காதலிக்கும் பெண்கள் கீழ்க்கண்ட குறைகளை ஆண்களிடம் காணும்பொழுது, இதையெல்லாம் திருமணத்திற்குப் பிறகு கண்டிப்பாக திருத்திவிடலாம் என்று முட்டாள்தனமாக எண்ணிக் கொண்டிருக்காமல் காதலில் இருந்து விலகிவிடலாம்.


1. பணத்திற்காக அல்லது சொத்திற்காகத்தான் காதலிக்கிறான் என்பது உறுதியாக தெரியவந்தால்...


2. பெண் வேலை பார்த்து வரும் பணம் குடும்பத்திற்குப் போதும், வேலை பார்க்காமல் ஜாலியாக சுற்ற வேண்டும் என்ற மனநிலையில் ஆண் இருப்பதை அறிந்துகொண்டால்...


3. தங்கை அல்லது தோழிகள் எவரிடமாவது காதல் வசனங்களை பேசி கவிழ்க்க முயற்சி செய்வது தெரிந்தால்...


4. கவர்ச்சியாக உடை அணிந்துகொள், நான் சொல்லும் நபர்களிடம் நீ அன்பாகப் பேசினால், நான் எளிதாக காரியம் சாதித்துக்கொள்வேன் என்பதுபோல் பேசினால்...


5. காதலிக்கத் தொடங்கிய பின்னரும் வேறு ஏதாவது ஒரு பெண்ணிடம் அல்லது விபச்சாரப் பெண்களிடம் உடலியல் ரீதியான உறவு இருப்பதாகத் தெரியவந்தால்...


6. மிக அதிகமான ஆசை உள்ளவனாக, தேவையில்லாத தொந்தரவு கொடுப்பவனாக, நிலைமையை புரிந்து கொள்ளாதவனாக இருந்தால்...


7. முறிந்துபோய்விட்டது என சொன்ன முன்னாள் காதலியுடன் இன்னமும் சந்திப்பு, தொடர்பு இருப்பதாகத் தெரிந்தால்...


8. வேறு யாராவது பெண் காதலைச் சொன்னபோது, தற்போதைய காதல் பற்றி எதுவும் சொல்லாமல் டபாய்ப்பதாகத் தெரிந்தால்...


9. செக்ஸில் விபரீத ஆசைகள் கொண்டவர் என்பது தெரிந்தால், அதாவது இரண்டு பெண்கள், மூன்று பெண்கள், குரூப் செக்ஸ் போன்றவற்றில் அதிக ஆர்வம் காட்டுபவராக இருந்தால்...


10. தவறான நடவடிக்கையினால் செக்ஸ் வியாதி வந்தவர் என தெரியவந்தால்...


11. அவ்வப்போது மனநிலை பாதிக்கப்படுபவர் என்பது தெரிந்தால்...


12. நடக்காத விஷயத்தை வாழ்வின் குறிக்கோளாக கொண்டிருப்பவர் என்றால், அதாவது ஒரு நாளாவது ஐஸ்வர்யா ராயுடன் வாழ்ந்துவிட வேண்டும் என விரும்பினால்...


13. செக்ஸில் ஆர்வம் இல்லாதவர் அல்லது ஆண்மைக் குறைபாடுடன், உறவுக்கு லாயக்கில்லாதவர் எனத் தெரியவந்தால்...


14. அளவுக்கு அதிகமாக சந்தேகப்படும் குணம் கொண்டவன் எனத் தெரிந்தால்...


15. பெண்கள் அடிமையாக வீட்டோடு அடைந்து கிடக்க வேண்டும், முக்கியமான முடிவுகள் எல்லாம் ஆண்தான் எடுக்க வேண்டும் எனும் பெண் அடிமை வியாதியாக இருக்கும் பட்சத்தில்...


16. பிறரது துன்பத்தில் இன்பம் காணும் sadist மனப்பான்மையில் இருந்தால்...

Similar Threads: