Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree15Likes
 • 6 Post By chan
 • 1 Post By thenuraj
 • 2 Post By Mirage
 • 2 Post By pet
 • 1 Post By dhivyasathi
 • 1 Post By jv_66
 • 1 Post By Subhasreemurali
 • 1 Post By kanihema

Don't get lost in Married life-திருமண வாழ்வில் தொலைந்து போக வேண்டĬ


Discussions on "Don't get lost in Married life-திருமண வாழ்வில் தொலைந்து போக வேண்டĬ" in "Married Life" forum.


 1. #1
  chan's Avatar
  chan is offline Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Mar 2012
  Location
  chennai
  Posts
  17,520

  Don't get lost in Married life-திருமண வாழ்வில் தொலைந்து போக வேண்டĬ

  தொலைந்து போக வேண்டாம்!

  Love the life you live
  Live the life you love

  வாழ்க்கையைப் பற்றிய அழகான பொன்மொழி இது. ஆனால், திருமணம் என்கிற ஒரு விஷயம் இந்த இரண்டையுமே புரட்டிப் போட்டு விடுகிறது. எதற்காக இந்த வாழ்க்கை? யாருக்காக இந்த நேசம் என்கிற கேள்விகளைக் கிளப்பி, வெறுமையை நிரந்தரமாக்கி விடுகிறது. குறிப்பாக திருமண உறவில் தன்னைத் தொலைக்கிற பெண்களில் பலர் இப்படித்தான் உணர்வார்கள்.


  திருமண உறவில், தான் சிறுகச் சிறுகத் தொலைந்து கொண்டிருப்பதை ஒரு பெண் எப்படி உணரலாம்?

  * உங்கள் கணவர் சொல்கிற ஒரு விஷயத்தில் உங்களுக்கு மாற்றுக் கருத்து இருக்கிறது. அதை நீங்கள் அவரிடம் சொல்கிறீர்கள். அவரோ அதைக் காதிலேயே வாங்கிக் கொள்ளவில்லை அல்லது அலட்சியம் செய்கிறார் என்பதை நீங்கள் அடிக்கடி அனுபவிக்கிறீர்களா?

  * நீங்கள் செய்கிற எந்த வேலையையும் அவர் அங்கீகரிப்பதோ, பாராட்டுவதோ இல்லை என உணர்கிறீர்களா? வீட்டு வேலைகளில், கணவரின் வெற்றிகளில் உங்கள் பங்கு தவிர்க்க முடியாதது என தெரிந்தும், அதை அங்கீகரிக்க மறுக்கிறாரா?

  * தனக்கு தன் மனைவி செய்கிற பணிவிடைகள் அனைத்தும் அவளுக்கான கடமைகள் என நினைக்கிறாரா? அதை உதவியாகப் பார்க்க மறுக்கிறாரா?

  * தன்னுடைய தேவைகளை மனைவி நிறைவேற்ற வேண்டும் என நினைப்பவர், மனைவியின் தேவைகளை நிறைவேற்றும் பொறுப்பு தனக்குள்ளதாக நினைக்கத் தவறுகிறாரா?

  இவற்றில் ஒன்றோ, அதற்கு மேலோ உங்களுக்குப் பொருந்திப் போனால் நீங்கள் தொலைந்து போய் கொண்டிருக்கிறீர்கள் என அர்த்தம்.


  வாழ்க்கைத்துணையை சமமாக, இணையாக நடத்தாத மனோபாவத்தை பரவலாக நாம் பார்க்கிறோம். மனைவியை எப்போதும் ஏதோ குறை சொல்லியே பழகுவார்கள் சில கணவர்கள். மனைவியே எல்லா பிரச்னைகளுக்குமான காரணகர்த்தா என்பார்கள்.

  ஒரு கட்டத்தில் அந்த மனைவிக்கு, தான் குறைகளின் மொத்த உருவம் என்கிற எண்ணமே ஏற்பட்டு விடும். பெண்தான்
  பிரச்னைகளுக்கான மூலம் என ஆண்கள் குற்றம் சாட்டினாலும், பல நேரங்களில் தம்பதியருக்கு இடையிலான பிரச்னைகளை சரி செய்யவும், கணவரின் வருத்தத்துக்கான காரணம் அறிந்து தீர்க்கவும் மனைவியே முனைகிறாள்.

  அந்த முனைப்பு ஆண்களிடம் இருப்பதில்லை. இத்தகைய போக்கு சுமூக உறவுக்கான அறிகுறி அல்ல. இப்படியே தொடரும் பட்சத்தில், பெண் தனக்கான வாழ்க்கையை ஒரே வீட்டிலேயே தனியே வாழப் பழகுகிறாள். பெண்ணை சமமாக நடத்தாத ஆணின் மனப்பான்மையை வரலாற்றுக் காலத்திலிருந்தே பார்த்து வருகிறோம். தெரிந்தே இணையை சமமாக நடத்தாத ஆண்களைவிட, தெரியாமல் அப்படி நடந்து கொள்கிறவர்களே அதிகம். மனைவியை தனக்கு இணையாக நடத்துகிற திறமை பெரும்பாலான ஆண்களுக்கு இல்லை என்பதே உண்மை. அதை ஆண்களுக்கு அழகாகப் புரிய வைக்க வேண்டிய திறமை பெண்களுக்கும் இருப்பதில்லை. இதனால் இரண்டு தரப்பிலும் ஈகோ... சண்டை... சச்சரவு!


  இந்தப் பிரச்னைகளுக்கு என்னதான் தீர்வு?

  * உங்கள் கருத்துகளை, நம்பிக்கைகளை, மதிப்பீடுகளை, விருப்பு, வெறுப்புகளை உங்கள் துணையிடம் வெளிப்படையாகப் பேசுங்கள். இதையெல்லாம் சொன்னால் அவர் என்ன நினைப்பாரோ... எப்படி எடுத்துக் கொள்வாரோ... அவரது சிந்தனைக்கும் நம்முடையதற்கும் கொஞ்சமும் பொருத்தம் இல்லையே என்றெல்லாம் நினைத்துப் பேசத் தயங்க வேண்டாம்.

  காதலிக்கிற போதோ, திருமணம் செய்த உடனேயோ இருவரும் சமம் என்பதை நிலை நிறுத்துங்கள். ஆரம்பத்தில் காதலரோ, கணவரோ சொல்வதற்கெல்லாம் தலையசைத்துக் கேட்டுக் கொண்டு, சம்மதம் தெரிவித்து விட்டு, பிறகு திடீரென ஒருநாள் ஞானோதயம் வந்த பிறகு, எதிர்த்து நின்றால் அதை உங்கள் துணைவரால் ஏற்றுக் கொள்ள முடியாமல் போகலாம்.

  கணவர் பயப்படவோ, காயப்படவோ வழியில்லாத வகையில் நாசுக்காகவும் நாகரிகமாகவும் உங்கள் மனதில் உள்ளதை வெளிப்படையாகச் சொல்லக் கற்றுக் கொள்ளுங்கள்.

  ஆங்கிலத்தில் Agree to disagree என்றொரு வாசகம் உண்டு. இருவரும் வேறு வேறு கருத்துகள் கொண்டவர்கள் என்பதற்காக இருவரும் முரண்படுகிற விஷயங்களைப் பேசாமல் தவிர்ப்பது முட்டாள்தனம்.

  நம்முடைய கருத்து நம் துணைக்கு ஏற்புடையதாக இருக்காது என்பதை ஏற்கப் பழக வேண்டும். "நீ எப்பவும் இப்படித்தான்... நான் சொன்னதை என்னிக்கு சரினு கேட்டிருக்கே... நான் சொல்றதுக்கு நேர்மாறா பேசறதே வழக்கமாப் போச்சு...’ என்றெல்லாம் புலம்பத் தேவையில்லை. அதற்குப் பதில், `நீ சொல்றதை நான் கேட்கற மாதிரி நான் சொல்றதை நீ கேள்... எனக்கு விவாதிக்கிற ஆர்வம் அதிகம்...’ என முரண்படுகிற விஷயங்களையும் பேசித் தீர்க்கலாம்.


  * அடுத்தது நமக்கு என்ன தேவை என்பதில் தெளிவாக இருப்பது. அதைப் பற்றிப் பேசுவது. சங்கேத வார்த்தைகளும் உள்ளுணர்வுகளும் பெண்களுக்குப் புரிகிற அளவுக்கு ஆண்களுக்குப் புரிவதில்லை. பல பெண்களும் ஆண்கள் தங்கள் உள்ளுணர்வைப் புரிந்து கொண்டு நடப்பதில்லை எனப் புலம்புவதன் பின்னணி இதுதான். நேரடியான பேச்சின் மூலம் மட்டுமே அவர்களுக்கு நீங்கள் நினைத்ததை உணர்த்த முடியும். உங்களுடைய எல்லா தேவைகளையும், உணர்வுத் தேவைகள் உள்பட அனைத்தையும் குறிப்பாகக் கொடுக்காமல், நேரடியாகத் தெரியப்படுத்துங்கள்.

  இந்த இடத்தில் ஆண்களுக்கும் சில தகவல்களைக் கட்டாயம் சொல்லியாக வேண்டும். பெண் என்பவள் எதிர்பார்ப்புகள் கொண்டவள். தன் கணவர் தன்னைக் கவனிக்க வேண்டும், தன் பேச்சைக் கேட்க வேண்டும், தன் உணர்வுகளைப் புரிந்து நடந்து கொள்ள வேண்டும் என எதிர்பார்ப்பவர்கள் பெண்கள்.

  குறைகள் சொல்லாமல் தன்னை அப்படியே ஏற்றுக் கொள்வதையும், காமத்துக்கு இடமின்றி அடிக்கடி தன்னைத் தொட்டுப் பேசுவதையும், தான் செய்கிற விஷயங்களைப் பாராட்டுவதையும், எல்லாவற்றையும்விட முக்கியமாக தன்னை தன் கணவர் முழுமையாக நம்புவதையும் விரும்புபவள். இந்த உளவியலோடு இன்னொன்றையும் ஆண்கள் புரிந்து கொள்ள வேண்டும். மனைவிக்கும் ஒரு தனிப்பட்ட வாழ்க்கை உண்டு. அதை அவளது விருப்பம் போல வாழ்கிற உரிமையும் அவளுக்கு உண்டு. அவளிடம் போற்ற வேண்டிய பாராட்ட வேண்டிய விஷயங்களும் ஏராளம் உண்டு என்பதை உணரத் தொடங்கினாலே, மண வாழ்க்கையில் மணம் வீசும்!
  (வாழ்வோம்!)

  "தெரிந்தே இணையை சமமாக நடத்தாத ஆண்களைவிட, தெரியாமல் அப்படி நடந்து கொள்கிறவர்களே அதிகம்."

  "சங்கேத வார்த்தைகளும் உள்ளுணர்வுகளும் பெண்களுக்குப் புரிகிற அளவுக்கு ஆண்களுக்குப் புரிவதில்லை."


  Similar Threads:

  Sponsored Links
  Last edited by chan; 17th Aug 2015 at 12:04 PM.

 2. #2
  thenuraj's Avatar
  thenuraj is offline Penman of Penmai
  Blogger
  Silver Ruler's of Penmai
  Real Name
  Thenmozhi
  Gender
  Female
  Join Date
  Jul 2012
  Location
  Atlanta, U.S
  Posts
  31,085
  Blog Entries
  13

  re: Don't get lost in Married life-திருமண வாழ்வில் தொலைந்து போக வேண்ட&

  அருமையான பதிவு.... இன்றைய காலகட்டத்தில் ஆண், பெண் இருவருக்கும் தேவையான பதிவும் கூட...!! பகிர்விற்கு நன்றி லக்ஷ்மி

  chan likes this.

 3. #3
  Mirage's Avatar
  Mirage is offline Commander's of Penmai
  Real Name
  கானல் நீர்
  Gender
  Male
  Join Date
  Sep 2014
  Location
  தார் பாலைவனம்
  Posts
  1,078

  re: Don't get lost in Married life-திருமண வாழ்வில் தொலைந்து போக வேண்ட&

  நீ ஆம்பள சிங்கம்டா என்று சொல்லி வளர்ப்பது பெரும்பாலும் பெண்ணாகிய அம்மாதான். இதனாலேயே இளம் வயது முதல் வீட்டில் பெண்களுக்கு உதவும் மனப்பாங்கு, சாதாரண அழும் உணர்ச்சி இவற்றை கூட வெளிப்படுத்த அறியாமலே போய்விடுகிறான் ஆண்.


  இன்று காலம் மாறிவிட்டது - ஆண் தான் இதைப் புரிந்து மாறிட வேண்டும் - ஆண் குழந்தைகளை பெற்ற அம்மாக்களும் மாற்றிட வேண்டும் வளர்ப்பு முறையை.

  dhivyasathi and chan like this.
  மிராஜ்

 4. #4
  pet
  pet is offline Friends's of Penmai
  Gender
  Female
  Join Date
  Mar 2012
  Location
  cochin
  Posts
  303

  re: Don't get lost in Married life-திருமண வாழ்வில் தொலைந்து போக வேண்ட&

  nice article. go slow in relationships surely everybody can win.

  dhivyasathi and chan like this.

 5. #5
  dhivyasathi's Avatar
  dhivyasathi is offline Commander's of Penmai
  Real Name
  Sathya Vivek
  Gender
  Female
  Join Date
  Apr 2011
  Location
  Singapore
  Posts
  1,027

  re: Don't get lost in Married life-திருமண வாழ்வில் தொலைந்து போக வேண்ட&

  nice sharing.......

  chan likes this.


  Regards,
  Dhivyasathi..

  "When you have come to realize that you miss me.....then
  i wont be MISSING U......"


 6. #6
  jv_66's Avatar
  jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
  Real Name
  Jayanthy
  Gender
  Female
  Join Date
  Dec 2011
  Location
  Bangalore
  Posts
  31,985

  Re: Don't get lost in Married life-திருமண வாழ்வில் தொலைந்து போக வேண்ட&

  Wonderful suggestions.

  chan likes this.
  Jayanthy

 7. #7
  Subhasreemurali's Avatar
  Subhasreemurali is offline Penman of Penmai
  Blogger
  Yuva's of Penmai
  Gender
  Female
  Join Date
  Jan 2013
  Location
  chennai
  Posts
  7,537
  Blog Entries
  1

  Re: Don't get lost in Married life-திருமண வாழ்வில் தொலைந்து போக வேண்ட&

  Useful sharing lakshmi sis...

  chan likes this.
  Arise ! awake ! and stop not till the goal is reached

 8. #8
  kanihema's Avatar
  kanihema is offline Penman of Penmai
  Blogger
  Minister's of Penmai
  Real Name
  K.HEMASARANYA
  Gender
  Female
  Join Date
  Dec 2012
  Location
  Bangalore
  Posts
  4,947

  Re: Don't get lost in Married life-திருமண வாழ்வில் தொலைந்து போக வேண்ட&

  அருமையான பதிவு.

  chan likes this.

loading...

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •  
Like It?
Share It!Follow Penmai on Twitter