அல்சரை விரட்டும் முட்டைகோஸ்
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பது பழமொழி. உடல் ஆரோக்கியமாக இருந்தால் தான் மனமும் மகிழ்ச்சியில் திளைக்கும். இயற்கை உணவு ஒரு மருந்து என்று நம் முன்னோர்கள் கூறியுள்ளனர். அந்த வகையில், அதிக மருத்துவகுணம் நிறைந்தது முட்டைகோஸ். இதில் வெள்ளை, சிவப்பு, பச்சை மற்றும் ஊதா என்று பல்வேறு வகைகள் உள்ளன. முட்டைகோசில் அளவுக்கு அதிகமான நன்மைகள் நிறைந்துள்ளன.


மேலும் பல்வேறு பைட்டோ நியூட்ரியண்டுகள் மற்றும் வைட்டமின்களான ஏ, சி மற்றும் கே போன்றவை அடங்கியுள்ளன. உடலில் ஏற்படும் பிரச்னைகளான புற்றுநோய், இதய நோய் போன்றவற்றை தடுக்கும். மேலும் இதில் உள்ள நார்ச்சத்து, செரிமான பிரச்னை , மலச்சிக்கல் போன்றவற்றை குணப்படுத்தும். முட்டைகோஸை அளவுக்கு அதிகமாக வேகவைத்து சாப்பிடகூடாது. அதில் உள்ள சத்துக்கள் அனைத்தும் வெளியேறிவிடும். சொல்லப்போனால், அதனை பச்சையாக சாப்பிடுவதே மிகவும் சிறந்தது.

முட்டைகோஸ் சாப்பிட்டால் ஏற்படும் நன்மைகள் என்ன வென்று பார்ப்போம். முட்டைகோஸில் புற்றுநோயை எதிர்த்துப் போராடும் பொருட்களை நிறைய உள்ளன. எனவே இதனை சாப்பிட்டால், புற்றுநோயை ஏற்படுத்தும் செல்கள் வளர்வதை முற்றிலும் தடுக்கும். மேலும் ஆய்வு ஒன்றிலும், முட்டை கோஸ் சாப்பிட்டால், புற்று நோய் வளர்வதை தடுக்கலாம் என்று கண்டறியப்பட்டுள்ளது. அல்சரால் அவதிப்படுபவர்கள், முட்டைக் கோஸை ஜூஸ் போட்டு சாப்பிட்டு வந்தால், அல்சரை விரைவில் குணப்படுத்தலாம்.

இதில் அல்சரை குணப்படுத்தும், குளுட்டமைன் அதிக அளவில் நிறைந்துள்ளது. உடலில் அலர்ஜி அல்லது உட்காயங்களால் பாதிக்கப்பட்டவர்கள் முட்டைகோஸை சாப்பிட்டால், அதில் உள்ள அமினோ ஆசிட் குளுட்டமைன், அவைகளை குணப்படுத்த பெரிதும் உதவியாக இருக்கும். இதில் உள்ள அதிகப்படியான வைட்டமின்சி, நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்தி, உடலை நோய்கள் தாக்காதவாறு பாதுகாக்கும். முட்டைகோஸில் பீட்டா-கரோட்டீன் அதிக அளவில் இருப்பதால், அது கண்புரையை தடுக்கிறது.

எடையை குறைக்க நினைப்போர், தினமும் ஒரு கப் வேகவைத்த முட்டை கோஸ் அல்லது முட்டைகோஸ் சூப் சாப்பிட்டால், உடல் எடையை ஆரோக்கியமான முறையில் குறைக்கலாம். முட்டைகோஸில் உள்ள அதிகமான நார்ச்சத்து, செரிமான மண்டலத்தை சீராக இயக்கி, மலச்சிக்கல் பிரச்னையை குணமாக்கும். முட்டைகோஸில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் , சருமத்தை பொலிவோடு வைத்துக் கொள்ள உதவியாக இருக்கும். முட்டைகோஸில் உள்ள லாக்டிக் அமிலம், தசைகளில் ஏற்படும் பிரச்னைகளுக்கு சிறந்த நிவாரணம் தரும்.

Similar Threads: