தோல் சுருக்கங்களை விரட்டும் வெள்ளரி!

ம்மிடம் அழகு சார்ந்த சில கேள்விகள்... 'தி விசிபிள் டிஃபரன்ஸ்’ பியூட்டி சலூனின் நிர்வாகி

வசுந்தராவிடம் அதற்கான பதில்கள்!சருமத்தில் ஏற்படும் எண்ணெய்ப் பசையை எப்படிக் கட்டுப்படுத்துவது?

"வெயில் காலம் ஆரம்பமாகிவிட்ட தால், வெப்பம் சருமத்தின் மீது பட்டு, சருமத் துவாரங்கள் திறந்து, எண்ணெய் அதிகம் சுரக்கக் காரணமாகிறது. இதன் அடுத்த கட்டம் முகப்பருக்கள், மங்கு போன்றவை. இதை ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்த முக்கியமாக செய்ய வேண்டியது, சோப்பு பயன்படுத்து வதை நிறுத்திவிட்டு, எண்ணெய்ப் பிசுக்கு சருமத்துக்கான ஃபேஸ் வாஷ் உபயோகிப்பதுதான். ஆரஞ்சுப் பழத்தின் தோலை வெந்நீரில் போட்டு இரவு முழுவதும் ஊறவைத்து, காலையில் இந்த தண்ணீரில் முகத்தைக் கழுவலாம். அல்லது, இந்த தண்ணீர் நான்கு ஸ்பூன் எடுத்துக்கொண்டு, இரண்டு ஸ்பூன் முல்தானிமட்டி கலந்து முகத்தில் பூசி, பத்து நிமிடங்களுக்குப் பிறகு கழுவலாம். அல்லது, இதே தண்ணீரில் பயத்தம் மாவு கலந்து முகத்தைக் கழுவினாலும் கைமேல் பலன் கிடைக்கும்.''

கை, கால்களில் உள்ள சருமச் சுருக்கத்தை எப்படிப் போக்குவது?
"சருமம் வறண்டு போனாலே கை, கால்களில் கோடுகள் மற்றும் சுருக்கங்கள் ஏற்படும். இதைத் தவிர்க்க சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருக்க வேண்டும். வறண்ட சருமத்தினர் குளியல் சோப்புக்கு பதில், பாடி வாஷ் உபயோகிக்கலாம். ஒரு ஸ்பூன் வெண்ணெயுடன் ஒரு ஸ்பூன் வெள்ளரிச் சாறு சேர்த்து கை, கால்களில் தடவி அரை மணி நேரம் ஊறவைத்துக் கழுவினால்... நாளடைவில் சுருக்கங்கள் மறைவதுடன், சரும நிறமும் பளிச்சென மாறும். மருந்துக் கடைகளில் கிடைக்கக் கூடிய லிக்விட் பாரஃபினை, இரவு உறங்கும் முன் சிறிதளவு பஞ்சில் தொட்டு கை, கால்களில் தடவிய பின்னர் கைகளுக்கு கிளவுஸும், கால்களுக்கு சாக்ஸும் அணிந்துகொண்டு உறங்குங்கள். காலை எழுந்ததும் கழுவினால் சுருக்கங்கள் குறைந்திருக்கும். தொடர்ந்து செய்தால், கை மற்றும் கால்களில் சருமம் இறுக்கமாகி இளமை தோற்றம் தரும்.''


கருமையான உதடுகளுக்குத் தீர்வென்ன?

இரத்தசோகை உள்ளவர்களுக்கும், அதிக நேரம் வெயிலில் செல்ல நேர்பவர்களுக்கும் உதடுகள் கறுத்துக் காணப்படும். ஒரு ஸ்பூன் மாதுளம் பழச்சாறும், ஒரு ஸ்பூன் பீட்ரூட் சாறும், சிறு துளிகள் சுத்தமான தேனும் கலந்து வைத்துக்கொள்ளவும். தினமும் மூன்று அல்லது நான்கு முறை இக்கலவையை உதடுகளில் தடவி வந்தால், கறுத்த உதடுகளுக்கு நிறம் கிடைக்கும். தினமும் இரவு உறங்கும் முன், டர்க்கி டவலை வெந்நீரில் முக்கிப் பிழிந்து உதடுகளில் ஒத்தடம் கொடுத்த பின், லிப் பாம் அல்லது பெட்ரோலியம் ஜெல்லி தடவி வந்தால் உதடுகள் மென்மையுடனும் ஈரப்பதத்துடனும் இருக்கும்.''

Similar Threads: