Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree1Likes
 • 1 Post By narayani80

கொல்லைப்புற இரகசியம்


Discussions on "கொல்லைப்புற இரகசியம்" in "Nature Cure" forum.


 1. #1
  narayani80's Avatar
  narayani80 is offline Commander's of Penmai
  Gender
  Female
  Join Date
  Jun 2010
  Location
  Bangalore
  Posts
  1,421

  கொல்லைப்புற இரகசியம்  7 பிள்ளைகள், 16 பேரப் பிள்ளைகள் என அனைவருக்கும் தன் கை வைத்தியம் பார்த்து சோடைப் போகாத மருத்துவச்சி நம்ம உமையாள் பாட்டி. பாட்டி கைவச்சா பலிக்காததும் பலிக்கும், செழிக்காததும் செழிக்கும் என்று பெருமைப்பட்டுக் கொண்டது ஒரு காலம். இதோ இந்தத் தொடரின் மூலம் நம் பாட்டியின் கொல்லைப்புற இரகசியங்களை உங்கள் வீட்டில் விதைக்க வருகிறோம்… டாக்டர். சாட்சி சுரேந்தர், ஈஷா ஆரோக்யா “ஏ புள்ள பேச்சி! பொடிசு, ரெண்டு நாளா இருமிகிட்டே இருக்கானே, அந்த கொல்லையில கெடக்குற தொளசி, திப்பலி தழைய பறிச்சு கொண்டாடி, சுக்கு தட்டி காச்சி கொடுக்கறேன்,” என வீட்டு வைத்தியர்களாய் மருந்துடன் அன்பையும் குழைத்து கொடுத்தது பாட்டிகளின் இராச்சியம்!! இன்றோ, “உச்” என்றாலும் சரி “அச்” என்றாலும் சரி, “ஓடு டாக்டர்ட, முழுங்கு ஆண்டிபயாடிக்க!” என நவீன பாட்டிகளும், தாய்மார்களும் இதற்கு முடிவுரை எழுதி வருகிறார்கள். போதாத குறைக்கு ராக்கெட் விலை ரியல் எஸ்டேட்டால், குறுகிப்போன வீட்டுக் கொல்லைப்புரங்களில், “துவைத்த துணிகளை காயவைக்கவும், கழுவிய பாத்திரங்களை பரப்பி வைக்கவுமே இடமில்லையாம், இதுல மூலிக செடிக்கு எங்க போறது? “இந்த T20 காலத்தில இலை, தழை எல்லாம் வொர்க் அவுட் ஆகாதுங்க!” எனும் மேம்போக்கு மேதாவித்தனத்தின் தாக்கம் அதிகரிக்க, இன்னும் பல காரணங்களால் இன்று ஓரங்கட்டப்படுகிறது நம் கை வைத்திய கலாச்சாரம். “மனிதன் தன் வாழ்க்கையில், ஆரோக்கியமாக இருப்பதுதான் இயற்கை. எப்போதாவது வந்து போனால்தான் அது நோய். ஆனால் இன்றைய காலகட்டத்தில், தினசரி வாழ்க்கையில் நோயாளியாக இருப்பது இயல்பாகிவிட்டது!” என தனக்கே உரிய பாணியில் ஆரோக்கியம் குறித்த சமூகத்தின் மாறி வரும் பார்வையை பதிவு செய்கிறார் சத்குரு. “ஓகே! ஆரோக்கியமா இருக்க மூலிகைகளை பற்றி தெரிஞ்சிக்கறதுக்கும், இப்போ இருக்குற வாழ்க்கைமுறைக்கு ஏத்த மாதிரி பயன்படுத்திக்கிறதுக்கும் ஆர்வம்தான்! ஆனா எப்படி?” எனும் உங்கள் கேள்விக்கு பதில் நம் உமையாள் பாட்டிதான்! 80 ஐ கடந்தும் தன்னுடைய எந்த வேலைக்கும் யார் துணையுமின்றி உடலிலும் மனத்திலும் உற்சாகம்தான் போங்க. இன்றும் “B”, “C” டவுன்களில் இவர்போல் நடமாடும், தாத்தா பாட்டிகளை நம்மால் காணமுடியும். அவர்களில் ஒருவர்தான் இந்த உமையாள்! 7 பிள்ளைகளை சுகமாய்ப் பெற்றவள்; 16 பேரப் பிள்ளைகளைத் தூக்கி வளர்த்தவள்; “அப்பல்லாம் ஏது கண்ணு ஆஸ்பத்திரி? ரொம்ப அவசரத்துக்குதேன் வெள்ள கோட்டு டாக்டரு! மத்ததுக்கெல்லாம் நாந்தாம்பா டாக்டரு. இலை, தழைதான் மருந்து! ஆறு பிள்ளைகளும் நல்லா தான்யா வளந்துது! 16 பேரன், பேத்தி… 16க்கும் என் கை வைத்தியந்தேன்! ஒன்னும் சோட போகலியே…!” எனும் இந்த வெள்ளந்தி உமையாள் பாட்டி இனி நம்மோடு பயணிக்கிறாள்! தன் தோட்டத்தின் கதவுகளை நமக்காகத் திறந்து, அந்தக் கொல்லைப்புற ரகசியங்களை பரிமாறுகிறாள்! அவள் பின் செல்லலாம்! வாருங்கள்! வரும் வாரங்களில் பாட்டியின் கொல்லைப்புற ரகசியங்களை நம்முடன் ரகசியமாய் பகிரவிருக்கிறார் ஈஷா ஆரோக்யா மருத்துவர், டாக்டர். திரு. சாட்சி சுரேந்தர். ரகசியமாய் அனைவருடனும் பகிர்ந்திடுங்கள்…

  Similar Threads:

  Sponsored Links
  Last edited by narayani80; 21st Sep 2015 at 12:28 AM.
  gkarti likes this.

 2. #2
  narayani80's Avatar
  narayani80 is offline Commander's of Penmai
  Gender
  Female
  Join Date
  Jun 2010
  Location
  Bangalore
  Posts
  1,421

  Re: கொல்லைப்புற இரகசியம்

  ஆடாதொடையின் அருமைகள்…
  கொல்லைப்புற இரகசியம் – பகுதி 2

  உமையாள் பாட்டி கதைக் கேட்டு ரொம்ப நாளாச்சு என்கிறீர்களா? போன கட்டுரையில நம்மகிட்ட அருகம்புல்ல பத்தி பேசுன பாட்டி, குளிர்காலம்கிறதால இந்தவாட்டி ஆடாதொடைய எப்படி பயன்படுத்தறதுன்னு சொல்றாங்க. பாட்டி வைத்தியம் பலிக்காம போகுமா என்ன? இதோ உமையாள் பாட்டி டிப்ஸ் உங்களுக்காக…
  டாக்டர். சாட்சி சுரேந்தர்,
  ஈஷா ஆரோக்யா

  உமையாள் பாட்டியின் வீட்டிற்கு மழை நாள் மாலையில் ஒரு விசிட்… “பாட்டி… நேத்து மழையில நனைஞ்சு, இன்னிக்கு ரொம்ப ஜலதோஷம், மூக்கடைப்பு, இருமல்… ஒரு ஆன்டிபயாடிக்க போட்டாதான் சரியா வரும்னு நெனக்கிறேன்” என நான் கூறியதும், பாட்டியிடம் இருந்து ஏதாவது கை வைத்திய குறிப்பு தலையெடுக்கும் என நினைத்தால், ஆங்கில மருத்துவத்தின் சூட்சமத்தை அவர் கதைத்தது ஆச்சர்யமாக இருந்தது.

  “கபம் மட்டும் இல்லாம, இரத்தக் கொதிப்பு, பெண்களின் மாதவிடாய் கால அதிக உதிரப்போக்கு, பிரசவித்தப்பின் உதிரப்போக்கு குறையவும், கர்ப்பப்பை வலுப்படவும் கூட ஆடாதொடை ரொம்ப உதவியா இருக்கு கண்ணு!” “தம்பி.. சளி, இருமல்னா மருத்துவர் ஆலோசனை இல்லாம, உடனே நீயா ஒரு ஆன்டிபயாடிக் கோர்ஸ முடிவ பண்ணி, அதையும் அரகொறையா எடுக்குறதுனால நோய்க் கிருமிகள் இந்த ஆன்டிபயாட்டிக்கு கட்டுப்படாம போயிடுது. உன்னப்போல எல்லாரும் அரைகுறை வைத்தியத்த பண்ணிக்கிட்டா எந்த ஆன்டிபயாட்டிக்காலயும் நோய்க்கிருமிகள அழிக்க முடியாத நிலைமை வந்து இந்த சமூகத்துக்கே பெரிய பிரச்சனையா முடியும்.

  ஆங்கில மருத்துவங்கிறது கத்தி மாதிரி, அதை சரியான முறையில சுழற்றனும்… இல்ல, ஆபத்து நமக்குதான்!” என அவர் போட்ட போடு என்னை நிறையவே சிந்திக்க வைத்தது! மருத்துவரை பார்த்து சிகிச்சையைத் தொடங்க நான் பொறுமையாய் இருந்தாலும், என் மூச்சை அடைக்கும் மூக்கடைப்பும், கர்சீஃப் நனைக்கும் ஜலதோஷமும் பொறுமையாய் இல்லை என்பதை உணர்ந்தவராய், உமையாள் பாட்டி தன் அடுக்களையில் பாத்திரங்களை உருட்டிக்கொண்டே பேசத்தொடங்கினார்…

  “சாதாரண சளி ஜலதோஷத்திற்கு நீ பண்ணிக்கிற அரைகுறை ஆன்டிபயாடிக் வைத்தியத்திற்கு, நம்ம கை வைத்தியம் எவ்வளவோ மேல். ஆடாதொடை, துளசி, சுக்கு, மிளகு, திப்பிலி, தூதுவளைன்னு ஒரு வண்டி சரக்கு இருக்குப்பா!” என பேசிக்கொண்டே, கொதிக்கும் நீரில் சில இலைகளையும் பொடியையும் கலந்தார். அருகில் அமர்ந்திருந்ததால், அந்த நீராவியின் கார நெடி என் மூக்கடைப்பை துளைத்திருந்தது. ஆடாதொடையின் அருமைகள்… “இது ஆடாதொடை இலையும், மிளகுப்பொடியும் கண்ணு! ஈட்டி வடிவ இலை, வெள்ளை பூக்கள் உடைய சின்ன செடிதான் இது. ஆனா, ‘ஆடாதொடைக் கொண்டால், ஆடாத உடலும் ஆடும், பாடாத குரலும் பாடும்’ னு ரொம்ப உயர்வா சொல்றாங்க. மேல் சளி, மூக்கடைப்பு, தொண்டை வலி, நெஞ்சில் கபம், அலர்ஜி, ஆஸ்துமா என எல்லா விதமான கபம் சம்பந்தப்பட்ட நோய்க்கும் நல்ல முதலுதவியா இருக்குது,” என்றவர் சுடச்சுட டம்ளரில் பரிமாறிய ஆடாதொடை-மிளகு கசாயத்தை மட, மட வென மூக்கைப் பிடித்துக் குடித்து முடித்தேன். தொண்டையில் இறங்கிய அந்த காரமும், சூடும் உள்ளிருந்த நீரை முன்பை விட வேகமாய் வெளியேற்றிக்கொண்டே இருக்க… “குட் பாட்டி… இட்ஸ் வொர்க்க்க்க்கிங்க்! ம்.. எப்டி தயாரிக்கிறது?” என்றேன்.

  “ஆடாதொடை இலை 8-10 இருந்தா நல்லது, இல்லையா, ஆடாதொடை கசாயப் பவுடர் கடைகள்ள கிடைக்கும், அதுல ரெண்டு ஸ்பூன. அதை ரெண்டு டம்ளர் தண்ணில போட்டு கொதிக்க வெச்சு, அரை டம்ளரா சுண்ட வெச்சுக்னும். வடிக்கட்டின கசாயத்த, சாப்பாட்டுக்கு முன்னாடி மூணு வேளை, இன்னிக்கும், நாளைக்கும் குடிச்சா, நாளான்னைக்கு ஜலதோஷம் இருந்த இடம் காணாம போயிடுந்தம்பி!” என்றவர்… “வாழை, திராட்சை, பால், பால் பதார்த்தம் சாப்பிடாம, சாப்பிடுற பொறியல், ரசம்னு எல்லாத்துலயும் கொஞ்சமா மிளகுப்பொடி தூவி சாப்பிட்டா நல்லாருக்கும்பா!” என டியட் அட்வைசும் கொடுத்தார். “கபம் மட்டும் இல்லாம, இரத்தக் கொதிப்பு, பெண்களின் மாதவிடாய் கால அதிக உதிரப்போக்கு, பிரசவித்தப்பின் உதிரப்போக்கு குறையவும், கர்ப்பப்பை வலுப்படவும் கூட ஆடாதொடை ரொம்ப உதவியா இருக்கு கண்ணு!” என ஆடாதொடையின் பிற பயன்களையும் ரத்தின சுருக்கமாய் விளக்கி ஆடாதொடைக் கசாயப் பொடியைக் கொடுத்து வழியனுப்பி வைத்தார்.

  வாசற்படி தாண்டி வந்த பின்னும் மூக்கடைப்போடு சேர்ந்து அந்தக் கேள்வியும் என் மண்டையைக் குடைந்து கொண்டே இருக்க பாட்டியிடம் கேட்டே விட்டேன்… “பாட்டி… ஆடாதொடை பத்தி சொல்றீங்க, அதுக்கு உங்க அனுபவம்ங்க்ற லாஜிக் இருக்கு, ஆனா, ‘ஆன்டிபையாடிக்’ எப்டி பாட்டி?” வெள்ளந்தி சிரிப்புடன் உமையாள் பாட்டி, “பக்கத்து தெரு, ராசேந்துரன் டாக்குடரு சொன்னதுதேன், பசுமரத்தாணியா நெஞ்சுல நின்னுது.. அத உம்ம கிட்ட சொன்னேன் கண்ணு,” என்றார். அதைக் கேட்டவுடன், “என்னுடைய கேள்வி போலவே, நான் சார்ந்த இந்த தலைமுறை காம்ப்ளிகேட்டட்.. ஆனால், பாட்டியின் பதில் போலவே அவர் சார்ந்த அந்தத் தலைமுறை சிம்பிள் இல்ல?” என என் மைண்ட் வாய்ஸ் தந்தியடித்தது!

  சிதத மருத்துவக் குறிப்புகள் உதவி: சித்த மருத்துவர் டாக்டர். புவனேஷ்வரி, ஈரோடு

  குறிப்பு: குளிர்க்கால ஜலதோஷம் குறித்த சித்த மருத்துவ தடுப்பு முறைகள் மற்றும் சிகிச்சைகள் ஈஷா ஆரோக்யா மையங்களில் வழங்கப்படுகின்றன.

  Last edited by narayani80; 21st Sep 2015 at 12:34 AM.

 3. #3
  shrija's Avatar
  shrija is offline Friends's of Penmai
  Gender
  Female
  Join Date
  Apr 2013
  Location
  Boston
  Posts
  364

  Re: கொல்லைப்புற இரகசியம்

  Super article..


loading...

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •  
Like It?
Share It!Follow Penmai on Twitter