Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine Feb 2018! | All Issues

User Tag List

Like Tree174Likes

Recipes of Foods to be given During Exams -தேர்வு நேர உணவுகள்


Discussions on "Recipes of Foods to be given During Exams -தேர்வு நேர உணவுகள்" in "Miscellaneous Kitchen" forum.


 1. #1
  jv_66's Avatar
  jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
  Real Name
  Jayanthy
  Gender
  Female
  Join Date
  Dec 2011
  Location
  Bangalore
  Posts
  32,008

  Recipes of Foods to be given During Exams -தேர்வு நேர உணவுகள்

  Hi Friends,

  Exams are on the Board. All those Children should be given utmost care by their parents.

  Parents may be in need of those Recipes which would help their children to keep them fresh and healthy during these Exam times.

  Hence the
  Recipe of the month March 2016 is Recipes of Foods to be given during Exams

  So friends, please share all those recipes which you know to help these parents.

  You may share the recipes of different varieties of healthy tea -like Ginger tea, lemon tea etc., Health drinks of any kind, different kinds of Sprouts, Almonds , Healthy juices, Protein rich foods, Vegetable, Fruit salads,Soups- veg. or non-veg. Food items which would not induce sleep but keep them fresh and whatever else you know.

  You can also give the list of foods to be given during this time. It may include the fruits also.

  One kind message to all:

  Please share only your own recipes and avoid the Copy-Pasting posts.  குழந்தைகளுக்கு பரீட்சைகள் இன்றிலிருந்து ஆரம்பமாகி விட்டன .

  அவர்களின் பெற்றோர்களுக்கு , இந்த சமயத்தில் தங்கள் குழந்தைகளுக்கு நல்ல சிறந்த உணவுகளை கொடுத்து உதவுவதில் மிகவும் ஆர்வமாக இருக்கும் .

  ஆதலால் இந்த மார்ச் 2016மாதத் தலைப்பு -
  தேர்வு நேர உணவுகள்

  அவர்களுக்கு உதவும் பொருட்டு , உங்களுக்குத் தெரிந்த அனைத்து வகையான தேர்வு நேரத்தில் கொடுக்கக்கூடிய உணவு வகைகளின் ரெசிபிக்களை இங்கே தருமாறு வேண்டுகிறேன் .

  உதாரணத்திற்கு அவை , பல வித ஹெல்தி டீ வகைகள் - இஞ்சி டீ, லெமன் டீ etc., சத்தான பானங்கள் , ஜூஸ் வகைகள் ,பாதாம் பருப்பு வகைகள் , முளை கட்டிய தானியங்கள் , புரத உணவுகள் ,தூக்கத்தை உண்டாக்காத உணவுப் பண்டங்கள் , காய்கறி , பழ சாலட், சூப் வகைகள் - அவை வெஜ் அல்லது நான் -வெஜ் எந்த வகையாகவும் இருக்கலாம் , இன்னும் வேறு எதெல்லாம் தெரியுமோ , எல்லாவற்றின் ரெசிபிக்களையும் இங்கே நீங்கள் தரலாம் .

  தேர்வு சமயத்தில் தர வேண்டிய உணவுகளின் அட்டவணையைக் கூட நீங்கள் தரலாம் . இதில் பழங்களையும் கூட சேர்த்துக்கொள்ளலாம் .

  இவையனைத்தும் நீங்கள் வேறு தளங்களிலோ அல்லது வேறு எங்கிருந்தோ copy-paste செய்யாமல் , உங்கள் சொந்த செய்முறைகளாக இருப்பது மட்டுமே அவசியம் .ஒருவர் சொன்ன ரெசிபியை மற்றொருவரும் தாராளமாகச் சொல்லலாம் . உங்களின் செய்முறை வேறு வகையில் இருக்கலாம் .
  Similar Threads:

  Sponsored Links
  Attached Thumbnails Attached Thumbnails Recipes of Foods to be given During Exams -தேர்வு நேர உணவுகள்-easterreckidssmoothisgarnished1.jpg   Recipes of Foods to be given During Exams -தேர்வு நேர உணவுகள்-52895.jpg   Recipes of Foods to be given During Exams -தேர்வு நேர உணவுகள்-salad-carving-decoration-ideas.jpg   Recipes of Foods to be given During Exams -தேர்வு நேர உணவுகள்-sprouts-salad-recipe-sprouts.jpg   Recipes of Foods to be given During Exams -தேர்வு நேர உணவுகள்-7-healthiest-teas-their-health-benefits-5.jpg  

  Jayanthy

 2. #2
  jv_66's Avatar
  jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
  Real Name
  Jayanthy
  Gender
  Female
  Join Date
  Dec 2011
  Location
  Bangalore
  Posts
  32,008

  Recipes of Foods to be given During Exams -தேர்வு நேர உணவுகள்

  List of all the recipes shared in this thread. Please click the names of the recipes to go straight to that recipe.  Names of the Recipes Contributor's name
  ஜவ்வரிசி இட்லி ,சிவப்பு அவல் இட்லி ,பணியாரம் ,சிறுதானிய கிச்சடி ,பீஸ் பராத்தா ,பரங்கிக்காய் பராத்தா ,புதினா மல்லி பருப்புசிலி ,பாதாம் ட்ரின்க் , பிஸ்தா பால் kasri66 @ Chitra
  வாழைப்பூ அடை chan @ lakshmi
  Custard Bread chan
  Veg salad Shrimathi venkat
  புதினா ஜூஸ் Shrimathi venkat
  ஓட்ஸ் கஸ்டர்ட் Shrimathi venkat
  Carrot Rice ,Beetroot Pulao,Baby corn Biriyani, Egg Dosa, Egg Rolls, Sweetcorn Chicken Soup,Masala Poha/Aval Chat  PriyagauthamH
  Vendaikkai Finger Chips, Veg Kothu Parota, Homemade Grape Squash, Banana Milkshake, Ragi Chocolate milkshake, Mango Smoothie, Mango Mastani


  PriyagauthamH
  List of foods to be given and foods to avoid during exams Chill Queen
  food items which will increase the memory power girija chandru
  மூலிகை சுண்டல் Shrimathi venkat
  திரிபலா சுண்டல் Shrimathi venkat
  Simple broccoli peas rice, Veg fried Rice Chill Queen
  Foods to be given and few more tips -during exams RathideviDeva
  Food tips for exams Yaazhini15
  Sweet Corn Mix jv_66(Jayanthy)
  Green Chutney Idli Jayanthy
  தர்பூசணி மில்க் ஜூஸ் Jayanthy
  Foods tips for exams chitra.k
  ஓட்ஸ் கஞ்சி girija chandru
  ப்ரோடீன் கொழுக்கட்டை girija chandru
  தயிர் வேர்க்கடலை ராய்த்தா girija chandru  Last edited by jv_66; 5th Apr 2016 at 02:42 PM.
  Jayanthy

 3. #3
  gkarti's Avatar
  gkarti is offline Super Moderator Silver Ruler's of Penmai
  Real Name
  Karthiga
  Gender
  Female
  Join Date
  Sep 2012
  Location
  Madurai
  Posts
  49,870

  Re: Recipes of Foods to be given During Exams -தேர்வு நேர உணவுகள்

  Superb Aunty.. Looking Forward


 4. #4
  kasri66's Avatar
  kasri66 is offline Registered User
  Blogger
  Minister's of Penmai
  Real Name
  Chitra
  Gender
  Female
  Join Date
  Jun 2011
  Location
  Singapore
  Posts
  3,415
  Blog Entries
  19

  Re: Recipes of Foods to be given During Exams -தேர்வு நேர உணவுகள்

  இப்போது ரொம்பவும் தேவையான, முக்கியமான தலைப்பு இது ஜெயந்தி @jv_66

  என் மகளும் இப்போது போர்டு எக்ஸாம் எழுதுவதால் இந்த முறை என்னால் அனுபவித்து உணர்ந்து சொல்ல முடியும். Thanks for the topic.

  இதற்கு ரெசிப்பி சொல்வதைவிட நிறைய டிப்ஸ் சொல்லலாம் என்று தோன்றுகிறது.

  முதலில் படிக்கும் குழந்தைகளுக்கு உணவை ப்ரோடீன் சத்து அதிகமுள்ள, carbs குறைந்த, கொழுப்பு குறைவான, எளிதில் ஜீரணிக்கக் கூடிய உணவுகளை பெற்றோர்கள்தான் தேர்வு செய்து கொடுக்க வேண்டும்.

  காலை உணவை தவிர்ப்பதும், போதுமான உணவை சாப்பிடாமல் அரைகுறையாக சாப்பிடுவதும், தூங்கும் நேரத்தைக் குறைப்பதும், அகாலத்தில் தூங்குவதும், தூக்கத்தைப் போக்க அதிக அளவு caffeine கொண்ட காபி டீயை அருந்துவதும் தவறான பழக்கங்கள். தூக்கம் என்பது மூளையின் உணவு. இந்த வயதில் குறைந்தது எட்டு மணி நேரமாவது தூங்கினால்தான் மூளை திறமையாக செயல் பட முடியும்.

  அதேபோல இனிப்பு சாப்பிட்டால் உடனடி எனர்ஜி கிடைக்கிறதே என்று அதிகம் சாக்லேட் போன்றவைகளை சாப்பிடுவதும், Cola போன்ற aerated drinks உணவுக்கு இடையில் எடுத்துக்கொள்வதும் தவறான பழக்கம். இவைகள் மூளையை சுருசுறுப்பாக்குவதற்கு மாறாக அதன் திறனைக் குறைத்துவிடும். சொல் பேச்சு கேட்கும் குழந்தைகள் என்றால் சரியான படி அறிவுறுத்தி அவர்களை வழிக்கு கொண்டு வந்துவிட்டால் எல்லோரும் சுலபமாக மார்க்கை அள்ளிவிடலாம்.

  இதற்கு என்னென்ன செய்யலாம்?

  இன்றைய கால கட்டத்தில் பொதுத் தேர்வு எழுதும் வருடம் முழுதுமே குழந்தைகள் மட்டுமில்லாமல் பெற்றோரும், ஆசிரியர்களுமே நிறைய உழைக்க வேண்டியுள்ளது. தேர்வு தொடங்குவதற்கு ஒரு மாதம் முன்னரே வெளி உணவை அறவே நிறுத்திவிடவேண்டும். இது அனாவசிய வயிற்றுக் கோளாறுகள் ஏற்படுவதைத் தவிர்க்கும்.

  வீட்டில் தயார் செய்த நம் முன்னோர் பழக்கி வைத்த இட்லி, இடியாப்பம், டோக்ளா போன்ற, ஆவியில் வேக வைத்துச்செய்யும் உணவுகளை காலை உணவாகத் தரலாம்.

  மதியம் புரதம் நிறைந்த பருப்பு சேர்ந்த உணவு வகைகள், வைட்டமின் நிறைந்த காரட், பீட்ரூட், கீரை போன்றவை சேர்ந்த உணவு, அசைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு முட்டை, மீன் போன்றவை, மற்றும் தயிர் தரலாம்.

  சத்துமாவுக் கஞ்சி, பழங்கள், சாலட், வெஜிடபிள் சூப், சர்க்கரை சேர்க்காத பழச்சாறு பாதாம்பருப்பு, Raisins, Dried Dates, Figs, போன்றவைகளை நடுநடுவே தரலாம்.

  இரவில் எளிதில் ஜீரணிக்கக் கூடிய எளிய உணவு, பால் போன்றவை தரலாம்.

  எல்லாவற்றையும் விட அதிகம் தண்ணீர் குடிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தவேண்டும். அதிகம் கண் விழிக்க இரவில் காபி டீ போன்ற பானங்களை அறவே நிறுத்தவேண்டும்.

  அதிக உணவு எடுத்துக்கொண்டால் தூக்கம் வருகிறது என்பது சாதாரணமாக அவர்கள் சொல்லும் கம்ப்ளைன்ட். அதிக உணவு, குறைந்த உணவு ரெண்டுமே படிக்கும்போது மூளையை பாதிக்கும். அதனால் அடிக்கடி, சிறிய அளவில், சத்தான உணவுகளை (energetic food at frequent intervals) எடுத்துக்கொள்வது மூளையை சோர்வடையச் செய்யாமல் பார்த்துக்கொள்ளும்.

  சொல்வது சுலபம் அதை குழந்தைகள் மனதில் பதிய வைத்து நடைமுறைப் படுத்துவது என்பது ஒவ்வொரு தாய்க்கும் Himalayan task என்பது மறுக்க முடியாத உண்மை.
  மேலே சொன்னவைகளின் படி ஒவ்வொரு categoryயிலும் ஒவ்வொரு உணவை சொல்லுகிறேன்.

  Breakfast:
  இட்லி – வீட்டில் சாதாரணமாக செய்யும் நம் இட்லி, கூடவே ப்ரோடீன் உள்ள பருப்பு உபயோகித்து செய்யும் சாம்பார் ஒரு சிறந்த உணவு. இதை எந்தக் குழந்தை ரசித்து சாப்பிடும் என்பவர்கள் அதை விதவிதமாக செய்து பரிமாறலாமே. இட்லியின் நடுவே கத்தியால் வெட்டி தக்காளி வெங்காயத்துடன் வேண்டிய காய்கறிகளை வதக்கி நடுவில் வைத்து பர்கர் போல தரலாம்.

  இட்லியை நீளநீளத்துண்டுகளாக வெட்டி தோசை தவாவில் எண்ணெய் அல்லது நெய் உபயோகித்து பிரட் டோஸ்ட் போல செய்து சாம்பாரில் மிதக்க விட்டு சாதா தட்டில் தராமல் ஒரு பௌலில் ஸ்பூனுடன் தந்துவிட்டால் அதுவே வேறு உணவு போல தோன்றச் செய்யும்.

  இட்லியை அரிசி + உளுந்து combinationல் செய்யாமல் திணை வரகு போன்ற சிறுதானியம் உபயோகித்து செய்வதும், ஜவ்வரிசி, அவல் போன்றவை உபயோகித்தும் செய்து தரலாம்.

  சாதா தோசைக்கு பதில் காய்கறி மசாலாவை மேலே வைத்து pizza ஸ்டைலில் தரலாம்.

  விதவிதமாக பிரட் சாண்ட்விச் செய்துதரலாம். வைட் பிரட்டை விட wholegrain பிரட் சாண்ட்விச் செய்து தரலாம். இது செய்வதும் சுலபம், பல வகை கோச்சிங் கிளாஸ் போகும் பிள்ளைகள் நடுநடுவே இப்படி எடுத்துச் செல்வதும், சாப்பிடுவதும் விரும்புவார்கள்.
  omega சத்து அதிகம் உடைய ஓட்ஸ் போன்றவைகளை கஞ்சிபோல் மட்டும் தராமல் இட்லி தோசை போல செய்தும் தரலாம்.

  லஞ்ச்:

  மதிய உணவுக்கு எல்லாக் காய்கறியும் சேர்த்து மசாலா மிதமாக போட்ட காய்கறி சாதம், காய்கறி சாலட், தயிருடன் தரலாம்.

  டின்னர்:

  இரவு உணவாக சப்பாத்தி செய்து தரலாம். கூடவே காய்கறிகள் நிறைந்த subzi. சூடான பால், பாதாம் drink என்று சுவையாக தரலாம். எளிமையான பருப்பு ரசம், கூட்டு போன்றவை மதிய உணவுக்கோ, இரவு உணவுக்கோ கட்டாயம் இருக்குமாறு பார்த்துக்கொள்ளலாம்.

  மேலே சொன்ன உணவுகளில் சிலதின் செய்முறையை சொல்லி முடிக்கிறேன்.

  ஜவ்வரிசி இட்லி:

  நாம் சாதாரணமாக செய்யும் இட்லிக்கு போடுவது போல 4:1 ratio வில் அரிசியும் உளுந்தும் எடுக்கலாம், ஆனால் உளுந்து ஒரு கப் என்பதற்கு பதில் கால் கப் ஜவ்வரிசியும், முக்கால் கப் உளுந்தும் எடுத்து ஒரு ஸ்பூன் வெந்தயத்தையும் சேர்த்து இட்லி செய்யலாம். இது பூ போல மெத்தென்றும் வெளுப்பாயும் இட்லி கிடைக்கும்.

  சிவப்பு அவல் இட்லி:

  சிவப்பு அவல் என்பது சாதா அவலை விட சத்து நிறைந்தது. இதில் இட்லி செய்ய வறட்டு வாணலியில் ஒரு கப் சிவப்பு அவலை வறுத்து ரவை போலப் பொடிக்கவும்.

  ஒரு வாணலியில் எண்ணெய் வைத்து கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு தாளித்து, ஒரு சிட்டிகை பெருங்காயம், காரத்துக்கு தேவையான பச்சை மிளகாய் துண்டுகள், கறிவேப்பிலை தாளித்து ஒரு ஸ்பூன் பட்டாணி, ரெண்டு ஸ்பூன் காரட் துருவல் சேர்த்து பிரட்டி அடுப்பை அணைக்கவும். இந்த கலவை சூடாக இருக்கும்போதே அவல் ரவையை சேர்த்து கலந்து வைக்கவும்.

  ஒரு கப் தயிர் அல்லது இட்லி மாவு போன்ற பதத்துக்கு தேவையான தயிர் சேர்த்து சுவைக்குத் தகுந்த உப்பும் போட்டு ஒரு சிட்டிகை சோடா உப்பு சேர்த்து ஊற விடவும். பத்து நிமிடம் ஊறினால் போதும்.

  இட்லி தட்டில் முதலில் வறுத்த முந்திரி, ஒரு ஸ்பூன் கொத்தமல்லி + காரட் துருவல் சேர்த்து அவல் கலவையை மேலே கொட்டி இட்லி போல ஆவியில் வைத்து எடுக்கவும்.

  தட்டை விட்டு இட்லியை எடுத்தால் முந்திரி, காரட் மல்லி தலையில் வைத்துக்கொண்ட மல்லிப்பூ இட்லி தயார்.

  சிவப்பு அவல் பணியாரம்:

  இட்லி தினமும் சாப்பிட போர் என்பவர்கள் ஒரு நாள் மேலே சொன்ன முறையிலேயே மாவை தயாரித்து குழிப் பணியாரக் கல்லில் எண்ணெய் விட்டு பணியாரமாக செய்யலாம்.

  நான் ஸ்டிக் கல் என்றால் முதலில் மூடி செய்யவும், அடிப்புறம் நன்றாக வெந்ததும் திருப்பி விட்டு ஒரு சொட்டு எண்ணெய் சேர்த்து திறந்து வைத்து செய்யவும். இது சூடாகச் சாப்பிட மொறுமொறுவென்று இருக்கும்.

  இதுவும் தவிர சுலபமான சில பிரட் ரெசிப்பிகளுக்கு இந்த த்ரெட்டை பார்க்கவும்.

  சிறுதானிய உப்புமா கிச்சடி:

  வரகு அல்லது குதிரை வாலி என்று எதையும் உபயோகித்து கிச்சடி செய்யலாம்.

  ஒரு கப் சிறுதானியத்தை கழுவி சற்று ஊறவிடவும். அதற்குள் ஒரு பானில் எண்ணெய் விட்டு கடுகு, சீரகம், சோம்பு தாளித்து பச்சை மிளகாய், இஞ்சி துண்டுகள் சேர்த்து வெங்காயம் அல்லது கோஸ் நறுக்கிச் சேர்த்து வதக்கவும். (வெங்காயம் வேண்டாம் என்பவர்கள் கோஸ் சேர்க்கலாம்)

  அடுத்து தக்காளி துண்டுகள், காரட், பீன்ஸ், பட்டாணி, காலிபிளவர், உருளைக்கிழங்கு போன்றவை தலா ரெண்டு ஸ்பூன் நறுக்கியது சேர்த்து வதக்கவும். கொஞ்சம் வதங்கியதும் கால் ஸ்பூன் மஞ்சள் தூள், கால் ஸ்பூன் மிளகாய் தூள், கால் ஸ்பூன் தனியா தூள், கால் ஸ்பூன் கரம் மசாலா சேர்த்து ரெண்டு அல்லது ரெண்டரை கப் நீர் சேர்த்து கொதிக்கவிடவும்.

  கொதித்ததும் ஊறிக்கொண்டிருக்கும் அரிசியை வடித்துச் சேர்த்து சுவைக்குத் தக்க உப்பு போட்டு குக்கரில் ரெண்டு விசில் வைத்து இறக்கவும்.

  தொட்டுக்க வெள்ளரிக்காய் அல்லது தக்காளி பச்சடி.

  பீஸ் பராத்தா:

  ஒரு கப் பச்சைப் பட்டாணியை வேக வைத்து வடிக்கவும். ஒரு பச்சை மிளகாயுடன் உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைத்து கோதுமை மாவில் கலந்து சப்பாத்தி மாவாக பிசையவும். பிசைய ஒரு டேபிள்ஸ்பூன் தயிர் சேர்க்கலாம்.

  மொத்தமான / தடிமனான பராத்தாக்களாய் செய்து உருளைக்கிழங்கு மசாலுடன் சாப்பிடலாம்.

  பரங்கிக்காய் stuffed பராத்தா:

  ஒரு கீத்து பரங்கிக்காயை தோல் சீவி பெரிய துண்டுகளாக நறுக்கவும். வாணலியில் ஒரு ஸ்பூன் எண்ணெய் வைத்து இந்த பறங்கித் துண்டுகளை வதக்கவும். ரொம்ப குழையாதபடி வதக்க வேண்டும். அரை வேக்காடு வெந்தால் போதும். இந்த துண்டுகளுடன் ஒரு பிடி புதினா, ஒரு பிடி கொத்தமல்லி தழைகளை சேர்த்து ரெண்டு ஸ்பூன் பொட்டுக்கடலை மற்றும் காரத்துக்கு தகுந்த பச்சை மிளகாய், அரை ஸ்பூன் இஞ்சி துண்டுகள் சேர்த்து மிக்சியில் அரைக்கவும்.

  வேறு காய் சேர்க்க விரும்பினால் மறுபடி வாணலியில் எண்ணெய் வைத்து வெங்காயம், கோஸ் துண்டுகளை மெலிதாக நறுக்கி வதக்கி கடைசியாக அரைத்த விழுதும் சேர்த்து தனியா பொடி, சீரகப் பொடி, பெருங்காயம் சேர்த்து கெட்டியாக வரும்வரை வதக்கவும். வெந்த உருளைக்கிழங்கு வேண்டும் என்றாலும் ஒன்றை மசித்து சேர்க்கலாம். இது stuffings.

  மேல் மாவுக்கு சாதா சப்பாத்தி மாவு போதும். அல்லது ரெண்டரை கப் கோதுமை மாவுக்கு மூன்று ஸ்பூன் ரவை என்ற கணக்கில் சேர்த்து உப்பு, கால் ஸ்பூன் ஓமம், சேர்த்து ஒரு ஸ்பூன் நெய்யை காய்ச்சி ஊற்றி கையால் பிசிறி வைக்கவும். பிசைய தயிர் சேர்க்கலாம்.

  தயிர் சேர்ப்பது நன்றாக fluffyஆக வர உதவும். மாவை சப்பாத்தி போலப் பிசைந்து கால் மணி நேரம் ஊற விடவும்.

  செய்து வைத்த பூரணம் ஆறியபின் ஒரு உருண்டை மாவை சப்பாத்தியாக இட்டு நடுவில் பூரணம் வைத்து தவாவில் போட்டு சுற்றிலும் எண்ணெய் விட்டு கிறிஸ்ப் பராத்தாவாக எடுக்கவும். அடுப்பு சிம்மில் இருந்தால் சமோசா போன்ற சுவையில் பராத்தா கிடைக்கும்.

  இதற்கு தொட்டுக்கொள்ள எதுவுமே வேண்டாம். கால் வட்டமாக கட் செய்து தரலாம்.

  பரங்கிக்காய் இயற்கையிலேயே க்ளூகோஸ் நிறைந்த காய். அதை குழம்பில் போடுவதை விட இப்படி செய்யலாம்.

  புதினா மல்லி பருப்புசிலி:

  மதிய உணவுக்கு புரதச் சத்து நிறைந்த பருப்பு உசிலி செய்யலாம்.
  கடலைப் பருப்பும் துவரம்பருப்பும் சம அளவு எடுத்து ஊற விடவும்.
  ஊறியதும் வடித்துப் போட்டு காரத்துக்கு தேவையான பச்சை மிளகாய் அல்லது சிவப்பு மிளகாய், இஞ்சி சேர்த்து பெருங்காயப் பொடி, உப்பு, ஆய்ந்து நறுக்கிய புதினா + கொத்தமல்லி தலா ஒரு கப் சேர்த்து மிக்சியில் கொரகொரவென்று அரைக்கவும்.

  வாணலியில் எண்ணெய் வைத்து கடுகு தாளித்து இந்த அரைத்த விழுதைக் கொட்டி வதக்கவும். நடுநடுவே தண்ணீர் தெளித்து வதக்கலாம். ஈரம் நன்றாக சுண்டியதும் ஒரு முறை அடுப்பை அணைத்துவிட்டு மூடி வைத்துவிடவும். அந்த சூட்டிலேயே பருப்பு பதமாக வெந்துவிடும். மறுபடி திறந்து நன்றாகக் கலந்துவிட்டு அடுப்பை ஆன் செய்து சுற்றிலும் எண்ணெய் விட்டு திறந்து வைத்து வதக்கவும். சிம்மில் செய்வது அடிப் பிடிக்காமல் நிறம் மாறாமல் காக்கும்.

  இதையே கடுகு தாளித்த பின் வெங்காயம் அல்லது பிற காய்கள் சேர்த்து வதக்கி பருப்பு விழுதை சேர்த்தும் செய்யலாம்.

  சிம்பிள் ரசம் செய்த அன்று இது balance செய்யும் சத்துணவாக இருக்கும்.

  ஜவ்வரிசி வடகம் மிதக்கும் பாதாம் ட்ரின்க்:

  இது வலையில் படித்த ஒன்றுதான், ஏற்கெனவே ஏதோ ஒரு த்ரெட்டில் சொன்ன ஞாபகம். வெயில் காலத்தில் கூழ் வற்றல் வடாம் என்று போடும்போது உப்பு காரம் சேர்க்காமல் ஜவ்வரிசி வடகம் போட்டு வைத்தால் வேண்டியபோது எண்ணையில் பொறித்து சுண்டின பாலில் போட்டு சர்க்கரை சேர்த்து சுலபமாக பாயசம் செய்யலாம் என்று. அதை என் மாமியாரிடம் சொன்னபோது அவர்கள் உடனே செயல் படுத்திவிட்டார்கள்.

  இதோ படம்,  கடையில் கிடைக்கும் இன்ஸ்டன்ட் பாதாம் மில்க் பவுடரை பாலில் கலந்து ஜவ்வரிசி வடகத்தை பொறித்து சேர்த்து கொதிக்க விட்டுள்ளார்கள். இதை கடையில் கிடைக்கும் இன்ஸ்டன்ட் பவுடருக்கு பதில் வீட்டிலேயே தயார் செய்யும் முறையை இங்கே நான் தருகிறேன்.

  அரை கப் பாதாம் பருப்பை வெந்நீரில் போட்டு ஊற விடவும். தண்ணீர் ஆறும்போது பருப்பும் ஊறியிருக்கும். பருப்பை கையால் கசக்கினால் தோல் கழண்டு விழும். பருப்புகளை வடித்து கொஞ்சமாக நீர் சேர்த்து மிக்சியில் நைசாக அரைக்கவும்.

  அரை கிலோ சர்க்கரையை கொஞ்சமாக நீர் சேர்த்து அடுப்பில் ஏற்றவும். சர்க்கரை கரைந்து கொதிக்கத் தொடங்கியதும் ஒரு ஸ்பூன் பால் விட்டால் சர்க்கரையில் உள்ள அழுக்கு நுரைத்து வரும். அதை ஸ்பூனால் நீக்கிவிட்டு அரைத்த விழுதையும் கொட்டி கலக்கவும். இந்தக் கலவை கலந்து கொதித்து கையால் தொட்டால் பிசுக்கு போல் வந்ததும் (பாகெல்லாம் வர வேண்டாம்) இறக்கி நிறைய குங்குமப்பூ, கேசரி கலர் சிட்டிகை கலந்து ஆறவிடவும்.

  ஆறியதும் கண்ணாடி பாட்டிலில் கொட்டி பிரிட்ஜில் வைக்கலாம். தேவைப்படும்போது ஒரு கப் சூடான பாலிலோ, காய்ச்சி ஆறின குளிர்ந்த பாலிலோ தேவையான அளவு கலந்து குடிக்கலாம். அல்லது மேலே சொன்ன ஜவ்வரிசி வடகத்தை பொறித்து சேர்த்து பாயசம் போல் சாப்பிடலாம்.

  பிஸ்தா பால்:

  மேலே சொன்ன அதே முறையில் பிஸ்தா பருப்பை ஊறவைத்து அரைத்தும் செய்யலாம். இதில் கேசரி கலருக்கு பதில் ஒரு சொட்டு edible green கலர் சேர்க்கலாம். குங்குமப்பூவும் வேண்டாம். பிஸ்தா பாலில் ஜவ்வரிசி வடகம் போட்டால் வித்தியாசமாகவும் இருக்கும்.

  கடைசியாக ஒரு வார்த்தை. இங்கே தலைப்பு தந்திருக்கிறார்களே என்று எனக்குத் தெரிந்ததை சொன்னேன். இது போலெல்லாம் செய்தால்தான் நல்ல மார்க் வரும் என்று நினைத்து யாரும் அவரவர் குழந்தைகளை வற்புறுத்த வேண்டாம். அவர்கள் எந்த உணவை விரும்பி சாப்பிடுவார்களோ (அது சிப்ஸ் போன்ற junk foodஆக இல்லாத பட்சத்தில்) அந்த உணவையே கொடுங்கள். ஆனால் சிறு சிறு அளவில் அவ்வப்போது சாப்பிடும்படி இருக்கட்டும். என் மகளுக்கு எக்ஸாம் சமயத்தில் தயிர் சாதம் தவிர எதுவும் உள்ளே போகாது, வற்புறுத்தினால் கதையே கந்தலாகிவிடும் என்ற அனுபவத்தில் சொல்கிறேன்.  Attached Thumbnails Attached Thumbnails Recipes of Foods to be given During Exams -தேர்வு நேர உணவுகள்-img-20160301-wa0001.jpg  
  - Chitra

 5. #5
  chan's Avatar
  chan is offline Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Mar 2012
  Location
  chennai
  Posts
  17,584

  Re: Recipes of Foods to be given During Exams -தேர்வு நேர உணவுகள்

  வாழைப்பூ அடை
  தேவையான பொருட்கள்

  புழுங்கரிசி – 1/2 கப்

  பச்சரிசி – 1 /2கப்

  துவரம் பருப்பு, பாசிபருப்பு, கடலை பருப்பு, உளுந்து பருப்பு- அணைத்தும் கலந்து 1 கப்

  (இதில் துவரம் பருப்பு, கடலை பருப்பு சேர்ந்து முக்கால் கப் இருக்க வேண்டும் , உளுந்து பருப்பு, பாசிபருப்பு இரண்டும் சேர்த்து கால் கப் இருக்க வேண்டும்)
  சின்ன வெங்காயம் – ½ கப் or பெரிய வெங்காயம் -1 பொடியாக cut செய்தது

  வாழைப்பூ – தேவையான அளவு (1 கப் or 2 கப்)

  காரத்திற்கு
  காய்ந்த மிளகாய் – 3

  மிளகு-1 டேபிள்ஸ்பூன்
  (இதில் மிளகு சுவை அதிகமாவும் ,மிளகாய் சுவை குறைந்தும் இருக்க வேண்டும்)

  சீரகம்-1 டேபிள்ஸ்பூன்

  சோம்பு-1 டேபிள்ஸ்பூன்

  இஞ்சி-ஒரு துண்டு

  தேங்காய் துருவல் – ¼ கப்(optional)

  பெருங்காயம் –கால் டீ ஸ்பூன்

  எண்ணெய்

  உப்பு

  செய்முறை
  1)அரிசியையும் பருப்புகளையும் ஒரு 3 மணி நேரம் ஊறவைக்கவும்.

  2)பின் அரிசியையும் பருப்புகளையும் ,சோம்பு ,மிளகு ,இஞ்சி ,தேங்காய் துருவல் ,காய்ந்த மிளகாய் ,சீரகம், சேர்த்து மாவாக அரைக்கவும்,

  3 சின்ன வெங்காயம் சேர்த்தால் மாவுடன் கடைசியில்ஒரு சுற்று விடவும். சின்ன வெங்காயம் கொரப்பாக அரைபடவேண்டும்.பெரிய வெங்காயம் என்றால் cut செய்து மாவுடன் கலக்கவும்.

  4) வாழைப்பூவை ஆய்ந்து உள்ளே இருக்கும் நரம்பை நீக்கி பொடியாக நறுக்கி, உப்பு சேர்த்து ஐந்து நிமிடம் வேக விடவும். ஆறியதும் நன்கு பிழிந்து வைத்துக் கொள்ளவும்.

  5 )அரைத்த மாவுடன் வேக வைத்த வாழைப்பூ,கட் செய்து வைத்து இருக்கும் வெங்காயம் உப்பு ,பெருங்காயம் சேர்த்து கலந்து,
  பின்னர் தோசைக்கல்லை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு, ஒரு கரண்டி மாவை விடவும். ஒருபுறம் வெந்ததும், மறுபுறம் திருப்பி போட்டு பொன்னிறமாக வேக விட்டு எடுக்க வேண்டும்.

  இப்போது சூடான அடை தோசை தயார் ஆகிவிடும். இதை தேங்காய் சட்னியுடன் or வெல்லத்துடன் சேர்த்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும். வாழைப்பூ சாப்பிட மாட்டேன் என்று கூறும் குழந்தைகளுக்கு இப்படி செய்து தரலாம்.

  இது அனைத்து சத்துகள் நிறைத்த சம சீரான திடமான உணவு.  Attached Thumbnails Attached Thumbnails Recipes of Foods to be given During Exams -தேர்வு நேர உணவுகள்-img_7476.jpg  

 6. #6
  chan's Avatar
  chan is offline Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Mar 2012
  Location
  chennai
  Posts
  17,584

  Re: Recipes of Foods to be given During Exams -தேர்வு நேர உணவுகள்

  custard bread

  தேவையான பொருள்கள்

  பிரட்
  பால் -1/2 லிட்டர்
  கஸ்டர்ட் பவுடர்
  சுகர்
  வாழைபழம்
  ஆப்பிள்
  மாதுளை
  strawberry syrup

  பாதாம்,பிஸ்தா,முந்திரிப்பருப்பு-அனைத்தையும் பொடியாக உடைத்து வைத்து கொள்ளவும்

  ஏலக்காய் பொடி-சிறிது

  செய்முறை

  கஸ்டர்ட் மிகவும் திக் ஆக இருக்க கூடாது ,தோசை மாவு பதத்திற்கு செய்யவும்.(உங்கள் எல்லோருக்கும் செய்ய தெரியும் என நினைக்கிறேன் ,அதனால் இங்கு கூறவில்லை)

  2) இரண்டு பிரட் துண்டுகள் எடுத்து கொள்ளவும் .இதை டோஸ்ட் செய்தும் use செய்யலாம்,டோஸ்ட் செய்யாமல் அப்படியே use செய்யலாம்).
  ஒரு bread slice எடுத்து செய்து வைத்துள்ள கஸ்டர்ட் இல் dip செய்து ஒரு தட்டில் வைக்கவும் .பின் அதன் மேல் பொடித்து வைத்து இருக்கும் dry fruits , ஏலக்காய் பொடி தூவி பின் அதன் மீது ஒரு கரண்டி கஸ்டர்ட் எடுத்து மேலே ஊற்றி மீண்டும் ஒரு bread slice எடுத்து செய்து வைத்துள்ள கஸ்டர்ட் இல் dip செய்து மூடவும்.

  3 இதை fridge காலை செய்து வைத்து விடவும்.மாலை கஸ்டர்ட் முழுவதையும் பிரட் நன்றாக இழுத்து கொள்ளும்.இப்போது பிரட் நன்றாக dry ஆக இருக்கும் ,serve செய்யும் முன் அதே தட்டில் பிரட் மேல் மீண்டும் கஸ்டர்ட் ஊற்றி மாதுளை ,ஆப்பிள்,வாழைபழ துண்டுகள் போட்டு ,விரும்பினால் strawberry syrup சிறிது ஊற்றி சாப்பிடலாம்.இல்லாவிடில் அப்படியே சாப்பிடலாம்.

  இது ஒரு மிதமான இனிப்பு உள்ள பால் ,dry fruits, பழங்கள் உள்ள குழந்தைகள் விரும்பி உண்ணும் உணவு .

  படிக்கும் குழந்தைகளுக்குகாலை 11 மணிக்கு orமாலையில் தரலாம் .
  எளிதில் செய்து விடலாம்.

  படம் நான் எடுத்து வைத்த பழைய படம் .இப்போது மீண்டும் செய்தால்
  நன்றாக எடுத்து மீண்டும் போடுகிறேன்.

  படத்தில் மேலே ஊற்றி உள்ள கஸ்டர்ட் குறைவாக உள்ளது ,இன்னும் சிறிது அதிகம் மேலே ஊற்ற வேண்டும் .பிரட் கஸ்டர்ட் இல் சிறிது மிதப்பது போல் இருக்க வேண்டும்.
  Attached Thumbnails Attached Thumbnails Recipes of Foods to be given During Exams -தேர்வு நேர உணவுகள்-img_7479.jpg   Recipes of Foods to be given During Exams -தேர்வு நேர உணவுகள்-img_7480.jpg  
  Last edited by chan; 2nd Mar 2016 at 10:47 AM.

 7. #7
  jv_66's Avatar
  jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
  Real Name
  Jayanthy
  Gender
  Female
  Join Date
  Dec 2011
  Location
  Bangalore
  Posts
  32,008

  Re: Recipes of Foods to be given During Exams -தேர்வு நேர உணவுகள்

  Thanks Chitra @kasri66 for your wonderful guidance with the apt food recipes for the children during their exams.

  BTW I would like to wish your daughter for her board exams.

  Thanks Lakshmi @chan - உங்க வாழைப்பூ அடை & கஸ்டர்ட் ப்ரெட் ரெசிபிக்களுக்கு

  உங்க ரெண்டு பேருக்குமே வேற எது தெரிஞ்சாலும் எல்லாத்தையும் சொல்லுங்க .

  Jayanthy

 8. #8
  kasri66's Avatar
  kasri66 is offline Registered User
  Blogger
  Minister's of Penmai
  Real Name
  Chitra
  Gender
  Female
  Join Date
  Jun 2011
  Location
  Singapore
  Posts
  3,415
  Blog Entries
  19

  Re: Recipes of Foods to be given During Exams -தேர்வு நேர உணவுகள்

  Quote Originally Posted by jv_66 View Post
  Thanks Chitra @kasri66 for your wonderful guidance with the apt food recipes for the children during their exams.

  BTW I would like to wish your daughter for her board exams.

  Thanks Lakshmi @chan - உங்க வாழைப்பூ அடை & கஸ்டர்ட் ப்ரெட் ரெசிபிக்களுக்கு

  உங்க ரெண்டு பேருக்குமே வேற எது தெரிஞ்சாலும் எல்லாத்தையும் சொல்லுங்க .

  தேங்க்ஸ் ஜெயந்தி. wishes conveyed... உங்களுக்கு இன்னொரு தேங்க்ஸ் அவகிட்டயிருந்து....

  - Chitra

 9. #9
  shrimathivenkat's Avatar
  shrimathivenkat is offline Yuva's of Penmai
  Gender
  Female
  Join Date
  Sep 2012
  Location
  chennai
  Posts
  8,456

  Re: Recipes of Foods to be given During Exams -தேர்வு நேர உணவுகள்

  நல்ல தலைப்பு ஜெயந்தி.என் மகனுக்கு 10 எக்ஸாம் இன்னிக்கி ஆரம்பிச்சிட்டாங்க.நான் செய்வது.அவனுக்கு காலையில் இட்லி கொடுத்தா கூட வயுறு கலகுதுன்னு கலாட்டா பண்ணுவாங்க.அதனால்.நான் காலையில் salad தருகிறேன்.

  veg salad: காரட்,வெள்ளரிக்காய்,தக்காளி,பெரிய வெங்காயம் நறுக்கி,உப்பு மிளகுத்தூள் தூவி கொஞ்சம் எலுமிச்சை பிழிந்து சாப்பிட கொடுப்பேன்.


 10. #10
  shrimathivenkat's Avatar
  shrimathivenkat is offline Yuva's of Penmai
  Gender
  Female
  Join Date
  Sep 2012
  Location
  chennai
  Posts
  8,456

  Re: Recipes of Foods to be given During Exams -தேர்வு நேர உணவுகள்

  இப்போ எக்ஸாம் timela பசங்களுக்கு உடனே ரொம்ப சோர்வ்வடைவாங்க,அவங்களுக்கு புதினா ஜூஸ்,
  புதினா ஒரு கைப்பிடி,
  வெல்லம் சிறிய துண்டு,
  இஞ்சி சிறிய துண்டு,
  ஏலக்காய் 2
  சீரகம் 1/2 ஸ்பூன்.
  எலுமிச்சை 1/2 மூடி.

  ஒரு டம்பளர் நீரை கொதிக்க வைத்து அதில் வெல்லம் சீரகம் இஞ்சி (தட்டிய பின் ) ஆகியவற்றை போட்டு கொதிக்க வைக்கவும்,2 நிமிடம் கொதித்த [இன் ஒரு பிடி புதினாவை நன்கு சுத்தம் செய்து பொடியாக நறுக்கு கொதிக்கும் நீரில் போட்டு உடனே அடுப்பை அணைத்து அதை ஒரு தட்டல் மூடி வைக்கவும் 5 நிமிடம் கழித்து ஒரு டம்பளர் நீர் விட்டு எலுமிச்சை பிழிந்து ,சிறிது தேன் விட்டு அருந்தினால் உடல் சோர்வு,அசதி என்பது வரவே வராது.


loading...

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •  
Like It?
Share It!Follow Penmai on Twitter