Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree4Likes

A woman's beauty - ஒரு பெண் எந்த வயதில் அழகாக இருப்பார்.


Discussions on "A woman's beauty - ஒரு பெண் எந்த வயதில் அழகாக இருப்பார்." in "Misc Beauty" forum.


  1. #1
    silentsounds's Avatar
    silentsounds is offline Moderator & Blogger Guru's of Penmai
    Gender
    Male
    Join Date
    Feb 2011
    Location
    chennai
    Posts
    6,312
    Blog Entries
    31

    A woman's beauty - ஒரு பெண் எந்த வயதில் அழகாக இருப்பார்.

    ஒரு பெண் எந்த வயதில் அழகாக இருப்பார். இதை சரியாக சொல்வது கொஞ்சம் கஷ்டம்தான். எந்தப் பெண்ணையும் நீ அசிங்கமாக இருக்கிறாய் என்று சொல்ல யாருக்குமே மனம் வராது. இருந்தாலும் ஒரு பெண் எந்த வயதில் அழகாக இருப்பார் என்பதை ஒரு டிவி சானல் கருத்துக் கணிப்பு நடத்தி வெளியிட்டுள்ளது.

    அந்தக் கணிப்புப் படி, 31 வயதில்தான் ஒரு பெண் அழகாக இருப்பதாக அதில் கலந்து கொண்ட ஆண்களும், பெண்களும் தெரிவித்துள்ளனராம். இந்த வயதில்தான் பெண்கள் அழகாகவும், கவர்ச்சிகரமாகவும், பார்ப்பதற்கு பிடித்தமானவராகவும் இருப்பதாக அந்தக் கருத்துக் கணிப்பு கூறுகிறது.

    இதைக் கண்டுபிடிப்பதற்காக 2000 ஆண் மற்றும் பெண்களிடம் கருத்து கேட்டுள்ளது க்யூவிசி என்ற ஷாப்பிங் தொடர்பான சேனல். முப்பது வயது தொடங்கும்போதுதான் ஒரு பெண் மேலும் அழகாகிறார், கவர்ச்சிகரமாக மாறுகிறார் என்பது கருத்துக் கணிப்பில் கலந்து கொண்டவர்களின் கருத்தாகும்.

    மேலும், இந்த வயதில்தான் மிகவும் இளமையோடும், பார்ப்பதற்கு அழகாகவும் இருக்கிறார்கள். இதற்கு் காரணம், அவர்களிடம் அதிகரித்துள்ள தன்னம்பிக்கையே காரணமாக இருக்கும் என்பதும் இவர்களின் கருத்தாகும்.

    30 முதல் 31 வயது வரையிலான பெண்கள்தான் மிகவும் ஸ்டைலாகவும், எழிலாகவும் இருக்கிறார்களாம். தோற்றப் பொலிவு மட்டுமல்லாமல் அவர்களது சிந்தனை, செயல்பாடு ஆகியவையும் கூட அழகாக மாறி விடுகிறது இந்த வயதில் என்பது கருத்துக் கணிப்பு முடிவு.

    பெண்கள் 31 வயதில் தன்னம்பிக்கை மிகுந்தவர்களாக இருக்கிறார்கள் என்று 70 சதவீதம் பேரும், அழகான தோற்றத்துடன் இருப்பதாக 67 சதவீதம் பேரும், ஸ்டைலாக இருப்பதாக 47 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

    வயது ஏற ஏறத்தான் பெண்களுக்கு அழகு கூடுகிறது என்று 63 சதவீதம் பேர் கூறியுள்ளனர். அதேசமயம், வயது ஏற ஏற பெண்களுக்கு அலட்சியப் போக்கு அதிகரித்து விடுவதாக இதே அளவிலான நபர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

    அதேபோல வயது ஏற ஏற பெண்கள் தங்களை மிகவும் பெருமையாக உணர்வதாக 51 சதவீதம் பேர் கூறியுள்ளனர்.

    இதேபோல இந்த வயதில் ஆண்கள், பெண்களை விட அதிகம் செலவழிக்கிறார்களாம்-தங்களை அழகுபடுத்திக்கொள்வதற்காக. ஜிம்முக்குப் போவதிலும், தலையலங்காரத்தை கவனமாக பார்த்துக் கொள்வதிலும் இந்த வயது ஆண்கள் அதிக சிரத்தை எடுக்கிறார்களாம்.

    கருத்துக் கணிப்பை மேற்கொண்ட குழு இதுகுறித்துக் கூறுகையில், ஒரு பெண்ணின் அழகு என்பது அவருடைய புறத் தோற்றத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டதல்ல. மாறாக நம்பிக்கை, அழகு, ஸ்டைல் ஆகியவையும் இணைந்ததே என்பதை இந்தக் கருத்துக் கணிப்பு நிரூபிப்பதாக உள்ளது என்று கூறியுள்ளது.
    ஐஸ்வர்யா ராயின் அழகு நாளுக்கு நாள் கூடுவதற்கும் இதுதான் காரணமோ...?

    -senthilvayal

    Similar Threads:

    Sponsored Links
    Last edited by Parasakthi; 30th Jul 2011 at 01:57 PM.
    anitha.sankar likes this.
    Guna (குணா)

    நினைப்பில் தூய்மையும், சொல்லில் உண்மையும்
    மிகவும் அவசியமானவை








  2. #2
    Kavibhanu's Avatar
    Kavibhanu is offline Commander's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2011
    Location
    Trichy
    Posts
    1,952

    re: A woman's beauty - ஒரு பெண் எந்த வயதில் அழகாக இருப்பார்.

    ஒரு பெண்ணின் அழகு என்பது அவருடைய புறத் தோற்றத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டதல்ல. -இதுதான் உண்மை, மேலும் இந்த வயதில் மனமுதிர்ச்சி, தன்னம்பிக்கை, அனுபவங்களினால் பெற்ற அறிவு ஆகியவை சேர்ந்து அழகாக காட்டும்.

    Vaishnavi S likes this.
    ப்ரிய தோழி

  3. #3
    lathabaiju's Avatar
    lathabaiju is offline Penman of Penmai
    Blogger
    Minister's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Tirupur
    Posts
    3,729

    re: A woman's beauty - ஒரு பெண் எந்த வயதில் அழகாக இருப்பார்.

    Well Guna... nallarukku... ladies kku thevaiyan vishayam than...thanks

    அன்புடன்
    உங்கள் லதா பைஜூ...

    Stories of Latha Baiju

    எனது கவிதைப் பயணம்

    இருவரிக் கவிதைகள்

    "ACHIEVEMENT IS ALMOST AUTOMATIC WHEN THE GOAL BECOMES AN INNER COMMITMENT"

  4. #4
    lathabaiju's Avatar
    lathabaiju is offline Penman of Penmai
    Blogger
    Minister's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Tirupur
    Posts
    3,729

    re: A woman's beauty - ஒரு பெண் எந்த வயதில் அழகாக இருப்பார்.

    30 வயதில் பெண்கள் அழகாய் தோன்ற இன்னொரு முக்கிய காரணம் தாய்மை.....

    தைமையடைந்ததும் பெண்கள் நிறைய பொறுப்புகளை ஏற்கிறார்கள்... அதை அழகாக சமாளித்து குடும்பத்தை நிரவகிக்கிரர்கள்..


    அந்த தன்னம்பிக்கையான திறமை அவர்களை மிகவும் அழகாய் காட்டுகிறது...

    anitha.sankar likes this.
    அன்புடன்
    உங்கள் லதா பைஜூ...

    Stories of Latha Baiju

    எனது கவிதைப் பயணம்

    இருவரிக் கவிதைகள்

    "ACHIEVEMENT IS ALMOST AUTOMATIC WHEN THE GOAL BECOMES AN INNER COMMITMENT"

  5. #5
    Ganga's Avatar
    Ganga is offline Registered User
    Blogger
    Minister's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Chennai
    Posts
    3,271
    Blog Entries
    4

    re: A woman's beauty - ஒரு பெண் எந்த வயதில் அழகாக இருப்பார்.

    Quote Originally Posted by lathabaiju View Post
    30 வயதில் பெண்கள் அழகாய் தோன்ற இன்னொரு முக்கிய காரணம் தாய்மை.....

    தைமையடைந்ததும் பெண்கள் நிறைய பொறுப்புகளை ஏற்கிறார்கள்... அதை அழகாக சமாளித்து குடும்பத்தை நிரவகிக்கிரர்கள்..


    அந்த தன்னம்பிக்கையான திறமை அவர்களை மிகவும் அழகாய் காட்டுகிறது...
    Well said Latha....Kalakkureenga ponga...

    கங்கா
    விழாமல் இருப்பது பெருமையன்று. விழும் போது எல்லாம் எழுவது தான் பெருமை!!


  6. #6
    lathabaiju's Avatar
    lathabaiju is offline Penman of Penmai
    Blogger
    Minister's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Tirupur
    Posts
    3,729

    re: A woman's beauty - ஒரு பெண் எந்த வயதில் அழகாக இருப்பார்.

    rajesh, 40 vayasula nai gunam varumnu solli irukkanga but athu ankalukku thann.. athukkum karanam irukku.

    அன்புடன்
    உங்கள் லதா பைஜூ...

    Stories of Latha Baiju

    எனது கவிதைப் பயணம்

    இருவரிக் கவிதைகள்

    "ACHIEVEMENT IS ALMOST AUTOMATIC WHEN THE GOAL BECOMES AN INNER COMMITMENT"

  7. #7
    silentsounds's Avatar
    silentsounds is offline Moderator & Blogger Guru's of Penmai
    Gender
    Male
    Join Date
    Feb 2011
    Location
    chennai
    Posts
    6,312
    Blog Entries
    31

    re: A woman's beauty - ஒரு பெண் எந்த வயதில் அழகாக இருப்பார்.

    இந்த பதிவு பற்றி கருத்துரை வழங்கிய
    பானு,லதா,கங்கா மற்றும் ராஜேஷ் -கு நன்றிகள்.

    Guna (குணா)

    நினைப்பில் தூய்மையும், சொல்லில் உண்மையும்
    மிகவும் அவசியமானவை








  8. #8
    padmavathy2k is offline Newbie
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    thanjavur
    Posts
    1

    re: A woman's beauty - ஒரு பெண் எந்த வயதில் அழகாக இருப்பார்.

    nice.. and very interesting


  9. #9
    Nithyamuthu's Avatar
    Nithyamuthu is offline Newbie
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    chennai
    Posts
    1

    re: A woman's beauty - ஒரு பெண் எந்த வயதில் அழகாக இருப்பார்.

    நல்ல மனசு இருந்தா எல்லாரும் எப்பவுமே அழகாத்தான் இருப்பாக

    Nithya

  10. #10
    subashini is offline Banned Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2011
    Location
    chennai
    Posts
    102

    re: A woman's beauty - ஒரு பெண் எந்த வயதில் அழகாக இருப்பார்.

    banu u told right girls ella age ellum alagu than they are best

    Last edited by Parasakthi; 25th Aug 2011 at 05:50 PM.

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter