Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine July! | All Issues

User Tag List

Like Tree5Likes
  • 2 Post By ahilanlaks
  • 1 Post By honey rose
  • 1 Post By safron
  • 1 Post By Strawberry

Medicinal Benefits Of Basil - காய்ச்சலை குணப்படுத்தும் துளசி


Discussions on "Medicinal Benefits Of Basil - காய்ச்சலை குணப்படுத்தும் துளசி" in "Nature Cure" forum.


  1. #1
    ahilanlaks's Avatar
    ahilanlaks is offline Ruler's of Penmai
    Real Name
    Athilakshmi Ahilan ( Bhuvana )
    Gender
    Female
    Join Date
    Mar 2015
    Location
    Chennai
    Posts
    12,408

    Medicinal Benefits Of Basil - காய்ச்சலை குணப்படுத்தும் துளசி


    காய்ச்சல் அதிகமாக இருக்கும்போது பல துன்பங்கள் வருகின்றன. தொண்டைக்கட்டு, உடல் வலி, பசியின்மை உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படுகிறது. உடலின் உஷ்ணநிலை அதிகரிப்பதால் காய்ச்சல் வருகிறது. நலம் தரும் நாட்டு மருத்துவத்தில், காய்ச்சலுக்கான மருந்துகள் குறித்து பார்க்கலாம். கீழாநெல்லியை பயன்படுத்தி காய்ச்சலுக்கான மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: கீழாநெல்லி, மிளகுப்பொடி, பனங்கற்கண்டு. கீழாநெல்லியின் இலை, தண்டு, காய் உள்ளிட்டவற்றை ஒருபிடி அளவுக்கு எடுக்கவும். இதனுடன் கால் ஸ்பூன் மிளகுப்பொடி, அரை ஸ்பூன் பனங்கற்கண்டு, ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்க வேண்டும். இதை வடிகட்டி காய்ச்சல் இருக்கும்போது காலை, மாலை என உணவுக்கு முன்பு 5 நாட்கள் வரை குடித்துவர காய்ச்சல் குணமாகும். காய்ச்சலால் ஏற்படும் உடல் வலி, வாய் கசப்பு சரியாகும்.

    கீழாநெல்லி ஈரல் நோய்களுக்கு முக்கிய மருந்தாக விளங்குகிறது. மஞ்சள் காமாலையை போக்க கூடியது. எந்தவித காய்ச்சலாக இருந்தாலும் கீழாநெல்லி தேனீரை எடுக்கலாம். நிலவேம்பை பயன்படுத்தி காய்ச்சலுக்கான மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: அதிமதுரப் பொடி, சுக்குப்பொடி, சீரகம். கால் ஸ்பூன் அதிமதுர பொடி, கால் ஸ்பூன் சுக்குப்பொடி, சிறிது சீரகம் ஆகியவற்றுடன் நிலவேம்புவின் இலை, தண்டு போன்றவை ஒருபிடி அளவுக்கு சேர்க்கவும். இதனுடன் ஒருபிடி அளவுக்கு பற்பாடகம் இலை சேர்க்கவும். ஒரு டம்ளர் அளவுக்கு நீர்விட்டு கொதிக்க வைக்கவும்.

    இதை வடிகட்டி காய்ச்சல் இருக்கும்போது தினமும் இருவேளை குடித்துவர காய்ச்சல் குணமாகும். இதை பெரியவர்கள் 50 மில்லி வரை எடுக்கலாம். இதை குடித்துவர காய்ச்சல் குறையும், உடல் வலி, வாய் கசப்பு, வாந்தி, தலைவலி போன்ற பிரச்னைகள் குணமாகும். பற்பாடகம் காய்ச்சலை போக்கும் முக்கிய மூலிகையாக விளங்குகிறது. மிகுந்த கசப்பு சுவையுடைய நிலவேம்பு காய்ச்சலை குணப்படுத்த கூடிய தன்மை கொண்டது. வண்டுக்கடி, பாம்புக்கடிக்கு மருந்தாக விளங்குகிறது.

    துளசி இலையை பயன்படுத்தி காய்ச்சலுக்கான மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: துளசி, மிளகுப்பொடி. துளசி இலைகளை பசையாக அரைத்து எடுக்கவும். இதனுடன் சம அளவு மிளகுப்பொடி சேர்த்து நன்றாக கலக்கவும். இதை சுண்டைக்காய் அளவுக்கு உருண்டைகள் செய்து வெயிலில் காய வைக்கும்போது மிளகு அளவுக்கு வரும். காலை, மாலை, இரவு வேளைகளில் தலா 2 மாத்திரைகள் சாப்பிட்டு வர காய்ச்சல் குணமாகும். இது பாதுகாப்பான மருந்தாக விளங்குகிறது. அலர்ஜியை போக்கும் மருத்துவம் குறித்து பார்க்கலாம். அலர்ஜி வரும்போது உடலில் அரிப்பு ஏற்படும். 2 சிறிய வெங்காயத்தை எடுத்து சிறிது உப்பு சேர்த்து சாப்பிடுவதால் அலர்ஜியால் ஏற்படும் பிரச்னைகள் சரியாகும்.


    Similar Threads:

    Sponsored Links
    Attached Thumbnails Attached Thumbnails Medicinal Benefits Of Basil - காய்ச்சலை குணப்படுத்தும் துளசி-tulsi.jpg  
    sumathisrini and honey rose like this.
    ​Bhuvana Ahilan

    Love Makes Life Beautiful

  2. #2
    honey rose's Avatar
    honey rose is offline Yuva's of Penmai
    Real Name
    Divya Bharathi
    Gender
    Female
    Join Date
    Aug 2013
    Location
    chennai
    Posts
    8,201

    Re: Medicinal Benefits Of Basil - காய்ச்சலை குணப்படுத்தும் துளசி

    thanks for sharing ka

    ahilanlaks likes this.

  3. #3
    safron's Avatar
    safron is offline Citizen's of Penmai
    Real Name
    sumy
    Gender
    Female
    Join Date
    May 2016
    Location
    srilanka
    Posts
    625

    Re: Medicinal Benefits Of Basil - காய்ச்சலை குணப்படுத்தும் துளசி

    Tfs bhuvi ka

    ahilanlaks likes this.
    Sumy..
    உனக்கென நிர்ணயிக்கப்பட்டது உன்னை அடைந்தே தீரும். .

  4. #4
    Strawberry's Avatar
    Strawberry is offline Citizen's of Penmai
    Real Name
    ishu
    Gender
    Female
    Join Date
    May 2016
    Location
    srilanka
    Posts
    656

    Re: Medicinal Benefits Of Basil - காய்ச்சலை குணப்படுத்தும் துளசி

    Very useful

    ahilanlaks likes this.
    Ishu..
    Ur Dream Is Ur Signature..

  5. #5
    ahilanlaks's Avatar
    ahilanlaks is offline Ruler's of Penmai
    Real Name
    Athilakshmi Ahilan ( Bhuvana )
    Gender
    Female
    Join Date
    Mar 2015
    Location
    Chennai
    Posts
    12,408

    Re: Medicinal Benefits Of Basil - காய்ச்சலை குணப்படுத்தும் துளசி

    Quote Originally Posted by honey rose View Post
    thanks for sharing ka
    Welcome Divi

    ​Bhuvana Ahilan

    Love Makes Life Beautiful

  6. #6
    ahilanlaks's Avatar
    ahilanlaks is offline Ruler's of Penmai
    Real Name
    Athilakshmi Ahilan ( Bhuvana )
    Gender
    Female
    Join Date
    Mar 2015
    Location
    Chennai
    Posts
    12,408

    Re: Medicinal Benefits Of Basil - காய்ச்சலை குணப்படுத்தும் துளசி

    Quote Originally Posted by safron View Post
    Tfs bhuvi ka
    Welcome Sumy

    ​Bhuvana Ahilan

    Love Makes Life Beautiful

  7. #7
    ahilanlaks's Avatar
    ahilanlaks is offline Ruler's of Penmai
    Real Name
    Athilakshmi Ahilan ( Bhuvana )
    Gender
    Female
    Join Date
    Mar 2015
    Location
    Chennai
    Posts
    12,408

    Re: Medicinal Benefits Of Basil - காய்ச்சலை குணப்படுத்தும் துளசி

    Quote Originally Posted by Strawberry View Post
    Very useful
    Thanks Ishu

    ​Bhuvana Ahilan

    Love Makes Life Beautiful

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter