில முக்கிய உறவுகளைப் பிரதிபலிக்கின்றனர்.

    உதாரணமாக:
    1) தோழன் தோழி = கணவனும் மனைவியும் எப்போதும் எந்தவொரு ஒளிவும் மறைவும் இல்லாமல், தங்களின் சுக துக்கங்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டும். கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் உதவி செய்துகொண்டு வாழ வேண்டும்.

    2) மறுமகன் மறுமகள் = மனைவி என்பவள் தன் கணவனின் பெற்றோருக்கு இன்னொரு மகளாகவும், கணவன் என்பவன் தன் மனைவியின் பெற்றோருக்கு இன்னொரு மகனாகவும் இருந்து அவர்களை நல்ல முறையில் அன்புடனும் அரவணைப்புடனும் பாதுகாக்க வேண்டும்.

    3) குரு சிஷ்ய = குடும்பவாழ்க்கையை துவங்குவதற்கு முன்னரே, பிரம்மச்சரிய பருவத்தில் குடும்பவாழ்க்கையைப் பற்றிய போதுமான அறிவைப் பெற்றிருக்க வேண்டும். எனவே, கணவனும் மனைவியும் தம் துணையார் வழிதவறி போனால் அவருக்கு நல்லறிவைப் புகட்டி மீண்டும் நல்ல பாதைக்குத் திருப்பி கொண்டு வர வேண்டும். ’கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன்’ என்று வாழாமல், கணவன் தப்பு செய்தால் மனைவி அவனைக் கண்டிக்க வேண்டும்.

    4) தலைவன் தலைவி = ஒரு குடும்பத்தைப் பொருளாதார அளவில் உயர்த்த கணவனும் மனைவியும் சேர்ந்தே பாடுபட வேண்டும். எப்படி ஒரு நாட்டை அரசனும் அரசியும் நல்ல முறையில் வழிநடத்துவார்களோ, அதுபோல ஒரு குடும்பத்தை கணவனும் மனைவியும் வழிநடத்த வேண்டும். நம்முடைய பாரம்பரியத்தில், ஒரு குடும்பம் ஒரு நாட்டின் பிரதிபலிப்பாக திகழ்கின்றது. கணவனும் மனைவியும் அந்த குடும்பத்தின் அரசனாகவும், அரசியாகவும் அமைந்துள்ளனர். அவர்களின் பிள்ளைகளே அக்குடும்பத்தின் ‘மக்கள்’ ஆவர். குடும்பத்தில் உள்ளவர்களிடம் சகிப்புத்தன்மையுடனும் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையுடனும் வாழ்ந்தால் வாழ்க்கை சிறப்பாக அமையும்.

    5) தாய் சேய் = குடும்பவாழ்க்கையில் கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் அரவணிப்புடனும் அன்புடனும் வாழவேண்டும். கணவனுக்கு முடியாத நிலையில் மனைவி அவனுக்கு பணிவிடை செய்தலும், மனைவிக்கு முடியாத நிலையில் கணவன் அவளுக்குப் பணிவிடை செய்தலும் வேண்டும். இதனாலே திருமண சடங்கின் போது, புரோகிதர் சொல்லித்தர கணவனும் மனைவியும் சேர்ந்து மனதார உச்சரிக்கும் மந்திரத்தில் “சுபஹே த்வம் ஜீவ சரத சதம்” என காலம்வரை உடனிருந்து (தன் துணையை) கவனித்துக் கொள்வேன் என வாக்குறுதி எடுத்துக் கொள்கின்றனர்.

    6) சகோதரன் சகோதரி = சண்டைகளும் மனசஞ்சலங்களும் இல்லா குடும்பவாழ்க்கை கிடையாது. எவ்வளவு சண்டைகள் போட்டாலும், எப்போதும் தன் துணையை விட்டுக் கொடுக்க கூடாது. கணவன் மனைவி ஆகிய இருவரில் யாராவது ஒருவர் மனமிறங்கி வந்து சமாதானம் பேசவேண்டும். இருவரும் ஒத்த மனத்துடன் கலந்துரையாடி பிரச்சனையைக் கலைந்து இனிதான ஒரு முடிவை எடுக்க வேண்டும்.

    7) தாய் தந்தை = குடும்பவாழ்க்கையின் மிக முக்கிய நிலை தாய் தந்தை உறவு ஆகும். கணவனும் மனைவியும் குழந்தையை ஈன்றெடுத்தப் பின்னர் (அல்லது தத்தெடுத்தப் பின்னர்) அவர்கள் தாய் தந்தை என்ற நிலையை அடைகின்றனர். அந்த குழந்தைக்கு தேவையானவற்றையும் முழுமையான அறிவையும் அளிக்கவேண்டிய கடமையில் அவர்கள் ஈடுபடுவர். தம் மக்களைச் சான்றோர் மத்தியில் மதிக்க தக்கவர்களாக ஆக்கவேண்டியது பெற்றோர்களின் மிக முக்கிய கடமையாகும்.

    8) மாமனார் மாமியார் = ஒரு தம்பதியரின் மக்களின் துணை அவர்களுக்கு மறுமக்கள் ஆகின்றனர். இதனாலே நம் பாரம்பரியத்தில், மகளின் கணவன் மறுமகன் என்றும் மகனின் மனைவி மறுமகள் என்றும் அழைக்கப்படுகின்றனர். ஒருவர் தன் மகன் அல்லது மகளிடம் எவ்வளவு அன்பும் அரவணைப்பும் செலுத்துவாரோ அதேபோல தன் மறுமக்களிடமும் செலுத்த வேண்டும்.

    இதுபோல குடும்பவாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டிய சில முக்கிய நெறிகள் உள்ளன. இவை ஒரு சிறப்பான குடும்பவாழ்க்கையைப் பேண ஒரு வழிகாட்டல்களாக அமைக்கப்பட்டவை ஆகும். புராண கதைகளிலும் நம் முன்னோர்கள், தெய்வங்களை மையமாகக் கொண்டு சில நன்னெறிகளை உரைத்திருப்பார்கள். ஒரு குடும்பத்தின் பதி-தர்மத்தை கணவனும், பதினி-தர்மத்தை மனைவியும் கடைப்பிடிக்க வேண்டும். பிறனில் நோக்காமல் தன் துணையை உயிராக நேசிப்பவரே கற்புடையர் எனப்படுவர்.

    Last edited by chan; 23rd Mar 2016 at 01:20 PM.
    jv_66 likes this.

  7. #47
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    இல்லறம் சிறக்க தம்பதிகள் கண்டிப்பாக செய&

    இல்லறம் சிறக்க தம்பதிகள் கண்டிப்பாக செய்யக்கூடாத தவறுகள்

    இல்லறம் எப்போதும் நல்லறமாக இருக்க வேண்டும் என்பது தான் அனைவரின் ஆசையும்.



    நம்மையே அறியாமல் நமக்குள் வளரும் ஈகோ, ஆதிக்கம் செலுத்துதல், சுதந்திரத்தை பறித்தல், நியாயத்தை பாகுபடுத்தி வழங்குதல் போன்றவை தான் இல்லறத்தில் சண்டை சச்சரவுகள் ஏற்பட முக்கிய காரணியாக இருக்கிறது.

    பெரும்பாலும், ஒருவரிடம், ஒருவர் எதையும் மறைக்காமல் உண்மையாக இருந்தாலே இல்லறம் என்றும் சிறந்து விளங்கும்.

    விட்டுக் கொடுத்து போவது தான் இல்லறத்தை எப்போதும் சிறக்க வைக்கும். ஆனால், இருவரும் விட்டுக் கொடுத்து போக வேண்டும். ஒருவர் மட்டுமே வாழ்நாள் முழுவதும் விட்டுக் கொடுத்து போக வேண்டும் என்பது ஆதிக்கம் செலுத்துதல் ஆகும். எந்த ஒரு உறவில் ஒருவரது ஆதிக்கம் மேலோங்கி காணப்படுகிறதோ, அந்த உறவில் மெய் இன்பம் காண்பது அரிது ஆகிவிடும். எனவே, வீண் ஈகோ மற்றும் ஆதிக்கம் செலுத்துவதை தவிர்த்து விடுங்கள்.

    தம்பதி இருவரும் தினமும் என்ன செய்கிறீர்கள் என்பதை ஒருவரிடம் ஒருவர் துளியும் மறைக்காமல் கூற வேண்டும். பல சமயங்களில் சந்தேகம் எழுவதே, நீங்கள் செய்யும் வேலை அல்லது காரியங்கள் குறித்து நீங்கள் மறைக்க நினைப்பதால் தான். ஆரம்பத்தில் கண்டும், காணாதது போல இருந்தாலும், ஓர் தருணத்தில் பூகம்பம் போல சண்டை வெடிக்க முக்கிய காரணியாக இருக்கும். இதனால், இல்லறத்தில் அடிக்கடி சண்டைகள் வெடிக்க வாய்ப்புகள் இருக்கின்றன.

    உங்கள் இருவரில் யாருக்கு காயம் பட்டாலும் இருவரும் வருந்த வேண்டும். யார் ஒருவர் மகிழ்ச்சியாக இருந்தாலும், இருவரும் இன்பம் கொள்ள வேண்டும். உன் இன்பதுன்பங்கள் குறித்து நான் வருத்தப்பட முடியாது என்பது இல்லறமே கிடையாது. உணர்வு ரீதியாக தம்பதிகள் சமநிலையில் இருக்க வேண்டியது மிகவும் அவசியம். இது படுக்கையறையில் கொஞ்சுதல் முதற்கொண்டு நீங்கள் கடைப்பிடிக்க வேண்டும்.

    உங்கள் துணைக்கு துரோகம் எண்ண நினைக்கும் முன்பு, அதே துரோகத்தை உங்கள் துணை உங்களுக்கு செய்தால் உங்களது மனநிலையில் உண்டாகும் மாற்றங்கள் என்ன, நீங்கள் எவ்வளவு வருந்துவீர்கள் என்பது குறித்து நினைவில் கொள்ளங்கள்.

    ஒருவேளை ஏதேனும் தவறு செய்திருந்தாலும் கூட ஒப்புக்கொள்ளுங்கள். மன்னிப்பு எப்போதும் உங்களுக்கு கிடைக்கும். அதற்காக தவறுகள் செய்துக் கொண்டே இருக்க கூடாது.






    Last edited by chan; 25th Jun 2016 at 08:37 PM.
    jv_66 likes this.

  8. #48
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    சந்தோஷமாக வாழ சண்டையும் போடுங்கள்!

    சந்தோஷமாக வாழ சண்டையும் போடுங்கள்!


    கணவனும் மனைவியும் சண்டையே போடாமல் வாழ்வதென்பது சாத்தியமும் இல்லை. சண்டைகள் இல்லாத வாழ்க்கையில் சுவாரஸ்யங்களும் இருக்காது. சண்டை போடும்போது சில விதிமுறைகளை மட்டும் கவனத்தில் கொண்டால், அந்தச் சண்டை நல்ல பலனைத் தரும் என்பதே எங்கள் கோரிக்கை. ‘இருவருக்கும் இடையில் உருவாகும் சண்டைக்கான பொறுப்பை ஏற்கத் தவறாதீர்கள். சண்டைக்கான காரணத்தைத் துணையின் மீது போட்டுவிட்டு நீங்கள் தப்பிக்க நினைக்காதீர்கள்.

    கோபம் உச்சத்தில் இருக்கும் போது சண்டையைத் தவிருங்கள். ஆழ்ந்து மூச்சை இழுத்துவிட்டு, ரிலாக்ஸ் செய்து, சண்டையின் வேகத்தைக் குறையுங்கள். கோபமான, வேகமான பேச்சு, சண்டையின் போது நீங்கள் முன் வைக்கிற வாதத்தைக் காணாமல் போகச் செய்து, துணையைக் காயப்படுத்தும்.

    நீஙகள் போடுகிற சண்டை அர்த்தமுள்ளதாக இருக்கட்டும். ஆக்கபூர்வமான விஷயங்களுக்காக இருக்கட்டும். சண்டையின் போக்கு அழிவை நோக்கிப் போவதாக இல்லாமல் கவனமாகக் கையாளுங்கள்.

    சண்ைடயின் போது துணையிடம் கடுமையாக நடந்து கொள்ள, தகாத வார்த்தைகளை உபயோகிக்க, அவமானப்படுத்த, மோசமாக நடத்த காரணங்களைத் தேடாதீர்கள். அப்படி நடந்து கொள்ளாமல் இருப்பதே நாகரிகம்.

    கோபத்தையும் சண்டையின் தீவிரத்தையும் கட்டுப்படுத்த முடியவில்லையா? துணையிடம் எக்ஸ்கியூஸ் கேட்டுக் கொண்டு, அந்த இடத்தைவிட்டுத் தற்காலிகமாக நகருங்கள். இருவருக்குமான சண்டைகள் ஒரு எல்லையைத் தாண்டும்போது, இருவரில் ஒருவரோ, இருவருமோ இப்படி அந்த இடத்தை விட்டு நகர்ந்து விடுவது என்பதை ஒரு ஒப்பந்தமாகவே பின்பற்றுங்கள்.

    சில வேளைகளில் உங்களையும் அறியாமல் சண்டை எக்கச்சக்க சூடுபிடிக்கும். ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு என்கிற மாதிரி அந்த நேரத்தில் என்ன செய்கிறீர்கள் என்பது உங்களுக்கே தெரியாமல் போகும். எனவே, கோபம் கொப்பளிக்கிற போது, அதைச் சற்றே தணியச் செய்யுங்கள். இன்றைய சண்டையை நாளைக்கு ஒத்தி வைக்கலாம். தவறில்லை.

    துணையை முட்டாள் என்பது மாதிரி மட்டம் தட்டிப் பேசுவது, பட்டப் பெயர் சொல்லித் திட்டுவது, `நல்லாவே இருக்கமாட்டே... நாசமாப் போயிடுவே’ என்கிற மாதிரி சாபம் விடுவது, அவமானப்படுத்துவது போன்றவற்றைச் சண்டையின் போது செய்யவே கூடாது.

    சண்டையின் போது உங்கள் துணை பேசும்போது குறுக்கிடாதீர்கள். அவரை முழுமையாகப் பேசவிட்டுக் கேளுங்கள். பொதுவாக நாம் யாருமே எதிராளியின் பேச்சை 18 நொடிகளுக்கு மேல் பொறுமையாகக் கேட்பதில்லை என்பதுதான் உண்மை. துணையின் வாதத்தைக் கேட்டாலே அவரது கொந்தளிப்பு சற்று தணியும்.

    சண்டையின் போது உங்களை முன்னிலைப்படுத்தி சுயநலமாகப் பேசுவதைத் தவிர்த்து, துணையையும் அவரது உணர்வுகளையும் முன்னிலைப்படுத்திப் பேசுங்கள்.

    `நான் பேசறது தப்பா இருக்கலாம். ஆனா, நான் இப்படித்தான் ஃபீல் பண்றேன்... இந்தப் பிரச்னையை நான் இப்படித்தான் பார்க்கறேன்’ எனப் பேசுங்கள். அதாவது, உங்கள் மீது தவறு இருக்கலாம் என்பதை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்கள் என்பதைத் துணைக்குத் தெரியப்படுத்துங்கள்.

    உங்கள் சண்டையின் நோக்கம் உங்களுக்கிடையிலான கருத்து வேறுபாட்டை எப்படி முடிக்கலாம் என்பதாக மட்டுமே இருக்க வேண்டும்.

    சண்டையின்போது எக்காரணம் கொண்டும் குரலை உயர்த்திப் பேசக்கூடாது. என்னதான் கோபம் தலைக்கேறினாலும் அமைதியாக, குரலை உயர்த்தாமல் சண்டையிடுவதை ஒரு கொள்கையாகவே கடைபிடியுங்கள்.

    உங்கள் துணையின் மனதைப் படிக்க முயற்சிக்க வேண்டாம். அவர் என்ன நினைத்திருப்பார்... அவரது வார்த்தைகளுக்கும் செயல்களுக்கும் இதுதான் அர்த்தமாக இருக்க வேண்டும் என்கிற மாதிரியான தீர்மானங்களை நீங்களாகவே கற்பனை செய்து கொள்ள வேண்டியதில்லை.

    துணையின் செயல்களுக்கு நீங்களாக நெகட்டிவ் சாயம் பூசாதீர்கள். ஒருவேளை உங்களுக்கு அப்படித் தோன்றினால் துணையிடமே அதைச் சொல்லுங்கள். `நீ பண்றது எனக்கு இப்படி நினைக்க வைக்குது? அது சரியா?’ எனக் கேட்டுத் தெளிவு பெறுங்கள். துணையின் உடல் மொழிகளுக்கும் நீங்களாக ஒரு அர்த்தம் கற்பிக்காதீர்கள்.

    துணை, மிகவும் மூர்க்கத்தனத்துடன், நெகட்டிவாக பேசினால், உங்கள் சண்ைடக்கு சட்டென ஒரு பிரேக் விடுங்கள். அவர் ஏன் அப்படி நடந்து கொண்டார் எனக் காரணம் கேளுங்கள். கோபத்தின் வீரியம் சற்றே அடங்கியதும், அவரது பேச்சு முறையில் மாற்றம் இருக்கலாம் என்றும், உடல்மொழியைக்கூட மாற்றிக் கொள்ளலாம் என்றும் சொல்லுங்கள்.

    சண்டையின் போது அப்போதைய மனத்தாங்கலுக்கான விஷயத்தைப் பற்றி மட்டுமே விவாதியுங்கள். கடந்த கால சண்டைகளையும் பிரச்னைகளையும் சுமந்து கொண்டு வந்து தற்போதைய சண்டையில் சேர்க்காதீர்கள்.

    அவர்/அவள் எப்போதுமே இப்படித்தான்... மோசமாத்தான் நடந்துப்பார்(ள்)’ என்கிற மாதிரியான வார்த்தைகளையும், `பழசை எல்லாம் நான் மறக்கவே மாட்டேன்...’ என்பது போன்றும் பேசாதீர்கள். அவை ஆரோக்கியமான சண்டையை திசைத் திருப்பி விடும்.

    இடம், பொருள், ஏவல் அறிந்து சண்டை போடுங்கள். சந்தோஷமான தருணங்களில் பழைய மனஸ்தாபத்துக்குக் காரணமான ஏதோ ஒரு விஷயத்தைக் கிளற வேண்டாம்.

    இருவரில் ஒருவருக்கு ஒரு விஷயம் முக்கியத்துவம் வாய்ந்தது என்றால், இன்னொருவருக்கும் அது அப்படித்தான் இருந்தாக வேண்டும். இதெல்லாம் ஒரு மேட்டரா..?’ என்கிற மாதிரி துணையின் பார்வையை அணுகாதீர்கள்.

    சண்டையின்போது உங்கள் துணை, தவறான புள்ளிவிவரங்களையும் தகவல்களையும் வைத்துக் கொண்டு பேசலாம். முதலில் அவரது பேச்சுக்கு மதிப்பளியுங்கள். பிறகு அவரது தகவல்களை சரிசெய்யுங்கள். மாறாக அவரது உணர்வுகளை சரி செய்ய முனையாதீர்கள்.


    jv_66 likes this.

  9. #49
    ahilanlaks's Avatar
    ahilanlaks is offline Ruler's of Penmai
    Real Name
    Athilakshmi Ahilan ( Bhuvana )
    Gender
    Female
    Join Date
    Mar 2015
    Location
    Chennai
    Posts
    12,408

    Re: சந்தோஷமாக வாழ சண்டையும் போடுங்கள்!

    [சண்டைகள் இல்லாத வாழ்க்கையில் சுவாரஸ்யங்களும் இருக்காது.] So true, nice sharing

    ​Bhuvana Ahilan

    Love Makes Life Beautiful

  10. #50
    safron's Avatar
    safron is offline Citizen's of Penmai
    Real Name
    sumy
    Gender
    Female
    Join Date
    May 2016
    Location
    srilanka
    Posts
    625

    Re: சந்தோஷமாக வாழ சண்டையும் போடுங்கள்!

    Nice sharing sis

    Sumy..
    உனக்கென நிர்ணயிக்கப்பட்டது உன்னை அடைந்தே தீரும். .

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter