Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

தமிழரின் இயற்கை மருத்துவம்!


Discussions on "தமிழரின் இயற்கை மருத்துவம்!" in "Nature Cure" forum.


  1. #1
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    தமிழரின் இயற்கை மருத்துவம்!

    தமிழரின் இயற்கை மருத்துவம்!





    1.மார்புச் சளி
    வெறும் வயிற்றில் இஞ்சி சாறில் தேன் கலந்து பருகினால் சோர்வு நீங்கும், மார்புச் சளி அகலும்.

    2.சளிக் காய்ச்சல்
    புதினா கீரையை நீரில் போட்டு கொதிக்க வைத்து டீ டிகாஷன் போல் செய்து சாப்பிட்டால் சளியால் வரும் காய்ச்சல் குணமாகும்.

    3.இருமல், தொண்டை கரகரப்பு
    பாலில் பூண்டைப் போட்டு காய்ச்சிக் குடித்தால் இருமல், ஜலதோஷம், தொண்டைக் கரகரப்பு போகும்.

    4.சளி
    பூண்டை தோல் உரித்து நசுக்கி, தக்காளி, உப்பு,தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து சூப் செய்து குடித்தால் சளி சீக்கிரம் குணமாகும்.

    5.டான்சில்
    வெள்ளைப் பூண்டு, இஞ்சி சாறு இரண்டையும் சேர்த்து அரைத்து இதனுடன் தேன் கலந்து காலை மாலை உணவுக்கு முன் சாப்பிட்டால் டான்சில் கரையும்.

    6.வயிற்றுப் போக்கு
    சிறிது கசகசாவுடன் நாட்டுச் சர்க்கரையை சேர்த்து வாயில் போட்டு சாப்பிடவும். இது போல் வெறும் வயிற்றில் காலை மட்டும் சாப்பிட்டு வந்தால் மூன்று நாளில் குணமாகும்.

    7.வாயுக் கோளாறு
    மிளகைப் பொடி செய்து பெருங்காய பவுடர் சேர்த்து தினமும் சுடுநீரில் கலந்து ஒரு தேக்கரண்டி சாப்பிட்டால் வாயுக் கோளாறு நீங்கும்.

    8.நெஞ்சு சளி
    தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும்.

    9.தலைவலி
    ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்.

    10.தொண்டை கரகரப்பு

    சுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும்.


    Sponsored Links
    Last edited by chan; 11th Nov 2015 at 12:30 PM.

  2. #2
    kvsuresh's Avatar
    kvsuresh is offline Guru's of Penmai
    Real Name
    KothaiSuresh
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    chennai
    Posts
    7,167

    Re: தமிழரின் இயற்கை மருத்துவம்!

    காய கற்ப சஞ்சீவி

    1 - ஏலம், 2 - இலவங்கம், 3 - வால்மிளகு, 4 - ஜாதிப்பத்திரி, 5 - பச்சைக் கற்பூரம்.

    ஆலய வழிபாட்டு முறைகளில் தலைசிறந்ததாகப் புனித தீர்த்தம் வழங்குதல் அமைந்துள்ளது.

    வைணவ திருத்தலங்களில் வழங்கும் "துளசி தீர்த்தம்" இரத்தத்தை சுத்தம் செய்வதுடன், உடலில் பிராணசக்தி மற்றும் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடலை வலுப்படுத்துகின்றது. துளசி தீர்த்தம் தொடர்ந்து அருந்தி வருபவர்களுக்கு கேன்சர் எனப்படும் புற்று நோய் வராது என்பது மருத்துவ உண்மையாகும்.

    சைவத்திருத்தலங்களில் வழங்கும் "வில்வ தீர்த்தம்" குன்மம், வயிற்றுக் கடுப்பு, மேகவாயு, போன்றவைகளைப் போக்குகின்றது. அல்சர் எனப்படும் குடல்ப் புண்ணையும் போக்குகின்றது.

    ஆலயங்களில் வழங்கப்படும் மேற்கண்ட இரண்டு தீர்த்தங்களும் முறைப்படி தயார் செய்தால் இம்மருத்துவ குணங்கள் நிச்சயம் உண்டு.

    நாம் வீட்டிலேயே செய்து உண்டு பயன்பெறக்கூடிய ஒரு புனித தீர்த்தம் முறையை இப்போது பார்ப்போம். இப்புனித தீர்த்தம் காய கற்ப சஞ்சீவியைப் போல பற்பல நோய்களை நீக்கி நல்வாழ்வு அளிக்கும் குணம் கொண்டதும் இவைகளில் முதல் நான்கும் வகைக்கு ஒரு பங்கும், பச்சைக் கற்பூரம் கால் பங்கு சேர்க்கவும்.

    முதல் நான்கு பொருள்களையும் உலர்த்தி இடித்து பொடித்துக்கொள்ளவும். பிறகு பச்சைக் கற்பூரத்தையும் பொடித்து இதனுடன் கலந்து கொள்ளவும். இதனை பாட்டலில் பதனம் செய்து பூஜை அறையில் வைக்கவும்.

    இந்த தீர்த்தப் பொடியை திரிகடி [மூன்று விரல் அளவு] அளவு எடுத்து ஒரு தாமிர தம்ளரில் தண்ணீரில் கலந்து முதல் நாள் இரவு வைத்து மறு நாள் காலை வெறும் வயிற்றில் பூஜை முடித்தவுடன் அருந்த சகல நோய்களும் எளிதில் நீங்கி உடல் பலம் பெறும்.

    இதனுடன் சைவ வழிபாட்டில் உள்ளவர்கள் வில்வம் சேர்த்து அருந்தலாம். வைணவ வழி பாட்டில் உள்ளவர்கள் துளசி சேர்த்து அருந்தலாம்.

    இருதயம், இரைப்பை பலம் பெரும்,கண்கள் பற்றிய நோய் யாவும் நீங்கும், நரம்புத்தளர்ச்சி, சளி, சுவாசகாசம் நீங்கும், இரத்தம் சுத்தியாகும், பித்த ரோகங்கள், வாந்தி, தலைசுற்றல், மயக்கம், வாய்க்கசப்பு, மூச்சடைப்பு, வயிற்று வலி, கழிச்சல், மார்புவலி, மாரடைப்பு, போன்றவைகள் நீங்கும். இரத்தம் பெருகும் .

    இது உடலைப் பற்றிய நோய்களை நீக்கும் வல்லமை கொண்ட சஞ்சீவி மருந்து முறையாகும்.










    KOTHAISURESH

  3. #3
    sharamsn's Avatar
    sharamsn is offline Commander's of Penmai
    Real Name
    sharmi begam
    Gender
    Female
    Join Date
    Aug 2015
    Location
    puducherry
    Posts
    1,344

    Re: தமிழரின் இயற்கை மருத்துவம்!

    nice share .

    SMILE TO SOLVE PROBLEM

    SILENCE TO AVOID PROBLEM

    sharmi begam...

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter