Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree114Likes

Is it good to share your past with your husband? - கசந்த வாழ்க்கையை கணவரிடம் சொல்ல


Discussions on "Is it good to share your past with your husband? - கசந்த வாழ்க்கையை கணவரிடம் சொல்ல" in "Married Life" forum.


 1. #1
  thenuraj's Avatar
  thenuraj is offline Penman of Penmai
  Blogger
  Silver Ruler's of Penmai
  Real Name
  Thenmozhi
  Gender
  Female
  Join Date
  Jul 2012
  Location
  Atlanta, U.S
  Posts
  31,085
  Blog Entries
  13

  Is it good to share your past with your husband? - கசந்த வாழ்க்கையை கணவரிடம் சொல்ல
  பெண்களில் பலருக்கும் மனச்சுமையாக இருந்து கொண்டிருக்கும் ஒரு விஷயம், அவர்களின் சொல்லிக் கொள்ள முடியாத கடந்த கால வாழ்க்கை. திருமணமானதும் தங்களின் அந்த கசந்த காலத்தை கணவரிடம் கூறலாமா, வேண்டாமா என தங்களுக்குள் பெரிய அளவில் மனப்போராட்டமே நடத்துவார்கள்.

  `சொன்னால் ஒன்றும் தப்பில்லை' என நட்பு வட்டத்திலும், `சொல்லிவிடாதே, உன் வாழ்க்கையை நீயே ஏன் கேள்விக்குறியாக்கிக் கொள்ள வேண்டும்?' என்று உறவினர்களும் சொல்லி பயமுறுத்துவார்கள். இந்த நிலையில் ஒரு தெளிவான முடிவு தெரியாமல் பெண்கள் ஒரு குற்ற உணர்வுடன் வாழ்க்கையை தொடர வேண்டியிருக்கலாம்.

  அவர்களுக்கு சரியான ஆலோசனை கூற அருகில் யாரும் இல்லாத நிலையில் யார்மூலமாகவோ இவர்களின் கடந்த காலம் கணவருக்கு சொல்லப்பட்டு, அப்போது ஏற்படும் பூகம்பத்தில் எதிர்காலமும் சேர்ந்து ஆட்டம் கண்டுவிடும் அபாயம் உண்டு. ஆண்களின் கடந்த காலத்தை பெண்கள் சுமைதாங்கிகளாக தாங்கிக் கொள்கிறார்கள்.

  அதன் சுவடு சிறிதும் தெரியாமல் ஒரு நல்ல எதிர்காலத்தை அமைத்துக் கொடுக்கும் மனப்பக்குவம் இந்திய பெண்களுக்கு அதிகமாகவே இருக்கிறது. அந்த பக்குவம் ஆண்களிடம் உள்ளதா என்பது கேள்விக்குறியே. காரணம் நம்முடைய சமூக அமைப்பு. ஆண் கடந்த காலத்தை ஒரு பெண்ணிடம் ஒப்படைப்பது போல, பெண் தன்னுடைய கடந்த காலத்தை ஆணிடம் வெளிப்படுத்த தயங்குகிறாள்.

  நம்முடைய சமுதாய அமைப்பில் ஆண்கள் பல திருமணங்களை செய்து கொள்கிறார்கள். அவர்களின் மதிப்பு குறைவதில்லை. ஆனால் பெண்கள் அப்படியில்லை. ஒருமுறை அவர்களுக்கு திருமணம் நடந்து விட்டால் வாழ்நாள் முழுமைக்கும் அவர்கள் அந்த திருமண பந்தத்துடன் கட்டுண்டு கிடக்க வேண்டும். இது தான் நம் குடும்ப கட்டமைப்பின் காலம் காலமான நியதி! பெண்ணானவள் எப்போதுமே குடும்பத்தின் கவுரவமாக, எதிர்காலமாக கருதப்பட்டாள்.

  இதுவும் ஒருவகை அடிமைத்தனம் தான். இன்று முன்னேறிய சமூகத்தில் திருமணம் பல மாற்றங்களுக்கு உட்பட்டிருக்கிறது. பெண்கள் தயக்கமின்றி மறுமணம் செய்து கொள்கிறார்கள். இழந்த வாழ்க்கையை புதுப்பித்துக் கொள்கிறார்கள். இருந்தாலும் கடந்த காலம் எனும் திரையை மட்டும் விலக்க தயங்கும் சூழ்நிலை இன்றும் இருந்து வருகிறது.

  காரணம் எதிர்காலம் கேள்விக்குறியாகி விடுமோ என்ற பயம்தான். பெண்கள் நம்மைப் போல உயிரும் உணர்வும் உள்ள ஜீவன்கள் என்பதை ஆண்கள் ஏற்றுக் கொள்ளவே பலகாலம் பிடித்தது. ஒருவனை திருமணம் செய்து கொண்டு, ஒருவனுக்காக வாழ்ந்து, அவன் இறந்ததும் அவனுடன் உடன்கட்டை ஏறும் கொடூர வழக்கம் நம் இந்தியாவில் இருந்தது.

  இதனை ஒரு புனிதமான, தெய்வீக வழக்கம் என்று கூறிக்கொண்டு பெண்களை உயிருடன் நெருப்புக்குத் தாரைவார்க்கும் மனிதர்கள், பெண்களின் கடந்த காதல் காலத்தை எப்படி ஏற்றுக் கொள்வார்கள்? பெண்களுக்கு எந்த எதிர்பார்ப்பும் இருக்ககூடாது. இருந்தால் அது பாவம். ஆசைகள் இருந்தால் அது துரோகம்.

  யாரையாவது காதலித்தால் அது சமூக குற்றம் என்பது போன்ற மனநிலை ஆண்கள் மனதில் வேறூன்றி விட்ட நிலையில், அவர்களுடைய கடந்த காலத்தை திரை போட்டு மறைப்பதை தவிர வேறு என்ன செய்ய முடியும். ஆனால் இந்த நிலை மாற வேண்டும். அப்படி மாறினால் அது பெரிய சமூக மாற்றமாக அமையும். ஆண்கள் தன்னைப் போலவே பெண்களும் உயிருள்ள பிரஜைகள் என்பதை கருத்தில் கொண்டாலே போதுமானது.

  அவர்கள் கடந்த காலத்தை பரந்த மனதுடன் உற்று நோக்கி அவர்களுடைய நேர்மையான மனதை அஸ்திவாரமாக கொண்டு புதிய வாழ்க்கையை ஆரம்பிக்கலாம். ஏனென்றால் கடந்த காலத்தை விட நிகழ்காலம் முக்கியமானது.

  அது ஒளிமயமாக மாற வேண்டுமானால் கடந்த கால அவலங்களை தூக்கிப் போட வேண்டும். அதற்கு உயர்ந்த உள்ளம் தேவை. இது ஒவ்வொரு ஆணிடமும் இருக்க வேண்டும். இருந்தால் அது அவர்களுடைய வாழ்க்கையை வளமாக்கும்.

  Similar Threads:

  Sponsored Links

 2. #2
  priyasarangapan's Avatar
  priyasarangapan is offline Yuva's of Penmai
  Gender
  Female
  Join Date
  Oct 2011
  Location
  bangalore
  Posts
  7,825

  re: should you share your past with your husband - கசந்த வாழ்க்கையை கணவரிடம் சொல்ல

  என்னை பொறுத்த வரை கடந்த காலத்தில் வாழ்க்கை என்பது ஒரு எக்ஸ்பிரிமெண்ட் அது எல்லோருக்கும் சக்சஸ் ஆக இருக்கும் என்று சொல்ல முடியாது...

  இருவருமே கடந்ததை பார்க்காமல் இருப்பது நல்லது...

  Thanks thenu good sharing...


  With Love,
  Priya

 3. #3
  jv_66's Avatar
  jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
  Real Name
  Jayanthy
  Gender
  Female
  Join Date
  Dec 2011
  Location
  Bangalore
  Posts
  31,985

  re: should you share your past with your husband - கசந்த வாழ்க்கையை கணவரிடம் சொல்ல

  பெண்களின் கடந்த காலத்தை (காதலை ) பக்குவமாக ஏற்கும் மனப்பக்குவம் இன்னும் நம் இந்திய ஆண்களுக்கு வரவில்லை என்றே கூற வேண்டும் .

  நிறைய பெண்களும் இதையே (ஆண்களின் கதை ) நினைத்து , மனதை கஷ்டப் படுத்திக் கொள்ளுகிறார்கள்

  அது வராதவரை , இதை (கடந்த காலத்தை ) இருவருமே பகிர்ந்து கொள்ளாமல் இருப்பதே நலம் .

  இதைத்தான் நான் கீழ்கண்ட திரியில் கூறி இருக்கிறேன் .  How to run Smooth family
  Last edited by jv_66; 14th Oct 2013 at 05:51 PM.
  Jayanthy

 4. #4
  Mary Daisy's Avatar
  Mary Daisy is offline Registered User
  Blogger
  Guru's of Penmai
  Real Name
  Daisy
  Gender
  Female
  Join Date
  Dec 2011
  Location
  Little Roma Puri
  Posts
  5,047
  Blog Entries
  4

  re: should you share your past with your husband - கசந்த வாழ்க்கையை கணவரிடம் சொல்ல

  சிந்தித்து செயல்பட வேண்டிய விஷயம் . . .


 5. #5
  thenuraj's Avatar
  thenuraj is offline Penman of Penmai
  Blogger
  Silver Ruler's of Penmai
  Real Name
  Thenmozhi
  Gender
  Female
  Join Date
  Jul 2012
  Location
  Atlanta, U.S
  Posts
  31,085
  Blog Entries
  13

  re: should you share your past with your husband - கசந்த வாழ்க்கையை கணவரிடம் சொல்ல

  Quote Originally Posted by priyasarangapan View Post
  என்னை பொறுத்த வரை கடந்த காலத்தில் வாழ்க்கை என்பது ஒரு எக்ஸ்பிரிமெண்ட் அது எல்லோருக்கும் சக்சஸ் ஆக இருக்கும் என்று சொல்ல முடியாது...

  இருவருமே கடந்ததை பார்க்காமல் இருப்பது நல்லது...

  Thanks thenu good sharing...

  நன்றி ப்ரியா...
  இருந்தாலும் ஏதோ கணவனிடம் மறைத்து விட்டோமேனு ஒரு குற்ற உணர்ச்சி வாழ்நாள் முழுதும் இருக்குமே....!!
  ஆனால் சொன்னாலும் வாழ்க்கை போய்விடும்....!!
  பெண்களின் நிலை கொடுமை...!!


 6. #6
  thenuraj's Avatar
  thenuraj is offline Penman of Penmai
  Blogger
  Silver Ruler's of Penmai
  Real Name
  Thenmozhi
  Gender
  Female
  Join Date
  Jul 2012
  Location
  Atlanta, U.S
  Posts
  31,085
  Blog Entries
  13

  re: should you share your past with your husband - கசந்த வாழ்க்கையை கணவரிடம் சொல்ல

  Quote Originally Posted by jv_66 View Post
  பெண்களின் கடந்த காலத்தை (காதலை ) பக்குவமாக ஏற்கும் மனப்பக்குவம் இன்னும் நம் இந்திய ஆண்களுக்கு வரவில்லை என்றே கூற வேண்டும் .

  நிறைய பெண்களும் இதையே (ஆண்களின் கதை ) நினைத்து , மனதை கஷ்டப் படுத்திக் கொள்ளுகிறார்கள்

  அது வராதவரை , இதை (கடந்த காலத்தை ) இருவருமே பகிர்ந்து கொள்ளாமல் இருப்பதே நலம் .

  இதைத்தான் நான் கீழ்கண்ட திரியில் கூறி இருக்கிறேன் .  How to run Smooth family  நன்றி அக்கா...
  நான் அந்த திரியில் சென்று பார்க்கிறேன்....!!


 7. #7
  thenuraj's Avatar
  thenuraj is offline Penman of Penmai
  Blogger
  Silver Ruler's of Penmai
  Real Name
  Thenmozhi
  Gender
  Female
  Join Date
  Jul 2012
  Location
  Atlanta, U.S
  Posts
  31,085
  Blog Entries
  13

  re: should you share your past with your husband - கசந்த வாழ்க்கையை கணவரிடம் சொல்ல

  Quote Originally Posted by Mary Daisy View Post
  சிந்தித்து செயல்பட வேண்டிய விஷயம் . . .

  ஆமா டெயிசி....
  என்ன ரொம்ப நாளா ஆளையே காணோம்....பிஸியா...

  sumitra likes this.

 8. #8
  selvipandiyan's Avatar
  selvipandiyan is offline Registered User
  Blogger
  Silver Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Nov 2011
  Location
  Chennai
  Posts
  33,042
  Blog Entries
  14

  Re: Is it good to share your past with your husband? - கசந்த வாழ்க்கையை கணவரிடம் சொல்

  thevai ilaatha vishayankal........
  athai solrathaal onnum nadakka porathillai...99 satha veetha aankal nalla vithamaa eduthukka maattanka.......


 9. #9
  vijivedachalam's Avatar
  vijivedachalam is offline Penman of Penmai
  Blogger
  Ruler's of Penmai
  Real Name
  vijayalakshmiBala
  Gender
  Female
  Join Date
  Jul 2012
  Location
  villupuram
  Posts
  10,965
  Blog Entries
  68

  Re: Is it good to share your past with your husband? - கசந்த வாழ்க்கையை கணவரிடம் சொல்

  Hi thenu.. kandippa solla vendam da..becz ethaavathu oru situation LA ithai weak point ah use pannuvaanga. Aangal..so kandippa solla vendam.........

  life is so beautiful....

 10. #10
  thenuraj's Avatar
  thenuraj is offline Penman of Penmai
  Blogger
  Silver Ruler's of Penmai
  Real Name
  Thenmozhi
  Gender
  Female
  Join Date
  Jul 2012
  Location
  Atlanta, U.S
  Posts
  31,085
  Blog Entries
  13

  Re: Is it good to share your past with your husband? - கசந்த வாழ்க்கையை கணவரிடம் சொல்&am

  Quote Originally Posted by selvipandiyan View Post
  thevai ilaatha vishayankal........
  athai solrathaal onnum nadakka porathillai...99 satha veetha aankal nalla vithamaa eduthukka maattanka.......

  உண்மை...உண்மை....நச்சுனு மண்டையில அடிச்சா மாதிரி சொல்லிட்டிங்க அக்கா...


loading...

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •  
Like It?
Share It!Follow Penmai on Twitter