ஈகோ

பெரும்பாலான குடும்பங்களில் கணவன், மனைவிக்குள் இருக்கும் காதலை அழிப்பது 'நீயா நானா' என்ற ஈகோ தான்.

பிம்பம் உடைவது

காதலிக்கும்போது ஒருவர் தன்னைப் பற்றி தன குடும்பத்தை பற்றி சொல்லி வைத்த விஷயங்கள்(பொய்கள்), திருமணம் ஆனவுடன் உண்மை நிலவரம் தெரியும்போது, 'ச்சே... நீ இவ்வளவு தானா?' என்கிற முதல் கசப்பை விதைத்து விடுகிறது.

பணம்

காதலிக்கும்போது அந்த வயதுக்கே உரிய மேம்போக்குத்தனம்தான் அதிகமாக இருக்கும். இதுவே திருமணமாகி உறவுகள் சூழ வாழ ஆரம்பிக்கும்போது பணத்துக்கு உள்ள முக்கியத்துவம் தன்னால் தெரியும்.

அப்போது கணவனுக்கும் மனைவிக்கும் தங்கள் குடும்பத்துக்கு தான் எல்லா பணத்தையும் செலவழிக்க வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு ஏற்படுகிறது. தங்களை படிக்க வைத்து, ஆளாக்கிய அவரவர் பெற்றோருக்குப் பண உதவி செய்வது பொதுவாக இருவருக்குமே பிடிப்பதில்லை. அதனால் பிரச்சனை ஆரம்பிக்கிறது.

உறவுகள்

இந்த தலைமுறையில் உள்ள பெரும்பாலான பெற்றோர் தங்களுடைய பிள்ளைகளின் காதலை ஏற்றுக்கொள்கிறார்கள். ஆனால் முழு மனதாக அல்ல....

பிள்ளைகளின் ஆசை வார்த்தைகளுக்காக காதலை ஏற்றுக்கொள்ளும் அவர்களின் உள்மனதில் இவன்/இவளின் முடிவு தவறாகத்தான் இருக்க வேண்டும் என்கிற ஆதங்கம் தான் இருக்கிறது. இந்த மனப்போக்கு இருப்பதால் தான் நிறைய காதல் திருமணங்கள் பெற்றோரால் முடித்து வைக்கப்படுகின்றன.

ஏமாற்றுவது

'பொய் சொல்லத்தெரிவதுதான் காதலிப்பதற்கு முதல் தகுதி' என்று மேற்கத்திய பழமொழி ஒன்று உண்டு. காதலை ஏற்க வேண்டும் என்பதற்காக காதலியிடம் பொய் சொல்லுவது, தங்கள் காதலை மறைக்க பெற்றோரிடம் பொய் சொல்லுவது என காதலர்கள் பொய் சொல்வதற்கான தேவைகள் நிறைய.

இவை பாசிடிவான விசயங்களுக்காக இருந்தால் பிரச்சனைக்கு வாய்ப்பே இல்லை. ஆனால் இதுவே ஒரு கேரக்டராகிவிட்டால் வாழ்க்கையே சூனியமாகிவிடும்.

மனைவிக்கு தெரியாமல் தனி மொபைலில் தன்னுடைய கேர்ள் பிரெண்டை மெயின்டைன் செய்யும் கணவர்களும், கணவன் கண்டுபிடித்துவிடாதபடி மது அருந்தவும், புகை பிடிக்கவும் செய்யும் மனைவிகள் இப்போது அதிகமாகி விட்டார்கள் என்கிறது சமீபத்திய புள்ளிவிபரம்.

(சினேகிதி இதழில் இருந்து)

Similar Threads: