Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree4537Likes

Special thread for Arranged Marriage Couples


Discussions on "Special thread for Arranged Marriage Couples" in "My Better half" forum.


  1. #91
    Husaina is offline Newbie
    Gender
    Female
    Join Date
    Sep 2011
    Location
    Chennai
    Posts
    21

    Re: Special thread for Arranged Marriage Couples

    Jan 20. Early morning. Naan eppavume seekiram elunthuduven. He called and said eve kilambi morn hyd varen. Nama register marriage pannikalam. Enakku siripu vanthuduchu. Ennada achu? Edhuvum kanavu kinavu kandiya? Nu ore siripu. Heroku kovam vanthuduchi. Manushan evvolo tensionla night pooram thoongama eppada vidiyumnu call panna, unaku siripa irukutha? Yosikave maatiya nee nu kathal.
    Namma enna love a pannunom, veetla thanada arrange pannanga. Innum 4 months poruka mudiyathanu ketta, 4 masam pona enaku nee kidaikamatta. Veetla periya problem ayiduchu. Naan etho solla, appa misunderstandingla malai yeritaru. Ellathaiyum nippatu, antha ponne venamnu kathitaru. Unga appava poi parthu convince panna sollun ranga.


    Sponsored Links

  2. #92
    Husaina is offline Newbie
    Gender
    Female
    Join Date
    Sep 2011
    Location
    Chennai
    Posts
    21

    Re: Special thread for Arranged Marriage Couples

    Enakku thalaiyum puriyala, vaalum puriyala. Veetla cancel panna lets be friendsnu sollitu vachutein. Thirumba luch hourla call pannanga. Naan unnai nerla pathae aganum. Atleast oru sorrya vathu ketkanum. Plz othukonraru. Naan appata pesitu piragu solluren sollitaen. I called my father and asked whats happening. He said coolly nothing to worry, oru chinna misunderstanding than, i'll manage. Un life, un ishtam than da mukiyam, paiyana romba pudichiruntha we'll go ahead, illena amaithiya vittudalamnu sollitanga. Romba yosichen. Oru valiya enakkum bulb erunjuthu. Call panni, namma kalayam pannikalam, evvlo seekirama vara mudiyuma vaa, feb 9 chennaiku return tkt potrukken, kalyanam pannitu sernthe chennai poidalamnu permission koduthachu. Pinna ithaiye trump carda use panni, appa merati oru valiya FIL othukittaru. Next 4 months ore kadalai than...marriagela nadantha kootha next updatela parkalam


  3. #93
    priyachandran's Avatar
    priyachandran is offline Guru's of Penmai
    Real Name
    c jeyapriyadevi
    Gender
    Female
    Join Date
    Jan 2013
    Location
    ramanathapuram
    Posts
    5,730

    Re: Special thread for Arranged Marriage Couples

    + 1 வகுப்பு வரை ஜாலியாக சென்றுகொண்டிருந்தது . எல்லா cultural prograaame என் பங்களிப்பு பெரும்பாலும் இருக்கும் . பரிசு வாங்கிறோமோ இல்லையோ , பங்கு பெறனும் என்பது என் விருப்பம் . எங்கள் பள்ளியில் +2 முடியும் தருவாயில் அவர்களுக்கு sentoff கொடுப்போம் .
    அன்று +2 மாணவிகள் சேலை , +1 மாணவிகள் தாவணி போடுவது வழக்கம் . முதலும் கடைசியுமாக அன்றே தாவணி போட்டேன் .
    மாணவிகள் அனைவரும் இருந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை . டான்ஸ் , பாட்டு என்று களைகட்டியது .

    அன்றே அம்மாச்சி ஊருக்கு செல்லும் நாளும் வந்தது .
    சனி , ஞாயிறு வந்தமையால் அம்மாச்சிதாத்தா (எங்கள் தாத்தாவை அப்படித்தானே கூப்பிடுவோம்...இப்போது மாமனார் பதவி அடைஞ்சும் எனக்கு தாத்தா தான் ) எங்களை ஊருக்கு கூட்டிட்டு போனார் . நானும் அதே தாவணி, பாவாடையுடன் ஊரில் இருக்கும் தோழிகளிடம் காமிக்கும் குஷியில் சென்றேன் .

    அம்மாச்சி.. என்னை தாவணியில் பார்த்தவுடன் கண்கலங்கி திஷ்டி கழித்து விட்டார் . (அப்பவே அது மனசுல இருக்கிறது எனக்கு தெரியாம போச்சுங்க...தெரிஞ்சாப்ல ...கிழிச்ச மாறித்தான்.. ஒன்னும் செய்த்திர்க்கமாட்டேன்... அந்த பிரியா ரெம்ப சமத்துங்கோ.....நம்பமாட்டிங்களா ...அட போங்கப்பா ... )

    அப்புறம் என்னங்க .....பரீட்சை நடந்து முடிந்தது . வருடம் வருடம் வரும் தாயமங்கலம் (அம்மாச்சி ஊர் ) திருவிழா வந்தது .
    அதே பொங்கல் .....அதே சொந்தம் ....அதே கல்யாண பேச்சு ....
    அதே பிடிகுடுக்காத மாமாவின் பேச்சு உறவினர்களின் மத்தியில் ....
    ஆனால் , அன்று தான் எனக்கு தெரிந்தது உண்மை ....
    அங்கு நடக்கும் பேச்சின் முக்கிய ஆளே நான்தான் என்று ....
    எனக்கு ஒன்றும் ஓடவில்லை ....புரிந்ததால் தானே ....இதை மனது உள்வாங்க பலமணிநேரம் பிடித்தது .
    இந்த தடவை யாரும் கல்யாணத்தை பற்றி என்னிடம் சொல்லவில்லை ....தானாக காதில் விழுந்தது .

    நான் எப்போதும் மாதிரி ஓடி பிடிச்சு விளையாண்டுக்கிட்டு இருந்தோம் .
    இவர்கள் அனைவரும் கொல்லைப்புறத்தில் அமர்ந்திருந்தனர் .
    திடீரென்று பேச்சு சத்தமும் அதனூடே அழுகையும் என் காதில் விழ ...
    சற்று நின்று கவனித்தால்
    அம்மாச்சி ஒரு பக்கம் அழ..........அம்மா மறுபக்கம் அழ
    " ஏன்டா , தம்பி இப்படி பிடிகுடுக்காம பேசுற .....
    உன்னைய உங்க மாமா (எங்க அப்பா ) எப்படிலாம் பார்த்துகிட்டார் .உன்னைய படிக்கச் வச்சு பெருசா வளர்ந்தவுடனே ...எங்கள மறந்துட்டியா ...
    அவர் இருந்த நான் உண்ட வந்து நிக்கமாடேனே .....உனக்கு நானும் , அவருமே நல்ல பொன்னா பார்த்து கல்யாணம் செய்திடுவோமே
    வீடு கட்டி ஒரு வருஷம் திரும்பும் முன்னே நிம்மதியா அவர் போய் சேர்ந்த்துட்டாரே....
    25 வயசுல விதவை ஆகி நான் பட்ட கஷ்டம் போதும்டா ....
    கல்யாணம் வேண்டாம் ...நான் எங்க அக்கா குடும்பத்த பார்த்துபேனு சொல்றியே .....
    உனக்கு வெளி இடத்தில பொண்ணு பார்த்தா ...நாங்க இது மாறி வந்து போக முடியுமா ...இல்ல வரவதான் அக்கா பிள்ளைங்களுக்கு செய்யுங்க உண்ட சொல்வாளா?
    சித்தி சித்தப்பா என்று மாறி மாறி பேச ....நான் அந்த இடத்தை விட்டு அகன்று வந்து விட்டேன் .
    எனக்கு அப்பொழுது தோணியது ...அவ்வொளதான் நம்ம படிப்பு போச்சு .... நாம நினைச்ச மாறி படிக்க முடியாது என்று என் உள்ளத்தில் ஆணியடித்த மாதரி இறங்கியது .
    பின் என்ன பேசினார்கள் என்று எனக்கு தெரியாது ....

    சொந்தகாரர்கள் சேர்ந்து பேசினாலே காதுக்கு எட்டாத தொலைவுக்கு ஓடினேன் .
    + 2 வகுப்பு ஆரம்பம் ஆகியது . எப்பொழுது என் தோழிகளை பாப்போம் என்று ஆவல் . முதலில் + 2 படிப்போம என்ற ஐயம் மனதில் .
    நான் நினைத்தது போல் அல்லாமல் ...என் மாமா என்ன சொன்னாரோ தெரியவில்லை ..அன்று அதை ஆராய விருப்பமில்லை .
    எப்பொழுதும் போல் பள்ளிக்கு கிளம்பினேன் எந்த தடையுமின்றி .

    பள்ளியின் முதல் நாள் ...
    என் நெருங்கிய தோழி மகுஜபீனிடம் நடந்ததை சொன்னேன் .
    ஏதோ அவள் தான் எனக்கு தீர்வு சொல்வது போல் கலங்கினேன்.
    அவளும் ஆறுதலாக ...10 ல பேச்சு நடந்திற்குனு உனக்கு, இப்பதான தெரியுது ...அப்போ தள்ளி போன மாதரி இப்பெயும் இந்த பேச்சு தள்ளி போகலாம் ..உன் கவனம், படிப்பில் செலுத்த பாரு என்றாள்.
    நானும் படிப்பில் கவனம் செலுத்த முயன்றேன் முடிந்தால் தானே ....
    வகுப்பில் வெளியே வேடிக்கை பார்ப்பது .....இன்னைக்கு காலையில யார் டிபன் கொண்டு வந்திருப்பா ...அத 1ச்ட் இடைவெளி பிரிவில் மொக்கலாம் (வாடிக்கையாக நானும் என் தோழிகளும் செய்வது ....மதியம் இருக்கிறத பிரிச்சு சாப்பிடிற வழக்கம் ) கண்ணு மட்டும் missa பார்த்த மாதரி இருக்கும் .....கவனித்தால்தானே ....
    ஆனால் chemistry மிஸ் வந்தா மட்டும் நல்ல பிள்ளையா புகுந்த்துடுவேன் பாடத்துகுள்ள (நல்லா சொல்லி கொடுப்பாங்க ...என் fav டீச்சர் )
    இப்படியே நாட்கள் செல்ல .....அரை பரீட்சை வந்தது ....அனைத்திலும் நான் ஜஸ்ட் பாஸ் ஒன்லி 75 டு 85 எடுப்பேன் அவுட் ஆப் 200 .....(பார்த்துகோங்க )....

    10 ல் ஸ்கூல் 2ன் வாங்கின பிள்ளை இப்படி இருக்கேன்னு எனக்கு கவுன்செல்லிங் வச்சாங்க ....பிரின்சிபால்(மதர்) கூப்பிட்டு அனுப்பினார்.
    எனக்கு பயமுலாம் ஒன்னும் இல்லைங்க போய் நின்றேன் ...நிறைய அட்வைஸ் பண்ணினாங்க ..அப்புறம் ஏன் இப்படி இருக்கனு கேட்டாங்க ....எனக்கு கல்யாணம் இந்த லீவேல வச்சிருவாங்க அப்புறம் படிச்சு என்ன செய்ய போறேன்னு சொன்னேன் .

    வீட்டிற்கு தகவல் பறந்தது .....
    என் அம்மா ....என்னை திட்டி தீர்க்க ...அதுவரை ரெம்ப வாஇனீட்டாத நான் ...நான் இப்படித்தான் இருப்பேன் .என்ன செய்ய போரம்மா என்று சொல்லி ஒரே அழுகாச்சி ஆகிட்டு .
    அன்றுதான் எங்க அப்பா இல்லாத துயரத்தை அதிகம் உணர்ந்து தேடிய நாள் ....
    அவரோடு செலவழித்த நாட்கள் நினைவில்லை ....
    கைபிடித்து விளையாடிய நாட்கள் நிழலாக ...
    அவரோடு சண்டையிட்டு எனது ஆறு வயதில் ...வீட்டிற்கு வெளியே கை முட்டுகொடுத்து ....நான் உள்ளே வரமாட்டேன் என்று முரண்டு பிடித்தது மட்டும் இன்றும் என் நினைவடுக்கில் .

    கடைசியாக ...அவரை பார்த்தது எனது 6 வயதில் தான் , மேட்டூர் அனல்மின் நிலையத்தில் fire accidentl சிக்கி உயிருக்கு போராடி கொண்டிற்கும் நிலைமையில் வாழை இலையில் கிழிந்த நாராக கருகிய நிலையில் என் அப்பா .....அவருக்கு இளைய மகள் என்றால் மிக பிரியம் ...
    என் அண்ணாவையும், அவளையும் கூப்பிடதற்க்கு பயந்து கொண்டு கிட்டே போக மாட்டேன் என்று சொல்லி விட்டார்கள். என்னை பார்த்து கை அசைக்க....எங்கிருந்து எனக்கு தைரியம் வந்ததோ.... நான் அருகே சென்றேன் .
    அம்மாவிற்கு தொந்தரவு கொடுக்காமல் ....அண்ணா தங்கைகளுடன் ஒற்றுமையாக இருக்க வேண்டுமென்றுதான் .
    இதே நினைவுடன் மாடியில் உள்ள அறையில் நான் அழுது கொண்டிர்க்க ...அருகில் அழகிய சுவர் கடிகாரம் (சின்ன ரிப்பேர் )
    கண்ணில் பட அதை எடுத்து ஒன்று ஒன்றாக பிரிக்க ஆரம்பித்தேன் ...பெண்டுளும் தனியாக ,கடிகார முள் தனியாக ...எதற்கு அன்று அவளோ வேகம் என்று எனக்கு தெரியவில்லை .....

    இந்த தகவல்களும் , இதுவும் என் மாமா கண்ணில் பட .....
    என்னை தனியாக சந்தித்து பேசினார் .
    அவருடைய ஒவ்வொரு சொல்லும் என்னை உருவேற்றியது .
    கல்யாணத்தை பற்றி அன்று தான் என்னிடம் பேசினார் . கண்டிப்பாக படிக்க வைப்பதாக கூறினார் .என் முடிவு என்னவென்று கேட்டார் . எனக்கு அப்ப படிக்க வைக்கிறாங்க சொன்னது மட்டும் காதில் ...
    மாமாவிடமும் தயக்கமில்லாமல் பேசியதில்லை ....சரி என்று தலை ஆட்டினேன்.

    எனக்கு அவரே டீச்சராக மாறி ,விட்ட பாடங்களை physics முதல் அனைத்திலும் தேர்வு வைத்து நல்லா மதிப்பெண் எடுக்க வைத்து விட்டார் . revision 1 ல் பாதி ...revision 2 ல் பாதி revision 3 முழுதும் ஓரளவுக்கு முடித்து நல்ல மார்க் வாங்குவேன் என்ற நம்பிக்கை என் மனதில் . கடைசி மூன்று மாதங்கள் தான் நான் படித்த தருணங்கள் .....
    பரீட்சை முடிந்து 10 நாளில் நிச்சயதார்த்தம் .(முழிச்சு படிச்சா பிள்ளைய தூங்க விடலைங்க ) கல்யாண பீதியை கிளப்பி விட்டுடாங்க. அடுத்த பதினைந்து நாளில் கல்யாணம் . .
    அடுத்து நுழைவு தேர்வு எழுத காரைக்குடிக்கு என் மாமாவுடன் பயணம் .

    Last edited by priyachandran; 27th Jul 2013 at 04:57 PM.

  4. #94
    karun keerthika's Avatar
    karun keerthika is offline Commander's of Penmai
    Real Name
    lavanya lakshmi
    Gender
    Female
    Join Date
    Aug 2012
    Location
    chennai
    Posts
    1,300

    Re: Special thread for Arranged Marriage Couples

    ஹாய் பிரிண்ட்ஸ்
    உங்கள்ள சில பேர் கேட்ட doubt clear பண்ண வந்துருக்கேன்


    1) ln - லக்ஷ்மி நாராயணன்
    2) 16 வயதில் தான் எங்க கல்யாணம் நடந்தது.... என்னோட 14 வது வயதில் இருந்தே கல்யாணம் ஏற்பாடு நடந்து கிட்டு தான் இருந்தது ........
    ஏன்னா அப்பாக்கு பயம் அவர் இருக்கும் போதே நடத்திடனும் னு அதான் இந்த ஏற்பாடு
    3) LN படிச்சுட்டு(DCE)இருந்தாருன்னு சொன்னேன்ல உடனே கல்யாணம் னு சொன்னதும் அடுத்த பிரச்சினை வேலை இல்லை கல்யாணத்துக்கு முன்னாடியே என்னோட நகைகளை வைத்து leather chemical ஆரம்பிச்சாங்க
    4)அண்ணனுக்கு இந்த கல்யாணத்தில் விருப்பம் இல்லை ஏன்னா....
    நாங்க upper middle class அவங்க.............
    அதான்.
    5) எனக்கு பிடிக்கல ஆனா உனக்காக செய்றேன் அப்படின்னு எனக்கு கல்யாணம் செய்து வைச்சாங்க நகை மட்டும் தான் அப்பா போட்டாங்க
    மற்றது எல்லாம் அண்ணன் தான்
    6)அம்மா கல்யாணத்துக்கு வரல்ல
    7)என் கல்யாணம் நடந்தது 9/௦6/91
    5/௦7/91 அப்பா இறந்துவிட்டார்
    நான் பிறந்தது 3௦/௦7/75
    8)எனக்கு ஒரு மகன் பெயர் விஷ்வகுரு mca 1 year
    ஒரு மகள் பெயர் கருண் கீர்த்திகா BA ttm 1 year
    9)நான் இப்போது என் அம்மா வீட்டுக்கு போறேன் ஏன்னா...
    அவங்கள பார்த்துக்க யாரும் இல்ல நான் மட்டும்தான் பார்த்துக்குறேன்
    அவங்களால் இப்போது நடக்கமுடியாது
    உங்களோட எல்லா கேள்விக்கும் பதில் சொல்லிட்டேன்னு நினைக்குறேன்
    ஒரு விஷயம் சொல்லமறந்துட்டேன் அண்ணாவுடன் நான் பேசி 5 வருடம் ஆகிறது ஏன்னு கேக்குறிங்களா பணம் பணம் மட்டும் தான் அன்பு பாசம் இதையெல்லாம் குப்பைத்தொட்டியில் தூக்கிப் போடுற தகுதி அதற்க்கு மட்டும் தானே இருக்கு
    இப்பவும் வாழ்க்கையில் போராடிட்டு தான் இருக்கோம் ஆனாலும் சந்தோஷத்துக்கு குறைவில்லை பசங்களுக்கு நாங்க எங்களுக்கு பசங்க னு இருகிறோம்

    நெஞ்சு பொறுக்குதிலையே இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால் அஞ்சி அஞ்சிச் சாவார் இவர் அஞ்சாத பொருளில்லை அவனியிலே

  5. #95
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Special thread for Arranged Marriage Couples

    Friends,

    Please drop your valuable COMMENTS, in the below link, for the stories which you read in this thread.



    COMMENTS Thread for Arranged marriage couple's stories




    Jayanthy





  6. #96
    priyachandran's Avatar
    priyachandran is offline Guru's of Penmai
    Real Name
    c jeyapriyadevi
    Gender
    Female
    Join Date
    Jan 2013
    Location
    ramanathapuram
    Posts
    5,730

    Re: Special thread for Arranged Marriage Couples

    நிச்சயதார்த்தம் .....
    ஒவ்வொரு பெண்ணின் வாழ்விலும் மறக்கமுடியாத நிகழ்ச்சி . தேதி ஞாபகம் இல்லை ...எனக்கு பெருசா படாத நாள தெரியவில்லை .....
    அதிக சந்தோசமுமில்லை வருத்தமுமில்லை .....எனக்கு மட்டுமல்ல இருவருக்கும் .
    தெரிந்த பொண்ணு மாப்பிள்ளைன்னு நேரா நிச்சயதார்த்தம் . காபி சொஜ்ஜி பஜ்ஜி லம் ஒன்னு கிடையாதுங்க ....பொண்ணு பிடிசிற்கா கேட்கிற பேச்சுக்கு இங்கு இடம் இல்லை .....அவரிடமே கேட்கல பின்ன நம்மட்ட கேட்பாங்களா ....( ஆனா இப்ப தினம் தினம் காபி கொடுக்கும்போது கேட்கிறேன் பொண்ணு பிடிச்சிர்காணு ...மனுஷன் சிரிப்பாரே தவிர பதில் வராது ... பதில் வர வரைக்கும் நானும் விடமாட்டோம்ல )

    அன்றைக்கு முழுதும் உம்முனே இருந்தேன் ...... அம்மா சித்தி எல்லோரும் ஏன் இப்படி இருக்க ...கொஞ்சம் சிரிச்ச முகமா இருனாங்க.... தலை மட்டும் நல்லா ஆட்டினேன் ....வந்திர்ந்தவங்களும் ஏன் இந்த பிள்ளை இப்படி இருக்குனு சொல்லி பேச ...
    பெண்ணை அழைத்திடு வாங்கனு சொல்ல ஒரு பக்கம் கூப்பிட .நமஸ்காரம் பண்ண கூப்பிட்டார்கள் .....நான் இருந்த ரூமில் தண்ணி குடிக்க வந்த அண்ணன் ...

    பிரியா ...."நல்லவேளை நான் தப்பிச்சேன்" என்று சொன்னான் .
    எதற்கு என்று நான் நடந்துகொண்டே முழிக்க .....
    "நல்லவேளை நான் மூத்த பெண்ணா பிறக்கல ...இல்லைனா இப்ப இந்த விஷேசம் எனக்கா இருக்கும்ல "
    ...என்று சொல்லி வாய் மூடவில்லை ......

    எனக்கு அவனை அப்படி கோலத்தில் கற்பனை செய்து பார்த்ததில் சிரிப்பை அடக்க முடியவில்லை .....எல்லோரும் இந்த பிள்ளை என்ன இப்படி சிரிக்கிதுன்னு பார்க்க ...கஷ்டப்பட்டு அடக்கினேன் .
    அதன்முன் என் பார்வை என் மாமனை சந்தித்தது .(நீங்க நினைக்கிற மாதிரி ரொமாண்டிக் லுக் இல்லைங்க ....திட்டுவாரோனு பயந்து ...).
    ஆனால் அவரும் சிரிக்க .....என் தலை தானே தரை நோக்கியது . அப்புறம் என்ன நிச்சயதார்த்த சாப்பாடு நல்லா மூக்கு பிடிக்க தின்னுட்டு தூங்கியாச்சு .


    அதன்பின் 10 நாளில் தான் நுழைவுத்தேர்வுக்கு காரைக்குடி சென்றேன் மாலை நேரம் மாமாவோடு .
    இவரோட போறதே பீதிய கிளப்பிவிடுட்டு . மஞ்சள் வேறு அன்றைக்கு அதிகமாக பூசி விட்டேனா .....ஒரே ஒரு பார்வை தான் ....அழுகை வந்துவிட்டது எனக்கு .
    பரீட்சை எழுத போறியா ..இல்ல கோயிலுக்கா என்று ஒரே ஒரு கேள்வி கேட்டார் பாருங்கோ .... மறுபடியும் அழுகை .(இப்பலாம் கஷ்துரி மஞ்சள் தான் ...விட்டுடேன்ல உரசுற மஞ்சல )

    காரைக்குடியில் குடும்ப நண்பர் வீட்டில் தங்கினோம் .அந்த மாமா அத்தை வீட்டில் என் வயது பெண் உண்டு . சரியாய் எனக்கு பழக்கமில்லை . உள்ளே நுழைந்தவுடன் அவளுடன்,மற்றும் குடும்பத்தினரிடமும் மாமா சகஜமாக பேசினார் . மாமா அழகப்பா யுனிவெர்சிட்டி படிக்கும்போது பண்ணின குறும்பு , அட்டகாசங்கள் ஒவ்வொன்றாய் வெளிவந்தன காரைக்குடி மாமா மூலம் .... நகைச்சுவை உணர்வோடு பேசுவாரோ என்று அங்கு தான் தெரிந்து கொண்டேன் .
    எங்களுக்கு அப்பா இல்லாத காரணதினாலத்தான் எங்களிடம் அவளோ கண்டிப்பு என்றும் புரிந்துகொண்டேன் .

    மறுநாள் பரீட்சை ....படத்திற்கு அழைத்தார்கள் .
    அக்குடும்பத்தோடு மாமாவோடும் படத்திற்கு சென்றேன் . நல்ல ஜாலியா போச்சு அன்றைக்கு பொழுது .....நீங்க எப்படி நினைக்கிறிங்கனு எனக்கு தெரியாது ...ஆனால் அன்று எனக்கு நல்ல தோழி அக்குடும்பத்தில் கிடைத்தால் என்பதே அதற்கு காரணம் .
    தேர்வு தாளை பார்த்தவுடன் புரிந்துகொண்டேன் . நான் செய்த தப்பை.
    நுழைவு தேர்வு படிப்பதற்கும் ...பொது தேர்வுக்கும் உள்ள வித்தியாசத்தை .....
    பாதிக்கு மேல் ஒன்றும் தெரியவில்லை .....பிரியா என்ற பெயரை ans optionalil விளையாடி மார்க் செய்தேன் .
    என்னோடு படித்த ஒரு தோழிக்கும் அங்கு தான் எக்ஸாம் சென்டர் . அல்பினா(இப்ப மருத்துவ பணி)வெளியே வந்து அவளை பார்த்தேன் . நன்றாக செய்திற்பதாக கூறினாள். மாமா என்னை கேட்க ஓரளவுக்கு செய்திற்கேன் என்று சொன்னேன் .
    அதன்பின் மீண்டும் சிவகங்கை வாசம் .....

    கல்யாணத்திற்கு 15 நாட்கள் இடைவெளி என்று நினைக்கிறேன் . சமையல் கத்துக்க சொன்னாங்க. என்னைய நிம்மதியா ஒரு வாரம் தூங்க விடுங்கன்னு சொல்லி நல்ல தூங்கி தூங்கி எந்த்திருச்சேன். நான் அப்பா ரெம்ப ஒல்லி ....அதனால் என் அம்மாவும் என் உடம்பை தேத்துற வேலைல இறங்கிட்டாங்க .....சமையலு கிட்ட கூட போகல ....
    கல்யாண புடவை எடுக்க சென்றார்கள் .மாமா எனக்கு பிடித்த நிறத்தை மட்டும் சொல்ல சொன்னார் சொன்னேன் . தாமரை வண்ணமும் , மெரூன்ல கோல்ட் வண்ணம் இரண்டு சேலை . சேலை கட்ட பழகினேன். தடுக்கி விழுந்த புதையல் எடுத்த கதை ஏராளம் .(கட்டுற புதுசுல நீங்களும் அப்படித்தான )
    அவருக்கு எடுத்த பட்டு வேஷ்டி , ஷர்ட் உடைகளை காண்பித்தார் . நல்லா இருக்குனு சொன்னேன் . பக்கத்துல நின்னு கூட பேசாம ஓடிருவேன் .


    கல்யாண நாளும் நெருங்கியது ..... நுழைவுதேர்வு மார்க்கும் வந்தது . 50 கு 35 கிட்ட எடுத்திர்ந்தேன் . மாமா பொது தேர்வு மார்க் 1000 கு மேல வாங்கினா இன்ஜினியரிங் கிடைக்க chaance இருக்குனு சொன்னார் . கண்டிப்பாக வரும் என்றும் சொன்னேன் .(நீங்க கேட்கிறது புரியுது ...என்ன எப்ப பார்த்தாலும் படிப்பானு ...வேற என்ன செய்யங்க என்ன நடந்துச்சோ அதை தானே சொல்ல முடியும் . இதனால்தான் சுவாரசியம் இருக்காதுன்னு சிறிது தயங்கினேன் ).

    கல்யாணத்திற்கு முதல் நாள் வீடு நிறைய கூட்டம் .....பொட்டு தூக்கமில்லை கண்களில் .....(நீங்க நினைக்கிற மாதிரி இல்லைங்க....அப்ப ஒரு கனவும் இல்லை ...சுவாரசியமும் இல்லை )

    COMMENTS Thread for Arranged marriage couple's stories

    Last edited by priyachandran; 29th Jul 2013 at 12:19 PM.

  7. #97
    priyachandran's Avatar
    priyachandran is offline Guru's of Penmai
    Real Name
    c jeyapriyadevi
    Gender
    Female
    Join Date
    Jan 2013
    Location
    ramanathapuram
    Posts
    5,730

    Re: Special thread for Arranged Marriage Couples

    இந்த வரிகளை நேற்று என்னை எழுத வைத்த மீனு குட்டிக்கு எனது அன்பு அரவணைப்பு ....

    கல்யாணத்திற்கு முன்
    கண்ணோடு கண் பார்கவில்லை
    மனதோடு அவன் முகம் கண்டதில்லை
    காற்றில் அவன் உருவம் தேடியதில்லை
    கண்ணாளனை காணமல் வாடியதில்லை
    அருகில் வரும் போது இதயம் எகிறி துடித்ததில்லை
    அலை அலையாய் அவன் நினைவுகள்
    என்னை தொட்டு செல்லவில்லை ...
    என் கனவுகளில் அவன் வலம் வரவில்லை
    ஊஞ்சலாடவில்லை அவன் நினைவுகள்
    உயிரில் கலக்கவுமில்லை
    என் உயிரை ஊசலாடவுமில்லை ..


    மே 19 ,99...வைகாசி 5 ம் தேதி ....
    விடிந்தது பொழுது ...கல்யாண களை வீட்டில் ...
    எனக்கும் கொஞ்சம் எட்டிபார்துச்சுனு நினைக்கிறேன் . சந்தோசமாய் வீட்டிலிர்ந்து கிளம்பினோம் . ஆழம் சுற்றி அழைத்து போனார்கள் .ஐயர் மந்திரம் ஓத ...புகை மண்டலம் சூழ .....சின்ன பிள்ளைகள் ஓடி பிடிச்சு விளையாட்டு .... பல குடும்பங்கள் சந்திக்கும் தருணம் ஒரே இடத்தில .....
    மாப்பிள்ளை , சித்தப்பு , என்னகா என்று பல பேச்சு . எனக்குள்ளும்

    இனம்புரியா சந்தோசம் அத்தருணத்தில் .....இரண்டு முடிச்சு போடும்போது , பின் குங்குமம் நெற்றியில் இட்டு அக்னியை கரம்பிடித்து வலம் வரும்போது மனதில் உள்ள சந்தோசத்திற்கு அளவே இல்லை .
    என்ன கூத்துனா மாமாக்கு ரஜினி ஸ்பீட் வாக் ...நாம சேலை எப்பட தடுக்கி புதையல் எடுப்போம்னு இருக்கோம் .
    இவர் என்னன்னா வாக்கிங் ரன்னிங் மாதிரி ...

    ஆனால் ஒரே ஒரு நல்லது பண்ணினார் பா என் மாமா .....
    என் அம்மா அண்ட் அவங்க அம்மா அப்பா காலுல மட்டும் தான் விழுந்தோம் ஆசிர்வாதம் வாங்க ....மத்த பேர்ட்ட வேண்டாம்னு சொல்லிட்டார் ...என்னையும் நீ கைகூப்பினா மட்டும் போதும்னு சொன்னார் . ...
    மத்தபடி சபைக்கு விழுந்து மொத்தமா ஒரு நமஸ்காரம் .....
    நல்லவேளை நான் தப்பிச்சேன் .....நிச்சயதார்த்தம் அன்னைக்கு விழுந்த மாதிரி இந்த கூட்டதில ஒவ்வொருவர் கால்களில் விழுந்தா .... நான் அன்றைக்கு ஹாச்பிடல அட்மிட் ஆகிற்பேன் .(தப்பிச்சேன் )

    அப்புறம் என்னங்க ...பேப்பர் ல சுத்தி சுத்தி கிப்டுன்னு பேருல நம்மள சுத்தல வைக்கிற கூட்டம் பண்ணின அட்டகாசம் , ஒரே கூல் ட்ரிங்க்ஸ் 2 straw போட்டு குடிக்கிறது ...பாலும் பழம் சாப்பிடிற சம்ப்ரிதாயம் ......
    குடத்ததுகுள்ள மோதிரம் போட்டு எடுக்கிற விளையாட்டு....(கல்யாணம் முடிச்சவங்க மலரும் நினைவுகளுக்கு போங்க.....கல்யாணம் முடியாதவங்க கனவு காணம முடிஞ்ச பின்னாடி பார்க்கலாம் ...
    சரியா babies சிந்து,தயா,கார்த்தி ,femi ,thenu,sara,divi ,daisy,jose etc babies )


    அப்புறம் சாப்பாடு சாப்பிடும்போது ஊட்டுறது....
    எனக்கு கொஞ்சமா கொடுத்தார் .... ஆனால் என் பெரியம்மா பசங்க எல்லோரும் சொன்னதுனால ஒரு பெரிய உருண்டைய வச்சு தின்னுசுவிட்டுடேன் . அப்புறம் ச்வீட் ....இப்ப அவர் முறை போல எனக்கு ரெண்டு மைசூர்பாக தினுச்சுட்டார் .நமக்குதான் மைசூர்பாகுன பிடிக்குமே ...அதனால மெல்லமா சாப்பிட்டேன் . சின்ன சின்ன கேலியோட முடிந்தது சாப்பாடு .
    எனக்கு அலங்கார செட் வெயிட் , அப்புறம் இந்த ஜடைநாகம் மாலை ...கையில பூச்செண்டு ,அப்புறம் சாபிட்டது வேற எல்லாம் சேர்ந்து என்னை ரெம்ப அசைத்திடுச்சு பா .......திரும்பி மேடையில நிக்கும்போதே கண்ணை சொருக ...
    இதை பார்த்த மாமு ...என்னை ரெஸ்ட் எடுக்க சொல்ல. நான் மணமகள் அறையில் போய் குட்டி தூக்கம் . அப்புறம் என் அம்மாச்சி வீடு ....

    ஒன்னு சொல்ல மறந்துட்டேன் ...என் நிச்சயதார்த்தம் நடைபெற்ற அன்று தான் மாமாக்கு பணி நிரந்தரம் கிடைத்தது . உடனே என் சொந்தகாரங்க ...பொண்ணு ரெம்ப ராசி பேச ,எனக்கு சிரிப்புதான் ...பின்ன என்னங்க ( அது கருணாநீதி ஆட்சியில் contract staff அனைவரையும் பணிநிரந்தரம் செய்தார்...எல்லோருக்கும் என் ராசியா )
    அப்புறம் லீவ் அதிகப்படி இல்லாத காரணத்தால் 1 வாரத்தில் வேலைக்கு சேர்ந்தார் . நான் அம்மாச்சி வீட்டில் .
    அம்மா வீட்டிலேயே ஜாலியா இருப்போம் ...........அம்மாச்சி வீடுன சொல்லவா வேணும் ...செம ஜாலி .

    15 நாட்கள் கழித்து .....
    தூத்துக்குடி பயணம் ....அங்கிருந்து சுத்தி பார்க்க ஏற்பாடு செய்திருந்தார்.
    நான் மட்டுமல்ல ஒரு மினி பஸ்சில் இங்கிருந்து . {(மெட்டி ஒலி ஞாபகம் வருதா)...சிந்து நீ கண்ண திறக்கலாம் .இப்படிதான் பிராக்கெட் போடுவேன் என்ன செய்வ ... ) }
    அங்கே இன்னொரு மாமாவை பார்த்தேன் .ஒரே கலகலப்பு . டான்ஸ் பாட்டுன்னு கலைகட்டினார் . அவருடைய தோழர்களும் வந்திருந்தனர்.
    செம ஜாலி இப்ப வரைக்கும் மறக்கமுடியாது .
    இப்பவும் குடும்பமாய் செல்வதே வழக்கம் (2to3குடும்பம்சேர்ந்திடுவோம்) .
    ஊருக்கு வந்த பிறகு 12 த மார்க் வந்துச்சு .... 1030 மார்க் எடுதிர்ந்தேன் .
    இன்ஜினியரிங் கிடைசிற்கும் ...ஆனால நான் கவுன்செல்லிங் செல்லவில்லை .(தவிர்க்க முடியாத காரணம் )

    2 மாதம் சித்தி சித்தப்பா வீட்டில் சேர்ந்து இருந்தோம்
    அப்புறம் என்னங்க ...இதுக சரிபட்டு வராதுன்னு தனிக்குடித்தனம் வச்சாங்க . கைய சுட்டு, கஞ்சி தண்ணி காலுல பட்டு , என் மாமாவை பரிசோதனை எலியாகி சமையல் பழகினேன் . 1 மாதம் தான் . அப்புறம் எங்க குடும்பம்தான் பெரிய குடும்பம் ஆச்சே 15 பேருக்கு சமைக்கிற அளவுக்கு வந்துடேனா பார்த்துகோங்க .

    என்னவன் பற்றி சில வார்த்தைகள் ..(as karti, coolbaby selvi ka asked.... கவி நடையில் )


    என் மனதை படித்தவனே ......
    என் உணர்வுகளுக்கு உயிர் கொடுத்தவனே !
    உன்னை அழைக்கின்றேன் என் உதடுகளால் அல்ல இதயத்தால் !
    உன்னை வர்ணிக்கின்றேன் எழுத்துகளால் அல்ல கண்களால் !
    உன்னை என் மனதில் கைதுசெய்த என்னால் வார்த்தைகளில் கைதுசெய்ய இயலவில்லை -இருந்தும் முயல்கிறேன்!
    நீ தாயாக அன்பு காட்டிய போது .... நான் உன் குழந்தையாகிறேன்!
    நீ தந்தையாக திட்டி வழிநடத்தும் போது நான் என் அகங்காரத்தை (ஈகோ) கைவிடுகிறேன் !
    நீ என் தோழனாக பேசும்போது...... நான் உன் தோழியாகிறேன் !
    நீ என் காதலனனாக இருந்த போது..... நான் உன்னவளாகிறேன் !
    நீ என் கணவனான பின்பு ..... நான் உனக்கு அனைத்துமாகிறேன் !!



    (செல்வி அக்கா...மாமா உறவை எப்படி கணவனா ஏத்துகிட்ட கஷ்டம்தானே சொன்னிங்களா....அதற்கு இந்த கவிதையும் , இதுவரை சொல்லிய என் கதையும் விளக்கும் நினைக்கிறேன் . இது நான் முதல் முதலில் எழுதிய கவிதை கல்யாணத்திற்கு பிறகு ....அப்புறம் எழுதவில்லை எதுவும் . .இப்ப பெண்மை வந்தபிறகு தான் திரும்ப கிறுக்குகிறேன் )


    அவர் engineer முடிச்சனால 1 வருடத்தில் assistant engineer ஆனார் .
    பின் என் அடுத்த தங்கை collageku ரெடியா இருந்தாள். அதற்கு அடுத்த தங்கை 10த்....அண்ணாக்கு அப்பா வேலை வாங்க கோர்ட்டில் மாமா writ file செய்தார் . வேலை கிடைத்தது . அண்ணன் வேலை பார்த்து கொண்டே engineer படிச்சான் . இப்ப TTPS ...assistant engineer .
    நானும் கரெசில் டிகிரி முடித்தேன் . கம்ப்யூட்டர் course படிச்சேன் .
    இப்ப அனைவருக்கும் கல்யாணம் ஆகி வாழ்கையில் செட்டில் ஆகிவிட்டார்கள் . நல்ல நிலைமையிலும் உள்ளனர் .

    எனக்கும் அவருக்கும் 12 வயது வித்யாசம் ....ஆனால் சொன்னால் தவிர தெரியாது . எங்க அண்ணாவே கேலி பண்ணுவான் எனக்கே முடி கொடிட்டு ...நீங்க என் மகள் கல்யாணம் வரைக்கும் இப்படியே இருப்பிங்க போல சொல்லுவான் .
    எனது மகன்கள் இரண்டு பேர் .நவீன் 8த் ,ஸ்ரீராம் 4த் .

    இப்பேயும் நான் பயந்துலாம் இருக்கிறதில்ல ...
    அவர் தோழனாக மாறினார் . நானும் மாறினேன் ..
    சில விசயங்கள் ரெண்டு பெரும் ஒத்து போவோம் ...சிலதுல இல்ல ....
    ஒருநாளும் பேசாமல் மட்டும் இருந்ததில்லை . எனக்கும் பிடிக்காது அவரும் பேசாமல்இருக்கிற பழக்கமில்லை .

    என்ன ஒன்னு சிறு சிறு சண்டை வரும் ...ஆனால் எதுவுமே நடக்காத மாதிரி பேசுவார் . நான் விடமாட்டேன் . கொஞ்சம் ஆற போடுவேன் . ஆனால் கேட்டுவிடுவேன் . கிடைக்கும் பதிலில் எனது பக்கம் தவறு இருந்தாள் திருத்தி கொள்வேன் . அவர் பக்கம் இருந்தால் சுட்டி காட்ட தயங்க மாட்டேன் .
    ஒருத்தகொருத்தர் கருத்தை கேட்டு ...விட்டுகொடுத்து போகிறது வாழ்க்கை இனிமையாக .

    நான் நானாகவே இக்கதையுள் பயணித்த உணர்வு ........வித்தியாசமான உணர்வாய் இருந்தது

    இதுவரை என் கதையை கேட்ட எனது இனிய அன்பான தோழமைகளுக்கு எனது நன்றிகள் ......
    உங்கள் வாழ்த்துடன் முடித்துகொள்கிறேன் தொடர்ந்துகொன்டிற்கும் எங்கள் காதல் கதையை

    மீண்டும் சந்திக்கிறேன் 60 ம் கல்யாணம் முடிந்த பிறகு.....tata....bye for now

    COMMENTS Thread for Arranged marriage couple's stories

    Last edited by priyachandran; 29th Jul 2013 at 03:36 PM.

  8. #98
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Special thread for Arranged Marriage Couples

    Friends,

    I have moved all the stories from the Comments thread. Along with the stories, I have moved some comments and the explanation for them by the story teller, which seems to be continuation of the story.





    Jayanthy





  9. #99
    goldfisha's Avatar
    goldfisha is offline Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2013
    Location
    India
    Posts
    9,425

    Re: Special thread for Arranged Marriage Couples

    வணக்கம்…

    படிக்கும் அனைவருக்கும் என் நன்றி.. பிழையை மன்னிக்கவும்..

    என் பெற்றோருக்கு மூன்று பெண்கள்.. நான் இரண்டாவது…
    எனக்கும் அக்காவுக்கும் 1 வருடம் வித்தியாசம்… என் தங்கைக்கும் எனக்கும் 6 வருடம் வித்தியாசம் (ஒரு தம்பி பிறந்து 1 மாதத்தில் இறந்ததால்).

    தந்தை ஒரு கட்டிட ஒப்பந்தக்காரிடம் வேலை பார்த்தார் (1988 வரைக்கும்) நான் அப்பா அம்மா ஓகூரில்.
    என் அக்கா பாட்டி வீட்டில வளர.. குழந்தை இல்லாத என் அத்தை (தந்தையின் 2வது அக்கா) என் அக்காவை வளர்த்தார்கள்(2000 வருடம் வரை)..


    இதனால் சொல்ல வருவது.. நான் தனிகாட்டு ராணி (தங்கை பிறக்கும் வரை என்றாலும்).. பக்கா அப்பா பொண்ணு..

    2003 அப்பா சுயதொழில் ஆரம்பித்தார் கிருஷ்ணகிரியில்.. (lower middle class to upper middle class வந்துடோம்)

    2004 என் அக்காவுக்கு திருமணம்.. மாமா என் அத்தை பையனே( தந்தையின் 3வது அக்கா) அப்போ நான் B.Sc மூன்றாம் ஆண்டு..
    அப்போ இருந்தே நிறைய வரன் வந்ததா அம்மா சொல்லுவாங்க..

    (அம்மாவை பற்றி.. உலகம் தெரியாது.. 15 வருடங்களாக இதய நோயால் வாடுபவர்..(Ramachanra Chennai, Hirudhalaya Bangalore, etc எல்லாம் ஒரு ரவுண்டு வந்தவங்க) இன்றுவரை அம்மா உயிரை காக்கும் என் தந்தைக்கும் கடவுளுக்கும் நன்றி)


    அப்பா ”பெரியவளுக்குதான் படிக்கும் போதே கல்யாணம் பண்ணிடேன்.. மீனா படிப்பு முடிந்த பிறகுதான் கல்யாண பற்றி பேசனும் ” சொன்னாரு.. லவ் யூ பா…..


    M.Sc முடிச்சிடேன். Software line’a போகனும் ஆசை.. வீட்டு சூழ்நிலை.. அம்மா உடல்நிலை.. உள்ளுரிலேயே B.Ed முடிச்சிடேன்..
    அப்பாவுக்கு அம்மா உடல்நிலையோட போராடவே நேரம் சரியா இருக்கும். நிறைய நாள் மருத்துவமணையில்.. அப்பா எங்களை மருத்துவமணைக்கு அனுமதித்ததே இல்ல.. ”விஜி“யை (அம்மா) அந்த நிலையில் (ICU, oxygen mask) பிள்ளைங்க பார்க்க வேண்டாம்” சொல்வாரு


    சமையல்(பாத்திரம் துணிக்கு வேலையாள் வருவங்க 1998 ல் இருந்தே) , அப்பா நிறுவனம்.. வங்கி, காய், மளிகை இத்தியாதி இத்தியாதி நானே பார்த்தேன்...பையன் இல்லாத குறையை தீர்க முயற்சி பண்ணேன்.
    (கல்யாண பற்றி சொல்லுனா Self history சொல்றனு திட்டறது கோட்குது.. )


    2009 அரசு கல்லூரியில் கௌரவ விரிவுரையாளர்
    2010 தனியார் பொறியியல் கல்லூரியில் விரிவுரையாளர்.
    வரன் பார்க்க ஆரப்பித்தார்கள்..


    எனக்கு கல்யாணதில் interest la இல்ல.. மாப்பிளை பற்றி கனவும் இல்ல..
    அப்பாவை பற்றி சொல்லியே ஆகானும்.. உனக்கு யார்மேல விருப்பமானு கேட்டாரு.. இல்லை பா நீங்க சொல்றவரைதான் பண்ணிப்பேன்னு சொன்னேன்..

    என் கணவருக்கு முன் 3 வரன்கள் பெண் பார்க்க வந்தார்கள்… முக்கிய பிரச்சணை உயரம் நான் வெறும் 5.6 அடி.. என் உயரத்துக்கு மாப்பிளை கிடைக்கலன பாத்துகோங்க…


    COMMENTS Thread for Arranged marriage couple's stories

    Last edited by goldfisha; 1st Aug 2013 at 12:17 AM.
    இன்று புதிதாய் பிறந்தோம் - மகாகவி



  10. #100
    goldfisha's Avatar
    goldfisha is offline Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2013
    Location
    India
    Posts
    9,425

    Re: Special thread for Arranged Marriage Couples

    ஜனவரி 26 2010 சசி புகைப்படம் குடுத்தாங்க.. சசிகுமார் அரசு கணித ஆசிரியர். ஊர் தருமபுரி மாவட்டத்தில் ஒரு குட்டி ஊர்.. (எங்க மாமா ஒருத்தர் மூலமா வந்த ஜாதகம்) (முக்கியம் உயரம் 5.9)

    அதுவும் போட்டே passport size.. ஏன் stamp size கிடைக்கலையானு இப்பவும் கிண்டல் பண்ணுவேன்..

    ஜனவரி 30
    பெண் பார்க்க வந்தாங்க.. 10 பேர்…
    ஏற்கனவே 3 வரன் வந்து பேச்சா.. நான் சாதாரணமா தான் இருந்தேன்..


    சசி பக்கத்துல (கொஞ்சம் தள்ளிதான்) parallel உட்கார சென்னாங்க..
    5 – 10 நிமிடம் உள்ள போயாச்சி..
    ஒரு மணி நேரத்துல கிளம்பிடாங்க.. 10 வீடு தள்ளி இரண்டு குடும்பத்துக்கும் தூரத்து சொந்தாகார வீட்டு போய்ட்டு ஊர்க்கு போய் சொல்றோம்னு சொன்னங்களாம்..


    2 மணி நேரத்துல திருப்பி வந்தாங்க (குடுப்பத்தோடதான்)
    அவர் என்னை சரியா பார்க்கலையாம் (கொடுமை).. பேசனுமாம் (அதைவிட கொடுமை)..


    பேசனோம்.. (தனியா இல்ல வீட்லதான் கூட இரண்டு பேர் இருந்தாங்க).
    பொதுவா என்ன படிச்ச எங்க வேலை பாக்கற போன்ற கேள்வி தான்..
    Please Note this point your Honor
    நான் யாருக்கோ வந்த விருந்துனு சும்மா பேசனேன்.
    அவர் தான் நடுங்கிட்டே பேசனாரு.. வார்த்தை உளரல்..
    (எனக்கு சிப்பு சிப்பா வந்துச்சி.. போனதுக்கு அப்பறம் விழுந்து விழுந்த சொல்லி சொல்லி சிரிச்சேன்..)


    அப்பா என்னை கேட்டாரு
    நான் கேட்ட முதல் கேள்வி.. ஏன் பா குட்ட காட்ல குடுக்குறீங்கனுதான்..(கிருஷ்ணகிரி சிட்டி கிடையாது தான்.. At least சேலம் ஈரோடு இப்படி ஏதாவது)


    அப்பா சொன்னாரு.. ”வெளிநாட்டு ஜாதகம் கூட வந்தது கண்ணு.. ஆனா நான் நினைச்சா அரை மணி நேரத்தில் உன்னை வந்து பார்கண்ணும் அதான்.. இவருக்கு அரசு உத்தியோகம்.. அப்பா அம்மா தங்கை.. தங்கைக்கு கல்யாணம் ஆச்சி.. நீங்க நாலு பேருதான் யோசி”
    நினைச்சா உன்னை பார்க்கணும் சொன்ன ஒரே காரணத்துக்கு சரி சொன்னே..

    COMMENTS Thread for Arranged marriage couple's stories

    இன்று புதிதாய் பிறந்தோம் - மகாகவி



loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter