Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree2Likes
  • 2 Post By shansun70

சருமத்தில் தேவையற்ற முடி வளர்ச்சியை தடு&


Discussions on "சருமத்தில் தேவையற்ற முடி வளர்ச்சியை தடு&" in "Misc Beauty" forum.


  1. #1
    shansun70's Avatar
    shansun70 is offline Minister's of Penmai
    Real Name
    M ShanmugaSundaram
    Gender
    Male
    Join Date
    Mar 2014
    Location
    Hosur
    Posts
    2,651

    Cool சருமத்தில் தேவையற்ற முடி வளர்ச்சியை தடு&

    பெண்களுக்கு முகம் மற்றும் இதர பாகங்களில் அதிக அளவு முடி வளர்வதற்குக் காரணமே, ஹார்மோன் மாற்றங்களும் பழக்க வழக்கங்களும் தான். த்ரெடிங், வாக்ஸிங் போன்றவற்றைச் செய்யும் போது முடி வளராமல் தடுக்கவும் சில சிகிச்சைகள் இருக்கின்றன.

    சுட்ட வசம்புத்தூள், குப்பைமேனி கீரை பவுடர், கோரைக்கிழங்கு பவுடர், கஸ்தூரி மஞ்சள் பவுடர். இந்த நான்கையும் சம அளவு கலந்து வைத்துக் கொள்ளுங்கள். உடம்பில் இருக்கும் தேவையற்ற முடிகளை அகற்றி, அழகைக் கொடுக்கும் அசத்தல் மிக்ஸ் இது! மஞ்சள் பூசிக் குளிப்பது போல் இந்த பவுடரை முகம் முதல் பாதம் வரை நன்றாக தேய்த்து குளியுங்கள்.

    புருவத்தில் இந்த பவுடர் படுவதால் முடி உதிர்ந்துவிடுமோ என்று பயப்பட வேண்டாம். வாரம் இருமுறை குளித்து வந்தாலே முகம், உடம்பில் இருக்கும் தேவையற்ற முடிகள் நிறம் மாறி, பின் உதிர்ந்துவிடும். மிருதுவான ப்யூமிக்ஸ்டோனை (நாட்டு மருந்துக் கடையில் கிடைக்கும்) வாங்குங்கள்.

    கலந்து வைத்திருக்கும் மிக்ஸை குழைத்து ப்யூமிக்ஸ்டோனில் தடவி, முடி இருக்கிற பகுதிகளில் லேசாகத் தேயுங்கள். இதை தினமும் செய்து வந்தாலும் முடி உதிரும். மேற்கொண்டு முடி வளராது.

    த்ரெடிங், வாக்ஸிங் என்று அடிக்கடி பியூட்டி பார்லர் பக்கம் போகிறவர்கள் தினமும் முகம், கை, கால்களை கழுவும்போதெல்லாம் சோப்புக்கு பதிலாக இந்த மிக்ஸை பயன்படுத்தலாம். இதனால் முடியை அகற்றியதால் ஏற்பட்ட கருமையும் புள்ளிகளும் மறைவதுடன் சருமமும் மருதுவாகும்

    Similar Threads:

    Sponsored Links
    manesi and Mary Daisy like this.

  2. #2
    Mary Daisy's Avatar
    Mary Daisy is offline Registered User
    Blogger
    Guru's of Penmai
    Real Name
    Daisy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Little Roma Puri
    Posts
    5,047
    Blog Entries
    4

    Re: சருமத்தில் தேவையற்ற முடி வளர்ச்சியை தட

    useful tips. . . .. . . .


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter