Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine March! | All Issues

User Tag List

Like Tree2Likes
  • 2 Post By kvsuresh

Pepper- பத்து மிளகு பகைவன் வீட்டிலும் உணவு


Discussions on "Pepper- பத்து மிளகு பகைவன் வீட்டிலும் உணவு" in "Nature Cure" forum.


  1. #1
    kvsuresh's Avatar
    kvsuresh is offline Guru's of Penmai
    Real Name
    KothaiSuresh
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    chennai
    Posts
    7,043

    Pepper- பத்து மிளகு பகைவன் வீட்டிலும் உணவு

    பத்து மிளகு பகைவன் வீட்டிலும் உணவு



    பத்து மிளகு கையிலிருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம். என்பது பழமோழி. மிளகு வயிற்றிலுள்ள வாயுவை அகற்றி உடலுக்கு வெப்பத்தைத் தருவதோடு வீக்கத்தைக் கரைக்கும், உடலில் உண்டாகும் சுரத்தையும் போக்கும் தன்மை உடையது. இது காரமும் மணமும் உடையது. உணவைச் செரிக்க வைப்பது. விட்டு விட்டு வருகின்ற காய்ச்சலை நீக்க நொச்சிக் கொழுந்து, மிளகு இலை, மிளகாய் இலை, துளசியிலை, இலவங்கம், இவை யனைத்தையும் சம எடையாக எடுத்து அரைத்து ஒரு கிராம் வீதம் தினம் இரண்டு வேளை உண்ணவேண்டும்.
    தொண்டைக் கம்மல், வயிற்றில் உண்டாகும் வாய்வுத் தொல்லைகள் நீங்க மிளகை நன்கு பொடி செய்து 50 கிராம் எடுத்துக் கொண்டு, அதனோடு தண்ணீர் 600 மி.லி. சேர்த்து 30 நிமிடங்கள் நன்றாகக் காய்ச்சி வடிகட்டிக் கொண்டு, 25 மி.லி. அளவாக மூன்று வேளை அருந்தி வர நல்ல பலன் தரும். மிளகு, அபினி, பொரித்த பெருங்காயம் இவை ஒவ்வொன்றையும் 2 கிராம் எடுத்து நன்கு அரைத்து பத்து மாத்திரைகளாகச் செய்து 1 மணி நேரத்திற்கு 1 மாத்திரை வீதம் சாப்பிட்டு வர வாந்தி பேதி நிற்கும்.
    பொதுவாக உடலில் ஏற்படுகின்ற வலிகள், அடிபட்ட வீக்கங்கள், கீல் வாதம் முதலியவைகளுக்கு மிளகு இலை, தழுதாழை இலை, நொச்சி இலை இவை ஒவ்வொன்றையும் சம அளவாக எடுத்து தண்ணீரில் நன்கு கழுக ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து நன்கு காய்ச்சி, தணண்ணீர் சூடானதும் சூடான நீரில் நல்ல துணியை நனைத்து ஒத்தடம் மிட நல்ல பலன் கிடைக்கும்.
    சிலருக்கு தலையில் முடி உதிர்ந்து வழுக்கை போலாகி விடும். இதை முடி புழுவெட்டு என்பார்கள். இதற்கு மிளகுத்தூள், வெங்காயம், உப்பு மூன்றையும் அரைத்து முடி புழு வெட்டு உள்ள இடத்தில் தேய்த்து வர முடி முளைக்கும். மிளகை அரைத்து நெற்றியில் பற்றிட தலைவலி போகும், மிளகைச் சுட்டு அதன் புகையினை இழுத்தால் தலைவலி தீரும், சளியும் குணமாகும். பொடி போல் மூக்கில் உறிஞ்ச தலைவலி தீரும்.



    Similar Threads:

    Sponsored Links
    Attached Thumbnails Attached Thumbnails Pepper- பத்து மிளகு பகைவன் வீட்டிலும் உணவு-13709800_1606407603022668_6012995248851335910_n.jpg  
    jv_66 and gkarti like this.

    KOTHAISURESH

  2. #2
    gkarti's Avatar
    gkarti is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Karthiga
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Madurai
    Posts
    45,753

    Re: பத்து மிளகு பகைவன் வீட்டிலும் உணவு

    Content ah vida, Caption thaar Maar ah irukke Aunty..


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter