சில டிப்ஸ்:

முதல் விஷயம்... நீங்க காதலிக்கிற நபர் அவங்களைப் பற்றின முழு தகவல்களையும் உங்ககிட்ட சொல்றாங்களான்னு உறுதி படுத்திக்கணும்.

அவங்க படிக்கிற அல்லது வேலை பார்க்கிற இடத்தை பற்றி, அவங்க வீட்டு அட்ரெஸ் இதெல்லாம் மறைக்கிறவங்க நிச்சயமா ஏமாத்துவாங்க.

திட்டறது, அடிக்கிறது, அளவுக்கு அதிகமா கோபப்படறது இதெல்லாம் ஒருவகையில் தன்னம்பிக்கை இன்மையோட வெளிப்பாடுகள் தான். சோ...இது போல நபர்களோட சந்தோசமான வாழ்க்கையை வாழ முடியாது.

செக்ஸுவல் அப்யூஸ் பண்ண நினைக்கிறவங்களும் தவறான நோக்கத்தோட தான் இருப்பாங்க.

'நீ இல்லாம நான் வாழவே முடியாது. நீ தான் என் உயிர்னு' எமோசனல் பிளாக் மெயில் பன்றவங்ககிட்ட ரொம்பவே ஜாக்கிரதையா இருங்க.

நீங்க லவ் பன்னவங்களை உங்க பிரெண்ட்ஸ் கிட்ட அறிமுகப்படுத்துங்க. பெரும்பாலான சமயங்களில் காதல் உங்க கண்ணை மறைச்சிடும். அப்போ, உங்களோட இருக்கும் பிரெண்ட்ஸ், உங்களுக்கு நல்லது கேட்டதை புரிய வைக்க சான்ஸ் இருக்கு.

அதுபோல, நீங்க காதலிக்கிற நபரை பிரென்ட் என்ற வகையிலாவது உங்க வீட்டாருக்கு அறிமுகப்படுத்துங்க.

பொதுவா, தான் காதலிக்கிறவன் மோசமானவன்னு தெரிஞ்சும் அவனை விட்டு விலகரதுக்கு பெண்கள் ரொம்பவே யோசிப்பாங்க. இது ரொம்ப தப்பான அணுகுமுறை.

இதை ஒரு படிப்பினையா எடுத்துக்கிட்டு அந்த விசயத்திலிருந்து வெளியே வர்றது தான் வாழ்க்கைக்கு சரிபட்டு வரும். இல்லேனா மூழ்கிடுவீங்க!

-ப்ரீத்தா ராமசுப்ரமணியன்.
மனவியல் நிபுணர்


Similar Threads: