மஞ்சள் மிகச் சிறந்த கிருமி நாசினி ஆகும். மஞ்சள் பொடி சேர்த்து உண்போருக்குப் புற்று நோய் வரும் வாய்ப்புக் குறைவு என்று கூறப்படுகிறது. பாக்டீரியாக்களைப் போல, வைரஸ் எனப்படும் நுண்கிருமிகள், மருந்துகளுக்கு அவ்வளவு எளிதில் கட்டுப்படுவதில்லை. ஆனால், மஞ்சள் அவற்றை கட்டுப்படுத்துகிறது.

இதனாலேயே, அம்மை நோய்ப்புண் மேல் வேப்பிலையை அரைத்து மஞ்சளுடன் கலந்து பூசுகிறார்கள்.

உடம்பு நாற்றத்தை நீக்கவல்லதாகையினாலேயே, நமது பெண்கள் மஞ்சளை அரைத்துப் பூசிக் குளிக்கும் வழக்கம் உள்ளது. அமில குண உள்ளதாகையால் தோல் வியாதியும் வராமல் காக்கிறது.

புண்களின் மேல் பொடியாகத் தூவினாலோ, அரைத்துப் போட்டாலோ புண் எளிதில் ஆறும்; கட்டிகள் உடையும்.

மஞ்சள், "நீர் காமாலை'யைக் குணப்படுத்தும். மஞ்சள் சூரணம் வயிற்றுக் கோளாறுகள் நீக்கி, குடலையும் வலுப்படுத்தும். நல்ல பசியைத் தூண்டும். சர்க்கரை வியாதிக்கும் நல்லது இது என்பர். இதனாலேயே மஞ்சள் பொடி சேர்த்தே சமைப்பது நம் வழக்கம்.

வாதம், பித்தம், சிலேத்துமம் எனப்படும் மூன்று குற்றங்களையும் போக்கும். தலைவலி, நீர்க்குற்றம், சைனஸ் கோளாறு, காய்ச்சலற்ற வலிகள், ரணம், பூச்சிக் கடிகள், வீக்கம் எல்லாவற்றிக்கும் மஞ்சள் மருந்தாகிறது. இது, பிள்ளைப்பேற்றில் கஷாயமாகக் கொடுக்கப்படும். நீர்க்கட்டு, மணிக்குடல் கட்டு முதலிய நோய்களுக்கு நல்லது. மேலும், சுவாசம் பற்றிய நோய், கணமூலம், கணச்சுரம் முதலியவற்றைப் போக்க வல்லது. பசியைத் தருதல், வெப்பம் அகற்றுதல், உடலை உறுதி செய்தல் இதன் காரியங்களாகும். சிராய்ப்புக்களால் தோல் சிதைத்தால் அதை அரைத்துப் பூசுவர். இரத்தக்கட்டும் மாறும். மூலநோய்க்கு நல்லது என்பர்.

Similar Threads: