Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine March! | All Issues

User Tag List

Like Tree10Likes
  • 3 Post By ahilanlaks
  • 2 Post By anitprab
  • 2 Post By safron
  • 1 Post By ahilanlaks
  • 1 Post By ahilanlaks
  • 1 Post By sumitra

கீழாநெல்லி


Discussions on "கீழாநெல்லி" in "Nature Cure" forum.


  1. #1
    ahilanlaks's Avatar
    ahilanlaks is offline Ruler's of Penmai
    Real Name
    Athilakshmi Ahilan ( Bhuvana )
    Gender
    Female
    Join Date
    Mar 2015
    Location
    Chennai
    Posts
    12,399

    கீழாநெல்லி


    ஈரலுக்கு பலம் கொடுக்க கூடியதும், மஞ்சள் காமாலையை குணப்படுத்தும் தன்மை உடையதும், புண்களை ஆற்றக் கூடியது கீழாநெல்லி. பல்வேறு மருத்துவ குணங்களை கொண்ட கீழாநெல்லி கசப்பு, துவர்ப்பு சுவை உடையது.


    கீழாநெல்லியை பயன்படுத்தி காய்ச்சலுக்கான மருந்து தயாரிக்கலாம்.

    தேவையான பொருட்கள்:
    கீழாநெல்லி, பனங்கற்கண்டு.
    கீழாநெல்லி இலை, வேர் ஆகியவற்றை ஒரு கைப்பிடி அளவுக்கு எடுக்கவும். இதனுடன் பனங்கற்கண்டு சேர்க்கவும்.


    ஒரு டம்ளர் நீர் விட்டு கொதிக்க வைக்க வேண்டும். இதை வடிக்கட்டி காலை, மாலை இருவேளை காய்ச்சல் இருக்கும்போது 50 முதல் 100 மில்லி குடித்துவர காய்ச்சல் குறையும். இளஞ்சூடாக இந்த தேனீர் குடிக்கவும். கீழாநெல்லி அற்புதமான காய்ச்சல் போக்கியாக விளங்குகிறது. இது, வியர்வையை தூண்டக் கூடியது. உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியது. ஈரல் சரியாக செயல்படாதபோது, பித்தம் அதிகமாகி உடலுக்கு உஷ்ணம் உண்டாகும். ஈரல் சரியாக வேலை செய்யாதபோது ஏற்படும் காமாலையால் வரும் காய்ச்சலை கீழாநெல்லி குணமாக்குகிறது. குளிர் காய்ச்சல், பறவைக் காய்ச்சல், பன்றி காய்ச்சல் ஆகியவற்றுக்கு மருந்தாக விளங்குகிறது.

    கீழாநெல்லியை கொண்டு மஞ்சள் காமாலையை குணப்படுத்தும் மருந்து தயாரிக்கலாம்.

    தேவையான பொருட்கள்:
    கீழாநெல்லி, மோர்.
    கீழாநெல்லி இலைகளை சுத்தப்படுத்தி பசையாக்கவும். இதை ஒரு பெரிய நெல்லிக்காய் அளவுக்கு எடுத்து உப்பு சேர்க்காத மோருடன் கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடிக்கவும். இதை எடுக்கும்போது எண்ணெய் சேர்க்க கூடாது. உணவில் உப்பு சேர்க்காமல் சாப்பிடுவது நல்லது. கீழாநெல்லி காய்ச்சலை போக்குவதுடன், ஈரலுக்கு பலம் கொடுக்க கூடியதாக உள்ளது. இதை பயன்படுத்துவதால் மஞ்சள் காமாலை வெகு விரைவில் விலகும். ஈரல் வீக்கம் வராமல் தடுக்கும் மருந்தாகிறது.


    தோல் வியாதி, புண்களுக்கான மேல்பூச்சு மருந்து தயாரிக்கலாம். கீழாநெல்லி இலை பசையில் இருந்து சாறு எடுக்கவும். இதனுடன் சிறிது உப்பு சேர்த்து கலந்து சிரங்கு பிரச்னை இருப்பவர்கள் இதை தடவி சிறிது நேரம் கழித்து கழுவினால் சிரங்கு குணமாகும். கீழாநெல்லி சாறு பூசுவதால் தோல் நோய்கள் சரியாகும். இது, எதிர்ப்பு சக்தி உடையது. ஒரு பாத்திரத்தில் தேங்காய் எண்ணெய்யுடன் கீழாநெல்லி இலைப் பசையை சேர்த்து தைலப்பதத்தில் காய்ச்சவும். இதை மேல்பூச்சாக பயன்படுத்துவதன் மூலம் வெட்டுக்காயங்கள் சரியாகும். புண்கள் விரைவில் ஆறும்.

    கீழாநெல்லியை நசுக்கி வெட்டு காயங்கள் மீது வைத்து கட்டி வைத்தால் காயம் குணமாகும். கால்களில் நரம்பு சுற்றிக்கொண்டிருப்பதால் ஏற்படும் புண்கள் சரியாகும். சர்க்கரை நோயினால் உண்டாகும் கட்டி, புண்கள் குணமாகும். புழுவெட்டு ஏற்பட்ட இடத்தில் முடி வளர்வதற்கான மருத்துவம் குறித்து பார்க்கலாம். புழுவெட்டு என்பது தலையில் முடிகொட்டி, திட்டுதிட்டாக வழுக்கை ஏற்படும். இது ஒருவித கிருமிகளால் ஏற்படுகிறது. மாதுளையின் சாறு எடுத்து புழுவெட்டு உள்ள இடத்தில் சற்று அழுத்தி தேய்த்து வருவதால் இப்பிரச்னை சரியாகி முடிவளரும். புழுவெட்டு உள்ள இடத்தில் மாதுளை சாறு தேய்த்து தலைக்கு குளித்து வருவது நல்லது.



    Sponsored Links
    Attached Thumbnails Attached Thumbnails கீழாநெல்லி-pv74a.jpg  
    anitprab, sumitra and safron like this.
    ​Bhuvana Ahilan

    Love Makes Life Beautiful

  2. #2
    anitprab is offline Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Sep 2011
    Location
    madurai
    Posts
    419

    Re: கீழாநெல்லி

    கீழாநெல்லி பற்றிய பயனுள்ள தகவலுக்கு நன்றி.............

    sumitra and ahilanlaks like this.

  3. #3
    safron's Avatar
    safron is offline Citizen's of Penmai
    Real Name
    sumy
    Gender
    Female
    Join Date
    May 2016
    Location
    srilanka
    Posts
    615

    Re: கீழாநெல்லி

    Useful info kaa thanks..

    sumitra and ahilanlaks like this.
    Sumy..
    உனக்கென நிர்ணயிக்கப்பட்டது உன்னை அடைந்தே தீரும். .

  4. #4
    ahilanlaks's Avatar
    ahilanlaks is offline Ruler's of Penmai
    Real Name
    Athilakshmi Ahilan ( Bhuvana )
    Gender
    Female
    Join Date
    Mar 2015
    Location
    Chennai
    Posts
    12,399

    Re: கீழாநெல்லி

    Quote Originally Posted by anitprab View Post
    கீழாநெல்லி பற்றிய பயனுள்ள தகவலுக்கு நன்றி.............
    Welcome Ani

    sumitra likes this.
    ​Bhuvana Ahilan

    Love Makes Life Beautiful

  5. #5
    ahilanlaks's Avatar
    ahilanlaks is offline Ruler's of Penmai
    Real Name
    Athilakshmi Ahilan ( Bhuvana )
    Gender
    Female
    Join Date
    Mar 2015
    Location
    Chennai
    Posts
    12,399

    Re: கீழாநெல்லி

    Quote Originally Posted by safron View Post
    Useful info kaa thanks..
    Welcome Sumy

    sumitra likes this.
    ​Bhuvana Ahilan

    Love Makes Life Beautiful

  6. #6
    sumitra's Avatar
    sumitra is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    mysore
    Posts
    23,268
    Blog Entries
    18

    Re: கீழாநெல்லி

    Very useful information. thank you!

    ahilanlaks likes this.

  7. #7
    ahilanlaks's Avatar
    ahilanlaks is offline Ruler's of Penmai
    Real Name
    Athilakshmi Ahilan ( Bhuvana )
    Gender
    Female
    Join Date
    Mar 2015
    Location
    Chennai
    Posts
    12,399

    Re: கீழாநெல்லி

    Quote Originally Posted by sumitra View Post
    Very useful information. thank you!
    Most welcome Sumi sis

    ​Bhuvana Ahilan

    Love Makes Life Beautiful

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter