Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine September! | All Issues

User Tag List

Like Tree1Likes
  • 1 Post By chan

வேம்பின் மகிமை


Discussions on "வேம்பின் மகிமை" in "Nature Cure" forum.


  1. #1
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,440

    வேம்பின் மகிமை

    வேம்பின் மகிமை

    வேப்பமரத்தின் இலை, பூ, காய், பழம் மற்றும் மரப்பட்டை எல்லாமே மருத்துவ குணம் வாய்ந்தவை. தமிழர் வாழ்வில் கலாசார ரீதியாகவும் மருத்துவ ரீதியாகவும் இரண்டறக் கலந்தது வேப்பமரம்.

    *வேப்பிலையை அரைத்துக் கட்டினால், ஆறாத ரணம், பழுத்து உடையாத கட்டி, வீக்கம் ஆகியவை குணமாகும்.

    *வேப்பங்கொழுந்து ஒரு ஈர்க்கு, நான்கு கடுக்காய்த் தோல் இரண்டையும் பிரண்டைச் சாறு விட்டு அரைத்து, அரை அவுன்ஸ் விளக்கெண்ணெய் கலந்து உள் மருந்தாக எடுத்துக்கொண்டால், குடல் பூச்சிகள் வெளியேறும்.

    *வேப்பம் பூக்களைச் சேகரித்து உலர்த்தி, ஒரு வருடம் கழித்து இதைப் பயன்படுத்தி ரசம் வைப்பார்கள். இந்த வேப்பம் பூ ரசம், பித்த சம்பந்தப்பட்ட நோய்களைக் குணப்படுத்தும்.

    *வேப்பிலைக் கஷாயம் கிருமிகளை அழித்து காய்ச்சலைக் கட்டுப்படுத்தும். தினமும், காலை வேளையில் 10 வேப்பிலைக் கொழுந்தை ஐந்து மிளகுடன் சேர்த்து மென்று சாப்பிட்டு வந்தால், மலேரியாக் காய்ச்சல் குணமாகும்.

    *வேப்பிலையுடன் மஞ்சள் சேர்த்து அரைத்துப் பூச, பித்த வெடிப்பு, கால் பாத எரிச்சல் மற்றும் நகச்சுத்தி குணமாகும்.

    *வேப்பிலையை எலுமிச்சம் பழச் சாற்றில் அரைத்துத் தலைக்குத் தேய்த்துக் குளித்து வந்தால், தலைவலி, பித்த மயக்கம் குணமாகும்.

    *சரும நோய் உள்ளவர்கள் வெந்நீரில் வேப்பிலை சேர்த்துக் கொதிக்கவைத்து குளித்து வரலாம். நாள்பட்ட சருமநோய்களான சோரியாசிஸ், சாதாரண சிரங்கு, நமைச்சல், புழுவெட்டு, மருக்கள் போன்ற நோய்களும் குணமாகிவிடும்.

    *சின்னம்மை, தட்டம்மை போன்ற அம்மை நோய்களுக்குக் கிருமிநாசினியாக வேப்பிலையைப் பயன்படுத்தலாம்.

    *புற்றுநோய் எதிர்ப்புத்தன்மை வேப்பிலைக்கு உண்டு. புற்றுநோய் வளர்ச்சியைத் தடைப்படுத்தக்கூடிய மருந்துகளில் வேப்பிலை பெரும்பங்கு வகிக்கிறது.


    Similar Threads:

    Sponsored Links
    gkarti likes this.

  2. #2
    gkarti's Avatar
    gkarti is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Karthiga
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Madurai
    Posts
    48,501

    Re: வேம்பின் மகிமை

    //*வேப்பிலையை எலுமிச்சம் பழச் சாற்றில் அரைத்துத் தலைக்குத் தேய்த்துக் குளித்து வந்தால், தலைவலி, பித்த மயக்கம் குணமாகும்.// Oh Really??

    Noted Lakshmi..


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter