மஞ்சள் காமாலை நீங்க...கீழாநெல்லியின் முழுச்செடியையும் நீரில் கழுவி சுத்தம்செய்து நன்கு அரைத்து, அதில் இருந்து எலுமிச்சை அளவுக்கு எடுத்து, 250 மி.லி வெண்ணெய் நீக்கிய மோரில் கலந்து, காலை மாலை வெறும் வயிற்றில் குடித்துவர வேண்டும். இந்த நாட்களில் கொழுப்புப் பதார்த்தங்களை அறவே தவிர்த்து, எளிதில் செரிமானம் ஆகும் கஞ்சி வகைகளை உண்டுவர வேண்டும். சிறிது காலம் உப்பில்லா பத்தியம் இருப்பதும் நல்லது.