Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree1Likes
 • 1 Post By shansun70

பழக்கூடையில் ஒரு வானவில்


Discussions on "பழக்கூடையில் ஒரு வானவில்" in "Nature Cure" forum.


 1. #1
  shansun70's Avatar
  shansun70 is offline Minister's of Penmai
  Real Name
  M ShanmugaSundaram
  Gender
  Male
  Join Date
  Mar 2014
  Location
  Hosur
  Posts
  2,651

  Thumbs up பழக்கூடையில் ஒரு வானவில்

  நெல்லிக்கனி
  நெல்லிக்கனியின் பெருமைகளை அரசர் அதியமானிடம்ஒளவையார் விளக்கியதாக வரலாறு கூறுகிறது. ஒளவையாரே போற்றிய இந்த நெல்லிக்கனி,தனிச்சிறப்பு வாய்ந்த கனிகளுள் முதலிடம் பெற்றுள்ளது. நெல்லிக்கனியின் வைட்டமின்c, நோய் எதிர்ப்புத்தன்மையை வளர்க்கிறது. ரத்தக்கசிவு ஏற்படாமல் தவிர்க்கிறது.100 கிராம் நெல்லிக்கனியில் 600 மில்லிகிராம் வைட்டமின் c உள்ளது. இந்த அளவு,இரண்டு ஆரஞ்சுப் பழங்களை சாப்பிட்டதற்கு ஈடாகும்.
  நெல்லிக்கனியைப் பலவிதமாக உட்கொள்ளலாம்.பச்சைக்காயை உப்பு சேர்த்து விளையாட்டுத்தனமாக கடித்து மென்று சாப்பிடும் பள்ளிச்சிறுவர்களை நாம் பார்த்திருக்கிறோம். இது தாகத்தைத் தணித்து உடலுக்கு உற்சாகத்தைஊட்டும் ஓர் அற்புத உணவு. நெல்லிக்கனியை அரிந்து கொட்டையை நீக்கிவிட்டு,வெய்யிலில் உலரவைத்துத் தூளாக்கி வைத்துக் கொள்ளலாம். இந்த உலர்ந்த தூளைசாம்பாரிலும், மற்ற பதார்த்தங்களிலும் இறக்கிவைக்கும்போது லேசாகத் தூவிசாப்பிடலாம்.
  இந்த நெல்லிக்கனியில் உள்ள வைட்டமின் cசத்து. உடம்பினுள் எளிதாக ஈர்த்துக்கொள்ளப்படக்கூடியது. வைட்டமின் c பழங்களைசாறாகப் பிழியும்போதும், உலரவைக்கும்போதும் பெரும்பாலும் அழிந்துவிடும். ஆனால்நெல்லிக்கனியில் உள்ள c சத்து, ரசாயனத்துடன் இயற்கையாகக் கலந்திருப்பதால் உலரவைப்பதாலும், தேனில் ஊறவைத்து உட்கொண்டாலும் ஊட்டச்சத்தில் குறையாமல் இருக்கும்.அதனால்தான், நம் நாட்டில் ஆயுர்வேத மருந்துகளிலும், சித்த மருந்துகளும் தயாரிக்கநெல்லிக்கனி உபயோகிக்கப்படுகிறது. அது மட்டுமல்ல, ரத்த சோகையால்பாதிக்கப்பட்டவர்கள், இருபது நாட்களுக்கு தினமும் விடாமல் நெல்லிக்கனியைவெல்லத்துடன் சாப்பிட்டு வந்தால், ரத்த சோகையின் பாதிப்பிலிருந்து விடுபடலாம்.
  வாழைப்பழம்
  தேநீர்க் கடையிலிருந்து டிபார்ட்மென்ட்ஸ்டோர் வரை, எந்தக் கடையிலும் எந்தக் காலத்திலும் கிடைக்கக்கூடிய பழம் வாழைப்பழம்.கலோரி சத்து நிறைந்த ஒரு பழம். எளிதில் ஜீரணமாகும் தன்மை உடையது. அதனால்தான், இதைகுழந்தைகளுக்கு முதல் திட உணவாகக் கொடுப்பார்கள். தென்னிந்தியாவில் மட்டுமே நூறுவகைக்கும் மேலான வாழைப்பழம் பயிரிடப்படுகிறது. உலகில் வேறு எங்கும் கிடைக்காத பலவகை வாழைப்பழங்கள் நம் நாட்டில் கிடைக்கிறது. வயிற்றில் அமிலத்தன்மை போக்கவும்,அதிகச் சோர்வை நீக்கவும் இந்த வாழைப்பழம் உதவுகிறது. மலச்சிக்கல் நீக்குவதற்குவாழைப்பழம் ஒரு சிறந்த உணவு என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒரு விஷயம். ஆனால்,வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்தவும் வாழைப்பழத்தை சிபாரிசு செய்கிறார்கள் உணவியல்நிபுணர்கள். ஆச்சரியமாக உள்ளது அல்லவா?
  வாழைப்பழத்தைப்போல், கொய்யாப்பழமும் நம்நாட்டில் கிடைக்காத இடமே இல்லை. நெல்லிக்காய்க்குப் பிறகு அதிக வைட்டமின் சத்துநிறைந்த பழம், இந்தக் கொய்யாப்பழம். சுண்ணாம்புச் சத்து நிறைந்திருப்பதால்குழந்தைகளுக்கு தினமும் கொடுக்கலாம்.
  மஞ்சள் மற்றும் சிவப்பு நிறப் பழங்களில்,குறிப்பாக மாம்பழம், பப்பாளி போன்றவற்றில் ஏராளமான வைட்டமின் a கொட்டிக்கிடப்பதால், இந்த பழங்களை உட்கொள்வதால், தோல் ஆரோக்கியமாகவும், கண் பார்வைக்கோளாறுகள் வராமலும் தடுக்கலாம். கொய்யாப்பழமும் பப்பாளிப் பழமும் குறைந்த விலையில்கிடைக்கக்கூடிய சத்து நிறைந்த பழங்கள். கருவுற்ற பெண்கள், ஆறு மாதம் முடிந்த பிறகுபப்பாளிப் பழத்தை உணவில் சேர்த்துக்கொண்டால், பிறக்கும் குழந்தைகளுக்குக் கண்பார்வைக் கோளாறுகள் மற்றும் மாலைக்கண் நோய் வராமல் தடுக்கலாம்.
  பொதுவாக, பழங்களை உட்கொள்ளச் சொன்னால், நாம்உடனே, ஐயோ பழங்கள் விற்கும் விலைவாசியில் அதெல்லாம் முடியுமா? என்று குரல்எழுப்புகிறோம். விலை உயர்ந்த பழங்கள்தான் உடலுக்கு உகந்தவை என்ற கருத்து நம்மனத்தில் ஆழமாகப் பதிந்துவிட்டது. அதனால்தான், நாம் இன்றும் உடல்நலம் இல்லாதவர்களைப்பார்க்கச் செல்லும்போது, என்ன விலையாக இருந்தாலும் ஆப்பிள் பழத்தை வாங்கிக்கொண்டுசெல்கிறோம். இவ்வளவு விலை கொடுத்து வாங்கும் ஆப்பிள் பழத்தில், நார்ச்சத்தைத் தவிரபெரிதாக வைட்டமின்களோ மற்ற தாதுச்சத்துகளோ இல்லை. அந்தந்த பருவ காலங்களில்கிடைக்கும் பழங்களை, தினமும் ஒரு பழம் என்ற விகிதத்தில் உண்டால், குறைந்த விலையில்மகத்தான சத்துகள் கிடைக்க வாய்ப்பு உண்டு.

  Similar Threads:

  Sponsored Links
  shrimathivenkat likes this.

 2. #2
  shrimathivenkat's Avatar
  shrimathivenkat is offline Yuva's of Penmai
  Gender
  Female
  Join Date
  Sep 2012
  Location
  chennai
  Posts
  8,456

  Re: பழக்கூடையில் ஒரு வானவில்

  தகவலுக்கு நன்றி...


 3. #3
  porkodit's Avatar
  porkodit is offline Minister's of Penmai
  Real Name
  Porkodi
  Gender
  Female
  Join Date
  Jul 2011
  Location
  Tiruvannamalai
  Posts
  3,162

  Re: பழக்கூடையில் ஒரு வானவில்

  Pakirukku Nandri..........

  என்றும் அன்புடன் ,
  பொற்கொடி

loading...

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •  
Like It?
Share It!Follow Penmai on Twitter