Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

கணவரை `மயக்கலாமே!


Discussions on "கணவரை `மயக்கலாமே!" in "Married Life" forum.


 1. #1
  silentsounds's Avatar
  silentsounds is offline Moderator & Blogger Guru's of Penmai
  Gender
  Male
  Join Date
  Feb 2011
  Location
  chennai
  Posts
  6,312
  Blog Entries
  31

  கணவரை `மயக்கலாமே!

  கணவருக்கு என்மேல் ஆசையே இல்லை என்பவரா நீங்கள்? உங்களுக்காக விஞ்ஞானிகள் ஆராய்ந்து கணவரை கட்டிப்போடும் சில தலையணை மந்திரங்களை கண்டுபிடித்திருக்கிறார்கள்.
  மும்பையைச் சேர்ந்த அமி, கணவர் தன்னை கண்டு கொள்வதே இல்லை என்று புலம்பிக் கொண்டிருந்தார். மனோதத்துவ நிபுணர் ஒருவர் அமியை அவரது வீட்டில் எலுமிச்சை சென்ட் தெளிக்கச் சொன்னார். சிறிதுநேரம் கழித்து வீட்டிற்கு வந்த கணவரின் முகத்தில் உடனடி மாற்றங்கள். வீடே கமகமக்கிறதே. ச்சே இந்த நேரத்தில் இந்த குப்பைகள்தான் கொஞ்சம் அசிங்கமாகத் தெரிகிறது. டார்லிங் கொஞ்சம் கிளீனா வச்சிருந்தா நல்லா இருக்குமே. கிளீன் செய்வோமா? நானும் உதவி செய்கிறேன் என்று கேட்டார். நான் அசந்து போய்விட்டேன். அன்று நாங்கள் இருவரும் சேர்ந்து வீட்டை சுத்தம் செய்தோம் என்றார் அமி.

  நான் ஆய்வாளர்கள் சொன்னபடி செய்து பார்த்தேன். எனக்கு முதலில் நம்பிக்கை குறைவாகத்தான் இருந்தது. சென்ட் தெளித்ததும் எனக்கு கொஞ்சம் நம்பிக்கை வந்தது. அப்படியே நடந்தது. அதுவும் வேலைநாளில் இந்த அதிசயம் நடந்ததுதான் என்னை மேலும் ஆச்சரியப்படுத்திவிட்டது. விடுமுறை நாளில் கூட எனக்கு வீட்டை ஒதுங்க வைத்து உதவி செய்ய தயங்குவார். ஆனால் அன்றோ வீட்டிற்கு வந்தவுடன் பணி களைப்பை கூட மறந்து என்னுடன் ஒத்துழைத்தார். சந்தோஷமாக இருந்தது. நாங்கள் கிளீன் செய்துவிட்டு இரவில் சந்தோஷமாக வெளியே டின்னருக்கு சென்றோம் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன் என்று புன்னகைக்கிறார் அமி. அப்புறம் இன்னொரு விஷயம் கணவன் மனைவிக்கு இடையே அன்று எந்த முட்டல் மோதலும் வரவில்லையாம்.

  சரி, சரி லெமன் சென்ட் என்ன விலை என்றுதானே யோசிக்கிறீர்கள்? பொறுங்க இன்னும் இரண்டு ஆய்வுகளைப் படித்துவிட்டு மொத்தமாக கடைக்குப் போகலாம்

  எழுத்தாளராக இருக்கும் மனிஷா தினமும் பலவித மனிதர்களை சந்திப்பவர். கணவர் நல்லவர்தான் என்றாலும் நம் மீது இன்னும் அக்கறை செலுத்தினால் நன்றாக இருக்குமே என்ற எண்ணம் அவருக்கு இருந்தது. மனிஷாவை வைத்து இந்த ஆய்வைச் செய்தனர்.

  எடுப்பான வெள்ளை நிற பேன்ட் மற்றும் முழுக்கை சட்டை அணிந்து, மார்டனாக ஷால் போன்ற சிவப்பு துணியை (ஸ்கார்ப்) கழுத்தில் சுற்றிக் கொண்டு மீட்டிங் அறையில் நுழைகிறார் மனிஷா. எல்லா ஆண்களின் பார்வையும் அவர்மீது நிலைகுத்தி நிற்கிறது.

  இத்தனைக்கும் அவர் வழக்கத்தைவிட குறைவாகத்தான் மேக்கப் செய்திருந்தார்.
  இந்த மாற்றத்தை அவர் சற்றும் எதிர்பார்க்கவில்லை. எழுந்து நின்று பேசுகிறார். எல்லோரும் உற்றுக் கவனித்துவிட்டு ஆரவாரமாக கைதட்டி பாராட்டுகிறார்கள். மிகமிக சந்தோஷமாக வீடு திரும்புகிறார். வரும் வழியில் பலரும் அவரையே உற்றுப் பார்ப்பதை உணர்கிறார். வீட்டிற்கு வந்ததும் கணவரும் ஆசையுடன் பார்க்கிறார். நெருங்கி வருகிறார். ஒரு இச்

  என்ன மாயம் செய்தது இந்த உடை என்று மனிஷாவுக்கு ஆச்சரியம். ஆய்வாளர்கள் சொன்னது அப்படியே நடக்கிறதே. எல்லோரையும் நம்மை கவனிக்க வைத்துவிட்டதே. இனி அவ்வப்போது சிவப்பு ஸ்கார்ப் அணிய வேண்டும். என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டு கணவருடன் முத்தத்தை பகிர்ந்து கொண்டார். ஓரிரு நாட்களில் கணவர் ஒரு சிவப்பு ஸ்கார்ப் கிப்ட்டாக வழங்கினார் என்று ஆச்சரியமாக சொல்கிறார் மனிஷா.

  என்ன?. இனி சிவப்பு கலர் உங்களுக்கும் பேவரேட் நிறமாகப் போகிறதா?

  இப்ப கிளம்புங்க கடைக்கு! சென்ட், ஸ்பிரே, சிவப்பு உடை எல்லாம் பர்ச்சேஸ் பண்ணலாம். ஆமா பர்ஸ் கணவர்கிட்டயா இருக்கு? முதல்ல அத கரெக்ட் பண்ணணுமே! இதுக்கு உங்களுக்கு ஏற்கனவே தெரிந்த தலையணை மந்திரத்தையே பயன்படுத்துங்க. அது வேறொன்றுமில்லை. அன்பான இச் இச் இச்!


  -netsource

  Similar Threads:

  Sponsored Links
  Last edited by Parasakthi; 22nd Jul 2011 at 12:11 PM.
  Guna (குணா)

  நினைப்பில் தூய்மையும், சொல்லில் உண்மையும்
  மிகவும் அவசியமானவை
loading...

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •  
Like It?
Share It!Follow Penmai on Twitter