Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree24Likes

Fianceயுடன் என்ன பேசலாம் /பேசக்கூடாது? - What to Talk & what not to talk with your F


Discussions on "Fianceயுடன் என்ன பேசலாம் /பேசக்கூடாது? - What to Talk & what not to talk with your F" in "My Better half" forum.


  1. #1
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Fianceயுடன் என்ன பேசலாம் /பேசக்கூடாது? - What to Talk & what not to talk with your F



    Fianceயுடன் என்ன பேசலாம் / பேசக்கூடாது

    பெற்றோர் ஏற்பாடு செய்யும் திருமணங்களில் , எப்போது ஒரு பெண்ணுக்கும் பையனுக்கும் நிச்சயதார்த்தம் முடிந்து விட்டதோ , தொடரும் நாட்களில் ஒருவரைப் பற்றி ஒருவர் புரிந்துகொள்ளும் விதமாக, அவ்விருவரும் போன், மெயில் இவற்றின் மூலம் தங்கள் பேச்சுக்களை தொடர்வது சகஜம் . சில சமயங்களில் நேரிலும் இந்த சந்திப்புகள் தொடரும் .


    இந்தச் சந்தர்ப்பங்களில் இருவருக்குமே என்னென்ன பேசலாம் பேசக்கூடாது என்பது பற்றி நிறைய தயக்கங்கள் இருக்கக்கூடும். அவற்றை தெளிவிக்கும் பொருட்டு நான் இங்கே சில குறிப்புகளை வழங்குகிறேன் .

    இந்தக் குறிப்புகள்
    Tips to talk with your Fiance
    இந்தத் திரியில் நான் குறிப்பிட்டுள்ளவற்றின் தமிழாக்கம் ஆகும் .

    Similar Threads:

    Sponsored Links
    Attached Thumbnails Attached Thumbnails Fianceயுடன் என்ன பேசலாம் /பேசக்கூடாது? - What to Talk & what not to talk with your F-fiance.jpg  
    Last edited by jv_66; 14th Sep 2015 at 12:18 PM.
    Jayanthy





  2. #2
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Fianceயுடன் என்ன பேசலாம் /பேசக்கூடாது? - What to Talk & what not to talk with yo

    முதலில் பெண்களுக்கான குறிப்புகளை பார்க்கலாம் .


    இவற்றைப் பேசலாம் :



    ** உங்கள் இருவருக்குமான முதல் பேச்சுவார்த்தை , அவரிடமிருந்தே தொடங்கட்டும் . ஒரு போதும் நீங்கள் இதை ஆரம்பிக்க வேண்டாம் .


    **இது ஏனென்றால், இந்த மாதிரி நீங்கள் முதலில் பேச்சை ஆரம்பித்ததை சுட்டிக்காட்டி, பிற்காலத்தில் உங்களை அவர் கிண்டல் செய்ய நேரிடலாம் . இதனால் அவரிடம் எதைப் பேசுமுன்பும் யோசித்து , பிற்காலத்தில் அவர் கிண்டல் செய்துவிட ஏதுவாகாமல் பேச முற்படவும் .



    **அவரை உங்களின் சிறந்த ஒரு நண்பராக நினைத்து பேச்சைத் துவக்கவும் . இது உங்கள் தயக்கத்தை போக்க உதவும் .



    ** ஆனால்,நீங்கள் பேசத் தயங்காத ஒரு நபராக இருந்தால் , அவரிடம் நிறுத்தாமல் தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கக் கூடாது .


    **பேச ஆரம்பிக்கும் புதிதில் , அவர் கேட்கும் கேள்விகளுக்கு மட்டுமே நீங்கள் பதில் சொல்வது போதுமானது .


    **உங்களின் அடுத்த பேச்சாக , அவருடைய பெற்றோர் மற்றும் உடன்பிறந்தோர் பற்றியதாக இருக்கட்டும் . அவர்களின் வேலை , படிப்பு, அவற்றின் இடங்கள் போன்றவற்றை அறிந்து கொள்ளுங்கள் .


    **அடுத்ததாக , உங்களவரின் விருப்பு வெறுப்புகள் பற்றி அறிந்து கொள்ளவும் . இதில் , நிறம் , புத்தகம் , சினிமா , சாப்பாடு போன்றவை அடங்கும் . இதோடு கூடவே உங்களுடைய விருப்பு வெறுப்புகளை பற்றியும் பகிர்ந்து கொள்ளலாம் .


    ** உங்கள் படிப்பைப் பற்றி சொல்லிவிட்டு, அவருடையதையும் பற்றின விவரங்களைக் கேட்டு அறியவும் .


    **அவராகவே அவருடைய நண்பர்களைப் பற்றி தெரிவித்தால் , அவர்களுடைய பெயர் மற்றும் விவரங்களைப் பற்றி மட்டுமே தெரிந்து கொள்ளவும் .


    **அவர் பார்க்கும் வேலையைப் பற்றியும் அதன் நேர காலங்களைப் பற்றியும் அறிந்து கொள்ளவும் .


    **உங்களின் பேச்சுக்களில் அவரது பெற்றோர்களின் மீது நீங்கள் வைத்திருக்கும் மரியாதை தென்படட்டும் .


    **அவரது உணர்வுகளுக்கும் மரியாதை கொடுங்கள் .


    தொடரும் ......

    Jayanthy





  3. #3
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Fianceயுடன் என்ன பேசலாம் /பேசக்கூடாது? - What to Talk & what not to talk with yo


    ** உங்கள் திருமண வாழ்வில் நீங்கள் மேற்கொள்ளக் கூடிய வருங்காலத் திட்டங்களைப் பற்றி அவர் பேச விரும்பி ஆரம்பித்தால் , நீங்களும் உங்கள் ஆலோசனைகளை தெரிவிக்கவும் . இவை வெறும் திட்டமிடல் மட்டும்தான் , பிற்காலத்தில் சமயத்திற்கு தக்கவாறு இதில் மாற்றங்கள் இருக்கலாம் என்பதை இருவரும் நினைவில் கொள்ள வேண்டும் .


    ** இத்தகையப் பேச்சுக்களில் முதலாவதாக , நீங்கள் திருமணமான உடனே குழந்தை பெற விரும்புகிறீர்களா அல்லது குறிப்பிட்ட வருடங்களுக்குப் பிறகு பெற்றுக் கொள்ள விரும்புகிறீர்களா என்பதை தெளிவுபடுத்திக் கொள்ளவும் .


    **அடுத்ததாக ,நீங்கள் வேலைப் பார்த்துக் கொண்டிருப்பவராக இருக்கும் பட்சத்தில் , அவருக்கோ அல்லது அவரது பெற்றோருக்கோ , நீங்கள் வேலையைத் தொடருவதைப் பற்றி ஏதும் ஆட்சேபணை உள்ளதா என்பதைத் தெரிந்து கொள்ளவும் . ஒருவேளை நீங்கள் அவர் வேலைப் பார்க்கும் வேறு மாநிலம் அல்லது நாட்டிற்கு செல்ல நேரிட்டால் , அங்கும் நீங்கள் வேலையைத் தொடருவதைப் பற்றியும் தெளிவுப்படுத்திக் கொள்ளவும் .


    **ஒருவேளை அவர் உங்களை குழந்தை பெறும் வரை வேலை பார்க்குமாறும் அதன் பின் வேலையை விட்டுவிடும்படியும் சொன்னால் , அதைப் பற்றி அப்போது பார்த்துக் கொள்ளலாம் என்று சொல்லிவிடுங்கள் .


    **அவர் பெயரில் ஏற்கனவே ஒரு வீடு சொந்தமாக இருந்தாலும் , திருமணத்திற்குப் பிறகு , உங்கள் இருவரின் பெயரில் கூட்டாக வீடு வாங்கும் திட்டம் இருந்தால் அதைப் பற்றியும் பேசலாம் . திருமணத்திற்குப் பிறகான பணச் சேமிப்பு முறைகளைப் பற்றியும் பேசலாம் .


    **ஒருவேளை உங்கள் திருமணத்திற்குப் பிறகும் உங்கள் பெற்றோருக்கோ அல்லது உடன்பிறந்தோருக்கோ, உங்கள் பணஉதவி தேவைப்படும் பட்சத்தில் , அதைப் பற்றி இப்போதே பேசிவிடவும் . இச்சமயத்தில் , நீங்கள் எவ்வளவு காலம் இந்த உதவியை அவர்களுக்கு செய்ய நேரிடும் என்பதையும் அவருக்குத் தெளிவுபடுத்தி விடவும் . கூடவே அவரிடம் , இதற்கு அவர் இப்போது ஒத்துக் கொண்டதை பின்னர் ஒருபோதும் மாற்றக் கூடாது என்பதையும் அன்போடு தெரிவித்துக் கொள்ளவும் . ஏனெனில் பெரும்பாலான இந்தியக் கணவர்கள் , முதலில் ஒத்துக்கொண்டு , பின்னர் குழந்தை குட்டி என்றான பிறகு, இந்த முடிவிலிருந்து தன் மனைவியை பின்வாங்கச் சொல்வது மிகவும் சாதாரணம் .


    **உங்களுக்கு ஏதாவது தீராத வியாதி இருப்பின், அதனால் உங்கள் தாம்பத்திய வாழ்வு பாதிக்காது என்பதை மருத்துவரிடம் உறுதிப்படுத்திக் கொண்டிருந்தால் , அதைப் பற்றிய அனைத்து விவரங்களையும் இப்போதே அவரிடம் சொல்லிவிடுவது மிக்க நலம் . இதனால், பின்னர் இதையெல்லாம் நீங்கள் அவரிடமிருந்து மறைத்து விட்டதாக உங்கள் மீது விழும் குற்றச்சாட்டு எழாமல் இருக்கும் .


    **நீங்கள் உடுத்தும் உடைகளைப் பற்றிய அவரது அபிப்பிராயத்தை கேட்டுத் தெரிந்து கொள்ளவும் . இதோடு கூடவே, அவருடைய அம்மாவிற்கு, நீங்கள் எந்த மாதிரி உடை அணிந்தால் பிடிக்கும்/பிடிக்காது என்பதையும் இவரிடமே கேட்டுக் கொண்டால் , பின்னாளில் அந்த உடைகளை உங்கள் மாமியாரின் முன் அணிந்து அவரது முகச் சுளிப்பை பெறாமல் இருக்க உதவும் .


    **ஆண்களுக்கே உரிய ஆர்வத்தில், அவர் உங்களிடம் பாலியல் தொடர்பான பேச்சுக்களை பேச விரும்பினால் , தன்மையாக அவற்றைத் தவிர்த்துவிடவும் . அவரிடம் , இத்தகைய பேச்சுக்களை கல்யாணம் வரை மட்டுமாவது தவிர்த்து விடுமாறும் , ஆனால் இதே பேச்சுக்களை கல்யாணத்திற்குப் பிறகு நீங்கள் மிகவும் ரசிப்பீர்கள்/விரும்புவீர்கள் என்பதையும் தன்மையாக எடுத்துக் கூறிவிடவும் .


    **இதற்கு மற்றொரு காரணமாக , இத்தகையப் பேச்சுக்களும் நடவடிக்கைகளும் கல்யாணத்திற்குப் பிறகு இருக்கும் பட்சத்தில் , அதுவரை இருக்கக்கூடிய ஆர்வமும் எதிர்பார்ப்பும், இப்போதே அவற்றைப் பேசிவிடுவதால் நீர்த்துப் போய்விடக்கூடும். ஆதலால் அந்த ஆர்வம் + எதிர்பார்ப்பை இருவரும் அனுபவிக்கலாம் என்பதை தன்மையாக எடுத்துக் கூறவும் .


    Jayanthy





  4. #4
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Fianceயுடன் என்ன பேசலாம் /பேசக்கூடாது? - What to Talk & what not to talk with yo

    இவற்றைத் தவிர்க்கவும் : பேச /செய்யக் கூடாதவை


    **அவர் உங்களுடன் பேச ஆரம்பித்தபிறகு நீங்களும் தயங்காமல் பேச ஆரம்பித்து விடவும் . அதே சமயம் தொடர்ந்து பேசிக்கொண்டே இருந்து அவரை எரிச்சல் அடையவைத்துவிட வேண்டாம் .


    **அவருடைய பெற்றோர் , உடன்பிறந்தோர் , உறவினர் , மிக முக்கியமாக அவரது நண்பர்கள் இவர்கள் யாரைப்பற்றியும் கேலி கிண்டலாகவோ ,மரியாதை குறைவாகவோ கண்டிப்பாகப் பேசிவிட வேண்டாம் . இதனால் உங்கள் மீதான மதிப்பு பாதாளத்திற்குச் சென்று விடும் .


    **அவரது நிறத்தைப் பற்றியோ வேறு ஏதேனும் குறை –படிப்பு சம்பந்தமாகவோ , வேலை சம்பந்தமாகவோ , இவை எதில் குறை இருந்தாலும் , கண்டிப்பாக அதைப் பற்றி ஒரு குறையாகவோ அல்லது கிண்டலாகவோ சொல்லவே வேண்டாம் .


    **உங்கள் சம்பளத்தைப் பற்றியோ அவரது சம்பளத்தைப் பற்றியோ அல்லது திருமணத்துக்குப் பிறகான உங்கள் சேமிப்பு , வரவு செலவு திட்டங்கள், இவை எதையுமே, அவராக பேச ஆரம்பிப்பதற்கு முன்னால் நீங்களாக பேசத் துவங்க வேண்டாம் . அவருக்கு இதைப் பற்றி இப்போதே பேச விருப்பமில்லாததை நீங்கள் கண்டுகொண்டால் ,திருமணத்திற்குப் பிறகு இருவருமாகச் சேர்ந்து கலந்தாலோசித்து செவ்வனே மேற்கொள்ளலாம் என்று எடுத்துக் கூறுங்கள் . ஆனால் ஒருவேளை , உங்கள் பெற்றோர் அல்லது உடன்பிறந்தோருக்கு நீங்கள் பணஉதவி செய்ய வேண்டியிருந்தால், கண்டிப்பாக அதை மட்டும் இப்போதே எடுத்துச் சொல்லிவிடவும் .


    **உடல் ரீதியான நெருக்கத்தை அனுமதிக்கவேண்டாம் . ஒருவேளை உங்கள் இருவருக்கும் திருமணம் நடக்காமல் போய்விட்டால், இதையெல்லாம் போனில் ரெகார்ட் செய்து, உங்களுக்கு கெடுதல் உண்டாக்கவும் நேரிடலாம் . அதே போல பேசுவதிலும் கவனம் தேவை . அவற்றையும் ரெகார்ட் செய்துவிட வாய்ப்பு உண்டு.


    **ஒருபோதும் அவர்மீது ஆதிக்கம் செலுத்த முற்பட வேண்டாம் . இதை எந்த ஒரு ஆணும் விரும்பவே மாட்டார் .


    ** உங்களைப் பற்றியோ, உங்களது திறமைகள் , படிப்பு இவை எதைப் பற்றியும் தற்பெருமை அடித்துக் கொள்ளவே கூடாது . பேச்சோடு பேச்சாக சாதரணமாக மட்டுமே உங்களுக்குத் திறமைகள் ஏதேனும் இருந்தால் அவற்றைச் சொல்லலாம் .


    **எப்போதும் உங்களைப் பற்றியோ அல்லது உங்கள் குடும்பத்தினரைப் பற்றியோ மட்டுமே பேசிக்கொண்டு இருக்கவேண்டாம் . அவர்களைப் பற்றியும் பெருமை அடித்துக்கொள்ளக் கூடாது .


    **ஒருவேளை உங்களுக்கு ஏதேனும் நிறைவேறாத காதல் அனுபவங்கள் இருக்குமானால் அதைப் பற்றி அனாவசியமாக அவரிடம் கூறி , அவருக்கு மனக்கிலேசத்தை உண்டுபண்ணிவிட வேண்டாம் . அவரிடமும் அதைப் போன்ற அனுபவங்கள் அவருக்கு உண்டா எனவும் கேட்க வேண்டாம் . பழைய வாழ்க்கையில் நடந்தவற்றை முழுதும் மறந்துவிட்டு (இருவருமே) முற்றிலும் புதிதான ஒரு இனிய வாழ்வைத் தொடங்கி வெற்றி காணுங்கள் .


    **அனாவசியமான தேவையற்றப் பேச்சுக்களைத் தவிர்த்து விடுங்கள்.


    **ஒருவேளை அவர் வேலை நிமித்தமாக ஓய்வற்று இருந்தால், அதனால் உங்களிடம் பேசாமலோ பார்க்காமலோ இருக்கநேரிட்டால் , அவரைப் புரிந்துகொண்டு செயல்படுங்கள் . நீங்களாகவே ஏதாவது அவசர முடிவுகளை எடுத்துவிட்டு அனைவரையும் கஷ்டப்படுத்தி விடாதீர்கள் .


    **பெண்களுடனான (அலுவலகத்திலும் கூட )அவரது நட்பு பற்றியெல்லாம் கேட்டு அவரை தர்மசங்கடப் படுத்தி விடாதீர்கள் .


    Jayanthy





  5. #5
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Fianceயுடன் என்ன பேசலாம் /பேசக்கூடாது? - What to Talk & what not to talk with yo

    இப்போது ஆண்களுக்கான குறிப்புகளைப் பார்ப்போம் .


    பேச/செய்யக் கூடியவை :



    **நீங்கள்தான் உங்கள் இருவருக்குமான முதல் பேச்சைத் துவக்குபவராக இருக்கவேண்டும் .


    **போனில் பேசுவதாக இருந்தாலும் , நேரில் சந்திப்பதாக இருந்தாலும் எப்போதும் குறிப்பிட்ட ஒரு நேரத்தை கடைபிடிக்கவும் .


    **அப்பெண் உங்களைப் போன்ற ஒரு புது மனிதரிடம் நெருக்கமாகப் பேசத் தயக்கம் காட்டலாம் . அதனால், கொஞ்சம் கொஞ்சமாகப் பேசி அவரை சகஜமாக்குங்கள் .


    **உங்களை அவரது நெருங்கிய ஒரு தோழனாக நினைத்துப் பேசச் சொல்லுங்கள் .இதனால் நெருக்கமாகப் பேசத் தயக்கம் விலகும் .


    ** என்றாவது உங்களால் அவரிடம் பேசவோ சந்திக்கவோ முடியாவிட்டால் , அதனை முன்கூட்டியே அவருக்குத் தெரியப்படுத்தி விட்டால் (sms மூலமாக), அதனால் ஏற்படக்கூடிய ஏமாற்றம் தவிர்க்கப்படும் .


    **அவரது விருப்பு வெறுப்புகளை அறிந்து கொள்ளுங்கள் .


    **அவரது பிறந்தநாளைத் தெரிந்து கொள்ளுங்கள் .


    **இவற்றையெல்லாம் தெரிந்து கொள்வது மட்டுமல்லாமல் , திருமணத்திற்குப் பிறகும் வாழ்நாள் முழுவதும் இவற்றை மறக்காமல் செயல்படுவதும் மிகவும் முக்கியம் . இதில்தான் பல ஆண்களும் கோட்டை விட்டுவிட்டு மனைவிகளின் அதிருப்திக்கு ஆளாகின்றனர் .


    **அவரது பெற்றோர் , உடன்பிறந்தோர் பற்றிய அனைத்து விவரங்களையும் கேட்டறிந்து , அவற்றை நினைவிலும் வைத்துக் கொள்ளுங்கள் .


    **அவரது படிப்பு , வேலை , தோழமைகள் (இதில் ஆண்களும் அடக்கமா என்றெல்லாம் இப்போதே கேட்டு அவரை தர்மசங்கடமான நிலைமைக்கு ஆளாக்கக்கூடாது )இதைப் பற்றியெல்லாம் கேட்டு அறிந்து கொள்ளவும் . கூடவே அவரது பால்ய பருவ அனுபவங்களைப் பற்றியும் கூட கேட்கலாம் .(என்ன விளையாட்டு ,பழக்கவழக்கம் போன்றவை ).


    **அவர் உடை அணியும் விதத்தைப் பற்றியும், அதில் உங்களுக்கு விருப்பமானதையும், எது அவருக்கு மிகவும் பொருந்துகிறது என்று தோன்றுவதையும் மிகவும் தன்மையாக தோழமையுடன் எடுத்துச் சொல்லவும் . கூடவே, ஒருவேளை அவர் ஏதாவது ஆடையை உடல் தெரியும்படி அணிந்து கொள்பவராக இருந்தால் , திருமணத்திற்குப் பிறகு, அவற்றை உங்கள் பெற்றோர் முன் அணிவதை தவிர்க்கும்படியும் , அதேசமயம் அவற்றை நீங்கள் இருவரும் தனியாக இருக்கும்போது கண்டிப்பாக அணியலாம் என்றும் மிக மிகத் தன்மையாக அவரது மனம் நோகாதவாறு எடுத்துச் சொல்லவும் .


    தொடரும் .......

    Jayanthy





  6. #6
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Fianceயுடன் என்ன பேசலாம் /பேசக்கூடாது? - What to Talk & what not to talk with yo


    **உங்களுக்கு ஏதேனும் தீராத வியாதி இருந்தால் , அதனால் உங்கள் தாம்பத்திய வாழ்வு பாதிக்கப்படாமல் இருக்கும் என்ற உத்திரவாதம் இருக்குமானால் , அதைப் பற்றி இப்போதே தெரிவித்துவிடவும் .


    **திருமணத்திற்குப் பிறகான உங்கள் வருங்கால திட்டங்களைப் பற்றிப் பேசுவதில் அவருக்கு ஆட்சேபணை ஏதும் இல்லையே என்பதை முதலில் கேட்டுக் கொள்ளுங்கள் .


    **அவரின் அனுமதியைப் பெற்றபின், உங்கள் வருங்கால திட்டங்களைப் பற்றி கலந்தாலோசிக்கலாம் .


    **கடவுள் நம்பிக்கை , மத நம்பிக்கை , புலால் உணவுகளை உண்பது , உண்ணாமலிருப்பது இவற்றைப் பற்றியெல்லாம் இப்போதே பேசிவிடலாம் . இதனால் திருமணத்திற்குப் பிறகு இவ்விஷயங்களில் எளிதாக ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து வாழலாம் .ஒருவேளை இதில் மாற்றுக்கருத்து இருக்குமாயின் அவை திருமணத்திற்குப் பிறகு மட்டுமே தெரியவந்தால், இப்போது உள்ள தம்பதிகள் இவற்றை எளிதில் ஏற்றுக்கொள்ளாமல் சண்டையிடும் வாய்ப்புகள் அதிகம் .இதற்காகவெல்லாம் ஒருவரை ஒதுக்கிவிடக்கூடாது .

    **உங்களுக்கு மது அல்லது புகை பிடிக்கும் வழக்கங்கள் இருந்தால் அவற்றைப் பற்றி இப்போதே சொல்லிவிடலாம் .இதனால் பின்னர் அவருக்கு ஏற்படக்கூடிய அதிர்ச்சி தவிர்க்கப்படும் . ஒருவேளை நீங்கள் ஒரு டீடோடலர் – அதாவது எந்த ஒரு கெட்டப் பழக்கமும் அற்றவர் என்றாலும் அதையும் மறக்காமல் சொல்லிவிடவும் . இதனால் உங்கள் மீதான மதிப்பு பலமடங்கு அதிகரிக்கும் .


    **நேரில் சந்திக்க நேரும்போது , உடல் ரீதியான நெருக்கத்தை கண்டிப்பாக தவிர்த்து விடவும் .


    ** உங்கள் பேச்சுக்கள் வரம்பு மீறாமல் இருக்கட்டும் .


    **அவரிடமிருந்து எதிர்ப்பு இல்லாத பட்சத்தில் , அவரது கைகளை மட்டும் அவ்வப்போது பிடித்துக் கொண்டுப் பேசலாம் . இதுதான் உங்கள் இருவருக்குமான உடல் நெருக்கமாக இருக்கவேண்டும் . தற்காலத்தில் உள்ள டெக்னாலாஜி வளர்ச்சிகளை மனதில் கொண்டு அனைத்திலும் செயல்படவும் .


    **உங்கள் பேச்சுக்கள் அவரது பெற்றோர்களை மதிக்கும்படியாக இருக்கட்டும் .அவரது உணர்வுகளையும் மதித்தே பேசுங்கள் .


    Jayanthy





  7. #7
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Fianceயுடன் என்ன பேசலாம் /பேசக்கூடாது? - What to Talk & what not to talk with yo

    இவற்றை தவிர்க்கவும் : பேச/செய்யக்கூடாதவை :


    **உங்களுக்கு வேலைபளு அதிகமாக இருப்பினும் சிறிது நேரமாவது அவருடன் பேசாமல் இருக்கவேண்டாம் .


    **அவரது நிறத்தைப் பற்றியோ அல்லது வேறு ஏதேனும் குறைகள் அவரிடம் இருந்தாலோ , அவரது படிப்பு/வேலைத் தகுதிகள் குறைவாக இருந்தாலோ, இவை எதைப் பற்றியும் கேலி கிண்டல் செய்தோ குறைத்தோ பேசிவிடாதீர்கள் .


    **ஒருபோதும் அவருக்கு விருப்பமில்லாத விஷயங்களைப் பற்றிப் பேச வேண்டாம் .


    **பாலியல் தொடர்பான பேச்சுக்களை திருமணத்திற்கு முன்னர் கண்டிப்பாகத் தவிர்த்து விடுங்கள் . தனக்கு அப்பேச்சுக்கள் தர்மசங்கடத்தை உண்டு பண்ணுகிறது என்பதை சொல்லக் கூட அவர் தயங்கலாம் .


    **திருமணத்திற்கு முன்னர் உங்கள் இருவருக்கும் இடையில் உடல் நெருக்கத்தை கண்டிப்பாக தவிர்த்து விடவும் .


    **இப்போதே நெருக்கத்தை மேற்கொண்டால் , திருமணம் வரை இருக்கக்கூடிய ஆர்வமும் எதிர்ப்பார்ப்பும், திருமணத்திற்குப் பிறகு கிடைக்கக்கூடிய அபிரிமிதமான சந்தோஷமும் இவற்றால் கண்டிப்பாகக் குறைந்துவிடக்கூடும் .


    **அவரது பெற்றோர் , உடன்பிறந்தோர் ,உறவினர் யாரைப் பற்றியும் குறைவாகப் பேசாதீர்கள் .


    **சமுதாயத்தில் அவரது நிலையைப் பற்றி ஒரு போதும் குறையாகக் கூறாதீர்கள் .


    **உங்களைப் பற்றியோ உங்களிடம் திறமைகள் இருந்தால் அதைப்பற்றியோ ஒரு போதும் தர்பெருமையாகக் கூறிக் கொள்ளாதீர்கள் . ஒருவேளை உங்களிடம் நிறைய திறமைகள் இருக்குமானால் அவற்றைப் பற்றி பேச்சோடு பேச்சாக மட்டுமே குறிப்பிடவும் .


    **அதே போல உங்கள் பெற்றோர் உடன்பிறந்தோர் பற்றியும் பெருமை அடித்துக்கொள்ள வேண்டாம் . மிக முக்கியமாக உங்கள் தாயைப் பற்றி அதீதமாகப் புகழ்ந்து பேசி ,அவர்தான் உங்களுக்கு எல்லாம் என்பது போலவும் பேச வேண்டாம் . இதனால், உங்கள் துணை, திருமணத்திற்குப் பிறகு தன் மாமியாரை எப்படி அடக்கியாளலாம் என இப்போதே யோசிக்கத் தொடங்கி விடலாம் .


    **தேவையற்ற அனாவசியப் பேச்சுக்களைத் தவிர்த்து விடுங்கள் .


    **இதற்கு முன்னர் உங்களுக்கு ஏதேனும் காதல் அனுபவங்கள் , அதில் ஏற்பட்டத் தோல்விகள் ஏதேனும் இருந்தால் , அவற்றைப் பற்றிப் பேசி ,அவரை தர்மசங்கடத்திற்கு உள்ளாக்க வேண்டாம் . அதே போல, இவ்விஷயத்தில் அவருடைய அனுபவங்களைப் பற்றியும் கேட்கவே வேண்டாம் . பழையனவற்றை முழுவதுமாக மறந்து ஒரு புதிய வாழ்வினை இருவருமாகச் சேர்ந்து தொடங்கி அருமையாக வாழுங்கள் .


    **அவர்மீது அதிகமாக ஆதிக்கம் செலுத்த வேண்டாம் . மெல்லிய/மென்மையான ஆதிக்கமும் , தனக்கே உரியவள் என்ற மென்மையான எண்ணமும் (இது அதிகமாக வெளிப்படக்கூடாது )மட்டுமே பெண்களால் விரும்பப்படும்.






    Last edited by jv_66; 14th Sep 2015 at 12:39 PM.
    Jayanthy





  8. #8
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Fianceயுடன் என்ன பேசலாம் /பேசக்கூடாது? - What to Talk & what not to talk with yo

    மேலே குறிப்பிட்ட அனைத்து ஆலோசனைகளையும் கடைபிடிப்பதின் மூலம் திருமணத்திற்கு முன்னரே நீங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் நன்கு புரிந்துகொண்டு மிக இனிமையான,இறுக்கமான,வெற்றிகரமான ஒரு திருமண பந்தத்தை வாழ்நாள் முழுவதும் தொடரப் போகிறீர்கள் என்பது திண்ணம் .






    Last edited by jv_66; 14th Sep 2015 at 12:40 PM.
    Jayanthy





  9. #9
    jayakalaiselvi's Avatar
    jayakalaiselvi is offline Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Aug 2014
    Location
    India
    Posts
    8,384

    Re: Fianceயுடன் என்ன பேசலாம் /பேசக்கூடாது? - What to Talk & what not to talk with yo

    Title paarthvudan entry koduthutten aunty......

    ippo idhudhan yenakku thevai......

    nalla velaiyaa yaa innum vai adikkala......irundhalum yen settai yellaam thriyumey yenna panradhu aunty.......

    but super tips aunty.......nallaa Analise panni koduthurukkeenga.....

    jv_66 likes this.
    காதலை பற்றி அக்கறை பட்டதே இல்லை
    உன் அக்கறை காதலை மட்டுமே சொல்கிறது......

  10. #10
    sumathisrini's Avatar
    sumathisrini is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Sumathi
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Hosur
    Posts
    33,585

    Re: Fianceயுடன் என்ன பேசலாம் /பேசக்கூடாது? - What to Talk & what not to talk with yo

    மிகவும் உபயோகமான வழிகாட்டல் ஜெயந்தி, மிக்க நன்றி.

    jv_66 likes this.

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter