Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree6Likes
  • 1 Post By chan
  • 2 Post By gkarti
  • 1 Post By dayamalar
  • 1 Post By gkarti
  • 1 Post By dayamalar

Fish spa


Discussions on "Fish spa" in "Misc Beauty" forum.


  1. #1
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    16,244

    Fish spa


    Fish spa


    உச்சி முதல் உள்ளங்கால் வரை அழகாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதில் பலரும் இப்போது ரொம்பவே மெனக்கெடுகின்றனர்.

    அதிலும் பெண்களுக்கு இருக்கும் அழகுணர்ச்சி அதுக்கும் மேல. நம் மனமாற்றத்துக்கு ஏற்ப அழகு சிகிச்சைகளும் புதிதுபுதிதாக உருவாகி வருகின்றன. இதில் ஒரு லேட்டஸ்ட் ட்ரீட்மென்ட்தான் மீன்களைக் கொண்டு செய்யப்படும் Fish spa.

    மீன்களைக் கொண்டு செய்யப்படும் இந்த சிகிச்சை மீன ராசிக்காரர்களுக்கு மட்டுமல்ல... மீதி உள்ள 11 ராசிக்காரர்களுக்கும் பயன்படும். பெங்களூருவில் ஃபிஷ் ஸ்பா சிகிச்சை நடத்திவரும் சுபாஷ் ஃபிஷ் ஸ்பா பற்றி விளக்கம் அளிக்கிறார்.

    * ஃபிஷ் ஸ்பா என்றால் என்ன ?
    பெடிக்யூர்(Pedicure) என்கிற பாத அழகு சிகிச்சை பற்றி பலருக்கும் தெரியும். வெதுவெதுப்பான நீரில் கால்களை மூழ்கச்செய்து, ஊறியபின் சில உபகரணங்களை வைத்து அழுக்குகளையும், இறந்த செல்களையும் அந்த பெடிக்யூர் முறையில் நீக்குவார்கள்.

    அதே அடிப்படையில் மீன்களின் உதவியோடு செய்யும் முறைதான் Fish spa. இதில் முக்கிய வித்தியாசம் ஒன்று உண்டு. பெடிக்யூர் முறையில் பாதங்களுக்கு மட்டுமே சிகிச்சை அளிப்பார்கள். ஃபிஷ் ஸ்பாவில் பாதங்களுக்கு மட்டுமல்ல; ஒட்டுமொத்த உடலுக்கும் சிகிச்சை அளிக்கலாம்.

    * ஃபிஷ் ஸ்பா எப்படி செய்வார்கள் ?
    காரா ரூஃபா என்கிற மீன்கள் இந்த சிகிச்சையில் பயன்படுத்தப் படுகின்றன. சுத்தமான, வெதுவெதுப்பான தண்ணீர் நிரம்பிய தொட்டிகளில் டஜன் கணக்கான காரா ரூஃபா மீன்கள் இருக்கும். அந்த நீரில் வாடிக்கையாளர்கள் பாதங்கள் நனையும்படி உட்காரச் சொல்வோம்.

    சாதாரண மீன்களாக இருந்தால் தண்ணீரில் நாம் கால்களை வைத்தவுடனே விலகி ஓடிவிடும். ஆனால், காரா ரூஃபா வகை மீன்கள் அப்படி ஓடாது. ஆர்வமுடன் காலில் இருக்கும் அழுக்கு மற்றும் இறந்த செல்களை சிறுகச்சிறுக கொறிக்க ஆரம்பித்துவிடும்.

    இதனால், இறந்த செல்கள், அழுக்குகள் நீங்கி பாதம் பளிச்சென்று மாறிவிடும். இதன் காரணமாக இவற்றை மருத்துவ மீன்கள் என்றும் அழைப்பார்கள். இவை மத்திய கிழக்கு நாடுகளான துருக்கி, சிரியா ஈரான், ஈராக்கிலிருந்து வரவழைக்கிறோம். பாதங்களுக்கு மட்டும் செய்யப்படும் இந்த சிகிச்சையை ஃபிஷ் பெடிக்யூர் என்றும் சொல்லலாம்.

    * மீன்கள் கடித்தால் வலி இருக்குமா ?
    இந்த காரா ரூஃபா மீன்கள் பற்களற்றவை என்பதால் வலி இருக்காது. இன்னும் சொல்லப் போனால் கடிக்கிற உணர்வே இருக்காது. மீன்கள் கால்களில் படும்போது கூசுகிற உணர்வு ஏற்படுகிறது என்றே வாடிக்கையாளர்கள் பலரும் சொல்வார்கள்.

    * நோய்த்தொற்று ஏற்படாதா ?
    ஒரே தொட்டியில் உள்ள மீன்களைக் கொண்டு வேறுவேறு நபர்களுக்கு சிகிச்சை தருவதால் தொற்றுகள் ஏற்படும் என்றுதான் பலரும் நினைப்பார்கள். ஆனால், அழுக்குகளையும், இறந்த செல்களையும் மீன்கள் விழுங்கிவிடுகின்றன. அதன் தொண்டையில் பற்கள்போல உள்ள அமைப்பு, உணவை அரைத்துவிடும். இதனால் தொற்றுக்கள் ஏற்படும் வாய்ப்பு இல்லை.

    * முக அழகுக்கு...
    முகத்துக்கு ஃபிஷ் ஃபேஷியல் செய்யும்போது முகப்பருக்களில் உள்ள பாக்டீரியாக்களையும் மீன்கள் தின்றுவிடுவதால் பருக்கள், பருக்களினால் வரும் அடையாளங்களைப் போக்க முடியும். மேலும், வயதான தோற்றத்தை தரும் முகச்சுருக்கங்கள் நீங்குகிறது.

    முகத்தில் உள்ள தோல் மிருதுவாகி, முகத்திற்கு ஃப்ரெஷ்ஷான, பொலிவான தோற்றத்தை இந்த ஃபிஷ் ஃபேஷியல் தருகிறது. சிறுசிறு மீன்கள் காதுகளிலும், மூக்கு துவாரங்களிலும் புகுந்துவிடக்கூடும் என்பதால், தலைமுடியை ஒரு கவரால் மூடி, மூக்கிற்கு சிறு கிளிப்பும், காதுகளில் பஞ்சும் அடைத்து மிக பாதுகாப்பாக முகத்திற்கு ஃபேஷியல் தருகிறோம்.

    * மருத்துவரீதியாக என்னென்ன பலன்கள் கிடைக்கும்?

    துருக்கியில் 100 ஆண்டுகளுக்கு முன்னரே சொரியாஸிஸ், எக்சீமா போன்ற சரும வியாதிகளுக்கு மீன்களின் மூலம் தெரபி கொடுக்கப்பட்டு வந்திருக்கிறது. அந்த சிகிச்சை முறையே 1988-ம் ஆண்டு முதல் அங்கீகரிக்கப்பட்ட சிகிச்சையாக இப்போது பின்பற்றப்படுகிறது.


    ஃபிஷ் ஸ்பாவால் உலகம் முழுவதும் உள்ள பல நோயாளிகள் பயனடைந்து வருகிறார்கள். உதாரணத்துக்கு, சொரியாஸிஸ் நோயுள்ளவர்களுக்கு தோலின் மேற்புறத்தில் செதில் செதிலாக உதிரும். இதனால் பார்ப்பதற்கு அழகற்ற தோற்றம் உண்டாகிவிடும்.

    இவர்களுக்கு பெடிக்யூர் போலவே உடலின் மற்ற பகுதிகளுக்கும் மருத்துவ மீன்களைக் கொண்டு சிகிச்சை அளிக்கப்படும்போது இறந்த செல்களை மீன்கள் விழுங்குவதால் தோலின் தன்மை மாறி மிருதுவாகிவிடும். புற ஊதாக்கதிர் சிகிச்சையுடன், மீன் சிகிச்சையும் சேர்த்து கொடுக்கப்படும்போது தோலில் ஏற்படும் அரிப்பை குறைப்பதால் சொரியாஸிஸ் நோயாளிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக ஃபிஷ் ஸ்பா இருப்பதாக சமீபத்திய ஆய்விலும் கண்டறிந்துள்ளனர்.

    மேலும், ஃபிஷ் ஸ்பாவினால் ரத்த ஓட்டம் தூண்டப்படுவதால் உடலின் அனைத்துப் பகுதிகளிலும் சீரான ரத்த ஓட்டம் பாயும். இதயத் தமனிகள் மற்றும் உடலின் தசைகளில் ஆக்ஸிஜன் நிறைந்த ரத்த ஓட்டமும் நடைபெறுகிறது.

    இதனால் சருமமும் மினுமினுப்பை அடைகிறது. கால்களில் உள்ள நரம்புப் புள்ளிகளில் அக்குபங்சர் சிகிச்சையைப் போல மீன்கள் கடிக்கும்போது அப்புள்ளி களில் மின் தூண்டல் ஏற்பட்டு உடலின் உள் உறுப்புகளின் செயல்பாடுகளும் தூண்டப்படுகின்றன. இதனால் மூளையின் நரம்புகளும் தூண்டப்பட்டு மூளை அமைதியடைந்து மன அழுத்தத்திலிருந்து விடுபட முடியும்.

    இந்த ஃபிஷ் ஸ்பா முறை மசாஜ் செய்வது போல் இருப்பதால் கால்களில் ஏற்படும் சோர்வு, அசதிகளையும் போக்கும். பாக்டீரியாக்கள் அழிவதால் கிருமிநாசினி போல் செயலாற்றி கால்களின் வீக்கமும் குறைகிறது. மொத்தத்தில் உடல் உறுப்புகள் அனைத்துக்குமே ஃபிஷ் ஸ்பாவினால் நன்மைகள் உண்டு.

    *ஃபிஷ் ஸ்பாவை வீட்டிலேயே செய்துகொள்ளலாமா ?

    ஃபிஷ் ஸ்பா செய்துகொள்ள பார்லரில் அரை மணி நேரத்துக்கு நூறு ரூபாய் கட்டணம் ஆகும். அதையே வீட்டில் செய்துகொள்ள விரும்பினால் மீன்களை மொத்தமாக வாங்கிக் கொள்ளலாம். ஒரு மீனின் விலை சராசரியாக 20 ரூபாய் என்ற அளவில் விற்கப்படுகிறது. ஆறு, குளம், குட்டைகளில் குளிக்கும்போது மீன் காலை கடிச்சு சுத்தப்படுத்திரும். அதுதான் இப்போ ஃபிஷ் ஸ்பான்னு வந்திருக்கு என்கிற மைண்ட் வாய்ஸ் உங்கள் மனதுக்குள் ஓடுகிறதா ?சரிதான்!


    Similar Threads:

    Sponsored Links
    gkarti likes this.

  2. #2
    gkarti's Avatar
    gkarti is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Karthiga
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Madurai
    Posts
    43,369

    Re: Fish spa

    True that Lakshmi.. Inge Mall la intha Spa undu.. Half n hr ku 80 Rs nu Ninaikren..! Mall la Nan try Pannathillai.. ll give it a Shot for Sure

    @dayamalar Nee Panna thaane?

    dayamalar and chan like this.

  3. #3
    dayamalar's Avatar
    dayamalar is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2011
    Location
    Madurai
    Posts
    11,422
    Blog Entries
    10

    Re: Fish spa

    Nice sharing Chan

    @gkarti Aks nan panathu illa.. ana 10 mins orutharuku 100.. 2 perna 150

    gkarti likes this.

  4. #4
    gkarti's Avatar
    gkarti is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Karthiga
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Madurai
    Posts
    43,369

    Re: Fish spa

    நீயும் நானும் சேர்ந்தே செல்லும் நேரமே...


    Quote Originally Posted by dayamalar View Post
    Nice sharing Chan

    @gkarti Aks nan panathu illa.. ana 10 mins orutharuku 100.. 2 perna 150


    dayamalar likes this.

  5. #5
    dayamalar's Avatar
    dayamalar is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2011
    Location
    Madurai
    Posts
    11,422
    Blog Entries
    10

    Re: Fish spa

    Quote Originally Posted by gkarti View Post
    நீயும் நானும் சேர்ந்தே செல்லும் நேரமே...
    Povome ooruvolam vishal mall engengum

    gkarti likes this.

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter