Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree4563Likes

Special thread for Arranged Marriage Couples


Discussions on "Special thread for Arranged Marriage Couples" in "My Better half" forum.


 1. #101
  goldfisha's Avatar
  goldfisha is offline Yuva's of Penmai
  Gender
  Female
  Join Date
  Feb 2013
  Location
  India
  Posts
  9,425

  Re: Special thread for Arranged Marriage Couples

  மாமா (அவர் அப்பா – கூட்டுறவு வங்கி மேலாளர் ஓய்வு).
  அத்தை (இல்லாள்)
  தங்கை ( திருமணமாகி 2 விருடம் முடிந்து.. பெண்ணு பார்க்க வந்த அப்போ 5 மாத கர்பிணிஅதனால அவங்க வரல.. கல்யாணனத்துக்கு முந்தின நாள் தான் அவங்களை பார்த்தேன்.)


  பெண்ணு வீடு பார்க்கறது..
  மாப்பிள்ளை வீடு பார்க்கறது..
  பெண்ணு வீட்ல கை நினைக்கறது..
  மாப்பிள்ளை வீட்ல கை நினைக்கறது..


  பிப்ரவரி எழு இரவு 7 மணி.. (பெண்ணு வீட்ல கை நினைக்கறது முன்தின நாள்) நான் என் பொரியம்மா shopping போய் இருந்தோம். சாலையோரம் வண்டி நிறுத்தி கடைக்கு நடக்கும் போது. கைப்பேசி சிணுங்கியது.

  புது எண்ணில் இருந்து அழைப்பு..
  அப்பா கிட்ட கற்று கொண்டது.. ஹாலோ சொல்ல மாட்டேன்..
  வணக்கம் தான் சொல்லுவேன்..

  வணக்கம் சொன்னேன்
  ஒரு ஆச்சிரிய சின்ன சிரிப்புடம் பதில் வணக்கம் வந்தது..

  அந்த மனுசன் தான்.. அவர் சொல்லல I Guessed it was him..
  (அவ்வளவு சீக்கரம் யாருக்கும் நம்பர் தரமாட்டேன்.. )

  ”நம்பர் எப்படி தெரியும்…” கேட்டேன்..

  ”நீயே Guess பண்ணு”

  ”மாமா சொன்னார” (ஜாதகம் தந்தவரு)

  ”இல்ல”

  ”எங்க வீட்ல”

  ”இல்ல”

  ”உங்க வீட்ல யாருக்கவது தெரிஞ்சி”

  ”சொந்தகாரங்க யாரும் தரல..”

  ”பின்ன..”

  ”நீ MCA Lateral entry correspondence ல படிக்கறதானே
  நல்ல படிப்பியாமே
  1st sem-ல இவ்வளவு percentage தானே
  இது தானே உன் Marks..” Marks சொன்னாரு

  ”ஆங்.. ஆமா..எப்படி” ..(இது எல்லாம் என் ஜாதகத்தில் இல்லயே)


  நான் படிக்கிற Study center owner அவரு friend.. பொண்ணு பார்க்க கூட வந்து இருக்காரு நான் பார்க்கல.. அவர் friend என்னை பார்த்து தெரிஞ்சிகிட்டாரு

  நான் படிக்க குடுத்த certificate photo copy அவர் கையில.. contact no செல்லுல..
  (எவ்வளவு இருக்கு அவருக்கும் அவர் friend’கும்)

  COMMENTS Thread for Arranged marriage couple's stories


  Sponsored Links
  இன்று புதிதாய் பிறந்தோம் - மகாகவி 2. #102
  Husaina is offline Newbie
  Gender
  Female
  Join Date
  Sep 2011
  Location
  Chennai
  Posts
  21

  Re: Special thread for Arranged Marriage Couples

  Sorry guys, veetiya romba naal poiduchu. Intha pakkam varamudiyalai.
  Kalyana kadhai solla vanthiruken.

  May last sunday wedding. Avaru Thursday than India vantharu. Enga veetla ellarum mappilaiya parka Friday eve ponanga. 7-8 ladies, appuram appavum, peripa bum ponanga. Ivarukku enga amma yarunnu kootathula kandu pudika mudiyalainu sonnanga(later thanpa). Monday ivunga thambiku marriage. Rendu marriage nrathala romba busy avunga. Couldn't call me also.

  Sunday vidinchathu. Wedding contract sign panniyachu. Avaroda boss, original Saudi vandharu. Ing a yarukkum Arabic theriyadhu. Adhunala ivar than bossa gavanikanum. Literally running behind the boss.
  Sadangulal ellam kidaiyathu. Avunga sidela vulla theerka sumangali yaravadhu mahar chain pottu viduvanga. That's all in brides side. Gents side a small sermon abt wedding, kanavanin kadamai etc.. Will happen...that's it.
  Intha kootathula, ennoda mobile kanama poiduchu. So operatorku inform panni no block pannanum. Avan personalla neenga varanum, ur photo ID, a letternu neraya formalities cholran. Oruvaliya yaaru um theriyama naanum en thambiyum matter close panniyachu. En erumai thambi second contact no. Avarodatha eluthittan. Mahala irunthu avunga veetuku poitom. Vaasalla SIL arathi edukira neram, companykaran avaruku phone pannitan. Ente kuduthutu evar nall pullaiya nikiraaru. Naan phone pesite arathiku nikiren. Added to my image. Annaiku avvoluvu than.
  Monday his bro weddingum mudinchathu. Eve than enakku enna Edamnu naan therinjukiten.
  Mil - thambi ponnu edathula naan, 25 yrs kanavu panal
  SIL - naan patha ponnu ok so llama, mamaku imp. Padicha ponnu mathikamatta......
  FIL - odipoga thayara irunthava. Payana piruchiduva.
  Aaluku oru kavalai. Treatment vithiyasapaduthu. 2 new entry, one gets the best, & me also came type. Joint family, very apparent pidikatha marumagal.
  Pinna enna, neraya thagidu thatom velai seidhu kudumbathula oruthara marinen. My hubby did his best to make me inroads without his parents knowledge. Ena ivar enakku support pannuna, udane pondati pundhanaiye pudichitannu solluvanga. So yarukkum santhegame varama, very slowly he made them accept me. So gifted to have him in my life.

  Friends, pray for us.


 3. #103
  goldfisha's Avatar
  goldfisha is offline Yuva's of Penmai
  Gender
  Female
  Join Date
  Feb 2013
  Location
  India
  Posts
  9,425

  Re: Special thread for Arranged Marriage Couples

  அடுத்தநாள் (பெண்ணு வீட்ல கை நினைக்கறது).. எல்லா formalities முடிஞ்சி அவங்க கிளம்பிடாங்க…

  என் அக்கா என் கிட்ட வந்து ”என் நெற்றில புவனா Courier Service னு எழுதி இருக்கா”னு கிண்டல கேட்டு ஒரு காக்கி கவர் குடுத்தா..


  உள்ள பெரிய பார் சாக்லேட்.. Transparent Nail Polish and Dark Red Nail polish இருந்தது..

  நான் எப்பவும் இடது கைக்கு மட்டும் transparent Nail polish கால்கலுக்கு Dark Red use பண்ணுவேன்..

  பொண்ணு பார்க்க வந்த போதே கைவிரல் கால் விரல் பார்த்தாராம்.. நகம் வளர்க்கறேனா…கால் கட்டை விரலுக்கு அடுத்த விரல் நீளமா இருக்கானு. (திமிரு தானே)

  அப்பறம் தினம் காலை 8.45-9 மாலை 8.30-9.30 அவர்தான் call பண்ணுவார்…

  தினம் ஒரு Forwarded Message வரும்..
  முதல் குறுஞ்செய்தி கீழே 108 எண் இருந்தது.. முதல என்னனு புரியலை.. அடுத்த நாள் குறுஞ்செய்தியின் கீழ் 107.. அவர்தான் சொன்னாரு திருமணம் நாள் countdown னு…


  ஒரு நாள் இரவு..
  அவருக்கு தண்ணீ தம் பழக்கம் இருக்கானு கேட்டேன்.. (I don’t like those habits.. I hate smoke smell… இரும்பல் வரும்)

  இருக்கு சொன்னாரு… மூன்று மாதம் முன்பு கூட தண்ணீ அடிச்சேன் சொன்னாரு.. நான் எதுவுமே பேசல..அழுகை வந்தது.. போனை கட் பண்ணிட்டேன்.

  அப்பா அம்மா கிட்ட சொல்லி ”ஓ” அழுதேன்..
  அப்பா ”இல்ல கண்ணு நான் விசாரிச்ச வரைக்கு அவருக்கு அந்த பழக்கம் இல்லனு தான் சொன்னாங்க”

  அவர் போன் பண்ணிட்டே இருந்தாரு நான் எடுக்கவே இல்ல..

  அடுத்த நாள் காலை மறுபடியும் கூப்பிட்டுகொண்டே இருந்தாரு.. எடுத்தேன்..

  முதல் வார்த்தை ”நான் ரொம்ப பயந்துடேன்” சொன்னாரு..

  ”எனக்காக யாரும் அழுதது இல்ல” (உங்களுக்காக அழுதத யாரு சொன்னது)

  ”நான் chain smoker drinker இல்ல… சும்மா நண்பர்களோட சேர்ந்து எப்பயாவது அடிப்பேன்… யாருக்கும் தெரியாது..”

  ”இந்த பழக்கதை விட்டறேன்”

  இன்று வரை அந்த சொல்லை காப்பாறுகிறார்…

  COMMENTS Thread for Arranged marriage couple's stories

  இன்று புதிதாய் பிறந்தோம் - மகாகவி 4. #104
  goldfisha's Avatar
  goldfisha is offline Yuva's of Penmai
  Gender
  Female
  Join Date
  Feb 2013
  Location
  India
  Posts
  9,425

  Re: Special thread for Arranged Marriage Couples

  நிச்சயதார்த்தம்… மார்ச் 5..

  எங்க குடும்ப வழக்கம் கல்யாண முந்தினநாள் இரவு நடக்கும்.. அவர் வீட்ல அப்படி இல்ல… நிச்சய புடவை எனக்கு பிடித்த புளூ வண்ணம்..

  அவர் அம்மா கல்வைத்த ஆரம் போட்டாங்க..
  (தாலிகொடி தான் போடுவது வழக்கம்.. அவரு தான் ஆரமே இருக்கட்டும்னு அவங்க அம்மாகிட்ட போராடி வாங்கனாராம்.. இந்த ஆரத்தால் பின்னாடி பிரச்சணை வரும் நான் எதிர்பாக்கவே இல்லை)


  சாப்பாடு… இரண்டு பேரும் சேர்ந்து சாப்பிடும் நிலைமை வரக்கூடாதுனு வேண்டினேன்… கடவுளுக்கு கேட்டது.. என் அக்கா வந்து அவர் உனக்காக சாப்பிடாம wait பண்றாரு வானு கூட்டிட்டு போனா…


  (என்னை பொருத்தவரை அவர் என்னை என் அப்பா மற்றும் குடும்பத்தில் இருந்து பிரிக்கும் வில்லன்… அப்போங்க.. இப்ப இல்ல)

  நிச்சயம் இனிதே முடிந்த்து…


  இலக்கண (கல்யாண பத்திரிக்கை Blue print) பத்திரிக்கை எழுதும் நாள்.. ( இருண்ட காலம் கேள்வி பட்டு இருப்பிங்க என் வாழ்வின் இருண்ட காலத்தின் தொடக்கம் இன்று தான்..)

  காலைலே வர வேண்டியவங்க வரல…

  எங்க வீட்டு பக்க சொந்தம் எல்லாம் வர ஆரம்பிச்சாங்க.. மாப்பிள்ளை வீட்டில் இருந்து தகவல் இல்ல…

  எல்லாம் என்னை சசிக்கு கேளுனு சொன்னாங்க… முதல் தடவை அவரை கூப்பிட்டேன்.. உரையாடல் நியாபகம் இல்ல… நாங்க வரல வேற எதுவும் கேட்டாதேனு சொன்னாரு…


  எங்க மாமா (ஜாதகம் வாங்கி குடுத்தவரு) போன் பண்ணி அவங்களுக்கு demand (two wheeler and “x“ பவுன் நகை) இருக்காம் அதை செய்றேன் சொன்னா பத்திரிக்கை எழுத வருவாங்களாம் சொன்னாரு..


  அப்பா வரன் பார்கும் போது என்கிட்ட சொன்னது..”நம்மை விட வசதியான இடமா பார்தா செய்றது கஷ்டம்.. வசதியானவங்க இல்லன.. செய்றது நிறைவா இருக்கும்.. இன்னும் நிறைய செய்யலாம்”


  என் அக்கா கல்யாணத்தின் போது..எங்க அத்தை மாமா (அக்கா மாமனார் மாமியார், அப்பாவின் அக்கா மாமா) என் மாமாவுக்கு (என் அக்கா கணவர்) பைக் வாங்கிதானு கேட்டாங்க..


  என் அப்பா சொன்னாரு ”பொண்ணு தர முடியாது வீட்டை விட்டு வெளில போ”


  எந்த demand இல்லாம தான் என் அக்காவை கல்யாணம் அவங்களுக்கு பண்ணிகுடுத்தாரு..


  ஆனா இப்போ…

  என்கிட்ட முன்னமே சொன்னாரு கல்யாணத்திற்கு அப்பறம் உனக்கு Honda active வாங்கி தரேன்..

  நிச்சயம் பண்ண கல்யாணம் நின்றால் நல்ல இருக்காதுனு.. அவங்க சொன்னதுக்கு சரி சென்னாரு..

  ஏன்பானு கேட்டேன்.. உனக்கு செய்றதா சொன்னதை அவருக்கு செஞ்சிடா போச்சி…


  அன்று இரவு அவர் போன் பண்ணாரு…
  சும்மா வாங்கு வாங்குனு வாங்கனேன்.. என்ன குறை என் கிட்ட அதை compensate பண்ண கேட்கறீங்க.. அந்த பொருள் வந்து உங்ககூட குடும்பம் நடத்தாது.. அப்படி இப்படினு

  அவரும் சண்டை பேட்டாரு.. (உரையாடல் சரியா நியாபகம் இல்ல மன்னிக்கவும்)  பற்பல மனஸ்தாபங்கள் சின்ன சின்ன வருத்தங்கள் இரண்டு பக்கமும்..
  நாட்கள் கடந்த்து..

  COMMENTS Thread for Arranged marriage couple's stories

  இன்று புதிதாய் பிறந்தோம் - மகாகவி 5. #105
  goldfisha's Avatar
  goldfisha is offline Yuva's of Penmai
  Gender
  Female
  Join Date
  Feb 2013
  Location
  India
  Posts
  9,425

  Re: Special thread for Arranged Marriage Couples

  கல்யாணத்திற்கு பத்து தினம் முன் நான் என் வேலையை விட்டேன்.. காரணம் தூரம்.. நான் வேலை பார்த்து ஓசூரில் உள்ள தனியார் கல்லூரி.. அவர் வீட்டில் இருந்து கல்லூரிக்கு 3 பஸ்.


  முகூர்த்த புடவைக்கு blouse தைக்க குடுக்க அவர் வீட்டுக்கு வந்து இருந்தாரு..

  வந்தார்.. டீ குடுத்தேன்.. சாப்பாடு போட்டேன்.. திரும்ப ஒரு டீ குடுத்தேன்..கிளம்பிட்டாரு..


  (ஒரு நாளுக்கு 10 டீ னாலும் குடிப்பாங்க(குடும்பமே) போன் பேச்சின் உபயம், இப்ப இரண்டு தான் (நிறுத்திடோம் இல்ல ) எனக்கு டீ காபி பழக்கம் இல்ல)


  விஷயம் என்னனா.. அவர் குடுத்த துணி பையில் costly அ ஒரு sudithar material இருந்த்து.. (Profession காக புடவை கட்டுவேன்.. But I prefer sudithar always)


  மே 26 கல்யாணம் அவங்க ஊர்ல மே 30 வரவேற்பு எங்க ஊர்ல

  மே 23 தாலி புடவை படைக்க அவர் வீட்டுக்கு முதல் முதலா போனேன்..  மே 25 மண்டப்த்திற்கு கிளம்பறோம்..

  அப்பா புடுச்சிகிட்டு ஒரே அழுகை.. அப்பாவும்தான்…
  பெரியாம்மா ”தங்கம்(அப்பா பேரு) நீ முதல கிளம்பு உன் பார்த்து தான் நிறைய அழற”

  தேம்பிகிட்ட மண்டபம் இல்ல இல்ல கோவில் போயாச்சி..

  தட்டு மாத்தினாங்க.. மண்டபம் வந்தோம்..
  புகைப்படம் இத்தியாதி இத்தியாதி..

  கல்யாணம் அவங்க பண்ணாங்க.. மண்டபம் கொஞ்சம் வசதி கம்மி..
  அங்க hotel ல இல்ல அதனால அப்பா எங்க ஆளுங்களுக்கு தங்க பக்கத்துல உள்ள இன்னோரு மண்டபம் பேசி இருந்தாரு.. என்னை அங்க தூங்க அனுப்ப மாட்டேன் சொன்னாங்க.. இங்க தான் இருக்கனுமாம்..

  நான், அக்கா மற்றும் சித்தி (சூர்யாவின் அம்மா) அங்க தங்கினோம்.. சித்தி நிறைய அறிவுரை சொன்னாங்க (ஒரு மணிநேரம் மேல்) மறக்கவே முடியாது. யாருக்கும் தெரியாது சூர்யாக்கு கூட…


  மே 26 காலை 7

  எனக்கு பயம்.. பெரிய பெரிய மூச்சி விட்டுட்டு இருந்தேன்
  தாலி கட்டும் சமயம் என் கண்ணு அப்பாவையே தேடியது.. பார்த்தேன்.. இரண்டு பேர் கண்ணுலையும் தண்ணீ..

  செல்வி மீனாட்சி தங்கவேலு - திருமதி மீனாட்சி சசிகுமார் ஆயாச்சி


  கிருஷ்ணகிரி போய்ட்டு வரும்போதும் அழுகை..
  எதிர்பார்த்து ஆறுதல் வார்த்தைகள்..
  அத்தை ”பொண்ணா பிறந்த அடுத்தவங்க வீட்டுக்கு போவோம் தெரியும் இல்ல எதுக்கு இப்படி அழுற..”

  ஒரே ஆறுதல் பரணி (கொழுந்தன், என் பெரிய மாமியார் பையன் என்கிட்ட ஜாலியா பேசின ஒரே ஜீவன்)


  COMMENTS Thread for Arranged marriage couple's stories

  இன்று புதிதாய் பிறந்தோம் - மகாகவி 6. #106
  goldfisha's Avatar
  goldfisha is offline Yuva's of Penmai
  Gender
  Female
  Join Date
  Feb 2013
  Location
  India
  Posts
  9,425

  Re: Special thread for Arranged Marriage Couples

  மே 27 காலை 7

  அத்தை ”உங்க இரண்டு பேர் துணியை தனியா வெளில துவைத்து போட்டுடு வா..”

  அவர் வீடுக்கு சாலைக்கும் இருந்து 50 அடி… Washing machine இருந்தது.. துணி துவைக்க கஷ்டம் இல்ல.. புடவை கட்டி துவைத்தது இல்ல.. அதுவும் வீட்டுக்கு வெளியில் பலர் பார்க்க.. அழுகையா வந்தது(மறைத்தேன்).. துவைத்தேன்.. என் பெரிய மாமியார் அவங்க துணி கொண்டு வந்து போட்டு இதையும் துவை சொன்னாங்க..
  அவர் வெளில வந்தாரு பாத்தாரு நான் அவரை பார்க்க விரும்பல.. போய்டாரு..


  மே 28
  காலை சாப்பாடு என்னை மட்டும் சமைக்க சொன்னாங்க(no help).. 4 பேருக்க சமைப்பேன் அம்மா உதவியோடு (instruction).. 10 – 15 பேருக்கு? அம்மாவை அளவு கேட்டு பொங்கல் சட்னி பண்னேன்…


  மே 30
  வரவேற்ப்பு.. சிறப்பா நடந்தது..
  அடுத்த நாள் வீட்ல நாங்க சாப்பிட்டு கொண்டு இருந்தோம்…
  அவர் ”மாமா சாயங்காலம் ஊருக்கு போறேன்… மீனா ஒரு வாரம் இருக்கட்டும் நான் வந்து கூட்டிட்டு போறேன்..” (ஒரே சந்தோசம்)
  தனியா ஏன்னு கேட்டேன்.. ”உனக்கு தான் கிருஷ்ணகிரி மேம்பாலம் தாண்டினா அழுக வருது.. திரும்ப கிருஷ்ணகிரி மேம்பாலம் பார்தாதான் சிரிப்பு வருது.. என்ன பண்றது..”
  ஜீன் 6
  கிருஷ்ணகிரி ல இருந்தே கொடைக்கானலுக்கு தேன்நிலவு கிறம்பினோம்…3 நாள்..


  அவர் வீட்டுக்கு திரும்ப வந்தாச்சி..
  அன்றில் இருந்து நானே சமையல்… அத்தை menu சொல்லுவாங்க நான் செய்யனும்..
  (அத்தை மாமா னு கூப்பட மாட்டேன் அம்மா அப்பானு தான் கூப்பிடுவேன்…)
  வாங்கற சம்பளம் அப்படியே அம்மா கிட்ட குடுத்திடுவார்..
  மாமாக்கு pension கிடையாது.. 9 லட்சத்திற்கு வீடு கட்டி 15 லட்சம் வட்டி கட்டின பெருமை என் மாமாவை சேரும்..


  என்னவரை பற்றி..
  என்ன காரணம் தெரியல.. தாத்தா பாட்டி மாமா(தாய் மாமா) கிட்ட வளந்தாரு(5 வயதில் இருந்து)…அத்தையால் (மாமா மனைவி) பல புறக்கணிப்பு..
  (நான் பின்னர் தெரிஞ்சிகிட்டது…. தன் தேவையை வாய் திறந்து கேட்ட தெரியாது… அன்புக்கு ஏக்கம்.. அம்மா அப்பா பாசம் இல்ல.. அண்ணன் தங்கை உறவு? (பக்கத்து வீட்டுகாரன் கூட கொஞ்சம் பாசமா இருப்பான்… )


  அரசு வேலை கிடைத்த பின் தான் வீட்ல இருக்க அரம்பித்தார்.. வீட்டில் இருந்து 30 நிமிட பயணத்தில் பள்ளி… அதன் பின் தான் கேஸ் அடுப்பு..மின்விசிறியில் இருந்து அனைத்து Home appliances வாங்கனாரு.. (two wheeler உட்பட)..

  வீட்டினர் மற்றும சொந்தத்தை எதிர்த்து படிப்ப வராத தன் தங்கையை படிக்க வைத்தார் (BA D.T.Ed)..

  அடகு நகை மீட்டு..புது நகைகள் வாங்கினார்.
  கடன் வாங்கி தங்கைக்கு சிறப்ப திருமணம் செய்தார்.. (அந்த கடனை இன்னும் கட்டி கொண்டு இருக்கிறோம்)


  COMMENTS Thread for Arranged marriage couple's stories

  இன்று புதிதாய் பிறந்தோம் - மகாகவி 7. #107
  goldfisha's Avatar
  goldfisha is offline Yuva's of Penmai
  Gender
  Female
  Join Date
  Feb 2013
  Location
  India
  Posts
  9,425

  Re: Special thread for Arranged Marriage Couples

  ஒரு நாள்..

  அத்தை சசியிடம்”நாங்க இரண்டு பேரும் சென்னைக்கு கண் பரிசோதணை செய்ய போகனும் அந்த ஆரத்தை அடகு வைச்சி பணம் தா” (கொஞ்சம் கல்யாண கடனும் இருந்தது)

  அவரு ”முடியாது அவளுக்கு முதலில் வாங்கனது.. வேற நகைய வைச்சி பணம் எடுத்துக்கோங்க”
  இதில் தொடங்கியது… மனைவி முக்கியமா போய்டா.. அப்பா அம்மாவை மதிக்கலனு..

  என்னிடம் இரண்டு கைபேசி இருக்கும்… ஒன்று எல்லாருக்கும் தெரிந்த எண்.. மற்றோண்று அப்பா கூட parallel sim… இரண்டு sim கும் call sms unlimited free.


  1. எதுக்கு இரண்டு போன்..
  2. எதுக்கு வீட்டுக்கு அடிக்கடி பேசற.
  3. எதுக்கு வெளில நிக்கற..
  4. எதுக்கு veg பிரியாணில பட்டானி போடல.. யாராவது அப்படி பிரியாணி பண்ணுவாங்களா..
  5. பருப்பு direct a cooker la வைக்காம எதுக்கு கப்ல வைச்சி வெச்ச…
  6. அது என்ன அப்பா மக English la பேசறது.. எங்களுக்கு தெரிய கூடாதுனா..
  7. எதுக்கு கோயிலுக்கு போறீங்க.. எங்கயும் போக வேண்டாம்..
  8. இரவு ஏன் இரண்டு போரும் walking போறீங்க.. night வெளில போகாதீங்க..
  9. Nighty போடாத..
  10. புடவை முந்தியை கைல சுத்திகாத..
  11. இடுப்புல கை வைக்காத..
  12. Night என்ன இரண்டு பேரும் ரகசியமா பேசறது..
  13. Room la என்னடா பண்ற வெளில வந்து உட்காரு..(இது அவருக்கு மட்டும்)
  14. குளிச்சிட்டு bed ல உட்காறாத..
  15. இத்தியாதி இத்தியாதி இத்தியாதி

  Last but not the least..
  மாமனார் முன்னாடி உட்கார கூடாது..
  (வேலைக்கு போற மாமனார இருந்தா அவர் வரும்போது உட்காந்த தப்பு சொல்லலாம்.. அவர் ஒய்வு பெற்றவர்.. வீட்டிலேயே இருப்பாரு)
  பொண்ணு பார்க்க வந்த அப்போ.. ”எங்க வீட்லையும் ஒரு பொண்ணு இருக்கு உங்க பொண்ண எங்க பொண்ணா பார்ப்போம்னு சொன்னாங்க” இந்த வரி எந்த அர்த்ததில் சொன்னாங்கனு எனக்கு இன்னும் தெரியல..


  நானும் சரி அவரும் சரி எதிர்த்து ஒரு வார்த்தை பேசனது இல்ல…
  அங்க இருந்த வரைக்கு என் இடம் our bedroom and kitchen..


  என்னை என் in-law’s பிடிக்காம போன முக்கிய காரணம்… சசிதான்..
  அவங்களுக்கு வர மருமகள் நிறைய படித்திருக்க கூடாது.. வேலைக்கு போக கூடாது… சமையல் வீட்டு வேலை சிறப்பா செய்யனும்.. மொத்ததில் அடக்க ஒடுக்கமான பொண்ணு (கண்டிப்ப அது நான் இல்லிங்கோ)


  பொண்ணு பார்த்துடு வந்த போதே.. ”இந்த பொண்ணு வேண்டாம் சசி” சொன்னாங்கலாம். (அப்பவே நான் அடங்காதவனு தெரிஞ்சு போச்சா?)

  சசி ”இல்ல நான் இவளை தான் கல்யாணம் பண்ணிப்பேன்” போராடி நிறைய மறுப்பிற்கு பிறகு என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டாராம்


  ”ஏன்பா இப்படி பண்ணீங்க.. உங்க வீட்ல சொல்ற பெண்ணை கல்யாணம் பண்ணீருக்கலாம இல்ல”

  ”எனக்கு தைரியமான பொண்ணு தான் வேணும்.. கண்டிப்பா வேலைக்கு போகணும்.. இல்லை… வேலைக்கு போற தகுதியாவது இருக்கணும்…”

  கடைசிய ஒண்னு சென்னாரு பாருங்க..

  ”நான் உயிரோட இல்லைனாலும் அடுத்தவங்களை எதிர்பார்காம எல்லாதையும் சமாளிக்கும் திறன் என் மனைவிக்கு இருக்கணும்.. அதான் உன்னை பண்ணிக்கிடேன்”

  COMMENTS Thread for Arranged marriage couple's stories

  இன்று புதிதாய் பிறந்தோம் - மகாகவி 8. #108
  goldfisha's Avatar
  goldfisha is offline Yuva's of Penmai
  Gender
  Female
  Join Date
  Feb 2013
  Location
  India
  Posts
  9,425

  Re: Special thread for Arranged Marriage Couples

  ஆடி மாதம்..

  அப்பா அம்மா வந்து கூட்டிட்டு போனாங்க.. (Actually எனக்கு ஆடியே கிடையாது..ஏன்?)

  நாங்க போன்ல பேசுவோம்… அத்தை அவரை திட்டினாங்க..
  ”ஏன்டா எப்ப பாரு அவகிட்ட பேசற” (நான் line ல இருந்தேன்)
  ”மா.. அடுத்தவன் பொண்டாடிகிட்ட பேசல என் பொண்டாடிகிட்ட தான் பேசறேன்..”


  ”மீனா தருமபுரி கல்லூரிகளுக்கு resumae குடு.. வேலைக்கு போவியாம்..”
  -------------------------


  ஆகஸ்ட் 8 அவர் வீட்டுக்கு வந்தாச்சு… (அவர் மட்டும் வந்தாரு)

  Resumae குடுத்தேன்.. interview வந்தது.. போகல. I was pregnant..Doctor conform பண்ணிட்டாரு…

  ஆகஸ்ட் 13.. இரவு..8.30.. வாழ்கையில் முதல் தடவை (ஞாபகம் தெரிஞ்ச வரைக்கும்) வாந்தி.. பயங்கறமா.. அவருக்கு என்ன பண்றதுனே தெரியல… அத்தை மாமா என்ன ஆச்சினு கூட கேட்கல.. அவரு எங்க அம்மாக்கு போன் செய்து என்ன பண்ணனும் கேட்டு என்னை பார்த்துகிட்டாரு…
  இது தினமும் நடக்கும்…


  பொண்டாடிய ரொம்ப தாங்கறான்.. உலகத்துல யாரும் புள்ள பெத்துகலையா.. எங்க அத்தை.. (அன்றில் இருந்து அவர்களை அம்மா அப்பானு கூப்படறத விட்டுடேன்.. அத்தை மாமானு கூப்பிடேன்)


  என் நாத்தனாரை 9 மாதம் வீட்டுக்கு கூடிட்டு வந்தாங்க.. தெய்வம் அவங்க..
  (கல்யாணம் முடிந்து 2 வருடமாய் தாய் வீட்டில் இருந்து மாதம் மாதம் தன் வீட்டிற்கு மளிகை வங்கும் நபர்.. அவருக்கு(சசி) தெரியாமல்..) சாப்பாடு தட்டில் போட்டு குடுக்கனும்.. முடிந்ததும் போய் வாங்கிட்டு வரணும்.. ஒரு வேலை செய்ய மாட்டாங்க..
  என்னை விட இருமடங்கு இருப்பாங்க.. தினமும் நைட்டி தான் போடுவாங்க… அவர் அப்பா பக்கதுல தான் உட்காருவாங்க.. (நான் எந்த விததில் குறைந்து போனேன்?)


  நான் சமையல் செஞ்சி வைப்பேன்.. கடையில் வாங்கி வந்து சாப்பிடுவாங்க..
  இல்லை செஞ்சது எல்லாம் காலி பண்ணிடுவாங்க.. திரும்ப செய்வேன்..
  அவர்களுக்கு பெண் குழந்தை பிறந்தது…

  COMMENTS Thread for Arranged marriage couple's stories

  இன்று புதிதாய் பிறந்தோம் - மகாகவி 9. #109
  goldfisha's Avatar
  goldfisha is offline Yuva's of Penmai
  Gender
  Female
  Join Date
  Feb 2013
  Location
  India
  Posts
  9,425

  Re: Special thread for Arranged Marriage Couples

  என்னை விட அவரைதான் ரொம்ப திட்டுவாங்க.. அவர் வேலைக்கு போன அப்பறம் இன்னும் என் காதுபட அசீங்கமா(நல்ல இருக்க மாட்டான்.. உருப்பட மாட்டான்) திட்டுவாங்க.. என்ன தான் அவங்க பிள்ளையா இருந்தாலும்.. என் கணவர்… தினமும் நடக்கும்…
  ஒரு நாள் (sep 11) பொறுக்காமல் (தப்புதான்) அவங்க திட்டினது எல்லாம் போன்ல record செய்து அவரு வந்ததும் போட்டு காட்டினேன்..


  கேட்டாரு.. அழுதாரு.. நாளை காலை 6.30 ரெடியா இரு பஸ் ஏத்தி விடறேன்..
  (sep 12) தருமபுரி வந்தேன் தனியா.. அவர் பள்ளிக்கு போய்டாரு.. சித்தி(அப்பா தம்பி வீட்டிற்கு) வீட்டுக்கு வந்தேன்… அவர் school’கு போ evening வந்தார்… அப்பா அம்மாவும் வந்தாங்க.. (அவரு வரசொன்னாரு).. ஒரு தனியார் மகபேறு மருத்துவரிடம் மாத பரிசேதணை.. கிருஷ்ணகிரி போய்டேன்..


  சசி அப்பா கிட்ட ”மாமா தருமபுரில வீடு பாருங்க.. தனியா வரோம்.. கொஞ்சம் பணம் உதவி பண்ணுங்க கடனா.. என் பிள்ளை நிம்மதியான சூழ்நிலையில் வளரனும்”


  சசி அவங்க அப்பா அம்மாவிடம் ”இருக்கற கடன் எல்லாம் நானே கட்றேன்.. மாதம் மாதம் உங்க செலவுக்கு பணம் குடுக்கறேன். சீர் எல்லாம் நானே பண்றேன் எங்களை விட்டுடுங்க”


  Sep 16 புது வீடு பால் காய்ச்சியாசு…
  மாதம் மாதம் சித்தி தான் check up கூட்டிட்டுபோனாங்க.. அம்மா பண்ணவேண்டியது எல்லாம் எங்க சித்தி தான் செஞ்சாங்க.. பெரியாம்மாவும்.. இவங்க இருவருக்கு என்றும் நாங்க கடமை பட்டவங்க..

  கொஞ்சம் கொஞ்சமா எல்ல வீட்டு உபயோக பொருள் வாங்கி தந்தாரு..ஒவ்வொரு பொருளும் என் விருபப்படி வாங்கி தந்தாரு..(விட்டில் இல்லாத பொருள் இல்ல எல்லாம் வாங்கி தந்தாரு.. அப்ப தான் அவர் அம்மாவின் பண நிர்வாகம் புரிந்தது…) அந்த வீட்டில் இருந்து ஒரு குண்டு ஊசி கூட வேண்டாம் சொல்லிடோம்..

  சசி எங்க வீட்டு (என் அப்பா என் தாத்தா மொத்த குடும்பம்) நல்ல (செல்ல) மருமகன்..
  என்னை விட அவருடைய ஆதரவலர்கள் அதிகம்..(சூர்யா உட்பட)

  காலை 7.30 மணிக்கு கிளம்பின இரவு 7.30 க்கு தான் வருவாரு.. பள்ளி 30 நிமிட பயணம் 2 மணி பயணம் ஆனது..
  அவருக்கும் எனக்கு தினமும் சண்டை நடக்கும்.. அவருக்கு பொண்ணு வேணுமாம்.. எனக்கு பையன்..

  COMMENTS Thread for Arranged marriage couple's stories

  இன்று புதிதாய் பிறந்தோம் - மகாகவி 10. #110
  goldfisha's Avatar
  goldfisha is offline Yuva's of Penmai
  Gender
  Female
  Join Date
  Feb 2013
  Location
  India
  Posts
  9,425

  Re: Special thread for Arranged Marriage Couples

  மார்ச் 16

  வளைகாப்பு பழக்கம் இல்ல.. 7 வகை சாதம் போட்டு அம்மா வீட்டுக்கு கூட்டிட்டு போவாங்க…

  சசி ”மீனா 50 பேரையாவது கூப்பிடனும்.. என் பிள்ளைக்கு நல்லபடியா பிறக்கனும் எல்லாருடைய ஆசி வேண்டும்”

  எல்லாரையும் கூப்பிட்டோம் அத்தை மாமா உட்பட.. எல்லாரும் வந்தாங்க
  சும்மா மஞ்சள் சந்தனம் பூசி வளையல் போட்டாங்க.. அத்தையை கூப்பிடதுக்கு
  ”என் விருப்ப்படியா எல்லாம் நடக்குது.. நான் செய்யல”
  அவரு ரொம்ப வருத்தபட்டாரு..


  எல்லாரும் கிளம்பினாங்க… சித்தி சித்தப்பா.. பெரியாம்மா பொரியாப்பா எங்களை வழி அனுப்ப இருந்தாங்க..
  1st floor ல குடி இருக்கோம்.. எல்லாரும் கீழே இருந்தாங்க.. நாங்க (நான் அவரு) வீட்டை பூட்டி கீழே போனோம்..


  நான் ஜாலியா (அம்மா வீட்டுக்கு போற சந்தோசம் தான்) கார்ல முன்னாடி உட்காந்து அவருக்கு டா டா காட்லாம்னு பார்த்தா ஆளை காணோம்…


  ஓரமா போய் அழுதுட்டு இருக்காரு…
  (என் பொண்டாடி நிஜமாலுமே ஊருக்கு போய்டா…. சொல்றத விட்டுடு என் இது சின்ன புள்ள தனமா.. அம்புட்டு நல்லவரா என்ற வுட்டுகார்ரு)

  நான் இறங்கி போய் சமாதனம் படுத்தி.. அப்பாவை main road போக சொல்லிட்டு நான் அவர் கூட வண்டில போனே…  மார்ச் 27 (என் பொற்காலத்தின் தொடக்க நாள்)
  மாலை 3.29 பவன் பிறப்பு… (it’s a boy.. I won)
  ஆகஸ்ட் 8 தருமபுரி வாந்தோம்..
  அவரு ஒரு ATM card குடுத்து ”இதுல 10,000 இருக்கு… நான் நேரமா போய்டு லேடா வரேன்.. உங்க (நான் பவன்) Emergency கு வெச்சிகோ…” (அதுதான் சசி)


  அடுத்த ஜென்மம் ஒன்னு இருந்தா நான் சசிக்கு புள்ளையா பிறக்கனும் தான் சொல்லுவேன்.. He is the best father…. (Santhosh subramaniyan part 2..) உட்காரதுக்கு முன்னாடி walker நிக்கறதுக்கு முன்னாடி tri-cycle… baby items காலி அகறதுக்குள்ள stock ல இருக்கும்..
  (Transfer வாங்கிடாரு இப்போ 13km ல வேலை பார்கிறார்)
  நான் அன்பு பாசம் காட்ட வளர்க்க கடவுள் எனக்கு இரண்டு பையன் (வரம்) குடுத்து இருக்காரு..

  முதல் மகன் பவன்.. இரண்டாவது மகன் சசி….

  நன்றியுடன்
  மீனா..

  (என் கதையை எழுத தூண்டிய(நேரடியாக மற்றும் மறைமுகமாகவும்) பெண்மை தோழிகளுக்கும்(spl ஜெயாகா, செல்விமா).. பெரிதும் உதவிய என் ஜெ“கும் (ஜெயபிரியாதேவி) கொஞ்சம உதவிய சூர்யாவுக்கும் நன்றிகள்)

  COMMENTS Thread for Arranged marriage couple's stories

  Last edited by goldfisha; 1st Aug 2013 at 02:36 PM.
  இன்று புதிதாய் பிறந்தோம் - மகாகவிloading...

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •  
Like It?
Share It!Follow Penmai on Twitter