Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree433Likes

Loverís Corner - Thread for Love Marriage Couples


Discussions on "Loverís Corner - Thread for Love Marriage Couples" in "My Better half" forum.


  1. #171
    dania's Avatar
    dania is offline Penman of Penmai
    Blogger
    Yuva's of Penmai
    Real Name
    நிதா
    Gender
    Female
    Join Date
    May 2012
    Location
    Germany
    Posts
    9,136

    re: COMMENTS thread - Loverís Corner - Thread for Love Marriage Couples

    3 கிழமை லீவ் ல இந்தியா வந்து இருந்தாங்க....ஆனால் எனக்கு ஒட்டியும் ஒட்டாத நிலை...அப்போ எனக்கே புரியலை...அவ்வளவு பக்குவம் இல்லாத வயசு தானே....

    அங்கேயே இருந்து படிக்கிறியா என்று கேட்டார்...அப்பாக்கு அதில் விருப்பம் இல்லை...நானும் சின்ன பொண்ணுதானே.....

    ஒன்று உங்களுடன் இருக்கட்டும்...இல்லை எங்களுடன் இருக்கட்டும்...அப்படி படிக்க விருப்பம் என்றால் ஜெர்மனி வந்து எதையாவது படிக்கட்டும் என்று அப்பா சொல்லிட்டார்...

    என்னோட வாழ்க்கையில் மறக்க முடியாத இடங்களில் ஒன்று...மீனம்பாக்கம் விமான நிலையம்....

    உள்ள போறதுக்கு முதல்...அவர் என்னிடம் உன்னை நம்பி இருக்கிற ஒரு ஜீவனா என்னை நினைவு வைத்துக்கொள்...என்று சொன்னார்...

    எனக்கு கண்ணுல ஏன் என்று தெரியாமலே கண்ணீர் ஊத்தியது....

    அதுக்கு முதல் எல்லாம் அவர் இருக்கும் இடத்துல இருந்து நழுவத்தான் பார்ப்பேன்....

    ஆனால் அந்த நிமிடம் அவரோட நானும் போய்ட மாட்டேனா...என்று இருந்தது...எனக்கும் அவரை மிகவும் பிடிக்கும் என்பதை நான் புரிந்துகொண்ட இடம் அதுதான்...

    என்னுடைய மனம் நிறைந்து நான் பேசிய வார்த்தைகள்..."கவனமா போயிட்டுவாங்க" என்பதுதான்...

    அதுக்கே அவங்களுக்கு கண் கலங்கிட்டுது...என்னோட நெற்றியில் தன்னுடைய இதழை பொருத்தி எடுத்தார் என்றுதான் சொல்லணும்...

    போயிட்டுவரேன் என்று சொல்லலை...என்னையே பார்த்துட்டு தலையை மட்டும் ஆட்டிட்டு போய்ட்டார்...

    அதுக்கு முதல்... எனக்கு ஒரு கிபிட் வாங்கி எங்களோட ரூம்ல வச்சு இருக்கேன்...உன்னுடைய அம்மாக்கு தெரியாம பார்.." என்று சொல்லிடு போய்ட்டார்...

    போய் பார்த்தால் அது என்ன தெரியுமா????

    ஹாஹா....rc ஓட 42 புத்தகங்கள்....வாங்கி வச்சு இருந்தார்...(என்னுடைய அம்மாக்கு கண்ணுலயும் காட்டாத ஒரு விஷயம்...நான் புக்ஸ் படிக்கிறது...ஆனால் எனக்கு அது மிகவும் பிடிக்கும் என்பது பிரபுக்கு தெரியும்...)

    எனக்கு மிகவும் கஷ்டமா இருந்த விடயம்...என்னோட அக்கா எனக்கு ஒரு வாழ்த்து கூட சொல்லலை...என்னுடைய திருமணத்தின்போது...

    அவ்ளோ கோபம் அவங்களுக்கு...


    பிறகு என்ன...இலங்கைக்கு டிசம்பர் வந்துட்டோம்...

    2003 ஏப்ரல் மாதம் 23 ஆம் திகதி ஜெர்மனி வந்துட்டேன்...

    பிரான்க்புர்ட் ஏர்போர்ட் ல என்னை கண்டவுடன்...கடவுளே..... என்னை தூக்கி சுத்திடாங்க...

    மானமே போச்சுப்பா....செம அடி நான்...விட்டா காருக்கே தூக்கிட்டு போய் இருப்பார்...லக்கேஜ் எடுக்கணும் என்ரதுல நான் தப்பிட்டேன்...

    இருந்தவங்க எல்லோரும் கை தந்தாங்க...அவங்களுக்கு காதலர்களின் சந்திப்பு என்று ஒரு எண்ணம்...நமக்குதானே தெரியும் நம்ம கூத்து என்ன என்று...



    நான் வந்தும் பார்க்க வரலை அக்கா...அவங்களோட தங்கை தானே நான்...

    நானும் போகலை...பிரபு கேட்டாங்க...நான் வேணும் என்றால் அவங்களிடம் மன்னிப்பு கேக்கிறேன்...என்னால தானே நீங்க ரெண்டு பெரும் கதைக்கிறது இல்லை...நானே சேர்த்து வைக்கிறேன் என்று...

    அப்படி ஏதாவது செய்தால் உங்களை விவாகரத்து செய்துட்டு ஜேர்மன் காரன் ஒருத்தனை எனக்கு சின்னவீடா செட் பண்ணிருவேன் என்று சொல்லிட்டேன்...

    இங்க வந்து ரெண்டு மாதத்துல அம்மா ஆயாச்சு...ஹாஹா...(எவ்ளோ நாசுக்கா சொல்லவேண்டி இருக்கு...)


    என்னை பார்க்க வராத அக்கா...இதை கேள்வி பட்டோன்ன விழுந்து அடிச்சு ஓடி வந்தாங்க...

    நான் முகம் குடுக்கலை...எனக்கும் கோபம் இருக்கும்தானே...

    ஆனால் நான் கதைக்கிற வரைக்கும் வீட்ட விட்டு போக மாட்டேன் என்று எங்க வீட்டுலே தங்கிடாங்க...


    பிறகு எங்க கோவிக்கிறது...அப்படியே சமாதானம் ஆயாச்சு...

    ஹப்பா ஒரு மாதிரி முடிச்சிட்டேன் என்று நினைக்கிறேன்...உங்கள் சந்தேகங்களை கேளுங்கள்...விடையளிக்க காத்து இருக்கிறேன்...(தேவைதான் எனக்கு...)


    Sponsored Links
    வாழ்க்கை வாழ்வதற்கே!!!!

    வாழ்ந்துபார்

    வாழ்வின் ருசி அறிவாய்!!!!



  2. #172
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

    re: COMMENTS thread - Loverís Corner - Thread for Love Marriage Couples

    என்னோட காதல் கதையை கொஞ்சம் கேளுங்கப்பா.....
    நீங்க கேட்காட்டியும் நான் சொல்லுவேன்..... சொல்லி கொண்டே இருப்பேன்.....(சரி... சொல்லி தொலை , கேட்டு தொலைக்கிரோம்னு யாரோ போற போக்குல சொல்லுறது என் காதுல விழுது.....)
    என்ன பண்ண..... உங்க காதுல வழியிற ரத்தத்தை துடைத்து விட்டு அழுவாம கேக்கணும்...சரியா......


    அது ஒரு அழகான ஊர்.... அதுதானப்பா திருச்சி.. என்னோட பள்ளி, கல்லூரி நாட்கள் எல்லாமே அங்கதான்.... நான் b .e முடிச்சிட்டு அங்கேயே ஏதாவது ஒரு வேலைக்கு போகலாம்னு ஒரு கம்ப்யூட்டர் சென்டரில் போய் கேட்டேன்...., (ஏன்னா எங்க அப்பாவுக்கு என்னை வேலைக்காக சென்னை அனுப்ப இஷ்டம் இல்லை....)
    அங்க போனேன்னா ....


    ம்ம்ம்ம். அந்த கம்ப்யூட்டர் சென்ட்டர் போன்னேனா .....அங்கதான் என் கண்ணாளனை பார்த்தேன்.... அவங்க ரொம்ப சின்சியர் சிகாமணி..., B .Sc , PGDCA முடிச்சிட்டு MCA corres ல பண்ணிக்கிட்டு இருந்தாங்க.... so இங்க பார்ட் டைம் ஜாப்....

    முதல் நாள் போனப்ப நான்தான் அவங்களை பார்த்தேன்... அவங்க என்னை திரும்பி கூட பார்க்கலை... அந்த சென்ட்டர் மாஸ்டர் வந்து எங்க ரெண்டு பேருக்கும் intro கொடுத்துட்டு, ஏதாவது சந்தேகம்னா ராஜ்கிட்ட கேளுங்கன்னு சொல்லிட்டு போய்ட்டாரு......

    எங்க கேட்க்கிறது....? அப்போ எல்லாம் பொண்ணுங்ககிட்டே பேசவே மாட்டாங்க.... நானா ஏதாவது கேட்டா கூட, திரும்பாமலேயே பதில் சொல்லிட்டு போய்டுவாங்க.... (அப்போ எல்லாம் வரும் பாரு ஒரு கோபம், போடா பன்னின்னு திட்டிட்டு (மனசுக்குள்தான் )நானும் போய்டுவேன்....)

    இப்படியே கொஞ்ச நாள் போய்கிட்டு இருந்துச்சு..... இப்படி அமைதியா இருந்தாதான் நமக்கு பிடிக்காதே, என்னடா பண்ணலாம்னு மண்டையை போட்டு பிச்சிக்கிட்டேன்..... (முடித்தான் கையோட வந்துச்சு, ஒரு ஐடியா வும் வரலை.....)


    அதுக்குன்னு சும்மா விட்டுடுவோமா..., வேணும்னே அவங்களை வம்பு இழுக்கணும்னு ஏதாவது சந்தேகம் கேட்டுகிட்டே இருப்பேன்.... (பாடத்துலதான்....). இப்படியே இன்னும் கொஞ்ச நாள் போச்சு..... ம்ஹூம் இது சரி வராதுன்னு நான் முடிவு பண்ணி என் வேலையை பார்க்க ஆரம்பிச்சிட்டேன்.....






  3. #173
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

    re: COMMENTS thread - Loverís Corner - Thread for Love Marriage Couples

    அப்போ நான் ஹாஸ்டலில் தங்கி இருந்தேன்.... (என் ஊர் திருச்சியில் இருந்து 2 மணி நேர பயணம்.....), இங்க சென்டரில் எனக்கு ஷிப்ட் முறையில் வேலை.... so நான் அதுக்கு பிறகு ரொம்ப நல்ல பிள்ளையா மாறி என்னோட வேலையை மட்டும் பார்த்தேன்....(நம்ப முடியிலல உங்களுக்கு....).... அப்போதான் ஐய்யா என்னை கவனிக்க ஆரம்பிச்சி இருக்காரு.... அது எனக்கு தெரியலை..... (எவ்வளவு பெரிய லூசா இருந்து இருக்கேன்.., பாருங்க)


    ஆனா அப்பாவும் என்கிட்டே பேச மாட்டாங்க.... அப்போதான் தெய்வமா பார்த்து 3 தூதுவர்களை அனுப்பி வச்சது.... தூதுவர் நம்பர் 1- அகிலா , இவங்க அங்க ஒரு கோர்ஸ் பண்ண வந்தாங்க... அப்புறம் மற்ற ரெண்டு தூதுவர்களும் ராஜோட தூரத்து சொந்தகார பசங்க.... அவங்களும் படிக்க வந்தாங்க....(உருப்புடுவாங்க.....???)


    நானும் அகிலாவும் கூட்டு.... அவங்க 3 பேரும் கூட்டு.... திரும்ப வேதாளம் முருங்கை மரம் ஏறின கணக்கா, இல்ல கஜினி முகமது படை எடுத்த கணக்கா ,(எதோ ஒரு கணக்கு), நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து ராஜோட பேச ட்ரை பண்ணினோம்... ம்ஹூம், நடக்கலையே...., கொஞ்ச நாள் கழித்து அகிலா கூட மட்டும் பேச ஆரம்பிச்சாங்க....எனக்கு எப்படி இருக்கும்.... வாயில இருந்து, காதுல இருந்து, மூக்குல இருந்து எல்லாம் புகை வந்துச்சு.....


    வழக்கம் போல மனசுக்குள்ள போட பன்னி , எருமைமாடு, இன்னும் என்னன்னா சொல்ல முடியுமோ அவ்வளவும் சொல்லி திட்டிட்டு போய்டுவேன்.... ஆனா அப்புறம்தான் தெரிஞ்சது, என்கிட்டே பேசத்தான் அகிலாவை வளைச்சு போட்டாங்கன்னு....(ஏன்னா அகிலாவுக்கு அப்பவே கல்யாணம் ஆயிடுச்சு..., அதனால் அவங்க ராஜை அண்ணான்னு தான் கூப்பிடுவாங்க..... so தங்கச்சி மூலமா என்னை பிடிக்கலாம்னு...


    நான் பிடிபட்டேனா... பொறுத்து இருந்து பாருங்கள்.....


  4. #174
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

    re: COMMENTS thread - Loverís Corner - Thread for Love Marriage Couples

    ஒரு நாள் எல்லாரும் வேலையை முடிச்சிட்டு கிளம்பி போகும்போது, நானும் அகிலாவும் அரட்டை அடிச்சிக்கிட்டே போனதுல பின்னாடி வந்த பஸ்சை கவனிக்காம, அவன் ஹார்ன் அடிச்சது கூட தெரியாம போய்கிட்டு இருந்தோம்., அப்போதான் பின்னாடியே வந்த என் ஹீரோ நாலு கால் பாய்ச்சலில் பாய்ந்து வந்து என்னை இழுத்து ரோடு ஓரத்துல தள்ளி விட்டுட்டாங்க ..... ஒரு பக்கம் பயத்துல நெஞ்சு துடிக்குது, இன்னொரு பக்கம் பேசவே பேசாத சாமியாரா நம்மளை காப்பாதினாருனு நம்ப முடியாம கண்ணு ரெண்டும் முழி பிதுங்கி நிக்குது.... பேசலாம்னு வாயை திறந்தா வெறும் காத்துதான் வந்துச்சு.....ச்சே , நல்ல சமயத்துல பழி வாங்குதே, இந்த சாமியார் போய்டுமே, போறதுக்குள பேசனுமேனு நினைச்சிக்கிட்டு இருக்கும் போதே,


    "அறிவு இருக்கா உனக்கு, காதையையும் கண்ணையும் வீட்டிலேயே வச்சிட்டு வந்துட்டியானு ஒரு குரல்..... "
    என் காதை நல்லா தேய்ச்சி விட்டுட்டு யாருடா பேசியதுன்னு பார்த்தா , நம்ம சாமியார்.... எப்படி இருக்கும் எனக்கு..... அப்போ வழிஞ்சேன் பாருங்க ஒரு வழிசல் ,இப்போ நினைச்சா கூட சிரிப்பு வருது.....


    அப்புறம் பயந்து கிடந்த எங்க ரெண்டு பேரையும் கூட்டிகிட்டு போய் காபி வாங்கி கொடுத்து , வா, வீட்டில கொண்டு போய் விடுறேன்னு சொன்னாங்க..... "இல்ல, நான் ஹாஸ்டலில் இருக்கேன்னு சொன்னதும் , அப்போ ஒரு கத்து..... இப்படி பொறுப்பு இல்லாம இருக்கியே , ஏதாவது ஒன்னு நடந்து இருந்தா உங்க அம்மா அப்பாவுக்கு யார் பதில் சொல்லுறதுன்னு....(அட போடா, இது எல்லாம் ஒரு மேட்டர்ஆ...)


    அப்புறம் என்ன ஏகப்பட்ட அறிவுரைகள் மழையா பொழிஞ்சது...., அதை எல்லாம் நான் கவனிக்கவே இல்லை, (பின்னே என்னங்க , ஒரு விளையாட்டு பிள்ளைகிட்ட போய்....), நான் பாட்டுக்கு வேடிக்கை பார்த்துகிட்டு விளையாடிட்டு இருந்தேன், அதுக்கும் ஒரு திட்டு....
    (எவ்வளவு வேணும்னாலும் திட்டுடா மவனேன்னு , காதுல வச்ச பஞ்சை எடுக்காம இருந்தேன்.... கொஞ்சம் நேரம் கழிச்சி, போனா போகுதுன்னு பஞ்சை எடுத்து கீழ போட்டுட்டேன், அதை பார்த்துட்டு கோபமா இருந்த அவங்க சிரிக்க ஆரம்பிச்சிட்டாங்க......

    அப்புறம் நானும் என் ஈகோ எல்லாம் விட்டுட்டு அவங்களோட பேச ஆரம்பிச்சேன்.... வெறும் நண்பர்களா பழக ஆரம்பிச்சோம்....


  5. #175
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

    re: COMMENTS thread - Loverís Corner - Thread for Love Marriage Couples

    அதுக்கு பிறகு அவங்க வீட்டில இருந்து எனக்கு சாப்பாடு கொண்டு வருவாங்க....இதுக்கு நடுவுல மற்ற 2 தூதுவர்களும் தங்கள் பணியை செவ்வனே செய்து கொண்டு இருந்தார்கள்..., அதுதானப்பா, ராஜை ஏத்தி விடுறது,


    அப்புறம் ஒரு நாள் என்னயயும் அகிலாவையும் வீட்டுக்கு லஞ்ச்க்கு கூப்பிட்டாங்க...எனக்கு முதலில் போவதா, வேண்டாமான்னு ஒரே குழப்பம்..... காலேஜ்ல படிச்சப்ப எல்லா பசங்க வீட்டுக்கும் போய் இருக்கோம், அவங்களும் எங்க வீட்டுக்கு வந்து இருக்காங்க... ஆனா அது வேற..... எல்லாரும் கூட படிப்பவர்கள்.... ஆனா இது அப்படி இல்லையே.... என்ன பண்ணுறதுன்னு தெரியாம ஒரு ரெண்டு வாரம் தள்ளி போட்டேன்....


    அகிலாதான் நானும்தானே வரேன், வா போகலாம்னு சொல்லவும் , எங்க வீட்டில friend வீட்டுக்கு போறேன்னு சொல்லிட்டு போனோம்...(எங்க வீட்டுல சொல்லாம எங்கயுமே போக மாட்டேன்.....),


    அவங்க வீடு அழகா ஒரு தென்னந்தோப்புக்கு நடுவுல இருந்துச்சு.... போய் நல்லா சாப்பிட்டு முடிச்ச உடனே வெளியில வந்து தோப்புக்கு நடுவுல கயித்துகட்டில போட்டு உக்காந்து அரட்டை அடிச்சிக்கிட்டு இருந்தோம்.... கொஞ்சம் நேரம் கழிச்சி இளநி வந்துச்சு, குடிச்சிட்டு நல்ல பிள்ளையா கிளம்பிட்டோம்....


    சொல்ல மறந்துட்டேனே... அவங்க அம்மா ஆசிரியர்... அப்பா போலீஸ்... நாங்க போன போது இருவருமே வேலைக்கு சென்று விட்டார்கள், (அப்புறம் என்ன VIP வருவோம்னு வீட்டிலையா இருப்பாங்க....), so மாலை 4 மணிக்கு அவங்க அம்மா வந்த உடனே சொல்லிட்டு கிளம்பிட்டோம்.....


    சத்தியமா சொல்றேங்க, இது வரைக்கும் நட்பை தவிர வேறு எதுவும் எங்களுக்குள் இல்லை....(எனக்குள் இல்லை....)


  6. #176
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

    re: COMMENTS thread - Loverís Corner - Thread for Love Marriage Couples

    இப்படியே போய்கிட்டு இருந்துச்சு எங்க நட்பு படகு.... திடீர்னு ஒரு நாள் ராஜ் நேரா என்கிட்டே வந்து, நான் உன்னை கல்யாணம் பண்ணிக்க ஆசைபடுகிறேன்னு சொன்னங்க..... எனக்கு ஒரு நிமிஷம் ஒண்ணுமே புரியலை, அவங்களை வம்பு இழுத்து என்கிட்டே பேச வச்சது எல்லாம் சும்மா விளையாட்டுக்குதான், பெண்களிடம் பேசாத ஆசாமியை பேச வைக்கனும்னு ஒரு குருகுறுப்புதான்.... வேற ஒன்னும் இல்லை.....
    ஆனா அவங்க சடார்னு அப்படி சொன்னதும் நான் தேடி போனது அகிலாவை.....


    எந்த கெட்ட பழக்கமும் இல்லை, குடும்பமும் நல்ல குடும்பமா தெரியுது, உன்னோட விளையாட்டுதனத்துக்கு ஏத்த ஆளு, படிப்பும் நல்லா இருக்கு, இன்னிக்கு இல்லேனாலும் நிச்சயம் ஒரு நாள் பெரிய ஆளா வருவார், இந்த கொஞ்ச நாளில் உன்னையும் நல்லா புரிந்து வைத்து இருக்காங்க, அதுவும் இல்லாம "நான் உன்னை லவ் பண்ணுறேன்னு சொல்லாம நேரடியா கல்யாணம் பண்ணிக்க ஆசைபடுறேன்னு சொன்னதும் நல்லா இருக்கு, so நீயே யோசி, யோசிச்சி நல்ல முடிவா எடுன்னு சொல்லிட்டாங்க.....


    நான் யோசிக்க டைம் கேட்டேன்.... என்னோட காலேஜ் friend ப்ரியான்னு ஒருத்தி எனக்கு ரொம்ப க்ளோஸ்... அவகிட்ட என்ன செய்யலாம்னு கேட்டேன், அவளும் அகிலா சொன்னதையே சொன்னா.... இது உன்னோட வாழ்க்கை, நீயே முடிவு எடுன்னு சொல்லிட்டா.. இப்படி எனக்கு வரவே வராத ஒண்ணை(யோசிக்கிறது...) பண்ண சொன்னா நான் என்ன பண்ணுவேன்.... திரும்ப நான் போய் நின்ன இடம்....(சொன்னா சிரிப்பிங்க....)


  7. #177
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

    re: COMMENTS thread - Loverís Corner - Thread for Love Marriage Couples

    வேற எங்க ராஜ்கிட்டதான்.... அவங்ககிட்டயே போய் எனக்கு என்ன பண்ணுறதுனே தெரியலை, நீங்களே சொல்லுங்கநு சொன்னேன்....
    சிரிச்சாங்க.... "உங்க அம்மா உன்னை பெத்தாங்களா இல்ல ஆர்டர் கொடுத்து செஞ்சாங்களான்னு "கேட்டாங்க....
    "ஏன் இப்படி கேட்க்குரிங்க"
    "இல்ல செய்யும்போது மூளை மூளைநு ஒன்னு இருக்குமே, அதை வைக்காம விட்டுட்டாங்க போல இருக்கு... " அதுதான் கேட்டேன்னு சொன்னங்க....
    எனக்குதான் மூளை இல்ல, உங்ககிட்ட இருந்தா கொஞ்சம் கடன் கொடுங்கன்னு சொன்னேன், கடன்லாம் கொடுக்கலை, உனக்கும் சேர்த்து நானே யோசிக்கிறேன், நீ ஏன் கூட மட்டும் இரு போதும்னு சொல்லிட்டு போய்டாங்க....
    (இப்பவும் என்ன செய்யுறதுன்னு தெரியலை.....)


  8. #178
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

    re: COMMENTS thread - Loverís Corner - Thread for Love Marriage Couples

    எங்க கதையை விட்டேன்.....
    ம்ம்ம்... ராஜ்கிட்டாயே போய் நின்னேன்னா , அவங்க சொன்ன பதிலால் கொஞ்சம் யோசிக்க (இல்லாத மூளையை தட்டி) ஆரம்பிச்சேன்...., நிச்சயமா என்னோட குணத்துக்கு திடீர்னு வர மாப்பிளையை கல்யாணம் பண்ண முடியாது, என்னை நல்லா புரிஞ்சிகிட்ட ஒருத்தர் இருந்தா நல்லாத்தான் இருக்கும்னு தோணுச்சு....அப்புறம் நிறைய காரண காரியங்களை அலசி ஆராய்ந்து ,
    "நமக்கு வாய்த்த அடிமை மிகவும் புத்திசாலின்னு " முடிவு பண்ணி ஓகே, போனா போகுது, பொழைச்சி போகட்டும்னு ராஜ்கிட்ட போய் என்னோட சம்மதத்தை சொன்னேன்.....
    (அவங்களும் அன்றிலிருந்து இன்று வரை, எவ்வளவு அடித்தாலும் தாங்குறாங்க......)


    அப்புறம் என்ன, எல்லா காதலர்கள் மாதிரி நாங்களும் எந்த கவலையும் இல்லாம பறந்து திரிந்தோம்..... அவங்க relative பசங்க மாதிரியே நானும் ராஜை மாமா நு கூப்பிட ஆரம்பிச்சேன்.... ஒரு விளையாட்டுக்கு கூப்பிட ஆரம்பிச்சது இன்று வரை தொடர்கிறது......


    இப்படி ஜாலியா போய்கிட்டு இருந்த எங்கள் வாழ்வில், ஒரு ட்விஸ்ட்....
    ஒரு நாள் வேலை முடிந்து என்னை ஹாஸ்டலில் விட அவங்களும் என் கூட பஸ்சில் வரும்போது,.... நாங்கள் பின்னாடி சீட்டில் உட்கார்ந்து இருந்தோம்..., முன்னாடி நின்னுகிட்டு இருந்த ஒரு பையன் எங்களையே முறைச்சி முறைச்சி பார்க்கிறான்னு தோணுச்சு , உடனே
    "மாமா, அவன் நம்மளையே முறைச்சி பார்க்கிறான்னு..." சொன்னேன்....
    அவங்களும் பார்த்துட்டு, "அடி பாவி, காரியத்தையே கெடுத்தியேநு " திட்டினாங்க....


    ஏன்னு புரியலையா, அந்த பையன் அவங்க சித்தி பையன்.... அங்க இவங்களோட குடும்பத்துல பாதி பேர் நின்னுகிட்டு இருந்தாங்க.....
    எல்லாரும் எங்களையே பார்த்தாங்க..... அப்புறம் என்ன, இவங்ககிட்ட வந்து, அவளை போய் விட்டுட்டு வா, உன்கிட்ட பேசணும்னு சொல்லிட்டு போய்ட்டாங்க....


    ஹாஸ்டல் போன எனக்கு தூக்கம் வரும்கிரிங்க....??


  9. #179
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

    re: COMMENTS thread - Loverís Corner - Thread for Love Marriage Couples

    இரவு முழுவதும் அங்க விசாரணை நடந்து இருக்கு..... அவர்களும் என்னை கை கழுவி விட முடிந்த வரை போராடி பார்த்து இருக்கிறார்கள்.... ஆனால் ராஜ், கல்யாணம் பண்ணினால் அவளைத்தான் பண்ணுவேன், இல்ல எனக்கு கல்யாணமே வேண்டாம்னு சொல்லிட்டு வந்துட்டாங்க..... அடுத்த நாள் சென்டருக்கும் வரலை..... எனக்கு என்ன பண்ணுறதுனே தெரியலை.....


    அழுது அழுது முகமே வீங்கி போச்சு..... அதுக்கு அடுத்த நாள் வந்து என்னை வயலூர் முருகன் கூப்பிட்டு போய் "இந்த உலகத்துலேயே நான் மதிக்கும் எங்க அம்மா மேல சத்தியமா, உன்னைத்தான் கல்யாணம் பண்ணுவேன்" அப்படின்னு சொன்னங்க....


    அப்புறம் யாரை பத்தியும் நானும் கவலை படலை.... எங்க வாழ்க்கையை மேம்படுத்த என்ன பண்ணலாம்னு யோசிச்சு, vc ++ கோர்ஸ் ஜாயின் பண்ணினோம்.... ஒரு நாள் அங்க பைக்ல போகும்போது அவங்க மாமா பார்த்துட்டாரு..... (அவரு பெண்ணை ராஜுக்கு கல்யாணம் பண்ணி தரணும்னு ஒத்தை காலுல நிக்கிரவரு...)
    அடுத்து என்ன நடந்து இருக்கும்னு சொல்லவே வேண்டாம், வேற என்ன, அடுத்த விசாரணை கமிஷன்.....


    அதையும் சமாளிச்சு வந்தாங்க... இப்போ விஷயம் அவங்க வீட்டுக்கு போய்டுச்சு... அவங்க அம்மா, "தம்பி, இது எல்லாம் நம்ம குடும்பத்துக்கு ஒத்து வராது..., உனக்கு ஒரு தங்கை இருக்கா, அவளுக்கு கல்யாணம் பண்ணனும்... அது மட்டும் இல்ல, அவங்க வேற --- , நாம வேற ----"
    அப்படி இப்படின்னு சொல்லி இருக்காங்க....


    அதுக்குள்ள அவங்க அப்பா, எங்க ஊருல எங்களை பத்தி விசாரிச்சிட்டு, "அவங்க அங்க ரொம்ப பெரிய ஆளுங்க, அது மட்டும் இல்லாம, அந்த ஊரு ஆளுங்க எல்லாம் முரட்டு தனமானவங்க .... " அப்படின்னு சொல்ல..., அதை கேட்டு என் மாமியார் இன்னும் அழ ஆரம்பிச்சிட்டாங்க ....
    "ஐயோ தம்பி..., நீ எனக்கு தலைச்சன் பிள்ளைடா..., நீ உயிரோட இருக்கணும், அவங்க விஷயம் தெரிஞ்சா உன்னை கொன்னு போட்டுடுவாங்க... வேண்டாம்டா.... அப்படின்னு சொல்ல....


    நம்ம ஆளு, அம்மாவுக்கும் அப்பாவுக்கும் நடுவுல மாட்டிகிட்டு என்ன பேசுறதுன்னு தெரியாம முழிச்சிக்கிட்டு இருந்து இருக்காங்க.... கடைசியில ஒன்னும் சொல்லாம போய் படுத்துட்டாங்க..... சரி நம்ம பையன் நம்ம பேச்சை கேட்டு அவளை மறந்துடுவான்னு நினைச்சி அவங்களும் நிம்மதியா இருந்து இருக்காங்க.... (பாவம், அந்த நிம்மதி கொஞ்ச நேரத்துக்குதான்ன்னு அவங்களுக்கு தெரியலை....)


  10. #180
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

    re: COMMENTS thread - Loverís Corner - Thread for Love Marriage Couples

    அதுக்கு பிறகு அவங்க வீட்டிலதான் விஷயம் தெரிந்து விட்டதேனு ரொம்ப தைரியமா சுத்த ஆரம்பிச்சோம்....


    நான் வார இறுதியில் எங்க ஊருக்கு போவேன்.... முன்னாடி எல்லாம் தனியாதான் போவேன்..., ஆனா இப்போதான் , எனக்கு ஒரு அடிமை சிக்கி இருக்கே, அது என் கூட வந்து எங்க ஊரில விட்டுட்டு போவாங்க.... இதுவும் கொஞ்ச நாள் நடந்துச்சு....


    கடவுளும் " நடத்து மவளே நடத்து"நு கொஞ்ச நாள் விட்டு பிடிச்சி இருந்து இருக்காரு போல.... கொஞ்ச நாள் கழிச்சி பஸ்சில் எங்களை பார்த்த எங்க குடும்ப விசுவாசி நேரா போய் எங்க அம்மாகிட்ட சொல்லிடுச்சு.... எங்க அம்மாவும் ஒன்னும் கேட்கலை.... so எனக்கும் அதுவும் தெரியலை.... கடைசியில பார்த்தா எங்க அம்மாவும் என்னை விட்டு பிடிக்க நினைச்சி இருந்து இருக்காங்க....


    அப்புறம் என்ன, ஒரே கலாட்டாதான்.... நான் முன்னாடியே சொன்ன மாதிரி எங்க வீட்டில நான் செல்லம், அதனால யாரும் மறுப்பு சொல்ல மாட்டாங்க, என் இஷ்டத்துக்கு குறுக்க நிக்க மாட்டாங்க, ஓகே சொல்லிடுவாங்கனு நான் நினைச்சது அனைத்தும் புஸ் ஆயிடுச்சு.... ஒரே சண்டை.... எங்க அம்மாவும் அப்பாவும் முடியவே முடியாது.... மறந்துடுன்னு சொல்லிட்டாங்க.... திரும்ப என்னால திருச்சி போக முடியலை.....


    எனக்கு வீட்டு காவல்.... வெளியில வரவே முடியலை.... இப்படியே ஒரு வாரம் போச்சு.... இந்த நேரத்துல எங்களுக்கு ஹெல்ப் பண்ணினது என் பிரியா... அவ எனக்கு போன் பண்ணினா...., அவதானேநு என்னை பேச விட்டாங்க.... ஆனா அதுக்கு பிறகு பேசியது ராஜ்... என்னால பேசவும் முடியலை.... அழுகையா வந்துச்சு.... அவங்க "நீ எதுவுமே பேச வேண்டாம், நான் கேட்கிறதுக்கு ஆமாம் இல்லைன்னு பதில் சொல்லு"நு சொன்னங்க... நானும் சொன்னேன்....


    அப்புறம் இப்படியே ரெண்டு மூணு மாசம் போய் இருக்கும்.... அதுக்கு பிறகு நான் டெல்லியில் இருக்கும் எங்க அக்கா வீட்டுக்கு அனுப்ப பட்டேன்....


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter