Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine December! | All Issues

User Tag List

Like Tree433Likes

Loverís Corner - Thread for Love Marriage Couples


Discussions on "Loverís Corner - Thread for Love Marriage Couples" in "My Better half" forum.


  1. #181
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

    re: COMMENTS thread - Loverís Corner - Thread for Love Marriage Couples

    Quote Originally Posted by accool View Post
    thenu sis neenga oru post la kajini mathiri padaiyeduthen nu sonnneengale anna kita pesa....... actual antha example anna ku than sollanum......... ethana peru evlo pechu vanthalum anna love kaga poradi irukaru...........

    adutha naal center ku varalana tension era than seiyum............

    wow super........ crt time la seiyavendiyathu senjitaru....... ungaluku nambikai kuduthutaru........ super anna..........

    sontha oorukulla ethana thadava pa maatuveenga....... pathu ooru sutha kudatha.............adhum antha mama vera otha kaalula nikkarara.......

    amma oda kavalai niyayamanathu than...... thangai life ennagumonu sonnangale adha sonnen........

    acho amma romba bayanthutanga pola iruke..........

    hmm anna yen onnum sollama poi padutharu.........

    sis neenga serial story writer mathiri bracket la sus vachu mudicheenga.......

    but konja nerathula anna enna panninaru nu solllave illaye.........

    ஒன்னும் பண்ணலை.....
    எதுவுமே பேசாம அடுத்த நாள் திரும்பவும் என்னை பார்க்க வந்துட்டாங்க.....
    அவங்க அம்மா, பையன் மனசு மாறிடுவான்னு திரும்ப இதை பத்தி எதுவுமே பேசலை.....
    அதுதான் அப்போ நடந்துச்சு.....


    Sponsored Links
    jv_66 likes this.

  2. #182
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

    re: COMMENTS thread - Loverís Corner - Thread for Love Marriage Couples

    என்னை டெல்லிக்கு அனுப்புனா மட்டும் நாங்க சும்மா இருந்துடுவோமா.... அங்கயும் ஒரு spy வச்சி இருந்தோம்ல.... ராஜோட நண்பன் ஒருத்தர் அங்க வேலை செய்துகிட்டு இருந்தாரு..... அவரை பிடிச்சாங்க.... அப்புறம் நானும் கொஞ்சம் வேஷம் போட்டு, எல்லாத்தையும் மறக்க வேலைக்கு போறேன்னு சொன்னேன்.... நம்பிட்டாங்க.....


    so வேலைக்கு போக ஆரம்பிச்சேன்.... அப்புறம் என்ன பேசுறது கஷ்டமா என்ன.... வழக்கம் போல போன் & மெயிலில் எங்க தொடர்பு இருந்துச்சு.... நாங்க பார்த்து 1 வருடத்துக்கும் மேல ஆச்சு..... எனக்கு அவங்களை பார்க்கனும்னு தோணுச்சு...., சொன்னேன்....


    அடுத்த 2 நாளில் வந்து நின்னாங்க..... இதுக்கு நடுவுல அவங்க வீட்டில ஏகப்பட்ட குழப்பம்.... எல்லாத்தையும் சமாளிச்சி நின்னாங்க.... அவங்க தங்கைக்கு எதுவும் அமையலை.... என்ன பண்ணுறதுனே தெரியலை....
    இவங்களையும் ரொம்ப கட்டாய படுத்தி இருக்காங்க, என்னை மறக்க ...


    இவங்களுக்கு என்னதான் அம்மா மேல பாசம் அதிகம்னாலும் , அவரிடம் ப்ரீஆ பேச மாட்டாங்க...., சித்திகிட்ட போய் " அவளை எனக்கு கல்யாணம் பண்ணி வைங்க, இல்லேனா நான் செத்துடுவேன்ன்னு " சொல்லி இருக்காங்க.... அதுக்கு பிறகுதான் கொஞ்சம் மனசு மாறி இருக்காங்க....


    இதுக்கு நடுவுல ஒன்னு சொல்ல மறந்துட்டேனே... இதுக்கு எல்லாம் முன்னாடி, அதாவது நான் டெல்லி போறதுக்கு முன்னாடி (எங்க வீட்டுக்கு விஷயம் தெரியுரதுக்கு முன்னாடி) ஒரு நாள் அவங்க சித்தி வந்து என்னை பார்க்கனும்னு சொல்லி சென்டேருக்கே வந்துட்டாங்க....


    ஒரு friend வீட்டுல வச்சி எனக்கு ஏகப்பட்ட அட்வைஸ்... (ஏன்னா அவங்க நாத்தனார் பெண்ணை ராஜ்க்கு கல்யாணம் பண்ண அவங்க பிளான் போட்டு இருந்தாங்க.....) ..... நான் என்ன செய்வேன்னு தெரியாதா..... வழக்கம் போல பஞ்சுதான்..... அவங்ககிட்ட பேசி முடிச்சிட்டு திரும்ப என்னை கொண்டு போய் ஹாஸ்டலில் விட ஒரு காரில் போய்கிட்டு இருந்தப்ப(நண்பர்களுடன்) , ஒரு இடத்தில நிறுத்திட்டு நண்பர்கள் டீகுடிக்க போய்ட்டாங்க.... அப்போ ஒரே அழுகை சத்தம்..... என்னடான்னு திரும்பி பார்த்தா என் செல்லம் அழுதுகிட்டு இருந்துச்சு.....
    "என்னை விட்டு போய்டாதேன்னு" என்னை கட்டி பிடிச்சிக்கிட்டு ஒரே அழுகாச்சி.... அந்த தண்ணீர் கடலில் விழுந்தவதான் டெல்லி போயும் எழும்ப முடியலை.....


    Back டு டெல்லி...


  3. #183
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

    re: COMMENTS thread - Loverís Corner - Thread for Love Marriage Couples

    Quote Originally Posted by accool View Post
    nan enna ketten neenga enna solreenga..........

    reply kuda editing work panni reply pannuveenga pola.........

    phone matter kettu irunthe ....
    athula enna vazhakkam pola.....

    ராஜ் : என்ன திட்டுராங்களா....
    நான் : ஆமாம்...
    ராஜ் : அடிக்கிறாங்களா...
    நான் : இல்லை...
    ராஜ் : ஒழுங்கா சாப்புடுரியா
    நான் : ஆமா..இல்லை...
    ராஜ் ; தைரியமா இரு....
    நான் : ஓகே..
    ராஜ் : நான் இருக்கேன்.... எல்லாத்தையும் நான் பார்த்துக்கிறேன் .... கவலைபடாதே ....
    நான் : ம்ம்ம்....
    ராஜ் : அழுவாத.... எப்பவும் போல இரு....
    நான் : ம்ம்ம்ம்...
    ராஜ் : அவங்க எது சொன்னாலும் சரின்னு சொல்லு...
    நான் : மாட்டேன்
    ராஜ் : சொல்லு... நான் பார்த்துக்குறேன்....
    நான் : ம்ம்ம்
    .
    .
    .
    .
    .
    .


    ராஜ் : ஏதாவது பேசணும்னா நான் ப்ரியாவை விட்டு பேச சொல்லுறேன்..ஓகே வா....
    நான் : ம்ம்ம்ம்ம்
    ராஜ் : மாமா இருக்கேன்.... எதுக்கும் கவலைபடாம போய் நல்லா சாப்பிட்டு தூங்கு.....
    bye ......


    இப்படிதான் பேசினோம்னு நினைக்கிறேன்.....பாதி மறந்து போச்சு.....
    போதுமா சிந்து.....


  4. #184
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

    re: COMMENTS thread - Loverís Corner - Thread for Love Marriage Couples

    Quote Originally Posted by accool View Post
    ஹையா அங்கயும் ஆள பிடிச்சாச்சா........

    நல்லாவே நடிச்சிருபீங்க போல இருக்கே..........

    1 வருஷம் பார்க்காம இருக்கறது ரொம்ப கஷ்டம் தான்..........

    அச்சோ அண்ணா இப்படிலாம் பேச வேண்டி இருந்துருக்குல.........

    ஒ இவங்களும் அந்த ஒத்த காலுல நின்ன மாமாக்கு சப்போர்ட்டா.......

    ஹா ஹா ஹா அங்கயும் பஞ்சு தானா.........எங்க அண்ணா பாசத்துல பேசினதுக்கே பஞ்சு .... இப்போ லவ் கலைச்சுவிட பேசினா கேட்டுருவான்களா.........

    அச்சோ அவங்க பேசினதுல உங்கள விட அண்ணா தான் பயந்துட்டார் போல இருக்கே........

    அந்த தண்ணீர் , காதல் கடல் ல இருந்து நீங்க எப்பவுமே எழ வேண்டாம் அக்கா..........

    ஆமா உங்க காதல் பயணம் எத்தனை வருஷம் நடந்து பிறகு திருமணத்திற்கு வந்துச்சு..........

    ஆமா... எங்க போனாலும் ஆள் பிடிப்போம்ல.....
    உங்க வீட்டு நடிப்பு இல்ல, எங்க வீட்டு நடிப்பு இல்ல.... உலகமகா நடிப்புடா சாமி.....(எனக்கே தாங்கலை.....)
    ஐயோ சிந்து..... இந்த சித்தி அந்த மாமாவுக்கு சப்போர்ட் இல்ல...., இவங்க வேற பெண்ணுக்கு சப்போர்ட்....
    இல்ல சிந்து..... நானே அந்த கடலில் இருந்து கொஞ்சம் மேல வந்து மூச்சு விட்டுக்கலாம்னு பார்த்தாலும் திரும்ப அந்த அன்பு கடலில் மூழ்க வச்சுடுறாங்க ராஜ்..... என்ன செய்ய.....!!!

    எங்களுடைய காதலுக்கு கிட்டத்தட்ட 10 வருடம் ஆகா போகிறது....
    கல்யாணத்துக்கு முன்னாடியே 2 வருடம். மேல ... இப்போ 7 வருடம்.....

    jv_66 and charvi.eswari like this.

  5. #185
    dania's Avatar
    dania is offline Penman of Penmai
    Blogger
    Yuva's of Penmai
    Real Name
    நிதா
    Gender
    Female
    Join Date
    May 2012
    Location
    Germany
    Posts
    9,136

    re: COMMENTS thread - Loverís Corner - Thread for Love Marriage Couples

    Quote Originally Posted by srimathykrish View Post
    என்ன நிதா நீங்களும் நம்ம பெண்மை ரைட்டர்ஸ் போல
    இப்படி விட்டுட்டு போய்டீங்களே
    சீக்கிரம் வந்து உங்க மீதி வாழ்க்கையை பகிர்ந்துகோங்க. உங்களோட முதல் பாதி படித்து விட்டு கொஞ்சம் கஷ்டம் ஆகிடுச்சு. ஆனா இப்போ நீங்க ரொம்ப நல்லாவே இருக்கீங்கன்னு தெரியும் போது மனசுக்கு ரொம்ப மகிழ்ச்சி.
    "நீங்க நடந்து வந்த பாதை வேண்ணா முட்பாதையா இருக்கலாம். ஆனா இப்போ நீங்க குடும்பம் என்னும் சோலையில் இருப்பதற்கு அந்த பாதையை கடக்க வேண்டியது அவசியம்"

    எதாவது அதிகமா சொல்லிட்டனோ
    (இல்ல தானே)

    ஹாய் மதி,

    நீங்க எதுவும் அதிகமா சொல்லலைப்பா....ரொம்ப சரியாதான் சொல்லி இருக்கீங்க...

    மீதியும் போட்டுட்டேன்...பாருங்க...

    அப்படியான முட்பாதை எனக்கு மட்டும் இல்ல...அங்க நிறைய பேருக்கு அப்படித்தான்...

    அம்மா அப்பா பார்த்திட்டு இருப்பாங்க...எப்படா 18 வயது வரும் கட்டி குடுத்திடுவோம் என்று....

    நான் ரொம்ப உயரம்...தோற்றமான ஒரு ஆள்...ஒரு தடவை எனக்கு பள்ளில டெஸ்ட் நடக்கபோகுது...ஆர்மி எங்க சந்தில நிக்கிறாங்க...நான் போயி ஆகணும்...

    அதனால என்ன செய்தோம் தெரியுமா....

    எங்க பக்கத்து வீட்டு அக்காவோட பையனுக்கு அப்போ 6 மாதம்...அம்மாவும் நானும் அவனை நான் தூக்கிட்டு அந்த சந்தியால போனோம்...

    அதோட அர்த்தம்...பாக்கிறவங்களுக்கு அது என்னோட பையனா தெரியும்...அப்படி ஏதும் என்றால் ஆர்மி பெருசா கண்டுக்க மாட்டாங்க...

    இப்படி எல்லாம் கஷ்டப்பட்டுதான் படிச்சிருக்கேன்....இப்படி நிறைய விஷயங்கள் நடந்து இருக்கு....

    அப்படி பார்க்கும்போது...இப்போ உயிரோட நின்மதியா வாழ்கிறேன் என்றால் அன்று எனக்கு கஷ்டமா தோன்றிய ஒன்று நடந்ததால்தான்...

    வாழ்க்கை வாழ்வதற்கே!!!!

    வாழ்ந்துபார்

    வாழ்வின் ருசி அறிவாய்!!!!



  6. #186
    dania's Avatar
    dania is offline Penman of Penmai
    Blogger
    Yuva's of Penmai
    Real Name
    நிதா
    Gender
    Female
    Join Date
    May 2012
    Location
    Germany
    Posts
    9,136

    re: COMMENTS thread - Loverís Corner - Thread for Love Marriage Couples

    Quote Originally Posted by ushhh View Post
    நிதா,

    ஆனா ஒரு விஷயம்...எந்த பெண்ணிற்க்கும் திருமண பேச்சு ஆரம்பித்தவுடனே அதிரிச்சியாய் இருக்கும்...நான் mca படிச்சுகிட்டு இருக்கிறப்ப ஆரம்பிச்சப்ப ரெம்ப அழுதது நியாபகம் வருது.

    ஆனா உன்னோட வயதில் பெரிய அதிர்ச்சி தான்.... உன்னோட அப்பா நிஜமாவே ஆசம்.... நீ ரெம்ப blessed. ஒன்னு ஒரு நல்ல அப்பா கிடைச்சது, ஒன்று நல்ல கணவர் கிடைச்சது, மற்றொன்று மிக மிக முக்கியமாக நல்ல தோழன் கிடைத்ததற்கு....(கண்ணு போடுறேன்னு சொல்ல கூடாது...எனக்கும் இது மூன்றும் கடவுள் கொடுத்திருக்கிறார்)
    ஒரு நல்ல தோழன் கிடைப்பது அரிது அதுவும் பள்ளி பருவத்தில்...

    ரெம்ப நெஞ்சை தொடும் விதமாக இருக்கிறது உன் கதை...
    இதை சொல்லும் போது உன் மனம் மறுபடியும் அந்த இழந்த இளமையை நினைத்து ரணப்பட்டு இருக்கலாம்...

    (உன் திருமணமான வயதை பார்க்கும் போது எனக்கு கொஞ்சம் காதல் ரதியே கதை தான் ஞாபகத்துக்கு வருது....பிரபு கொஞ்சம் கஷ்டப்பட்டு தான் போய் இருப்பார்)

    ஆனா, நிதா இப்போ உங்க அம்மாகிட்ட "தள்ளிவிட்டீங்களே "ன்னு சொல்லு...அவங்க "ஆமா...அது 100% உண்மை...எங்களால பிரபு அளவுக்கு உனக்கு செல்லம் கொடுக்க முடியாது"ன்னு சொல்லுவாங்க
    உஷா....

    இதை சொல்ல நினைத்தாலே என்னுடைய கண்ணுல கண்ணீர்தான் ஓடுது....

    ஆமாம்....வாசன் இப்போ உயிரோட இல்லபா....என்னுடைய வாழ்க்கையில நான் இழந்த பெரிய பொக்கிஷம்...அவன்...

    திருமணத்துக்கு நான் இந்தியா போகும்போது கடைசியா பார்த்தேன்...இலங்கை விமானநிலயத்துல வச்சு சொன்னான்....

    நீ நல்லா இருப்படி...ஆனால் பிரபு அண்ணாவோட நிலையை யோசிக்கும்போதுதான் கவலையா இருக்கு...

    ஆனாலும் நீ பாசக்கார மோசக்காரி...நீயும் அவரை நல்லா பார்த்துக்கொள்...என்று சொன்னான்....

    அதுதான் அவன் என்னிடம் நேரடியாக பேசிய கடைசி வார்த்தைகள்...

    திரும்ப இலங்கை போனபோது அவன் வவுனியாவுக்கு வரமுடியாத நிலை...

    பிறகு நான் ஜெர்மனி வரபோறேன் என்று கடிதம் போட்டதுக்கு எனக்கு ஒரு ஆல்பம் அனுப்பி இருந்தான்...அதுல நான் பிரபு எங்களுக்கு பிறக்க போற குழந்தைகள் போடோ எல்லாம் போட்டு தனக்கு எப்பவாவது அனுப்பு என்று சொன்னான்...

    பிறகு நான் இங்க வந்துவிட்டேன்....அவனுக்கும் எனக்குமான தொடர்பும் விடுபட்டு விட்டது....அவன் எங்க இருக்கிறான் என்றுகூட தெரியாம இருந்தேன்...

    2009 இலங்கை போனபோது மிகவும் சந்தோசத்தோட எனக்கு தெரிந்த கடைக்கு tpபோட்டு ரொம்ப கஷ்டப்பட்டு...அவன் வீட்டு நம்பர் எடுத்து அங்க கேட்டால்...அவன் சுவிசுக்கு வந்து 2 வருடம் என்றார்கள்...

    பிறகு அவனோட நம்பர் கேட்டு இலங்கையில இருந்து சுவிசுக்கு போனபோட்டு கேட்டால்...அங்க இருக்கிறான்...

    எனக்கு சொல்லலை என்று திட்டு என்றால் செம திட்டு...அதுக்கு அவன் சொன்னான்...விசா கிடைத்த பிறகு...நேர்ல வந்து உனக்கு அதிர்ச்சி வைத்தியம் தருவோம் என்று இருந்தேன் என்றான்....

    பிறகு ஜேர்மன் நான் வந்த பிறகு ஏற்க்கனவே லீவ் எடுத்ததால பிரபுக்கு லீவ் இல்லை..அதால நேர போய் பார்க்கும் சந்தர்ப்பமும் கிடைக்கலை...

    Tpமட்டும்தான் கதைப்போம்....

    எங்களுடைய நட்பையும் பாசத்தையும் பார்த்து கடவுளுக்கே பொறாமை போலும்...தன்னிடம் அழைத்துக்கொண்டார்...

    பெருபாலும் சொல்வார்கள்...பெண்களுக்கு நட்பு என்பது திருமணம் நடக்கும் வரைதான் என்று...அதுவும் ஆண் நண்பர்கள் என்றால் சொல்லவே வேண்டாம்...

    எனக்கோ...எல்லாம் தலைகீழாய்...

    எங்கள் திருமணத்திற்கு பிறகு..பிரபுவும் அவனும் நல்ல தோழர்கள்....

    ஓர் கார் விபத்தில அவன் என்னை விட்டு சென்றுவிட்டான்...

    நான் அவனுடைய இறுதிசடங்குகள் எதுக்குமே போகலை...அப்படி போய் இருந்தால் அவனை அந்த நிலையில் நான் பார்த்திருந்தால் என் உடலில் உயிர் தங்கி இருக்குமா என்பதே சந்தேகம்....

    என் வாழ்வின் இறுதிவரை என்னால் மறக்க முடியாத உறவுகளில் அவனும் ஒருவன்....

    அதேபோல நான் மறக்க நினைக்கும்...அனால் மறக்க முடியாமல்தவிக்கும் ஒரு உறவும் அவனே....

    வாழ்க்கை வாழ்வதற்கே!!!!

    வாழ்ந்துபார்

    வாழ்வின் ருசி அறிவாய்!!!!



  7. #187
    dania's Avatar
    dania is offline Penman of Penmai
    Blogger
    Yuva's of Penmai
    Real Name
    நிதா
    Gender
    Female
    Join Date
    May 2012
    Location
    Germany
    Posts
    9,136

    re: COMMENTS thread - Loverís Corner - Thread for Love Marriage Couples

    Quote Originally Posted by sujibenzic View Post
    Nitha super...

    anna super plan panni ungaloda kadhaichirukkaanga....evvalavu technique..

    approm phonela sema kadalaiya?


    piragu enna aachu?

    unga full name Nidhana va...rombavum azhaga irukku..
    நன்றி சுஜானா....

    பாருங்க எதுக்கு எல்லாம் எப்படி பிளான் பண்றாங்க என்று???

    கடலையா....அதெல்லாம் சின்ன வார்த்தை...

    அப்போ எல்லாம் கொமிநிகேஷன் ல சின்ன சின்ன பாக்ஸ் இருக்கும்...அதுல போய்தான் கதைக்கிறது....

    வெளில வரும்போது வேர்த்து நனைந்து குளிச்ச மாதிரியே வருவேன்....

    அங்க வேலை செய்யிற அக்க சொல்லுவாங்க...நிதனா சோப்பும் மாத்து உடுப்பும் கொண்டு வந்தே என்றால் இங்கயே குளிச்சு உடுப்பை மாத்திட்டு போய்டலாம் என்று....

    அந்த கடையில 3 நம்பர் இருந்தது...ஒன்றுள லைன் கிடைக்கலை என்றால் மற்றதுல எடுப்பாங்க...என்னை மாதிரி நிறைய பேர் வந்து காத்திட்டு இருப்பாங்க...

    லேசுல லைன் கிடைக்காது...பிரபு என்ன பண்ணுவாங்க...3 ஹன்டி வச்சு 3 லைன் கும் போனை போடுவாங்க...ஏதாவது ஒன்றுள கிடைச்சிரும்...

    அங்க வேலைசெய்றவங்களே கேப்பாங்க...எப்படிப்பா பிரபுக்கு மட்டும் நீ வந்தோன்ன லைன் கிடைக்குது என்று....

    என்னுடைய முழு பெயர் "நிதர்சினி"...ஆனால் எல்லோரும் கூப்பிடுறது.."நிதனா" or "நிதனி"...

    அதுக்குள்ளே ஒரு "நிதா" வை கண்டு பிடிச்சது பிரபு...

    வாழ்க்கை வாழ்வதற்கே!!!!

    வாழ்ந்துபார்

    வாழ்வின் ருசி அறிவாய்!!!!



  8. #188
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

    re: COMMENTS thread - Loverís Corner - Thread for Love Marriage Couples

    Quote Originally Posted by ramyaraja View Post
    Adapavi thenu feel panni alutha appakuda unaku comedy eppa smy enga veetla ennakepanga eppa than nee seriousa irrupannu .Adamathiri ungala kekannumnu irruku.
    oru chinna mamiyar vanthu advice enra perla meratannakuda bayapadama irukara nee singam than sellam.

    ஐயோ பயம் இல்லாம இல்ல ரம்யா.....
    அது எல்லாம் நிறையவே இருந்துச்சு..... ஆனா அவங்க ராஜை விட்டு போய்டுன்னு சொன்னது பிடிக்காமதான் அவங்க பேச்சை கேட்க்காம சத்யாகிரகம் பண்ணினேன்..... (ஆனா, எனக்கு எல்லாம் பில்டிங் strong , basemattam ரொம்ப வீக்.....)

    hrithika, jv_66 and RathideviDeva like this.

  9. #189
    dania's Avatar
    dania is offline Penman of Penmai
    Blogger
    Yuva's of Penmai
    Real Name
    நிதா
    Gender
    Female
    Join Date
    May 2012
    Location
    Germany
    Posts
    9,136

    re: COMMENTS thread - Loverís Corner - Thread for Love Marriage Couples

    Quote Originally Posted by thenuraj View Post
    தேங்க்ஸ் நிது....
    ஓகே..பிரபு நல்லவர் ... அவரோட குடும்பத்தை பற்றி நீ எதுவுமே சொல்லலையே..... அம்மா இல்லைன்னு மட்டும்தான் சொன்னே....
    மற்றவர்கள்.....???
    (ம்ம்ம்.. அப்படிப்பட்ட நல்லவருக்கு இப்படி ஒரு மனைவி.... இதுதான் ஆண்டவன் போட்ட முடிச்சு போல.....)----ஐயோ..... நிது, அடிக்காதே.....

    உன்னோட நன்றியை கொண்டுபோய் குப்பையில போடு....

    அவரை பற்றி நான் பெருசா எதுவுமே சொல்லலை தேனு....

    விளக்கமா சொல்லுவோம் என்றுதான் ஆரம்பிச்சேன்...எனக்கு மறந்து இருந்த பழைய நினைவுகள் மறுபடியும் நினைவு வந்ததுல எதோ ஒரு மனத்தாக்கம்...அதான்...முடிந்தவரை சுருக்கமா முடிச்சுட்டேன்...

    பிரபு அவங்க குடும்பத்துக்கு ஒரே பையன் தேனு...

    சகோதரங்கள் இல்லை...அவர் இங்க வந்து 6 மாதத்துல அவரோட அம்மா இறந்துட்டாங்க...அப்பாவுக்கு இப்போ 96 வயது...

    பேச கொள்ள மாட்டாங்க...அவரோட ஒன்றுவிட்ட அக்கா குடும்பம் தான் இப்போ அவரை பார்த்துக்றாங்க...

    சிலவுக்கு பணம் நாங்க குடுப்போம்...அதனாலையோ என்னவோ..பிரபுக்கு நான் என்றால் உயிர் என்று சொல்றது சாதாரண வார்த்தை...

    என்னுடன் கதைக்கும்போது சொல்லுவார்...

    அத்தான் ஜெர்மனி போன புதுசுல வேலை ரொம்ப தூரத்துல கிடைச்சிருக்கு...வேலை செய்யுற இடத்துல இருந்து வீட்ட போறதுக்கே 2 மணித்தியாலம் பிடிக்குமாம்...

    அப்போ ஒரு தடவை பிரபுவை சந்தித்த பொது..இப்படி என்று கதைக்க...பிரபுதான் தங்குறதுக்கு அத்தானுக்கு இடம் கொடுத்து இருக்கார்...(பிரபுவோட வீடு அத்தான் வேலைக்கு பக்கத்துல...)

    இப்படித்தான் அவங்க ரெண்டு பேருக்கும் பழக்கம்....பிறகு அக்கா இங்க வந்தவுடன் அவங்க தனி வீடு எடுத்து போய்டாங்க...

    அதுக்கு பிறகு இவர் அவங்க வீட்டுக்கு போவாராம்...அங்கதான் என்னுடைய போட்டோ பார்த்து இருக்கார்...

    அதுல நானும் அக்காவும் நிக்கிறோம்...நான் என்னோட நாய்க்குட்டியை தூக்கி கொஞ்சிட்டு இருக்கேன்...அத பார்த்துதான் இவர் கவுந்திருக்கார்...

    எங்க வீட்டுலையே நான்தான் உயரம்....அதுல இவர் நினச்சு இருக்கார்...நான் அக்காவோட ப்ரெண்ட் என்று.....

    அந்த போடோ பார்த்த பிறகு...எதோ ஒரு சாட்டை வைத்து ஒவ்வொரு நாளும் அக்கா வீட்டுக்கு போவாராம்...

    இப்பவும் சொல்லுவார்...அந்த போட்டோவை பார்க்கும்போது(நான் வேற முகம் நிறைய பல்லை காட்டிட்டு நிக்குறேனா...) "எப்படா இவ என்னை பார்த்து இப்படி சிரிப்பா....அதை நான் நேர்ல பார்க்க மாட்டேனா..."என்று அவருக்கு தோணுமாம்....( சிரிக்கும்போது நான் ரொம்ப அழகோ???...அழகுடி நீ நிதா...யாரும் கண் வசுடாதிங்க...)

    ரொம்ப நாளா அத்தானிடம் கேக்கலாமா என்று மண்டையை பிச்சிட்டு திரிஞ்சு இருக்கார்...

    அத்தான் ஒருதடவை....நீ எப்ப கட்ட போரை என்று கேக்கவும்...ஒரு பெண்ணை பிடிச்சு இருக்கு என்றுதான் விஷயத்தை சொல்லி இருக்கார்....

    யாரு என்று அத்தான் விசாரிக்க படத்தை காட்டி இருக்காங்க...அத்தான் விழுந்து விழுந்து சிரிச்சிட்டு சொல்லி இருக்கார்...அந்த பொண்ணுக்கு உன்னை விட 10 வயது குறைவு என்று....


    அதை கேட்டவுடன் செத்துடலாம் போல இருந்துதாம் என்று சொன்னாங்க...

    தொங்கிப்போன இவரோட முகத்தை பார்த்திட்டு அத்தான் சொன்னாராம்...அது பெரிய பிரச்சினை இல்லடா...அவளுக்கு உன்னை மாதிரி பொறுமைசாலிதான் அமையனும்...

    ஆனால் நான் இத செல்வியிடம்(அக்காவோட வீட்டு பெயர்...) கேட்டு சொல்றேன் என்று சொல்லி இருக்கார்...

    இப்படிதான் அவரோட தலை எழுத்து மாறியது...

    உனக்கு ஒன்று தெரியுமா தேனு...நல்லவங்களுக்கு நல்லதுதான் நடக்குமாம்...அதான் அந்த நல்ல பிரபுக்கு நல்ல்ல்ல்ல்ல்ல மனைவி நான் அமைந்து இருக்கேன்....

    hrithika, jv_66, skarthiga and 2 others like this.
    வாழ்க்கை வாழ்வதற்கே!!!!

    வாழ்ந்துபார்

    வாழ்வின் ருசி அறிவாய்!!!!



  10. #190
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

    re: COMMENTS thread - Loverís Corner - Thread for Love Marriage Couples

    ஓகே..... என்னுடைய கதையின் அடுத்த பார்ட்.....
    டெல்லியில் வந்து நின்ன ராஜை பார்த்து நான் திகைச்சி போயிட்டேன், சும்மா ஒரு வார்த்தைக்கு, உங்களை பார்க்கணும் போல இருக்குனு சொன்னா, இப்படியா வேலை எல்லாம் விட்டுட்டு வருவாங்கன்னு....
    அப்புறம் என்ன, அடுத்த 2 நாளும் நானும் வேலைக்கு மட்டம் போட்டுட்டு ஊர் சுத்தினோம்.....


    ரெண்டே நாள்தான்... அடுத்த நாள் கிளம்பும் போது திரும்பவும் அழுகை..... அடுத்து என்ன செய்யுரதுனே தெரியலை.... ஒரு முடிவும் எடுக்க முடியாம திரும்பவும் பிரிந்தோம்.....


    நானும் எங்க வீட்டில் எவ்வளவோ போராடியும் அவங்க சம்மதத்தை வாங்க முடியலை.... இதுக்கு முக்கியமான காரணம் வேறு என்ன ... ஜாதிதான்..... (இதை பத்தி நாம் வேறு எதுவும் பேச வேண்டாம்...) , ஏன்னா அவங்க நல்லா படிச்சி இருக்காங்க, எந்த கெட்ட பழக்கமும் இல்ல, குடும்பமும் நல்லா இருக்கு, வேறு என்னதான் பிரச்சனை உங்களுக்குனு நான் கேட்டப்போ எனக்கு கிடைத்த பதில் இதுதான்.....


    அது மட்டும் இல்ல, என்னோட தாய்மாமன் மகனை (வக்கீல் ) எனக்கு கல்யாணம் பண்ண ரெண்டு குடும்பத்துக்கும் ஆசை..... சொல்ல போனால் எங்க பாட்டியின் ஆசை.... எனக்கும் அவனை பிடிக்கும், ஆனால் கல்யாணம் பண்ணும் எண்ணம் இல்லை....., என்னோட அக்கா, டெல்லியில் வச்சு எனக்கு பிரைன்வாஷ் பண்ணிக்கிட்டு இருக்கா, ராஜாவை(அவன் பேரும் ராஜா) பண்ணிக்கோ , ரெண்டு குடும்பத்துக்கும் நல்லது...., அம்மாவுக்கு இருக்கும் ஒரே உறவு மாமா..., இப்போ நீ அவங்க பையனை பண்ணிக்கலேனா , இருக்கிற அந்த ஒரே உறவும் இருக்காது.... இப்படி அப்படின்னு ஒரே அறுவை....(இந்த நேரத்துல பஞ்சு வைக்க முடியலை...... என்நேரம்.....)


    நானும் ராஜ்க்கு சப்போர்ட் பண்ணி எல்லாம் பேசினேன், அதை எதையுமே அவங்க காதுல வாங்கிக்கலை..... அவங்க பிடிச்ச முயலுக்கு மூணே காலுன்னு ஒரே பிடிவாதம்.... அப்படி இல்ல, இங்க பாருங்க நாலு காலு இருக்குனு நானும் ஒரே அடம்.....


    ம்ஹூம், எவ்வளவு போராடியும் நோ use ..... என் போராட்டங்கள் அனைத்தும் தோல்வியில் முடிந்தது..... ஆனால் அதே சமயம் அங்க, ராஜ் அவங்க போராட்டத்துல ஜெய்ச்சிட்டாங்க....(அதுதான் அவளை பண்ணலேனா செத்துடுவேன்னு மிரட்டி இருந்தாங்களே....)--- இப்போ பந்து என் கையில்...... அதை கையில் பிடித்து வைப்பதா, அல்லது எட்டி உதைப்பதானு முடிவு எடுக்க வேண்டிய நிலையில் நான் இருந்தேன்....


    என்ன முடிவு....??


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter