Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree8Likes
  • 4 Post By chan
  • 2 Post By gkarti
  • 1 Post By kokilathangam
  • 1 Post By kkmathy

வீட்டுக்குள் 'ஸ்பா' - Home spa


Discussions on "வீட்டுக்குள் 'ஸ்பா' - Home spa" in "Misc Beauty" forum.


  1. #1
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    வீட்டுக்குள் 'ஸ்பா' - Home spa

    வீட்டுக்குள் 'ஸ்பா'!
    மேக் அப் விஷயங்களை மையமாக வைத்து ஆரம்பிக்கப்பட்ட அழகு நிலையங்கள், 'ஸ்பா’ என்ற பெயரில் தற்போது உடலுக்கும் மனதுக்கும் புத்துணர்ச்சி ஊட்டக் கூடியவையாக மாறிவருகின்றன. 'பணத்தைக் கொடுத்துப் புத்துணர்ச்சி பெறுவதைக் காட்டிலும், வீட்டுக்குள்ளேயே அதற்கான வழி இருக்கிறதே... கொஞ்சம் மெனக்கெட்டால் போதும், ஆரோக்கியத்தை அள்ளலாம்!'' என்கிறார் சென்னை சித்த மருத்துவர் வேலாயுதம். ''துளசி, வேம்பு, கற்றாழை, ஆவாரம் பூ, மகிழம் பூ, நித்திய மல்லி போன்ற மருத்துவக் குணம் கொண்ட தாவரங்களை வளர்த்தால், அதிலிருந்து வீசும் காற்று, நச்சுக்கிருமிகளை வீட்டில் அண்டவிடாது.

    அகல் விளக்கு, பூஜைக்குரிய விஷயங்கள், கண்ணாடி, தாமரைப் பூ, ரோஜா மற்றும் இயற்கைக் காட்சிகள் சித்திரிக்கப்பட்ட படங்களை வரவேற்பறையில் வைத்து, காலையில் எழுந்தவுடன் அதில் கண் விழிப்பதன் மூலம் மனதில் புத்துணர்வு குடியேறும். உற்சாகம் தொற்றிக்கொள்ளும்.

    நுரையீரலுக்குப் போகும் பாதை தெளிவாக இருந்தால்தான் பிராண வாயு நுரையீரலுக்குத் தங்கு தடை இல்லாமல் போய்வரும். குளிப்பதற்கு முன் ஆவிபிடித்துவிட்டு, சற்று நேரம் கழித்துக் குளிப்பதன் மூலம் சளி, மூக்கடைப்பு போன்றவை தொல்லை தராது'' எனச் சொல்லும் சித்த மருத்துவர் வேலாயுதம் உடலையும் மனதையும் பரவசப்படுத்தக்கூடிய, பாரம்பரியக் குளியல் முறைகளில் சிலவற்றைச் சொன்னார்.


    ''இரவு முழுவதும், உடல் தூக்கத்தில் கிடப்பதால், உடலில் உஷ்ணம் தங்கிவிடும். தினமும் காலையில்
    தலைக்குக் குளிப்பதன் மூலம் உஷ்ணம் நீங்கி உடல் குளிர்ச்சியாகும். மாலை வேளையில் கழுத்துக்குக் கீழ் குளிப்பது நல்லது.





    வெதுவெதுப்பான நீரில் வேப்பிலை, நொச்சி இலைகளைப் போட்டு, ஊற வைத்துக் குளிப்பது சரும நோய், சளி இருமல் தொல்லை இல்லாமல் பாதுகாக்கும்.

    குளித்து முடித்து வந்ததும், நெருப்புத் தணலில் தரமான சாம்பிராணியைப் போட்டு, தலை முடியை சாம்பிராணிப் புகையில் உலர்த்தலாம். வீட்டில் பரவும் சாம்பிராணிப் புகை தலையில் நீர் கோத்துக் கொள்ளாமல் காக்கும். சுவாசப் பிரச்னையும் இருக்காது.
    வாரம் இருமுறை நல்லெண்ணெய் தேய்த்துக் குளிப்பது நல்லது. உச்சந்தலை, தொப்புள், கால் கட்டைவிரல், நகம் ஆகிய பகுதிகளில் எண்ணெய் தடவி, மிதமாக மசாஜ் செய்யலாம். அரை மணி நேரம் தலையில் எண்ணெய் தேய்த்துப் பிறகு ஊறவிட்டு, சீயக்காய்த்தூள் போட்டு அலச வேண்டும். இதனால், எண்ணெயைச் சருமம் கிரகித்து, உடலுக்குக் குளிர்ச்சியையும் பளபளப்பையும் கொடுக்கும். மழை மற்றும் பனிக் காலங்களில் தேங்காய் எண்ணெய் பயன்படுத்தலாம்.

    அரோமா குளியல்


    மல்லிகைப் பூ, மனோரஞ்சிதம், ரோஜா, மகிழம் பூ, ஆவாரம் பூ இவற்றைத் தலா 100 கிராம் எடுத்து, அரைக் கிலோ தேங்காய் எண்ணெயில் போட்டுக் காய்ச்சவும். வடிகட்ட வேண்டியதில்லை. இந்த எண்ணெயைச் சிறிது எடுத்துத் தினமும் உடல் முழுவதும் தடவி, மிதமான மசாஜ் செய்துகொள்ளுங்கள்.

    சருமச் சுருக்கம் மறைவதுடன் உடலுக்கு நல்ல நிறத்தையும், புத்துணர்வையும் கொடுக்கும். வாரம் ஒரு முறை இந்த மலர் எண்ணெயைத் தலைக்குத் தேய்த்து நறுமணக் குளியல் பவுடர் போட்டு அலசலாம்.

    மல்லிகை, தவணம், மரிக்கொழுந்து, ரோஜா, செம்பருத்தி, புங்கங்காய்த் தோல், வெட்டிவேர், பாசிப்பருப்பு இவற்றைச் சம அளவு எடுத்து நன்றாகக் காயவைத்து அரைத்துக் கொள்ளுங்கள். இதுதான் நறுமணக் குளியல் பவுடர். குளிக்கும்போது எல்லாம் இதைப் பயன்படுத்தலாம். பூக்களின் வாசனை மனதை அமைதிப்படுத்தும். உடலும் மனமும் புத்துணர்வு பெறுவது நிச்சயம். உடலுக்கு மட்டும் பயன்படுத்தும் பட்சத்தில் இந்தக் குளியல் பவுடரில் கஸ்தூரி மஞ்சளையும் சேர்த்துக்கொண்டால் சரும நோய் அண்டாமல் பொலிவாக இருக்கும்.

    நீராவிக் குளியல்
    நன்றாகக் கொதிக்கும் நீரில், யூகலிப்டஸ் எண்ணெயைச் சிறிதுவிட்டு, அதைக் குளியலறை முழுவதும் கொட்டிவிடுங்கள். உள்ளங்கையில் ஒரு சொட்டு நல்லெண்ணெய் விட்டு, சிறிது தண்ணீரைச் சேர்த்து, இரண்டு கைகளால் தேய்த்து உடலில் தடவுங்கள். இது உடலில் ஈரப்பதத்தைத் தோற்றுவிக்கும். உடனடியாக நீராவி சூழ்ந்து இருக்கும் குளியலறைக்குள் சென்று பத்து நிமிடங்கள் இருங்கள். நீராவி உடல் முழுவதும் பரவி, அதிக வியர்வையை வெளியேற்றும். சுவாசத்தையும் சீராக்கும். மனதும் புத்துணர்ச்சி அடையும். இதுவும் அனல் குளியலில் ஒருவகைதான்.

    பிறகு சிகைக்காய் அல்லது தரமான ஷாம்பு போட்டுக் குளிக்கலாம்.

    பாத மசாஜ்
    வாளியில் மிதமான வெந்நீரை நிரப்பி உப்பு, எலுமிச்சைச் சாறு சேர்த்து ஐந்து நிமிடம் பாதங்களை வைத்திருங்கள். கால் இடுக்குகளில் உள்ள அழுக்குகள் நீங்கும். தோல் பஞ்சுபோல் மிருதுவாகும்.


    Similar Threads:

    Sponsored Links
    Last edited by chan; 24th Sep 2015 at 04:37 PM.

  2. #2
    gkarti's Avatar
    gkarti is online now Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Karthiga
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Madurai
    Posts
    49,114

    Re: வீட்டுக்குள் 'ஸ்பா' - Home spa

    Superb Like Lakshmi

    Vimalthegreat and chan like this.

  3. #3
    Real Name
    KOKI
    Gender
    Female
    Join Date
    Aug 2014
    Location
    salem
    Posts
    83

    Re: வீட்டுக்குள் 'ஸ்பா' - Home spa



    chan likes this.
    .....Life is to Live....
    ....So Enjoy to the Core.....

  4. #4
    kkmathy's Avatar
    kkmathy is offline Minister's of Penmai
    Real Name
    komathy
    Gender
    Female
    Join Date
    Jun 2012
    Location
    Malaysia
    Posts
    3,189

    Re: வீட்டுக்குள் 'ஸ்பா' - Home spa

    Nice sharing, Latchmy.
    Selave illaatha spa. Super.

    chan likes this.

  5. #5
    sasee777 is offline Friends's of Penmai
    Real Name
    sasi
    Gender
    Female
    Join Date
    Aug 2011
    Location
    madurai
    Posts
    339

    Re: வீட்டுக்குள் 'ஸ்பா' - Home spa

    very nice sharing thankyou.


  6. #6
    Vimalthegreat's Avatar
    Vimalthegreat is offline Minister's of Penmai
    Real Name
    Vimala
    Gender
    Female
    Join Date
    Jan 2011
    Location
    Chennai
    Posts
    3,115

    Re: வீட்டுக்குள் 'ஸ்பா' - Home spa

    Beautiful sharing sister...useful too @chan

    ஞாயிற் றின்கண் ஒளிதருந் தேவா!
    மன்று வானிடைக் கொண்டுல கெல்லாம்
    வாழ நோக்கிடும் வள்ளிய தேவா!
    காதல் கொண்டனை போலும் மண்மீதே,
    கண்பிறழ் வின்றி நோக்குகின் றாயே!
    மாதர்ப் பூமியும் நின்மிசைக் காதல்
    மண்டினாள், இதில் ஐயமொன் றில்லை

    -மகாகவி

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter