Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

தம்பதிகளுக்குள் `தடுமாற்றம் ஏன்?


Discussions on "தம்பதிகளுக்குள் `தடுமாற்றம் ஏன்?" in "Married Life" forum.


 1. #1
  silentsounds's Avatar
  silentsounds is offline Moderator & Blogger Guru's of Penmai
  Gender
  Male
  Join Date
  Feb 2011
  Location
  chennai
  Posts
  6,312
  Blog Entries
  31

  தம்பதிகளுக்குள் `தடுமாற்றம் ஏன்?

  பஸ், ரெயிலில் புதுமணத் தம்பதிகள் பயணம் செய்வதை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? அருகருகே ஒட்டி அமர்ந்திருப்பார்கள். எந்நேரமும் பேசிக்கொண்டிருப்பார்கள். அவர்கள் முகத்தில் புன்னகை இருக்கும். பேச்சில் சிணுங்கல் தெரியும். சாலையின் இருமருங்கிலும் அவர்களை கடந்துபோகும் ஒவ்வொன்றும் சந்தோஷ சமாச்சாரங்களாக இருக்கும். அப்போது அவர்கள் வாழ்க்கை சந்தோஷ சாம்ராஜ்யம் போன்றிருக்கும்.
  நாலைந்து மாதங்கள் கடந்திருக்கும். அதே பஸ், ரெயில் பயணம். அதே சக பயணிகள். சாலை இருமருங்கிலும் அதே காட்சிகள். எல்லாம் பழை யதுபோல் இருந்தாலும் இந்த தம்பதிகளின் சுபாவம் மட்டும் தலைகீழாய் மாறியிருக்கும். கொஞ்சல் இல்லை. பேச்சில் சிணுங்கள் இல்லை. நெருக்கமும் இல்லை. நீ யாரோ நான் யாரோ என்பதுபோல் ஆளுக் கொரு பக்கமாய் இறுக்கத்துடன் காணப் படுவார்கள். அங்கும் இங்குமாக அவர்கள் பார்க் கும் காட்சிகளில் எல்லாம் வெறுமையும், சூன்யமும் தான் தென்படும்.
  ஏன் இந்த மாற்றம்? முதல் பயணத்தில் தெரிந்த சந்தோஷ சாம்ராஜ்யம் இந்த இரண்டாம் பயணத் தில் சரிந்துபோனது எப்படி?
  இன்று நிலவும் கசப்பான ஒரு உண்மையை எல்லோரும் ஜீரணித்துதான் ஆகவேண்டும். திரு மணமான ஆறு மாதத்திற்குள் விவாகரத்தைப் பற்றி யோசிக்கும் தம்பதிகளின் எண்ணிக்கை, விலைவாசியைவிட வேகமாக உயர்ந்து கொண்டிருக்கிறது. கணவர்- மனைவி இருவரும் போட்டி போட்டு பணத்தை சம்பாதிக் கிறார்கள். அதுபோல் போட்டி போட்டு சந்தோஷத்தை சிதைக்கவும் செய்கிறார்கள்.
  ஏன் இந்த நிலை?
  பழைய காலத்தில் கணவர்- மனைவியாக வாழ்க்கையில் இணைந்தவர்களிடம் இருந்த அன்பைவிட, அதிகமான அளவு அன்பு இன்று வாழ்க்கையில் இணைபவர்களிடம் இருக்கிறது. பண்பும், பாசமும் கடந்த காலத்து மனிதர்களை விட இவர்களிடம் அதிகம் இருக்கிறது. ஆனால் அவைகளை எல்லாம் வெள்ளம்போல அணைக்குள் அடைத்துவைத் திருக்கிறார்கள். தேவைக்குகூட அதனை திறப்பதில்லை. திருமணமான ஒரு சில மாதங் களிலே சாதாரண விஷயத்தை பெரிதாக்கி, தங்கள் வாதத் திறமையைக்காட்டி யார் பெரியவர் என்ற கோதாவில் இறங்கிவிடுகிறார்கள்.
  இந்தியாவை வேற்றுமையில் ஒற்றுமைகாணும் நாடு என்பார்கள். அதுபோல் வேற்றுமை களால் நிறைந்தவர்கள் புதிதாக வாழ்க்கையில் இணையும் தம்பதி கள். ஆண்- பெண் இருவருமே உடல் ரீதியாக வேறுபாடு கொண்டவர்கள். இரு உடல்களும் வெவ்வேறு விதமான தன்மைகள் கொண்டவை. தேவைகள் கொண்டவை. எதிர்பார்ப்புகள் கொண் டவை. ஆணும், பெண்ணும் உணர்வு ரீதியாக வேறுபாடு கொண்டவர்கள். உடை ரீதியாக வும், பழக்க வழக்கங்கள், வாழ்க்கை சூழல்கள், எண்ணங்கள், செயல்கள் எல்லாவற்றிலுமே வேற்றுமைகள் கொண்டவர்கள்.
  அதனால் `தங்களுக்குள் நிறைய வேற்றுமைகளும் இருக்கின்றன என்பதை அவர்கள் ஒத்துக்கொள்ளவேண்டும். ஒத்துக்கொள்ளும் அதே நேரத்தில், `நாம் இருவரும் திருமணத் தில் இணைவது நமக்குள் இருக்கும் வேற்றுமைகளை களைவதற்காக அல்ல! நம்மிடம் இருக்கும் ஒற்றுமைகளை மேம்படுத்தி, வேற்றுமைகளை பெரிதுபடுத்தாமல் வாழ்க்கையை நடத்தவேண்டும் என்பதற்காகத்தான் என்பதை மனதில் இருத்திக்கொள்ள வேண்டும். அப்படி இருத்திக்கொண்டால், குறைகளை மட்டும் கண்டுபிடிக்காமல் நிறைகளைப் பற்றி பேசத் தொடங்கிவிடுவார்கள். அப்படி வாழ்க்கையை அமைத்துக்கொள்ளும் தம்பதிகளிடம் குறைகள் குறைந்து, மகிழ்ச்சி பூக்கத் தொடங்கிவிடும்.
  நாம் வசிக்கும் சொர்க்கம் போன்ற வீட்டை பல தம்பதிகள் இன்று இறைச்சிக்கூடம், மதுக்கடை, அங்காடித்தெரு, கல்லறைத் தோட்டம் போல் மாற்ற முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள்.
  எப்படி தெரியுமா?
  நாடக அரங்கத்தில் கைதேர்ந்த பலர் நடிப்பார்கள். அதைப்போல வீட்டில் கணவர் மனைவியிட மும், மனைவி கணவரிடமும் நடிக்கிறார்கள். யதார்த்தத்தை மறைத்துவிட்டு நடித்தால், வீட்டில் இருந்து உண்மையும், நம்பிக்கையும் விடை பெற்றுச் சென்றுவிடும். அந்த வீடு மாண்பை இழந்து, கூடிக்கலையும் கேளிக்கை விடுதிபோல் ஆகிவிடும்.
  சில வீடுகளில் எந்நேரமும் டெலிவிஷன் ஓடிக் கொண்டிருக்கிறது. அதில் அழுகை, கூச்சல், சதி, வேதனை, விம்மல் போன்றவை ஒலித்துக் கொண்டே இருக்கும். கணவரும், மனைவி யும் மவுன விரதம் இருப்பவர்கள் போல் மணிக்கணக் கில் அதையே பார்த்துக்கொண்டி ருப்பார்கள். திடீரென்று நான்கு மணிநேரம் கரண்ட் கட் என்றாலும் அதே இருக்கைகளில் டி.வி. முன் னால் இருந்து அதையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருப்பார்கள். தங்களுக்குள் பேசவேமாட் டார்கள். அவர்கள் வாழ வேண்டிய அந்த வீட்டை ஒரு சினிமா தியேட்டர் போல் ஆக்கி விட்டார்கள் என்று அர்த்தம்.
  பல தம்பதிகள் `இருவரும் பார்த்தாலே பிரச்சினை வந்துவிடும். பேசினாலே சண்டை வந்துவிடும்` என்று அமைதியாக இருந்துவிடுகிறார்கள். அப் படி தேவையற்ற அமைதி ஒரு வீட்டில் நிலவும்போது அங்கே கிடக்கும் கட்டில்கள் சவப்பெட்டிகளாக மாறிவிடுகிறது. அந்த வீடு கல்லறைத்தோட்டம் போன்ற நிலைக்கு சென்றுவிடுகிறது.
  சில வீடுகளில் கணவரும், மனைவியும்தான் வசிப்பார்கள். ஆனால் சத்தம் நிறைந்த `அங்காடித் தெரு போல் தோன்றும். அவர்கள் இருவருக்குள்ளே பேரம் பேசுதல், கூச்சல் போடுதல், மோதிக்கொள்ளுதல் போன்றவை எல்லாம் அரங்கேறும். சில நேரங்களில் அவர்களுக்குள் மோதல் முற்றி அடிதடி, கைகலப்பு, காயம் என்று ஆகிவிடும்போது அந்த வீடு இறைச்சிக்கூடமாக மாறிவிடுகிறது.
  சொர்க்கம், நரகம் இரண்டுமே கற்பனைதான். ஆனால் அவைகளை நிஜமாக்க தம்பதி களால் முடியும். நிறைய பேர் நரகம் ஆக்குவதில்தான் கவனம் செலுத்துகிறார்கள். சொர்க்கம் ஆக்குவது எப்படி என்பதைத்தான் அவர்கள் தெரிந்துகொள்ள வேண்டும். இருவரும் அன்பு செலுத்துவதில் போட்டிபோட வேண்டும். `நான் முந்தி நீ முந்தி என்று பாராட்ட முன்வர வேண்டும். மனைவிக்கு கணவர் முழு சுதந்திரத்தையும், அளவற்ற நம்பிக்கையையும், பாதுகாப்பையும் வழங்கவேண்டும்.
  சமர்ப்பண உணர்வு, தியாக மனப்பான்மை போன்றவை இருவரிடமுமே உருவாக வேண் டும். `நாம் இருவரும் திருமணம் செய்துகொண்டுள்ளோம். வாழ்ந்து மகிழ்ந்து குழந்தை களைப் பெற்று எதிர்கால சமூகத்தை உருவாக்கும் மிகப்பெரிய பொறுப்பு நமக்கு இருக்கிறது. அதை நோக்கி நாம் செல்லவேண்டும்` என்பதை இருவரும் உணர்ந்து, அதற்காக வாழவேண்டும்.
  திருமணமான பெண்களுக்கும், ஆண்களுக்கும் ஒருவிஷயத்தில் பிடிவாதம் இருக்க வேண்டும். அது, `எப்பாடுபட்டாவது பிரியாமல் ஒன்று சேர்ந்து வாழ்வோம் என்பது!

  -senthilvayal

  Similar Threads:

  Sponsored Links
  Guna (குணா)

  நினைப்பில் தூய்மையும், சொல்லில் உண்மையும்
  மிகவும் அவசியமானவை
 2. #2
  Ganga's Avatar
  Ganga is offline Registered User
  Blogger
  Minister's of Penmai
  Gender
  Female
  Join Date
  Jun 2011
  Location
  Chennai
  Posts
  3,271
  Blog Entries
  4

  Re: தம்பதிகளுக்குள் `தடுமாற்றம் ஏன்?

  "சொர்க்கம், நரகம் இரண்டுமே கற்பனைதான். ஆனால் அவைகளை நிஜமாக்க தம்பதி களால் முடியும். நிறைய பேர் நரகம் ஆக்குவதில்தான் கவனம் செலுத்துகிறார்கள். சொர்க்கம் ஆக்குவது எப்படி என்பதைத்தான் அவர்கள் தெரிந்துகொள்ள வேண்டும்"
  Vettai sorkkam aka tips thanthatharkku nandrigal Guna....Thanks for sharing!!

  கங்கா
  விழாமல் இருப்பது பெருமையன்று. விழும் போது எல்லாம் எழுவது தான் பெருமை!!


 3. #3
  lathabaiju's Avatar
  lathabaiju is offline Penman of Penmai
  Blogger
  Minister's of Penmai
  Gender
  Female
  Join Date
  Jun 2011
  Location
  Tirupur
  Posts
  3,729

  Re: தம்பதிகளுக்குள் `தடுமாற்றம் ஏன்?

  well said ganga,,, sorgamum naragamum avaravar seyalgalil than irukkindrana.

  அன்புடன்
  உங்கள் லதா பைஜூ...

  Stories of Latha Baiju

  எனது கவிதைப் பயணம்

  இருவரிக் கவிதைகள்

  "ACHIEVEMENT IS ALMOST AUTOMATIC WHEN THE GOAL BECOMES AN INNER COMMITMENT"

 4. #4
  silentsounds's Avatar
  silentsounds is offline Moderator & Blogger Guru's of Penmai
  Gender
  Male
  Join Date
  Feb 2011
  Location
  chennai
  Posts
  6,312
  Blog Entries
  31

  Re: தம்பதிகளுக்குள் `தடுமாற்றம் ஏன்?

  Thanks Ganga and Latha for sharing your comments about this...

  Guna (குணா)

  நினைப்பில் தூய்மையும், சொல்லில் உண்மையும்
  மிகவும் அவசியமானவை
loading...

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •  
Like It?
Share It!Follow Penmai on Twitter