User Tag List

Like Tree32Likes

For a Successful married life...-இரு மனம் இணைந்தது தான் திருமணம்


Discussions on "For a Successful married life...-இரு மனம் இணைந்தது தான் திருமணம்" in "Married Life" forum.


 1. #1
  chan's Avatar
  chan is online now Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Mar 2012
  Location
  chennai
  Posts
  17,617

  For a Successful married life...-இரு மனம் இணைந்தது தான் திருமணம்

  இரு மனம் இணைந்தது தான் திருமணம்


  திருமணம் என்பது ஆண், பெண் மட்டும் இணைவதல்ல. இரண்டு குடும்பங்களும் சேர்ந்தே இணைவதுதான் திருமணம். இருபாலினருக்கும் அவரது பெற்றோரும் அவர்களது சார்பில் அறிவுரைகளைக் கூறி தயார் செய்வது நல்லதோர் உறவின் தொடக்கமாகும். "ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒவ்வொரு வழக்கமிருக்கும்.

  ஆனால் அனைவரும் மேற்கொள்ள வேண்டிய ‘ப்ரீ மெரைட்டல் கவுன்சலிங்’ எடுத்துக் கொண்டால் வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியும் மகிழ்ச்சியான அனுபவங்களாக மாறும். வாழும் காலம் வரை சிறந்த ஆதர்ச தம்பதிகளாக வலம் வர மேரேஜ் சீக்ரெட்ஸ் இங்கே...!!

  1. காதலை விட மரியாதைக்கு அதிக முக்கியத்துவம் தருவதே வாழ்க்கை பயணத்துக்கான சிறந்த பாதையாக மாறும்.

  2. ஒரு பெண் திருமணத்துக்கு எப்படி அறிவுரைகளால் தயாராகுகிறாளோ அதுபோல் ஆணையும் தயார் செய்ய வேண்டும்.

  3. இருபாலினருக்கும் ஆசை, கனவு, உரிமை, தேர்வு, எண்ணம் அனைத்துக்கும் சமத்துவ உரிமை அளிக்க வேண்டும்.

  4. வீட்டு வேலையைப் பகிர்ந்துக் கொள்வதில் கூட அன்பு அதிகரிக்கும். இது இழிவான செயலல்ல.

  5. உன் சம்பளம் ‘உனக்கு, எனக்கு’ எனப் பிரித்துக் கொள்ளாமல் ‘நான் இவற்றுக்கெல்லாம் பொறுப்பெடுத்துக் கொள்கிறேன். நீ இதற்கெல்லாம் பொறுப்பெடுத்து கொள்கிறாயா?’ என அன்போடு பொறுப்புகளைப் பட்டியலிடலாம்.

  6. வன்முறையால் எவற்றையுமே கட்டுப்படுத்த முடியாது. அன்பு ஒன்றே அனைத்துக்குமான அடிப்படை புரிதல்.

  7. தன் துணைக்கும், பெற்றோருக்கும் எப்போதும் சம உரிமை தருவதென உறுதிமொழி எடுங்கள்.

  8. குடும்ப அமைதி, நிம்மதியான சூழல், குறையாத அன்பு போன்றவற்றை நிலைநாட்ட தகுந்த பொறுப்பாளராக இருபாலினரும் மாற வேண்டும்.

  9. பாசிடிவ்ஸ் பகிர்ந்து கொள்வதோடு, நெகடிவ் குணங்களையும் தெரியப்படுத்துங்கள். இதனால் திடீரென்று நெகடிவ் குணங்கள் வெளிப்படும்போது அதிர்ச்சியாகாமலும், பிரச்சனை பெரிதாகாமலும் தடுக்க முடியும்.

  10. திருமணத்துக்கு முன்பு இருபாலினரும் தொலைபேசியில் அதிகம் பேசுவது தவறில்லை என்றாலும், அதற்கான வரைமுறைகளை மீறி பேசுவது பின்னாளில் பிரச்சனைகளை ஏற்படுத்தலாம்.

  11. சமூக வளைத்தளங்களில் உள்ள நட்பு, அதில் பகிர்ந்து கொள்ளும் கருத்துக்களை விமர்சிப்பதோ லைக், ஷேர் போன்ற எதிர்பார்ப்புகள் உறவில் சிக்கல்களை ஏற்படுத்த வாய்ப்புண்டு.

  12. கடந்து வந்த காதல், அதன் பிண்ணனி போன்றவற்றைப் பகிர்ந்து கொள்ளுதல்கூடச் சில நேரங்களில் தவறான மதிப்பை தரும்.

  13. திருமணத்துக்குப் பிறகு வேலைக்குச் செல்லுதல், உயர்படிப்பு படிக்கும் வாய்ப்புகள், வேலையில் ஏற்படும் டிரான்ஸ்பர்கள் போன்றவற்றைத் திருமணத்துக்கு முன் தெளிவாகப் பேசி முடிவுகள் எடுப்பது இருதரப்பினருக்கும் இடையே பிரச்சனைகளையும், மனகசப்பையும் ஏற்படுத்தாது.

  14. திருமணத்துக்கு முன் பழகும் போதே இருவருக்குமான கருத்து வேறுபாடுகள் அதிகமாக இருந்தால் உதாரணம் அதீத சந்தேகம், வன்முறை குணம், ஆதிக்கம் செலுத்தும் மனப்பான்மை போன்ற மாற்றங்கள் தெரிந்தால், பெற்றோருக்கு புரிய வைத்துச் சிக்கல் இல்லாமல் திருமணத்துக்கு முன்பே பிரிந்துவிடுவது நல்லது. இந்த முடிவு இருவருடைய வாழ்க்கைக்கும் நல்லதாக அமையும்.

  15. வாழ்க்கை முறை, மனபக்குவம், பிரச்சனைகளைக் கையாளுதல், பாலுணர்வு சந்தேகங்கள் போன்றவற்றுக்கு ஆலோசகர் மூலம் தெளிவடையலாம்.

  16. இருபாலினரும் தங்களின் நிஜத்தை ஏற்றுக் கொள்வதே நல்லது. அதாவது இயல்பை ஏற்க பழக வேண்டும். ஆரோக்கியமான இடைவெளியை அமைத்துக் கொள்ளுங்கள். பேச்சில் மரியாதையை தெரியப்படுத்துங்கள். பிரச்சனைகளில் வளைந்து கொடுங்கள்.

  17. எந்தத் தருணத்திலும் துணையின்றிச் செயல்படக் கூடாது என உறுதிமொழி எடுத்துக் கொள்வதே இனிய வாழ்வுக்கான அச்சாரம்.

  Similar Threads:

  Sponsored Links

 2. #2
  dhivyasathi's Avatar
  dhivyasathi is online now Commander's of Penmai
  Real Name
  Sathya Vivek
  Gender
  Female
  Join Date
  Apr 2011
  Location
  Singapore
  Posts
  1,253

  Re: இரு மனம் இணைந்தது தான் திருமணம்

  good information.thanks for sharing.

  chan likes this.


  Regards,
  Dhivyasathi..

  "When you have come to realize that you miss me.....then
  i wont be MISSING U......"


 3. #3
  sumathisrini's Avatar
  sumathisrini is offline Super Moderator Silver Ruler's of Penmai
  Real Name
  Sumathi
  Gender
  Female
  Join Date
  Jun 2011
  Location
  Hosur
  Posts
  34,368

  Re: இரு மனம் இணைந்தது தான் திருமணம்

  Nice sharing Lakshmi, thanks.


 4. #4
  kkmathy's Avatar
  kkmathy is offline Minister's of Penmai
  Real Name
  komathy
  Gender
  Female
  Join Date
  Jun 2012
  Location
  Malaysia
  Posts
  3,189

  Re: இரு மனம் இணைந்தது தான் திருமணம்

  Very good info, Latshmy.


 5. #5
  chan's Avatar
  chan is online now Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Mar 2012
  Location
  chennai
  Posts
  17,617

  அன்பை தவிர கணவரிடம் மனைவி விரும்பும் விஷ

  அன்பை தவிர கணவரிடம் மனைவி விரும்பும் விஷயங்கள்

  ரொமாண்டிக் என்பதையும் தாண்டி பெண்கள் ஆண்களிடம் சில சுவாரஸ்யமான விஷயங்களை எதிர்பார்கிறார்கள்.

  • தாங்கள் பேசுவதை காது கொடுத்து கேட்க வேண்டும். பேச, பேச, குறுக்கே பேசுவது, முழுதாய் புரிந்துக் கொள்ளாமல் காச்சுமூச்சென கத்தக் கூடாது என பெண்கள் எதிர்பார்க்கிறார்கள். ஆனால் சண்டை என்று வந்து விட்டால் ஆண்கள் மனைவி என்ன சொல்ல வருகிறார் என்பதை காது கொடுத்து கேட்பதில்லை என்பது பெண்கள் கூறும் முதல் குற்றச்சாட்டு.

  • அவனும் சுதந்திரமாக இருக்க வேண்டும், எங்களையும் சுதந்திரமாக இருக்க அனுமதிக்க வேண்டும். வேலை, சுய விருப்பங்கள் போன்றவற்றில் தலையீடுகள் இருக்க கூடாது என்பதில் இன்றைய பெண்கள் மிகவும் தெளிவாக இருக்கிறார்கள். கணவராக இருந்தால் பிரைவசி வேண்டும் என்பது தான் இன்றைய பல பெண்களின் எதிர்பார்ப்பு.

  • எந்த செயலாக இருந்தாலும், மற்றவர் உதவியை எதிர்பாராமல் தனிச்சையாக செயல்பட கூடிய ஆண்களை மிகவும் பிடிக்குமென பெண்கள் கூறுகிறார்கள். எதற்கும் மற்றவர்களின் உதவியை எதிர்ப்பார்க்காமல் தன்னால் எதுவும் முடியும் என்று எந்த செயலையும் முயன்று பார்க்கும் ஆண்களுக்கு தான் தங்களின் முதல் ஓட்டு என்பது பெண்களின் கருத்து.

  • எதற்கெடுத்தாலும், எதிர்மறையாக பேசவது, ஏதாவது செய்யும் போது "இது சரியாக வருமா???" என கேள்விகள் கேட்பது என இல்லாமல், நேர்மறை எண்ணங்களுடன் இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள் பெண்கள். எந்த ஒரு பிரச்சனையாக இருந்தாலும், கடினமாக வேலையாக இருந்தாலும் உன்னால் முடியும் என்று உற்சாகப்படுத்தும் கணவரையே பெண்கள் அதிகம் நேசிக்கின்றனர். என்ன சூழ்நிலையாக இருந்தாலும் தங்களோடு, தங்களுக்கு உறுதுணையாக இருப்பவர்களே எங்களுக்கு வாழ்க்கை துணையாக இருக்க வேண்டும் என விருப்பப்படுகிறார்கள் பெண்கள். இந்த குணாதிசயம் மிகவும் முக்கியமானது என்றும் கூறுகிறார்கள்.

  • மனதளவில் முதிர்ச்சியாக இருக்க வேண்டும். என்ன செய்தாலும், ஒருமுறைக்கு நான்கு முறை யோசித்தால் கூட பரவாயில்லை. ஆனால், எடுக்கும் முடிவு சரியானதாக இருக்க வேண்டும். செயலில் இறங்கிய பிறகு யோசிப்பது தவறு. வெளி வேலைகளில் மட்டுமின்றி வீட்டிலும் கூட இதை கடைப்பிடிக்க வேண்டும் என எதிர்பார்கிறார்கள் பெண்கள்.

  jv_66 and bhrcm like this.

 6. #6
  chan's Avatar
  chan is online now Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Mar 2012
  Location
  chennai
  Posts
  17,617

  வாழ்க்கைத்துணையுடன் நேரத்தை செலவழிக்க &a

  வாழ்க்கைத்துணையுடன் நேரத்தை செலவழிக்க சில டிப்ஸ்

  * உங்கள் துணை வேலையோ அல்லது படிக்கிறார்களோ, அப்போது அவர்களுடன் ஒரு அரை மணிநேரமாவது செலவழிக்க வேண்டும்.

  அதிலும் உங்களுக்கு மதிய இடைவேளை கிடைக்கும் போதோ அல்லது மாலை வேளையிலோ சென்று ஒரு 10 நிமிடம் பார்த்தாலும்,
  அது அந்த நாளில் அவர்களுடன் சில நிமிடங்கள் செலவழித்தாலும், அவர்களுக்கு போதுமானதாக இருக்கும்.

  * நிறைய தம்பதியர்கள் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிட கூட நேரம் இல்லாத நிலையில் உள்ளனர். ஏனெனில் சிலருக்கு நைட் ஷிப்ட்
  வேலை இருக்கும். ஆகவே இந்த மாதிரியான நிலை இருந்தால், முன்கூட்டியே அவர்களுடன் நேரம் செலவழிப்பதற்கு வாரத்திற்கு 3

  முறை ஹோட்டலில் ஒன்றாக சாப்பிடுமாறு திட்டங்களைத் தீட்டி யோசித்து, அதற்கேற்றாற் போல் செயல்பட்டால், இருவருக்கும் எந்த
  ஒரு பிரச்சனையும ஏற்படாமல் இருக்கும்.

  ஒரு வேளை அந்த மாதிரி செயல்பட முடியவில்லையெனில், சனி ஞாயிறுகளில் நிச்சயம் அவர்களுடன் செலவழிக்குமாறு இருக்க
  வேண்டும். இதனால் அன்பு அதிகரிக்கும்.

  * இருவரில் ஒருவருக்கு ஏதேனும் முடியவில்லை என்றால், அப்போது முன்கூட்டியே திட்டம் தீட்டி, இருவரும் பேசிக் கொள்ள
  வேண்டும். மேலும் அவ்வாறு போடும் போது கட்டாயப்படுத்தாமல், அவர்களது வேலைப்பளுவைப் புரிந்து கொண்டு திட்டம் தீட்டினால்

  நல்லது. மேலும் அவ்வாறு இருவரும் வெளியே செல்லும் போது, மறக்காமல் மொபைல் போனை ஸ்விட் ஆப் செய்துவிடுவது, மேலும்
  நிம்மதியைத் தரும்.

  ஆகவே மேற்கூறியவாறு செயல்பட்டால், வாழ்க்கைத்துணையுடன் நேரத்தை செலவழித்தது போல் இருப்பதோடு, வாழ்க்கையும்
  சந்தோஷமாக ஆரோக்கியமாக இருக்கும்.

  முக்கியம் எப்போதும் பொறுமை இருக்க வேண்டும். பொறுமை இருந்தநால், எதனையும் எளிதில் வெல்லலாம். ஒரு வேளை உங்கள்
  துணை சந்திப்பதற்கு எந்த ஒரு முயற்சியிலும் ஈடுபடாமல் இருந்தால், உங்கள் முடிவு உங்கள் கையில்.

  Last edited by chan; 22nd Aug 2015 at 03:24 PM.
  jv_66 and bhrcm like this.

 7. #7
  kkmathy's Avatar
  kkmathy is offline Minister's of Penmai
  Real Name
  komathy
  Gender
  Female
  Join Date
  Jun 2012
  Location
  Malaysia
  Posts
  3,189

  Re: வாழ்க்கைத்துணையுடன் நேரத்தை செலவழிக்க

  Nice sharing, Latchmy.


 8. #8
  kkmathy's Avatar
  kkmathy is offline Minister's of Penmai
  Real Name
  komathy
  Gender
  Female
  Join Date
  Jun 2012
  Location
  Malaysia
  Posts
  3,189

  Re: அன்பை தவிர கணவரிடம் மனைவி விரும்பும் வி

  Nice sharing, Latchmy.


 9. #9
  chan's Avatar
  chan is online now Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Mar 2012
  Location
  chennai
  Posts
  17,617

  கணவன் மனைவி உறவு என்றும் இனிக்க நாம் செய&#

  கணவன் மனைவி உறவு என்றும் இனிக்க நாம் செய்ய என்ன வேண்டும்?
  குடும்ப மகிழ்ச்சிக்கு எது தேவை?

  1. வருமானம்
  2. ஒத்துழைப்பு
  3. மனித நேயம்
  4. பொழுதுபோக்கு
  5. ரசனை
  6. ஆரோக்கியம்
  7. மனப்பக்குவம்
  8. சேமிப்பு
  9. கூட்டு முயற்சி
  10.குழந்தைகள்

  கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன?
  1. அன்பாக , பிரியமாக இருக்க வேண்டும்.
  2. மனது புண்படும்படி பேசக் கூடாது.
  3. கோபப்படக்கூடாது.
  4. சாப்பாட்டில் குறை சொல்லக் கூடாது
  5. பலர் முன் திட்டக்கூடாது.
  6. எந்த இடத்திலும் மனைவியை விட்டுக் கொடுக்க கூடாது.
  7. முக்கிய விழாக்களுக்கு சேர்ந்து போக வேண்டும்.
  8. மனைவியிடம் கலந்து ஆலோசிக்க வேண்டும்.
  9. சொல்வதைப் பொறுமையாகக் கேட்க வேண்டும்
  10.மனைவியின் கருத்தை ஆதரிக்க வேண்டும், மதிக்க வேண்டும்.
  11.வித்தியாசமாக ஏதாவது செய்தால் ரசிக்க வெண்டும். பாராட்ட வேண்டும்.
  12.பணம் மட்டும் குறிக்கோள் அல்ல. குழந்தை, குடும்பம் இவற்றிற்கும் உரிய முக்கியத்துவம் தந்து நடந்து கொள்ள வேண்டும்.
  13. வாரம் ஒரு முறையாவது. மனம் விட்டுப் பேச வேண்டும்.
  14.மாதம் ஒரு முறையாவது வெளியில் அழைத்துச் செல்ல வேண்டும்.
  15. ஆண்டுக்கு ஒரு முறையாவது சுற்றுலா செல்ல வேண்டும்.
  16.பிள்ளைகளின் படிப்பைப் பற்றி அக்கறையுடன் கேட்க வேண்டும்.
  17. ஒளிவு மறைவு கூடாது.
  18. மனைவியை நம்ப வேண்டும்.
  19. முக்கியமானவற்றை மனைவியிடம் கூற வேண்டும்.
  20. மனைவியிடம் அடுத்த பெண்ணைப் பாராட்டக் கூடாது.
  21.அடுத்தவர் மனைவி அழகாக இருக்கிறாள் என்று எண்ணாமல் தனக்குக் கிடைத்ததை வைத்து சந்தோசப்பட வேண்டும்.
  22.தனக்கு இருக்கும் கஷ்டம் தன் மனைவிக்கும் இருக்கும் என்று எண்ண வேண்டும்.
  23. உடல் நலமில்லாத போது உடனிருந்து கவனிக்க வேண்டும்.
  24. சின்ன, சின்னத் தேவைகளை நிறைவு செய்ய வேண்டும்.
  25. சிறு சிறு உதவிகள் செய்ய வேண்டும்.
  26. குழந்தைகள் அசிங்கம் செய்து விட்டால் ‘இது உன் குழந்தை ‘ என்று ஒதுங்கக் கூடாது.
  27.அம்மாவிடம் காட்டும் பாசத்தை, மனைவியிடமும் காட்ட வேண்டும். ஏனென்றால் மனம் சலிக்காமல் அம்மாவை விட, அக்கா, தங்கையை விட அதிகமாக கவனிக்க கூடியவள் மனைவி.
  28. நேரத்திற்குச் சாப்பிட வேண்டும்.
  29.சாப்பாடு வேண்டுமென்றால் முன் கூட்டியே சொல்ல வேண்டும்.
  30. எங்கு சென்றாலும் மனைவியிடம் சொல்லி விட்டுச் சொல்ல வேண்டும்.
  31. சொன்ன நேரத்திற்கு வர வேண்டும்.
  32. எப்போதும் வீட்டு நினைப்பு வேண்டும்.
  33. மனைவியின் பிறந்த நாள் தெரிய வேண்டும்.
  34.மனைவிக்குப் பிடித்தவற்றைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
  35. பொய், சூது, மது, மாது போன்ற தீய பழக்கங்கள் கூடாது.
  36. மனைவி வீட்டாரைக் குறை சொல்லக் கூடாது.
  37. கைச் செலவுக்கு பணம் தர வேண்டும்.

  மனைவியிடம் கணவன் எதிர்பார்ப்பது என்ன?
  1. பள்ளி அலுவலக நேரம் தெரிந்து அதற்குமுன் தயாரித்தல்.
  2. காலையில் முன் எழுந்திருத்தல்.
  3. எப்போதும் சிரித்த முகம்.
  4. நேரம் பாராது உபசரித்தல்.
  5. மாமியாரை தாயாக மதிக்க வேண்டும்.
  6. கணவன் வீட்டாரிடையே அனுசரித்துப் போக வேண்டும்.
  7. எதற்கெடுத்தாலும் ஆண்களைக் குறை சொல்லக் கூடாது.
  8. அதிகாரம் பணணக் கூடாது.
  9. குடும்ப ஒற்றுமைக்கு உழைக்க வேண்டும். அண்ணன், தம்பி பிரிப்பு கூடாது.
  10. கணவன் குறைகளை வெளியே சொல்லக்கூடாது. அன்பால் திருத்த வேண்டும்.
  11. கணவனை சந்தேகப்படக் கூடாது.
  12. குடும்பச் சிக்கல்களை வெளியே சொல்லக் கூடாது.
  13.பக்கத்து வீடுகளில் அரட்டை அடிப்பதைக் குறைக்க வேண்டும்.
  14. வீட்டுக்கு வந்தவுடன், சாப்பிடும் போது சிக்கல்கள் குறித்துப் பேசக் கூடாது.
  15. கணவர் வழி உறவினர்களையும் நன்கு உபசரிக்க வேண்டும்.
  16. இருப்பதில் திருப்தி அடைய வேண்டும்.
  17. அளவுக்கு மீறிய ஆசை கூடாது.
  18. குழந்தை படிப்பில் கவனம் செலுத்த வேண்டும்.
  19. கொடுக்கும் பணத்தில் சீராகக் குடும்பம் நடத்த வேண்டும்.
  20.கணவரிடம் சொல்லாமல் கணவரின் சட்டைப் பையிலிருக்கும் பணத்தை எடுத்துக் கொள்ளக் கூடாது.
  21. தேவைகளை முன் கூட்டியே சொல்ல வேண்டும்.
  22. எதிர்காலத் திட்டங்களைச் சிந்திக்கும் போது ஒத்துழைக்க வேண்டும்.
  23. தினமும் நடந்ததை இரவில் சொல்ல வேண்டும்.
  24.தாய் வீட்டில் கணவரை குற்றம் சொன்னால் மறுத்துப் பேச வேண்டும்.
  25.அடக்கம், பணிவு தேவை. கணவர் விருப்பத்துக்கு ஏற்றாற் போல் ஆடை, அலங்காரம் செய்ய வேண்டும்.
  26. குழந்தையைக் கண்டிக்கும் போது எதிர்வாதம் கூடாது.
  27. சுவையாகச் சமைத்து, அன்புடன் பரிமாற வேண்டும்.
  28. கணவர் வீட்டுக்கு வரும் போது நல்ல தோற்றம் இருக்கும்படி வீட்டை அழகாக வைத்துக் கொள்ள வேண்டும்.
  29. பொது அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
  30.உரையாடலில் தெளிவாகப் பேசுவதுடன், பொருத்தமான முறையில் எடுத்துரைக்கும் விதமும் தெரிய வேண்டும்.
  31. தேவையற்றதை வாங்கிப் பண முடக்கம் செய்யக் கூடாது.
  32. உடம்பை சிலிம் ஆக வைத்துக் கொள்ள வேண்டும்.

  மகிழ்ச்சி குறையக் காரணங்கள் எது?
  பொதுவாகக் கீழ்க்கண்ட சில காரணங்களால்தான் ஒரு குடும்பத்தில் மகிழ்ச்சி குறைகிறது. உங்கள் குடும்பத்தில் எந்தெந்த காரணங்கள் என்பதை உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் தனித்தனியாக டிக் செய்து கண்டு பிடியுங்கள். பின்னர் அவற்றை நிவர்த்தி செய்ய முயற்சி மேற்கொள்ளுங்கள்.

  1. அடிக்கடி வரும் சண்டைச் சச்சரவுகள்.
  2. ஒருவறையொருவர் குறை கூறும் பழக்கம்.
  3. அவரவர் வாக்கைக் காப்பாற்றத் தவறுதல்.
  4. விரும்பியதைப் பெற இயலாமை.
  5. ஒருவரையொருவர் நம்பாமை.
  6. ஒருவர் மீது ஒருவர் அக்கறை காட்டுவதில்லை.
  7. உலலாசப் பயணம் போக இயாலாமை.
  8. ஒருவர் வேலையில் பிறர் உதவுவதில்லை.
  9. விருந்தினர் குறைவு.
  10. பொருள்களை ஆளுக்கு ஆள் இடம் மாற்றி வைத்தல்.
  11. புதிய முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு இலலை.
  12. விட்டுக் கொடுக்கும் பண்பு குறைவு.
  13. ஒருவர் மனம் புண்படும்படியாகப் பேசுதல்.
  14. மகிழ்வான சூழ்நிலைகளை உருவாக்குதல் குறைவு.

  பத்து கட்டளைகள்:
  1. அன்பு செலுத்துங்கள். அக்கறை காட்டுங்கள்.
  2. ஆர்வத்துடன் அதிகமாக செயல்பட விரும்புங்கள்.
  3.இன்சொல் கூறுங்கள். 'நான்', 'எனது' போன்ற வார்த்தைகளைத் தவிர்த்திடுங்கள்.
  4. உணர்வுகளை மதிக்கவும், மரியாதை கொடுக்கவும் புகழவும் கற்றுக் கொள்ளுங்கள்.
  5. ஊக்கத்துடன் சுறுசுறுப்பாகச் செயல்படுங்கள்.
  6. எப்போதும் பேசுவதைக் கேட்டு, பின்விளைவை யோசித்து சரியான சைகை, முகபாவத்துடன் தெளிவாகப் பேசுங்கள்.
  7. ஏற்றுக் கொள்ளும் மனப் பக்குவத்துடன் பிறர் குறைகளை அலட்சியப் படுத்துங்கள்.
  8. ஐங்குணமாகிய நகைச்சுவை, நேர்மை, சமயோசிதம், இன்முகம், விட்டுக் கொடுத்தல் ஆகியவற்றைக் கடைப்பிடியுங்கள்.
  9.ஒவ்வொருவரையும் வெவ்வேறு புதுப்புது வழிகளில் கையாளுங்கள்.
  10.ஓஹோ, இவர் இப்படித்தான் என்று யாரையும் பார்த்த மாத்திரத்தில் மதிப்பிடாதீர்கள்.

  வாழ்க்கையில் நல்வழிகளைக் கடைப்பிடிப்போம். வெற்றியை எட்டிப் பிடிப்போம்!


  Last edited by chan; 31st Aug 2015 at 01:00 PM.
  jv_66, rajeswaripalani and bhrcm like this.

 10. #10
  jv_66's Avatar
  jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
  Real Name
  Jayanthy
  Gender
  Female
  Join Date
  Dec 2011
  Location
  Bangalore
  Posts
  32,081

  Re: For a Successful married life...-இரு மனம் இணைந்தது தான் திருமணம்

  அருமையான வழிகாட்டுதல்கள்

  Jayanthy

loading...

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •  
Like It?
Share It!Follow Penmai on Twitter