Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine December! | All Issues

User Tag List

Like Tree1Likes
  • 1 Post By Nishahameetha

herbal bath in home - இல்லங்களில் மூலிகைக் குளியல் முயற்ச


Discussions on "herbal bath in home - இல்லங்களில் மூலிகைக் குளியல் முயற்ச" in "Misc Beauty" forum.


  1. #1
    Nishahameetha's Avatar
    Nishahameetha is offline Ruler's of Penmai
    Real Name
    Hameetha
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    Trichy
    Posts
    18,268
    Blog Entries
    56

    herbal bath in home - இல்லங்களில் மூலிகைக் குளியல் முயற்ச

    இல்லங்களில் மூலிகைக் குளியல் – முயற்சி செய்து பாருங்கள்

    உங்கள் இல்லங்களில் மூலிகைக் குளியல் அறை ஒன்றை அமைப்பதன் மூலம் மன அழுத்தத்திலிருந்து மீள்வதற்கும், ஓய்வாக இருப்பதற்கும் உகந்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    உங்கள் குடும்பத்தினர் உதவியோடு அல்லது நீங்கள் தனித்து அமைத்துக் கொள்ளலாம். வசதியான இடமொன்றினை தேர்வு செய்து கொள்ளுங்கள்.

    அதில் கைவிரல் நகங்களை ஒப்பனை செய்யும் இடம் மற்றும் கால் நகங்களை ஒப்பனை செய்யும் இடம் மற்றும் பேசியல் செய்யும் இடமொன்றையும் உங்கள் மூலிகைக் குளியல் அறையில் அமைக்கலாம்.

    குறைந்தது 2, 3 மணி நேரம் எந்த வித இடையுறுகளும் ஏற்படாத நாளொன்றை தெரிவு செய்து கொள்ளுங்கள்.

    தளர்வான, இலகுவான ஆடைகளை தெரிவு செய்து அணிந்து கொள்ளுங்கள்.

    2 சிறிய மேசைகளும், ஓய்வாக அமர்வதற்கு ஓரு பெரிய நாற்காலியும் உங்கள் அறையில் காணப்பட வேண்டும்.

    நீங்கள் அமைதியாக ஓய்வாக இருப்பதில் மட்டுமே கவனம் வேண்டும்.

    ஒரு மேசையில் பூங்கொத்துகளும், உணவு மற்றும் பானங்களும் இருக்க வேண்டும்.

    அதே போன்று வேறு மேசையில் நறுமணமிக்க மெழுகுவர்த்தியும், அழகு சாதனப் பொருட்களும் இருக்க வேண்டும்.

    ஓய்வான மனநிலை ஏற்படுவதற்காக மெல்லிய இசையை, இசைக்க விட்டு மெழுகுவர்த்தியையும் ஏற்றுங்கள்.

    கால்விரல்களை சுத்தம் செய்வதிலிருந்து ஆரம்பியுங்கள்.

    மெல்லிய இளஞ் சூடான நீர் நிரம்பிய பாத்திரத்தினுள் உங்கள் கால்களை சற்று நேரம் வையுங்கள்.

    அதனுள் மெல்லிய நறுமணம் ஊட்டப்பட்ட ஷாம்பூ மற்றும் ரோஜாப்பூ இதல்களும் அதனுள் இருக்க வேண்டும்.

    கால்களை பளபளப்பாக்கும் திரவியம் கொண்டு சுத்தம் செய்யுங்கள்.

    உலர்ந்த துணி மூலம் உங்கள் கால்களின் ஈரத்தன்மையை அகற்றுங்கள்.

    உங்கள் கால்களை மென்மையாக வைத்திருப்பதற்கு மென்மையாக்கும் திரவியம் ஒன்றையும் பூசிக் கொள்ளுங்கள்.

    பேசியல் செய்வதற்கு முன் முகத்திலிருக்கும் தலைமுடியை அகற்றுங்கள்.

    அதற்கு முழு தலைமுடியையும் சேர்த்து கொண்டை போட்டுக் கொள்ளுங்கள்.

    அதன் பின் முகத்தை மெல்லிய இளஞ் சூடான நீரினால் கழுவிக் கொள்ளுங்கள்.

    ஈரத்தை துணி மூலம் நீரை அகற்றி விட்டு முகத்திற்கு சருமத்தை பாதுகாக்கும் அழகு சாதனப் பொருட்களை பூசிக் கொள்ளுங்கள்.

    உங்கள் கைகளை இளஞ் சூடான நீர் கொண்டு கழுவுங்கள்.

    அப்போது கை விரல்களையும் சுத்தம் செய்யலாம்.

    அத்துடன் உங்கள் மூலிகைக் குளியலையும் நீங்கள் நிறைவு செய்யலாம்.

    நறுமணம் சேர்க்கப்பட்ட எண்ணெய் மற்றும் அழகு சாதன கொண்டு உங்கள் கைகளை உருவிவிடுங்கள்.

    உங்கள் நகங்களை நகப்பூச்சை கொண்டு அழகுபடுத்துங்கள்.

    நகப்பூச்சை 2 முறை தடிப்பாக பூசுங்கள்.

    இத்துடன் உங்கள் மூலிகைக் குளியல் நிறைவடையும்.

    Similar Threads:

    Sponsored Links
    Parasakthi likes this.

  2. #2
    Mals's Avatar
    Mals is offline Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Sep 2013
    Location
    Navi Mumbai
    Posts
    5,286

    Re: இல்லங்களில் மூலிகைக் குளியல் முயற்சி ச&a

    Thanking you for bringing this info here


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter