காதலர்கள் கோவிலுக்குள் வரக்கூடாது என்று தடைவிதிக்கப்பட்டிருக்கிறது நேபாளத்தில்...

அந்த நாட்டின் தலைநகரான காத்மாண்டில் பழம் பெருமை மிக்க பசுபதி நாதர் ஆலயம் உள்ளது. இது யுனெஸ்கோ அமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட பண்பாட்டுச் சின்னங்களில் ஒன்று. இங்கு உலகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகளும், பக்தர்களும் வருவார்கள்.

கோவிலுக்கு வருபவர்கள் சுற்றிப் பார்த்துவிட்டு கோவில் படிக்கட்டுகளில் சிறிது நேரம் அமர்ந்திருப்பது வழக்கம். அப்போது சில காதல் ஜோடிகள் கட்டிப்பிடித்துக் கொள்வதாகவும், சில்மிஷ சேட்டைகளில் ஈடுபடுவதாகவும் கோவில் நிர்வாகத்தினருக்கு தெரிய வந்தது.

"இது கோவிலின் புனிதத்தை கெடுக்கும் என்பதால் இனி கோவிலுக்குள் காதல் ஜோடிகள் நுழைய அனுமதி இல்லை'' என்று கோவில் நிர்வாகம் சமீபத்தில் அறிவித்தது. மேலும் கோவிலுக்குள் வருபவர்கள் படிக்கட்டுகளில் அமர தடைவிதித்தும், அதை கண்காணிக்க தனிக் காவலர்களை நியமித்தும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Similar Threads: