Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree433Likes

Loverís Corner - Thread for Love Marriage Couples


Discussions on "Loverís Corner - Thread for Love Marriage Couples" in "My Better half" forum.


  1. #191
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

    re: COMMENTS thread - Loverís Corner - Thread for Love Marriage Couples

    கையில கிடைச்ச பந்தை வச்சிக்கிட்டு என்ன பண்ணுறதுன்னு தெரியாம முழிச்சிக்கிட்டு இருந்தேன்..... எவ்வளவு நாள்தான் இப்படி முழிச்சிகிட்டே இருக்க முடியும்....., so துணித்து ஒரு முடிவு எடுத்தேன்.., என்ன ஆனாலும் சரி.., ராஜ்ஐதான் கல்யாணம் பண்ணுவது என்று, அவங்களுக்காக என்ன நடந்தாலும் சமாளிக்கலாம் அப்படின்னு தோனுச்சு....


    நான் எடுத்த முடிவை பத்தி ராஜ்க்கு போன் பண்ணி சொன்னேன்.... ஒரே சந்தோசம்.... அந்த நேரம் அவங்க பக்கத்துல யார் இருந்தாலும் செத்து இருப்பாங்க...., அப்படி ஒரு ஆட்டம்...., கத்தல், ஒரே அடிதடி சத்தம்.... என்னன்னு பாக்குறிங்களா, அங்கயும் இங்கயும் கையால குத்திகிட்டு இருக்காங்க....
    "போதும் குதிச்சது, இனிமே என்ன பண்ணனும்னு யோசிங்க.." அப்படின்னு சொல்லிட்டு போனை வச்சிட்டேன்.... (ஏன்னா , யோசிக்கிறது எல்லாம் அவங்க வேலை....) , என்ன பண்ணி இருப்பாங்கனு நினைக்கிறிங்க, திரும்பவும் டெல்லிக்கு படை எடுத்து வந்தாங்க.....
    என்னடா " படை" நு சொல்லுறேன்னு பாக்குறிங்களா, கூட அவங்க சித்தி பையனும்..... திரும்ப ஊர் சுத்தல்.... ஆனா, போன முறை மாதிரி இந்த தடவை முடிவு எடுக்காமல் போகலை.... ஒரு முடிவோட போனாங்க.....


    கொஞ்ச நாள் கழித்து எடுத்த முடிவை செயலாற்ற எனக்கு போன்.... அது என்ன முடிவுனா --- கல்யாணம்..... ஆமாம், அவங்க வீட்டில் எல்லாரும் ஒத்துகிட்டு அவங்களே எங்களுக்கு கல்யாணம் பண்ணி வைப்பது என்று முடிவு ஆச்சு.....


    சரி.... கடைசியாக ஒரு முறை வீட்டில் பேசி விடலாம்னு எங்க வீட்டில் பேசினேன்.... ம்ஹூம்.... அப்புறம் ஏன் மாமனார் வந்து எங்க ஊர் இன்ஸ்பெக்டர் வச்சு எங்க வீட்டில் பேசுனாரு.... அப்போவும் நோ usu ....
    அவரும் கடுப்பாயிட்டாரு.....


    "இது ஒன்னும் ஒத்து வராது..... அந்த பொண்ணை கிளம்பி வர சொல்லுடா..., நாம பார்த்துக்கலாம்னு" சொல்லிட்டாரு.....
    (எப்படிடா, இவரு இவ்வளவு தீவிராம எனக்காக களம் இறங்கினாருனு கேட்கிறிங்களா, என்னோட போட்டோவை ராஜ் அவங்க அம்மா அப்பாகிட்டே காமிச்சி இருக்காங்க..., அதை பார்த்ததும் ரெண்டு பேருக்கும் பிடிச்சி போச்சு..... அப்புறம் நான் ரொம்ப சின்ன பிள்ளை மாதிரி இருந்தேன்னா --- அதுதான்....)


    அப்புறம் என்ன போலீஸ் மாமனாரே சொல்லிட்டாரே , இனிமே என்ன பயம்.... நானும் துணிந்து விட்டேன்.....


    Sponsored Links

  2. #192
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

    re: COMMENTS thread - Loverís Corner - Thread for Love Marriage Couples

    இதுக்கு மேலயும் எங்க வீட்டில எதுவும் மறைக்க கூடாதுன்னு எல்லாமே சொல்லிட்டேன்.... அவங்க கிளம்பி வர சொல்லுறாங்க...., நான் என்ன செய்யட்டும், நீங்களே சொல்லுங்க...
    இந்த ஜென்மத்துல நான் வேற யாரையும் கல்யாணம் பண்ணுறதா ஐடியா இல்லை, அப்படியே நீங்க கட்டாயபடுத்தி பண்ணி வச்சாலும் அந்த தாலி என் கழுத்துல ஏறுறதுக்கு முன்னாடி நான் செத்துடுவேன்னு அழுதேன்.....


    என்னா ஒரு கல்லு மனசுப்பா.... அப்பா கூட மனம் இறங்கலை....
    "ஓகே .... வா, எல்லாரும் சேர்ந்து செத்து போய்டலாம்னு" கொஞ்சம் கூட பாசமே இல்லாம சொன்னங்க....


    இது வேலைக்கு ஆவாது, நம்ம புத்திசாலிதனத்தை காட்டிட வேண்டியதுதான்னு , "நான் ஏன் சாகனும், நான்லாம் சாக மாட்டேன், யாருக்கு சாகனும்னு ஆசை இருக்கோ, சொல்லுங்க...." அப்படின்னு சொன்னேன்னா , எங்க அண்ணன் சிரிச்சிட்டான்......


    அவன் கொஞ்சம் மனம் இளகி, அவதான் இவ்வளவு தூரம் சொல்லுறா இல்ல, சரி அவருக்கே பண்ணி வைப்போம், அதுக்குபிறகு அவ வாழ்க்கையை அவளே பார்துக்காட்டும் அப்படின்னு சொன்னான்....


    இந்த விஷயத்துல எங்க அப்பாவை கூட சமாளிச்சி இருப்பேன் போல, எங்க அம்மா....!! ஓ .... கடவுளே, முடியலை.....
    "அது எல்லாம் முடியாது, அப்புறம் நம்ம சொந்தகாரங்க முன்னாடி நாங்க எப்படி போறது, எங்க மானம் , மரியாதை எல்லாம் போய்டும்..... இதுக்கு நாங்க ஒத்துக்கவே மாட்டோம்னு ஒரே அடம்....


    என்னடா இது ஒன்னு இறங்கி வந்தா ஒன்னு ஏறிக்குதெனு எனக்கு ரொம்ப கவலை....."அட சீக்கிரம் நீங்க எல்லாம் பேசி ஒரு முடிவுக்கு வாங்க, அவங்க கல்யாண தேதி பார்க்க போறாங்கனு "சொன்னேன் பாருங்க.... அவ்வளவுதான் அங்க அப்படி ஒரு அமைதி..... ஒரு நிமிஷம் எனக்கே நான் என்ன சொன்னேன்னு புரியலை....


    அப்போ அவங்க நிலைமை....???

    hrithika, jv_66 and RathideviDeva like this.

  3. #193
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

    re: COMMENTS thread - Loverís Corner - Thread for Love Marriage Couples

    Quote Originally Posted by PriyagauthamH View Post
    Thenu , rombha stressful aa irunthu irukkum la....

    Neenga sonna karanam othukara maathiri illai.... Othuka koodathu nu oru sappaikattu reason .... This is my assumption .... But south side la ithula theeviramo? I have no idea...

    Rendu perukum queue la ninnu irukkanga kalyanam katta.... Enna oru ottrumai.....

    So first Anna side ok .... Good ....

    Pandha 6 adicheengala??

    ithellam ippo yosika sugama, sirippa Kooda irukalaam .... But appo solla mudiyatha vedhanai particularly if you have no one to support you....

    Akila and Priya pesi nagala Delhi la irunthapodhu??

    ஆமா ப்ரியா.....
    அதுதான் காரணம்..... அதை தவிர வேறு ஒன்றும் இல்லை.....
    ஆமா பிரியா.... இப்போ இதை எல்லாம் நினைச்சா சுகமா இருக்கு.... ஆனா அன்னைக்கு நாங்க பட்ட வேதனை இல்லைன்னு ஆகிடுமா.....
    பிரியா & அகிலா பேசினாங்க.....
    என்னோட கல்யாணம் நடந்த கதையை சொல்லுறேன் பாருங்க...., அது இன்னும் வேதனை... இப்போ நினைச்சா கூட நான் அழுவேன்.....
    அதனால்தான் பிரியா, இனிமே யாருமே லவ் marriage பண்ண கூடாதுன்னு சொல்லுவோம்..... இனிமே லவ்க்கு எங்க சப்போர்ட் இல்லை.....!!

    hrithika, jv_66 and RathideviDeva like this.

  4. #194
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

    re: COMMENTS thread - Loverís Corner - Thread for Love Marriage Couples

    Quote Originally Posted by accool View Post
    aachooooo enga anna kai ennagarathu

    evlo poratam manasula irunthurunga ippadi neenga sonnathum avlo santhosham patturuparu.........

    adhana yosikarathu anna ku kuduthacha.........

    antha muraichu partha chithi paiyana sis........

    oh oru family aachum othukitangale .......

    paarungapa appa ve kalam irangitaru..... avarum veetula first pesirukaru good appa...........

    katra vandiya thookuda pullaya......... mathiriya.......

    angayum photo la kavunthutangala.........

    hmmm next next sikiram podunga.........

    இல்ல சிந்து ...
    இது இன்னொரு சித்தி பையன்...( ராஜ்க்கு 3 சித்தி & 2 மாமா --அம்மா சைடு, 2 அத்தை & 2 சித்தப்பா --அப்பா சைடு )
    so ஏகப்பட்ட கூட்டம் ஏன் வரவை எதிர்பார்த்து.....
    அடுத்து சீக்கிரம் போடுறேன்....

    hrithika, jv_66 and RathideviDeva like this.

  5. #195
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

    re: COMMENTS thread - Loverís Corner - Thread for Love Marriage Couples

    Quote Originally Posted by PriyagauthamH View Post
    Thenu, neenga avanga kitta sonnadhu kekkave kashtamaa irukku ....

    Avanga response adhirchiyaa irukku....

    Well said Thenu , ippo vaadhu intha loosu pecha vittu yen saaganum nu ninaika thonuche....

    Anna konjame support voice kuduthu irukaar...

    Unga amma reply ennala thaanga mudiyala... Petha ponna vida sontha kaarangala mukiyam ? Sorry Thenu ithai kettadhukku.....

    Hope your relationship with your parents has become alright now..

    ஆமா பிரியா...
    அப்போ அவங்களுக்கு சொந்தம் முக்கியமா போச்சு..... நீங்க அம்மாவை பத்தி சொன்னதுக்கு கோபம் இல்லை, அதுதானே நிஜம்....
    ஆமா... அண்ணன் கொஞ்சம் சப்போர்ட்.... ஏன்னா என் மேல அவ்வளவு பாசம், நான் அழுதா தாங்க மாட்டான்....
    இப்போ எல்லாரும் எங்களுடன் நல்லா இருக்காங்க பிரியா....
    அதை பற்றி பின்னாடி சொல்லுறேன்....

    hrithika, jv_66 and RathideviDeva like this.

  6. #196
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

    re: COMMENTS thread - Loverís Corner - Thread for Love Marriage Couples

    கல்யாண தேதி பார்க்குறாங்க அப்படின்னு சொன்னதும் அமைதியான அவங்க, கொஞ்சம் நேரம் கழித்து எங்க மாமா (அக்கா வீட்டுக்காரர் ) வந்து, ஓகே... உன் இஷ்டப்படியே இப்போ பண்ணிட்டு , அப்புறம் இங்க வந்து கண்ணை கசக்கிட்டு நிக்க கூடாது, அதுக்கு அப்புறம் எங்களோட எந்த தொடர்பும் இருக்க கூடாது" அப்படின்னு அப்பா அம்மா சொல்லுறாங்க அப்படினார்.....


    அதை கூட அவங்க வந்து என்கிட்டே சொல்லலை.... எப்போ நான் தேதி பாக்குறாங்கன்னு சொன்னேன்னோ அந்த நிமிஷத்தில் இருந்து எங்க வீட்டு ஆளுங்க என்கிட்டே ஒரு வார்த்தை கூட என்கிட்டே பேசலை..... அப்புறம் எப்படி அங்க எனக்கு இருக்க, சாப்பிட பிடிக்கும்...??
    சாப்பிடாமலே 3 நாள் ஓட்டினேன்.... நான் பசி தாங்க மாட்டேன், எங்க மாமாவும் என்னை ஒரு குழந்தை மாதிரிதான் பார்த்துப்பாங்க.... அவங்க வந்து கெஞ்சி சாப்பிட வைப்பாங்க..... அழுகை... அழுகை....


    இதுக்கு நடுவுல ராஜ் வீட்டில எல்லாம் ரெடி..... கல்யாண மண்டபம் பார்த்து, பத்திரிக்கை அடித்து, மற்ற எல்லாம் ரெடி...., அவங்க வீடு கல்யாண கோலம் பூண்டது...., எங்க வீடு...???

    hrithika, jv_66 and RathideviDeva like this.

  7. #197
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

    re: COMMENTS thread - Loverís Corner - Thread for Love Marriage Couples

    நான் எங்க வீட்டு நிலைமையை போன் பண்ணி சொன்னேன்...., உடனே அவங்க கிளம்பி டெல்லி வந்தாங்க... இந்த முறை ஒரு நண்பருடன்.... நானும் எங்க அக்காவும், மாமாவும் வேலைக்கு போன உடனே, போன் பண்ணி அவங்ககிட்ட சொல்லிட்டு, ஒரு லெட்டரும் எழுதி வச்சிட்டு கட்டிய துணியோட வீட்டை விட்டு வந்தேன்..... (சினிமாவில் வருவது மாதிரி.....)


    பிறகு ஊருக்கு வந்தோம்..... அவங்க சித்தி வீட்டில் தங்க வைக்க பட்டேன்.... அடுத்த நாள் என்னை பார்க்க என் மாமனார் வந்தார், " என்னம்மா , எப்படி இருக்க" நு கேட்டதுதான் தாமதம்.....
    "ஓ"நு ஒரே அழுகை.....
    "அழாதே, என்ன பண்ணுறது, உங்க வீட்டு சம்மதத்தோடதான் கல்யாணம் பண்ணனும்னு எல்லாரும் முயற்சி செய்தோம், ஆனா முடியலை...." எங்களுக்கு எங்க பையன் சந்தோசம்தான் முக்கியம்....
    அதனால் இந்த கல்யாணத்தை நாங்களே நடத்துறோம்... " அப்படின்னு சொன்னார்....


    அப்புறம் அவங்க சித்தியும் "அழாதே, இப்ப அப்படிதான் இருப்பாங்க, அப்புறம் வந்து சேர்ந்துப்பாங்க" அப்படின்னு சொல்லவும்...., நானும் மந்திரிச்சி விட்ட ஆடு மாதிரி தலை ஆட்டினேன்....


    என்னை டெல்லியில் இருந்து கூப்பிட்டுட்டு வந்து பிறகு 1 வாரமா ராஜை பார்க்க முடியலை..... கல்யாண பிஸி.... எனக்கு தெரிந்த ஒரே மனுஷன், அவரையும் பார்க்க முடியலைனா எப்படி இருக்கும்.....??


    அந்த ஒரே வாரத்தில் எங்கள் கல்யாணம்..... எங்கள் மாமனார் கடவுளை நம்பாத கட்சி.... அதனால் ஐய்யர் இல்லாமல், எந்த மந்திரமும் இல்லாமல், சீர்திருத்த முறையில் எங்கள் கல்யாணம் இனிதே நடந்தது.....


    என் பெற்றோரை பற்றி கேக்குறிங்களா, வந்தாங்க, (அதுக்கு வராமையே இருந்து இருக்கலாம்....)... ஒரு பார்வையாளாரா வந்து இருந்துட்டு போய்ட்டாங்க.... சாப்பிடவும் இல்லை..... எனக்கு ஆசிர்வாதமும் இல்லை.... (இப்போ நினைச்சா கூட நான் அழுவேன்...)


    அப்போ எனக்கு வெறும் அழுகை மட்டும்தான்..... ஆனா, இப்போ நிறைய நேரம் நினைச்சி பார்ப்பேன், நம்ம பெத்தவங்களை விட்டுட்டு கல்யாணம் பண்ணியது தப்புன்னு ஒரு உறுத்தல் இப்பவும் (இந்த நிமிஷம் வரை) என் மனசுக்குள்ள இருக்கு..... நான் வேணும்னு அவங்களை ஒதுக்கலை... அந்த வயசுல நாம பண்ணுறது சரியா தப்பான்னு யோசிக்க தெரியாம பண்ணியது நான் சாவுற வரைக்கும் உறுத்திகிட்டே இருக்கும் ....


    இப்படி சில பேர் வாழ்த்துக்களுடன் , பல பேர் சாபங்களுடன் எங்கள் கல்யாண வாழ்க்கை ஆரம்பிச்சது.....!!


    இன்றுவரை எந்த தடங்கலும் இல்லாமல் சீராக ஓடிகிட்டு இருக்கு..... இனிமேயும் ஓடும்.....!!

    hrithika, jv_66 and RathideviDeva like this.

  8. #198
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

    re: COMMENTS thread - Loverís Corner - Thread for Love Marriage Couples

    என்னோட காதல் கதையை கலகலன்னு சிரிச்சிகிட்டே சொல்ல முடிந்த என்னால கல்யாண கதையை அப்படி சொல்ல முடியலை....
    ரொம்ப அழுகையா வந்துச்சு..... அதுதான் சுருக்கமா சொல்லிட்டேன்....


    இப்போ என்னோட பெற்றவர்களுக்கு ராஜ் ஒரு தத்துபிள்ளை..... அப்படி ஒரு பாசபிணைப்பு..... ஆனா என்னாலதான் பழசை மறக்க முடியலை....


    அதுக்குதான் சொல்லுறேன்...., காதல் வேண்டாம்..... அது ஒரு முள்பாதை..... பாதையை கடந்து போய்ட்டா அழகா ரோஜா பறிக்கலாம்னு நினைச்சி போய் முள்ளுள விழுந்து செத்தவங்களும் இருக்காங்க...,
    இல்ல என்னை மாதிரி அதை கடந்து போய் ரோஜாவை பறிச்சும் நிம்மதி இல்லாம வாழ்ந்துகிட்டு இருக்கிறவங்களும் அதிகம்.... ஒரு சிலர் மட்டுமா ரொம்ப சந்தோஷத்துடன் இருப்பாங்க.... அந்த ஒரு சிலரில் நாமும் ஒருத்தரா இருக்க மாட்டோமான்னு நினைச்சி காதலில் விழுந்து கஷ்டபட் வேண்டாம்.....


    பொதுவா என்னை பற்றின பெர்சனல் விஷயங்களை நான் யாரிடமும் சொல்ல மாட்டேன், ஆனா இங்க இவ்வளவு கதையும் சொல்லுறேன்னா , நான் பண்ணிய தப்பை இனி யாரும் பண்ண கூடாதுன்னுதான்.....


    உடனே எல்லாரும் கேட்ப்பிங்க, ராஜ் உன்னை சந்தோஷமாதானே வச்சி இருக்காங்கனு , ஆனா நாங்க 2 பேர் மட்டுமே வாழ்க்கை இல்லை, இன்னும் எவ்வளவோ உறவுகள், எவ்வளவோ சோதனைகள், வேதனைகள், கஷ்டங்கள்..... அதையும் சொல்லலாம்னா இங்க காதலை பற்றி மட்டுமே சொல்லணும் , சோ நான் சொல்லலை.... மொத்தத்தில் ராஜ் ஒருத்தரை தவிர எனக்கு எந்த உறவுமே சரியா அமையலை.....


    நான் முன்னாடியே சொன்ன மாதிரி , பல பேரோட சாபத்துல ஆரம்பிச்சதுனாலேயோ என்னவோ இது வரை எங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லை.....


    தயவுசெய்து யாரும் காதலில் விழ வேண்டாம்.....!!!


  9. #199
    dania's Avatar
    dania is offline Penman of Penmai
    Blogger
    Yuva's of Penmai
    Real Name
    நிதா
    Gender
    Female
    Join Date
    May 2012
    Location
    Germany
    Posts
    9,136

    re: COMMENTS thread - Loverís Corner - Thread for Love Marriage Couples

    Quote Originally Posted by thenuraj View Post
    நீ படிக்காமையே கலக்கும்போது...., இப்போ படிக்க வேற செய்யுற, அப்போ இன்னும் கலக்குவ நிது....(ஆமா, நீ என்ன படிக்கிறேன்னு சொல்லவே இல்லையே.....), படிக்க வச்ச பிரபு அண்ணாவுக்கு ஒரு "ஓ " போடலாமா......


    பிள்ளைகள் அருமையாக வருவார்கள் நிது..... கவலை வேண்டாம்.....
    வாசன் கடவுளா இருந்து உன் பிள்ளைகளை பார்த்து கொள்வார்......

    ஆமாடா...இங்க படிச்சிருக்கேன்...படிக்க பதிஞ்சு குடுத்துட்டு இருக்கேன்...
    எதை என்று சொல்றது...

    வந்தோன்ன...மகன் வயித்துல இருக்கும்போதே அடிப்படை டொச் படிச்சிட்டேன்...பிறகு என்னோட அங்கத்தைய பள்ளி செர்டிபிகேட் கொடுத்தபோது...அது இங்கயும் "ரியால் சூலே" (பள்ளி படிப்பு) முடிச்சதுக்கு சமம் என்று சொன்னாங்க...

    ஆனாலும் பெருப் (velaithakuthikku...)enraal B1 என்பது படிக்கணும்...அதுவும் ஒரு வருஷம் படிச்சேன்....

    அதுல நோட் (note)-2 வந்தது...

    அதை பார்த்த என்னோட பக்கத்துவீட்டு அம்மம்மா சொன்னாங்க அரசியல் கோர்ஸ் படித்தால் இங்கத்தைய நஷனல்ட்டி எடுக்கலாம் என்று...

    பிறகு அது படிச்சேன்...அது ரொம்பவும் கஷ்டம்...

    2007 ல ஜேர்மன் நஷனலிட்டி எடுத்துட்டேன்...

    இதெல்லாம் இருக்குறதால கிண்டர் கார்டென்(Kinder garten) ஆசிரியரா 3 வருஷ கோர்ஸ் படிச்சென்...

    இப்போ வயோதிபர்களுக்கான தாதி(Altenpflegehelferin) ku pathinjittu irukken...

    ஆனால் வேலைக்கு போறதுக்கு பிரபுவிடம் அனுமதி இல்லை....

    இதோட வந்தவுடன் லைசென்ஸ் கு படிச்சுட்டேன்...2005 ல எடுத்துட்டேன்...

    இப்படியே கிடைக்கிறது எல்லாம் படிக்கிறேன்...எனக்கும் பொழுது போகணுமே...

    வாழ்க்கை வாழ்வதற்கே!!!!

    வாழ்ந்துபார்

    வாழ்வின் ருசி அறிவாய்!!!!



  10. #200
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

    re: COMMENTS thread - Loverís Corner - Thread for Love Marriage Couples

    ஹலோ friends


    காதல் கல்யாணம் பண்ணிட்டு நீங்களே இப்படி காதல் வேண்டாம்னு சொல்லலாமான்னு கேட்டு இருந்த தோழிகளுக்கு ....





    ஜாதிதான் எங்களுக்கும் பிரச்சனை..... அதை எல்லாம் தாண்டிதான் நாங்க வாழ்க்கையில ஜெயிச்சி இருக்கோம்.... நான் காதலுக்கு எதிரி இல்லை....


    எல்லாரும் காதலில் ஜெயித்து கல்யாணம் முடிந்து விட்டதுடன் வாழ்க்கை அவ்வளவுதான், சாதிச்சிட்டோம் அப்படின்னு நினைக்கிறோம்.... ஆனா அதுக்கு பிறகுதான் வாழ்க்கையே இருக்கு.... அதுவும் பெண் வீட்டில் சப்போர்ட் இல்லாம பண்ணும் திருமணத்தில் எத்தனையோ கஷ்டங்கள் ..... எத்தனையோ ஏச்சுக்களையும், பேச்சுக்களையும் நான் வாங்கி இருக்கேன், எப்பவுமே ராஜ் ஏன் பக்கத்தில் இருந்துகொண்டு சப்போர்ட் பண்ணிட்டே இருக்க முடியாது...
    நான் தனியாதான் சமாளிக்கணும்..... ஆனால் அந்த துணிவை ஆண்டவன் எனக்கு தரலை....


    எந்த ஒரு கூட்டு குடும்பத்துக்கு ஆசைப்பட்டு நான் அங்கு போனேன்னோ, அது எனக்கு கிடைக்கலை....


    ஒரு 2 வருடம் கழித்து எங்கள் வீட்டில் என்னிடம் பேசி விட்டார்கள்.., அது கூட ராஜ் முயற்சியினால்... ஆனால், அதுக்கும் திட்டு, நடுவில் வந்து சேர்ந்து கொண்டார்கள் என்று.... இது போல இன்னும் நிறைய சொல்லலாம் . நான் பண்ணிய ஒரு தவறால் எங்கள் சொந்தங்களுக்கு நடுவிலும், என்னுடைய புகுந்த வீட்டிலும் ஏன் பெற்றோர் அடைந்த அவமானங்கள் கொஞ்சம் நஞ்சம் இல்லை.... அதை ஒரு தனி கதையாகவே சொல்லலாம்...


    நான் பண்ணிய தப்புக்கு நான்தானே தண்டனை அனுபவிக்கனும், என்னை பெற்ற பாவத்திற்கு அவர்களும் இன்று வரை அனுபவித்து கொண்டு இருக்கிறார்களே, இது நியாயமா சிந்து.... இது எதனால், நான் பண்ணிய காதலால் .... எந்த ஒரு பெண்ணும் , தன் பெற்றோர் அவமானபடுவதை பார்த்துகொண்டு சும்மா இருக்க மாட்டாள், ஆனால் நான் வாய் இருந்தும் ஊமையாக இருக்கிறேன்.....


    இன்னும் இது போல நிறைய....
    ஆகா மொத்தம் காதல் வேண்டாம்.... ஓகே, இப்படி வேணா மாத்தி சொல்லுறேன், காதலிங்க, ஆனா இரு வீட்டார் சம்மதத்துடன் கல்யாணம் பண்ணிகொள்ளுங்கள் ..... போதுமா தோழிகளே .....

    jv_66 and RathideviDeva like this.

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter